Tuesday, June 20, 2023

சி.எஸ்.கே. வீரர் துஷார் தேஷ்பாண்டேவுக்கு நிச்சயதார்த்தம்

சென்னை அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன் ருதுராஜ் கெய்க்வாட் இந்த மாதம் திருமணம் முடித்த நிலையில், மற்றொரு வீரரான துஷார் தேஷ்பாண்டே திருமணத்திற்கு தயாராகியுள்ளார். அவருக்கு பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சென்னை அணியில் வேகப்பந்து வீச்சாளராக நடப்பு சீசனில் திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தியவர் துஷார் தேஷ்பாண்டே. 28 வயதாகும் அவர், ஒட்டுமொத்தமாக 23 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 25 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

நடப்பு சீசனில் அதிக ஓட்டங்களை விட்டுக்கொடுத்தாலும், சென்னை அணிக்காக முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றி ரசிகர்களின் கவனத்தை பெற்றார் துஷார் தேஷ்பாண்டே. இந்நிலையில் தனது பள்ளிக்கால தோழி நபா கட்டம்வாரை திருமணம் செய்யவுள்ளதாக அவர் அறிவித்துள்ளார். இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது தொடர்பான புகைப்படத்தை துஷார் தேஷ்பாண்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

துஷார் – நபா கட்டம்வார் ஜோடிக்கு பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நடப்பு சீசனில் மட்டும் 16 போட்டிகளில் விளையாடியுள்ள தேஷ் பாண்டே சென்னை அணிக்காக 21 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். அதிக விக்கெட்டுகளை கைப்பற்றியவர்கள் பட்டியலில் 6ஆவது இடததை அவர் பிடித்திருக்கிறார்.துஷார் தேஷ்பாண்டேவிற்கும் அவரது தோழியான நபா கடாம்வார் என்பவருக்கும் நேற்று நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. அவரது திருமணத்திற்கு சென்னை அணியின் மற்றொரு நட்சத்திர வீரரான ஷிவம் துபே நேரில் சென்று வாழ்த்தியுள்ளார். மணமக்களுடன் எடுத்த புகைப்படத்தை துபே தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

28 வயதான துஷார் தேஷ்பாண்டே மகாராஷ்ட்டிராவைச் சேர்ந்தவர். வலது கை பந்துவீச்சாளரான மும்பையின் 16 வயதுக்குட்பட்ட அணி, மும்பையின் 19 வயதுக்குட்பட்ட அணி, மும்பை கிரிக்கெட் அசோசியேஷன் லெவன், இந்தியன் போர்ட் பிரெசிடெண்ட்ஸ் லெவன், இந்தியா ப்ளூ, இந்தியா ஏ அணிகளுக்காக ஆடியுள்ளார்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்தையும் சொல்லுங்கள்