இஸ்ரேல்
ஈரான் போர் உலகில்
பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. யுத்தம் வெடித்த அடுத்த நொடியே எண்ணெய்
விலை எகிறியது. அதன் தாக்கம் இலங்கையில்
இன்னமும் ஏற்படவில்லை , இது எத்தனை நாட்களுக்குத் தாக்குப்பிடிக்கும் எனத் தெரியாது
. தனது பாதுகாப்புக்காக ஈரான் மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் கூறுகிறது.
ஈரானின் அணு ஆயுத உலைகள், விஞ்ஞானிகள், தளபதிகள் இஸ்ரேலின் இலக்குகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இஸ்ரேல்
தாக்கியதால் ஈரான் கையைக் கட்டிக்கொண்டு இருக்கவில்லை. ஈரானின் பதில்தாக்குதலால் இஸ்ரேலின் முக்கிய நகரங்கள் பற்றி எரிகின்றன இஸ்ரேலுக்கு
ஆதரவாக அமெரிக்கா களம் இறங்கி உள்ளது. ஈரானுக்கு ட்ரம்ப் எச்ச்சரிக்க விடுத்துள்ளார்.
ரஷ்யா,சீனா,
அரபு நாடுகள் இஸ்ரேலைக் கண்டித்துள்ளன. ஈரான், இஸ்ரேல் யுத்தத்தால் வல்லரசுகள் இரண்டாகி உள்ளன.
மோதல் அதிகரித்தால் எரிபொருள் விநியோகம், தேயிலை
ஏற்றுமதி ,வெளிநாட்டு வேலைவாய்ப்பு போன்ற முக்கியமான துறைகள் பாதிக்கப்படும் என்ற அச்சம்
நிலவுகிறது. எரிபொருள், தேயிலை துறைகளில் உடனடி தாக்கம் ஏற்படவில்லை. நாளடைவில் பாதிப்பு அதிகமாகலாம்
இஸ்ரேலில் பணிபுரியும் சுமார் 20,000 இலங்கையர்களின்
பாதுகாப்பு , தெஹ்ரானில் வசிக்கும் சுமார் 50 பேரின் பாதுகாப்பு குறித்து கவலைகள் இருப்பதாக
அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன. ஈரானில் உள்ள இலக்குகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதைத்
தொடர்ந்து எண்ணெய்,தங்கத்தின் விலை உயர்ந்தது
இலங்கையின்
தேயிலை ஏற்றுமதியாகும் நாடுகளில் ஈரான் முக்கியமானது. இந்த நிலை தொடர்ந்தால் கிழக்கு ஆசியாவில் தேயிலை ஏற்றுமதி வீழ்ச்சியடையும் அபாயம் உள்ளது. .
சுமார் 20,000 இலங்கைத் தொழிலாளர்கள் இஸ்ரேலில் உள்ளனர், அவர்களில் பெரும்பாலோர் டெல் அவிவ், ஜெருசலேம் , ஹைஃபா ஆகிய நகரங்களில் வசிபதாக இலங்கைக்கான இஸ்ரேலியத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.
விவசாயம். பராமரிப்பாளர், கட்டுமானத் துறை, ஹோட்டல்கள் உணவகங்கள் தொழிற்சாலை ஆகியவற்ரில் இங்கையர் வேலைவாய்ப்புப்
பெற்றுள்ளனர்.
மோதல் தீவிரமானதால் இலங்கைகுத் திரும்பும் கோரிக்கையை எவரும் விடுக்கவில்லை, இஸ்ரேலுக்கு வேலை வாய்ப்புப் பெற்றுச் சென்றுள்ள
10 இலங்கையர்கள் அபுதாபியில் சிக்கி உள்ளனர் அவர்களுக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள இலங்கைத் தூதரகம் உதவி செய்கிறது.
இஸ்ரேலுக்கு
வேலைவாய்ப்புப் பெற்றுச் செல்லத்தயாரான 600 இலங்கை யரின் பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஒரு
மில்லியனுக்கும் அதிகமான இலங்கை தொழிலாளர்கள் தற்போது மத்திய கிழக்கில் பணிபுரிகின்றனர்.
கட்டார் , சவுதி அரேபியா, குவைத் , ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவை அனைத்து இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களில்
80 சதவீதத்திர் உள்ளனர்.
கடந்த 20 ஆண்டுகளில், தொழிலாளர்களின் பணம் அனுப்புதல்
நமது நாட்டின் வர்த்தக பற்றாக்குறையில் சராசரியாக 80 சதவீதத்தை செலுத்தியுள்ளது.
2024 ஆம் ஆண்டில் வெளிநாட்டு தொழிலாளர்களின் பணம் அனுப்புதல் 6.5 பில்லியன் டொலரை எட்டியது.
இந்த தொழிலாளர்களில் பெரும்பாலோர் மத்திய கிழக்கில் வேலை செய்கிறார்கள். 2025 ஏப்ரலில் 646.10 மில்லியன் அமெரிக்க டொலராக இருந்த இலங்கையின் பண அனுப்பீடுகள் மே மாதத்தில்
641.70 மில்லியன் அமெரிக்க டொலராகக் குறைந்துள்ளது.
.
இந்த முக்கியமான வருமான ஆதாரத்தை இழக்க முடியாது. மத்திய கிழக்கில் உள்ள அரபு நாடுகள்
நமது புலம்பெயர்ந்த தொழிலாளர்களில் அதிக எண்ணிக்கையில் உள்ளன. எனவே அவை நமது நாட்டிற்கு
வெளிநாட்டுத் தொழிலாளர் பண அனுப்புதலில் அதிக சதவீதத்தை வழங்குகின்றன. எனவே, அதன் அந்நியச்
செலாவணியின் இந்த முக்கிய ஆதாரத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுப்பது இலங்கையின் கட்டாயமாகும்.
No comments:
Post a Comment