மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடந்த பிரிமியர் லீக் போட்டியில் மும்பை, ஹைதராபாத் அணிகள் மோதின. நாணயச் சுழற்சியில் வென்ற மும்பை அணி கப்டன் ஹர்திக் பாண்ட்யா, பீல்டிங் தேர்வு செய்தார். முன்னாள் கப்டன் ரோகித் சர்மா, களமிறங்கிய 11 பேர் கொண்ட அணியில் இடம் பெறவில்லை.
மும்பை
அணிக்காக 7 ஆண்டு (2018-24) விளையாடிய இஷான் கிஷான், ஐதராபாத அணிக்காக
விளையாடினார்.
முதலில்
துடுப்பெடுத்தாடிய ஹைதராபாத் 5 விக்கெற்களை இழந்து 162 ஓட்டங்கள் எடுத்தது. 18.1 ஓவரில்
6 விக்கெற்களை இழந்த மும்பை 166 ஓட்டங்கள்
அடித்து வெற்றி பெற்றது.
அபிஷேக்
40,ஹெட் 28, நிதிஷ்
குமார்ர் 19, கிளாசன் 37 , அனிகேத் 18, கம்மின்ஸ் 8 ஓட்டங்கள் எடுத்தனர்.
163 வெற்றி இலக்குடன் மும்பை
களம் இறங்கியது.
ரிக்கிள்டனுடன், 'இம்பேக்ட்' வீரராக வந்த ரோகித் சர்மா இணைந்தார். ரோகித் 26 , ரிக்கிள்டன்
31 , சூர்யகுமார்26,,
வில் ஜாக்ஸ் 36, பாண்ட்யா
21 ஓட்டங்கள்
எடுத்தனர். மும்பை
அணி 18.1 ஓவரில் 6 விக்கெற்களை
இழந்து 166 ஒடங்கள் எடுத்தது. திலக்
வர்மா ஆட்டமிழக்காமல் 21 ஓட்டங்கள்
எடுத்தார்.
மும்பை
அணி கப்டன் ஹர்திக் பாண்ட்யா. 8வது ஓவரின் 2வது பந்தை வீசினார். அப்போது இடது கணுக்காலில் வலி ஏற்பட, சிக்கல் ஏற்பட்டது. பிசியோதெரபிஸ்ட் சிகிச்சைக்குப் பின், மீண்டும் பந்துவீசிய இவர், முதல் பந்தில் அபிஷேக்கை அவுட்டாக்கி அசத்தினார்.
இதே போல அபிஷேக் அடித்த பந்தை (2.5 ஓவர்) பிடிக்க முயன்ற கரண் சர்மா, விரலில் காயமடைய, உடனே வெளியேறினார். முன்னணி பவுலரான இவர், பந்துவீச வரவில்லை.
பிரிமியர்
தொடரின் முதல் போட்டியில் இஷான் கிஷான் (ஐதராபாத்) 106 ஓட்டங்கள் விளாசினார்.
இதன் பின் தொடர்ந்து ஏமாற்றிய இவர், 0, 2, 2, 17, 9 என அவுட்டானார். இந்தப்
போடியிலும் 2 ஓடங்களுடன்
வெளியேறினார்.கடையாக விளையாடிய 6 போட்டியில் 32 ஓட்டங்கள் மட்டும்
எடுத்துள்ளார்.
பிரிமியர் அரங்கில் குறைந்த பந்தில் 1000 ஓட்டங்கள் என்ற இலக்கை எட்டிய வீரர்களில் டிராவிஸ் ஹெட் (575 பந்து) இரண்டாவது இடம் பிடித்தார். முதலிடத்தில் ஆன்ட்ரி ரசல் (545) உள்ளார். கிளாசன் (594), சேவக் (604), மேக்ஸ்வெல் (610), கெய்ல் (615), யூசுப் பதான் (617), சுனில் நரைன் (617) அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
No comments:
Post a Comment
உங்கள் கருத்தையும் சொல்லுங்கள்