Wednesday, October 13, 2021

இந்திய அணியின் புதிய சீருடை அறிமுகம்


 ரி20 உலகக் கிண்ணத் தொடர்கோப்பை தொடர்  ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் அக்டோபர் 17-ம் தேதி முதல் நடைபெறவுள்ளது.

உலகக் கிண்ணத்தொடரின் போது இந்திய கிறிக்கெற் அனிக்கு புதிய சீருடை  வழங்குவது வழக்கமாக இருக்கிறது. இந்நிலையில் இந்தாண்டுக்கான ரி20 உலகக் கிண்ணப் போட்டிக்கான  புதிய சீருடையை  இந்திய கிறிக்கெற் சபை  வெளியிட்டது.

விராட் கோலி, ரோகித் சர்மா, கேஎல் ராகுல், ரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் சீருடையை  அறிமுகப்படுத்தினர். 1992-ம் ஆண்டு இந்திய அணி அணிந்திருந்த சீருடையைப் போன்று கடந்த ரி20 உலகக் கிண்ணப்போட்டியில் இந்திய வீரர்கள் அணிந்திருந்த நிலையில் அதனை தற்போது மாற்றியுள்ளது.

இந்த புதிய சீருடையை பிசிசிஐ தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ரி20,கிறிக்கெற்,விளையாட்ட்ய்,இந்தியா உலகக்கிண்ணம்ரி20

No comments:

Post a Comment

உங்கள் கருத்தையும் சொல்லுங்கள்