தமிழ்க
சட்டப்பேரவையில் 20 தொகுதிகள் காலியாக உள்ளன அந்தத்தொகுதிகளுக்கான மினித் தேர்தலை எதிர்பார்த்திருந்த
வேளையில் திருவாரூர் தொகுதிக்கு மட்டும் இடைத் தேதல் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பரம்குன்ற
தொகுதியில் வெற்றி பெற்ற போஸ் மரணமானதால் அந்தத்தொகுதி காலியாக உள்ளது. வேட்பாளர் பீ
படிவத்தில் ய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அன்றைய பொதுச்செயலாளர் ஜெயலலிதா மருத்துவமனையில்
இருந்து கையொப்பமிடாமல் கைரேகை பதிவு செய்தார். அந்தக் கைரேகை பற்றிய வழக்கு நிலுவையில்
இருப்பதால் அங்கு தேர்தல் நடத்த முடியாது. தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 தொகுதிகள் காலியாக உள்ளன மேன் முறையீடு செய்யாமல் தேர்தலைச் சந்திக்கப்போவதாக தினகரனின்
ஆதரவு பெறவர்கள் கூறியுள்ளனர். மேன் முறையீட்டுக் கால அவகாசம் இன்னமும் நிறைவு பெறாததால் 18 தொகுதிகளிலும் தேர்தல்
நடத்த முடியாது.
கருணாநிதியின்
தொகுதியான திருவாரூரில் ஜனவரி 28 ஆம் திகதி இடைத்தேர்தல் நடைபெறும்
என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 3 வேட்புமனுத்தாக்கல்,
ஜனவரி 11 வேட்புமனு மறுபரிசீலனை, ஜனவரி 14 வேட்புமனுவைத் திரும்பப் பெறுவதற்கான கடைசி
நாள், ஜனவரி 28 தேர்தல், ஜனவரி 31 வாக்கு எண்ணிக்கை
என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசியல் கட்சிகள் அனைத்தும் சுறுசுறுப்பாக இயங்கத்
தொடங்கியுள்ளன.
திருவாரூர்
கருணாநிதி பிறந்த இடம். திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோட்டை. திராவிட முன்னேற்றக்
கழகம் 7 முறை வெற்றி பெற்றது. சிபிஎம் ஐந்து முறையும் காங்கிரஸ் ஒரு முறையும் திரூவாரூரில்
வெற்றி பெற்றன. 2011, 2016 ஆகிய இரண்டு தேர்தல்களிலும் கருணாநிதி வெற்றி பெற்றார்.
எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் அண்ணா திராவிட முன்னேற்றக்
கழகத்தை தலைமை ஏற்று நடத்திய காலத்திலும் திருவாரூரில் வெற்றி பெறவில்லை. ஆகையால் தேர்தலுக்கு
முன்பே திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றி உறுதியாகியுள்ளது.
திருவாரூரில்
இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டபோது மழை புயல் காரணமாக ரெட் அலேட் விடுக்கப்பட்டதால்
தேர்தலை நடத்த வேண்டாம் என தமிழக அரசு கோரிக்கை விடுத்தது. நீதி மன்றம் கட்டளையிட்டதால் தேர்தலை நடத்த வேண்டிய சூழ்நிலை
ஏற்பட்டுள்ளது. தேர்தல் நடத்துவதற்குரிய ஏதிநிலை
இப்போது இல்லை என்ற கருத்து மேலோங்கியுள்ளது. கஜா புயல் பாதிப்பில் இருந்து திருவாரூர்
மக்கள் இன்னமும் விடுபடவில்லை. அவர்களுடைய ஆதார் அட்டை போன்ற முக்கிய ஆவணங்கள் தொலைந்துவிட்டன.
பொங்கல் பண்டிகைக்காக் தமிழக மக்கள் தயாராக இருக்கும் வேளையில் தேர்தல் அறிவிப்பு வெளிவந்துள்ளது.
கஜா
புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு தமிழக அரசு கோரிய நிதியை மத்திய
அரசு கொடுக்கவில்லை. மத்திய அரசுக்கு எதிரான மனநிலையில் மக்கள் இருக்கும் வேளையில் கஜாபுயலுக்கான நிவாரணத்தொகையை
அறிவித்த கையோடு திருவாரூர் இடைத்தேர்தல் அறிவிப்பும் வந்துள்ளது. மதிரையில் எய்ம்ஸ்
மருத்துவமனைக்கான அடிக்கை நாட்டுவதற்கு பிரதமர் மோடி தமிழகத்துக்கு விஜயம் செய்கிறார்.
ஜனவரி 27 ஆம் திகதி அடிக்கல் நாட்டும் வைபவம். மறுநாள் 28 ஆம் திகதி தேர்தல் இது திட்டமிட்ட தேர்தல் பிரசாரமாகும்.
தேர்தலுக்கு
முதல் நாள் பிரசாரம் செய்யக்கூடாது. மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டும் வைபவத்தை பாரதிய
ஜனதாக் கட்சி தேர்தல் பிரசாரமாக்குகிறது. கஜா புயல் நிவாரணத் தொகையை விடுவித்தது, எய்ம்ஸ்
மருத்துவமனை ஆகியவற்றால் திருவாரூர் மக்கள் வாக்களிப்பார்கள் என பரதீய ஜனதாக் கட்சியினர்
கருதுகிறார்கள்.
திருவாரூரில்ர்
தினகரனைத் தோற்கடிக்க வேண்டும் என அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தவர்களும் அண்ணா
திராவிட முன்னேற்றக் கழகத்தை வீழ்த்த வேண்டும்
என தினகரனும் வரிந்துகட்டி களமிறங்குவார்கள். இரண்டாவது இடத்தை யார் பிடிப்பது என்பதில்
அதிக போட்டி இருக்கும். 2016 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அதி கூடிய வாக்குகளால் கருணாநிதி
வெற்றி பெற்றார். அதை விடக் குறைந்த வாக்கு
வித்தியாசத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றிபெற்றால் திராவிட முன்னேற்றக் கழகத்
தலைவர் ஸ்டாலின் மீதான விமர்சனம் அதிகரிக்கும்.
திராவிட
முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகியவற்ருக்கிடையேயான
மும்முனைப்போட்டியாக திருவாரூர் இடைத் தேர்தல் இருக்கப்போகிறது. கடந்த தேர்தலில் திராவிட
முன்னேற்றக் கழகத்தை எதிர்த்த வைகோ,, திருமாவளவன்,
இடதுசாரிகள் ஆகியோர் இப்போது ஆதரவு தெரிவித்துள்ளனர்.
திராவிட முன்னேற்றக் கழகத்தையும் கருணாநிதியையும் எதிர்த்து செய்யப்போகும் பிரசாரம்
திருவாரூரில் களைகட்டாது என்பது பகிரங்கமான
உண்மை.
திருவாரூரில்
கருணாநிதிக்கு இருக்கும் செல்வாக்கு மற்றவர்களுக்கு இல்லை. ” இதுவே எனது கடைசித் தேர்தல். இனி நான் தேர்தலில் போட்டியிட மாட்டேன்”
என கருணாநிதி பிரசாரம் செய்தார். இதன் காரணமாக அதிகளவான வாக்கு வித்தியாசத்தில் கருணாநிதி
வெற்றி பெற்றார். திரூவாரூர் தொகுதிக்கு கருணாநிது செய்த சாதனைகளை முன்னிறுத்தி திராவிட
முன்னேற்றக் கழகம் பிரசாரம் செய்யும். கருணாநிதி இல்லை என்ற அனுதாப அலையும் அதிக வாக்குகளை
திராவிட முன்னேற்றக் கழகத்துக்குப் பெற்றுக் கொடுக்கும்.
சூரன்.ஏ.ரவிவர்மா.
No comments:
Post a Comment
உங்கள் கருத்தையும் சொல்லுங்கள்