Tuesday, December 9, 2025

ரஷ்யாவை வரவேற்கிறது நோர்வே

 

ஸ்காண்டிநேவிய நாடு ஏற்பாடு செய்யும் சர்வதேச ஸ்கை , ஸ்னோபோர்டு கூட்டமைப்பு போட்டிகளில் பங்கேற்க ரஷ்ய விளையாட்டு வீரர்கள் விஸாவிற்கு விண்ணப்பிக்கலாம் என்று நோர்வே குடிவரவுத் துறை (UDI) கடந்த வாரம் NRK தொலைக்காட்சி சேனல் மூலம் தெரிவித்தது.

" சுற்றுலா அல்லது பிற தேவையற்ற நோக்கங்களுக்காக பயணம் திட்டமிடப்பட்டிருந்தால், ரஷ்ய குடிமக்களுக்கு நோர்வேக்கு விருந்தினர் விஸாக்கள் வழங்கப்படுவதில்லை"   "இருப்பினும், விசா வழங்குவதற்கான வாய்ப்பை வழங்கும் நோக்கங்களில் ஒன்று, தொழில்முறை விளையாட்டு வீரர்கள் , அவர்களுடன் வரும் ஊழியர்கள் நோர்வேயில் விளையாட்டு நிகழ்வுகளில் பங்கேற்க விஸா வழங்கப்படும்."   என அறிவிக்கப்பட்டுள்ளது.

 ரஷ்யா ,பெலாரஸைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மீது FIS விதித்த முழுமையான தடையை எதிர்த்து  விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றம்  கடந்த வாரம் தீர்ப்பளித்தது. பிப்ரவரி 2022 இல் உக்ரைன் படையெடுப்பிற்குப் பிறகு சர்வதேச ஒலிம்பிக் குழு இரு நாடுகளையும் அனுமதித்ததிலிருந்தும், மின்ஸ்க் கிரெம்ளினை ஆதரித்ததிலிருந்தும் இது நடைமுறையில் உள்ளது. "சர்வதேச ஒலிம்பிக் குழுவின் AIN தகுதி அளவுகோல்களை பூர்த்தி செய்யும் ரஷ்ய மற்றும் பெலாரஷ்ய விளையாட்டு வீரர்கள் FIS தகுதி நிகழ்வுகளில் பங்கேற்க அனுமதிக்கப்பட வேண்டும் என்று CAS பேனல்கள் இரண்டும் தீர்ப்பளித்தன" என்பதை உறுதிப்படுத்துவதில் தீர்ப்பாயத்தின் அறிக்கை வெளிப்படையானது. நடுநிலை அந்தஸ்தின் கீழ் போட்டியிட உரிமை கோரிய ரஷ்ய ஸ்கை சங்கம், பெலாரஷ்ய ஸ்கை யூனியன் மற்றும் இரு நாடுகளையும் சேர்ந்த 17 விளையாட்டு வீரர்கள் தாக்கல் செய்த மேல்முறையீடுகளை இந்த தீர்ப்பு ஆதரித்தது

  

 

 

    

மாபெரும் சாதனையை நிகழ்த்திய யாஷஸ்வி ஜெய்ஸ்வால்


  இந்தியா , தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்கா  இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 47.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 270  ஓட்டங்களை மட்டுமே குவித்தது. தென்னாப்பிரிக்க அணி சார்பாக அதிகபட்சமாக குவிண்டன் டி காக் 106  , பவுமா 48  ஓட்டங்களையும் குவித்தனர்.

271  ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி தென்னாப்பிரிக்க அணியின் பந்துவீச்சை மிகச்சிறப்பாக எதிர்கொண்டு 39.5 ஓவர்களில் 1 விக்கெட்டை மட்டும் இழந்து 271 ஓட்டங்கள் குவித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதோடு 3 போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரை இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.

 இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக துவக்க வீரராக விளையாடிய யாஷஸ்வி ஜெய்ஸ்வால் தனது 23 ஆவது வயதிலேயே 3 விதமாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளையும் சேர்த்து 6 ஆவது இந்திய வீரராக மாபெரும் சாதனையை நிகழ்த்தி அசத்தியுள்ளார்.

 இந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி சார்பாக துவக்க வீரராக களமிறங்கிய ஜெய்ஸ்வால் 121 பந்துகளை எதிர்கொண்டு 12 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர் என ஆட்டமிழக்காமல் 116 ஓட்டங்களை குவித்து ஆட்டநாயகன் விருதினை வென்று அசத்தியிருந்தார். இந்த போட்டியில் அவர் அடித்த சதம் அவரது முதல் ஒருநாள் சதமாக பதிவாகியது. ‍ ஏற்கனவே இந்திய அணிக்காக சர்வதேச டெஸ்ட் போட்டிகள்,ரி20 போட்டிகளில் சதமடித்துள்ள ஜெய்ஸ்வால் நேற்று ஒருநாள் போட்டியிலும் சதமடித்து 3 வகையான போட்டிகளிலும் சதமடித்த 6 ஆவது இந்திய வீரராக 23 வயதிலேயே அபார சாதனையை நிகழ்த்தி அசத்தியுள்ளார்.

  இந்திய அணிக்காக 3 விதமான போட்டிகளிலும் சதமடித்த இந்திய வீரர்களாக விராட் கோலி, ரோஹித் சர்மா, சுப்மன் கில், கே.எல் ராகுல், சுரேஷ் ரெய்னா ஆகிய 5 வீரர்கள் சாதனை நிகழ்த்தியிருந்தனர். இவ்வேளையில் 6 ஆவது இந்திய வீரராக யாஷஸ்வி ஜெய்ஸ்வால் இந்த பட்டியலில் இணைந்துள்ளார் .

  

உலகக்கிண்ண உதைபந்தாட்ட அணிகளின் குழு அறிவிப்பு


  உலகக் கிண்ண உதைபந்தாட்ட குழுத்தெரிவு கடந்த  வெள்ளிக்கிழமை ஜான் எஃப். கென்னடி மையத்தில் நடைபெற்றது.

லியோனல் மெஸ்ஸி, கிறிஸ்டியானோ ரொனால்டோவின் சகாப்தத்தைத் தொடர்ந்து, கைலியன் எம்பாப்பே ,எர்லிங் ஹாலண்ட் உலக  ஊதாஈபாந்தாஆட்டாத்தீண்  இரண்டு பெரிய நட்சத்திரங்களாக உருவெடுத்துள்ளனர். அவர்களின்  வீலாஈயாஆட்டாஈக் காண ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர்.

கடந்த உலகக் கோப்பையின் ஆச்சரியமளித்த  மொராக்கோ, குரூப் C இல் பிறேஸிலுடன்  உள்ளது. செய்யப்பட்டுள்ளது, இது குரூப்பில் ஸ்காட்லாந்து,  ஹைட்டி ஆகியவற்றை குறிப்பிடத்தக்க அழுத்தத்திற்கு உள்ளாக்கியுள்ளது. இங்கிலாந்தும்குரோஷியாவும் குரூப் L இல்  ஒன்றாகக் உள்ளன.

இத்தாலி ஐரோப்பிய பிளே-ஆஃப்களில் முன்னேறினால், அது கனடா, கட்டார் , சுவிட்சர்லாந்து அணிகளுடன் குழு B இல் சேரும். இந்த குழுவிலிருந்து எந்த அணிகள் முன்னேறும் என்பது மிகவும் நிச்சயமற்றதாகவே உள்ளது

போட்டியின் தொடக்க ஆட்டத்தில், மெக்சிகோ தென்னாப்பிரிக்காவை சொந்த மண்ணில் எதிர்கொள்ளும். தென் கொரியாவும் குழு A இல் உள்ளது, 

குழு A: மெக்சிகோ, தென் கொரியா, தென்னாப்பிரிக்கா, ஐரோப்பிய பிளேஆஃப் வெற்றியாளர் D (டென்மார்க்/வட மாசிடோனியா/செக் குடியரசு/அயர்லாந்து);

குழு B: கனடா, சுவிட்சர்லாந்து, கத்தார், ஐரோப்பிய பிளேஆஃப் வெற்றியாளர் A (இத்தாலி/வடக்கு அயர்லாந்து/வேல்ஸ்/போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா);

குழு C: பிறேஸில், மொராக்கோ, ஸ்காட்லாந்து, ஹைட்டி;

குழு D: அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பராகுவே, ஐரோப்பிய பிளேஆஃப் வெற்றியாளர் C (துருக்கி/ருமேனியா/ஸ்லோவாக்கியா/கொசோவோ);

குழு : ஜேர்மனி, குராக்கோ, கோட் டி'ஐவோயர், ஈக்வடார்;

குழு F: நெதர்லாந்து, ஜப்பான், துனிசியா, ஐரோப்பிய பிளேஆஃப் வெற்றியாளர் B (உக்ரைன்/சுவீடன்/போலந்து/அல்பேனியா);

குழு G: பெல்ஜியம், ஈரான், எகிப்து, நியூசிலாந்து;

குழு H: ஸ்பெயின், உருகுவே, சவுதி அரேபியா, கேப் வெர்டே;

குழு I: பிரான்ஸ், செனகல், நார்வே, FIFA பிளேஆஃப் வெற்றியாளர் (பொலிவியா/சுரினாம்/ஈராக்);

குழு ஜ்: ஆர்ஜென்ரீனா, ஆஸ்திரியா, அல்ஜீரியா, ஜோர்டான்;

குழு K: போர்ச்சுகல், கொலம்பியா, உஸ்பெகிஸ்தான், FIFA பிளேஆஃப் வெற்றியாளர் (நியூ கலிடோனியா/ஜமைக்கா/காங்கோ ஜனநாயகக் குடியரசு);

குழு L: இங்கிலாந்து, குரோஷியா, பனாமா, கானா.

 

 

Saturday, December 6, 2025

கொங்கு மண்டலத்தைக் குறிவைக்கும் தமிழக அரசியல் கட்சிகள்

தமிழக அரசியலைத் தீர்மானிக்கும் சக்தியாக கொங்கு மண்டலம் திகழ்கிறது. 68 தொகுதிகள் கொண்ட கொங்கு மண்டலத்தை வென்றால் கோட்டையைப் பிடித்து விடலாம் என்பது தான் தமிழக அரசியல் கட்சிகளின்  எண்ணம். எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்துஅண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோட்டையாக கொங்கு மண்டலம்  இருக்கிறது.

கொங்கு மண்டலத்தின் முக்கிய தளபதிகளாக செங்கோட்டையன், எஸ்.பி வேலுமணி, செந்தில் பாலாஜி ஆகியோர்.  இருக்கின்றனர். ஒரு காலத்தில் அண்ணா திராவிட முன்னேற்றாக் கழகத்தில் இருந்த இந்தத் தளபதிகள்  இப்போது பிரிந்து விட்டனர்.எஸ்.பி.வேலுமணி  அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இப்போதும் இருக்கிறார். கடந்த மாதம் வரை அண்ணா திராவிட முன்னேற்றாக் கழகத்திக் இருந்த செங்கோட்டையன் விஜயைத் தலைவராக ஏற்றுக்கொண்டுள்ளார்.

அஎ.ஜி.ஆருடன்  இணைந்து பயணித்தவர்,  இரட்டை இலைச் சின்னத்தைக் கையில் பச்சை குத்தியவர்,  ஜெயலலிதாவின் படத்தை பொக்கற்றில்  வைத்திருப்பவர் செங்கோட்டையன்.செங்கோட்டஒயனின்  இந்த முடிவை அவரது ஆதரவாளர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

கொங்குமண்டலத்தின் இன்னொரு தளபதியான செந்தில் பாலாஜி திராவிட முன்னேற்றக் கழகத்தின்  தூணாக  இருக்கிறார்.. இதில் யாருக்கு வெற்றி கிடைக்கப் போகிறது? என்பதுதான் கொங்கு மண்டலத்தில் பேசுபொருளாக இருக்கிறது.

 கொங்கு மண்டலத்தில் பாரதீய ஜனதாக் கட்சியும் வலுவாகக் கால் பதித்துள்ளது. 1998ஆம் ஆண்டு கோவை குண்டுவெடிப்பு சம்பவத்திற்குப் பிறகு, கோவை மற்றும் அண்டை மாவட்டங்களில் பாஜகவின் செல்வாக்கு உயர்ந்தது. இந்த நிலையை பயன்படுத்திக் கொண்டே பாஜகவும் தனது கட்சி வலிமையை சிபி ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் மூலம் இங்கு கட்டியெழுப்பத் தொடங்கியது. தற்போது தங்கள் சொந்த பகுதியைச் சேர்ந்த அண்ணாமலை தலைவர் ஆனதாலும் பாஜக கொங்கில் அதிக ஊக்கத்துடன் செயல்பட்டு வருகிறது. அதனால் "செங்கோட்டையன் வந்தாலும் கவலை இல்லை" என்ற மனநிலையில் பாஜக-அதிமுக கூட்டணி செயல்படுகிறது.

கொங்கு மண்டலம் எனப்படும் கோவை, திருப்பூர், நாமக்கல், ஈரோடு, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மொத்தம் 68 தொகுதிகள் உள்ளன. கடந்த 2021 தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி இங்குள்ள 44 தொகுதிகளை வென்றது. கரூர் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளைத் தவிர, பெரும்பாலும் அனைத்து மாவட்டங்களிலும் இதே நிலை தான் நீடித்தது. கரூர்  செந்தில் பாலாஜியின் ராஜ்ஜியத்தில் உள்ளது.  செங்கோட்டையனின் வெளியேற்றம் அண்ணாதிராவிட முன்னேற்றக் கழகத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

விஜய்க்கும் கொங்கு மண்டலத்தில் ஒரு நிலையான ரசிகர் ஆதரவு வட்டம் இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன. இந்த ஆதரவை அரசியலாக்கும் பணியை செங்கோட்டையன் முன்னெடுத்து வருகிறார். தன்னை புறக்கணித்த பழனிசாமிக்கு பாடம் புகட்டவேண்டும் என்ற நோக்கத்துடன் அவர் கொங்கு மண்டலத்தில் தவெக வளர்ச்சிக்கான முயற்சிகளில் தீவிரமாக இறங்கி உள்ளார். இதற்காகவே சில மாவட்டங்கள் முழுமையாக அவருக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

 திமுகவும் கொங்கு மண்டலத்தை நோக்கி வேகமான நகர்வுகளைத் தொடங்கியுள்ளது. கடந்த முறை கரூரில் 4 தொகுதிகளையும் வெற்றி கொண்ட அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு, இம்முறை கோவையை குறிவைத்து செயல்படுகின்றது. அதற்காகவே 'அரசியல் ஆக்சன் கிங்' என்று அழைக்கப்படும் செந்தில்பாலாஜியை கோவையில் தங்கவைத்து, அவருக்கு துணையாக அமைச்சர் சக்கரபாணியை அனுப்பி வைத்துள்ளது. மற்ற கட்சிகளில் சிறப்பாக செயல்படும் தளபதிகளை அடையாளம் கண்டு திமுகவில் சேர்க்கும் பணிகளை செந்தில்பாலாஜி தொடங்கியுள்ளார். இதன் ஓர் எடுத்துக்காட்டு சிங்காநல்லூர் அதிமுக முன்னாள் எம்.எல். சின்னசாமி திமுகவில் இணைந்தது.

 அதிமுக தரப்பில் எஸ்.பி. வேலுமணி மீண்டும் பத்துக்கு பத்து வெற்றி கோவையில் கிடைக்க வேண்டும் என்று உறுதியாக செயல்படுகிறார். பாஜக கூட்டணியில் திரும்பியதாலும், இரு கட்சிகளும் கொங்கில் வெற்றியை நிச்சயம் கைப்பற்ற முடியும் என்ற நம்பிக்கையில் உள்ளன. மொத்தத்தில், செந்தில்பாலாஜி, எஸ்.பி.வேலுமணி, செங்கோட்டையன் என்ற மூன்று முக்கிய தளபதிகள் கொங்கு மண்டலத்தில் தங்கள் கட்சிகளை வெற்றிக்குச் இட்டுச் செல்ல வழி வகுக்க முயன்று வருகின்றனர். இவர்கள் அனைவருமே அதிமுகவில் அண்ணன் தம்பிகளாக இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கொங்கு கோட்டையில் கொடி நாட்டப் போகும் 'கிங்' யார் என்பதே தற்போது அரசியல் வட்டாரங்களில் மிகப்பெரிய கேள்வியாக மாறியுள்ளது. 

தமிழகத்தில் ரோட்ஷோ நடத்துவதில் உள்ள சட்டச் சிக்கல் காரணமாக  புதுச் சேரியில் ரோட்ஷோ நடத்த தமிழக வெற்றிக் கழகம்  முயற்சித்தது. புஸ்ஸி ஆனந்த்  இரண்டு முற நேரடியாகச் சென்று அனுமதிகோரினார். அனுமதி மறுக்கப்பட்டது.புதுச்சேரியில் தமிழக வெற்றி கழகம் கட்சி நடத்தவிருந்த ரோட் ஷோவுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் தற்போது பொதுக்கூட்டம் நடத்துவதும் இரத்தாகியுள்ளது.

புதுச்சேரியில் கடந்த மாதம் பதினோராம் திகதி விஜயின் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டம் நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கரூர் துயரச் சம்பவத்தை தொடர்ந்து அவரது அனைத்து மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளும் இரத்து செய்யப்பட்டதால் புதுச்சேரி ரோட்ஷோவும்  இரத்தானது.

  புதுச்சேரியில் பிரம்மாண்ட ரோடு ஷோவும் கூடவே பொதுக்கூட்டமும் நடத்த விஜய்யின் கட்சி திட்டமிட்டு இருந்தது. இதற்காக புதுச்சேரி  பொலிஸாரிடம் ரோட்ஷோ கேட்டு விண்ணப்பம் கொடுக்கப்பட்டது. ஆனால் அந்த கோரிக்கையை  நிராகரிக்கப்பட்டது.  அண்டை மாவட்டங்களிலிருந்து மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் கூடுவார்கள் என்பதால் பாதுகாப்பு தருவது கடினம், அசம்பாவிதம் நடக்க வாய்ப்புகள் அதிகம் என்பதால் ரோட் ஷோ நடத்த வாய்ப்பில்லை என்று  பொலிஸ்  தெரிவித்துவிட்டது. அதே சமயம் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கொடுப்போம் என்று தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும் விடாமல் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வரை சென்று தமிழக வெற்றி கழகம் முயற்சித்து பார்த்தது. ஆனால் ரங்கசாமியும் கைவிரித்து விட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் பொது கூட்டம் மட்டும் நடத்துவதற்கு கால அவகாசம் மிகவும் குறைவு என்பதால் தற்போது டிசம்பர் 5ஆம் தேதி நடத்த திட்டமிட்டிருந்த பொதுக்கூட்டத்தையும் ரோட் ஷோ நிகழ்ச்சியும் கைவிட்டுள்ளது தமிழக வெற்றிக்கழகம்.

விஜயும் அவரது கட்சி உறுப்பினர்கலும் இதனால் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ரோடுஷோவுக்கு அனுமதி கிடைக்காவிட்டாலும் கூட விஜய்யின் பொதுக்கூட்டம் நடைபெறும் அவரைப் பார்க்கலாம் என்று ஆவலுடன் காத்திருந்த அக்கட்சியினர் இதனால் ஏமாற்றமடைந்துள்ளனர்.

ரமணி

7/11/25

  

5 வருட சாதனையை விராட் கோலியுடன் சேர்ந்து உடைத்த ருதுராஜ்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்ற இந்தியா 2வது போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. டிசம்பர் மூன்றாம் திகதி ராய்ப்பூரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 359  ஓட்டங்களை இலக்காக நிர்ணயித்தது. அதிகபட்சமாக ருதுராஜ் கெய்க்வாட் 105, விராட் கோலி 102, கப்டன் ராகுல் 66  ஓட்டங்கள்   அடித்து அசத்தினார்கள்.

 அடுத்து விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி இந்திய   49.2 ஓவர்களில்   6 விக்கெற்களை இழந்து 326 ஓட்டங்கள் அடித்து வெற்றி பெற்றது.

 ஐடன் மார்க்ரம் சதமடித்து 110, கப்டன் தெம்பா பவுமா 46, மேத்யூ 68, தேவால்ட் ப்ரேவிஸ் 54  ஓட்டங்கள் அடித்து அசத்தினார்கள். அதனால் இத்தொடரை சமன் செய்து தென்னாப்பிரிக்கா பதிலடி கொடுத்துள்ளது. -

 அப்போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணிக்கு விராட் கோலிருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர்  சிறப்பாக விளையாடினார்கள். இந்தியத் தேர்வாளர்களால் ஓரம் கட்டப்பட்ட  ருதுராஜ்  கிடைத்த வாய்ப்பில் சிறப்பாக விளையாடிய   77 பந்துகளில் ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் சதத்தை அடித்து அசத்தினார். அவருடன் இணைந்து அசத்திய விராட் கோலி   53வது சதத்தை அடித்து சில சாதனைகளைப் படைத்தார்.

 3வது விக்கெட்டுக்கு 195  ஓட்டங்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த அந்த ஜோடி இந்தியா 358  ஓட்டங்களை குவிப்பதற்கு தேவையான அடித்தளத்தை அமைத்தது.  ஒருநாள் கிரிக்கெட்டில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக எந்த ஒரு விக்கெட்டுக்கும் அதிக  ஓட்டங்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த இந்திய ஜோடி என்ற வரலாற்றுச் சாதனையை ருதுராஜ்விராட் கோலி படைத்துள்ளனர்.

இதற்கு முன் 2010ஆம் ஆண்டு குவாலியரில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் சச்சின் டெண்டுல்கர் ,தினேஷ் கார்த்திக் ஜோடி  194 ஓட்டங்கள் பார்ட்னர்ஷிப் அமைத்ததே முந்தைய சாதனை. அந்தப் போட்டியில் தான் சச்சின் முதல் முறையாக ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதத்தை அடித்ததை மறக்க முடியாது. தற்போது அந்த ஜோடியின் 15 வருட சாதனையை விராட் கோலியுடன் சேர்ந்து ருதுராஜ் உடைத்துள்ளார்.

 

ரமணி

7/11/25