முழு மதியின் ஒளியில்
பால் வீதி காணுகிறேன்
தேயா நிலவுகாண ஏங்குகிறேன்
சூரியனின் சுள்ளிட்ட
கதிர்களால் வேதனையடைகிறேன்
சுடாத சூரியன் காண
ஏங்குகிறேன்
மலர்களின் எழில் கொஞ்சும்
வனத்தில் இன்புறுகிறேன்
வாடா மலர் காண
ஏங்குகிறேன்
என் தாய் மண்ணில்
ஓடிவிளையாட ஆசையுறுகிறேன்
யுத்தமில்லா மண்காண
ஏங்குகிறேன்
நான் காண விரும்பும்
மண்ணின் ஏக்கம்
மதி போல் சூரியன் போல்
கடல் வான் மலர் போல்
ஆகி விடுமோ என
ஏங்கிக்கொண்டே இருக்கிறேன்
தாட்ஷாவர்மா
ஜீவநதி_ கார்த்திகை 2011
No comments:
Post a Comment
உங்கள் கருத்தையும் சொல்லுங்கள்