Sunday, December 12, 2021

மைதானத்தில் மலர்ந்த காதல்


 திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதாகப் பெரியவர்கள் சொல்வார்கள். ஆனால், விளயாட்டு ரசிகர்கள் மைதானத்தில் மோதிரம் போட்டு   தமது திருமணத்தை நிச்சயம் செய்கிறார்கள்.

இங்கிலாந்து, அவுஸ்திரேலியா ஆகியவற்ருக்கிடையே நடைபெறும் ஆஷஸ் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாளன்று  இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ராப் என்கிற ரசிகர் தனது அவுஸ்திரேலிய தோழியான நாட் என்பவரிடம் மைதானத்தின் மத்தியில் அனைவரது முன்னிலையிலும் சர்ப்ரைசாக தனது காதலை வெளிப்படுத்தினார்.

 நான்கு ஆண்டுகளாக உன்னை காதலிக்கிறேன். என்னை திருமணம் செய்து கொள்வாயா?” என்று மோதிரத்தை நீட்டியபடி தனது காதலை இங்கிலாந்து ரசிகர் வெளிப்படுத்தினார்.

இதனை சற்றும் எதிர்பாராத அவரது தோழி நாட் சிரித்தபடி காதலுக்கு ஓகே சொல்லியது மட்டுமின்றி அவரை கட்டியணைத்து முத்தத்தை பரிமாறிக் கொண்டார். இந்த சம்பவத்தை கண்ட வீரர்களும், மைதானத்தில் இருந்த ரசிகர்களும் அந்த காதல் ஜோடிக்கு கைதட்டி உற்சாகம் கொடுத்தனர்.

இந்த சம்பவம் தற்போது இணையத்தில் வீடியோவாக வைரலாகி வருகிறது. கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இது போன்ற ப்ரொபோசல்கள் எப்போதுமே ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

உங்கள் கருத்தையும் சொல்லுங்கள்