Saturday, May 24, 2025

விஜய் தலைமையில் புதிய கூட்டணி ஆதவ் அர்ஜுனா வியூகம்


 அரசியல் எதிரி திமுக, கொள்கை எதிரி பாஜக இந்த இரண்டு கட்சிகளுடனும் கூட்டணி சேரப்போவதில்லை என்பது விஜயின் அரசியல் நிலைப்பாடு.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இரகசியமாக நடந்த  பேச்சு வார்த்தைகள் வெற்றியளிக்கவில்லை. அதனால், சிறிய கட்சிகளை இணைத்து  விஜயின் தலைமையில் புதிய கூட்டணிக்கு ஆதவ் அர்ஜுனா அத்திபாரம்  போடுகிறார்.பாரதீய ஜனதாக் கட்சியின் தமிழகத்தலைவர்   நயினார் நாகேந்திரன்,  விஜய்க்கு அழைப்பு விடுத்துள்ளார். பாரதீய ஜனதாவை விஜய் எதிர்ப்பதாகக் கூறுகிறார் ஆனால், எங்கேயும் பாரதீய ஜனதாவுக்கு எதிராக பெரிதாக  எதனையும் விஜய் செய்ய வில்லை,

 தமிழ்நாட்டில் 2026 சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. திமுக, அதிமுக, சீமான் உள்பட பல்வேறு கட்சிகளும் இப்போதே தேர்தல் பணிகளை எதிர்கொள்ள தயாராகி வருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கிய நடிகர் விஜயும் கட்சியின் உட்கட்டமைப்பு பணிகளை வலுப்படுத்தி வருகிறார். அதன்படி, கட்சி ரீதியிலான 120 மாவட்டச் செயலாளர்களை நியமித்தது, 70,000 ஆயிரம் பூத் ஏஜண்டுகள் நியமனம், சார்பு அணி நிர்வாகிகள் நியமனம் ,   அவர்களுக்கான பயிற்சி முகாம் என்று விஜய் கட்சி வேலைகளை தீவிரம் காட்டி வருகிறார்.

 தேர்தல் நெருங்கும் நேரத்தில் பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகி வந்தால் இபிஎஸ்-உடன் கூட்டணி அமைக்கலாம் என்ற விருப்பமும் விஜய்-க்கு இருப்பதாக சொல்கின்றனர்.

அதாவது திமுக - பாஜக உடன் கூட்டணி இல்லை என்பதில் உறுதியாக இருக்கும் விஜய், காங்கிரஸ் கட்சியுடன் இணக்கமான போக்கையே கடைபிடித்து வருவதாகவும் அவர்களுடன் அதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. கடந்த பல ஆண்டுகளாக திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் புதிதாக கட்சி தொடங்கிய விஜய் உடன் எப்படி இணைவார்கள் என்ற கேள்வி ஒரு பக்கம் இருந்தாலும் அக்கட்சியின் தலைவர்களான திருநாவுக்கரசர், கார்த்தி சிதம்பரம், கே.ஆர்.ராமசாமி உள்ளிட்டோர் ஆட்சி அதிகாரம் குறித்தும் கூட்டணி மாற்றம் குறித்தும் சில கருத்துக்களை அண்மையில் நடந்த காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் முன்வைத்தாக கூறப்பட்டது. இதனை பயன்படுத்தி எப்படியும் காங்கிரஸை தங்கள் கூட்டணியில் இணைத்துவிட வேண்டும் என்று விஜய் முனைப்பு காட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

 அரசியல் கட்சிகளால்  புறக்கணிக்கப்பட்ட  விஜயகாந்தின் மனைவி  பிரேமலதாவுடன் விஜய் கூட்டணி அமைக்கலாம். பரதீய  ஜனதாவின்  கூட்டனியில் தொடர வேண்டும்மென அன்புமணி ஆசைப்படுகிறார்.திரா விட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி அமைக்க வேண்டும் என டாக்டர் ராமதாஸ் விரும்புகிறார்.  சேருவதற்கு சரியான இடம் கிடைக்காவிட்டால் அவர்கள் விஜயிடம் தஞ்சம் அடையலாம்.

தமிழக வெற்றிக்கழகம் என்கிற அரசியல் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி ஓராண்டை கடந்துள்ள நிலையில்  தேர்தல் ஆணையத்தால் வகுக்கப்பட்ட விதிகளின்படி, பொதுவான தேர்தல் சின்னத்திற்கு விண்ணப்பிக்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்து அரசியலில் குதித்த நடிகர் விஜய் தமிழக வெற்றிகழகம் என்கிற தொடங்கினார். தனது கட்சியின் முதல் மாநாட்டை விக்கிரவாண்டியில் நடத்தி முடித்தார் விஜய். அதன் பிறகு கட்சிக்கான மாவட்ட செயலாளர்களை நியமிக்கும் வேலைகளை ஆரம்பித்தும் முடித்தார் விஜய், அதன் பின்னர் பூத் கமிட்டி உறுப்பினர்களை நியமிக்க மண்டல் வாரியாக பூத் கமிட்டி மாநாட்டை கோவையில் நடத்தினார். மேலும் அடுத்ததாக வட மாவட்டங்களில் விஜய் நடத்த திட்டமிட்டுவருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

தவெக கட்சியின் முதல் மாநாட்டில் கட்சியின் கொடி மற்றும் கொள்கை தலைவர்கள், கொள்கை முதலியவை அறிமுகப்பட்டன. ஆனால் கட்சியின் சின்னம் என்னவென்று அறிவிக்கப்படாமல் இருந்தது. இதற்கிடையில்  தேர்தல் ஆணையத்தால் வகுக்கப்பட்ட விதிகளின்படி, பொதுவான தேர்தல் சின்னத்திற்கு விண்ணப்பிக்கத் திட்டமிட்டுள்ளது.

மாவட்ட அளவிலான தலைவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகளிடமிருந்து பெறப்பட்ட பரிந்துரைகளின் அடிப்படையில், கிரிக்கெட் மட்டை, வைரம், ஹாக்கி குச்சி மற்றும் பந்து, மைக்ரோஃபோன் (மைக்), மோதிரம் மற்றும் விசில் போன்ற சின்னங்கள் சாத்தியமான தேர்வுகளின் பட்டியலில் முதலிடத்தில் இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. இவற்றில், கிரிக்கெட் மட்டை, மைக், வைரம் மற்றும் மோதிரம் ஆகியவை இதுவரை மிகவும் விரும்பப்படும் தேர்வாக வெளிப்பட்டதாகத் தெரிகிறது.

தேர்தல் ஆணைய விதிகளின்படி, தற்போதைய அரசாங்கத்தின் பதவிக்காலம் முடிவடைவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பு (மே 6, 2026) நவம்பர் 5 ஆம் தேதி சின்னத்திற்கு விண்ணப்பிப்பதற்கான காலம் தொடங்கும். கட்சியின் பொதுச் செயலாளர் என். ஆனந்த் சமீபத்தில் மூத்த நிர்வாகிகளைத் தொடர்புகொண்டு, தேர்தல் ஆணையத்தின் 190 இலவச சின்னங்களின் பட்டியலிலிருந்து பரிந்துரைகளை தெரிவிக்குமாறு கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும் புஸ்ஸி ஆனந்த் சின்னங்களை தேர்வு செய்ய நான்கு முக்கிய காரணிகளை வைத்ததாகக் கூறப்படுகிறது: அந்த சின்னம் மக்களின் உணர்வுகளுடன் எதிரொலிக்க வேண்டும்; அது விஜய் நடித்த பிரபலமான படங்களுடன் தொடர்புடையதாக இருக்க வேண்டும்; அது வேறு எந்த இலவச சின்னத்தையும் ஒத்திருக்கக்கூடாது, மேலும் தேர்தல் பிரச்சாரம் முறையாக முடிவடைந்த 36 மணி நேரத்திற்குப் பிறகும் கூட மக்களிடம் எடுத்துச் செல்வது எளிதாக இருக்க வேண்டும். :

தேர்தல் ஆணையத்திடம் முன்மொழிய புதிய சின்னங்களை வடிவமைப்பதில் தவெக தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இறுதி முடிவு விஜய்யிடம் உள்ளது என்று "அவர் மாநில அளவிலான மூத்த நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து, இறுதித் தேர்வு செய்வதற்கு முன் ஒவ்வொரு பரிந்துரைக்கப்பட்ட சின்னத்தின் நன்மை தீமைகளையும் எடைபோடுவார்" என்று  தவெக வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

வர்மா

25/5/25

  

No comments:

Post a Comment

உங்கள் கருத்தையும் சொல்லுங்கள்