இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்கான திகதி இன்னமும் அறிவிக்கப்படவில்லை. மத்திய, மாநில அரசியல்கட்சிகள் அனைத்தும் வெளிப்படையாகவும், திரைமறைவிலும் பேச்சு வார்த்தைகளை ஆரம்பித்துவிட்டன. தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் சில கட்சிகளுடனான தொகுதிப் பங்கீட்டை முடித்துவிட்டது. தேசிய ரீதியில் பாரதீய ஜனதாக் கட்சி முதல் கட்ட வாக்காளர் பட்டியலை வெளியிட்டது.
பாரதீய
ஜனதாக் கட்சியை எதிர்க்கும்
இந்திய கூட்டணிக்குள் இருந்த
கசப்புகள் களையப்பட்டு நம்பிக்கைக் கீற்றுத்
தெரிகிறது. காங்கிரஸ் கட்சியைக் கடுமையாக
எதிர்க்கும் மமதா, கெஜ்ரிவால் போன்றவர்கள்
சுமுகமான முடிவை
எட்டியுள்ளனர். பாரதீய
ஜனதாக் கட்சியை வீழ்த்த வேண்டும் என்ற ஒற்றைக்
குறிக்கோளுக்காக காங்கிரஸ் கட்சி இறங்கி
வந்துள்ளது.
தமிழகத்தில் திராவிட
முன்னேற்றக் கழகக் கூட்டணி மிகப்
பலமாக இருக்கிறது.
கமல் கூட்டணியில் இருப்பதால் சாதகமான நிலை தோன்றியுள்ளது. காங்கிரஸ்,வைகோவின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், திருமாவளவனின் விடுதலைச்
சிறுத்தைகள் ஆகிய கட்சிகளுடனான
தொகுதிப் பங்கீடு இழுபறிப்படுகிறது.
ஆனாலும் ஸ்டாலினின் தலைமையிலான கூட்டணியில்
இருந்து வெளியேற அந்தக் கட்சிகள்
விரும்பவில்லை.
தொகுதிப்
பங்கீட்டுப் பிரச்சனையால் கூட்டணியில்
இருந்து காங்கிரஸும், திருமாவளவனின் தலைமையிலான கட்சியும் வெளியேறும்
என அண்ணா திராவிட முன்னேற்றக்
கழகம் காத்திருக்கிறது. இம்முறை அதிக தொகுதிகளிக்
கேட்டுப் பெறுவதற்கு காங்கிரஸ் விரும்புகிறது. கேட்ட தொகுதிகள் கிடைக்காவிட்டால்
கூட்டணியில் இருந்து வெளியேறுவோம்
என்ற தொனிப்பட தமிழக
காங்கிரஸின் புதிய
தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்தார். அந்தத் தகவல் டெல்லிக்கு
அனுப்பப்பட்டதால் அங்கிருந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அடுத்த நிமிடம் கரணமடித்த
செல்வப் பெருந்தகை கூட்டணியில்
இருந்து வெளியேற மாட்டோம் என உறுதிபடச்
சொன்னார். அண்ணா
திராவிட முன்னேற்றக் கழகத்தின் பக்கம்
திரும்பியும் பார்க்க மாடேன் என திருமாவளவனும்
அறிவித்துள்ளார்.
திராவிட
முன்னேற்றக் கழகக் கூட்டணியில் இருக்கும் சில
கட்சிகள் தம்முடன் தொடர்பில்
இருப்பதாகத் தெரிவித்த ஜெயக்குமாரின் முகத்தில் கரி பூசப்பட்டிருக்கிறது.
டாக்டர்
ராமதாஸ், விஜய்ந்தின் மனைவி பிரேமலதா ஆகிய இருவரும் திராவிட
முன்னேற்றக் கழகக் கூட்டணியில் சேர்வதர்கு ஆர்வமாக இருந்தனர்.
அவர்களைச் சேர்ப்பதற்கு ஸ்டாலின் விரும்பவில்லை. திருமாவளவனும், டாக்டர் ரமதாஸும் ஒரு கூட்டணிக்குள்
இருக்க மாட்டார்கள். விஜயகாந்தின் வாக்கு வங்கி பிரேமலதாவுக்குச்
செல்லும் என உறுதிபடச் சொல்ல
முடியாது. அவர்கள் இருவருக்கும்
வலைவீசிக் காத்திருந்தது பாரதீய
ஜனதா. பாரதீய ஜனதாவுக்கு டாட்டா
காட்டிவிட்டு அண்ணா
திராவிட முன்னேற்றக் கழகத்தின் பக்கம் இருவரும் திரும்பி விட்டார்கள்.
பிரேமலதாவுடனான தொகுதிப் பங்கீடு முடிந்து விட்டது. ராமதாஸுடனான தொகுதிப்
பங்கீடும் சுமுகமாக நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
அண்ணா
திராவிட முன்னேற்றக் கூட்டணியில் இருந்து வெளியேறிய
டாக்டர் ராமதாஸும், பிரேமலதாவும் மீண்டும் ஐக்கியமாகி விட்டனர். இதனால்
எடப்பாடி பழனிச்சாமி நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளார். பாரதீய ஜனதாவைத்
தூக்கி எறிந்து விட்டு வெளியே
வந்த எடப்பாடியைப் பெரிய கட்சிகள் எவையும் கண்டு
கொள்ளவில்லை என்ற குறைபாடு
நீங்கி உள்ளது. பாரதீய ஜனதாவைக்
கைகழுவி விட்டேன் என்று எடப்பாடி பலமுறை
சத்தியம் செய்தாலும்,அவரின் வரவுக்காக கதவு,ஜன்னல் எல்லாவற்றையும்
அகலத் திறந்து காத்துக்கொண்டிருக்கிறது
பாரதீய ஜனதாக் கட்சி. இதனால்
தம்மை நம்பி இருக்கும் ஒ.பன்னீர்ச்செல்வத்தை மோடியும், அமித்ஷாவும் கண்டும் காணாமலும் இருக்கின்றனர்.
தமிழகத்தில்
அரச வைபவங்களிலும் , பொது வைபவங்களிலும் கலந்து
கொள்வதற்காக கடந்த இரண்டு
மாதங்களில் நான்கு முறை பிரதமர் மோடி தமிழகத்துக்கு
விஜயம் சென்றுள்ளார். அங்கெல்லாம் திராவிட
முன்னேற்றக் கழகத்தைக் கடுமையாகச் சாடி தேர்தல் பிரசாரம்
செய்தா மோடி. தேர்தல் காலத்தில்
பிரதமர் தனது கட்சிக்காகப் பிரசாரம்
செய்வதில் எதுவிதத தவறும் இல்லை.
ஆனால், தேர்தல் அரிவிக்கப்பட முன்பே பிரதமரின் பேச்சு தேர்தல்
பிரசாரம் போல்
இருக்கிறது. தேர்தல் பயமும், பதறமும்
அவரை ஆட்டிப்படைப்பதை வெளிப்படுத்துகின்றன.
தமிழக மேடையில் மோடி ஏறும்போது கூட்டணித் தலைவர்களுடன் கை கோர்க்க வேண்டும் என விரும்பினார். கூட்டணி பேரம் தொடரக்தையானதால் பாரதீய ஜனதாவுடன் கை கொடுக்கத்தயாராக இருக்கும் பன்னீரும் தவிர்க்கப்பட்டார். எஸ்.எச். வாசன், சரத்குமார், பாருவேந்தர் ஆகிய மூவரும் பாரதீய ஜனதாக் கூட்டணியில் இணைந்துள்ளனர். தமிழகத்தில் தாமரை மலரும் என முன்னாள தமிழக பாரதீய ஜனதாத் தலைவர் தமிழிசை கொக்கரித்தார். அடுத்துத் தலைமைப் பொறுப்பேற்ற எல்.முருகனும் வேல் யாத்திர செய்து தாமடை மலரும் என அடித்துச் சொன்னார்.அரை மொட்டைக் கூட கண்ணுக்கெட்டிய தூரத்தில் காணவில்லை. அவர்கள் இருவருக்கும் சலைத்தவரல்ல எனப்து போல அண்ணாமலையும் தாமரையை மலர வைக்க படாத பாடு படுகிறார்.
தகப்பனான
மூப்பனாரைப் போன்ற கறைபடாத அரசியல்வாதி
வாசன். அவருக்குப்
பின்னால் யாருமே இல்லை.
சரத்குமார் கட்சித் தலைவர். அவருக்குத் துணையாக துணைவியார் ராதிகா இருக்கிறார். இவர்கள் இருவரும் தேர்தலில்
வெற்றி பெற மாட்டார்கள்.
அவர்கள் கூட்டணியில் சேர்ந்ததைப்
பெருமையாகச் சொல்கிறார்கள். தேர்தலின் போதுதான் அவர்களின்
செல்வாக்கு வெளிச்சத்துக்கு வரும். பாரிவேந்தர் பச்சைமுத்து, எஸ்.
ஆர். எம் பல்கலைக்கழகத்தின் நிறுவனரும்,
வேந்தரும் மற்றும் அரசியல்வாதியும்
இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனரும் ஆவார். இவர் டாக்டர்
பாரிவேந்தர் எனவும் அழைக்கப்படுகிறார். கடந்த
நாடாளுமன்றத் தேர்தலின் போது
திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில்
உதயசூரியன் சின்னத்தில்
போட்டியிட்டு வெற்றி
பெற்றவர். இம்முறை பாரதீய ஜனதாக் கட்சியின் தாமரை
சின்னத்தில் போட்டியிடப்போகிறார்.
தமிழக மேடைகளில்
உரையாற்றிய மோடி
காங்கிரஸைய்டும், திராவிட முன்னேற்றக் கழகத்தையும் மிக
மோசமாகத்தாக்கிப் பேசினார். காங்கிரஸ் குடும்பக் கட்சி, திராவிட
முன்னேற்ற்றக் கழகம் வாரிசுக் கட்சி
என மோடி அடையாளப்படுத்தியுள்ளார்.
பாரதீய ஜனதாக் கட்சியில் 31 அரசியல்
வாரிசுகள் இருப்பதாகப்
பதிலடி வழங்கப்பட்டுள்ளது. இந்திய
அரசியல் கட்சிகளில் அதிகமானவை கூடும்ப, வாரிசு அரசிலயைக்
கையில் எடுத்து:ள்ளன.
வாரிசு
அரசியலைக் கடுமையாக எதிர்க்கும் பாரதீய
ஜனதாவும் வாரிசு அரசியலுக்கு
விதிவிலக்கல்ல. வாரிசு
அரசியலில் காங்கிரசுக்குச் சளைத்ததல்ல பாஜக என்று சில
ஆதாரங்களைச் சுட்டிக்காட்டுகிறது . காங்கிரஸ் கட்சியில் சுமார் 36 வாரிசுகள் எம்பி ஆக இருந்தால்,
பாஜகவில் 31 வாரிசுகள் உள்ளனர். கடந்த
1999லிருந்து இந்த இரண்டு கட்சிகளின்
நிலைமையும் ஒரே மாதிரிதான் உள்ளது
என்றுஇந்தியா ஸ்பெண் சொல்கிறது. இதே
மாதிரி 'தி பிரிண்ட்' தளம்
ஒரு ஆய்வை முன்வைத்திருந்தது. 2019 மக்களவைத் தேர்தலில்
பாஜக சார்பில் போட்டியிட்டு எம்.பி.ஆனவர்களில்
11% பேர் வாரிசுகள் என அது சுட்டிக்காட்டி
இருக்கிறது. பாஜகவில் வாரிசுகளின் ஆதிக்கம் எந்தளவுக்குத் தலைவிரித்தாடுகிறது என்பதற்குக் கடந்த ஒரு வருடம்
முன்பாகவே விளக்கம் அளித்திருந்தது 'முரசொலி'. பாஜகவில் 46 வாரிசுகள் அரசியலில் உள்ளனர் என்று விளக்கம்
அளிக்கிறார் திமுகவைச் சேர்ந்த கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்.
ஆனால்,
தமிழ்நாட்டிற்கு வந்த பிரதமர் மோடி,
வாரிசு அரசியல் பற்றி விமர்சித்துவிட்டுச்
சென்றுள்ளார். இது ஏதோ முதல்முறை
அல்ல. நாட்டில் காங்கிரஸ், திமுக, ராஷ்ட்ரீய ஜனதா
தளம் உள்ளிட்ட கட்சிகளில் குடும்ப அரசியல் தலைவிரித்து
ஆடுவதாக ஜெ.பி.நட்டா
முன்பே பலமுறை விமர்சித்திருந்தார். ஒரு ஆண்டு
முன்னதாக கூட தெலங்கானா மாநிலத்தில்
பேசிய போது மோடியும் அமித்ஷாவும்
குடும்ப அரசியல் பற்றி மிகக்
கடுமையாக விமர்சித்திருந்தனர். இந்த இருவரின் பேச்சுக்கும்
விளக்கமளிக்க முன்வந்த முன்னாள் முதல்வர் குமாரசாமி, கர்நாடக மாநிலத்தில் மட்டும்
பாஜகவில் 16 வாரிசுகள் உள்ளனர் என்று ஒரு
புள்ளிவிவரத்தை வெளியிட்டிருந்தார். பாஜகவும் குடும்ப அரசியலின் சங்கிலிதான்
என்று விமர்சித்திருந்தார்.
அரசியலில்
இதெல்லாம் சகஜம் என கவுண்டமணி எப்பவோ சொல்லிவிட்டார்.
ரமணி
No comments:
Post a Comment
உங்கள் கருத்தையும் சொல்லுங்கள்