Wednesday, May 27, 2020

ஜப்பானுக்குச்செல்ல மேலும் 11 நாடுகளுக்கு தடை


ஜப்பானில் கொரோனா வைரஸ் பரவியதால் அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதால் ஊரடங்கு உத்தரவுகளை தளர்த்தி பிரதமர் ஹின் அறிவிப்பு வெளியிட்டார்.இந்த நிலையில் கொரோனா பரவலை முழுவதும் கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையாக இந்தியா உள்பட கூடுதலாக 11 நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஜப்பானில் நுழைய தடை விதித்துள்ளார்.

ஏற்கனவே ஜப்பானில் 118 நாடுகளைச் சேர்ந்த மக்கள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் மேலும் இந்தியா, ஆப்கானிஸ்தான், அஜெர்டினா, வங்கதேசம், எல்சால்வோதார், கானா, கினியா, கிர்கிஸ்தான், பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, கஜிகிஸ்தான் ஆகிய 11 நாடுகள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த 11 நாடுகளுக்கும் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்று சில நாட்களுக்கு ஜப்பான் அரசு அறிவுறுத்தி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

உங்கள் கருத்தையும் சொல்லுங்கள்