Friday, November 10, 2023

450 மில்லியன் பார்வைகளை கடந்த உலக கிண்ணப் போட்டி


 உலகக்கிண்ண  கிரிக்கெற் போட்டி இந்தியாவில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.  ரசிகர்களின் வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இந்த தொடரின் 34-வது லீக் ஆட்டத்தின் முடிவின் படி இதுவரை 450 மில்லியன் பார்வைகளை இந்த தொடர் கடந்துள்ளது.  மேலும் கடந்த 2019-ஆம் ஆண்டை காட்டிலும் இது 10 சதவீதம் அதிகம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

 இந்தியா, பாகிஸ்தான் அணிகள் விளையாடிய போட்டி, அக்டோபர் 14-ஆம் தேதி நடைபெற்றது. குஜராத் மாநிலம், அகமதாபாத் நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தை தொலைக்காட்சி வாயிலாக, நேரலையாக சுமார் 76 மில்லியன் பார்வையாளர்களும், அதேபோல் டிஜிட்டலில் 35 மில்லியன் பார்வையாளர்களும் கண்டுகளித்துள்ளனர்

இந்த உலகக் கோப்பை தொடரில் இந்தியா கிட்டத்தட்ட 8 போட்டிகள் விளையாடி முடித்துள்ளது. இதில் 8 போட்டிகளிலும் இந்திய அணி தான் வெற்றி பெற்றுள்ளது. அதநேரம் இந்திய அணி விளையாடிய அனைத்து போட்டிகளும் 50 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. 

மேலும், முன்பை விட கிரிக்கெட் பார்ப்பவர்களின் எண்ணிக்கை 18 சதவீதம் அதிகரித்துள்ளது. அதாவது 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரை பார்வையிட்ட பார்வையாளர்களின் எண்ணிக்கையை விட இந்த உலகக் கோப்பை தொடரை பார்ப்பவர்களின் எண்ணிக்கை தற்போது வரை 18 சதவீதம் அதிகரித்துள்ளதாக Broadcast Audience Research Council தெரிவித்திருக்கிறது.

இந்த உலகக் கோப்பை தொடரின் 34-வது லீக் போட்டியின் முடிவின் படி 450 மில்லியன் பார்வைகளை பெற்றிருக்கிறது. அதேநேரம், இன்னும் அரையிறுதி மற்றும் இறுதி போட்டிகள் நடைபெற உள்ளதால் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும், மேலும், இந்திய அணி இறுதி போட்டியில் விளையாடும் பட்சத்தில் டிஜிட்டலில் பார்க்கும் பார்வையாளர்களின் எண்ணிக்கை வேகமாக உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக இந்திய அணி வீரர் விராட் கோலி சதம் அடித்த போட்டிகள் அதிக பார்வைகளை பெற்றது குறிப்பிடத்தக்கது.

 

No comments:

Post a Comment

உங்கள் கருத்தையும் சொல்லுங்கள்