ஐபிஎல் வரலாற்றில் முதன்முறை சாம்பியன் பட்டம் வென்ற ஆர்சிபி அணிக்காக நடந்த பாராட்டு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல்
கிரிக்கெட் ஆடும் அணிகளில் அதிகளவு ரசிகர்களை கொண்டது பெங்களூர் அணி. சமூக வலைதளங்களிலே
சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகளின் ரசிகர்களை காட்டிலும் ஆர்சிபி அணியின்
ரசிகர்களின் ஆதிக்கம் அதிகளவு காணப்படும்.
18 ஆண்டுகால ஐபிஎல் வரலாற்றில் பெங்களூர் முதன்முறையாக சம்பியனாகியது, பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் வெற்றிக் கொண்டாட்டம்
நடைபெற்ற்து. வெற்றிவீரர்களைக் காண்பதற்காக கட்டுக்கடங்காமல் ரசிகர்கள்
குவிந்தனர். நெரிசல் தள்ளு முள்ளு காரணமாகநேற்று மாலை வரை 11 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 100 க்கு மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலர் மயக்கமடைந்திருப்பதால் உயிரிழப்பு
மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
நேற்று மாலை 7 மணி நிலவரப்படி பவுரிங் மருத்துவமனையில் 7 பேர், வைதேகி மருத்துவமனையில் 4 பேர் என மொத்தம் 11 பேர் உயிரிழந்தனர். இவர்களில் ஒரு குழந்தை, ஒரு பெண் அடங்குவர். மற்றவர்கள் 30-க்கும் வயதுக்கும் குறைவான ஆண்கள். இந்த இரு மருத்துவமனைகளிலும் 37 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
18 ஆண்டுகளின் பின்னர் முதன்முறையாக பெங்களூர் சம்பியனாகியதை ரசிகர்கள் வெறித்தனமாகக் கொண்டாடினார்கள். ரசிகர்கள் கர்நாடகா முழுவதும் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். பெங்களூருவில் பட்டாசுகளை வெடித்தும், மேள தாளங்களை முழங்கியும் ஊர்வலமாகச் சென்றனர். எம்.ஜி.சாலை, சிவாஜி நகர், கம்மனஹள்ளி, கோரமங்களா உள்ளிட்ட இடங்களில் வாகனங்களை மறித்து சாலையில் ஆட்டம் போட்ட ரசிகர்கள் மீது பொலிஸார் தடியடி நடத்தினர்.பெலகாவியில் நடனமாடிய 28 வயதான மஞ்சுநாத் கும்பார் என்ற ரசிகர் மாரடைப்பால் உயிரிழந்தார். ஷிமோகாவில் இருசக்கர வாகனத்தில் ஊர்வலமாகச் சென்ற 21 வயதான பினந்தன் என்ற ரசிகர் கீழே தவறி விழுந்து உயிரிழந்தார்.
சம்பியன்
கிண்ணத்துடன் பெங்களூருக்குத் திரும்பிய வீரர்களை வரவேற்க கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் விமான நீலயத்துக்குச் சென்றார். பின்னர்,
வீரர்கள் கர்நாடகாவின் தலைமைச் செயலகமான விதான சவுதாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
அங்கு திறந்த வெளியில் நடைபெற்ற விழாவில் ஆளுநர்
தாவர்சந்த் கெலாட், முதல்வர் சித்தராமையா, உள்துறை அமைச்சர் பரமேஷ்வரா உள்ளிட்டோர்
பங்கேற்றனர்.சமூக அவலைத்தளங்களில் இவை பகிரப்பட்டதால் ஆர்வமடைந்த ரசிகர்களும், மக்களும் திரண்டனர்.
கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் சார்பில் சின்னசாமி மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாராட்டு விழாவைக் காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடினர். இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பெண்களும், குழந்தைபொலிஸார் லேசான தடியடி நடத்தியதால், கூட்டத்தில் இருந்தவர்கள் சிதறி ஓடினர்.
கிரிக்கெட் மைதானத்தின் 6, 7-வது கேட் பகுதியில்
இலவச பாஸ் பெற்ற ரசிகர்கள் மைதானத்துக்கு உள்ளே அனுமதிக்கப்பட்டனர். ஏராளமானோர் ஒரே
நேரத்தில் முண்டியடித்ததால் கடும் நெரிசல் ஏற்பட்டது. ந்த சம்பவத்தை நேரில் கண்ட ஆர்சிபி அணி ரசிகர்
நவீன் கூறும்போது, ``கிரிக்கெட் வீரர்களை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆவலில் எல்லா
பக்கங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்தனர். கொண்டாட்ட மன நிலையில்,
சப்தம் போட்டுக்கொண்டு எல்லோரும் கும்பலாக ஓடினர். அதனால் கூட்ட நெரிசலில் மூச்சுத்
திணறியும், கீழே விழுந்தவர்களை யாரும் தூக்காமல், மிதித்துக் கொண்டே ஓடியதாலும் நிறைய
பேர் காயமடைந்தனர். சிலர் இறந்து விட்டனர். இதைக் கண்ட அதிர்ச்சியில் இருந்து என்னால்
இன்னும் மீள முடியவில்லை''என்றார்.
:
பாஜக மாநிலத் தலைவர் விஜயேந்திரா செய்தியாளர்களிடம் கூறும்போது, "இந்த துயர சம்பவத்துக்கு
கர்நாடக அரசே பொறுப்பேற்க வேண்டும். மக்களைப் பற்றிக் கவலைப்படாமல், தனது விளம்பரத்துக்காக
அவசரகதியில் இந்த விழாவை அரசு ஏற்பாடு செய்தது. எவ்வித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை
செய்யாமல் இருந்ததாலேயே 11-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த உயிரிழப்புகளுக்கு
யார் பொறுப்பு என்பதை முதல்வர் சித்தராமையா விளக்க வேண்டும். கூட்ட நெரிசலில் சிக்கியவர்களைக்
காப்பாற்ற ஆம்புலன்ஸ் வசதியோ, போதிய பாதுகாப்பு வசதியோ செய்யப்படவில்லை. இதுகுறித்து
நீதி விசாரணை நடத்த வேண்டும்" என்றார்.
கூட்ட
நெரிசல் காரணமாக ஏற்பட்ட பதற்றத்தால் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அம்பேத்கர் மெட்ரோ நிலையம்,
கப்பன் பூங்கா, எம்.ஜி.சாலை ஆகிய மெட்ரோ நிலையங்களில் குவிந்தனர். அங்கு டிக்கெட் கொடுக்க
முடியாமல் ஊழியர்கள் திணறிய நிலையில், தடுப்புகளை தாண்டிக் குதித்து ரசிகர்கள் மெட்ரோ
ரயிலில் ஏறினர். அளவுக்கு அதிகமான கூட்டத்தால் மெட்ரோ ரயில் சேவை முடங்கியது. இதனால்
கப்பன் பூங்கா, எம்.ஜி.சாலை உள்ளிட்ட 8 மெட்ரோ நிலையங்களையும் உடனடியாக மூட மெட்ரோ
நிர்வாகம் உத்தரவிட்டது.
35 ஆயிரம் பார்வையாளர்கள் அமரக் குடிய மைதானத்தில்
சுமார் 3 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் கூடியதால் இந்த விபரீதம் ஏற்பட்டுள்ளது.திட்டமிடாது
அவசர கதியில் விழா ஏற்பாடு செய்யப்பட்டதால் இந்த அநர்த்தம் ஏற்பட்டது. இந்தச் சம்பவம் கிறிக்கெற் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் சோகத்தை உண்டாக்கியுள்ளது.
காலத்திற்கும் நீடிக்கும் வகையில் படிந்துள்ள இந்த கறையை கர்நாடக அரசு எப்படி சரி செய்யப்போகிறது என்பது மிகப்பெரிய கேள்வியாக
அமைந்துள்ளது.
சென்னையும், மும்பையும்தலா 5 முறை சம்பியனாகின அந்த அணிகளுக்கும் அப்போது வரவேற்கப்பட்டன.
திட்டமிடலும், ரசிகர்களின் கட்டுக்கோப்பும்
இருந்ததால் அசம்பாவிதம் அப்போது தவிர்க்கப்பட்டது.
No comments:
Post a Comment