மகனைப்போல் வ ளர்க்கும் பெண்ணைப்
படுக்கை அறைக்கு
அழைக்கும் ஆணைப்பற்றியவித்தியாசமான கதைக்கருவுடன்
1976 ஆம் ஆண்டு
வெளியான படம்
"உணர்ச்சிகள்."
சென்னையில் உள்ள
லொட்ஜ் ஒன்றில்
ரூம் போயாகப்பணியாற்றுகிறார் கமல்.அந்த
லொட்ஜில் பலரும்
வந்து தங்கிச்செல்வார்கள்.
விபசாரியான ஸ்ரீ
வித்யா அங்கு
தங்கி இருந்தபோது
பொலிஸார் சுற்றி
வளைக்கின்றனர். அந்த
இக்கட்டான நிலையில்
ரூம் போயான
கமல், ஸ்ரீ
வித்யாவைக்காப்பாற்றுகிறார். பலிசிடமிருந்து
தன்னைக்காப்பாற்றிய கமல்
மீது ஸ்ரீ
வித்யாவுக்குப்பாசம் பிறக்கிறது.
கமலைத்தனது வீட்டுக்கு
அழைத்துச்சென்று நல்ல
உடைகள் வாங்கிக்கொடுத்துத்தனது மகன் போல்
வளர்க்கிறார்.
கமலுக்கு, ஸ்ரீ
வித்யாமீது தாய்ப்பாசம் இல்லை. விபச்சாரியான
ஸ்ரீ
வித்யாவை அனுபவிக்கத்துடிக்கிறார். ஸ்ரீ
வித்யாவைத்தேடி வீட்டுக்கு
ஆண்கள் வருவார்கள். ஸ்ரீவித்யா அவர்களுடன் செல்வார்.அப்போது கமலின் விரகதாபம் அதிகரிக்கும். ஆசையை அடக்கமுடியாத
கமல் தன்
மனதில் இருப்ப, ஸ்ரீ
வித்யாவிடம் கூறி தன் ஆசைக்கு
இணங்கும் படி வற்புறுத்துகிறார்.விபச்சாரியாக
இருந்தாலும் மகனைப்போல் வளர்த்த
கமலுடன் படுக்கையைப்பங்குபோட
விரும்பாத
ஸ்ரீ வித்யா,அவரை வீட்டை
விட்டுத்துரத்துகிறார்.
ஸ்ரீ வித்யாவின்
வீட்டை விட்டு
வெளியேறிய
கமல் தன் ஆசையைப்பூர்த்திசெய்வதற்காக
பல
பெண்களுடன் தொடர்பு கொள்கிறார்.பெண்களின் தொடர்பு காரணமாக கமலுக்குப்பாலியல் நோய்
தொற்றுகிறது.காமவெறியினால் உயிரக்கொல்லும் வியாதி
தொற்றியதை நினைத்து
கமல் துடிக்கிறார்.
கமல்ஹாசன்,ஸ்ரீ வித்யா,எல்.காஞ்சனா,மேஜர் சுந்தர்ராஜன்,வி.கோபாலகிருஷ்ணன்,எஸ்.வி.ராமதாஸ்,கோபி,சந்திரகாந்தா ஆகியோர்
நடித்தனர்.கதை,திரைக்கதை,வசனம்,இயக்கம் ஆர்.சி.சக்தி.
காமவெறியில் சிக்கிச்சீரழியும் பாத்திரத்தில் கமல் சிறப்பாக நடித்தார்.விபச்சாரியாக
நடித்த
ஸ்ரீ வித்யா
ரசிகர்களைக்கவர்ந்தார்.கணவனை இழந்து விரக தாபத்தில் ஏங்கும் காட்சியில்
எல்.காஞ்சனா நன்றாக
நடித்தார். படத்தின் கதையும் கிளு
கிளுப்பூட்டும் காட்சிகளும் ரசிகர்களைத்தியேட்டருக்கு இழுத்தது.
"ராசலீலா" என்றபெயரில் மலையாளத்தில் வெளிவந்த இப்படம் 100நாட்களைக்கடந்து வெற்றிபெற்றது.மலையாளப்படத்திலும் கமலே கதாநாயகனாக
நடித்தார்.கணவனை இழந்த
பாத்திரத்தில் ஜெயசுதா நடித்தார்.
ரமணி
மித்திரன் 25/11/12
நல்ல விமர்சனம்.
ReplyDeleteபடம் பார்த்தது இல்லை என்றாலும் கேட்டதுண்டு.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
ReplyDeleteஅன்புடன்
வர்மா