Friday, January 20, 2023

இரட்டைச் சதம் அடித்த இந்திய இளவல்


 நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய வீரர் ஷுப்மன் கில்   இரட்டை சதத்தை  அடித்து அசத்தினார்.

ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நவம்பர் 2009 சச்சின் டெண்டுல்கர், அவுஸ்திரேலியாவுக்கு எதிராக 175ஓட்டங்கள் குவித்த சாதனையை முறியடித்தார்.

பஞ்சாபில் மாவட்டங்களுக்கு இடையேயான 16 வ‌யதுக்குட்பட்டோருக்கான போட்டியின் போது, ஷுப்மன் கில் ஒரு அற்புதமான 351 ஓட்டங்களை அடித்து தேசிய தலைப்புச் செய்திகளில் இடம்  பிடித்தார்.

  இந்திய தொடக்க ஆட்டக்காரர் ஷுப்மன் கில் 149 பந்துகளில் 208 ஓட்டங்கள் எடுத்தார். 139.59 ஸ்ட்ரைக் ரேட்டில்   19 பவுண்டரிகள் மற்றும் ஒன்பது சிக்ஸர்களுடன் பதிக்கப்பட்டது.  226 நிமிடங்களில் இச் சாதைனையைப் படைத்தார்.

 டெண்டுல்கர், ரோஹித் சர்மா, இஷான் கிஷான், ஃபகர் ஜமான், வீரேந்திர சேவாக், கிறிஸ் கெய்ல் , மார்ட்டின் கப்டில் ஆகியோஉடன்  இரட்டைச் சதம் அடித்த வீரர்கள் பட்டியலில்  இணைந்தார்.

 கில், தனது 19வது இன்னிங்ஸில் 106 ஓட்டங்களை எட்டியபோது ஸ்கோரை கடந்தார். கில் விராட் கோலி மற்றும் ஷிகர் தவான் (24 இன்னிங்ஸ்) ஆகியோரை பின்னுக்குத் தள்ளி, அதிவேக இந்தியராகவும், கூட்டிணைந்த இரண்டாவது அதிவேக சாதனையாளராகவும் ஆனார்.

  சச்சின் டெண்டுல்கர், வீரேந்திர சேவாக், ரோஹித் சர்மா, இஷான் கிஷானுக்குப் பிறகு ஒரு நாள் போட்டிகளில் இந்தியாவுக்காக இரட்டை சதம் அடித்த ஐந்தாவது இந்தியர் ஆனார்.

கில், தனது 19வது இன்னிங்ஸில் 106 ஓட்டங்களை எட்டியபோது 1000 ஓட்டங்களை எட்டினார்.  விராட் கோலி,ஷிகர் தவான் (24 இன்னிங்ஸ்) ஆகியோரை முந்திச் சென்று, அதிவேக இந்தியராகவும், கூட்டிணைந்த இரண்டாவது அதிவேக சாதனையாளராகவும் ஆனார். அவர் இமான்-உல்-ஹக்கை சமன் செய்து 19 இன்னிங்ஸ்களில் 1000 ஓட்டங்களை கடந்தார், அதே நேரத்தில் 18 இன்னிங்ஸ்களில் வேகமாக 1000 ஒருநாள் ஓட்டங்களை கடந்த ஃபகர் ஜமானின் சாதனையை தவறவிட்டார். 

திருவனந்தபுரத்தில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் சதம் அடித்தார்

ஒக்டோபரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் போது ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் விரைவாக 500 ஓட்டங்களை எட்டிய இந்திய வீரர் சுப்மான் கில் ஆவார். இந்த சாதனைக்கு 10 இன்னிங்ஸ்களை எடுத்தார். தென்னாப்பிரிக்காவின் ஜானமன் மலான் ஏழு இன்னிங்ஸ்களில் இந்த சாதனையை படைத்துள்ளார்.

சர்வதேச ஒரு நாள் போட்டியில் 150 ஓட்டங்களுக்கு மேல் அடித்த இளம் இந்திய வீரர் என்ற பெருமையையும் சுப்மன் கில் பெற்றார். விராட் கோலியின் சாதனையை கில் முறியடித்தார்.

 2012 ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக மிர்பூரில் 183 ஓட்டங்கள் எடுத்தபோது கோலிக்கு 23 ஆண்டுகள் 134 நாட்கள்.

 குறைந்த  இன்னிங்ஸ்களில்ஒருநாள் போட்டியில் 1000  ஓட்டங்கள் அடித்த வீரர்கள் விபரம்.

ஃபகார் ஜமான் 18 இன்னிங்ஸ்களில்,சுப்மான் கில் 19 இன்னிங்ஸ்களில்,இமான் உல் ஹக் 19 இன்னிங்ஸ்,விவ் ரிச்சர்ட்ஸ் 21 இன்னிங்ஸ்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்தையும் சொல்லுங்கள்