Wednesday, October 6, 2021

அமெரிக்க கிரிக்கெட்டில் கலக்கும் இந்திய முன்னாள் தலைவர்

உன்முக்த் சந்த் அபாரமான ஒரு தொடக்க வீரர், ஆக்ரோஷ அதிரடி வீரர், சேவாகின் இடத்தை நிரப்புவார் என்று பலராலும் எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் ஏனோ இவரால் இந்திய அணிக்குள் நுழைய முடியவில்லை. இந்தியாவுக்கு 19 வயதுக்குட்பட்டோர் கிரிக்கெட்டில் உலகக் கிண்ணத்தை  தன் கேப்டன்சியில் வென்ற டெல்லி வீரர் உன்முக்த் சந்த் அமெரிக்க கிரிக்கெட்டில் கலக்கி வருகிறார். அமெரிக்காவில் ரி20 லீகில் சிலிக்கன்வாலி அணிக்கு கப்டனான   உன்முக்த் சந்த் சம்பியன் கிண்ணத்தை  வென்று சாதனை படைத்துள்ளார். சிறு வயதிலேயே இந்திய கிரிக்கெட்டிலிருந்து வெளியேறியதால் இவர் சுதந்திரமாக எந்த நாட்டு அணிக்கும் விளையாடலாம்.

சிலிக்கன்வாலி அணிக்காக இறங்கிய க‌ப்டன் உன்முக்த் சந்த் 43 பந்துகளில் 59 ஓட்டங்கள் அடித்தார்.

இவரும் ராகுல் ஜரிவாலாவும் சேர்ந்து 12 ஓவர்களில் முதல் விக்கெட்டுக்காக 102 ஓட்டங்களைச் சேர்த்தனர். உன்முக்த் சந்த் 3 சிக்சர்கள் 6 பவுண்டரிகளை விளாசினார். முன்னாள் இலங்கை வீரர் ஷேகன் ஜெயசூரியாவும் விளையாடினார்.


  இந்திய ஏ அணியின் க‌ப்டனாக தேர்வு செய்யப்பட்டவர்  உன்முக்த் சந்த். டெல்லி, உத்தராகண்ட் அணிகளுக்காக உள்நாட்டு கிரிக்கெட்டில் ஆடியுள்ளார். இவர் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2013 இந்திய அணியில் உத்தேச அணியில் இடம்பெற்றிருந்தார். ரி20 உலகக் கிண்ண 2014 உத்தேச அணியிலும் அவர் இடம்பெற்றிருந்தார்.

2012ம் ஆண்டில் யு-19 உலகக் கிண்ணத்தை இந்திய அணி இவரது தலைமையில் வென்றது. 28 வயதில் பிசிசிஐ-க்கு குட் பை சொல்லி விட்டு, உலகக் கிரிக்கெட்டில் தன் தடத்தைப் பதிக்கச் செல்வதாக சென்று விட்டார். இவர் சென்றது இந்திய கிரிக்கெட்டுக்கும் இழப்பு அவரும் இந்திய கிரிக்கெட்டை இழந்து விட்டார் என்றே கூற வேண்டும்

No comments:

Post a Comment

உங்கள் கருத்தையும் சொல்லுங்கள்