Friday, January 12, 2024

19 ஓட்டங்கள் 7 விக்கெட்கள் ஹஸரங்கா உலக சாதனை

சிம்பாப்வே ,இலங்கை ஆகியவற்றுக்கிடையேயான  மூன்றாவது  ஒருநாள்  போட்டியில்  8 விக்கெற்களினால் வெற்ரி பெற்ற  இலங்கை தொடரிக் கைப்பற்றிஅய்து.  மழைகாரண்மாக  முதலாவது  போட்டி நடைபெறவில்லை.  இரண்டாவது போட்டியில் இலங்கை போராடி  வெற்ரி பெற்றது.

வெற்றியாளரை தீர்மானிக்கும் முக்கியமான கடைசி போட்டி ஜனவரி 11ஆம் திக தி கொழும்பில்  நடைபெற்றது. மழையால் இருதரப்புக்கும் தலா 27 ஓவர்களாக குறைக்கப்பட்ட அந்த போட்டியில் வென்றால் தான் குறைந்தபட்சம் தொடரை சமன் செய்ய முடியும் என்ற கட்டாயத்தில் டாஸ் வென்ற ஸிம்பாப்வே முதலில்துடுப்பெடுத்தாடியது.  ஆனால்  சுழலுக்கு சாதகமாக இருந்த மைதானத்தில்   ஹஸரங்கா வீசிய மாயாஜால சுழல் பந்துகளுக்கு தாக்குப் பிடிக்க முடியாத ஸிம்பாப்பே  22.5 ஓவர்கலில்  சகல விக்கெற்களையும்  இழந்து  96  ஓட்டங்கள் எடுத்தது. 

கப்டன் எர்வின் 0, மில்டன் சும்பா 2, ரியன் பர்ல் 9, சிக்கந்தர் ராசா 10 என அந்த அணியின் முக்கிய வீரர்கள்  குறைந்த  ஓட்டங்கலில் ஆட்டமிழந்தனர்.  அதிகபட்சமாக கும்பி 29 ஓட்டங்கள் எடுத்தார். மறுபுறம் பந்து வீச்சில் மாயாஜாலம் செய்த இலங்கை சார்பில் அதிகபட்சமாக வணிந்து ஹஸ்ரங்கா 5.5 ஓவரில் ஒரு மெய்டன் உட்பட வெறும் 19 ஓட்டங்கள் கொடுத்து 7 விக்கெட்டுகளை சாய்த்தார்.   முதல் தர கிரிக்கெட்டில் மிகவும் குறைந்த ஓவர்களில் 7 விக்கெட்டுகளை எடுத்த வீரர் என்ற அபாரமான உலக சாதனையும் அவர் படைத்தார்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்தையும் சொல்லுங்கள்