Friday, July 16, 2021

ஒலிம்பிக் வெற்றியாளர்களுக்கு பதக்கம் அணிவதில் மாற்றம்

ஒலிம்பிக்  போட்டிகளில்  வெற்றியடையும்  வீரர்களுக்கு கெளரவ விருந்தினர்கள்  பதக்கம்  அணியும்  வைபவம்  சிற‌ப்பாக  நடைபெறுவது  வழமையானது.  கொரோனா  தொற்று  காரணமாக அதில்  மாற்றம் செய்யப்பட்டுள்ள்ளது. வெற்றி  பெற்ற மூன்று  வீரர்கள் தமக்கு  தானே  பதக்கம் அணிந்துகொள்வார்கள் என  அறிவிக்கப்பட்டுள்ளது. வெற்ற‌  பெற்ற  வீரர்கள்  கட்டிப்பிடிப்பதும்  முத்தமிடுவ‌தும் தடை  செய்யப்பட்டுள்ளது.

இம்மாதம் 1  ஆம்  திகதி  முதல்  13  ஆம்  திகதிவரை 8,000 வீரர்கள்  டோக்கியோவைச்  சென்ற‌டைந்துள்ளனர். இவர்கலுக்கு  மேற்கொள்ளப்பட்ட  பரிசோதனையில்  மூவர்  கொரோனா  தொற்றுக்கு  உள்ளாகி  இருப்பது உறுதி  செய்யப்பட்டதால் அவர்கள்  மூவரும்  தனிமைப் படுத்தப்பட்டுள்ளார்கள்.

டோக்கியோவின்  மேற்குப்  பகுதியில்  உள்ள ஹோட்டலில்  31  பிறேஸில் வீரர்கள்  தங்கி  உள்ளனர். அங்கு ஏழு  ஊழியர்களுக்கு  கொரோனா  தெரிய  வந்துள்ளது. பிறேஸில்  வீரகள்  எவரும்  பாதிக்கப்படவில்லை.

 டோக்கியோ ஒலிம்பிக்கில்  பங்குபற்றும்  அகதிகள்  அனியின்  நிர்வாகி  ஒருவ‌ருக்கு  கொரோனா இருபபதால் அவர்  தனிமைப்  படுத்தப்பட்டுள்ளர்.

 ஒலிம்பிக்கை  சீனாவின்  பேரரசர் பேரரசர் நாருஹிடோ முறைப்படி  ஆரம்பித்து  வைப்பார். பார்வையாளர்க ளுக்கு அனுமதி  இல்லை  என்பதால் அரச  உறுப்பினர்கள்  ஆரம்ப  வைபவத்தில்  கலந்துகொள்ள  மாட்டார்கள்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்தையும் சொல்லுங்கள்