பாட்டாளி மக்கள் கட்சியின் சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் மாநாடு மே 11 ஆம் திகதி மாமல்லபுரத்தை அடுத்த திருவிடந்தையில் நடந்தது. 12 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் மாந்நடு என்பதாலும் ராமதாஸ் , அவருடைய மகன் அன்புமணி ஆகியோருக்கிடையே வெடித்த போதல் என்பதாலும் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது.
அன்புமணி
ராமதாஸ் நிர்வாகத் தலைமையில் நடைபெறும் முதல் மாநாடு என்பதால் பிரமாண்டமான ஏற்பாடுகள் நடைபெற்றன.
கடந்த
2013 ஆம் ஆண்டு நடைபெற்ற மாநாட்டின் போது வெடித்த வன்முறையில் 4 பேர் உயிரிழந்தனர்.
ஆகையால் தமிழக அரசு மிகுந்தகட்டுப்பாடுகளை விதித்தது.
கட்சியின்
கடந்தகாலம், எதிர்காலம் என்பனவற்றைப்பற்றிய எதிர்பார்புடன் சென்றவர்கள் ஏமாற்றமடைந்தனர்.
மகன் அன்புமணியின் மீதான கோபத்தை வெளிப்படுத்தினார்
ராமதாஸ்.
"
வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீட்டை வழங்கக் கோரி போராட்டம் அறிவிக்கப்படும். இதுவரை நடந்திராத போராட்டமாக இருக்கும். அந்தப்
போராட்டத்துக்காக எவ்வளவு பெரிய தியாகத்தையும் செய்வதற்கு தயாராக இருக்கிறோம்"
எனக் கூறினார்.
தொடர்ந்து
அவர் பேசுகையில்,
"நாமும் ஒருநாள் தமிழ்நாட்டை ஆள வேண்டும் என்ற
எண்ணம் இருந்தால் என் பேச்சைக் கேளுங்கள். நான் ஆளப் போவதில்லை. எனக்கு அந்த ஆசையும் இல்லை. ஆசை இருந்திருந்தால் ஆளுநராக இருந்திருப்பேன்;
பலமுறை அமைச்சராக இருந்திருப்பேன்; த மிழ்நாட்டையும்
ஆண்டிருப்பேன். ஆனால், மக்களுக்காக வாழ்கிறேன்."
"நமக்குத் தேவை உங்களின் ஒரு வாக்கு தான். இவ்வளவு நாள் என் பேச்சைக் கேட்டீர்கள்.
இடையில் மறந்துவிட்டீர்கள்."
"முன்பு யானை சின்னத்தில் தனியாக நின்று நான்கு
தொகுதிகளில் வெற்றி பெற்றோம். இன்று கூட்டணியில் சேர்ந்து 5 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளோம்.
இதைப் பார்த்து நமக்கு கோபம் வரவில்லையா?"
"சிலர் எங்கே கூட்டணி என்று கேட்கிறார்கள்.
அதை நான் பார்த்துக் கொள்கிறேன். கூட்டணியை முடிவு செய்வேன். அதைப் பற்றி நீ ஒன்றும்
கவலைப்பட வேண்டாம். சீட் வேண்டும், எம்.எல்.ஏ
வேண்டும் என்றால் உழைக்கலாம்."
"அந்தக் கூட்டணி...இந்தக் கூட்டணி.. கட்சிக்குள்ளேயே
கூட்டணி.. கட்சிக்குள்ளேயே கூட்டு. இதெல்லாம் நடக்காது. உன்னை திருத்திக் கொள். இந்தக்
கட்சியில் நீ பொறுப்பில் இருக்கவே முடியாது. அது யாராக இருந்தாலும் சொல்கிறேன்."
"இன்னும்
2 மாதம் கடந்தால் எனக்கு 87 வயது. வயதாகிவிட்டது எனக் கூறி ஏமாற்றப் பார்க்காதீர்கள்.
இந்தக் கட்சி ஒரு தனி மனிதனின் சொத்து அல்ல." எனப் பொரிந்து தள்ளிவிட்டார் ராமதாச்.
ராமதாஸின் பேச்சைக்கேட்டபடி அன்புமணி அசட்டுச் சிரிப்புடன்
அமர்ந்திருந்தார். அடங்கி இருந்த குடும்பப்
பிரச்சனையை மாநாட்டில் வெளிப்படுத்திவிட்டார்.
மாநாடு
தொடர்பாக அடுத்த நாள் திங்கள்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்ட பாட்டாளி மக்கள் கட்சியின்
செயல் தலைவர் அன்புமணி, தமிழ்நாடு அரசியல் களத்தில் இந்த மாநாடு மிகப் பெரிய மாற்றத்தை
ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டார். அறிக்கையில் தன்னை பா.ம.க-வின் தலைவர் என அன்புமணி
குறிப்பிட்டுள்ளார். கடந்த ஏப்ரல் 10 ஆம் திகதியன்று
தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்கி, அவரை செயல் தலைவராக மருத்துவர் ராமதாஸ்
அறிவித்தார். கட்சியின் மாநாடு நெருங்கிக் கொண்டிருந்த நேரத்தில் ராமதாஸின் இந்த அறிவிப்பு,
அரசியல் களத்தில் பேசுபொருளாக மாறியது. இப்போது அன்புமணி தலைவர் என அறிக்கை விட்டிருந்தார்.
தனது மூத்த
மகள் காந்திமதியின் மகன் முகுந்தன் பரசுராமனுக்கு ராமதாஸ் கட்சிக்குள் முக்கிய பதவி
கொடுத்ததை அன்புமணியால் ஜீரணிக்க முடியவில்லை.
இம்மாநாட்டுக்காக அன்புமணி ராமதாஸ் வீடியோ பாடல் ஒன்றை வெளியிட்டு
இருந்தார். அதில், ஒரு இடத்தில் மட்டுமே ராமதாஸின் புகைப்படம் இடம்பெற்றிருந்தது.
"அண்ணன் அன்புமணி அழைக்கிறார்" என்று
பாடல் முழுவதும் அன்புமணியில் அழைப்பு இருந்தது.
ராமதாஸ், தனியாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், அன்புமணியின் படம் ஒரு இடத்தில் கூட இடம்பெறாத நிலையில், "ஐயா அழைக்கிறார்"
என்றே அந்த பாடல் தொடங்குகிறது. அண்ணனா? ஐயாவா யாருக்குப் பின்னால் நிறப்து எஅந்த்
தெரியாமல் கட்சியில் உள்ளவர்கள் குழம்பிப்போய்
உள்ளனர்.
ராமதாஸ், பேரன் பரசுராமன் ஆகிய இருவரும் ஒரு பக்கமாக நிற்கிறார்கள்.
அன்புமணியும் அவருடையா மகள்களும் இன்னொரு பக்கமாக நிற்கிறார்கள். குடும்பப்பிரச்சனையால்
கட்சிக்கு என்ன நடக்குமோ என்ற பதற்றத்தில் அடுத்த தலைவர்களும், தொண்டர்களும் இருக்கிறார்கள்.
தகப்பனுக்கும் மகனுக்கும் இடையேயான மோதல் கடந்த
டிசம்பரில் ஆரம்பமானது. பிரச்சனைகள் அனைத்தும்
முடிந்து விட்டதாக ஜி.கே. மணி உள்ளிட்டவர்கள்
கூறினார்கள். ஆனால், பிரச்சனை கைமீறிப் போய்விட்டதை
ராமதாஸின் பேச்சு வெளிப்படுத்தியது.
பாரதீய ஜனதாவுடன் கூட்டணி சேர வேணும் என அன்புமணி விரும்புகிறார்.
அப்போதுதான் எம்பி பதவியில் தொடரலாம் அமைச்சராகலாம்
என்பது அவரது கனவு.அண்ணா திரவிட முன்னேற்றக் கழகத்தின் தயவிலேதான் அன்புமணி எம்பியாக இருக்கிறார்.
ராமதாஸ்
இன் எதிர் பார்ப்பு வேறுவகையாக இருக்கிறது. திரவிட முன்னேற்றக் கழகத்துடன் சேர்வதற்கு
ராமதாஸ் முயற்சி செய்கிறார்.
தமிழக
அரசியலைத் தீர்மானிக்கும் சக்தியாக ஒரு காலத்தில் இருந்த பாட்டாளி இப்போது பொலிவிழந்துள்ளது.
அவசரம் இல்லாது ஆறுதலாகப் பேசும் கட்சியா பாட்டாளி மக்கள் கட்சி மாறிவிட்டது.
தமிழக
அரசின் மசோதாக்களுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல்
அளிக்காமல் கிடப்பில் போட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் கடந்த
2023-ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா,
ஆர்.மகாதேவன் அமர்வு கடந்த ஏப்ரல் 8ம் திகதி முக்கிய தீர்ப்பு வழங்கியது‘மாநில அரசின் மசோதா குறித்து
ஒரு மாதத்துக்குள் ஆளுநர் முடிவு எடுக்க வேண்டும். மாநில ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள்
குறித்து 3 மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவு எடுக்க வேண்டும். ஒருவேளை, தாமதம்
ஏற்பட்டால் அதற்கான காரணத்தை தெளிவுபடுத்த வேண்டும்’ என்று தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆளுநரால்
கிடப்பில் போடப்பட்ட மசோதாக்களுக்கு நீதிமன்றம் உயிர் கொடுத்தது.ஆளுநரின் கையெழுத்து
இல்லாமலே அவற்றை நடைமுறைப் படுத்தியது நீதிமன்றம்.
இந்தத்
தீர்ப்பு இந்திய அரசியலில் பெரும் தாக்கத்தை
ஏற்படுத்தியுள்ளது. ஆளுநரின் அதிகாரத்தின்
மூலம் மாநிலங்களை முடக்கும் பாரதிய ஜனதாவுக்கு சாட்டையடி விழுந்துள்ளது. ஆளுநர் பதவி
விலக வேண்டும் என்ற கருத்து பரவலாக எழுந்தது. இதுவரை அமைதியாக இருந்த பாரதீய ஜனதா இந்திய
ஜனதிபதி மின் மூலம் நீதிமன்றத்திடம் கேள்வி எழுப்பி உள்ளது.
இந்த தீர்ப்பு தொடர்பாக ஜனாதிபதி திரவுபதி முர்மு 14 கேள்விகளை எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக விளக்கம் கோரி உச்ச நீதிமன்றத்துக்கு அவர் கடிதம் அனுப்பியுள்ளார். அதில்
அவர் கூறியுள்ளதாவது:
அரசியலமைப்பு
சட்டம் 143 (1)-வது பிரிவு வழங்கியுள்ள சிறப்பு அதிகாரத்தின்படி, 14 கேள்விகளை உச்ச
நீதிமன்றத்தின் பார்வைக்கு கொண்டு வந்து, அதுகுறித்து தனது கருத்துகளை தெரிவிக்குமாறு
கோருகிறேன்.
.
இந்திய அரசியலமைப்பு சட்டம் 200-வது பிரிவின்படி, மாநில ஆளுநரிடம் ஒரு சட்டமசோதா சமர்ப்பிக்கப்படும்போது
அவருக்கு உள்ள சட்டரீதியான வாய்ப்புகள் என்னென்ன?,
ஒரு மசோதாவை தாக்கல் செய்யும்போது, மாநில அமைச்சரவை
வழங்கும் ஆலோசனைகளுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவரா?,
அரசியலமைப்பு வழங்கி உள்ள விருப்பு உரிமையை ஆளுநர்
பயன்படுத்துவது நியாயமானதா?,
அரசியலமைப்பு சட்டத்தின் 361-வது பிரிவு, ஆளுநரின்
நடவடிக்கைகள் தொடர்பான நீதிமன்ற மறுஆய்வுக்கு தடையாக உள்ளதா?,
அரசியலமைப்பு சட்டத்தின்படி ஆளுநரின் செயல்பாடுகளுக்கு
எவ்வித காலக்கெடுவும் நிர்ணயம் செய்யப்படவில்லை. அப்படி இருக்க, நீதிமன்ற உத்தரவு மூலம்
ஆளுநருக்கு காலக்கெடு நிர்ணயிக்க முடியுமா? போன்ற 14 கேள்விகளை ஜனாதிபதி எழுப்பி உள்ளார்.
அவர்
எழுப்பிய 14 கேள்விகளுக்கு பதில் அளிக்க 5 நீதிபதிகள் கொண்டஅரசியல் சாசன அமர்வை அமைக்க
வேண்டும். அந்த அமர்வுதான் குடியரசுத் தலைவரின் கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கும் என சட்டம் தெரிந்தவர்கள் தெரிவித்தனர்.
ரமணி
18/5/25
No comments:
Post a Comment