Saturday, May 28, 2022

கோலியின் சாதனையை சமன் செய்த பட்லர்


 ஐபிஎல் போட்டித் தொடரில் நேற்று நடந்த இரண்டாவது குவாலிஃபயர் சுற்றில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு சென்றுள்ளது. 

  2வது பிளே ஆப் போட்டியில் பெங்களூரு,ராஜஸ்தான் அணிகள் மோதின. இதில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது.  இந்த போட்டியில் ஆரம்பம் முதலே அதிரடி காட்டிய ஜோஸ் பட்லர் 60 பந்துகளில் 106 ஓட்டங்களை சேர்த்து கடைசி வரை அவுட் ஆகாமல் இருந்தார். இந்த ஐபிஎல் தொடரில் அவர் அடிக்கும் 4 ஆவது சதம் இதுவாகும்.

இதற்கு முன்னதாக 2016 ஆம் ஆண்டு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி ஒரே சீசனில் 4 சதங்கள் அடித்து சாதனை படைத்திருந்தார். இப்போது கோலியின் சாதனையை பட்லர் சமன் செய்துள்ளார். இறுதிப்போட்டியில் அவர் சதம் அடிக்கும் பட்சத்தில் 5 சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைக்க வாய்ப்புள்ளது

 


No comments:

Post a Comment

உங்கள் கருத்தையும் சொல்லுங்கள்