Showing posts with label விமர்சனம். Show all posts
Showing posts with label விமர்சனம். Show all posts

Thursday, February 16, 2023

வெந்த மனம் இன்னமும் தணியவில்லை


 ஈழத்துத் திரைத்துறையில் ஆர்வமும், துடிப்பும்  உள்ள மதிசுதாவின் " வெந்து தணிந்தது காடு" எனும் திரைப்படம் பற்றிய அறிப்பு வெளியானதும்,  தமிழகத்தில் இருந்தும் அதே பெயருடன்  திரைப்பட அறிவிப்பு வெளியானது. தமிழகத்தின்  பிரமாண்டத்தால் மதி சுதாவின்  திரைப்படம்  பாதிக்கப்படுமோ என்ற அச்சம்   ஒரு சிலருக்கு ஏற்பட்டது. ஒரு சில  பஞ்சாயத்துடன் அந்தப் பிரச்சனை முடுவுக்குக் கொண்டு வரப்பட்டது. 12 நாடுகளில்  29  விருதுகளைப் பெற்ற மதி சுதாவின் " வெந்து  தணிந்தது காடு" எனும்  ஈழத்து சினிமா  உலக அரங்கில் மகுடம்  சூட்டியுள்ளது.

இலங்கைத் தியேட்டர்களில் வெந்து தணிந்தது காடு  திரையிடும் அறிவிப்பு வெளியானது. அதனைப் பார்ப்பதற்கு பலரும் ஆர்வமுடன்  இருந்தனர். அப்போது பேரிடியாக தடை ஒன்று போடப்பட்டது. அந்தத் தடையையும் தண்டி ராஜா திரை  அரங்கில்  வெந்து தனிந்ததுகாடு  திரையிடப்பட்டது.

பாசமலர்,துலாபாரம்,மறக்க முடியுமா போன்ற தமிழ்ப் படங்களைப் பார்த்த ரசிகர்கள் கண்ணீருடன்      வெளியேறிய காலம்  ஒன்று இருந்தது. அந்தக் காலத்தை வெந்து தணிந்ததுகாடு மீண்டும் நினைவுபடுத்தியது. படத்தைப் பார்த்துவிட்டு வெளியே வந்தபலர் அடக்க முடியாமல் கண்ணீர் விட்டு அழுதனர்.

இறுதிக் கட்ட யுத்தத்தில் சிக்கிய தாய், மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகளைக் கொண்ட பெரிய குடும்பம் படும் துன்ப ,துயரம்.  அந்தக் குடும்பத்தில் உள்ளவர்கள் எடுக்கும்  முடிவுகள் என்ன? அவை ஏற்படுத்தும் தாக்கங்கள் எப்படியானவை என்பதை  வெந்து தணிந்தது காடு உணர்வு பூர்வமாக வெளிப்படுத்தியுள்ளது. கைத் தொலைபேசியில் ஒரு காவியத்தை உருவாக்கி உள்ளார்கள்.

  ஒரு குடும்பத்தைச் சுற்றிய கதை. 17 பாத்திரங்கள். 17  பேருக்கும்  மிக  முக்கிய பங்கு வழங்கப்பட்டுள்ளது.  ஒரு பாத்திரத்தின் பங்களிப்பு முடிந்து விடும் என நினைத்தால் நினையாப்பிரகாரமாக அந்தப் பாத்திரம்  இன்னொரு முறை வந்து தன்னை வெளிப்படுத்துகிறது.  இன்பம்,துன்பம், காதல், நகைச்சுவை, உணர்ச்சி என ஒரு திரைப் படத்துக்குரிய சகல அம்சங்களும்  உள்ளன.   காத்திரமான வசனங்கள் சகல பாத்திரங்களையும் மெருகேற்றுகின்றன.

திரைக்கதை கனகச்சிதமாக  உள்ளது. படத்தொகுப்பு  ஆர்வத்தைத் தூண்டுகிறது. காட்சியமைப்பு, இசை என அனைத்தும் சிறப்பாக  உள்ளன.

வசனமும், உச்சரிப்பும் இலங்கைப் படங்களில் உள்ள மிக மோசமான  குறையாக விமர்சிக்கப்படுகிறது. அந்தக் குறையை வெந்து தணிந்தது காடு போக்கியுள்ளது.  இந்திய சினிமா வேறு, இலங்கைச் சினிமா  வேறு என்பதை படக்குழு உரத்துச் சொல்லியுள்ளது. எதுவுமே நாடகத் தன்மையாக  இல்லாமல் இயல்பாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இறுதிக் கட்ட யுத்தத்தில்  நடந்த அனைத்தும்  மறைக்காமல் யதார்த்தமாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

நடிகர்கள் அனைவரும் தமது  பாத்திரத்தை உணர்ந்து வாழ்ந்திருக்கிறார்கள். தாய்க்கிழவியாக நடமாடிய  பார்வதி சிவபாதம் பண்பட்ட நடிகை என்பதை நிரூபித்துள்ளார். வண்டுவாக நடித்த சிவசங்கரின் நக்கல்கள் உயிருக்கு அஞ்சிய வேளையிலும் சிரிப்பலையை ஏற்படுத்தியது. இறுதிக் கட்ட யுத்தம் நேர திரைப்படம் என்பதால் ரசிகர்கள் எதிர்பார்த்த எவையும் அங்கு இல்லை. இராணுவம், புலிகள், தாக்குதல், இரத்தம், உயிரற்ற உடல், குற்றுயிரும் குலை உயிருமான காட்சிகள் எவையும் திரைப்படத்தில் இடம்  பெறவில்லை. வெந்து தணிந்தது காடு படத்தைத் தயாரிப்பதற்கு 203 ஆர்வலர்கள் பங்களிப்பு வழங்கியுள்ளனர்.

ஒரு திரைப்படம் எப்படி இருக்கும்   என்பது ரசிகர்களுக்கு அத்துப்படி.ஆரம்பம், கதை ஓட்டம்,  முடிவு போன்றவற்றை ரசிகர்கள்  தமக்குள் தீர்மானிப்பர்கள். அந்த சம்பிரதாயங்கள் எல்லாம்  உடைத்தெறியப்பட்டு புதியதொரு அத்தியாத்தை மதி சுதா உருவாக்கி உள்ளார்.

 

Story

Screenplay

Dialog

Direction

Producer

Mathisuthaகதை

திரை க்கதை

வசனம்

இயக்கம்

தயாரிப்பு

மதிசுதா

2) DOP - Pratheepan Selvam

காட்சிக் கவ்வல்

பிரதீபன் செ ல்வம்

3) Editing - Manikandan A

கத்தரித்து ஒட்டல்

மணிகண்டன் .A

4) Music - Siva Pathmayan

இசை ச் செ ருகல்

சிவ பத்மயன்

5) Sound Design - Subramanian K V

ஒலிச் செ ருகல்

சுப்ரமணியன் K V

6) Vfx - Vibishan Raveendran

கணனிக் காட்சி உருவாக்கம்

விபிசன் ரவந்ீதிரன்

7) Colorist - Dinindu Jagoda

நிறக் கலவை - டினுந்து ஜேகொட

8) Design - Sazi Balasingam

வடிவமை ப்பு

சசி பாலசிங்கம்

9) Associate Director - Kishanth Sri

துணை உதவி இயக்கம்

கிசாந் சிறீ

10)Assist Director -

1- Kuru TK

2- Kabeesan

உதவி இயக்கம்

குரு TK

கபிசன்

11)Continuity - Kowtham Maran

ொடரிக் கண்காணிப்பு

ௌதம் மாறன்

12)Online Editing - Steepan Sansigan

களக் கத்தரிப்பு

ஸ் ரீபன் சன்சிகன்

13)Camera Assist - Thanuvan

கட்சிக்கவ்வல் உதவி

தனுவன்

14)Production Manager - Jenosan Rajeswar

தயாரிப்பு மே ய்ப்பர்

ஜெ ோசன் ராஜே ஷ்வர்

15)Art Director - Newton

கலை இயக்குனர்

நியூட்டன்

16)Art & Production Supervisor - Vasi

கலை மற்றும் தயாரிப்பு மே ய்ப்பர்

வசி

17) Sound Mixing - Dawn Vincent

ஒலிக்கலவை

டவுண் வின்செ ன்ட்

18) Sound Editors -

Akhil Hari

Piousmon Sunny

ஒலிக்கத்தரிப்பு

அகில்ஹரி

பிய ோஷ்மன் சணி

19) Foley Artists

Akshay Sathe,

Kaushik Bugdane

ஒலி உருவாக்குனர்

அக்சே சதே

ௌசிக் பக்டன்

20) Dubbing

Jeyanthan Wicky

குரல்பதிவு

ஜெ யந்தன் விக்கி

21) Recodist - Vaheesan

தள ஒலிக் கவ்வல்

வாகீசன்

22) Foley Studio

Bandish Studios, Pune

ஒலி உருவாக்க கலை யகம்

பாண்டிஷ் ஸ்ரூடிய , பூனே

23) Special Thanks To

Piyush Shah

ஒலிக்காய் நன்றி

பியூஷ் சா

24) Lyrics

Akaramuthalvan

பாடல்வரிகள்

அகரமுதல்வன்

25) Singer

Paarvathy Sivapatham

பாடகர்

பார்வதி சிவபாதம்

26) Subtitle

S.pathmanathan

Nirojini Robert

உப தலை ப்பு

.பத்மநாதன்

நிர ோஜினி ொபே ர்ட்

27) Arranged

Mathivathani

அடுக்கல்

மதிவதனி

28) Mobile Provider

Selvamurukan

Nakkeeran

கை ப்பே சிக் கடனாளர்

செ ல்வமுருகன்

நக்கீரன்

29) Filed Helpers

Sukirthan C

Ajay

கள உதவி

சுகிர்தன் C

அஜே ய்

30) Food

Malar

உணவு உபசரிப்பு

மலர்

Cast31)Paarvathy Sivapatham

பார்வதி சிவபாதம் (கிழவி)

32)Tharmalingam

தர்மலிங்கம் (நாதன்)

33)Vasanthaseelan

வசந்தசீலன் (சே கர்)

34)Vetri Chelvi

வெ ற்றிச் செ ல்வி (பாக்கியம்)

35)Subasini

சுபாசினி (சிந்து)

36)Arudsothi

அருட்ச ோதி (குமாரி)

37)Newton

நியூட்டன் (மூத்தவன்)

38)Vishnu

விஷ்ணு(கமலன்)

39)Chanthira

சந்திரா (சுமதி)

40)Thivakar

திவாகர் (சுமன்)

41)Sivasankar

சிவசங்கர் (வண்டு)

42)Jhony

ோனி ( குழந்தை யின் தந்தை )

43)Priya

பிரியா (குழந்தை யின் தாய்)

44)W Janath Thivanka

W. ஜனத் திவங்கா (குழந்தை )

45)Vijayaruban

விஜயரூபன் (ஜம்புலிங்கம்)

46)Thilaxan

திலக்சன் (மூர்த்தி)

&

47)Mathisutha

இவர்களுடன்

மதிசுதா (மருத்துவ போராளி)

Friday, July 30, 2021

நவாலியூரானின் வீசிய புயல்


 மானிப்பாயைப் பூர்வீகமாககொண்ட மதனராசா – மனோஜினி குடும்பம் வட்டக்கச்சியில் குடியேறுகிறது. குடும்பம் பெருகும்போது மன்னார்,வவுனியா ஆகிய நகரங்களில் திருமணபந்தம் ஏற்படுகிறது. அடுத்த தலை முறை தொழில் நிமித்தம் கண்டிக்கு இடம் பெயர்கிறது. இந்த குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் திருகோணமலையில் வேலை செய்கிறார்.

மதனராசா – மனோஜினி  ஆகியோரைச் சுற்றி உள்ள குடும்பங்களுக்கிடையே ஏற்படும் இன்பம்,துன்பம், திருமணம், பிறப்பு,இறப்பு, பிரிவு, கோபம் போன்றவற்றையே ”வீசிய புயல் என நவாலியூரான் நாவலாக்கியுள்ளார்.

சுந்தரபாலன் சுகுணறாஜி ஆகியோரின் குழந்தை பாலகாந்தனுக்கு வயிற்றுப்போக்கு அவனை மானிப்பாய் கி[g]றீன் மெமோறியல் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கிறார்கள். முதல் அத்தியாயத்தில் வைத்தியசாலையின் வரலாற்றை விளக்குகிறார் நாவலாசிரியர்.

பாலகாந்தனின் உடல் நிலை பற்றி வட்டக்கச்சியில் வசிக்கும் சுகுணறாஜியின் சின்னம்மா திருமதி மதனராசா – மனோஜினிக்கு அறிவிக்கப்படுகிறது. அவர்கள் உடனடியாக மானிப்பாய்க்குச் செல்கிறார்கள். வழியில் அவர்கள் சென்ற வாகனம் விபத்துக்குள்ளாகிறது. மனோஜினிக்கு ஏற்பட்ட சிறு காயத்துடன்  எதுவித ஆபத்தும் இல்லாமல்    மானிப்பாயைச் சென்றடைகிறார்கள்.

பாலகாந்தனுக்கு போதியளவு சத்துணவு இல்லை.  மூளை வளர்ச்சி குறைவு குடும்ப நிலை காரணமாக பாலகாந்தனை மதனராஜனும் மனோஜினியும் தம்முடன் அழைத்துச்  செல்கின்றனர் அவர்களின்  பிள்ளைகளான றாஜினா, ஜீவினா, மாஜினா ஆகியோருடன் பாலகாந்தன் வளர்கிறான்.

மதனராஜனின் மில்லில் வேலை செய்யும் விமலனிடம் கணக்கு படித்து வகுப்பில் முன்னிலையடைகிறான். மாஜினாவுக்கு மன்னார் வைத்தியசாலையில் நே[r]ர்ஸ் வேலைகிடைகிறது. மனோஜினியின் பெரிய தகப்பனின் மகன் ஜீவறஞ்சன் மன்னாரில் கடை வைத்திருக்கிறார். அங்கிருந்து மாஜினா வேலைக்குச் செல்கிறார்.

மதனராஜாவின் இரண்டாவது மகள் ஜீவினாவுகும் பிரான்ஸில் வசிக்கும் உறவினரான ஜெயசுதனுக்கும் திருமணப் பேச்சுவார்த்தை நடந்து முற்றுப் பெறுகிறது.ஜீவினா வெளிநாட்டுக்குச் செல்கிறார்.

ஜீவரஞ்சனின் மகன் றஜீவன் திருகோணமலையில் ஹோட்டலில் வேலை செய்கிறார். மன்னார் வைத்தியசாலையில் வேலை கிடத்து அவரும் வீட்டுக்கு வருகிறார்.  மாஜினாவை றஜீவன் விரும்பியதால் திருமணம் நடைபெறுகிறது.

வெட்டுக் காயத்துடன் மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒரு வாலிபனுக்கு அவசரமாக இரத்தம் தேவைப்பட்டதால் றஜீவன் தனது இரத்தைத்தைக் கொடுத்தார். அவருடைய தாய் றஜீவனுக்கு நன்றி சொன்னபோது குடும்பங்களைப் பற்றி கதைத்தார்கள். அப்போதுதான் அது தனது தாயின் சகோதரி புஷ்பமாலா என்பதை றஜீவன் அறிகிறார்.  புஷ்பமாலா கிறிஸ்தவரைக் காதலித்து திருமணம் செய்ததால்  குடும்பத்தால் ஒதுக்கப்பட்டவர். அவரைப் பற்றி றஜீவனுக்கு ஒன்றும் தெரியாது. றஜீவனின் முயற்சியால் பிரிந்த சகோதரிகள் ஒன்றானார்கள்.

தமது மில்லில் கணக்குப் பிள்ளையாக வேலை செய்யும் விமலனை தான் காதலிப்பதாக ஜீவினாவுக்கு மதனராஜனின் மூன்றாவது மகள் மாஜினா  தெரிவித்ததார் பிரான்ஸில் இருந்து ஜீவினா அரிவித்ததால் திருமனம் நடை பெறுகிறது.

மாஜினாவும் விமலனும் வவுனியா பாவக்குளத்துக்கு செல்கிறார்கள். மாஜினாவுக்கும்,ராஜீவனுக்கும் கிளிநொச்சிக்கு இடமாற்ரம் கிடைக்கிறது.மில்லை பாலகாந்தன் பொருப்பெடுத்டுச் செய்கிறான். பாலகாந்தனுக்கும் தேனுஜாவுக்கும் திருமணம் நடைபெறுகிறது. நித்தியா, திவ்வியா எனும் இரண்டு பெண் குழந்தைகள்  பிறக்கின்றன. நவீன மயமான மில் ஒன்ரு அடுத்த ஊரில் திறக்கப்பட்டதால் மில்லை மூட வேண்டிய நிலை ஏறபடுகிறது.

பாலகாந்தனின் உறவினராகிய தவநாயகம் தான் வேலை செய்யும் கொம்பனியில் அவருக்கு  எக்கவுண்ஸ் வேலை பெற்றுக் கொடுக்கிறார். வேலை கண்டியில் என்பதால்   பாலகாந்தனின் குடும்பம் வட்டக்கச்சியை விட்டு இடம் பெயர்கிறது. மனோஜினியின்  மரண வீட்டுகு வந்த பாலகாந்தனின் குடும்பம்  தம்து இரண்டு பிள்ளைகலையும் வட்டக்கச்சியில் விட்டுச் செல்கிறார்கள்.

மனைவியை இழந்த றஜீவன்  யாருக்கும் சொல்லாமல் முதியோர் இல்லத்தில் சேர்கிறார். பாலகாந்தன் குடும்பத்துடன் வட்டக்கச்சியில் குடியேறுகிறார். சில பிரிவுகள், துயரங்களின் பின்னர் குடும்பங்கள் அனைத்தும் ஒன்றாகின்றன. இதனையே “வீசிய புயல் எனும் நாவலாக நவாலியூரான் தந்துள்ளார்.

மக்களின் வாழ்க்கை முறைகள் வரலாறுகள் என்பனவற்றை இந்த நாவலினூடு பதிந்துள்ளார். 23 அத்தியாயங்கள்.சுமார் 50 பாத்திரங்கள் இந்த நாவலில் நடமாடுகிறார்கள். எல்லோருக்கும் பெயர் சூட்டியுள்ளார். இறந்தவர்களையும் பெயரின் மூலமே நாவலாசிரியர் நடமாட விட்டுள்ளார். “ர என்ற எழுத்தை உபயோகிக்காமல் “ற என்றே பெயர் வைத்துள்ளார். ஆங்கிலச் சொற்களின் இடையே ஆங்கில எழுத்துக்களையும் இணைத்துள்ளார்.

ஜீவநதி, பங்குனி 2021

Tuesday, April 30, 2019

சீனா உதயகுமாரின் தமிழினி


சிறுகதை,கவிதை, கட்டுரை,இலக்கியம்,சினிமா  என பல்துறையில் தனது ஆளுமையை வெளிப்படுத்தும் சமரபாகு சீனா உதயகுமார், தமிழினி எனும் சிறுகதைத்தொகுப்பை அண்மையில் வெளியிட்டுள்ளார். தினக்குரல், வீரகேசரி ஆகிய பத்திரிகைகளிலும், ஜீவநதி,ஞானம்,ஒளி அரசி ஆகிய சஞ்சிகைகளிலும் பிரசுரமான 11 சிறுகதைகள் இத் தொகுப்பில் அடங்கி உள்ளன.

ஒன்பதாம் வகுப்பில் ஒன்றாகப் படிக்கும் தமிழினிக்கும் குமரனுக்கும் இடையிலான மென்மையான நட்பை காதல் என தவறாக வெளிப்படுத்தும் விதமாக "தமிழினி" எனும் கதை அமைந்துள்ளது.

காதலைப்பற்றி எதுவும் அறியாத  மாணவப் பருவத்தில் ஏற்படும் அன்பை காதல்,  என ஊரவர்கள் நினைக்கிறார்கள். பாடசாலையில் கடமையாற்றும்  ஆசிரியர்களும் நட்புக்கும் காதலுக்கும் வித்தியாசம் தெரியாது தமிழினியையும் குமரனையும் தண்டிக்கிறார்கள். அதனால் மாணவர்களுக்கு ஏற்படும் உளவியல்தாக்கத்தை இப்படியான ஆசிரியர்கள் அறிவதில்லை.

 தமிழினியையும் குமரனையும் சுற்றி இருப்பவர்களின் சந்தேகப்பார்வை அவர்களுக்கிடையிலான   நெருக்கத்தை அதிகரித்தது. பாலர் பருவம் தாண்டி இளமைப்பருவம் ஆரம்பிக்கையில் பெற்றோரே அவர்கள் இருவரையும் நெருங்கவிடாமல் தடுத்தனர். தமிழினி பெற்றோருடன் கிளிநொச்சிக்கு சென்றதும் அவர்களுக்கிடையிலான நட்பு முடிவுக்கு வந்தது. தமிழினியின் தொடர்பு முடிந்து விட்டது என குமரன் நினைத்திருக்கையில், 17 வருடங்களுக்குப் பின்னர்  வீதியில்  குமரனைக் கண்டாள் தமிழினி. குமரனால் முதலில் தமிழினியை அடையாளம் காண முடியவில்லை.

 குமரனின் வீட்டுக்குச் சென்ற தமிழினி அவனின் மனைவியையும் பிள்ளைகளையும் சந்தித்து அன்பாகப் பழகுகிறாள். தனது பழைய காதலைப்பற்றி தனது மனைவி ஏதும் கேட்பாளோ எனத்தெரியாது குமரன் கலங்குகிறான். அவள் கடைசிவரைகேட்காமல் தந்து கண்ணியத்தை வெளிப்படுத்துகிறாள். ஆசிரியையான தமிழினி ஏன் இன்னமும் திருமணம் செய்யவில்லை என   குமரனின் மனதில் எழுந்த அதே கேள்வி வாசகர் மனதிலும் தோன்றுகிறது. அதை எப்படிக் கேட்பது எனத் தெரியாது குமரன் தடுமாறியபோது தமிழினி அதற்கு முற்றுப்புள்ளி வைத்தாள்.

இரண்டு பெண் பிள்ளைகளை குமரனுக்கும் அவனது மனைவிக்கும் அறிமுகப்படுத்தினாள் தமிழினி. தடுப்பு முகாமில் அனாதையாக நின்ற அநாதைச் சிறுமிகள் அவர்கள். அங்குள்ள வசதியற்ற பிள்ளைகளுக்கு  தனது வீட்டில் இலவசமாக பாடம் சொல்லிக்கொடுக்கிறாள் தமிழினி. தமிழினியின் செய்கைகளால் அவள் மீதிருந்த மதிப்பு குமரனுக்கு அதிகரிக்கிறது.

பணம் இருந்தால் எல்லாத்தையும் வாங்கிவிடலாம் என்ற எண்ணம் பலருக்கு இருக்கிறது. காசிருந்தால் வாங்கக்கூடாதவற்றையும் வாங்கலாம் என்பதை “ காசிருந்தால் வாங்கலாம்” என்ற கதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

கனடாவில்  வசிக்கும் தனது மகன் ரஞ்சித்துக்கு யழ்ப்பாணத்தில் ஒரு பெண்ணைப்பார்த்து மணமுடித்து  வைக்கிறாள்  பொன்னி. மருமகள் மாலியுடன் கல்கிசையில் வாங்கிய வீட்டில் குடியிருக்கிறாள் பொன்னி. மகன் ரஞ்சித் கனடாவுக்குத் திரும்பச்சென்றுவிட்டான். மருமகள் மாலி கனடாவுக்குச் செல்லும்வரை அவளுக்குத் துணையாக கல்கிசை வீட்டில் பொன்னியும் இருந்தாள்.

கர்ப்பமான மாலிக்கு எய்ட்ஸ் இருப்பது இரத்தப் பரிசோதனையில் தெரிய  வருகிறது. அழகு சொரூபியான மாலி தப்புச் செய்திருப்பாள் என பொன்னி நினைக்கிறாள். தன்னையும் மகனையும் ஏமாற்றிய விரக்தியில் மாலியைத் துன்புறுத்துகிறாள். மாலி வீட்டை விட்டு வெளியேறுகிறாள். இதனை அறிந்த ரஞ்சுத் தாய்க்கு ஒரு கடிதம் அனுப்புகிறான். அக்கடிதத்தில் தனக்கு எய்ட்ஸ் இருப்பதை வெளிப்படுத்துகிறான்.
வெளிநாட்டு மாப்பிள்ளையைத் தேர்வு செய்யும்போது இரத்தப் பரிசோதனை அவசியம் என்பதை கதாசிரியர் அழுத்தமாகச் சொல்லியுள்ளார்.

சிறுவர் துஷ்பிரயோகத்தை பட்டும்படாமலும் நாசூக்காக ”சுயம் உரிப்பு” எனும் கதை மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. பாலியல் வக்கிரம் கொண்ட குடும்ப உறவுகளால் சிறுமிகள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதும் அதன் பின்னர் அவர்கள் வாழ்க்கையில் உருவாகும் பிரச்சினைகளையும் “சுயம் உரிப்பு” சொல்கிறது. அறியாத வயதில் தெரியாமல் செய்யும் தவறுகள் எதிர்கால வாழ்க்கையிலும் தொடரும் எனக் கருதும் கயவர்களுக்கு சாட்டையடி கொடுக்கும் கதை.

கணவனை இழந்த ஆசிரியையும் அவளின் மகளும் சந்திக்கும் எதிர்நோக்கும் பிரச்சினைகளை “அம்மா” எனும் கதையின் வாயிலாக அறியமுடிகிறது. கணவன் இல்லாத இளம் ஆசிரியையின் மீது சக ஆசிரியருக்கு ஏற்படும் காதல்.  அம்மாவா காதலனா என்ற புதிருக்கு மகள் எடுக்கும் முடிவு யதார்த்தமாக இருக்கிறது.

“மகேஸ்வரன் சேர்” போன்ற ஆசிரியரை இப்போது காண்பது அரிது. ஆசிரியருக்கும் மாணவர்களுக்கும் இடையேயான உறவு எப்படி இருக்க வேண்டும் என்பதை “மகேஸ்வரன் சேர்வெளிப்படுத்துகிறது. முன்னைய ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடயேயான உறவு பாடசாலையையும் தாண்டி வீடுவரை இருந்ததை ஆசிரியர் அழகாகத் தெரிவித்துள்ளார்.

பொதுமக்களின் அடிப்படைத் தேவைகள், வாழ்வாதார உதவிகளை வழங்கும் அரச அலுவலகத்தில் தினசரி நடப்பதை ”கிறுக்கல் சித்திரங்கள்” எனும் கதைமூலம் பகிரங்கப்படுத்தியுள்ளார் சமரபாகு சீனா உதயகுமார். அரசாங்க வேலை கிடைக்கும் வரை கடமையைப்  பற்றிச் சிந்திப்பவர்கள் வேலை கிடைத்ததும் முழுமையாக மாறிவிடுவார்கள் என்பதை ”கிறுக்கல் சித்திரங்கள்துலாம்பரமாக தெரியப்படுத்துகிறது.

புலமைப்பரிசில் பரீட்சையில்  உள்ள நுண் அரசியலை “புலமைப்பரிசில்” எனும் கதையின்வாயிலாக தெரியக்கூடியதாக உள்ளது. சமரபாகு சீனா உதயகுமார் பிரபல கணித ஆசிரியர் ஆகையினால் புலமைப்பரிசில் பரீட்சையில் மறைந்துகிடக்கும் கட் அவுட் புள்ளியை இலகுவாக எடுத்துரைத்துள்ளார். அவர் ஒரு  ஆசிரியராக இருப்பதனால் பாடசாலைப் பிரச்சினைகள் பலவற்றை தனது கதையின் மூலம் தெளிவுபடுத்துகிறார்.

சாதிப் பிரச்சினையால் வடமராட்சியில் கைகூடாத காதலர்கள் பல ஆண்டுகள் கடந்து வெளிநாட்டில் திருமண பந்ததில் இணைவதை “மைதிலி”  கதை சொல்கிறது. புதிய கோணத்தில் புதிய சிந்தனையில் கதை நகர்த்தப்பட்டுள்ளது
.
சமூகத்தில் நடைபெறும் அவலங்களை சகிக்க முடியாத சமரபாகு சீனா உதயகுமார் தனது கதைகளினூடு வெளிப்படுத்தி  நியாயம் கேட்கிறார்.
வர்மா.
தினகரன்  28/04/2019

Sunday, September 2, 2018

வடக்கே போகும் மெயில் நூல் நயப்பு


சூரன் .ரவிவர்மாவின் 16 சிறுகதைகளை உள்ளடக்கியதாக இந்த சிறுகதைத் தொகுதி அமைந்திருக்கிறது. இலங்கை ரயில் சேவைகளில் வடக்கே பயணிக்கும் யாழ்தேவி ஒரு காலத்தில் செல்வம் கொழிக்கும் சேவையாக இருந்து வந்தது. போர் தீவிரமடைந்து இரு தசாப்தங்களாக இந்த சேவை முடங்கிப் போயிருந்த போதிலும் கூட யாழ் தேவியை மக்கள் மறக்கவில்லை. “வடக்கே போகும் மெயில்என்ற தலைப்பு ஐந்து வருடங்களுக்கு முன் இந்த நூல் வெளிவந்த போதும் என்னை ஈர்த்ததில் ஆச்சரியமில்லை.
ஈழத்தில் ஒரு சமூக விடுதலைப் போராளியாக வாழ்ந்து காட்டி இன்றைய தலைமுறைக்கும் தனது விளைச்சலை விட்டுச் சென்ற சூரன் அவர்களின் பேரன் ரவிவர்மா அவர்கள். அடிப்படையில் ஊடகவியலாளராக இருந்த போதும் ஈழத்தில் வெளி வந்த பத்திரிகைகள், சஞ்சிகைகளில் எழுதிய சிறுகதைகளே இத்தொகுதியில் திரட்டப்பட்டிருக்கின்றன. ஒரு பத்திரிகையாளர் கற்பனாவாதியாக, எழுத்தாளனாக
ஒருங்கே கைவரப் பெற்றவர்கள் என்றால் மூத்த எழுத்தாளர் லெ.முருகபூபதி அவர்களையும், இராணுவத்தின் ஷெல் தன் குடும்பத்தையே
தின்ற எழுத்தாளர் சக பத்திரிகையாளர் நெல்லை .பேரனையும், ரவிவர்மாவின் உறவினர் மற்றும் ஊடகவியலாளராகவும் பத்திரிகையாளராகவும் இயங்கிய அமரர் ராஜஶ்ரீகாந்தன் ஆகியோரையும் தான்
நினைவில் கொண்டு வர முடிகிறது. இவர்களோடு ரவிவர்மாவின் சிறுகதைகளை இப்போது தான் வாசிக்கக் கிட்டியது.
வடக்கே போகும் மெயில்என்ற சிறுகதை இந்த நூலில் இடம்பெற்றுள்ள சிறுகதைகளில் ஒன்று. கொழும்பு, கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணம், காங்கேசன்துறை நோக்கிப் பயணிக்கும் அந்த ரயில் பயண நினைவுகள் தான் எவ்வளவு இனிமை அதே நேரம் அதன் இன்னொரு பக்கம் அவலமானது. சிங்களக் காடையரால் ரயிலில் பயணித்த அப்பாவிப் பயணிகள் கொல்லப்பட்ட வரலாறுகளும், இனத்துவேஷங்கள் சங்கமித்த களமாகவும் இந்தப் பயணம் இனப் பிரச்சனையைத் தண்டவாளத்தில் ஓட்டிக் காட்டும் ஒரு குறு நாடக மேடை. ரவி வர்மா எழுதிய சிறுகதையும் இவ்வாறானதொரு போக்கில் எழுதப்பட்டிருக்கிறது. அத்தோடு ஏனைய சிறுகதைகளின் அடி நாதத்தில் இந்த இனப் பிரச்சனையே மையம் கொண்டிருக்கிறது. ஆகவே தலைப்புகளும் களங்களும் வெவ்வேறாயினும் எல்லாச் சிறுகதைகளுமே வாசகனைவடக்கே செல்லும் மெயில்இருத்தியே பயணிக்கின்றன.
ஈழத்து எழுத்தாளர்களில் ஒரு வகையினர் பிரதேச வழக்குகளைத் தீவிரமாகக் கையாண்டு எழுதுகையில் இன்னொரு சாரார் பொதுத் தமிழில் எழுதத் தலைப்படுவர். வெகுஜனப் பத்திரிகைகள், சஞ்சிகைகளில் இவ்வாறான பொதுத் தமிழைக் கையாளும் சிறுகதைகளே அதிகம். இதன் வழியாகப் பரவலான வாசகர் வட்டத்துக்குச் சொல்ல வந்த சேதி போய்ச் சேரும் சிறப்புண்டு. ரவிவர்மா தன் மொழியாடலில் உரையாடல் பகுதிகளில் ஈழத்துப் பேச்சுத் தமிழையும் கதையோட்டத்துக்குப் பொதுத் தமிழையும் கையாண்டிருக்கிறார்.
சைக்கிள் களவு போன கதையை வேடிக்கையாகபோனால் போகட்டும்சிறுகதை வழியாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார். யாழ்ப்பாண வாழ்வியலில் சைக்கிள் ஒரு பிரதான ஊர்தி அதே சமயம் சைக்கிள் களவில் இருந்து தப்பியவரும் அரிது. “பொன்னுக்கிழவிகதை படித்த போது ராஜஶ்ரீகாந்தனின் சிறுகதை ஒன்றைப் படித்த அனுபவம். ஈழநாடு வார இதழ் போன்று ஈழத்துப் பத்திரிகை உலகில் தினக்குரலின் பாய்ச்சல் வேகமானது. இவ்விரண்டு பத்திரிகைகளிலும் தன் கதைகளை எழுதியிருக்கிறார். அத்தோடு ஈழத்தின் மூத்த சஞ்சிகைமல்லிகைஇலும் இவர் பங்களிப்பு வந்திருக்கிறது. அது போல் இன்றும் தசாப்தம் கடந்து வெளிவரும்ஞானம்சஞ்சிகையிலும் எழுதிய சிறுகதையும் தொகுதியில் இடம்பெற்றுள்ளன.
வானொலியில் பாட்டுக் கேட்கும் போது நம்மையறியாமலேயே நம் குடும்ப விபரங்களைப் பகிர்வதன் ஆபத்தைஎன்னைத் தெரியுமா?” சிறுகதை வழியாகக் காட்டியிருக்கிறார்.
செல்லாக்காசுநாயகன் கணேச மூர்த்தியின் கதை ஏதோ நிஜத்தில் கண்டு கேட்டது போல இருந்தது.
திக்குத் தெரியாதசிறுகதை எந்தத் திசையில் செல்லப் போகிறது என்ற ஆர்வத்தோடு படித்துக் கொண்டிருக்கும் போது எதிர்பாராத அதன் முடிவு முறுவலை எழுப்பியது.
உருவகக் கதை பாணியில்குலதெய்வம்என்ற சிறுகதை எழுதப்பட்டிருக்கிறது. இந்த உத்தியில் எழுபதுகளில் செங்கை ஆழியான் பல சிறுகதைகளை எழுதியிருந்தாலும் நம் ஈழத்து எழுத்தாளர்கள் அதிகம் தொடாதது.
புலம்பெயர் வாழ்வியலைத் தொட்டு எழுதியதிரைகடல் ஓடியும்கதை இன்றைய யதார்த்த உலகில் சுய நலம் தோய்ந்த உறவுகளைக் காட்டும் ஒரு கண்ணாடி.
இடப் பெயர்வின் அவலத்தை முதன் முதலில் சந்தித்தவர்கள் வடமராட்சி மக்கள். அவர்களின் கதைகளின் வழியே உண்மையின் சாட்சியங்கள் தான் கிட்டும். அப்படியொரு உணர்வை எழுப்பியதுஎன்று மறையும்என்ற சிறுகதை. இந்தச் சிறுகதையும், தொகுதியின் நிறைவில் உள்ளவிடியலைத் தேடிசிறுகதையும் மிகவும் ஆழமான பார்வையோடு எழுதப்ப்பட்டிருப்பவை. இவை இரண்டுமே ரவிவர்மா என்ற எழுத்தாளர் இன்னும் பல ஈழத்துப் போரியல் வாழ்வைக் களமாகக் கொண்ட சிறுகதைகளைக் கொடுக்க வல்லவர் என்ற நம்பிக்கையை அதிகம் விளைவிப்பவை.
ஒரு நல்ல சிறுகதையொன்றைப் படித்து முடித்ததும் அந்தக் கதைக்களமும், கதை மாந்தர்களும் நம் வாழ்வின் ஒரு அங்கமாக மாறி விடும் உணர்வைப் பிரதிபலித்தால் அதன் வெற்றியென்று கொள்ளப்படும்.
அந்த வகையில் ஈழத்தவரின் வாழ்வியல் பண்பாடுகள், அனுபவங்களை அந்தந்தக் காலகட்டத்தினூடே எடுத்துச் சென்று கதைகளின் வழி நிகழ்த்திக் காட்டியதன் வழியாக சூரன் .ரவிவர்மா நல்ல சிறுகதை ஆசிரியராக அடையாளப்படுத்தப்படுகிறார்.

கானா பிரபா

27.08.2018