Wednesday, November 24, 2021

கம்போடியாவில் ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டி


  2029 ஆம் ஆண்டு 5வது ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டிகளை கம்போடியா நடத்தவுள்ளது   துபாயில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 40வது ஓசிஏ பொதுச் சபையின் போது ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் (ஓசிஏ)  இதனை உறுதி  செய்தது.

ந் 2029 இல் புனோம் பென்னில் 5வது ஆசிய இளைஞர் விளையாட்டுகளை ஏற்பாடு செய்யும் ஒப்பந்தத்தில் கம்போடியாவின் தேசிய ஒலிம்பிக் கமிட்டி 2 கையெழுத்திட்டது.கம்போடியாவில் மிகப் பெரிய  போட்டி நடைபெறுவது இதுவே முதன் முறையாகும்.

  2034 ஆசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் நகரமான ரியாத், சவூதி அரேபியா, 2025 ஆம் ஆண்டில்   7வது ஆசிய உள்ளக மற்றும் தற்காப்புக் கலை விளையாட்டுகளை நடத்த பொதுச் சபையிடம் அனுமதி கேட்டது.

2022 ஆம் ஆன்டு 19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவின் ஹாங்சோவிலும், 2026 ஆம் ஆன்டு ல் ஜப்பானின் ஐச்சி-நாகோயாவில் 20வது ஆசிய விளையாட்டுப் போட்டியும்,2030ல் கட்டாரின் டோஹாவில் 21வது ஆசிய விளையாட்டுப் போட்டியும், 2034 இல் சவுதி அரேபியாவின் ரியாத்தில் 22வது ஆசிய விளையாட்டுப் போட்டியும்  நடைபெறும்.


No comments:

Post a Comment

உங்கள் கருத்தையும் சொல்லுங்கள்