நொட்டிங்ஹாமில்
நடைபெற்ற உலகக்கிண்ணப் போட்டியில் மேற்கு இந்தியத்தீவுகளை எதிர்த்து விளையாடிய பாகிஸ்தான்
மிக மோசமாகத் தோல்வியடைந்தது. 50 ஓவர் போட்டியில் இரண்டு அணிகளும் சேர்ந்து 35.2 ஓவர்கள் விளையாடியதால் ரசிகர்களுக்கு ஏமாற்றமடைந்தனர். தோமஸ், ஹோல்டர் ஆகியோரின் பந்து வீச்சை சமாளிக்க
முடியாத பாகிஸ்தான் வீரர்கள் வரிசையாக ஆட்டமிழந்தனர்.
நாணயச்சுழற்சியில்
வெற்ரி பெற்ற மேற்கு இந்தியத்தீவுகளின் அணித்தலைவர் ஹோல்டர் பந்து வீச்சைத் தேர்வு
செய்தார். முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 21.4 ஓவர்களில் சகல விக்கெற்களையும்
இழந்து 105 ஓட்டங்கள் எடுத்தது. 106 ஓட்டங்கள் எனும் இலகுவான இலக்குடன் களம் இறங்கிய
மேற்கு இந்தியத்தீவுகள் மூன்று விக்கெற்களை இழந்து 108 ஓட்டங்கள் எடுத்து ஏழு விக்கெற்களால் வெற்றியடைந்தது.
பாகர்
சமான், பாபர் அஸாம் ஆகியோர் தலா 22 ஓட்டங்களும், வஹாப் ரியாஸ் 18, மிஹமட் ஹபீஸ் 16
ஓட்டங்கலும் எடுத்தனர். சஹீப் கான் ஓட்டம் எதுவும் எடுக்காமலும் ஏனையோர் ஒற்றை இலக்கத்திலும்
ஆட்டமிழந்தனர். கடைசி விக்கெற்றில் ஜோடிசேர்ந்த வஹாப் ரியாஸ்,மொஹமட் அமீர் ஆகியோர்
அதிக பட்சமாக 22 ஓட்டங்கள் எடுத்ததால் பாகிஸ்தான் 100 ஓட்டங்களைக் கடந்தது. ஒஷேன் தோமஸ்
நான்கு விக்கெற்களையும், ஜேஸன் ஹோல்டர் மூன்று விக்கெற்களையும், பிரத் வெயிட் இரண்டு
விக்கெற்களையும், காட்ரெல் ஒரு விக்கெற்றையும் வீழ்த்தினர்.
107
என்ற இலகுவான வெற்றி இலக்குடன் களம் இறங்கிய மேற்கு இந்தியத்தீவுகளுக்கு அமீர் மூன்று விக்கெற்களை வீழ்த்தி நெருக்கடி கொடுத்தார். கைல்ஸ் 50, ஹோப் 11 ஓட்டங்கள் எடுத்தனர். பிராவோ ஒட்டமின்றி
ஆட்டமிழந்தார். 46 ஓட்டங்களில் மேற்கு இந்தியா இரண்டு விக்கெற்களை இழந்தது. பூரன்
34 ஒட்டங்களுடனும் ஹெட்மெயர் ஏழு ஓட்டங்களுடனும் களத்தில் நின்று வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். நான்கு விக்கெற்களை வீழ்த்திய ஓசேன் தோமஸ் ஆட்டநாயகனாகத்
தேர்வு செய்யப்பட்டார். ஹோல்டர் மூன்று விக்கெற்களையும், ரசல்ஸ் இரண்டு விக்கெற்களையும்,காட்ரெல்
ஒரு விக்கெற்றையும் வீழ்த்தினர்.
பஹார்
ஜமான் வித்தியாசமான முறையில் ஆட்டமிழந்தார். ரஸல் வீசிய பந்து அவரது ஹெல்மெட்டில்பட்டு
ஸ்டெம்பை வீழ்த்தியது.
1992 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக அனைத்து விக்கெற்கலையும் இழந்து 74 ஓட்டங்கள் எடுத்தது.
அவுஸ்திரேலியா, தென். ஆபிரிக்கா ஆகியவற்றுக்குஎதிராக 87 ஓட்டங்கள் எடுத்தது. பாகிஸ்தான் தொடர்ச்சியாக
11 போட்டிகளில் தோல்வியடைந்தது. முன்னதாக 88 ஆம் ஆண்டு தொடர்ச்சியாக 10 போட்டிகளில்
தோல்வியடைந்தது.
218
பந்துகள் மீதமிருக்கையில் பாகிஸ்தான் தோல்வியடைந்தது. முன்னதாக 1999 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு
எதிராக 179 பந்துகள் மீதமிருக்க தோல்வியடைந்தது.
டிவில்லியஸ்,
கெயில் ஆகிய இருவரும் 37 அசைச்சதங்களுடன் முதலிடத்தில்
இருந்தனர். மூன்று சிக்ஸர்கள் அடித்த கெயில்
40 அசைச்சதங்களுடன் முதலிடத்துக்கு முன்னேறி டிவில்லியஸை இரண்டாவது இடத்துக்குத்
தள்ளிவிட்டார். தொடர்ச்சியாக ஆறாவது அசைச்சதம் அடித்துள்ளார். கெயிலுடன் சேர்த்து ஏழு வீரர்கள் ஆறு அரைச் சதங்கள் அடித்துள்ளனர்.
1987 ஆம் ஆண்டு மியாண்டட் தொடர்ச்சியாக ஒன்பது அசைச் சதங்கள் அடித்து முதலிடத்தில்
இருக்கிரார். அடித்த போட்டியில் அரைச்சதம் அடிக்கும் பட்சத்தில் கெயில் தனி வீரராக
இரண்டாவது இடத்துக்கு முன்னேறுவார். இது கெயிலின் 52 ஆவது அரைச்சதமாகும்.
மேற்கு
இந்தியத் தீவுகளின் விக்கெற்கீப்பர் 100 கச்களைப் பிடித்துள்ளார். இந்தப் போட்டியில்
நான்கு கச்களைப் பிடித்தார்.
No comments:
Post a Comment
உங்கள் கருத்தையும் சொல்லுங்கள்