Friday, June 7, 2024

இந்தியத் தேர்தலில் கிறிக்கெற் வீரர்கள்


 இந்திய நாடாளுமன்றத்  தேர்தலில் நான்கு கிறிக்கெற் வீரர்கள்  போட்டியிட்டனர். அவர்களின்  வெற்றி தோல்வி குறித்து இந்த தொகுப்பு:

யூசுப் பதான்:

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யூசுப் பதான். இவர் 2007 ஆம் ஆண்டு ரி20 உலகக் கோப்பை மற்றும் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம் பெற்றவர். மக்களவை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் மேற்குவங்கம் மாநிலத்தில் உள்ள பஹரம்பூர் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டார். அந்தவகையில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஆதிர் ரஞ்சனை 60000 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.

 

கீர்த்தி ஆசாத்:

யூசுப் பதானை போலவே இந்த மக்களவை தேர்தலில் போட்டியிட்ட மற்றொரு கிரிக்கெட் வீரர் கீர்த்தி ஆசாத். இவர் கடைசியாக 1986 இல் இந்தியாவுக்காக விளையாடியவர். இவர் மேற்குவங்கம் மாநிலம் பர்தாமான்-துர்காபூர் லோக் தொகுதியில் இருந்து திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டார். இவரை எதிர்த்து போட்டியிட்டவர் பாஜகவின் திலீப் கோஷ். ஆனால் அவரை 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார் கீர்த்தி ஆசாத்.

 

தேவேந்திர ஜஜாரியா:

இந்திய பாரா தடகள வீரர் தேவேந்திர ஜஜாரியா. இவர் ராஜஸ்தான் மாநிலம் சுரு மக்களவை தொகுதியில் போட்டியிட்டார். பாஜக சார்பில் போட்டியிட்ட இவர் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ராகுல் கஸ்வானிடம் 70,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

 

திலீப் குமார் டிர்கி

இந்தியாவின் முன்னாள் பீல்ட் ஹாக்கி கேப்டன் திலீப் குமார் டிர்கி. ஒடிசாவின் சுந்தர்கர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டார். இவர் பிஜு ஜனதா தளத்தின் வேட்பாளராக களம் இறங்கிய திலீப் குமார் பாஜக வேட்பாளர்  ஜுவல் ஓரமிடம் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்தையும் சொல்லுங்கள்