Tuesday, July 15, 2025

முன்னாள் அமைச்சர் ராஜிதவைக் காணவில்லை

 பட்டாளம் புடைசூழ,பொலிஸார் சல்யூட் அடித்து பாதுகாப்புக் கொடுக்க  கெத்தாகப் பவனி வந்த  முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன‌வைக் காணவில்லை என பொலிஸார் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளனர். அவரது தொலைபேசி இயங்கவில்லை எனவும்  தகவல் சொல்லியுள்ளனர்.

இலங்கைப் பொலிஸ், புலனாய்வுத் துறை ஆகியவற்றில் நிலை இப்போது தெளிவாகி விட்டது.

புலஸ்தினி,செவ்வந்தி  வரிசையில் ராஜிதவும் காணாமல் போயுள்ளார்.உயர் பொலிஸ் அதிகாரியையும்  இலங்கைப் பொலிஸ்  கொஞ்ச நாட்களாகத் தேடித்திரிந்தது. அவர் கூலாக நீதிம்ன்றத்தில் சரணடைந்தார்.

மிக அண்மையில்மீநீன்பிடி அமைச்சராக  இருந்து அதிகாரம் செய்தவர் ராஜித சேனாரத்ன.

கிரிந்த மீன்பிடித் துறைமுகத்தில் நடந்த சர்ச்சைக்குரிய மணல் அகழ்வுத் திட்டத்தில் சந்தேக நபராகப் பெயரிடப்பட்ட முன்னாள் மீன்பிடி அமைச்சர் ராஜித சேனாரத்ன  விரைவில் கைது செய்யப்படுவார் என செய்திகள் கசிந்தன. அப்போது  மெத்தனமாக இருந்த பொலிஸார் ராஜிதவைக் கோட்டை விட்ட பின்னர் அவரைத் தேடுகின்றனர்.

கிரிந்த  மீன் பிடித்துறைமுகத்தில் மணல் அகழ்வதற்கு சட்டவிதிகள் வற்றையும் உரிய முறையில் பின்பற்றாமல் வடகொரிய நிறுவனம் ஒன்றுக்கு முன்னாள் அமைச்சர் அனுமதி வழங்கியதால் அரசாங்கத்துக்கு 26.3 மில்லியன் நிதி இழப்பீடு ஏற்படுள்ளதாக ராஜிதவின்   மீது குற்றம் சுமந்தப்பட்டது.

விசாரணைக்கு வருமாரும், வாக்குமூலம் வழங்குமாரில் இலஞ்ச  ஒழிப்பு ஆணைக்குழு பலமுறை ராஜிதவுக்கு அழைப்பு விடுத்தது.

அந்த அழைப்புகளுக்கு உரிய முறையில் ராஜித பதிலளிக்காமையினால், இன்று நீதிமனறம் அவரை தேடப்படும்  குற்றவாளி  என நீதிமன்றம்  அறிவித்துள்ளது.

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு  அழைப்பு விடுத்தபோதெல்லாம் அவர்  வெளிநாட்டில் இருப்பதாக ராஜிதவின்  வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

இலஞ்ச ஆணைகுழு முன்னிலையில் ஆஜராவதைத் தவிர்ப்பதற்கு ரஜித சேனாரத்த கொடுத்த  மருத்துவச் சான்றிதழ்களை  ஏற்க முடியாது என ஆணைக்குழு நிராகரித்தது.

ராஜிதவைக் கைது செய்யும் அதிகாரம் இலஞ்ச ஆணைக்குழுவுக்கு உள்ளது.

ஆனால்,இலஞ்ச  ஒழிப்பு ஆணைக்குழு  நீதிமன்றத்தின் உதவியை நாடி உள்ளது. விசாரணையைத் தாமதப்படுத்தவும்,  நீதிமன்றத்தித் தவறாக வ‌ழிநடத்தவும் ராஜித முயற்சிப்பதாக இலஞ்ச ஆணைக்குழு

நீதிமன்றத்தில் கூறியுள்ளது.

  

  

5 பந்துகளில் 5 விக்கெற்கள்


 

 அயர்லாந்தில் வியாழக்கிழமை நடைபெற்ற தொழில்முறை போட்டியில் ஐந்து பந்துகளில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் ஆண் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை அயர்லாந்து ஆல்ரவுண்டர் கர்டிஸ் கேம்பர் பெற்றார்.

 2024 ஆம் ஆண்டு உள்நாட்டு டி20 போட்டியில் ஈகிள்ஸ் மகளிர் அணிக்கு எதிராக ஸிம்பாப்வே யு-19 அணிக்காக தொடர்ச்சியாக ஐந்து பந்துகளில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய ஸிம்பாப்வேயின் பெண் கிரிக்கெட் வீராங்கனை கெலிஸ் நத்லோவ் தான் இதுபோன்ற சாதனையை முதன்முதலில் பதிவு செய்தார்.

அயர்லாந்தில் நடந்த இன்டர்-மாகாண ரி20 டிராபியின் போது, நார்த்-வெஸ்ட் வாரியர்ஸுக்கு எதிராக முன்ஸ்டர் ரெட்ஸ் அணிக்காக விளையாடியதன் மூலம் கேம்பர் இந்த சாதனையை நிகழ்த்தினார்.

வாரியர்ஸ் அணி 87  ஓட்டங்கள் எடுத்து 5 விக்கெட்டுகளை இழந்து 88  ஓட்டங்கள்  எடுத்து 189 ஓட்டங்கள் இலக்கை துரத்தியதால், வேகப்பந்து வீச்சாளர் இரண்டு ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

12வது ஓவரின் ஐந்தாவது பந்தில், ஜாரெட் வில்சனை வீழ்த்தி அடுத்த பந்தில் கிரஹாம் ஹூனை அவுட் செய்தார். அடுத்த ஓவரில், ஆண்டி மெக்பிரைன், ராபி மில்லர், ஜோஷ் வில்சன் ஆகியோரை வீழ்த்தி ஹட்ரிக் விக்கெட் வீழ்த்தினார்.

ரி20 போட்டிகளில் நான்கு பந்துகளில் நான்கு விக்கெட்டுகளை   ஆறு பந்து வீச்சாளர்கள் வீழ்த்தியுள்ளனர். 

 

Monday, July 14, 2025

களத்தில் இறங்கிய அதிமுக பின்னுக்குத் தள்ளப்பட்ட பாரதீய ஜனதா

தமிழக சட்டசபைத் தேர்தலை மையப்படுத்தி ஆளும் கட்சியான திராவிட முன்னேற்ற்க் கழகமு, எதிர்க் கட்சியான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் பரப்புரையை ஆரம்பித்து விட்டன.

முதலமைச்சர் ஸ்டாலின்  மக்கள்   குறையைக் கேட்பதற்கு வீதியில் இறங்கிவிட்டார். அமைச்சர் மா. சுப்பிரமணியன் வைத்திய சாலைகளுக்கு நேரில் சென்று குறைகளைக் கேட்டைந்து  முதல்வன் பாணியில் உடடியாத் தீரவுகாண்கிறார்.  தப்பு செய்தவர்களை வேலையில் இருந்து தூக்குகிறார். அறநிலயத்துறை அமைச்சர்  கோயில்களில் நிலவும் குறைபாடுகளைத் தீர்க்கிறார்.  தேனீர்க் கடையில் வேலை செய்த சிறுமியைப் பாடசாலையில் அனுமதித்து   செவலை ஏற்கிறார் திமுகவின் சட்டமன்ற உறுப்பினர். இவை மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன. 

தமிழகத்தின் எதிர்க் கட்சி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தான் என்பதை உறுதி செய்யும் வகையில்  "மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்"  எனும் தொனிப் பொருளில் தேர்தல் சுற்றுப் பயணத்தை தொடங்கியுள்ளார் எடப்பாடி.

தமிழக பாரதீய ஜனதக் கட்சியின் தலைவர் பதவியுல் இருந்து அண்ணாமலை வெளியேற்றப்பட்ட‌தன  பின்னர் எடப்பாடியார் சுறுசுறுசுறுப்படைந்துள்ளார். திமுகவின் மீதும் ஸ்டாலினின்  மீதும் தினமும்  ஒரு குற்றச் சாட்டை முனவைத்து ஊடக வெளைச்சத்தைத் தன்மீது  பரவ விட்டுள்ளார்.

 கோயில் பணத்தை எடுத்து கல்லூரி கட்டுகின்றனர். கோயில் உண்டியலில் போடும் பணத்தை வைத்து கோயிலை அபிவிருத்தி செய்ய வேண்டும். ஏன் அரசுப் பணத்தில் கல்லூரி கட்டினால் ஆகாதா? நாங்கள் ஆட்சியில் அனைத்து கல்லூரிகளையும் அரசு பணத்தில் கட்டினோம். அறநிலையத்துறை பணத்தை எடுத்து கல்லூரி கட்டுவது எந்த விதத்தில் நியாயம்? இதை ஒரு சதிச் செயலாக பார்க்கிறோம். கல்விக்கு வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் அந்தக் கல்வி அரசுப் பணத்தில் கொடுக்க வேண்டும்  என்று எடப்பாடி திமுகவின் மீது குற்றம் சாட்டி உள்ளார்.

 ஸ்டாலின் ஆட்சியை ஒரே வரியில் சொல்ல வேண்டும் என்றால் சிம்ப்ளி வேஸ்ட், ஸ்டாலின் ஆட்சியை  எடப்பாடி சபதம் செய்தார்.

அதிமுகவை மீட்க முடியாத பழனிசாமி தமிழகத்தை மீட்போம் என பேசி வருகிறார். எடப்பாடி பழனிச்சாமியிடம் இருந்து தமிழ்நாடு ஏற்கனவே மீட்கப்பட்டு விட்டது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுள்ளதுள்ளார்.

இதுவரை பாஜகவுக்கு டப்பிங் குரல் கொடுத்த அவர் இப்போது ஒரிஜினல் குரலையே கொடுக்க ஆரம்பித்து விட்டார். அறநிலைத்துறை சட்டத்திலேயே கல்லூரி தொடங்குவதற்கு பிரிவு இருக்கிறது.

தமிழ்நாடு என்று சொல்லத் தயங்குகின்ற கூட்டத்துடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேர்ந்துவிட்டார். அதனால் தான் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் பயணம் செய்கிறார். அதிமுகவை மீட்க முடியாத அவர். எப்படி தமிழகத்தை மீட்பார். எடப்பாடி பழனிச்சாமி இடம்  இருந்து தமிழ்நாடு மீட்கப்பட்டு விட்டது. செய்த குற்றங்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ள அவர் தமிழ்நாட்டை பாஜகவிடம் அடகு வைத்தார் என்று தெரிவித்துள்ளார்.

கோயில் காசில் ஸ்டாலின் பாடசாலை கட்டுகிறார் என்ற  எடப்பாடியின் குற்றாச் சாட்டை தமிழ் நட்டில் உள்ள  கல்வியலாளர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்கள் தம்து விவாதத்துக்கு பாரதியாரைத் துணைக்கழைத்துள்ளனர்.

'அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல், ஆலயம் பதினாயிரம் நாட்டல், பின்னருள்ள தருமங்கள் யாவும், பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல், அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்' என்ற பாரதியாரின் கவி வரிகளை கெட்டியாகப் பிடித்து அறிஞர்கள் எடப்பாடியை  நோக்கி கேள்வி மேல் கேள்வி கேட்டு துளைக்கின்றனர்.

என்ன கொடுமை சரவணா பாடசாலை கட்டுவது  ஒரு குற்றமா என மீம்ஸ்கள் பறக்கின்றன.

திராவிட மொடல் ஆட்சி என்ற சொற்தொடர் இந்தியாவையே திரும்பிப் பர்க்க அவைத்தது.

திராவிட மொடல் ஆட்சிக்குப் பதிலாக ஆன்மீக அரசிய என்ற சொற்பதத்தை அண்ணாமலை பிரயோகிக்கத் தொடங்கி விட்டார்.

தமிழகத்தில் விரைவில் ஆன்மிக ஆட்சி மலரும்; சனாதன தர்மம் காக்க சன்னியாசிகளுடன் பயணிப்பேன்,'' என, பா.ஜ., 

கோவை காமாட்சிபுரி ஆதினம், 51 சக்தி பீடத்தில் பஞ்சலிங்கேஸ்வர சுவாமிகளின், 31வது ஜெயந்தி விழா  நடந்தது. இதில், சமூக சேவகர்கள், 13 பேருக்கு விருதுகள் வழங்கி  கெள‌ரவிக்கப்பட்டது.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின்  செல்வாக்குடன் தமிழகத்தில் பாரதீய ஜனதா கால் பதித்துள்ளது.

இந்த நிலையில்  அண்ணாமலையின்  கூற்று அதிமுகவுக்கு சவாலாக அமைந்துள்ளது.

ராமதாஸுக்கும் மகன் அன்புமணிக்கும் இடையேயான தகராரு உச்சக் கட்டத்தை அடைந்துள்ளது.

இருவரும் ஏட்டிக்குப் போட்டியான கூட்டங்களை நடத்துகின்றனர்.

அன்புமணி தனது பெயரைப் பாவிக்கக் கூடாது   விரும்பினால் இனிஷியலைப் போடலாம் என ராமதாஸ் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸிக்கும் அவரது மகன் அன்புமணி ராமதாஸிக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்த மோதல் போக்கு விரைவில் முடிந்துவிடும் என்று பாமகவினர் கூறி வரும் நிலையில், இந்த மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கட்சியின் முழு அதிகாரம் தனக்கே உள்ளது என்று இருவரும் மாறி மாறி கூறி வருகின்றனர். அது மட்டும் இன்றி கட்சியில் தங்களது பலத்தை நிரூபிக்கும் வகையில் அன்புமணியின் ஆதரவாளர்களை  ராமதாஸ் கட்சியில் இருந்து நீக்குவதும், அடுத்த சில நிமிடங்களில் நீக்கப்பட்டவர்களை அதே பதவியில் தொடர்வார்கள் என்று அன்புமணி அறிவிப்பதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அன்புமணி பெயருக்கு பின்னால் என் பெயர் வரக்கூடாது. தேவை என்றால் அன்புமணி எனது பெயரை இனிசியலாக மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். என் பேச்சைக் கேட்கவில்லை என்றால் என் பெயரை யாரும் பயன்படுத்தக் கூடாது. தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை. தசரதன் ஆணையை ஏற்ற ராமர் வனவாசம் சென்றார்.  ஐந்து வயது குழந்தை போல் நான் செயல்படுவதாக சிலர் கூறி வருகின்றனர். இந்த ஐந்து வயது குழந்தை தான் மூன்று வருடங்களுக்கு முன்னர் அன்புமணியை பாமக தலைவர் ஆக்கினேன்

தேர்தலை நோக்கி அரசியக் கட்சிகள் வியூகம அமைக்கையில் பாமக மட்டும் குடும்பப் பிரச்சனையில் சிக்கித் தவிக்கிறது.

ரமணி 13/7/25 

பிரட்மனின் சாதனைகளை நெருங்கும் கில் 100 வருட சாதனை தகர்க்கப்படுமா?

 

 கிறிக்கெற் உலகின் பிதாமகன் டொன்  பிரட்மன்.அவுஸ்திரேலியரான  பிடரட்மனின் 100 வருட சாதனைகளை   இந்திய அணிக் கப்டனான சுப்மன் கில் உடைக்கும்  வாய்ப்பு உருவாகி உள்ளது.

 இங்கிலாந்துக்கு எதிராக மூன்று டெஸ்ட் போட்டிகளில் இந்தியா  விளையாட உள்ளது. 6 இன்னிங்ச்களில் விளையாட உள்ள கில் பிரட்மன், கோலி, கவாஸ்கர்  ஆகியோரின் சாதனைகளை  முறியடித்து புதிய அவரலாறு படைப்பார் என்ற எதிர் பார்ப்பு எழுந்துள்ளது.

 இங்கிலாந்துக்கு எதிரான  முதல் இரண்டு போட்டிகளில்  விளையாடிய சுப்மன் கில் 585 ஓட்டங்கள் அடித்து மிரட்டி உள்ளர். இரண்டாவது போட்டியில்  முதல் இன்னிங்சில்  இரட்டைச் சதமும்  இரண்டாவது இன்னிங்ஸில் 161 ஓட்டங்களும் அடித்து பல சாதனைகளைத் தகர்த்துள்ளார். 

  டெஸ்ட் தொடரில் அதிக ஓட்டங்கள் அடித்த கப்டன் என்ற பெருமை பிரட்மனிடம்  இருக்கிறது. 1936 / 37 ஆண்டு ஆஷஸ் தொடரில் பிரட்மன் 810 ஓட்டங்கள் அடித்தார். அதனை முறியடிக்க  கில்லுக்கு  225 ஓட்டங்கள்  மட்டுமே தேவை.  அந்தத் தொரரில் பிரட்மன்  முதன்  முதலாக கப்டனாக களம்  இறங்கினார், சுப்மன் கில்லும் முதன் முதலாக இந்திய  கப்டனாக  களத்தில்  நிற்கிறார்.

 ஐந்து போட்டிகள் கொண்ட அந்த டெஸ்ட் தொடரில் பிரட்மன்  மூன்று சதங்கள் அடித்தார். சுப்மன் கில்  மூன்று சதங்களை அடித்து சமப்படுத்தி உள்ளார்.

1930 ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் தொடரில் பிரட்மன் 974 ஓட்டங்கள் அடித்தார். 330  ஓட்டங்கள் அடித்தால் கில்  பிரட்மனை  முந்திவிடுவார். அப்போது முதல் இரண்டு போட்டிகளில் பிரட்மன் 394 ஓட்டங்கள் அடித்தார். இரண்டு டெஸ்கலில் கில் 585  ஓட்டங்கள் அடித்துள்ளார்.

 அதி  வேகமாக 11  இன்னிங்ஸ்களில் 1000  ஓட்டங்கள்   அடித்த கப்டன் என்ற பெருமை பிரட்மனிடம்  உள்ளது. 415 ஓட்டங்கள் அடித்தால் அந்தப் பெருமையும்  கில்லிடம் சென்று விடும்.

 ஒரு டெஸ்ட்  தொடரில் ஐந்து சதங்கள் அடித்த சாதனைக்குச் சொந்தக்காரர் மேற்கு இந்தியத் தீவுகளின் வீரரான வால்கோட்.  1955ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு  எதிராக அந்த சாதனை நிலை நாட்டப்பட்டது.

மூன்று சதங்களுடன்  இருக்கும்  கில் அந்தச் சாதனையையும் உடைத் தெறியலாம்.

1947 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக  பிரட்மன் நான்கு சதங்கள் அடித்தார்.

  ஒரு தொடரில் அதிக  ஓட்டங்கள் அடித்த கப்டன் என்ற சாதனை கவாஸ்கர் வசம் இருக்கிறது. அவர் 732 ஓட்டங்கள் அடித்தார். 144 ஓட்டங்கள் அடித்தால்  அந்த சாதனையும்  கில்லின் வசம் வந்து விடும்.

18 ஓட்டங்கள் மட்டும்  கில் அடித்தால்  இங்கிலாந்தில் ஒரு தொடரில்  அதிக  ஓட்டங்கள் அடித்த ட்ராவிட்டின் சாதனையை   முறியடிப்பார்.

இங்கிலாந்துக்கு எதிராக ஜெய்ஷ்வால் அதிக  ஓட்டங்கள் அடித்து முன்னிலையில் இருக்கிறார். அவர் 712 ஓட்டங்கள் அடித்தார். 127 ஓட்டங்கள் அடித்தால் கில்  முந்திவிடுவார்.

இந்தியாவின்  முன்னாள் கப்டன்  கோலி அடித்த 655 ஓட்டங்கள்  என்ற சாதனையைக் கடக்க  இந்தியக் கப்டன்   கில்லுக்கு 91  ஓட்டங்கள் மட்டுமே தேவை.

அதிர்ஷ்டக் காற்று கில் லின்  பக்கம் வீசுகிறது.

 


Friday, July 11, 2025

பாகிஸ்தானில் ஆட்சியைக் கவிழ்க்க திட்டம்?

 அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை.நிரந்தர  நண்பனும் இல்லை என்ற புதிய கலாசாரத்தை  வெளிப்படுத்தியவர் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர்   மறைந்த‌  ஜெயலலிதா.

இந்த வசனத்தை கொஞ்சம் மாற்றிபார்த்தால் பாகிஸ்தானுக்கு கனகச்சிதமாகப் பிரதமரும்   இல்லை என்பதே பாகிஸ்தானின் அரசியல் வரலாறாகும்.

ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்படும்  பிரதமர்  பாகிஸ்தானின் முழுமையாக ஐந்து வருடங்கள் ஆட்சி செய்யவில்லை. இராணுவப் புரட்சியின் மூலம் அவர்கள் தூக்கி எறியப்படுவார்கள் அல்லது கைது செய்யப்படுவார்கள்.

இன்றைய பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் ஆட்சிக்காலம் முடிவதற்கிடையில் அவரை தூக்கி எறிய சதித் திட்டம் நடப்பதாகத் தகவல்கள் வெளியாகின்றன.

பாகிஸ்தானின் 23 ஆவது பிரதமராக கடந்த 2024 ஆம் ஆண்டு  பெப்ரவரியில் ஷெபாஸ் ஷெரீப் தேர்வு செய்யப்பட்டார்.  இவர் முன்னாள் பிரதமர் நவாஸ்ஷெரீப்பின் சகோதரராவார்.

1947 ஆம் ஆண்டு பாகிஸ்தான் சுதந்திரம்  பெற்றது.  சுமார் அரை நூற்றாணடாக அந்த நாட்டில் இராணுவ ஆட்சி நடைபெற்றது.

ஜனநாயக முறையில் தெரிவு செய்யப்பட்ட பிரதமரைத் தூக்கி எறிந்து விட்டு இராணுவ ஆட்சியை அரங்கேற்றிய பெருமை ஜெனரல் அயூப் கானையே சாரும்.

1958  ஆம் ஆண்டு பாகிஸ்தானில் ஆட்சியைக் கவிழ்த்த அன்றைய இராணுவத் தளபதி ஜெனரல் அயூப்கான் 1959 ஆம் ஆண்டுதன்னைப்  ஜனாதிபதியாகப் பிரகடனம் செய்தார். அவரின் வழிவந்த இராணுவத் தளபதிகளும் அதனையே பின்  பற்றினார்கள். யகியாக்கான், முஹம்மது ஷியாகுல் ஹக், பர்வீஸ் முதாரப் என இப்பட்டியல்நீள்கிறது.

பாகிஸ்தானின் இராணுவத் தளபதி  ஜெனரல் அசிம்  முனீர் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றப் போவதாக ஊகங்கள் எழுந்துள்ளன.

ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரியை  அகற்றி விட்டு அவர் ஜனாதிபடியாகப் போவதாகச் செய்திகள் கசிந்துள்ளன. 

இந்தியாவுடன்  முரண்படுவது, மல்லுக் கட்டுவது எனபனவே பாகிஸ்தான் அரசியல்வாதிகளின்  பிரதான வேலைத் திட்டமாகும்.


இந்தியாவில் கட்டவிழ்து விடப்படும் பயங்கரவாத்த் தாக்குதல்களுக்கு பாகிஸ்தான் துணை போவதாக குற்றம் சாட்டப்படுகிறது.

இந்தியாவில் லக்நோவில்  சுற்றுலாததலமான பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னணியில் பாகிஸ்தான் இருபதாக இந்தியா குற்றம் சாட்டியது.

பாகிஸ்தான் வழக்கம்  போல்கையை விரித்தது.  பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கும் தனக்கும் தொடர்பு இல்லை எனச் சொல்லியது.

 இந்தியா இதனை ஏற்கவில்லை. ஒப்பரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா பதிலடி கொடுத்தது. பாகிஸ்தானில் இயங்கிய பயங்கரவாத முகாம்களை  விமானத் தாக்குதல் மூலம் அழித்ததாக இந்தியா கூறியது

 இந்திய விமானங்களைச் சுட்டு வீழ்த்தியதாக  பாகிஸ்தான் மார் தட்டியது. நான்கு நாட்களில் யுத்தம்  முடிவுக்கு வந்தது.

பாகிஸ்தானில் இயங்கிய பயங்கரவாதிகளின்  முகாம்கள் அழிக்கப்படதையும், தலைவர்கள், தளபதிகள், குடும்பங்கள்  கொல்லப்பட்டதையும் பாகிஸ்தான்  ஒப்புக் கொண்டது.

ஒப்பரேஷன் சிந்தூர் முடிந்த சில நாட்களின்  பின்னர்   ஜெனரல் அசீம் முனீர்  பீல்ட் மார்ஷலாக பதவி  உயர்வு பெற்றார். 

 பீல்ட் மார்ஷல் அசீம் முனீர் தனியாக அமெரிக்காவுக்குச் சென்ரு  ட்ரம்பைச் சந்தித்தார். அப்போதே இது பற்றிய யூகங்கள்  வெளிவரத்தொடங்கின. அதிகாரிகள், ஆலோசகர்கள் யாரும் இல்லாமல் வாஷிங்டனுக்குச் சென்ற அசீம் முனீர் ட்ரம்புடன் என்ன பேசினார் என்ற தகவல் இது வரை வெளிவரவில்லை. ஆனால் ஏதோ ஒரு மாற்றம் வரப்போவதை அரசியல் வல்லுநர்கள்  தெரிவித்தனர்.

ஜனாதிபதி சர்தாரியை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்கான வேலைத்திட்டங்கள் ஏற்கெனவே ஆரம்பமாகி விட்டதாக பாகிஸ்தானின் பத்திரிகையாளர் எஜாஸ் சயீத் பகிரங்கப்படுத்தி உள்ளார்.

லக்ஷர் இ தொய்பாக் கட்சித்தலைவர் ஹபீஸ் சயீத், ஜெய்ஷ்  இ முகமது தலைவர் மசூத் அசார்  ஆகியோர் கவலைக்குரிய நபர்கள் எனத் தெரிவித்த சர்தாரி அவர்களை நாடுகடத்த விரும்புவதாகத் தெரிவித்ததை அங்குள்ள மக்கள் விரும்பவில்லை. இதனால் அவர் மிது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.

1977 ஆம் ஆண்டு மக்களா தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் பூட்டோவை  இராணுவ பலத்தால்  தூக்கி எறிந்து விட்டு அட்சி அதிகாரத்தைக் கைப்பற்ரினார் ஜெனரல் ஜியாகுல் கான். அந்தச் சம்பவம் நடைபெற்று 48 வருடங்கள் நிறைவடையும் வேளை மீண்டும் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றப்   போவதாக செய்தி  பரவி உள்ளது.

1999 ஆம் ஆண்டி இரத்தம் சிந்தாப் புரட்சியின் மூலம் இராணுவத் தள‌பதி பர்வேஸ் முஷாரப் ஆட்சியைக் கைப்பற்றினார். 2008 ஆம் ஆண்டு வரை முஷாரப்   ஆட்சி செய்தார்.அப்போது  இதே சர்தாரிதான் ஜனாதிபதிப் பதவியில் இருஃதார்.

2008 ஆம் ஆண்டு சர்தாரியை ஜனாதிபதியாக்கிய  பாகிஸ்தான்  இராணுவம்  27 வருடங்களின்  பின்னர் அதே சர்தாரியை  ஜனாதிபதிப் பதவியில் இருந்து அகற்ற கங்கணம் கட்டியுள்ளது. 

Wednesday, July 9, 2025

உலக வல்லரசை உலுக்கிய வெள்ளம்


      அமெரிக்காவின்  மாநிலமான டெக்டாஸில் ஏற்பட்ட வெள்ளத்தால் 104 பேர் பலியானார்கள்.கெர்  கவுண்டியில் 28 குழந்தைகள் உட்பட 84 உடல்கள்  மீட்கப்பட்டதாக கெர்  கவுண்டி அலுவலகம் தெரிவித்துள்ளது.

 இன்னும் பலரைக் காணவில்லை. அவர்கள்  உயிருடன்  இருப்பார்கள் என்பதர்கான  உத்தரவாதம் எதுவும் இல்லை.

கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிறிய கார்கள் முதல் கனரக வாகனங்கள் பல அடித்துச் செல்லப்பட்டன. அழகாகக் காட்சியளித்த நிழல் தரும் மரங்கள் வேரோடு பிடுங்கி  எறியப்பட்டன.

மழை  பெய்யும், புயல் வரும் என எச்சரிக்கை விடுக்கப்படுவது வழமையானதே. ஆனால், மழையைத் தடுத்து நிறுத்த முடியாது. புயலைத் தடுக்கும் சக்தி, அல்லது திசை மாற்றும் வல்லமை இல்லை. இயற்கையின்  பேரிடர்களை எதிர்வு கூறலாம். அவற்றை  இல்லாமல் செய்யமுடியாது.

மத்திய கெர்கண்டியில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு முழுவதும் 25 சென்ரி மீற்றர் மழை பெய்தது.  பல மாதங்கள்  பெய்ய வேண்டிய மழை ஒரே இரவு கொட்டித் தீர்த்தது.

பெய்யாப் பெருமழையால் ஆறு கரை புரண்டு ஓடியது.  ஆற்றைங்கையில் இருந்த கிறிஸ்தவ கோடைகால முகாமில் தங்கி இருந்த சிறுவர்களும்,  பெரியவர்களும்  அதிகளவில் பாதிக்கப்பட்டனர்.

டெக்டாஸ் மாநிலத்தில் உள்ள  கெர் கவுண்டி, டிராவிஸ் கவுண்டி, பர்னெட் கவுண்டி ஆகிய பகுதிகள்  பெருமளவில் பாதிக்கப்பட்டன.

மழை வெள்ள எச்சரிக்கை   முன் கூட்டியே விடுக்கப்பட்டது.  சில இடங்களில்  தொலை தொடர்பு வசதிகள்  இல்லாமையால் உரிய  இடங்களுக்கு எச்சரிக்கை போய்ச் சேரவில்லை

காம்ப் மிஸ்டிக் போன்ர முகாம்களில் இருந்த மக்கள் வெளியேறுவதற்கு போதிய அவகாசம் கிடைக்கவில்லை எனக் குற்றம் சாட்டப்படுகிறது.

வெள்ள எச்சரிக்கை கிடைத்து மக்கள் வெளி யேறுவதற்கிடையில் வெள்ளம் சூழ்ந்து விட்டது.

டெக்டாஸ் ஹில்  கவுண்டியின்  நிலப்பரப்பும் நீர்வழிப்பாதைகளும் திடீர் வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்படும் இடமாக அடையாளம் காண்ப்பட்டுள்ளது.

வாரத்தின் தொடக்கத்தில் ஆறு அங்குல மழை பெய்யும் என எச்சரிக்கை விடப்பட்டதாகவும், ஆனால்,  10 அங்குல மழை பெய்ததால் நிலமை கைமீறிப் போனதாகவும் டெக்சாஸ் அவசர மேலாண்மைப் பிரிவின் தலைவர் நிம் கிட் கூறியுள்ளார்.

 சமூக ஊடக்க்ன்களில் பகிரப்படும் வீடியோக்கல் அழிவுகளின் உச்சத்தை வெளிப்படுத்துகின்றன. குவாடலூப் ஆற்று  வெள்ளப்பெருக்கால் கரை புரண்டு ஓடியதால் சிலமணி நேரங்கள்  மீட்புப்பணி இடை நிறுத்தப்படது.

அப்பகுதியைல் பெய்யும்  மழைகாரணமாக வெள்ளப்பெருக்கு அதிகரிக்கும் அபாயம் உள்ள்து.

டெக்டாச் மாநிலத்தின் பாறை உள்ள நிலபரப்பு.அங்கு  நிறைந்துள்ள களிமன் நிலப் பரப்பும் வெள்ளப்பஎருக்குக்குக் கரணமாகும். களிமண்தரை நீரை  உறிஞ்சாது நீர் ஓட்டத்தைத் தூண்டும் தன்மை உடையது.குவாடலூப்   உட்பட அருகில் உள்ள  நதிகளில் கடந்த 100 ஆண்டுகலில் ஒவ்வொரு தசாப்தத்துக்கும் ஒரு முறை  வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்படும்.

வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணி முதல் 7 மணிவரை   5-10 அங்குல மழை பெய்தது.

1.82 அடியாக  இருந்த நீர் மட்டம் சடுதியாக 34.29 அடியாக உயர்ந்தது.

ட்ரம்பின் நிர்வாகம் இந்த ஆண்டுத் தொடக்கத்தில் பட்ஜெட், நிர்வாக ஊழியர் குறைப்பு  என்பன வற்றின் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன.

மழை தொடர்ந்து பெய்யும்  என எதிர்பார்க்ப்படுவதால் இன்னொரு வெள்ளப் பெருக்கு  ஏற்படும் அபாயம் உள்ளதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

டெக்டாஸ் வெள்ள அழிவு அமெரிக்க அரசியலில் புயலைக் கிளப்ப்பும்

என அறியபடுகிறது.டெக்டாசின் நிலை மோசமாகுவதாக அங்கிருக்கும் தகவல்கள்   தெரிவிக்கின்றன. 

Monday, July 7, 2025

புதிய தலைமுறையுடன் களம் இறங்கும் விஜய்

 

தமிழக அரசியலில் விஜயி  பெயர் பரபரப்பாக அடிப்டுகிறது. நடிகரான விஜய் தன்னை முழுமையான்ம அரசியல் வாதியாக மாற்ற்றிவிட்டார். முதல்வரே, ஸ்டாலினே பதிஒல் சொல் என  ஆவேசமாகப் பேசி கைதட்டல் வாங்கிகிறார்.

பனையீரில் நேற்று நடந்த அவரது கட்சியின் செயற்குழு மாநாடு விஜய்க்கு அரசியல் அங்கீகாரமளித்தது. தமிழகத்தின் முதல் வேட்பாளர் விஜய் என்ற தீர்மானம் நிறவேற்றப்பட்டது. இதனால் ரசிகர்களான கட்சித் தொண்டர்கள்  மகிழ்ச்சியடந்துள்ளனர்.

திராவிட முன்னேற்றக் கழகக் கூட்ட்னியின் முதலமைச்சர் வேட்பாள‌ர் ஸ்டாலின் எனபதில் மாற்றுக் கருத்து இல்லை. அதிக தொகுதிகள்  ஒதுக்கப்பட வேண்டும்,  துணை முதலமைச்சர், அமைச்சரவையின்  பங்கு போன்ற உட்பூசல்கள்  இருந்தாலும் கூட்டணி  பலமாக  உள்ளது. பாரதீய ஜனதாவுக்கான எதிர்ப்பு என்ற ஒற்றைச் சிந்தனை  கூட்டனியைப் பலமாக்கி உள்ளது.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் கூட்டணி. எடப்பாடி முதலமைச்சர் என அண்ணா திராவிட  முன்னேற்றக் கழகத்தினர் நம்பிக்கொண்டிருக்கின்றனர். 

ஆனால், அமித்ஷாவின் கணக்கு வேறு விதமாக  உள்ளது. தமிழகத்தில் கூட்டனி ஆட்சி. அமைச்சரவையில்  பாரதீயஜனதா இருக்கும் என்கிறார் அமித்ஷா.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினர் இதனை  மறுக்கிறார்கள். கூட்டணி ஆட்சிக்கு தமிழக மக்கள்  ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.  அடுத்த முதலம்மைச்சர்  எடப்பாடி என அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினர் அடித்துச் சொல்கிறார்கள்.  கூட்டனியின்  முதல்வர் என அமித்ஷா எந்த இடத்திலும் சொல்லவில்லை.

இப்படியான சிக்கல் இருக்கையில் தமிழக மக்கள்  இந்தக் கூட்டணிக்கு வாக்களிபார்களா என்பது கேள்விக்குறி.

இள வயது ரசிகர்களை நம்பி அரசியல் களத்தில்  குதித்த விஜய் தமிழக அரசியலைப் புரட்டிப் போடப்போவதாக சபதம் எடுத்துள்ளார்.தமிழக அரசிலயையும் சினிமாவையும்  பிரிக்க முடியாது. தமிழக அரசியலுடன் பின்னிப் பிணைந்தது சினிமா. அண்ணா, கலைஞர், சிவாஜி,எம்ஜிஆர், எஸ் எஸ் ஆர், கலைவாணர், எம் ஆர் ராதா, கண்ணதாசன், ஜெயலலிதா போன்றவர்கள் நாடகம், சினிமா ஆகிய  கலைகளில் இருந்து அரசியலுக்கு வந்தவர்கள்.  நாடகம், சினிமா ஆகியவற்றின்  மூலம் அரசியல் பாடத்தை மக்களுக்குப் புகட்டி வெற்றி பெற்றவர்கள்.

இவர்களுக்குப் பின்னர் சினிமாவில் இருந்து பலர் அரசியலுக்குள் நுழைந்தார்கள் யாரும் வெற்றி பெறவில்லை. 

 

 

 

அமித்ஷாவின் வலையில் வசமாகச் சிக்கிய எடப்பாடி

 ஜெயலலிதாவின்    மறைவுக்குப் பின்னர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் பல மாற்ற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஜெயலலிதாவின்  உடன்  பிறவா சகோதரி  சசிகலா  ஓரங்கட்டப்பட்டார். ஜெயலலிதாவின் விசுவாசியான பன்னீர் வெளியேற்றப் பட்டார்.  எடப்பாடியார்  கழகத்தைக் கைப்பற்றினார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எடப்பாடியின்  கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால், தொடர் ச்சியாக 11 தேர்தல்களில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தோல்வியடைந்தது.

எம்ஜிஆர்  இருகையில் தோல்விகாணாத கழகம், ஜெயலலிதாஅவும் அந்தப் பெருமையைக் கட்டிக் காப்பாற்றினார்.வெற்றிக் கனி எடப்பாடியை விட்டு  வெகுதூரம்  போய்விட்டது.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொடர் தோல்விகளுக்கு பாரதீய ஜனதாதான் காரணம் எனக் கண்டுபிடித்த எடப்பாடி கூட்டணியில் இருந்து வெளியேறினார்.

பாரதீய ஜனதாவுடன் தொடர்பு இல்லை என எடப்பாடி அறிவித்ததும் அதுவரை மெளனமாக  இருந்த மெளனமாக  இருந்த  இரண்டாம் கட்டத் தலைவர்கள் பாரதீய ஜனதாவை வறுத்து எடுத்தார்கள். ராயபுரத்தி ராஜாவான நான் பாரதீய ஜனதாவால் தோற்றேஎன் என  ஜெயக்குமார் புலம்பினார்.

எடப்பாடியின் சபதம் நீண்ட நாள் நீடிக்கவில்லை. பாரதீய ஜனதாவின்  கூட்டனியில்  அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இணைந்த தாக தமிழகத்தில்  அமித்ஷா  பகிரங்கமாகத் தெரிவித்தார். மேடையில் இருந்த எடப்பாடி தலை குனிந்தபடி இருந்ந்தார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் விரும்பாத கூட்டணிக்கு எடப்பாடி துணை போகிறார்.

தமிழக சட்டசபை தேர்தலுக்கு பிறகும், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி தொடர வேண்டும் என்பதற்காகவே, 'தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமையும்' என, உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியது அண்ணா திராவிட முன்னேற்றக் கழ்கத்துகுள்  பூசலைக் கிளப்பி உள்ளது. தமிழக அட்சியில் பாரதீய ஜனதாவும் இடம்  பெறும் என அமித்ஷா கூறியது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தலைவர்கள் ஏற்றுக்கொள்ள வில்லை.

 கூட்டணி ஆட்சியைத் தமிழக மக்கள் விரும்ப மாட்டார்கள். தமிழக அமைச்சரவையில் பாரதீய ஜனதா  இருப்பதை மக்கள் ஏற்ருக்கொள்ள மாட்டார்கள்.திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றிக்கு இதுவே காரணமாக அமையப் போகிறது.

, தமிழகத்தில் கூட்டணி ஆட்சி கோஷம் தற்போது வலுத்துள்ளது. தமிழகத்தில் வரும் சட்டசபை தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழ்கத்தை வீழ்த்துவதே நோக்கம் என எடப்பாடியும், அமித்ஷாவும்  அறிவித்துள்ளனர். மேலும் பல கட்சிகளை சேர்த்து, பலமான கூட்டணியை அமைக்கும் முயற்சியில், அமித் ஷா ஈடுபட்டுள்ளார். தேர்தலுக்கு பின்பும், அ.தி.மு.க., உடனான கூட்டணி தொடர வேண்டும் என்பதே, அமித் ஷா உள்ளிட்ட மேலிடத் தலைவர்களின் விருப்பமாக உள்ளது.

கூட்டணி ஆட்சி எனக்கூறும் ஆமித்ஷா முதலமைச்சர்  யாரெனக் கூறவில்லை. முதலமைச்சர்  பதவுக்காக சசிகலாவைத் தூக்கி எறிந்தவர் எடப்பாடி. தனக்குப் போட்டியாக வந்து விடுமார்  என்ற பயத்தால் பன்னீரை கட்சியில் இருந்து விரட்டியவர். மிக  இலகுவில்  முதலமைச்சர் பதவியைத் தாரை வார்க்க மாட்டார். இந்த நிலை நீடித்தார் தேர்தல்வரை இந்தக் கூட்டணி நிலைப்பது சந்தேகம்தான்.

 

2026‍ ஆம் ஆண்டு மேற்கு வங்கம், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்களில் பா.ஜ.க கூட்டணி வென்று ஆட்சியமைக்கும். டெல்லியில் 27 ஆண்டுகளுக்குப் பின்னர் பா.ஜ.க ஆட்சியைப் பிடித்ததுபோல, தமிழ்நாட்டிலும் பா.ஜ.க கூட்டணி ஆட்சி அமையும்...” என்று அடுத்த அரசியல் குண்டை வீசினார் அமித் ஷா,  அப்போது அமையாக இருந்த எடப்பாடி இப்போது  கன் விழித்த்ஹ்ஹு எதிர்வினையாற்றுகிறார்.

அண்னா திராவிட முன்னேற்றக் கழகம், பாரதீய ஜனதா ஆகியவற்றின் தலைவர்கள் தான்  கூட்டனி பற்றிப் பேசுகிறார்கள்.  தொண்டர்கள் விலகியே நிற்கிறார்கள். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின்  முக்கிய தலைவர்கள் அமித் ஷாவுக்குப் பதிலளிக்கிறார்கள்.

வடமாநிலங்களில் பாரதீய ஜனதா செல்வாக்குடன்  இருக்கிறது. தமிழகத்தில் பாரதீய ஜனதா அறிக்கையில்தான் வளர்கிறது. அண்ணாமலை தினமும் ஏதாவது சர்ச்சையைக் கிளப்பி தன்னை முன்னிலைப் படுத்துவார்.

தனிப் பெரும்பான்மையுடன் தமிழகத்தில் ஆட்சி அமைப்போம் என்கிறார்கள் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்கள். தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்கிறார் அமித்ஷா. கூட்டணிக்கும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

மெகா கூட்டணி என எடப்பாடியும் அமித்ஷாவும் சொல்கிறார்கள்.எந்தக் கட்சியுடன்  கூட்டனியுடன் சேருவது எனத் தெரியாது  இரண்டு திராவிடக் கட்சிகளுடனும் பிரேமலதா  பேரம் பேசுகிறார்.

தந்தைக்கும் மகனுக்கு இடையேயான பிரச்சனையால் பாட்டாளி மக்கள் கட்சி  பிளவுபட்டுள்ளது. தனி ஒருவனான வாசன் பாரதீய ஜனதாவின் பக்கம் சாய்ந்துள்ளார்.

மறு புறத்தில் திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணி  மிகப்பலமாக இருக்கிறது. அங்கும் சில புகைச்சல்கள்  உள்ளன. ஆனால், பாரதீய ஜனதாவுக்கு எதிரான பொதுக்கருத்தில் ஒன்றுபட்டுள்ளது திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணி.

ரமணி

6/7/25 

Tuesday, July 1, 2025

குற்றவாளிக்கூண்டில் நெதன்யாகு

அரபுநாடுகளின் விரோதியாகச் சித்தரிக்கப்படுபவர் நெதன்யாகு, காஸா யுத்தம், ஈரானின் மீதான தாக்குதல் என்பனவற்றால் சர்வதேச ஊடகங்களில்  இஸ்ரேலியப் பிரதமர் நெதன்யாகுவின் பெயர் அடிக்கடி உச்சரிக்கப்படுகிறது.

நெதன்யாகு நல்லவரா கெட்டவரா என்ற விவாதமும் இன்னொரு புறத்தில் நடைபெறுகிறது.

இஸ்ரேலின் வீத தீரனாக விளங்குபவர் நெதன்யாகு. அவர்தான்  இஸ்ரேலின் ஹீரோ என்றே பலரும் நினைக்கின்றனர்.

 ஆனால், நெதன்யாகுவுக்கு எதிரானவர்கள்  இஸ்ரேலிலும்  உள்ளனர். நெதன்யாகுவின்   அமைச்சரவையிலேயே அவரை எதிர்ப்பவர்கள்  இருக்கிறார்கள். 

"பீபீ' என   அழைக்கப்படுபவர் பெஞ்சமின் நெதன்யாகு. இஸ்ரேலில் மிக நீண்டகாலம் பிரத்மரானவர் என்ற பெருமையைப் பெற்றவர். முதலில் 1996 ஆம் ஆண்டுமுதல் 1999 ஆம் ஆண்டுவரை,  பின்னார் 2009 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டுவரை இஸ்ரேலின்  பிரதமராகப் பதவி வகித்தவர். 2022 ஆம் ஆண்டு முதல்  இன்ஸுவரை இஸ்ரேலின்  பிரதமராக இருக்கிறார் நெதன்யாகு

 இஸ்ரேலியப் பிரதமராக நெதன்யாகு இருக்கும் போதே அவருக்கு எதிராக 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஊழல் குற்றச் சாட்டு சுமத்தப்பட்டது. பிரதமர் மீது குற்றச் சாட்டு என்பதால் பொலிஸார் விட்டு விடவில்லை. விசாரணை தொடர்ந்தது. நீதிமன்றத்தில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்ய்ப்பட்டது.

2023 ஆம் ஆண்டு காஸாவில்  ஹமாஸ் தாக்குதல் நடத்தியதால் நெதன்யாகுவுக்கு எதிரான  ஊழல் குற்றச் சாட்டு வழக்கு தாமதமாகிறது. அவர் மீதான குற்றச் சாட்டு நிரூபிக்கப்பட்டால் 10 வருட சிறைத் தண்டனை கிடைக்கும். நெதன்யாகு  குற்றம் செய்யவில்லை என அவரது வழக்கறிஞர்கள் வாதிடுகிறார்கள்.

நெதன்யாகுவின் மீதான ஊழல் குற்றச்சாட்டு விபரங்கள் 2018 ஆம் ஆண்டு நவம்பர் 25 ஆம்திகதி பத்திரிகைகளில் வெளியானபின்னர் மக்கள் மத்தியில் பேசு பொருளானது.

அன்றைய இஸ்ரேலிய  அரச வழக்கறினர் ஷாய் நிட்சன், அன்றைய அட்டரி ஜெனரல் அவிச்சாய் மண்டேல் பிட் ஆகியோர் நெதன்யாகுவின் மீதான குற்றச் சாட்டுகளை நீதிமன்றத்துக்கு எடுத்துச் சென்றனர்.

இலஞ்சம், மோசடி, நம்பிக்கை மீற  ஆகிய மூன்று வழக்குகள் நெதன்யாகுவுக்கு எதிராகப்  பதியப்பட்டன.

இஸ்ரேலிய வரலாற்றின்  முதன் முதலாக குற்றவியல் குற்றச் சாட்டுகள் சுமத்தப்பட்ட பிரதமர் என்ற கறை நெதன் யாகுவின் மீது படிந்தது.

இலஞ்சக் குற்றச் சாட்டு நிரூபிக்கப்பட்டால் 10 வருட சிறைத்தண்டனையும்,   மோசடி, நம்பிக்கை மீறல் குற்றச் சாட்டு நிரூபிக்கப்பட்டால் மூன்று  வருடச் சிறைத் தண்டனையும் கிடைக்கும்.

 குற்றச் சாட்டுகளின் எதிரொலியால் சுகாதார, விவசாயம், புலம் பெயர் விவகாரம் ஆகிய அமைச்சுப் பதவிகளை நெதன்யாகு துறந்தார். 

நெதன்யாகு பிரதமராக நீடிக்கலாமா இல்லையா என்ற என்ற விவாதம் நீதிமன்றத்தில் நடைபெறுகிறது.

நெதன்யாகுவுக்கு எதிரான வழக்குகள் நீதிமன்றத்தில் நடை பெறுகின்றன.  ஹமாஸின் தாக்குதல், ஈரானுடனான போர் ஆகியவற்றால்  விசாரணை தாமதமாகிறது.

நெதன்யாகுவுக்கு எதிராக   போர்க்குற்றம் சுமத்தப்பட்டு சர்வதேச விசாரணை நடைபெற  வேண்டும் என்ற கருத்தும்  தீவிரமடைந்துள்ளது.

இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபது மூக்ககை நுழைத்து சொல்லிய கருத்து எதிர் வினைகளைத் தோற்றுவித்துள்ளது.

நெதன்யாகுவின் மீதான குற்றச் சாட்டுகளை வாபஸ் பெற வேண்டும்ம், அவருக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என ட்ரம்ப்  அறிக்கை விடுத்துள்ளார்.

ட்ரம்பின் கருத்துக்கு எதிரான கண்டனங்கள் பருமளவில்  எழுந்துள்ளன.

இஸ்ரேல் சிறையில் நெதன்யாகு அடைக்கப்படுவாரா இல்லையா எனப்தை நீதிமன்றம் முடிவு செய்யும்.   

பிறேஸிலின் நம்பிக்கைகளுக்கு நெய்மர் முக்கியம் - அன்செலோட்டி

 உலகக் கிண்ணப் போட்டிக்குத் தயாராக இருப்பதில் கவனம் செலுத்துமாறு பிறேஸில் அணியின் பயிற்சியாளர் கார்லோ அன்செலோட்டி,   நெய்மரை வலியுறுத்தியுள்ளார்.நாட்டின் எல்லா நேரத்திலும் முன்னணி கோல் அடித்தவர் அவரது திட்டங்களுக்கு முக்கியமானவர் என்று கூறியுள்ளார்.

 2023  ஆம் ஆண்டு ஒக்டோபர் முதல் ல் நெய்மர் பிறேஸிலுக்காக கிண்ண  கோப்பை தகுதிச் சுற்றின் போது அவரது இடது முழங்காலில் முன்புற   தசைநார் சிதைந்ததால் அவர் அவதிப்பட்டார்.

பார்சிலோனா , பாரிஸ் செயிண்ட்-ஜெர்மைன் அணிகளுக்கான முன்னாள் நட்சத்திரம், ஒரு வருடத்திற்கும் மேலாக ஓரங்கட்டப்பட்ட பிறகு கடந்த அக்டோபரில் மீண்டும் களமிறங்கினார், ஆனால் அதன் பின்னர் தொடர்ச்சியான சிறிய தசை காயங்களுடன் போராடி வருகிறார்.

"உலகக் கோப்பையில் எங்கள் அணிக்கு அவர் மிக முக்கியமான வீரர்" என்று வியாழக்கிழமை வெளியிடப்பட்ட தென் அமெரிக்க கால்பந்து கூட்டமைப்பு  க்கு அளித்த பேட்டியில் அன்செலோட்டி கூறினார்.

புதன்கிழமை, நெய்மரின் ஒப்பந்தத்தை டிசம்பர் வரை நீட்டிக்க ஒரு உடன்பாட்டை எட்டியதாக சாண்டோஸ் அறிவித்தார். 33 வயதான அவர் ஜனவரி மாதம் சவுதி புரோ லீக் அணியான அல்-ஹிலாலில் இருந்து தனது சிறுவயது கிளப்பில் மீண்டும் இணைந்ததிலிருந்து 12 போட்டிகளில் மட்டுமே பங்கேற்றுள்ளார்.

2010 ஆம் ஆண்டு சர்வதேச அளவில் அறிமுகமானதிலிருந்து நெய்மர் பிரேசிலுக்காக 128 போட்டிகளில் 79 கோல்களை அடித்துள்ளார். 

Friday, June 20, 2025

இஸ்ரேலின் வான் பாதுகாப்பை சிதைத்த ஈரானின் அரக்கன்

 இஸ்ரேல், ஈரான் போரினால் உலக நடுகள் அச்சத்தில் உறைந்துள்ளன. ஈரானின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. ஈரான் பதிலடி கொடுத்தது.

  ஈரானின்  கேந்திர முக்கியத்துவம் மிக்க இடங்களிக் குறை வைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. 

  இஸ்ரேலின் ஹைஃபா, டெல் அவிவ் , ஜெருசலேம்  ஆகிய நகரங்கள்   ஈரானின் தாக்குதலால்  சிதைந்தன.இஸ்ரேலின் தாக்குதலை ஈரானால் சமாலிக்க் முடியாது என்றே பலரும் நினைத்தார்கள்.

ஆனால் ஈரானின் பதில்தாக்குதல் இஸ்ரேலை அதிரச் செய்தது.

பலம் வாய்ந்த  இஸ்ரேலின் வான் பாதுகாப்பை மீறை ஈரானால் தாக்குதல் நடத்த முடியாது என்றே போர் வல்லுநர்கள் தெரிவித்தனர்.

ஹமாஸின் தாக்குதலால்  இஸ்ரேலின் வான் பாதுகாப்பு  இரண்டு மாதங்களுக்கு முன்னர்  சிதைத்தது. அதிலிருந்து பாடம் கற்ற இஸ்ரேல் எச்சரிக்கையானது. ஈரானின் ஏவுகளைகளைத்தடுக்க இஸ்ரேலால் முடியவில்லை.

இரானின் அரக்கன் என வர்ணிக்கப்படும் ஹைபர் சுப்பர் சொனிக் ஏவுகளைகள்  இஸ்ரேலின் முக்கிய நகரங்களைச் சிதைத்தன.

     ஹைபர்சோனிக் ஏவுகணையான ஃபட்டா-1 ஐ இஸ்ரேலிம் மீது  ஏவியதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை அறிவித்தது.

  இஸ்ரேலுக்கு எதிரான மோதலில்  ஹைபர் சுப்பர்சொனிக்  முதன் முதலில்  பயன்படுத்தப்பட்டது.

 2023 ஆண்டு உலகத்துக்கு  வெளிப்படுத்தப்பட்ட இந்த ஏவுகணைக்கு    ஈரானின்  தலைவர் அயதுல்லா அலி கொமேனி தான்  பெயரிட்டார்.

IRGC-யால் உருவாக்கப்பட்டு ஜூன் 2023 இல் உலகிற்கு வெளிப்படுத்தப்பட்ட ஃபட்டா-1, ஒரு நடுத்தர தூர ஹைபர்சோனிக் பாலிஸ்டிக் ஏவுகணை ஆகும்.

ஈரான்-இஸ்ரேல் போரில் பயன்படுத்தப்பட்ட ஃபட்டா-1 ஹைபர்சோனிக் ஏவுகணைகள் என்றால் என்ன? 

 ஃபட்டா-1 ஏவுகணை என்றால் என்ன?

IRGC படி, இந்த தாக்குதல் ஆபரேஷன் ஹானஸ்ட் ப்ராமிஸ் 3-இன் 11வது அலையின் ஒரு பகுதியாகும். ஃபட்டா-1 ஏவுகணை இஸ்ரேலின் இரும்பு டோம் மற்றும் அம்பு போன்ற அதிநவீன பாதுகாப்பு அமைப்புகளைத் தவிர்ப்பதற்காக குறிப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஈரானிய அதிகாரிகள் இதை "இஸ்ரேல்-ஸ்ட்ரைக்கர்" என்று குறிப்பிடுகின்றனர்.

இந்த ஏவுகணை  மணிக்கு சுமார் 15,000 கிலோ மீற்றர் செல்லும் திறன் கொண்டது.

இது 350-450 கிலோ எடையுள்ள  வெடிமருந்திஅச் சுமந்து செல்லும்.

 இஸ்ரேலின் வான்பாதுகாப்பு அமைப்பை மீறி ஈரானின் ஏவுகணைகள் தாக்குதல் நடத்தியிருப்பது பெரும் கவனத்தை பெற்றுள்ளது. அணுகுண்டு தயாரிப்பில் ஈரான் தீவிரம் காட்டுவதாகக் கூறி, அந்நாட்டின் அணு உலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுத்த ஈரான், இஸ்ரேல் மீது பதில் தாக்குதல் நடத்தியது. இந்த மோதல் தற்போது பெரிதாக வெடித்து, இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இஸ்ரேலின் வான்பாதுகாப்பு அமைப்பான ஐயன் டாம் ஈரான் ஏவிய ரொக்கெற்களையும், ஏவுகணைகளையும் வானிலேயே இடைமறித்து சுட்டு வீழ்த்தியது.

ஆனால், ஈரான் அனுப்பிய  ஹைபர்சோனிக்  ஏவுகளைகளையும், பாலிஸ்டிக் ஏவுகணைகளையும் தாக்கியபோது, இஸ்ரேலின் ஐயன் டாம் வான் பாதுகாப்பு அமைப்பால் கூட அதனைத் தடுக்க முடியாமல்  இஸ்ரேலைச் சீரளித்தன.  ஈரானின் இந்த ஹைபர்சோனிக் ஏவுகணைகளை இடைமறித்து தாக்கும் திறன் எந்த நாட்டிடமாவது இருக்கிறதா எனும் கேள்வி எழுந்துள்ளது.

ஆயுதங்களின் நவீன அரக்கனான சுப்பர்சோனிக் ஏவுகணைகள்   மூலம் உகரைனின் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியது.

சண்ண்டையை நிறுத்தும்படியும்சரணடையும் படியும்   ஈரானிடம் ட்ரம்ப் கூறினார். ட்ரம்பின் சொல்லைக் கேட்ட முடியாது என கொமேனி  பதிலளித்தார்.

கொமேனி பதுங்கி இருக்கும் இடம் தெரியும் என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.  இஸ்ரேலுக்கு ஆதரவாக ட்ரம்ப்  போர்  செய்வார் என அமெரிக்க ஊடகங்கள்  தெரிவிக்கின்றன.

  வெள்ளை மாளிகையில் தனது தேசிய பாதுகாப்பு குழுவுடன் ட்ரம்ப் ஒரு மணி நேரம் 20 நிமிட சந்தித்து உரையாடினார்.

  ஈரானிய அணுசக்தி நிலையங்களை குறிவைத்து இஸ்ரேலின் இராணுவ தாக்குதலில்   இணைவதற்கு  ட்ரம்ப் ஆலோசித்து வருவதாக   மூத்த உளவுத்துறை அதிகாரி ,பாதுகாப்புத் துறை அதிகாரி உட்பட சிலர் ஊடகங்களுக்குத் தெரிவித்துளனர்.சமூக ஊடகங்கள் இதனை விவாதிக்கின்றன.

  ஈரானுக்கு எதிரான  போரில் அமெரிக்கா ஜனாதிபதி   ட்ரம்ப்   இணையும்  வாய்ப்புள்ளது என்று பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் இஸ்ரேலிய பாதுகாப்பு நிறுவனமும் நம்புவதாக இரண்டு இஸ்ரேலிய அதிகாரிகள் கூறியதாக  செய்தி வெளியாகி உள்ளது. .

கனடாவில் நடந்த ஜி7 உச்சிமாநாட்டிலிருந்து ட்ரம்ப் திடீரென வெளியேறியதும், சமூக ஊடகங்களில் தொடர்ந்து வந்த  ட்ரம்பின் அச்சுறுத்தும் எச்சரிக்கைகளும், அமெரிக்காவின் ஈடுபாட்டை உறுதிப்படுத்தின.

ரஷ்யாவும்,  வட கொரியாவும்  இஸ்ரேலைக் கண்டித்துள்ளன.   இஸ்ரேலுக்கு ஆதரவாக  அமெரிக்கா  போர் செய்தால் நிலமை மேலும் விபரீதமாகும்.

ஈரானின் ஆயுதப் பலம் அமெரிக்காவுக்கும் அச்சுறுத்தலாக  உள்ளது.

ஈரானுக்கு அருகில் அமெரிக்க இராணுவத் தளங்கள்  உள்ளன.  இந்தப் போர்  இப்போதைக்கு முடியும் போல் தெரியவில்லை   

Wednesday, June 18, 2025

வீழ்ச்சியடைகிறது இலங்கையின் பொருளாதாரம்

இஸ்ரேல் ஈரான்  போர்  உலகில்  பெரும்  பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.  யுத்தம் வெடித்த அடுத்த நொடியே  எண்ணெய்  விலை எகிறியது. அதன் தாக்கம்  இலங்கையில் இன்னமும் ஏற்படவில்லை , இது எத்தனை நாட்களுக்குத் தாக்குப்பிடிக்கும் எனத் தெரியாது . தனது பாதுகாப்புக்காக  ஈரான்  மீது தாக்குதல் நடத்தியதாக  இஸ்ரேல் கூறுகிறது.

 ஈரானின் அணு ஆயுத  உலைகள், விஞ்ஞானிகள்,  தளபதிகள் இஸ்ரேலின்  இலக்குகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இஸ்ரேல் தாக்கியதால் ஈரான் கையைக்  கட்டிக்கொண்டு இருக்கவில்லை.  ஈரானின் பதில்தாக்குதலால்   இஸ்ரேலின் முக்கிய நகரங்கள் பற்றி எரிகின்றன இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களம்  இறங்கி உள்ளது.  ஈரானுக்கு ட்ரம்ப்  எச்ச்சரிக்க விடுத்துள்ளார்.

ரஷ்யா,சீனா, அரபு நாடுகள்  இஸ்ரேலைக் கண்டித்துள்ளன.   ஈரான், இஸ்ரேல் யுத்தத்தால் வல்லரசுகள்  இரண்டாகி உள்ளன.

  மோதல் அதிகரித்தால் எரிபொருள் விநியோகம், தேயிலை ஏற்றுமதி ,வெளிநாட்டு வேலைவாய்ப்பு போன்ற முக்கியமான துறைகள் பாதிக்கப்படும் என்ற அச்சம் நிலவுகிறது. எரிபொருள், தேயிலை துறைகளில் உடனடி தாக்கம் ஏற்படவில்லை.  நாளடைவில் பாதிப்பு அதிகமாகலாம்

 இஸ்ரேலில் பணிபுரியும் சுமார் 20,000 இலங்கையர்களின் பாதுகாப்பு , தெஹ்ரானில் வசிக்கும் சுமார் 50 பேரின் பாதுகாப்பு குறித்து கவலைகள் இருப்பதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன. ஈரானில் உள்ள இலக்குகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து எண்ணெய்,தங்கத்தின் விலை உயர்ந்தது

இலங்கையின் தேயிலை ஏற்றுமதியாகும் நாடுகளில் ஈரான் முக்கியமானது.  இந்த நிலை தொடர்ந்தால்  கிழக்கு ஆசியாவில் தேயிலை ஏற்றுமதி  வீழ்ச்சியடையும் அபாயம்  உள்ளது. .

சுமார் 20,000 இலங்கைத் தொழிலாளர்கள் இஸ்ரேலில் உள்ளனர், அவர்களில் பெரும்பாலோர் டெல் அவிவ், ஜெருசலேம் , ஹைஃபா ஆகிய நகரங்களில்  வசிபதாக  இலங்கைக்கான இஸ்ரேலியத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.


 விவசாயம். பராமரிப்பாளர்,  கட்டுமானத் துறை, ஹோட்டல்கள்  உணவகங்கள் தொழிற்சாலை ஆகியவற்ரில் இங்கையர் வேலைவாய்ப்புப் பெற்றுள்ளனர்.

 மோதல் தீவிரமானதால் இலங்கைகுத் திரும்பும்  கோரிக்கையை எவரும் விடுக்கவில்லை,  இஸ்ரேலுக்கு வேலை வாய்ப்புப் பெற்றுச் சென்றுள்ள 10 இலங்கையர்கள் அபுதாபியில் சிக்கி உள்ளனர் அவர்களுக்கு  ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள  இலங்கைத் தூதரகம் உதவி செய்கிறது. 

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புப் பெற்றுச் செல்லத்தயாரான 600 இலங்கை யரின்  பயணம்  ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஒரு மில்லியனுக்கும் அதிகமான இலங்கை தொழிலாளர்கள் தற்போது மத்திய கிழக்கில் பணிபுரிகின்றனர். கட்டார் , சவுதி அரேபியா, குவைத் , ஐக்கிய அரபு எமிரேட்ஸ்  ஆகியவை அனைத்து இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களில் 80 சதவீதத்திர் உள்ளனர்.

  கடந்த 20 ஆண்டுகளில், தொழிலாளர்களின் பணம் அனுப்புதல் நமது நாட்டின் வர்த்தக பற்றாக்குறையில் சராசரியாக 80 சதவீதத்தை செலுத்தியுள்ளது. 2024 ஆம் ஆண்டில் வெளிநாட்டு தொழிலாளர்களின் பணம் அனுப்புதல் 6.5 பில்லியன் டொலரை எட்டியது. இந்த தொழிலாளர்களில் பெரும்பாலோர் மத்திய கிழக்கில் வேலை செய்கிறார்கள்.   2025 ஏப்ரலில் 646.10 மில்லியன் அமெரிக்க டொலராக  இருந்த இலங்கையின் பண அனுப்பீடுகள் மே மாதத்தில் 641.70 மில்லியன் அமெரிக்க டொலராகக் குறைந்துள்ளது.

. இந்த முக்கியமான வருமான ஆதாரத்தை இழக்க முடியாது. மத்திய கிழக்கில் உள்ள அரபு நாடுகள் நமது புலம்பெயர்ந்த தொழிலாளர்களில் அதிக எண்ணிக்கையில் உள்ளன. எனவே அவை நமது நாட்டிற்கு வெளிநாட்டுத் தொழிலாளர் பண அனுப்புதலில் அதிக சதவீதத்தை வழங்குகின்றன. எனவே, அதன் அந்நியச் செலாவணியின் இந்த முக்கிய ஆதாரத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுப்பது இலங்கையின்  கட்டாயமாகும்.

  

ஒட்டுக்குழுவுடன் ஒட்டிஉறவாடும் சந்தர்ப்பவாத அரசியல்


  கொள்கை,கோட்பாடு என்ற அரசியல் மலினப்பட்டு சந்தர்ப்பவாத அரசியல்தலைதூக்கி உள்ளது.

எது நடக்கக்கூடாதொ அதுவெல்லாம் நடது முடிந்துவிட்டது.தேர்தல் காலத்தில் மேடை போட்டி பேசிய      பேச்சுகள்,அடிய ஆட்டங்கள்,சாபங்கள், சபதங்கள் எல்லாம் பொசுக்கென்று போய்விட்டது.இலங்கையின் அரசியல் கட்சிகள் அனைத்தும் வாக்காளர்களை ஏமாற்றி விட்டன.  பரம்பரை பரம்பரையாக வாக்களித்தவர்களை  இன்றைய தலைவர்கள் எனச் சொல்பவர்கள் நட்டாற்றில் விட்டுவிட்டனர்.

 10 கட்சிகள், 15 சுயேட்சைக் குழுக்கள் தேர்தலில் போட்டியிட்ட போதும்,  தனக்குப் பிடித்தமான சின்னத்துக்கு அல்லது வேட்பாளருக்கு புள்ளடியிட்டவர்கள் ஏமாந்து போயுள்ளனர்.

வேட்பாளர் அல்லது  சின்னம் சரியாக  இருக்கும் என நம்பித்தான் வாக்க்காளர் புள்ளடியிடுவார்.  அந்தப் புள்ளடி, அரசியல் சதுரங்கத்தில் பிழையாகிவிட்டது.

வீட்டுக்கும், சைக்கிளுக்கும் வாக்களிக்க விரும்பாதவர்கள்    சங்குக்கு வாக்களித்தார்கள்.

வீட்டை விட்டு வெளியிலை வந்து தனிகுடித்தனம் செய்யும் சங்குக்கு வாக்களிக்க விரும்பாதவர்கள் சைக்கிளுக்கு வாக்களித்தார்கள். இவர்களுக்கு வீட்டையும்  பிடிக்காது.

 இப்ப சைக்கிளும்,சங்கும் சேர்ந்து விட்டன.

இவர்களை நம்பி வாக்களித்தவர்கள்   நடுத்தெருவில்.

இவர்கள் பதவி ஆசனத்தில் பரம அரசியல் எதிரியான வீணை வீட்டுக்குள்ளை போட்டுது.

முன்னாள் முதலமைச்சர்,  முன்னாள் மேயர் [மான்]   இரண்டு பேரும் வீட்டுக்கை தஞ்சமடைசிருக்கினம்.

சைக்கிளும்,சங்கும்  புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்திருகினமாம். 

வாக்களித்த மக்களுக்குத் தெரியாமல் அதென்ன  புரிந்துணர்வு. பதவிக்காகவே புரிந்துணர்வு ஒப்பந்தம் என்பது மக்களுக்கு நன்றாகப் புரிகிறது.

யாழ்ப்பாண மாநகரசபையை யார் கைப்பற்றுவது என்ற போட்டியில் தமிழ் அரசுக் கட்சி வென்றுள்ளது.டக்ளஸைத் தேடி  வீடு போனதுதான்  இங்கு  பேசு பொருளாகி உள்ளது. தமிழ்க் கட்சிகள் எவையுடனும் டக்ளஸ்,கருணா,  பிள்ளையான் ஆகியோர் இணைய மாட்டார்கள் என்ற கோட்பாடு தவிடுபொடியாகி  உள்ளது.

வவுனியாவில்    நிலைமை வ்வேறு விதமாக  உள்ளது.அங்கு அங்குக்கும், தபால் பெட்டிக்கும் பதவியைக் கொடுப்பதற்காக வீடும், சைக்கிளும் கைகோர்த்துள்ளன.

 மட்டக்களப்பில் தமிழ் அரசுக் கட்சி ஹக்கீமுடன்  இணைந்து ஆட்சியைப் பிடித்துள்ளது. ஹக்கீம் துரோகம் செய்துவிட்டதாக பதியுதீன்  புலம்புகிறார்.தமிழ், முஸ்லீம்  பிரிவினைக்கு அங்கு  தூபமிடப்படுகிறது.

வடக்கு, கிழக்கு மட்டுமல்லாது இலங்கை பூராவும்  இந்த நிலை தான்  உள்ளது.

ஜனாதிபதித் தேர்தலிலும், பாராளுமன்றத் தேர்தலிலும் வெற்றி பெற்று இறுமாப்புடன்  இருந்த என்பிபி   உள்ளுராட்சித் தேர்தலில் சறுக்கியது.

ஆட்சியில் இருகும்  மக்கள் ஐக்கிய சக்தியை விட அதிக  உள்ளூராட்சி சபைகளில் எதிர்க் கட்சிகளும் சுயேட்சைக் குழுக்களும் வென்று மிரட்டியுள்ளன. சுயேட்சைக் குழுக்களுடனும், சிறிய கட்சிகளுடனும் அனுரவின் அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. சில இடங்களில் டீல் ஓகேயானது.

கொழும்பை அனுரவின் அரசு கைப்பற்றியது. வேறு சில இடங்களில் நம்பியவர்கள் காலை வாரியதால் ஆட்சி அமைக்கம் உடியாத நிலை உள்ளது. 

மக்கள் ஐக்கிய சக்தி 151 உள்ளூராட்சி சபைகளில் வெற்றி பெற்றது.சில சபைகளில்  எதிர்க்கட்சிகளின் கை ஓங்கியதால் அட்சி அமைக்க முடியாத நிலை உள்ளது.

கண்டி மாவட்டத்தில் உள்ள கடுகண்ணாவை நகர சபையில் என்பிபி அதிக இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால், ஆட்சி அமைக்க போதிய பெரும்பான்மை இல்லை. அங்கு சாதிர்யமாகக் காய் நகர்த்திய  சஜித்  ,அனுரவைத் தோறக்டித்தார். 

குருநாகல் மாவட்டத்தில் உள்ள குளியாப்பிட்டி பிரதேச சபையிலும் இதேபோன்ற நிலைமை ஏற்பட்டது.   தேசிய மக்கள் சக்தி 21 இடங்களை வென்றது, ஆனால் மற்ற கட்சிகளும்,, குழுக்களும்  25 இடங்களீல்  வெற்றி பெற்றன.

  தேசிய மக்கள் சக்தி , ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி இரண்டும் கவுன்சில் தலைவர் பதவிக்கு வேட்பாளர்களை நிறுத்தின. . ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி வேட்பாளர்   வெற்றி பெற்றார்.

பண்டுவஸ்நுவர பிரதேச சபையின் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்காக வெள்ளிக்கிழமைஇரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது, அங்கு NPP க்கு 17 இடங்களும் மற்ற கட்சிகளுக்கு மொத்தம் 21 இடங்களும் இருந்தன.   சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ச‌ர்வஜன பலய உறுப்பினரின்    பெயர் அதிகாரப்பூர்வமாக வர்த்தமானியில் வெளியிடப்படவில்லை என்ற காரணத்திற்காக வாக்கெடுப்பு  முன்னர் சபையில் அவர்  இருந்து வெளியேற்றப்பட்டர். இரகசிய  வாக்கெடுப்பில் என்பிபி வெற்றி  பெற்றது.

 கொழும்பிலும், மதவாச்சியிலும் நடைபெற்ற இரகசிய வாக்களிப்பில்  முறைகெடு நடந்ததாக எதிர்க் கட்சிகள்  குற்றம் சாட்டியுள்ளன.

ஜனநாயகத் தேர்தல் முறையை அரசியல் தலைவர்கள் கேலிக்கூத்தாக்கி விட்டனர்.  

குப்பை அள்ளவும், லைற்றுப் போடவும், றோட்டுத் திருத்தவும்  இந்தக் கூத்து

ஒரு விரல் புரட்சி வரும் வரை காதிருப்போம்