Tuesday, May 24, 2022

1 கோடியே 63 லட்சத்தை பறிகொடுத்த ரிஷப் பண்ட்

கிரிக்கெட் வீரர்கள் அதிக அளவில் சம்பாதிப்பதால் ஆடம்பர பொருட்களின் மீது அவர்களின் மோகம் இருக்கத்தான் செய்கிறது.   ரிஷப் பண்ட் ஆடம்பர வாட்ச்க்கு ஆசைப்பட்டு ஒரு கோடியே 63 லட்சம் ரூபாய் பணத்தை இழந்தது  பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

 ரிஷப் பண்டின் மேலாளர் புனித் ஆடம்பர வாட்ச்களை மலிவு விலையில் வாங்கி தரும் நபரை தனக்கு தெரியும் என்று கூறி மிருனாங்க் சிங் என்பவரை அறிமுகம் செய்து வைத்துள்ளார். பின்னர் கடந்த 2021 ஆண்டு ரிஷப் பண்ட்டிடம் இரண்டு  விலையுயர்ந்த வாட்ச்களை வாங்கித் தருவதாகக் கூறி கிட்டத்தட்ட ஒரு கோடியே 63 லட்சம் ரூபாய் பெற்றுள்ளதாக தெரிகிறது. அதுமட்டுமின்றி தனது கையில் வைத்திருந்த 65 லட்ச ரூபாய் கடிகாரம் ஒன்றையும், ஒரு சில நகைகளையும் ரிஷப் பண்ட் அவரிடம் வழங்கியுள்ளார். இப்படி கோடிக்கணக்கான பொருட்களை ரிஷப் பண்ட் இடமிருந்து பெற்றுக்கொண்ட மிருனாங்க் சிங் மீண்டும் ரிஷப் பண்ட்டிடம் தான் வாங்கி தருவதாக கூறிய எந்த ஒரு பொருளையும் வாங்கி தரவில்லை.

 இதன் காரணமாக தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து மீண்டும் அவரிடமிருந்து தான் இழந்த தொகைக்கு ஒரு செக் ஒன்றை வாங்கியுள்ளார் பண்ட். ஆனால் அவரிடம் இருந்து வாங்கிய அந்த செக்கை வங்கியில் செலுத்தும் போது காசோலை பவுன்ஸ் ஆகிய போது தான் அவர் ஏமாற்றப்பட்டது அவருக்கு தெரியவந்துள்ளது.

 உலகம் அறியும் மிகப் பெரிய வீரராக இருந்தும் அவரை ஹரியானா வீரர் ஏமாற்றியுள்ளது தற்போது இணையத்தில் பெரிய அளவில் பேசப்படும் விடயமாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது. ரிஷப் பண்டினை ஏமாற்றிய மிருனாங்க் சிங் என்பவர் ஹரியானாவை சேர்ந்த ஒரு கிரிக்கெட் வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

உங்கள் கருத்தையும் சொல்லுங்கள்