Friday, June 13, 2025

இலங்கை யுத்தத்தில் போர்க்குற்றம் ஆரம்பமானது விசாரணை


 விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் இங்கிலாந்து கூலிப்படையினர் போர் புரிந்ததாக குற்றம் சுமத்தி  அவர்கள்  மீது  போர்க்குறா விசாரணை நடைபெறுவதை இங்கிலாந்து  உறுதிப்ப்டுத்தியுள்ளது.

 புலிகளுக்கு எதிரான  இறுதிக் கட்ட யுத்தத்தில்     ஆயுதம், ஆலோசனை என்ற போர்வையில் உலக நாடுகள் பல  இலங்கைக்கு ஆதரவளித்தன.  

புலிகளுகு எதிரான யுத்தத்தில்  வடக்கு, கிழக்குத் தமிழ் மக்கள் மிக அதிகமாகப்பாதிக்கப்பட்டனர். தரை,விமானம், கடல் வழித்தாக்குதல்களுக்கு முகம் கொடுக்க முடியாமல் நிராயுதபாணிகளாக பலர் பலியாகினர். சிலர் காயங்களுடனும் ஆறாத வடுக்களுடனும் இன்று நடைப்பிணமாக வாழ்கின்றனர்.

புலிகளுக்கு எதிரான  போரில் இலங்கை இராணுவத்துடன்  இணைந்து  இங்கிலாந்தின்  முன்னாள் சிறப்பு விமானப் படையினரும், கூலிப்படையினரும்  போர் புரிந்ததாகக் குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது.

 அந்தக் குற்றச் சாட்டைப் புறந்தள்ளாமல் தீவிர விசாரணை நடைபெறுவதாக இங்கிலாந்து அரசாங்கம்  உறுதிப்படுத்தியுள்ளதாக தமிழ் காடியன் செய்தி வெளியிட்டுள்ளது.

தொழிலாளர் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் உமா குமரனின்  கேள்விக்கு பதிலளித்த  வெளியுறவுத்துறை அமைச்சர் கேத்தரின்  வெஸ்ட் இதனை உறுதிப் படுத்தினார்.

இலங்கையில் நடந்த மோதலின்  போது  போர்க்குற்றங்கள் நடந்ததாகக் கூறபடும் குற்றச்சாட்டை நாங்கள் தீவிரமாக எடுத்துள்ளோம். வெளியுறவு,காமன் வெல்த்,  மேம்பாட்டு அலுவலகம் என்பன விராசணைகளுக்கு உதவின.ஆனாலும்  கூடுதல் தகவல் கிடைக்கவில்லை என கேத்தரின்  வெஸ்ட் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து கூலிப்படையினர் 1980 களில்  இலங்கையில் செயல்படத் தொடங்கினார்கள். 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அது பற்றிய விசாரணைக்ள ஆரம்பமாகின.

 கீனி  மீனி என்ற கூலிப்படை நிறுவனம் 1980 களில் செயற்பட்டது. சிறப்பு விமானப்படை அதிகரியான மேயர் டேவிட் வாக்கர் அதனுசன்  இணைந்து செயலாற்றினார்.அந்தக் கூலிப்படை நிறுவனத்தின் மீது  போர்க்குற்ற விசாரணை நடைபெறுகிறது. STF எனப்படும் இலங்கையின் இராணுவத்துடன்  இணைந்து  இங்கிலாந்தின் கூலிப்படை நிறுவனம் செயற்பட்டது.

இலங்கையின் வடக்கு,கிழக்குப் பகுதிகளில் நடைபெற்ற பொதுமக்கள் மீதான துன்புறுத்தல்களுக்கு  கூலிப்படை நிறுவனமும் பதிலளிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது

 இலங்கையில் மனித  உரிமைகளை  நலைநாட்டுவதற்கு இங்கிலாந்து     உறுதியக இருப்பதாக வெளியுறவு அமைச்சர்  வெஸ்ட் கூறினார்.

மனித      உரிமைகளி மீறிய நான்கு இலங்கையருக்கு இங்கிலாந்து தடை விதித்ததை அவர் ஞாபகப்படுத்தினார். 

இலங்கையில் போர்க்குற்றம் செய்ததாகக் கூறப்படும்  கீனி மீனி சர்வீஸ்பற்றிய ஆவனங்களை வெளியிடத்தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால், இலண்டனில் நடைபெற்ற தீர்ப்பாய விசாரணையின்  பின்னர் அந்த ஆவணங்கள்  பகிரங்கப்படுத்தப்பட்டன.

அந்த ஈரகசிய ஆவணங்கள்  2025 ஆம் ஆண்டு பெப்ரவரியில் பகிரங்கப்படுத்தப்பட்டன. சுமார் 30 வருடங்களாக ஆவணங்கள் மறைக்கப்பட்டதற்கான காரணங்கள் தெரிவிக்கப்படவில்லை.

அந்த ஆவணங்கள் 1985 ஆம் ஆண்டுக்கு முந்தியவை. அன்றைய பிரதமர்  மார்க்கிரட் தட்சரின்  இலங்கை விஜயத்தின் காலம் அது.  1980 அம் ஆண்டு  கீனி மீனி என்ற கூலிப்படை நிறுவனம்  இலங்கை அரசுடன்  ஒப்பந்தம் செய்தது. இங்கிலாந்தின் முன்னாள் சிறப்பு விமானபப்டையினர் கீனி மீனியில் பணியாற்ரினார்கள்.

அவர்கள்  இலங்கைப் படையினருக்கு பயிற்சியளித்தனர். போர்  நடவடிக்கையில்  உதவினர்.  கீனி மீனி  உறுப்பினர் ஹெலிகொப்டர் விமானியாகச் செயற்பட்டார். ஹெலிக்கொப்டரில் இருந்து வெளியேறிய துப்பாக்கிக் குண்டுகளுக்கு கூலிப் படையினர்  பதிலலிக்க வேண்டும்.

இலங்கையில் நடைபெற்ற மனித  உரிமை மீறல்களுக்கு இங்கிலாந்து கூலிப்படையினரும்  காரணமாகினர்.  அன்றைய பிரிட்டிஷ் பிரதமர் மார்க்கிரட் தட்சரும் இதனை நன்கு அறிந்திருந்தார். கொழும்புக்கு பிரிட்டனின்  இராணுவ             உதவி பற்றியும் தாட்சருக்கு விளக்கப்பட்டது.

 இலங்கையில் கிளர்ச்சிய அடக்குவதற்கு இங்கிலாந்து செய்த  உதவி போதுமானதல்ல்ல என அன்றைஇய பிரதமர் தட்சர் கூறியதாக அவரது  உயர் வெழ்ளியுறவுக்கொள்கை ஆலோசகர் சார்லஸ் பவர்வ் எலியிட்ட குறிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நடத்தப்பட்ட போர்க்குற்றம் தொடர்பான விசாரனைகளை 2020 ஆம் ஆண்டு  பெரு நகர காவல்துறை  விசாரணை செய்கிறது.

பத்திரிகையாளர் பில் மில்லர் எழுதிய  புத்தகம்  போர்க்குற்ற விசாரனையைத் தூண்டியது.

1980 களில் நடைபெற்ற போர்க்குற்றத்துக்கு இங்கிலாந்து பொறுப்பேற்ற முடியுமா என்ற  ஆராய்ச்சியும் நடைபெறுகிறது.

 கூலிப்படை மீதான  போர்க்குற்ற விசாரணைஅது மிக பரியதொரு அதிர்ச்சிய ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம்  இல்லை.

  

No comments:

Post a Comment

உங்கள் கருத்தையும் சொல்லுங்கள்