Friday, October 8, 2021

ஹமில்டனுக்கு ஆச்சுறுத்தலாக இருக்கும் வெஸ்டாப்பன்


 பரப்பான ஃபார்முலா 1   போட்டியில் இரண்டு புள்ளிகள் மட்டுமே  கூடுதலாகப்பெற்று  லூயிஸ் ஹமில்டன் முன்னிலையில் உள்ளார்.இரண்டாவது இடத்தில்   இருக்கும் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன், ஹமில்டனுக்கு அச்சுறுத்தலாக உள்ளார். மீதமுள்ள ஏழு பந்தயங்களில் யார் வெல்வார்கள் எனக் கணிக்க முடியாதுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை துருக்கிய கிராண்ட் பிரிக்ஸில் மீண்டும் தொடங்குகிறது. கடந்த 2011 ஆம் ஆண்டை விட இஸ்தான்புல் பாதை மிகவும் நம்பகமானது என்று இருவரும் நம்புகிறார்கள், 2011 க்குப் பிறகு முதன்முறையாக F1 பந்தயத்தை நடத்த மீண்டும் அமைக்கப்பட்டது.

  இரண்டு வாரங்களுக்கு முன்பு ரஷ்ய ஜிபியைத் தொடங்கியதைக் கருத்தில் கொண்டு வெர்ஸ்டாப்பன் தரவரிசையில் பினடைந்துள்ளார். அவர் சீசனுக்காக மூன்று என்ஜின்களை ஒதுக்கீடு செய்து, நான்காவது எஞ்சினைப் பயன்படுத்தியதற்காக கிரிட்டுக்கு  தண்டனை வழங்கப்பட்டது.

ஹாமில்டன்  100 வது எஃப் 1 வெற்றியை பெற்றார்.  எட்டாவது உலக பட்டத்திற்கான ஹமில்டனின் முயற்சியில் வெர்ஸ்டாப்பன் ஒரு பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறார்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்தையும் சொல்லுங்கள்