Monday, February 26, 2024

தனி ஒருவனாகப் போராடி சாதனை படைத்த ஜெய்ஸ்வால்


   ராஞ்சியில்  கடந்த  23ஆம் திகதி  தொடங்கிய  இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது போட்டியில் இளம் வீரர்  ஜெய்ஸ்வால், கிறிக்கெற் ஜாம்பவான்களின் சாதனைகளை முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.   முதலில் துடுப்பெடுத்தாடிய  இங்கிலாந்து 353 ஓடங்கள் எடுத்தது.

 முதல் இன்னிங்சில்  களமிறங்கிய இந்தியா இரண்டாவது நாள் முடிவில் 7 விக்கெற்களை இழந்து 219 ஓட்டங்கள் எடுத்தது.  இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்கள் ஏமாற்றிய நிலையில்,  ஜெய்ஸ்வால் அதிக பட்சமாக 73  ஓட்டங்கள் அடித்தார்.  இந்த 73  ஓட்டங்களையும் சேர்த்து ஜெய்ஸ்வால்  இந்தத் தொடரில்   618* ஓட்டங்கள் எடுத்துள்ளார்.   டெஸ்ட் கிரிக்கெட்டின் வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட தொடரில் 600  ஓட்டங்கள் அடித்த முதல் இந்திய இடது கை வீரர்  என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். இதற்கு முன் கடந்த 2007இல் பாகிஸ்தானுக்கு எதிராக சௌரவ் கங்குலி பாகிஸ்தானுக்கு எதிராக 534 ஓட்டங்கள் எடுத்ததே ஒரு தொடரில் இந்திய இடது கை வீரர்  குவித்த முந்தைய அதிகபட்ச  ஓட்டங்களாகும்.

ஒரு டெஸ்ட் தொடரில் 600 ரன்கள் அடித்த 4வது இந்திய வீரர் என்ற பெருமையும் அவர் பெற்றுள்ளார். இதற்கு முன் திலிப் சர்தேசாய் (1971), சுனில் காவாஸ்கர் (1971, 1978), ராகுல் டிராவிட் (2002, 2003), விராட் கோலி (2014, 2016, 2017) ஆகியோரும் இந்த சாதனையை படைத்துள்ளனர். அது உலக அளவில் போக 23 வயதுக்குள் ஒரு டெஸ்ட் தொடரில் 600 ஓட்டங்கள் அடித்த 7வது வீரர் என்ற சாதனையும் அவர் படைத்துள்ளார்.  இதற்கு முன் அவுஸ்திரேலிய ஜாம்பவான் டான் ப்ராட்மேன், வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கேரி சோபர்ஸ், இந்தியா ஜாம்பவான் சுனில் கவாஸ்கர், தென்னாப்பிரிக்காவின் கிரேம் ஸ்மித், அவுஸ்திரேலியாவின் நெயில் ஹார்வி, வெஸ்ட் இண்டீஸின் ஜார்ஜ் ஹெட்லி ஆகியோரும் 22 வயதுக்கு முன்பே ஒரு தொடரில் 600  ஓட்டங்கள் அடித்தனர்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்தையும் சொல்லுங்கள்