Showing posts with label அன்புமணி. Show all posts
Showing posts with label அன்புமணி. Show all posts

Monday, September 15, 2025

தமிழக அரசியல் கட்சிகளுக்குள் நீடிக்கும் குழப்பம்


 தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னமும் ஏழு மாதங்கள்  இருக்கின்ற நிலையில்  அரசியல் களம் சூடு பிடித்துள்ளது.  முதலமைச்சர் ஸ்டாலினும், எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடியும்  தேர்தல் பரப்புரையை ஆரம்பித்துள்ளனர். தோழமைக் கட்சிகள்  கொடுக்கும் நெருக்கடிகளைச் சமாளித்து ச்டாலினின் பயணம் தொடர்கிறது.

ஆனால், எடப்பாடியின் நிலை முதலுக்கே மோசமாக  உள்ளது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த தலைவர்கலில்  ஒருவரான செங்கோட்டையன் , எடப்பாடிக்கு எதிராகக் களம் இறங்கி உள்ளார். அண்ணா திராவிட முன்னேற்ற்க் கழகத்தை எம்ஜிஆர் ஆரம்பித்தபோது  திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வெளியேறியவர்களில் செங்கோட்டையனும் ஒருவர்.  .பன்னீர்ச்செல்வம், தினகரன், சசிகலா ஆகியோரை கட்சியில் இருந்து வெளியேற்றிய எடப்பாடி  செங்கோட்டையன் மீதும் கைவைத்துள்ளார். கட்சி ஒற்றுமையாக  இருக்க வேண்டும்.  பிரிந்தவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என செங்கோட்டையன் மனம் திறந்து சொன்னதால் எடப்பாடி அவரைத் தூக்கி எறிந்தார்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை நம்பி தமிழ்கத்தில் கால் வைக்கிறது பாரதீய ஜனதா. ஆனால், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பல  பிரிவாகச் சிதறி உள்ளது. இதனை பாரதீய ஜனதா ரசிக்கவில்லை.

செப்டம்பர் மாதம் துவங்கியது முதலே அதிமுக மற்றும் அதிமுக-பாஜக கூட்டணிக்குள் பல மாற்றங்கள் நடந்து வருகிறது. மூப்பனார் நினைவு தின நிகழ்ச்சிக்கு பிறகு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகுவதாக ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோர் அறிவித்தனர். கூட்டணி பற்றி டிசம்பரில் சொல்வதாக  பிரேமலதா அறிவித்துள்ளார். இதனால் அதிமுக பாரதீய ஜனதாக் கூட்டணி பின்னடைவைச் சந்தித்துள்ளது.  செங்கோட்டையனுக்கு ஆதரவாக அண்ணா திராவிட முன்னேற்றக் கழக  பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் சுமார் ஆயிர்ம் பேர் இராஜினாமாக் கடிதங்களை கொடுத்துள்ளனர்.

எடப்பாடியை முதலமைச்சராக்க தினகரனும், அண்ணாமலையும் விரும்ம்பவில்லை என்பதை பகிரங்கமாக அறிவித்துவிட்டனர்.

செங்கோட்டையனின் கட்சி பதவி பறிக்கப்பட்ட நிலையில், இரண்டு நாட்களுக்கு முன் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனால் தான் தாங்கள் கூட்டணியில் இருந்து விலகுவதாக தெரிவித்த டிடிவி தினகரன், செய்தியாளர்களை சந்தித்த போது, இபிஎஸ்., முதல்வர் வேட்பாளராக ஏற்க முடியாது. அதனால் தான் கூட்டணியில் இருந்து விலகுவதாக தெரிவித்தார். ஓபிஎஸ்.,ம் இதையே தெரிவித்தார். இதைத் தொடர்ந்து ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோர் செங்கோட்டையனை சந்திக்க உள்ளதாகவும், செங்கோட்டையன் - சசிகலாவை சந்திக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக   மீண்டும் செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், டில்லி சென்று அமித்ஷாவை சந்தித்து விட்டு வந்ததாக தெரிவித்தார். அதிமுக ஒன்றிணைவது தொடர்பாக அவரிடம் பேசியதாக கூறினார். இதனால் அதிமுக ஒன்றிணைவது பற்றி, அமித்ஷாவிடம் எதற்காக பேச வேண்டும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கிடையில், தானும் அமித்ஷாவை சந்தித்ததாக அதிமுக முன்னாள் சபாநாயகர் தம்பிதுரையும் தெரிவித்துள்ளார். இதனால், அதிமுக.,விற்குள் என்ன தான் நடக்கிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.

எடப்பாடி பழனிச்சாமி பிரசாரம் செய்யும் இடங்களில் அதிமுக.,வின் செல்வாக்கு அதிகரித்து வருவதாக சமீபத்தில் ஒரு தகவல் வெளியானது. இது திமுக.,வை மட்டுமல்ல அரசியல் களத்தில் உள்ள பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இதே நிலை தொடர்ந்தால் எளிதாக வெற்றி பெற்று, இபிஎஸ் முதல்வராகி விடுவார் என்பதால் அதை தடுப்பதற்காக கூட்டணியிலும், அதிமுக.,விற்குள்ளும் குழப்பங்கள் ஏற்படுத்தப்படுவதாக சொல்லப்படுகிறது. அரசியல் வட்டாரங்களில் இது பற்றி விசாரித்த போது, ஓபிஎஸ், டிடிவி தினகரன், செங்கோட்டையன் ஆகியோர் இபிஎஸ் முதல்வராவதை விரும்பவில்லை என சொல்லப்படுகிறது.

ஆனால் இவர்களை சமாதானப்படுத்தி, கூட்டணியை பலப்படுத்த பாஜக முயற்சி வருகிறதாம். இருந்தாலும் கூட்டணியில் தொடர தாங்கள் தயாராக இருப்பதாகவும், அப்படி தொடர வேண்டும் என்றால் இபிஎஸ் தவிர வேறு யாரை வேண்டுமானாலும் முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என பாஜக.,விடம் ஓபிஎஸ், டிடிவி தினகரன் போன்றவர்கள் நிபந்தனை விதித்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. வலுவான ஒரு கட்சியின் பொதுச் செயலாளராகவும் இருக்கும் ஒருவரை முதல்வர் வேட்பாளராக அறிவித்த பிறகு எப்படி மாற்றுவது? அப்படியே மாற்றினாலும் வேறு யாரை முதல்வர் வேட்பாளராக அறிவிப்பது என பாஜக குழப்பத்தில் உள்ளதாம்

இபிஎஸ்., முதல்வர் வேட்பாளர் இடத்தில் இருந்து மாற்ற வேண்டும் என்பதை நோக்கி தான் எதிர்ப்பு குரல்கள் கட்சிக்குள்ளேயே எழுவதால், இதை பாஜக தலைமையும், அதிமுக தலைமையும் எப்படி கையாள போகிறது? இபிஎஸ்.,க்கு தான் இது நெருக்கடியை தருவதால், அவர் இந்த பிரச்சனையை எப்படி கையாண்டு, தேர்தலில் வெற்றி பெறப் போகிறார் என்பது தமிழக அரசியல் நிகழ்வுகளை இன்னும் சுவாரஸ்யமாக்கி உள்ளது.

ராமதாஸ், அவரதுமகன் அன்புமணி ஆகியோருக்கிடையேயான பிரச்சனை பூதகரமாக வெடித்துச் சிதறி உள்ளது.சொல்லுக் கேட்காத மகன் அன்புமணியை கட்சியில் இருந்து ராமதாஸ் நீக்கிவிட்டார்.

கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக, அன்புமணி ராமதாஸ் மீது ஒழுங்கு நடவடிக்கைக் குழு அனுப்பிய 16 குற்றச்சாட்டுகளுக்கு அவர் எந்தப் பதிலும் அளிக்காத காரணத்தால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ராமதாஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அன்புமணியின் ஆதரவாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்த ராமதாஸ், "அன்புமணி உடன் நிர்வாகிகள் யாரும் தொடர்பு வைத்துக்கொள்ளக் கூடாது.

மீறினால், அவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார். அதே சமயம், அன்புமணியுடன் இணைந்து செயல்பட்டு வரும் சிலரை மன்னித்து ஏற்றுக்க்கொள்ள தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.

மேலும், அன்புமணியின் செயல்பாடுகள் குறித்துப் பேசிய ராமதாஸ், "மூத்த தலைவர்கள் அறிவுரை கூறியும் அதை அன்புமணி கேட்கவில்லை.

அவர் தனியாகக் கட்சி தொடங்கிக் கொள்ளலாம் என்று மூன்று முறை அவரிடம் கூறியுள்ளேன்" என்றும் தெரிவித்தார்.

45 ஆண்டுகளாக உழைத்து, மிகவும் கஷ்டப்பட்டு பாமகவை உருவாக்கியதாகவும், ஆனால் அன்புமணிக்கு அதில் நம்பிக்கை இல்லை என்றும் அவர் வேதனை தெரிவித்தார்

ஒரு காலத்தில் தமிழக அரசியலைத் தீர்மானித்த ராமதாஸ் இன்று கட்சியக் காப்பாற்றவேண்டிய இக்கட்டான நிலைக்குத் தள்ளபட்டுள்ளார்.

 

ரமணி

14/9/25 

 

Monday, May 19, 2025

அன்புமணிக்கு எச்சரிக்கை விடுத்த ராமதாஸ்


 பாட்டாளி மக்கள் கட்சியின்  சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் மாநாடு மே 11 ஆம் திகதி மாமல்லபுரத்தை அடுத்த திருவிடந்தையில்  நடந்தது.  12 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் மாந்நடு என்பதாலும் ராமதாஸ் , அவருடைய மகன் அன்புமணி ஆகியோருக்கிடையே வெடித்த போதல் என்பதாலும் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது.

அன்புமணி ராமதாஸ் நிர்வாகத் தலைமையில் நடைபெறும் முதல் மாநாடு என்பதால்  பிரமாண்டமான ஏற்பாடுகள் நடைபெற்றன.

 

க‌டந்த 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற மாநாட்டின் போது வெடித்த வன்முறையில் 4 பேர் உயிரிழந்தனர். ஆகையால் தமிழக அரசு மிகுந்தகட்டுப்பாடுகளை விதித்தது.

கட்சியின் கடந்தகாலம், எதிர்காலம் என்பனவற்றைப்பற்றிய எதிர்பார்புடன் சென்றவர்கள் ஏமாற்றமடைந்தனர். மகன் அன்புமணியின் மீதான  கோபத்தை வெளிப்படுத்தினார் ராமதாஸ்.

" வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீட்டை வழங்கக் கோரி போராட்டம் அறிவிக்கப்படும்.   இதுவரை நடந்திராத போராட்டமாக இருக்கும். அந்தப் போராட்டத்துக்காக எவ்வளவு பெரிய தியாகத்தையும் செய்வதற்கு தயாராக இருக்கிறோம்" எனக் கூறினார்.

தொடர்ந்து அவர் பேசுகையில்,

  "நாமும் ஒருநாள் தமிழ்நாட்டை ஆள வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் என் பேச்சைக் கேளுங்கள். நான் ஆளப் போவதில்லை. எனக்கு அந்த ஆசையும்  இல்லை. ஆசை இருந்திருந்தால் ஆளுநராக இருந்திருப்பேன்; பலமுறை அமைச்சராக இருந்திருப்பேன்;  த மிழ்நாட்டையும் ஆண்டிருப்பேன். ஆனால், மக்களுக்காக வாழ்கிறேன்."

  "நமக்குத் தேவை உங்களின் ஒரு  வாக்கு தான். இவ்வளவு நாள் என் பேச்சைக் கேட்டீர்கள். இடையில் மறந்துவிட்டீர்கள்."

  "முன்பு யானை சின்னத்தில் தனியாக நின்று நான்கு தொகுதிகளில் வெற்றி பெற்றோம். இன்று கூட்டணியில் சேர்ந்து 5 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளோம். இதைப் பார்த்து நமக்கு கோபம் வரவில்லையா?"

 "சிலர் எங்கே கூட்டணி என்று கேட்கிறார்கள். அதை நான் பார்த்துக் கொள்கிறேன். கூட்டணியை முடிவு செய்வேன். அதைப் பற்றி நீ ஒன்றும் கவலைப்பட வேண்டாம். சீட் வேண்டும்,  எம்.எல்.ஏ வேண்டும் என்றால் உழைக்கலாம்."

  "அந்தக் கூட்டணி...இந்தக் கூட்டணி.. கட்சிக்குள்ளேயே கூட்டணி.. கட்சிக்குள்ளேயே கூட்டு. இதெல்லாம் நடக்காது. உன்னை திருத்திக் கொள். இந்தக் கட்சியில் நீ பொறுப்பில் இருக்கவே முடியாது. அது யாராக இருந்தாலும் சொல்கிறேன்."

"இன்னும் 2 மாதம் கடந்தால் எனக்கு 87 வயது. வயதாகிவிட்டது எனக் கூறி ஏமாற்றப் பார்க்காதீர்கள். இந்தக் கட்சி ஒரு தனி மனிதனின் சொத்து அல்ல." எனப் பொரிந்து தள்ளிவிட்டார் ராமதாச்.

 ராமதாஸின் பேச்சைக்கேட்டபடி அன்புமணி அசட்டுச் சிரிப்புடன் அமர்ந்திருந்தார்.  அடங்கி இருந்த குடும்பப் பிரச்சனையை மாநாட்டில்  வெளிப்படுத்திவிட்டார்.

மாநாடு தொடர்பாக  அடுத்த நாள் திங்கள்கிழமை  அறிக்கை ஒன்றை வெளியிட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் செயல் தலைவர் அன்புமணி, தமிழ்நாடு அரசியல் களத்தில் இந்த மாநாடு மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டார். அறிக்கையில் தன்னை பா.ம.க-வின் தலைவர் என அன்புமணி குறிப்பிட்டுள்ளார். கடந்த ஏப்ரல் 10 ஆம்  திக‌தியன்று தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்கி, அவரை செயல் தலைவராக மருத்துவர் ராமதாஸ் அறிவித்தார். கட்சியின் மாநாடு நெருங்கிக் கொண்டிருந்த நேரத்தில் ராமதாஸின் இந்த அறிவிப்பு, அரசியல் களத்தில் பேசுபொருளாக மாறியது. இப்போது அன்புமணி தலைவர் என அறிக்கை விட்டிருந்தார்.

  தனது  மூத்த மகள் காந்திமதியின் மகன் முகுந்தன் பரசுராமனுக்கு ராமதாஸ் கட்சிக்குள் முக்கிய பதவி கொடுத்ததை அன்புமணியால் ஜீரணிக்க முடியவில்லை.

இம்மாநாட்டுக்காக  அன்புமணி ராமதாஸ் வீடியோ பாடல் ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில், ஒரு இடத்தில் மட்டுமே ராமதாஸின் புகைப்படம் இடம்பெற்றிருந்தது. "அண்ணன் அன்புமணி அழைக்கிறார்" என்று  பாடல் முழுவதும் அன்புமணியில் அழைப்பு இருந்தது.

 ராமதாஸ், தனியாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அன்புமணியின் படம் ஒரு இடத்தில் கூட இடம்பெறாத நிலையில், "ஐயா அழைக்கிறார்" என்றே அந்த பாடல் தொடங்குகிறது. அண்ணனா? ஐயாவா யாருக்குப் பின்னால் நிறப்து எஅந்த் தெரியாமல் கட்சியில் உள்ளவர்கள்  குழம்பிப்போய் உள்ளனர்.

ராமதாஸ்,  பேரன் பரசுராமன் ஆகிய இருவரும் ஒரு பக்கமாக நிற்கிறார்கள். அன்புமணியும் அவருடையா மகள்களும் இன்னொரு பக்கமாக நிற்கிறார்கள். குடும்பப்பிரச்சனையால் கட்சிக்கு என்ன நடக்குமோ என்ற பதற்றத்தில் அடுத்த தலைவர்களும், தொண்டர்களும் இருக்கிறார்கள்.

  தகப்பனுக்கும் மகனுக்கும் இடையேயான மோதல் கடந்த டிசம்பரில் ஆரம்பமானது. பிரச்சனைகள் அனைத்தும்  முடிந்து விட்டதாக ஜி.கே. மணி  உள்ளிட்டவர்கள் கூறினார்கள்.  ஆனால், பிரச்சனை கைமீறிப் போய்விட்டதை ராமதாஸின்  பேச்சு வெளிப்படுத்தியது.

 பாரதீய ஜனதாவுடன்  கூட்டணி சேர வேணும் என அன்புமணி விரும்புகிறார். அப்போதுதான்  எம்பி பதவியில் தொடரலாம் அமைச்சராகலாம் என்பது அவரது கனவு.அண்ணா திரவிட முன்னேற்றக் கழகத்தின் தயவிலேதான் அன்புமணி எம்பியாக  இருக்கிறார்.

ராமதாஸ் இன் எதிர்  பார்ப்பு வேறுவகையாக  இருக்கிறது. திரவிட முன்னேற்றக் கழகத்துடன் சேர்வதற்கு ராமதாஸ் முயற்சி செய்கிறார்.

தமிழக அரசியலைத் தீர்மானிக்கும் சக்தியாக ஒரு காலத்தில் இருந்த பாட்டாளி இப்போது பொலிவிழந்துள்ளது. அவசரம் இல்லாது ஆறுதலாகப் பேசும் கட்சியா பாட்டாளி மக்கள் கட்சி  மாறிவிட்டது.

தமிழக அரசின் மசோதாக்களுக்கு ஆளுநர் ரவி  ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் கடந்த 2023-ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் அமர்வு கடந்த ஏப்ரல் 8‍ம் திக‌தி முக்கிய தீர்ப்பு வழங்கியதுமாநில அரசின் மசோதா குறித்து ஒரு மாதத்துக்குள் ஆளுநர் முடிவு எடுக்க வேண்டும். மாநில ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் குறித்து 3 மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவு எடுக்க வேண்டும். ஒருவேளை, தாமதம் ஏற்பட்டால் அதற்கான காரணத்தை தெளிவுபடுத்த வேண்டும் என்று தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆளுநரால் கிடப்பில் போடப்பட்ட மசோதாக்களுக்கு நீதிமன்றம் உயிர் கொடுத்தது.ஆளுநரின் கையெழுத்து இல்லாமலே அவற்றை நடைமுறைப் படுத்தியது நீதிமன்றம்.

இந்தத் தீர்ப்பு இந்திய அரசியலில் பெரும் தாக்கத்தை  ஏற்படுத்தியுள்ளது.  ஆளுநரின் அதிகாரத்தின் மூலம் மாநிலங்களை முடக்கும் பாரதிய ஜனதாவுக்கு சாட்டையடி விழுந்துள்ளது. ஆளுநர் பதவி விலக வேண்டும் என்ற கருத்து பரவலாக எழுந்தது. இதுவரை அமைதியாக இருந்த பாரதீய ஜனதா இந்திய ஜனதிபதி மின் மூலம் நீதிமன்றத்திடம் கேள்வி எழுப்பி உள்ளது.

  இந்த தீர்ப்பு தொடர்பாக  ஜனாதிபதி திரவுபதி முர்மு 14 கேள்விகளை எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக விளக்கம் கோரி உச்ச நீதிமன்றத்துக்கு அவர் கடிதம் அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

அரசியலமைப்பு சட்டம் 143 (1)-வது பிரிவு வழங்கியுள்ள சிறப்பு அதிகாரத்தின்படி, 14 கேள்விகளை உச்ச நீதிமன்றத்தின் பார்வைக்கு கொண்டு வந்து, அதுகுறித்து தனது கருத்துகளை தெரிவிக்குமாறு கோருகிறேன்.

. இந்திய அரசியலமைப்பு சட்டம் 200-வது பிரிவின்படி, மாநில ஆளுநரிடம் ஒரு சட்டமசோதா சமர்ப்பிக்கப்படும்போது அவருக்கு உள்ள சட்டரீதியான வாய்ப்புகள் என்னென்ன?,

 ஒரு மசோதாவை தாக்கல் செய்யும்போது, மாநில அமைச்சரவை வழங்கும் ஆலோசனைகளுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவரா?,

 அரசியலமைப்பு வழங்கி உள்ள விருப்பு உரிமையை ஆளுநர் பயன்படுத்துவது நியாயமானதா?,

  அரசியலமைப்பு சட்டத்தின் 361-வது பிரிவு, ஆளுநரின் நடவடிக்கைகள் தொடர்பான நீதிமன்ற மறுஆய்வுக்கு தடையாக உள்ளதா?,

 அரசியலமைப்பு சட்டத்தின்படி ஆளுநரின் செயல்பாடுகளுக்கு எவ்வித காலக்கெடுவும் நிர்ணயம் செய்யப்படவில்லை. அப்படி இருக்க, நீதிமன்ற உத்தரவு மூலம் ஆளுநருக்கு காலக்கெடு நிர்ணயிக்க முடியுமா? போன்ற 14 கேள்விகளை ஜனாதிபதி எழுப்பி உள்ளார்.

அவர் எழுப்பிய 14 கேள்விகளுக்கு பதில் அளிக்க 5 நீதிபதிகள் கொண்டஅரசியல் சாசன அமர்வை அமைக்க வேண்டும். அந்த அமர்வுதான் குடியரசுத் தலைவரின் கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கும் என  சட்டம் தெரிந்தவர்கள் தெரிவித்தனர்.

 

ரமணி

18/5/25

  

Thursday, April 10, 2025

சந்திக்கு வந்த குடும்பச் சண்டை மகனின் பதவியை பறித்த தந்தை


 

 அரசியல் என்றாலே அங்கே வரிசுக்கு தனி மரியாதை இருக்கும் வரிசு அரச்யல் என விமர்சகர்கள்   பெரிதாக கூப்பாடு போட்டாலும். வரிசு அரசியலை அடுத்த கட்ட தலைவர்களும், தொண்டர்களும் சிரமேல் தூக்கிக் கொண்டாடுகிறார்கள்.

வாரிசுக்காக  இரண்டாம் கட்டத் தலைவர்கள் தூக்கி எறியப்பட்ட சம்பவங்களும், நின்று பிடிக்க முடியாமல்  கட்சியை விட்டே  ஓடிஒ போன சம்பவங்களும்  அரசியல் அரங்கில்  நிறையவே உள்ளன. மகனிடம்  இருந்த தலமைப் பதவியைப் பரித்து  தன்னை  மீண்டும் தலைவராக்கிய அதிர்ச்சியான  அரசியல் தமிழகத்தில் நடைபெற்றுள்ளது.

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரான அன்புமணியிடம்  இருந்த தலைமைப் பதவிடை  தகப்பனான‌ டாக்டர் ராமதாஸ்  பிடுங்கி எடுத்துள்ளார்.

பாமக நிறுவனரான நானே இனி கட்சித் தலைவர் பதவியையும் வகிக்கப் போகிறேன். கட்சியின் செயல் தலைவராக டாக்டர் அன்புமணி செயல்படுவார். கெளரவத் தலைவராக ஜி.கே.மணி தொடர்கிறார் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்துள்ளார். இது பெரும்  இந்திய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  ஒரு கட்சிக்கு மூன்று தலைவர்களா என்ற கேள்வியஒயும் எழுப்பி உள்ளது.

பாமக தலைவராக கடந்த 2022ம் ஆண்டு வரை ஜி.கே.மணி செயல்பட்டு வந்தார். டாக்டர் ராமதாஸும், ஜி.கே.மணியும் இணைந்து பல கூட்டணிகளை உருவாக்கியுள்ளனர். சிறப்பாகவும் செயல்பட்டுள்ளனர். இந்த நிலையில் 2022ம் ஆண்டு பாமக தலைவராக, அதுவரை இளைஞர் அணித் தலைவராக செயல்பட்டு வந்த டாக்டர் அன்புமணி ராமதாஸ் நியமிக்கப்பட்டார். கெளரவத் தலைவராக ஜி.கே.மணி மாற்றப்பட்டார்.

 சில மாதங்களுக்கு முன்பு புதுச்சேரியில் நடந்த கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தின்போது இளைஞர் சங்க தலைவராக முகுந்தன் பரசுராமனை நியமிப்பதாக டாக்டர் ராமதாஸ் அறிவித்தார். இவர் டாக்டர் ராமதாஸின் மகள் வழிப் பேரன் ஆவார். இதற்கு அன்புமணி ராமதாஸ் மேடையிலேயே பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவித்தார். இருவருக்கும் இடையே கடும் வாதமும் மூண்டது. அப்போது இது நான் உருவாக்கிய கட்சி. நான் சொல்வதைக் கேட்க விரும்பாதவர்கள், யாராக இருந்தாலும் வெளியேறி விடுங்கள் என்று கோபமாக கூறினார்.

தகப்பனின்  கோபத்தால் ஒந்தளித்த அன்புமணி தனது அலுவலகம் பனையூரில் இருப்பதாகவும் தன்னை விரும்புவர்கள் அங்கு வந்து சந்திக்கலாம் எனவும் தெரிவித்து விட்டு  வெளியேறிபனார்.   அரசியல் காரணமாக தகப்பனும் மகனும்  பிரிந்திருப்பதை விரும்பாத கட்சியின் மூத்த தலைவர்கள்  இருஅவ்ரையும் சமாதானமாக்கினார்கள்.தகப்பனின் தைலாபுர வீட்டுக்கு அன்புமணி சென்றார். இறுக்கமான முகத்துடன் அன்புமணியை ஏறெடுத்தும் பார்க்காமல் ராமதாஸ். இருந்தார்.  பிரச்சனை முற்றுப் பெற்ரு விட்டதாக அனைவரும் நினைத்தனர். இப்போ அது பூதாகரமாக விஸ்வரூபம் எடுத்துள்ளது.

மகனிடம் இருந்த தலைமைப் பதவியைப் பரித்ததற்கு  பல காரணங்கள்  உண்டு அதனைத் தெரிவிப்பேன் என ராமதாஸ் தெரிவித்தார்.

 அன்புமணியின் தலைமையில் கட்சி  பல தோல்விகளைச் சந்தித்தது. வாக்கௌ வங்கி கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. பாரதீய ஜனதாவுடன் மிக நெருக்கமாக இருக்கும் அன்புமணி பாரதீய ஜனதாக் கூட்டணியில் தொடர விரும்புகிறார். அரசியலில் மிகவும் அனுபவம் உள்ள ராமதாஸின் பார்வை வேறு விதமாக  உள்ளது. அதிமுகவுடன்  கூட்டணி சேர ராமதாஸ் ஆசைப்படுகிறார். அதிமுகவின் அனுரசணையில் எம்பியாக இருக்கிறார் அன்புமணி. தனக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என கனவுகண்டு காலத்தைக் க்டத்துகிறார்.  நாடா ளுமன்றத்துக்கு  அன்புமணி செல்வதில்லை என்ற விபரம் தற்போது வெளியாகி உள்ளது.

தமிழகத்துக்காக நாடாளுமன்றத்தில்  தமிழ் அம்பிக்க குரல் கொடுக்கும்  போது அங்கு  அன்புமணி  தென்படுவதில்லை. மக்களுக்காகச் சேவை செய்யச் சென்ற அவர் பதவியைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கிறார்.

 வன்னியர் சமூகத்துக்காக‌ வன்னியர் சங்கத்தில் தீவிரமாக களமாடி வந்தவர் டாக்டர் ராமதாஸ். அவரது அயராத உழைப்பு, கடுமையான முயற்சிகள், கிராமம் கிராமமாக சென்று அவர் மேற்கொண்ட திண்ணைப் பிரச்சாரத்தால் அவருக்குக் கிடைத்த செல்வாக்கு அளப்பறியது. மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆருக்கே கடும் சவாலாக திகழ்ந்தவர் டாக்டர் ராமதாஸ்.

பின்னாளில், பாட்டாளி மக்கள் கட்சி உருவானது. வட மாவட்டங்களில் மிகப்பெரிய சக்தியாக பாமக ஒரு காலத்தில் திகழ்ந்தது. இப்போதும் வட மாவட்ட முக்கிய அரசியல் சக்தியாக பாமக இருந்தாலும் கூட முக்கியமான வெற்றிகளை பெற அது தவறி வருகிறது. இதற்கு காரணம் பாமகவின் செயல்பாடுகளில் காணப்படும் ஒரு விதமான தொய்வு. பாமகவின் நிறுவனரான டாக்டர் ராமதாஸ் பல்வேறு தலைவர்களை தனது கட்சியின் தலைமைப் பொறுப்பில் ஈடுபடுத்தி செயல்பட வைத்தார்

 கருணாநிதியும், ஜெயலலிதாவும் ராமதாஸுடன் முதலில் பேசி   தொகுதிகளை அறிவித்த பின்னரே எஆனிய கட்சிகளுடன்  பேச்சு வார்த்தி நடத்துவார்கள்.  அந்த நிலை இப்போது  மாரிவிட்டது. தொடர் தோல்விகள் தொண்டர்களிடையே சலிப்பை ஏறப்ப‌டுத்தியுள்ளது. ஜி.கே.மணி காலம் வரை பாமகவின் செயல்பாடுகள் சற்று சிறப்பாக இருந்தது என்று சொல்ல வேண்டும். அதன் பிறகு 2022 ஆம் ஆண்டு பாமகவின் புதிய தலைவராக டாக்டர் அன்புமணி ராமதாஸ் நியமிக்கப்பட்டார். அன்புமணியின் வரவுக்கு பின்னர் பாமகவின் செயல்பாடுகள் அதன் போக்கில் பல மாற்றங்கள் காணமுடிந்தது. ஒரு ஜாதி கட்சியாக மட்டுமே அறியப்பட்ட பாமகவை அடுத்த தளத்திற்கு கொண்டு செல்லும் முயற்சியில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தீவிரம் காட்டினார். அதற்கு ஏற்ப அவர் செயல்பாடுகளில் முன்னெடுத்தார். வெறும் ஜாதி கட்சியாக மட்டும் இருக்கக் கூடாது என்பது அவரது எண்ணமாக இருந்தது. அதற்கு காரணம் அவர் அரசியல் செய்தது டெல்லியில், டாக்டர் ராமதாஸின் அரசியல் தமிழ்நாட்டில். எனவே அவரவர் சூழலுக்கு ஏற்ற அரசியலை அவர்கள் செய்ய முனைந்தனர். இதன் காரணமாக இருவருக்குள்ளும் பல்வேறு முட்டல் மோதல்கள் வெடித்தன.

கூட்டணி கட்சிகளை உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று சந்திக்க உள்ள நிலையில், பாமகவில் உச்சக்கட்ட பரபரப்பு நிலவி கொண்டிருக்கிறது.. பாமகவின் தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்கி, தன்னை தானே தலைவராக ராமதாஸ் அறிவித்துக் கொண்டுள்ளார்.. இது பாமக தொண்டர்களையும் சேர்த்து குழப்பி வருகிறது.. டாக்டர் ராமதாஸின் இந்த முடிவுக்கு என்ன காரணம்? அமித்ஷா வரும்போது இப்படியொரு முடிவை வெளிப்படுத்தும் நோக்கம் என்ன? என்ற கேள்விடும் எழுந்துள்ளது.

கடந்த முறை அதிமுகவுடன் வலிமையாக கூட்டணி வைத்தும்கூட, பாமகவால் பெரிதாக வெற்றி பெற முடியவில்லை. அப்படியிருக்கும்போது, எம்பி தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்து எப்படி வெற்றி பெற முடியும்? என்பதே இந்த அதிருப்தியாளர்களின் சந்தேகமாக எழுந்தது. சாதிவாரி கணக்கெடுப்பை பாமக வலியுறுத்தியபோது, அதை காங்கிரஸ் ஏற்றுக்கொண்டது. ஆனால், பாஜக அமைதி காப்பது ஏன்? பாஜகவின் நிலைப்பாடு தெரியாதபட்சத்தில், எப்படி அந்த கட்சியுடன் கூட்டணி வைப்பது எனத் தொண்டர்கள்  கேள்வி எழுப்பி உள்ளனர்.

 அதாவது கட்சி சார்ந்த அனைத்து விஷயங்களையும் அன்புமணியும், செளமியா அன்புமணியும் சேர்ந்து எடுக்கிறார்களாம்.. இது தொடர்பாக தன்னை ஆலோசிப்பதில்லை என்றும், இதனால் தான் தனிமைப்படுத்தப்பட்டதாகவும் ராமதாஸ் உணர்ந்ததாக கூறப்படுகிறது.

தமிழ்நாட்டு அரசியலைப் பொறுத்தவரை முக்கிய கட்சியான அதிமுக பலவீனப்பட்டு நிற்கிறது. இந்த நிலையில் பாமகவும் பலவீனப்பட்டால் அல்லது பிளவுபட்டால் அது அக்கட்சிக்கு நல்லதல்ல என்று தொண்டர்கள் கவலைப்படுகிறார்கள். அன்புமணியும், ராமதாஸும் வெளிப்படையாக பேசி தீர்வு காண வேண்டும். இல்லாவிட்டால் பிளவு வரைக்கும் போய் விட்டால் பல வருடங்களாக கடுமையாக உழைத்து செங்கல் செங்கல்லாக பார்த்துப் பார்த்து உருவாக்கிய பாமகவின் கோட்டை தகர்வதை யாராலும் தடுக்க

    

Friday, January 3, 2025

வாரிசு அரசியலால் பாமகவில் பூகம்பம்


 

 வாரிசு அரசியலால் பாமகவில் பூகம்பம்

ராமதாஸ் பிடிவாதம் அன்புமணி வெளிநடப்பு

 தமிழகத்தின்  மிகப் பிரமாதமான சாதிக் கட்சியாக இருந்த பாட்டாளி மக்கள் கட்சி இன்று தேடுவாரற்ற கட்சியாக இருக்கிறது.  கருணாநிதியும்,  ஜெயலலிதாவும்  பாட்டாளி மக்கள் கட்சியுடன் தேர்தல்  கூட்டணி வைப்பதற்கு முக்கியத்துவம் கொடுத்தனர்.முதலில் ராமதாஸை அழைத்துப் பேசி  அவர் விரும்பிய தொகுதிகளைக் கொடுத்த பின்னரே மற்றைய கட்சிகளுடன் கூட்டணிப் பேச்சு வார்த்தை நடத்துவார்கள். அந்த நிலை இன்று இல்லை. ராமதாஸ் கேட்டதை எடப்பாடி கொடுப்பதில்லை. ராமதாஸுடன்  கூட்டணி வைக்க ஸ்டாலின் விரும்பவில்லை.

ராமதாஸ், அன்புமணி ஆகிய இருவருக்கும் இடையே நீறு பூத்த நெருப்பாக  இருந்த மோதல்  பகிரங்கமாகிவிட்டது.

விழுப்புரம் மாவட்டம் பட்டானூரில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பாமகவின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.  இதில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ், தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது பொதுக்குழு கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பேசியபோது, முகுந்தன் என்பவரை மாநில இளைஞர் சங்க தலைவராக நியமிக்கப்பதாக அறிவித்தார்.

அப்போது டாக்டர் ராமதாஸுக்கு அருகே அமர்ந்திருந்த அன்புணி ராமதாஸ் குறுக்கிட்டு மைக்கை கையில் எடுத்து, கட்சிக்கு வந்து 4 மாதங்களே ஆன முகுந்தனுக்கு பதவியா? அவருக்கு எல்லாம் என்ன அனுபவம் இருக்கிறது என மேடையிலேயே பகிரங்கமாக எதிர்த்துப் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனை சற்றும் எதிர்பார்க்காத டாக்டர் ராமதாஸ் ஆவேசமாகி, இது நான் உருவாக்கிய கட்சி. இங்கு நான் சொல்வதைத்தான் எல்லோரும் கேட்க வேண்டும். நான் சொல்பவர்கள் தான் கட்சியில் இருக்க வேண்டும். நான் சொல்வதை கேட்கவில்லை என்றால் கட்சியை விட்ட போங்க என்று கூறினார். இதனால் ஆத்திரமடைந்த டாக்டர் அன்புமணி, மேடையிலேயே நான் பனையூரில் கட்சி அலுவலகம் அமைத்துள்ளேன். விருப்பம் உள்ளவர்கள் அங்கு வந்து என்னை சந்திக்கலாம் என்று கூறி மைக்கை  வீசிவிட்டு கோபத்துடன்  மண்டபத்தை விட்டு வெளியேறினார்.

இந்த சம்பவம் கட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன்பின்னர் திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸை பாமக தலைவர் அன்புமணி கடந்த 29ம் திக‌தி நேரில் சந்தித்து பேசினார்.

இருவரும் ஒரே இடத்தில் இருந்த போதும் அன்புமணியின் பக்கம் அராமதாஸ் ஏறெடுத்தும்  பார்க்கவில்லை. அவருடைய கோபம் இன்னமும் தணியவில்லை.

 அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி பேசுகையில், பாமக ஒரு ஜனநாயக அமைப்பு.   பாமகவின் உட்கட்சிப் பிரச்சினை. பொதுக்குழுவில் காரசார விவாதம் நடப்பது சகஜமானது. எல்லாக் கட்சியிலும் நடப்பது போலத்தான்   நடந்தது என்றார் அன்புமணி.இளைஞர் சங்க தலைவராக முகுந்தன் அறிவிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக செய்தியாளர்கள் திரும்பத் திரும்ப கேட்டதற்கு, அது எங்களது உட்கட்சிப் பிரச்சினை. அதுகுறித்து நீங்கள் கவலைப்படத் தேவையில்லை என்று மட்டும் கூறி விட்டுக் கிளம்பினார் அன்புமணி ராமதாஸ்.

அதன்பின்னர், தாத்தா டாக்டர் ராமதாஸை, தனது குடும்பத்தோடு போய் பார்த்த முகுந்தன், தாத்தா எனக்கு இப்போது எந்தப் பொறுப்பும் வேண்டாம். மாமாவுக்கு (டாக்டர் அன்புமணி) ஆட்சேபனை இருப்பதால் நான் எந்தப் பொறுப்பையும் வகிக்க விரும்பவில்லை. ஊடகப் பிரிவு பொறுப்பும் கூட வேண்டாம். வெறும் தொண்டனாக இருந்து கொள்கிறேன். சிறிது காலத்திற்குப் பிறகு நீங்கள் ஏதாவது பொறுப்பு கொடுத்தால் அதை ஏற்க நான் தயார். இப்போது எதுவும் வேண்டாம் என்று கூறிவிட்டார்.

இந்நிலையில், பாமக இளைஞரணி தலைவராக முகுந்தன் நியமிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். பாமக பொதுக்குழுவில் அறிவித்தபடி முகுந்தனிடம் நியமன கடிதத்தை வழங்கிவிட்டதாகவும் தற்போது அவர் தெரிவித்துள்ளார். மேலும் பொதுக்குழுவில் ஏற்பட்ட பிரச்சினை சரியாகி விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 அண்ணா திராவிட முன்னேற்றக கழகத்துடன் கூட்டணி சேர ராமதாஸ் விரும்பினார். ஆனால்,   பாரதீய ஜனதாவின் பக்கம் அன்புமணி  கையைக் காட்டினார். இதனால்  இருவருக்கும் இடையே மனக் கசப்பு நீடித்தது. இருவரும் பெரிது படுத்தாமல் காலத்தைக் கடத்தினர். வாரிசு அரசியல் என ஏனைய கட்சிகளைக் குற்றம் சாட்டிக்கொண்டு தனது வாரிசுக்கு முன்னுரிமை கொடுத்ததை அன்புமணி பகிரங்கமாகக் கண்டித்தார்.

வயது முதிர்வு காரணமாக் கட்சியை அன்புமணியிடம் ஒப்படைத்து விட்டு ராமதாஸ் ஒதுங்கினார்.ராமதாஸைப் போன்று அன்புமணி சுறுசுறுப்பாகச் செயற்படவில்லை. அதிக அதிகாரங்கள்  இருந்தும் அன்புமணியால்  பெரிய அளவிலான வெற்றிகளைப் பெற முடியவில்லை.

டாக்டர் ராமதாஸ் இருந்தபோது கட்சி  எப்படி ஆக்ரோஷமாக இருந்ததோ, அதே அளவிலான செயல்பாடுகள் அன்புமணி தலைமையில் இல்லை என்பது டாக்டர் ராமதாஸுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்ததாக தெரிகிறது

பாட்டாளி மக்கள் கட்சித்  தலைவராக இருந்து வந்த ஜி.கே.மணியை அந்தப் பொறுப்பிலிருந்து நீக்கி அவரை கெளரவத் தலைவராக மாற்றியபோதும் கூட கட்சிக்குள்முணுமுணுப்பு  எழுந்தது.  அன்புமணி ராமதாஸ் தலைவரான பிறகு பாமக அடுத்தடுத்து பல தோல்விகளை சந்தது.  கட்சியின் வாக்கு வங்கியும் சரிந்ததால், தங்களைத் தேடி கூட்டணி கட்சிகள் வந்த நிலை மாறி, தாங்கள் வெற்றி பெற பெரிய கட்சிகளின் கூட்டணியைத்  தேடி போக வேண்டிய நிலை உருவானது.

கடந்த நாடாளுமன்றத்  தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைக்க ராமதாஸ் தொடர்ந்து வலியுறுத்தினார். ஆனால் பாஜக பக்கம் போக வேண்டும் என்பதில் பிடிவாதமாக அன்புமணி இருந்தார். இவர்கள் இருவருக்கும் இடையேயான குழப்பம் காரணமாக தான் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலிலும் அதிமுக கூட்டணியில் இணைய போவதாக முடிவு செய்து, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை அனைத்தும்   இறுதி செய்ய போகும் கட்டத்தில் கடைசி நிமிடத்தில் பாஜக கூட்டணிக்கு, பாமக செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.

பாரதீயஜனதாக்  கூட்டணிக்குச் சென்ற  பிறகு எதிர்பார்த்த படி பெரிய அளவில் முன்னேற்றம், பலன்கள் எதுவும் கட்சிக்கு ஏற்படாததால் டாக்டர் ராமதாஸ் கடும் அதிருப்தி  அடைந்தார்.

 இந்த நிலையில்தான் வருகிற சட்டசபைத் தேர்தலில்  அதிமுக., கூட்டணிக்கு திரும்ப ராமதாஸ் முடிவு செய்துள்ளதாகவும், இதற்கு அன்புமணி ராமதாஸ் ஒப்புக் கொள்ளாமல் போனதே இந்த மோதலுக்கு காரணம் என்றும் சொல்லப்படுகிறது. அது மட்டுமல்ல, தற்போது ராமதாஸின் பேரனான முகுந்தனுக்கு கட்சியில் மாநில இளைஞரணி தலைவர் பதவி கொடுத்தால் கட்சி மெல்ல மெல்ல முகுந்தனின் பக்கம் சென்று விடும். இதனால் அன்புமணியின்  பதவிக்கு சிக்கல் ஏற்பட்டு விடலாம் என்பதாலும் முகுந்தனை கட்சியில் முன்னிலைபடுத்துவதை அன்புமணி  விரும்பவில்லை.

தற்போது அடங்கி இருக்கும் தந்தைக்கும், மகனுக்குமான  பிரச்சனை தேர்தல் நெருங்குகையில்  பூகம்பமாக வெடித்துக் கிளம்பும் அபாயம் உள்ளது. 

ரமணி

5.1.25

 

Saturday, June 22, 2024

திமுக எதிர் பாமக என மாறும் தமிழக அரசியல்

இந்திய நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து வெற்றி தோல்வி விமர்சனங்கள் ஓங்கி ஒலித்து வரும்  வேளையில் தமிழகத்தில் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.இதனால் தமிழக அரசியல் களம் பரபரப்பாகிவிட்டது.

விக்கிரவாண்டி தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகவேட்பாளர் புகழேந்தி உயிரிழந்ததை அடுத்து அத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், வரும் ஜூலை 10ஆம் திகதி விக்ரவாண்டி தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது.    ஜூலை 13ஆம் திகதி வாக்கு எண்ணப்பட்டு  முடிவுகள் வெளியாக உள்ளது.

விக்கிரவாண்டி இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட சூட்டோடு  சூடாக திராவிட முன்னேற்றக் கழகம் வேட்பாளரை அறிவித்து விட்டது. விகிரவாண்டி இடைத் தேர்தலைப் புறக்கணிக்கிறது அதிமுக‌. திமுக எதிர் பாமக என மாறும் தமிழக அரசியல்

இந்திய நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து வெற்றி தோல்வி விமர்சனங்கள் ஓங்கி ஒலித்து வரும்  வேளையில் தமிழகத்தில் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.இதனால் தமிழக அரசியல் களம் பரபரப்பாகிவிட்டது.

விக்கிரவாண்டி தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகவேட்பாளர் புகழேந்தி உயிரிழந்ததை அடுத்து அத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், வரும் ஜூலை 10ஆம் திகதி விக்ரவாண்டி தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது.    ஜூலை 13ஆம் திகதி வாக்கு எண்ணப்பட்டு  முடிவுகள் வெளியாக உள்ளது.

விக்கிரவாண்டி இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட சூட்டோடு  சூடாக திராவிட முன்னேற்றக் கழகம் வேட்பாளரை அறிவித்து விட்டது. விக்ரவாண்டி இடைத் தேர்தலில் திராவிட முனேற்றக் கழக வேட்பாளராக  அன்னியூர் சிவா,  நாம் தமிழர் கட்சி சார்பாக டாக்டர் அபிநயா, பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளராக     அன்புமணி  ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும், விஜயகாந்தின் கட்சியும் போட்டியிடவில்லை என அறிவித்துள்ளன. தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் திராவிட முன்னேற்றக் கழகம் நேர்மையாகத்  தேர்தலை நடத்தாது என அவை கூறியுள்ளன.  இந்தியாவில் சட்டசபை, நாடாளுமன்றத் தேர்தல்களை தலைமைத் தேர்தல் ஆணையம்தான் நடத்தும். இதில் மாநில அரசுக்கு எந்த்த தொடர்பும் இல்லை. இதைப் பற்றித் தெரிந்துகொண்டும் இரண்டு கட்சிகளும் தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. தேர்தல் ஆணையம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. தமிழக அரசுக்கும் இடைத்தேர்தலும் எதுவித தொடர்பும் இல்லை.

  விஜயகாந்த் இருந்தவரை எந்தத் தேர்தலையும் அவர் புறக்கணிப்பு செய்ததில்லை. தோல்வி உறுதி என்று தெரிந்தாலும் கூட அவர் துணிச்சலாக போட்டியிடுவார். ஆனால் அதற்கு முற்றிலும் நேர் மாறாக பிரேமலதா   முடிவெடுத்திருப்பது பலரையும் ஆச்சரியத்திற்குள்ளாக்கியுள்ளது.

தேர்தலைப் புறக்கணிக்கும் எடப்பாடியின் முடிவால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் இரண்டாம் கட்டத் தலைவர்களும், தொண்டர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர். பத்துத் தேர்தல்களில் தோல்வியடைந்த எடப்பாடியார் பதினோராவது தேர்தல் தோல்வியைத் தவிர்த்துள்ளதாக எதிரணியினர்  கேலி பண்ணுகின்றனர்.  இடைத் தேர்தலில் முதன் முதலாகப் போட்டியிட்டு தமிழகத்தில் வெற்றிக் கொடியை உயர்த்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இடைத் தேர்தலைக் கண்டு பயப்படுகிறது.

 ஜெயலலிதாவே     இடைத் தேர்தலில் போட்டியிடவில்லை என சப்பைக் கட்டு கட்டுகிறார்கள். தேர்தல்களில் வெற்றியையும் தோல்வியையு  மாறிமாறிச் சந்தித்தவர் ஜெயலலிதா. அனால், எடப்படியார் தோல்விமேல் தோல்வியைச் சந்தித்து நிலை குலைந்து போயுள்ளார். சகல தேர்தல்களிலும் வெற்றி  அல்லது இரண்டாம்  இடம்  பிடித்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்    கடந்த நாடாளுமன்றத்  தேர்தலில் மூன்றாம், நான்காம்  இடங்களுக்குத் தள்ளப்பட்டது. விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் மூன்றாம்  இடத்துத் தள்ளப்பட்டு விடுவோமோ என்ற அச்சமும் எடப்பாடிக்கு எழுந்துள்ளது.

  திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்  அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என  இருந்த தமிழக அரசியலை திராவிட முன்னேற்றக் கழகம் எதிர் பாரதீய ஜனதாக் கட்சி என  மாற்றுவதற்கு  அண்ணாமலை முயற்சி செய்தார்.தமிழகத்தில்  பாரதீய ஜனதவின் வாக்கு வங்கி உயர்ந்து விட்டது, தமிழகத்தில் தாமரை மலரும் என  அண்ணாமலை  முழக்கமிட்டார். நாடாளுமன்றத் தேர்தல் உண்மையை வெளிச்சம்  போட்டுக் காட்டியது. விகிக்ரவாண்டி இடைத் தேர்தலில் பாரதீய ஜனதா  போட்டியிடாமல்  ஒதுங்கியதால் பாட்டாளி  மக்கள் கட்சி களத்தில் இறங்கியது.

திராவிட முன்னேற்றக் கழ்கத்தைத் தோற்கடிப்பதற்காக தமிழக எதிர்க் கட்சிகள் அனைத்தும்  ஒன்று பட்டு பொது  வேட்பாளரை நிறுத்தி உள்ளதோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும், தேசிய முற்போக்கு திராவிடக் கழகமும் இடைத் தேர்தலைப் புறக்கணிக்கின்றன. அந்தக் கட்சிகளின் தொண்டர்கள்  தேர்தலைப் புறக்கணிக்கப் போவதில்லை. இடைத் தேர்தலில் வாகளிக்க வேண்டாம் என எடப்பாடியும், பிரேமலதாவும் சொல்லப் போவதில்லை.  அந்தக் கட்சிகளின் தொண்டர்கள் பாட்டாளி மக்கள் கட்சிக்கு  வாகளிக்க மாட்டார்கள். திராவிட முன்னேற்றக் கழ்கமே அந்தா வாக்குகளை அறுவடை செய்யும் வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.

 நாடாளுமன்றத் தேர்தலின் போது    கோவை தொகுதியில் அதுதான் நடந்தது. அங்கு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாக்குகள்  குறைந்தன. அதேசமயம், பாஜகவின்பாரதீய ஜனதாவின் வாக்குகள் அதிகரிக்கவில்லை.திராவிட முன்னேற்றக் கழகம் அதிக வாக்குகளைப் பெற்றது.    விக்கிரவாண்டியிலும் அதுவே நடக்க வாய்ப்புள்ளது.


விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் அதிமுக தேமுதிக வாக்குகள் பாமகவுக்குப் போய் பாமக வெற்றி பெற்றால் அல்லது கணிசமான தாக்கத்தை திமுகவுக்குக் கொடுத்தால் எதிர்காலத்தில் பகிரங்கமாகவே கூட்டணி அமைக்கும் முடிவுக்கு அதிமுக பாஜக போகலாம் என்று கூறப்படுகிறது. அதற்கான முன்னோட்டமாக விக்கிரவாண்டியை அவர்கள் எடுத்துக் கொண்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

அதிமுகவின் இந்த முடிவை  மற்றவர்களை விட திமுகதான் சீரியஸாக எடுத்துக் கொள்ளும். தனது உத்திகளை மேலும் வலுவாக்க திமுக திட்டமிடும்,வாக்குகள் சிதறிப் போய் விடாமல் ஒருங்கிணைத்து சரியான முறையில் கொண்டு சேர்க்க வேண்டிய நிர்ப்பந்தமும் இப்போது திமுகவுக்கு வந்துள்ளது. அதேசமயம், அதிமுகவின் தேர்தல் புறக்கணிப்பால் அதிருப்திக்குள்ளான அதிமுகவினரை வளைக்கவும் திமுக முயலும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல தேமுதிகவினரின் வாக்குகளும் இந்தத் தொகுதியில் கணிசமாக உள்ளது. அவர்களின் வாக்குகளுக்கும் திமுக குறி வைக்கும்.

தமிழக அரசின்மீது மக்கள் கடும் வெறுப்பில் இருக்கிறார்கள். நாடாளுமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் மண்ணைக்  கெளவும் என எதிர்க்கட்சிகள் முழங்கின. தமிழக மக்கள் லட்டுபோல 40 தொகுதிகளையும் திராவிட முன்னேற்றக் கூட்டணிக்குக் கொடுத்துவிட்டதை எதிர்க் கட்சிகள்  மறந்து விட்டன.

ரமணி