இங்கிலாந்துக்குச் செல்லும் இந்திய அண்டர் 19 அணி 5 ஒரு நாள் போட்டிகலிலும், , இரண்டு
டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடுகிறது.
இந்த தொடருக்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதில் சிஎஸ்கே அணியில்
மாற்று வீரராக இடம் பிடித்து அபாரமாக விளையாடி வரும் 17 வயது வீரரான ஆயுஷ் மாத்ரே தற்போது
கப்டனாக அறிவிக்கப்பட்டிருக்கிறார். ஜூன், ஜூலை மாதம் நடைபெறும் இந்த தொடரில் 14 வயது
வீரரான வைபவ் சூர்யவன்ஷியும் இடம் பிடித்திருக்கிறார்.
இந்திய அண்டர் 19 அணியில் துணை கப்டனாக மும்பையைச்
சேர்ந்த அபிக்யான் குண்டு என்ற வீரர் அறிவிக்கப்பட்டிருக்கிறார். சூரியவன்ஷியுடன் தொடக்க
வீரராக விளையாடி வந்த விஹான் மல்கோத்ரா என்ற வீரருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
சௌராஷ்டிராவை சேர்ந்த விக்கெட் கீப்பர் துடுப்பாட்ட
வீரர் ஹர்வன்ஸ் , பெங்காலியை சேர்ந்த வேகப்பந்துவீச்சாளர் யுதாஜித் குகா, கேரளாவை சேர்ந்த
சுழற் பந்துவீச்சாளர் முகமது ஈனான் , பஞ்சாப்பை சேர்ந்த சுழற் பந்துவீச்சாளர் அன்மோல்ஜித்
சிங் ஆகியோர் இடம் பிடித்திருக்கிறார்கள்.
இதில்
அவுஸ்திரேலியாவிற்கு எதிராக அண்மையில் நடைபெற்ற இரண்டு யூத் டெஸ்ட் போட்டியில் முகமது
ஈனான் 16 விக்கெட்டுகளையும், அன்மோலிஜித் 9 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருந்தனர்.
கோச் பிஹார் தொடரில் அபாரமாக விளையாடிய ஆல்ரவுண்டர் கிலான் பட்டேலுக்கும் வாய்ப்பு
வழங்கப்பட்டிருக்கிறது. 2026 ஆம் ஆண்டு அண்டர் 19 உலகக் கிண்ணத்
தொடர் ஸிம்பாப்பேவில் நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கு தயாராகும் விதமாக இந்திய
அணி தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது.
ஐபிஎல் தொடரில் விளையாடிய இரண்டு வீரர்கள் தற்போது
அண்டர் 19 அணியில் இடம் பிடித்திருப்பது ரசிகர்களை மகிழ்ச்சி அடைய செய்திருக்கிறது.
இந்தியா U-19 அணி: ஆயுஷ் மாத்ரே (கேப்டன்), வைபவ்
சூர்யவன்ஷி, விஹான் மால்ஹோத்ரா, மவுல்யராஜ்சிங் சாவ்டா, ராகுல் குமார், அபிக்யான் குண்டு
(விக்கெட் கீப்பர்), ஹர்வன்ஷ் சிங் (விக்கெட் கீப்பர்), ஆர்.எஸ். அம்ப்ரிஷ், கனிஷ்க்
சவ்ஹான், கிலன் பட்டேல், ஹெனில் பட்டேல், யுதாஜித் குஹா, பிரணவ் ராகவேந்திரா, முகமது
இனான், ஆதித்ய ராணா, அன்மோல்ஜீத் சிங்
No comments:
Post a Comment
உங்கள் கருத்தையும் சொல்லுங்கள்