Tuesday, July 31, 2012

தடம் மாறிய தமிழ்ப்படங்கள் 39



ஏழைப் பெண்ணின் அழகில் மயங்கிய அரசர் அவளை திருமணம் செய்ய விரும்புகிறான். மன்னனை மணக்க ஏழைப் பெண் மறுக்கிறாள். அவளை பலாத்காரமாகத் திருமணம் செய்த மன்னன் உன்னுடன் தாம்பத்திய உறவு வைக்கமாட்டேன், சிறையில் வைத்து சித்திரைவதைசெய்வேன் என்கிறான். சிறையில் அடைபட்ட பெண் அதற்கும் கலங்காது உனக்கு தெரியாமல் உன்னுடன் தாம்பத்திய உறவு கொண்டு ஒரு மகனைப் பெற்றெடுத்து அவன் மூலம் உன்னை பழிவாங்குவேன் என்று சபதம் செய்கிறாள்.
1943 ஆம் ஆண்டு வெளியான "மங்கம்மா சபதம்' என்ற படத்தில் மன்னனை மயக்கும் கழைக்கூத்தாடி வேடத்தில் நடித்த வசுந்தரா தேவி மன்னனை மட்டுமல்லாது அன்றைய இளைஞர்களையும் தனது கவர்ச்சியில் மயக்கினாள்.
பெண்பித்துப் பிடித்த அரசனான ரஞ்சன். ஏழைப்பெண்ணான வசுந்தரா தேவியின் அழகில் மயங்கி அவளை தன் படுக்கைக்கு அழைக்கிறான். வசுந்தராதேவி ரஞ்சனின் இச்சைக்கு இணங்க மறுக்கிறார். கோபமடைந்த ரஞ்சன் கட்டாயத் திருமணம் செய்து வசுந்தரா தேவியைச் சிறையிலடைக்கிறார். "உன்னைத் திருமணம் செய்தேனே தவிர உன்னுடன் குடும்பம் நடத்த மாட்டேன்' என்கிறார் ரஞ்சன். உனக்குத் தெரியாது உன்னுடன் தாம்பத்திய உறவு கொண்டு ஆண்மகவை பெற்றெடுத்து உன்னைப் பழி வாங்குவேன்' என்கிறாள் வசுந்தராதேவி.
சிறையிலிருந்து ”ரங்க வழியாக தப்பிய வசுந்தராதேவி கலைக் கலைக்கூத்தாடியாக மன்னன் முன்தோன்றுகிறார். கழைக் கூத்தாடியாக வ”ந்தரா @தவியின் அழகில் மயங்கிய மன்னன் ரஞ்Œன் மன்மத வலையை வீ”கிறார். எல்லாப் பெண்களும் மயங்குவது போல் தானும் மயங்கியது போல் மன்னனின் இச்சைக்கு இணங்குகிறாள் வசுந்தரா தேவி ஏழைக்கூத்தாடி தன் வலையில் வீழ்ந்துவிட்டதாக மன்னன் நினைக்கிறார். உண்மையிலேயே ஏழைக்கூத்தாடியான வசுந்தராதேவியின் வலையில்தான் மன்னன் ரஞ்சன் விழுந்தார். ஏழை கூத்தாடி தான் தனது முதல் மனைவி மங்கம்மாவான வசுந்தராதேவி என்று தெரியாது அவருடன் பழகுகிறார் மன்னன்.
வசுந்தராதேவியின் வயிற்றில் உருவான மகன் வளர்ந்து தந்தையைப் பழிவாங்கி தாயின் சபதத்தை நிறைவேற்றுகிறார். உண்மை தெரிந்த ரஞ்சன் மனைவியையும் மகனையும் ஏற்றுக் கொள்கிறார்.
தந்தை  மகன் என இரு வேடங்களில் ரஞ்சன் நடித்தார். மங்கம்மாவாகவும் ஏழை கூத்தாடியாகவும் நடித்து ரசிகர்களின் மனதைக் கிறங்க வைத்தார் வசுந்தராதேவி. என்.எஸ். கிருஷ்ணன் மதுரம் ஜோடியாக நடித்த முதல் படம் மங்கம்மா சபதம்.
கழைக்கூத்தாடியாக நடித்த என்.எஸ்.கிருஷ்ணன் கயிற்றில் தொங்குவது, நடப்பது போன்ற பயிற்சிகளைப் பெற்ற பின்பே படப்பிடிப்பில் நடித்தார்.
ஒளிப்பதிவு கே.ராம்நாத், கலை ஏ.ஜே.சேகர், இசை எம்.டி.பார்த்தசாரதி, ரா@ஜஸ்வரராவ் பாடல்கள் கொத்தமங்கலம் சுப்பு, தயாரிப்பு ஜெமினி எஸ்.எஸ். வாசன். இயக்கம் ஆச்சார்யா.
 ரமணி
மித்திரன்29/08/12

Sunday, July 29, 2012

உற்சாகமான கருணாநிதி கவலைபடாத ஜெயலலிதா



இந்திய ஜனாதிபதித் தேர்தலில் பிரணாப் வெற்றி, சிறை நிரப்புப் போராட்டத்தால் தமிழக அரசு மிரண்டது. ஸ்பெக்ரம் ஊழல் வழக்கில் கனிமொழி, ஆர்.ராசா ஆகியோர் வெளியே வந்தது என்பவற்றினால் கருணாநிதி மகிழ்ச்சியாக உள்ளார். இந்திய ஜனாதிபதித் தேர்தலில் பிரணாப் முகர்ஜி எதிர்பார்த்ததை விட அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். காங்கிரஸ் கட்சிக்கும், திராவிட முன்னேற்றக்கழகத்துக்கும் இடையேயான இடைவெளி இந்திய ஜனாதிபதித் தேர்தலின் மூலம் வெகுவாகக் குறைந்துள்ளது. 

தமிழகத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற வேண்டுமானால் கருணாநிதியுடன் அல்லது ஜெயலலிதாவுடன் கூட்டு சேர வேண்டிய நிலையில் உள்ளது. காங்கிரஸ்  ஜெயலலிதா கூட்டணி என்பதைப் பற்றி நினைத்துப் பார்க்கவே முடியாது. கூட்டணிக் கட்சிக்கு நெருக்கடி கொடுக்காத நல்ல பிள்ளையான கருணாநிதியுடன் கூட்டுச் சேர்வதையே சோனியா காந்தி விரும்புகிறார். திராவிட முன்னேற்றக்கழகத்தின் மீதும் கருணாநிதி மீதும் விருப்பமில்லாதவர்களும் சோனியாவின் விருப்பத்தை மீற முடியாது அமைதியாக இருக்கின்றார்கள்.

ஸ்பெக்ரம் ஊழல் விவகாரத்தினால் இழந்து விட்ட அமைச்சுப் பதவியை மீண்டும் பெற்று விட வேண்டும் என்ற எண்ணம் திராவிட முன்னேற்றக்கழகத்திடம் உள்ளது. ஸ்பெக்ரம் ஊழல் பிரச்சினை பரபரப்பாக பேசப்பட்ட நேரம் திராவிட முன்னேற்றக்கழகத்தின் அமைச்சுப் பதவியையே ஆர்.ராசாவும், தயாநிதி மாறனும் ராஜினாமாச் செய்தனர். ஸ்பெக்ரம் ஊழலில் தயாநிதி மாறனும் சிக்குகிறார். கைது செய்யப்படப் போகிறார் என்ற செய்தி காற்றுடன் கலந்து விட்டது. அடுத்த அமைச்சரவை மாற்றத்தின் போது அமைச்சுப் பதவியை ஏற்பதற்கு தயாராக உள்ளது திராவிட முன்னேற்றக்கழகம் சோனியா, மன்மோகன்சிங்கும் ரி.ஆர்.பாலு மீது கொண்ட கோபம் தணிந்துள்ளது. ஆகையினால் ரி.ஆர்.பாலு அமைச்சராகலாம் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

தமிழக சட்ட சபைத் தேர்தலில் படுதோல்வியடைந்தாலும் சிறைநிரப்புப் போராட்டத்தின் மூலம் புத்துயிர் பெற்றுள்ளது திராவிட முன்னேற்றக் கழகம். வேறு கட்சிகளிலிருந்து வெளியேறிய 4200 பேர் அண்மையில் திராவிட முன்னேற்றக்கழகத்தில் இணைந்தனர். இந்த நிகழ்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்துக்குப் புதுத் தெம்பை அளித்துள்ளது. இந்த நிகழ்ச்சியைப் பிரமாண்டமாக நடத்தி ஏனைய கட்சிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது திராவிட முன்னேற்றம் கழகம்.

இந்திய ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் நாட்டில் பி.ஏ.சல்மா அதிக வாக்குகளைப் பெற்றார். பி.ஏ.சல்மாவுக்கு 145 வாக்குகளும்  முகர்ஜிக்கு 45 வாக்குகள் கிடைத்தன. திராவிட முன்னேற்றக்கழகம் காங்கிரஸ் கட்சி, புதிய தமிழகம், மனித நேயக்கட்சி, மார்க்ஸிசக்கட்சி ஆகியன முகர்ஜிக்கு வாக்களித்தன. பி.ஏ.சல்மாவுக்கு வாக்களித்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு 150 உறுப்பினர்கள் உள்ளனர். இரண்டு உறுப்பினர்களின் வாக்கு செல்லாதவையாகின.
துணை ஜனாதிபதி தேர்தல் ஓகஸ்ட் 7 ஆம் திகதி நடைபெற உள்ளது. துணை ஜனாதிபதியாக அன்சாரியையே காங்கிரஸ் கட்சி மீண்டும் வேட்பாளராக அறிவித்துள்ளது. பாரதீய ஜனதாக்கட்சி ஜஸ்வந்த் சிங்கை துணை ஜனாதிபதித் தேர்தலில் களமிறக்க உள்ளது. காங்கிரஸ் கட்சியில் கூட்டணி இல்லாத கட்சிகளிடம் ஆதரவு கோர பாரதீய ஜனதாக்கட்சி தீர்மானித்துள்ளது. இந்த ஜனாதிபதித் தேர்தலின் போது பாரதீய ஜனதாக்கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளம், சிவசேனா ஆகியவை முகர்ஜிக்கு வாக்களித்தன. ஆனால் துணை ஜனாதிபதி தேர்தலில் அவை ஜஸ்வந்த்சிங்கை ஆதரிக்க உள்ளன.
துணை ஜனாதிபதி தேர்தலில் நாடாளுமன்றத்தில் இரு சபைகளிலும் உள்ள உறுப்பினர்களே வாக்களிக்கத் தகுதி உள்ளவர்கள். சட்ட சபை உறுப்பினர்கள் வாக்களிப்பதில்லை. இந்திய நாடாளுமன்றத்தில் 543 உறுப்பினர்களும் மேல் சபையில் 245 உறுப்பினர்களும் உள்ளனர். காங்கிரஸ் கூட்டணியில் இல்லாத பகுஜன சமாஜகட்சி, சமாஜ்வாதி, ராஷ்டிதீய ஜனதாத்தளம் ஆகியன ஹமீத் அன்சாரிக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

இதன் காரணமாக சுமார் 450 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஹமீத் அன்சாரிக்கு வாக்களிப்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. பாரதீய ஜனதாக்கூட்டணியில் 215 நாடாளுமன்ற உறுப்பினர்களே உள்ளனர். அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் ஜஸ்வந்த் சிங்குக்கு ஆதரவு தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் விஜயகாந்த் தமிழக அரசுக்கு எதிராக அடக்கி வாசிப்பதனால் எதிர்க்கட்சி என்ற ஸ்தானத்தைப் பெறுவதற்கு திராவிட முன்னேற்றக்கழகம் முயற்சி செய்கிறது. தமிழக அரசு விடுத்த தவறுகளைத் தட்டிக் கேட்காது ஜெயலலிதாவை குறி வைத்து பேசுவதி@லயே விஜயகாந்த் காலம் கடத்துகிறார். விஜயகாந்தின் செல்வாக்குக் குறைந்து விட்டது என்பதை இடைத் தேர்தல்களின் மூலம் ஜெயலலிதா நிரூபித்துள்ளார்.
இன்னொரு அரசியல் கட்சியின் ஆதரவு இல்லாமல் விஜயகாந்த்தால் அரசியலில் நிலைத்து நிற்க முடியாது என்பதை தமிழக மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். ஜெயலலிதாவை வீழ்த்துவதற்கான சந்தர்ப்பத்தையே எதிர்பார்த்து காத்திருக்கிறார் விஜயகாந்த்.

 வர்மா
சூரன்.ஏ.ரவிவர்மா
வீரகேசரிவாரவெளியீடு29/07/12

Friday, July 27, 2012

லண்டன் ஒலிம்பிக் இன்று ஆரம்பம்


உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்றுவருகிறது. முதலாவது நவீன ஒலிம்பிக் போட்டி 1896ஆம் ஆண்டு கிரீஸ் தலைநகர் எதென்ஸில் நடந்தது.
முதல் உலகப்போர் காரணமாக 1916ஆம் ஆண்டும், 2ஆவது உலகப்போர் காரணமாக 1940 மற்றும் 1944ஆம் ஆண்டும் ஒலிம்பிக் போட்டி நடைபெறவில்லை.
கடைசியாக 2008ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி சீன தலைநகர் பீஜிங்கில் நடந்தது. இந்த ஆண்டுக்கான (2012) 30ஆவது ஒலிம்பிக் போட்டி லண்டன் நகரில் இன்று கோலாகலமாக தொடங்குகிறது. ஓகஸ்ட் 12ஆம் திகதி வரை இந்த ஒலிம்பிக் திருவிழா நடைபெறுகிறது.
இந்த ஒலிம்பிக் போட்டியில் 5 கண்டங்களிலுள்ள 204 நாடுகள் பங்கேற்கின்றன. மொத்தம் 10,490 வீர, வீராங்கனைகள் இந்தப் போட்டியில் கலந்து கொள்கிறார்கள். 26 விளையாட்டில் 39 பந்தயத்தில் 302 பிரிவுகளில் போட்டி நடக்கிறது.
உலகில் எந்தவொரு சர்வதேச நிகழ்வினதும் தொடக்க விழா என்பது அதனை நடாத்தும் நாட்டினது சிறப்பியல்புகளையும் ஆளுமைத்திறனையும் எடுத்துக் காட்டும் ஒரு கொண்டாட்டமாகும். அந்த வகையில் இன்று சர்வதேச ஒலிம்பிக் போட்டிகளை பொறுத்தவரையில் அதில் போட்டியிடும் நாடுகளின் அணிவகுப்பொன்றையும் கடாரத்தில் கொளுத்தப்பட்டு போட்டிகளின் ஆரம்பத்தை சமிஞ்ஞை செய்து காட்டும் ஒலிம்பிக் தீபத்தின் பிரவேசத்தையும் இந்த ஆரம்ப வைபவம் எடுத்தியம்புகின்றதெனலாம். இன்று வெள்ளிக்கிழமை 27ஆம் திகதி அன்று நடைபெறுகின்ற கோலாகலமான முறையில் லண்டன் ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்கம் வைபவத்திற்கென உலகின் கண்களெல்லாம் லண்டனையே மொய்த்த வண்ணம் இருக்கப்போகின்றன. இந்த ஆரம்ப வைபவமானது ஐக்கிய இராச்சியம் லண்டன் மாநகர் மற்றும் கலாசார கலை வனப்பு நெறியாளர் டொனி போய்ல்  மற்றும் அவரது குழுவினரின் கலைத்துவ வெளிப்பாடுகளையும் கண்டு களிப்பதற்கான அரிய வாய்ப்பை உலகத்திற்கு வாரி வழங்க போகின்றது. சர்வதேச ஒலிம்பிக்குழு சாசனத்தில் சுருக்கமாக குறிப்பிட்டுள்ளவாறு ஒவ்வொரு ஆரம்ப விழாவின்போதும் வெளிப்படுத்தப்பட வேண்டிய சில குறிப்பிட்ட மூலங்கள் (ஆதாரப் பொருட்கள்) இருக்கின்றன. அதன் பின்னர் தொடக்க விழாவில் தனது வனப்பு வெளிப்பாடு இடம்பெற்றதுடன் அது லண்டன் 2012 போட்டிகளுக்கு உலக மக்களை அன்புடன் வரவேற்கின்றது.
அதிசயத் தீவுகள் எனும் பெயரால் ஒலிம்பிக் ஆரம்ப வைபவக் காட்சி அமையவுள்ளதுடன் உலகளாவிய ஒளிபரப்பு லண்டன் நேரப்படி ஒன்பது மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. ஐரோப்பாவில் ஒற்றுமையை வெளிப்படுத்தும் இசையின்பத்தை சுருதி கூட்டி ஒலிக்கச் செய்யும் வைட்சப்பல் வார்ப்படச்சாலை (பட்டறை) யால் உற்பத்தி செய்யப்பட்ட அந்தப் பென்னாம் பெரிய மணியோசையுடன் ஆரம்ப வைபவம் களை கட்டத் தொடங்கவுள்ளது. அத்துடன் நிஜமான விவசாய முற்றத்து விலங்குகளைக் கொண்டுள்ள பசுமையானதும் மனதிற்கு மகிழ்வூட்டும்  ஆரம்பக் காட்சிக்கான போட்டிக் கதீமான அந்த விளையாட்டரங்கு பிரித்தானிய நாட்டுப்புறமாக மாற்றப்பட்டுள்ளது.
லண்டன் ஒலிம்பிக்கின் கலை வளர்ப்பு இயக்குநரான டொனி போய்லி கூறுகையில் எமது அதிசயத் தீவுகள் ஆரம்ப வைபவத்துடன் மக்கள் தலை வணக்கத்துடன் இயற்கையான திறமைமிக்க எதனையும் நூதனமாகக் கண்டு பிடிக்கும் ஆற்றல் மிக்க பிரித்தானிய மேதாவிகளின் செழிப்பு மிகு ஆக்க வேலைப்பாடுகளை கொண்டிருக்கின்றார் என்றார்.
இன்றைய ஒலிம்பிக் போட்டிகளில் இயங்கி வரும் ஆக்கத்திறன் மிக்க அணி பற்றி மேலும் தெரிந்து கொள்ளலாம்.
அரச தலைவரை வரவேற்றல்
சர்வதேச ஒலிம்பிக் குழுவின் தலைவரால் ஒலிம்பிக் விளையாட்டரங்க நுழைவாயிலில் பிரித்தானிய அரசுத் தலைவர் வரவேற்கப்படுகின்றார். லண்டன் 2012 ஒலிம்பிக் ஆரம்ப வைபவத்திற்கென மேன்மை தங்கிய இரண்டாம் எலிஸபெத் மகாராணியார் ஜாக்குலிஸ் ரொக்கேயால் வாழ்த்தப்படுவார். 
மெய்வல்லூநர்களின் 
அணி வகுப்பு 
ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் அணிகள் ஒவ்வொன்றாக ஊர்வலத்தில் கலந்து கொள்கின்றன. இந்த அணிகள் இங்கிலாந்தின் மொழியான ஆங்கில அகர வரிசைப்படி விளையாட்டரங்கினுள் நுழைகின்றன. இந்த அணிவகுப்பின் போது ஒலிம்பிக் முதற் போட்டியை நடத்தியதிலிருந்து கிரேக்க நாட்டு அணி முதலாவதாகவும் இந்த ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் பிரித்தானியாவில் போட்டி அணி இறுதியாகவும் ஒலிம்பிக் விளையாட்டரங்கினுள் நுழைகின்றன. 
உரைகள் / சொற்பொழிவுகள் 
விளையாட்டரங்கினுள் அனைத்து நாட்டு அணிகளும் (204) வந்தடைந்ததும் சர்வதேச ஒலிம்பிக் தினத்தை ஜாக்குவில் ரொக்கேயைத் தொடர்ந்து லண்டன் ஒலிம்பிக் போட்டிகளின் ஏற்பாட்டுக்குழுத் தலைவரான சொஸ்டியன் கோ பிரபு உரையொன்றை ஆற்றவுள்ளார். ஒலிம்பிக் கீதமும் கொடியும் 
போட்டிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன் விளையாட்டரங்கிற்குள் ஒலிம்பிக் கொடியினை கொண்டு வரப்பட்டு அந்தந்த நாடுகளின் தேசிய கீதம் இசைக்கப்படுகையில் அது ஏற்றப்படுகின்றது. பிரதான விளையாட்டரங்கில் வெளிப்படையாகத் தெரியும் ஓரிடத்தில் ஒவ்வொரு நாட்டினதும் தேசியக் கொடியானது போட்டியின் போதும் பறக்க விடப்பட வேண்டுமென ஒலிம்பிக் சாச‌னம் தெரிவிக்கின்றது. 
சத்திய பிரமாணங்கள் 
ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ளும் மெய்வல்லுநரொருவர் பிரசங்க மேடையில் நின்றவாறு சர்வதேச ஒலிம்பிக் குழுவின் கொடியின் மூலையொன்றைத் தனது இடது கையில் பிடித்தவாறும் வலது கையை உயர்த்தியவாறும் அவரவர் போட்டிகளின் விதிகளுக்குக் கட்டுப்பட்டுவ தாக ச‌த்தியப்பிரமாணம் எடுக்கின்றனர். 
ஒலிம்பிக் தீபமும் கடாரமும் 
கடந்த எழுபது நாட்களாக பிரித்தானியா முழுவதும் உலா வந்த ஒலிம்பிக் தீபமானது ஒலிம்பிக் விளையாட்டரங்க நுழைவாலை வந்தடைதலே அதன் இறுதி அங்கமாகும். அந்த திருப்பத்தை ஏந்துதலுடன் இறுதியாக ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமானதைக் குறிக்கும் வகையில் ஒலிம்பிக் ஸ்ரேடியத்தில் தீபம் ஏற்றப்படும்.
ஆக்கத்திறன்மிக்க அணி 
லண்டன் 2012 ஒலிம்பிக் போட்டிகளின் ஆரம்ப வைபவத்தினை கோலாகலமான முறையில் அரங்கேற்றவென உலகத்தில் இந்த அரிய போட்டிகளை நடத்தும் கலை வனப்பு மிக்க அணியை உலகத்தரம் வாய்ந்த பிரித்தானிய இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் முன்னெடுத்துச் செல்கின்றனர். 
பங்கேற்கும் அணிகளுக்கு அணி சேர்க்கும் வீர வீராங்கனைகள் லண்டன் 2012 ஒலிம்பிக் போட்டிகளில் மொத்தம் 15000 வீர வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளதுடன் இவற்றை நான்கு பில்லியன் பார்வையா ளர்கள் பார்த்து இரசிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது

மெட்ரோநியூஸ் 27/07/12

Thursday, July 26, 2012

தடம் மாறிய தமிழ்ப்படங்கள் 38


காட்டுக்குள் வாழும் பழங்குடி மக்களின் நல் வாழ்வுக்காகப் போராடும் ஒருவனை பயங்கரவாதி என முத்திரையிட்டு அவனை அழிப்பதற்காக சிறப்பு அதிரடிப் படையைக் காட்டுக்குள் அனுப்பியது அரசாங்கம். அதிரடிப் படைத் தலைவனின் மனைவியைக் கடத்திச் செல்கிறான் பழங்குடி மக்களின் வாழ்வுக்காகப் போராடுபவன். அவள் அழகில் மயங்கிய அவன் ஒருதலைப்பட்ச‌மாகக் காதலிக்கின்றான். 14 நாட்களின் பின் அதிரடிப்படைத் தலைவனின் மனைவி விடுதலை செய்யப்படுகிறார். தன் மனைவி மீது சந்தேகப்பட்டு கேட்கக்கூடாத கேள்விகளைக் கேட்கிறான் அதிரடிப்படைத் தலைவன். எதிரியின் கட்டுப்பாட்டில் பிணைக் கைதியாக இருந்த மனைவியைச் சந்தேகப்படுகிறான் கணவன். இப்படிப்பட்ட சிக்கலான கதையுடன்2010 ஆம் ஆண்டு வெளிவந்த படம் ராவணன்.
காட்டுக்குள் வாழும் பழங்குடி மக்களுக்கு கடவுள்போல் உதவி செய்கிறார் விக்ரம். அந்த மக்களின் பிரச்சினைகள் தேவைகள் அனைத்தையும் தீர்த்து வைக்கிறார். தவறு செய்பவர்களை தயவு தாட்சண்யமின்றி போட்டுத் தள்ளுகிறார். வீரா என்ற விக்ரமின் பெயரைக் கேட்டாலே தப்புச் செய்யும் பழங்குடி மக்கள் வெலவெலத்துப் போவார்கள். விக்ரம் சட்டத்தைத் தன் கையில் எடுத்ததால் அரசாங்கம் அவனைப் பயங்கரவாதியாகப் பார்த்தது. விக்ரமைக் கொல்வதற்கு என்கௌண்டர் ஸ்பெஷலிஸ்ட் பிருத்விராஜை அனுப்புகிறது.
பலம் பொருந்திய அதிரடிப் படையின் உதவியுடன் விக்ரமைத் தேடி காட்டினுள் நுழைகிறார் பிருத்விராஜ். அந்தக் காட்டைப் பற்றி நன்கு தெரிந்த காட்டு இலாகா அதிகாரியான கார்த்திக் பிருத்விராஜுக்கும் அவரது படைக்கும் உதவி செய்கிறார். பிருத்விராஜின் மனைவி அழகுச்சிலை ஐஸ்வர்யாராயை விக்ரம் கடத்திச் செல்கிறார். பிருத்விராஜைப் பழிவாங்குவதற்கு ஐஸ்வர்யா ராயைக் கொலை செய்ய முடிவு செய்கிறார் விக்ரம். ஐஸ்வர்யா ராயின் துணிச்சலால் கொலை செய்யும் முடிவை மாற்றுகிறார் விக்ரம்.

மலை உச்சியில் துப்பாக்கியைக் காட்டி ஐஸ்வர்யா ராயை மிரட்டுகிறார் விக்ரம். என் மரணம் உன் கையில் இல்லை எனச் சவால் விட்ட ஐஸ்வர்யா ராய் மலை உச்சியில் இருந்து குதிக்கிறார். அதிர்ச்சியடைந்த விக்ரம் மலை உச்சியில் இருந்து கொடிகளின் உதவியுடன் கீழே இறங்குகிறார். பேரிரைச்சலுடன் விழும் அருவி சலசலத்து ஓடும் நீரோடையில் ஐஸ்வர்யா ராயைத் தேடுகிறார் . மேலே நிமிர்ந்து பார்க்கிறார் விக்ரம். மரக்கிளையில் சிக்கி இருக்கும் ஐஸ்வர்யா ராயை காண்கிறார். ஐஸ்வர்யா ராயின் பாரம் தாங்காத மரக்கிளை முறிந்து நீரோடையில் விழுகிறது. கண் விழித்துப் பார்க்கும் ஐஸ்வர்யா ராய் எதிரே இருக்கும் விக்ரமைக் கண்டதும் கலக்கமடைகிறார். நடக்க முடியாமல் தடுமாறும் ஐஸ்வர்யா ராய்க்கு உதவி செய்ய கையை நீட்டுகிறார் விக்ரம். விக்ரமைத் தொட விரும்பாத ஐஸ்வர்யா ராய் தடுமாறி நடக்கிறார். தடியின் ஒரு முனையில் விக்ரம் பிடித்து முன்னே நடக்க, மறுமுனையில் பிடித்துப் பின் தொடர்ந்தார் ஐஸ்வர்யா ராய்.
(
ஐஸ்வர்யா ராயைக் கடத்தி வந்து கண்களைக் கட்டி, கைகளைக் கட்டி துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய போதும் ஐஸ்வர்யா ராயின் கண்களில் பய உணர்ச்சி வரவில்லை என்பதால் அவரை கொல்ல முடியாமல் தவிக்கிறார் விக்ரம். விக்ரமின் அண்ணா பிரபு, தம்பி சித்தார்த் ஆகியோருடன் காட்டுக்குள் நடக்கும் ஒரு குட்டித் தர்பாரை கண்டு ஆச்சரியப்படுகிறார் ஐஸ்வர்யா ராய். பயங்கரவாதி என அரசாங்கம் முத்திரை குத்திய விக்ரமின் கட்டளைக்கு அடிபணிந்து நடக்கும் பழங்குடி மக்களைக் கண்டு வியப்படைகிறார் ஐஸ்வர்யா ராய்.
விக்ரமிடமிருந்து ஐஸ்வர்யா ராய் தப்புவதற்கு மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிவடைகின்றன. மனைவியை மீட்பதற்காக விக்ரம் இருக்கும் இடத்தைத் தேடித் திரிகிறார் பிருத்விராஜ். விக்ரமின் முன்னால் ஒரு இளைஞனைக் கொண்டு வந்து நிறுத்துகின்றனர். அவனைக் கண்டதும் விக்ரமின் கண்களில் இருந்து கோபக் கனல் வீசியது. அந்த இளைஞனை அணு அணுவாகச் சித்திரவதை செய்கிறார் விக்ரம். அதனைப் பார்க்கச் சகிக்காது கண்களை மூடுகிறார் ஐஸ்வர்யா ராய். தன் அன்புத் தங்கையின் கணவனான அந்த இளைஞனின் ஒரு கையை வெட்டி மரத்தில் தொங்க விடுகிறார் விக்ரம். மரத்தில் தொங்கியவனை பிருத்விராஜ் குழுவினர் மீட்கின்றனர். இது எமக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை என கார்த்திக் கூறுகிறார்.

பிருத்விராஜின் தலைமையிலான அதிரடிப் படை முகாமினுள் நுழைந்த விக்ரம் பிரபு குழுவினர் அங்கிருந்த ஆயுதங்களை அபகரித்ததுடன் பொலிஸ் அதிகாரி ஒருவரையும் கடத்தி வருகின்றனர். அந்தப் பொலிஸ் அதிகாரிக்கு மொட்டை அடித்து தலை தெரியும் படி நிலத்தினுள் புதைத்து வைக்கிறார் விக்ரம். சித்திரவதையினால் மயங்கி உள்ள அந்த பொலிஸ் அதிகாரியைக் காப்பாற்ற முயற்சிக்கிறார் ஐஸ்வர்யா ராய். மயங்கிக் கிடக்கும் பொலிஸ் அதிகாரியை உதைத்தபடி தன் தங்கை எங்கே என்று கேட்கிறார் விக்ரம். அந்தப் பொலிஸ் அதிகாரி மிகவும் நல்லவர். தாயின் மீது மதிப்பும் பயமும் உள்ளவர் என்று கூறுகிறார் ஐஸ்வர்யா ராய்.
அந்த பொலிஸ் அதிகாரியின் மீதும் பொலிஸ்காரர் மீதும் விக்ரம் கொண்ட வெறித்தனமான பகைக்கான கதையை ஐஸ்வர்யா ராய் அறிகிறார். விக்ரமின் ஒரேயொரு அன்புத் தங்கை மேட்டுக்குடி வர்க்கத்தைச் சேர்ந்த ஒருவனைக் காதலித்தாள். அந்தத் திருமண வைபவம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது பிருத்விராஜின் தலைமையிலான பொலிஸ் படை புகுந்து விக்ரமைக் கைது செய்ய முயற்சித்தது. பொலிஸ் அதிகாரிகள் விக்ரமை நெருங்க விடாது பழங்குடி மக்கள் தடுத்தனர். பிருத்விராஜின் துப்பாக்கிக் குண்டு விக்ரமின் கழுத்தைப் பதம் பார்த்தது. பழங்குடி மக்கள் பொலிஸாரின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு விக்ரமைக் காப்பாற்றினார்கள். பொலிஸாரைக் கண்ட மாப்பிள்ளை தலைமறைவாகி விட்டார்.

விக்ரமைப் பிடிக்க முடியாது ஏமாற்றமடைந்த பொலிஸார் விக்ரமின் தங்கை பிரியாமணியை பொலிஸ் நிலையத்துக்குக் கூட்டிச் செல்கின்றனர். இன்று உன் திருமணம் நாள். மாப்பிள்ளை ஓடிவிட்டான் முதல் இரவுக்கு யார் வேண்டும் என்று பிரியாமணியை கேட்டு துன்புறுத்துகின்றனர் பொலிஸார். அன்று இரவு முழுவதும் பிரியாமணியைச் சீரழித்து விட்டுச் செல்ல அனுமதித்தனர். எல்லா உண்மையையும் விக்ரமுக்குச் சொல்லி பிரியாமணி தற்கொலைசெய்கிறார். பிரியாமணியின் வாழ்க்கை சீரழிந்ததற்கு தன் கணவனும் காரணம் என்பதை அறிந்த ஐஸ்வர்யாராய் மனம் வெதும்புகிறார். ஐஸ்வர்யா ராயின் விருப்பத்துக்காக பொலிஸ் அதிகாரி விடுதலை செய்தார் விக்ரம்.

ஐஸ்வர்யாவைத் தேடி வந்த கார்த்திக் பிரபுவிடம் பிடிபடுகிறர். சமரசம் பேசலாம் என கார்த்தி கூறுகிறார். விக்ரமின் கடைத்தம்பி சித்தார்த்தும் சமாதானமாக செல்வோம் என்று கூறுகிறார். சமாதானம் பேசச் செல்லும் சித்தார்த்தை சுட்டுக் கொல்கிறார் பிருத்விராஜ். வெருண்டெழுந்த விக்ரம். பிரவு ஆகியோர் அதிரடிப் படை முகாமைத் தாக்குகின்றனர். பாலத்தின் இரு பக்கங்களிலும் தீப்பற்றி எரிகையில் நடுவிலே விக்ரமும் பிருத்விராஜும் மோதுகின்றனர். மரத்தி@ல கட்டப்பட்டிருக்கும் ஐஸ்வர்யா இந்த மோதலைப் பார்த்துப் பதை பதைக்கிறார். தீப்பற்றி பாலம் உடைந்து விழுகிறது. சிறிது நேரத்தில் விக்ரம் வருகிறார். தன் கணவன் எங்கே எனக் கேட்கிறார். ஐஸ்வர்யாவிடம் உடும்பு போல் தவழ்ந்து மேலே வருகிறான் எனக் கூறிவிட்டுச் செல்கிறார் விக்ரம்.

மேலே வந்த பிருத்திவ்விராஜ், ஐஸ்வர்யாவை கண்டு சந்தோஷப்படுகிறார். இந்தப் போராட்டம் வேண்டாம் வீட்டுக்குப் போவோம் என்று கூறுகிறார். ஐஸ்வர்யா ரயிலில் இருவரும் செல்லும் போது 14 நாட்கள் அவனுடன்இருந்தாய். அவன் உன்னைத் தொட்டானா? என்று கேட்கிறார் பிருத்விராஜ். மனைவியிடம் கணவன் கேட்கக்கூடாத கேள்விகளைத் தன் கணவன் கேட்டதால் துடிதுடிக்கிறார் ஐஸ்வர்யாராய். இல்லை என்கிறார் ஐஸ்வர்யாராய் பொய் சொல்வதாகக் கூறுகிறார். பிருத்திவிராஜ் ரயிலின் அபாயச் சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தி விட்டு ரயிலியிருந்து இறங்கி விக்ரமைத் தேடிச் செல்கிறார் ஐஸ்வர்யராய்.


விக்ரமைச் சந்தித்து ஐஸ்வர்யாராய் தன் கணவனிடம் என்ன கூறினாய் எனக் @கட்கிறாள். பாலத்தில் சண்டையிடும் போது எல்லாவற்றையும் கூறினார் என் கைகறைபடிந்ததை உன்மனைவிக்காக என்மனசு மாற முன் அவளைக் கூட்டிச் செல் என்றுசொன்ன‌தாகச் சொல்கிறார் விக்ரம். இவர்கள் இருவரும் கதைத்துக் கொண்டிருக்கையில் அதிடிப்படையுடன் அங்கு வருகிறார். பிருத்திவிராஜின் துப்பாக்கியைக் குறி பார்க்க இடையிலே புகுந்த ஐஸ்வர்யாராய் சுட வேண்டாம் என்று கூறுகிறார். ஐஸ்வர்யாராயைத் தொடாமல் இருந்த விக்ரம் பெண்ணின் பின்னால் நின்று உயிர்ப் பிச்சை கேட்க விரும்பாது அவரது தலையில் கையை வைத்து அமுக்குகிறார். அந்த இடைவெளியில் பிருத்திவிராஜின் தோட்டாக்கள் விக்ரமின் உடலில் பாய்ந்தன. அதிரடிப் படையினரின் துப்பாக்கிகளும் விக்ரமின் உடலைச் சல்லடையாக்கின. விக்ரம் ஐஸ்வர்யாராய் மீது ஒருதலைக் காதல் கொள்கிறார். அதை பெரிதாக்காது அடக்கி வைத்தார் மணிரத்தினம்.


விக்ரம், பிரபு, ஐஸ்வர்யா கார்த்திக் பிருத்திவிராஜ் சித்தார்த் பிரியாமணி ஆகியோர் பாத்திரத்தை உணர்ந்து நடித்தனர். காடுமலை, அருவி, பாலம், நீரோடை என்பன படத்தின் சகல காட்சிகளையும் மனதில் நிறுத்தின. ஒளிப்பதிவு சந்தோஷ்சிவன், மணிகண்டன் சந்தோஷ்சிவனின் முத்திரை பளிச்செனத் தெரிந்தது. பாடல்கள் வைரமுத்து, இசை ஏ.ஆர்.ரஹ்மான் ராவணன் படத்துக்கு பாடல்களும் இசையும் பெரும்பாலமாக உள்ளன. வசனம் சுஹாசினி பெண்களை முதன்மைப்படுத்தும் வசனங்களை ஆங்காங்கே தூவியுள்ளார். திரைக்கதை இயக்கம் மணிரத்னம்.

வீரா வீராவீரா வீரா, உயிரே போகுது உயிரே போகுது, காட்டுச்சிறுக்கிக் காட்டுக் சிறுக்கியே, கள்வனே கள்வனே ஆகிய பாடல்கள் மனதைக் கவர்ந்தன. காட்டுச் சிறுக்கிப் பாடல் படத்தில் இடம்பெறவில்லை. கள்வனே கள்வனே என்ற பாடலுக்கு ஐஸ்வர்யாவின் நடனம் சிறப்பாக இருந்தது. தொலைக்காட்சிகள் இப்பாடலை அடிக்கடி ஒளிபரப்பாது வஞ்சகம் செய்து விட்டன.

விக்ரமின் இருப்பிடத்தைக் கண்டுபிடிக்க தன் மனைவி மீது சந்தேகப்பட்டதாக பிருத்திவிராஜ் பொய் கூறியதாகக் கதையை முடித்து தப்பிவிட்டார் மணிரத்தினம் பெரும் எதிர்பார்ப்புடன் தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியான இப்படம் தோல்வியடைந்தது. ஆனால் ஹிந்தியில் விக்ரமுக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது. ராமாயணக் கதையை@ய ராவணனாக மணிரத்தினம் உருவாக்குகிறார் என்ற உண்மை தெரிந்ததால் படத்துடன் ஒன்றிப் போக முடியவில்லை. அடுத்து இது தான் நடக்கும் என்று தெரிந்து விடுகிறது.

அக்கினி நட்சத்திரத்தில் எதிரும் புதிருமாக நடித்த பிரபுவும், கார்த்திக்கும் இப்படத்திலும் எதிரும் புதிருமாக நடித்தனர். 
ரமணி
மித்திரன்01/07/12




Sunday, July 22, 2012

கருணாநிதியின் கனவைகலைத்தது இந்திய அரசு


உலகத் தமிழரின் தலைவர் என்ற அடையாளத்தை இழந்துவிட்ட கருணாநிதி அதனை மீண்டும் பெறுவதற்காக கடுமையாக முயற்சி செய்கிறார். கருணாநிதியின் எதிர்பார்ப்புகளுக்கு அவ்வப்போது முட்டுக்கட்டை போடுகிறது இந்திய மத்திய அரசு. இலங்கைத் தமிழ் மக்களுக்கு குரல் கொடுப்பதற்காக 1985 ஆம் ஆண்டு தமிழ் ஈழ ஆதரவாளர் கூட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்டது. இதனைச் சுருக்கமாக ரெஸோ என்று அழைத் தார்கள்.
இலங்கைப் பிரச்சினை உச்சக்கட்டமடைந்த வேளையில் சென்னையில் தங்கி இருந்த அன்ரன் பாலசிங்கம், சந்திரஹாசன், சந்தியேந்திரா ஆகியோரை நாடு கடத்த ராஜீவ் தலைமையிலான மத்திய அரசு உத்தரவிட்டது. அந்த உத்தரவுக்கு எதிராகக் களத்தில் இறங்கியது ரெஸோ 1985 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 25 ஆம் திகதி கண்டனப் பேரணிக்கும் ரயில் நிறுத்தப் போராட்டத்துக்கும் அழைப்பு விடுத்தது. ரெஸோ இலட்சக்கணக்கான தொண்டர்கள் வீதியில் இறங்கியதால் நாடு கடத்தல் உத்தரவை வாபஸ் பெற்றது மத்திய அரசு.ரெஸோ நடத்திய இந்தப் போராட்டம் இந்திய அரசியலின் கவனத்தை ஈர்த்தது.

இலங்கைத் தமிழர்கள் அல்லல் படும் போதெல்லாம் குரல் கொடுத்து உங்கள் அவலங்களை போக்க நாங்கள் இருக்கிறோம் என்று ஆறுதல் கூறியது டெஸோ. இந்திய மத்திய அரசும், தமிழக அரசும் மாறியபோதும் இலங்கைப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கவில்லை. ஆட்சி அதிகாரம் கைக்கு வந்ததும் டெஸோவைக் கைவிட்டார் கருணாநிதி.
26 வருடங்களுக்கு பின்னர் ரெஸோவுக்கு மீண்டும் உயிர் கொடுத்துள்ளார் கருணாநிதி. ரெஸோவில் அங்கம் வகித்த திருமாவளவனைக் தவிர்த்துவிட்டு ரெஸோ ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். அதற்கு எதிர்ப்புக் கிளம்பியபோது திருமாவளவனை அழைத்தார். கருணாநிதியின் நடவடிக்கைகளை உன்னிப்பாகக் கவனித்து வரும் மத்திய அரசு ரெஸோ மாநாட்டைத் தடுப்பதற்கு மறைமுகமாக முயற்சி செய்தது.
விடுதலைப் புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகள் மீதான தடை இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்படுகிறது. விடுதலைப் புலிகளின் தனித் தமிழ் ஈழம் என்ற கொள்கைக்கு ஆதரவளிப்பவர்களின் மீது இந்திய ஒருமைப்பாட்டையும் சட்டத்தையும் மீறினார்கள் என்ற குற்றச்சாட்டின்பேரில் சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என்பதை மத்திய அரசு கருணாநிதிக்கு உணர்த்தியுள்ளது. இதன் காரணமாக ரெஸோ மாநாட்டில் தனித் தமிழ் ஈழம் என்ற தீர்மானம் நிறைவேற்றப்படாது என்று அறிவித்துள்ளார் கருணாநிதி.

தமிழக ஆட்சி மாறிய பின்னர் சிதம்பரமும், கருணாநிதியும் சந்திக்கவில்லை. டெஸோ மாநாடு பற்றி பெரும் எடுப்பில் கருணாநிதி அறிவித்தல் விடுத்தபோது அவசரமாக டில்லியிலிருந்து தமிழகத்துக்கு விரைந்த அமைச்சர் சிதம்பரம், கருணாநிதியைச் சந்தித்த கையோடு டில்லிக்குச் சென்றார். மத்திய அரசின் நிலைப்பாட்டைப் புரிந்து கொண்ட கருணாநிதி தமிழ் ஈழக் கோஷத்தைக் கைவிட்டுவிட்டார்.
ஒகஸ்ட் 12 ஆம் திகதி சென்னையில் நடைபெறும் ரெஸோ மாநாட்டுக்கு உலகெங்கிலும் உள்ள தமிழ் ஆர்வலர்களை அழைக்க கருணாநிதி திட்டமிட்டுள்ளார். இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவான ஒரு மாநாட்டைச் சென்னையில் நடத்தி உலகின் கவனத்தைத் தன்பால் திருப்ப முயற்சி செய்கிறார் கருணாநிதி. மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டிய சந்தர்ப்பங்களில் அமைதியாக இருந்த கருணாநிதிரெஸோவின் மூலம் பிராயச்சித்தம் தேட முயற்சிக்கின்றார். கருணாநிதியின் அழைப்பை ஏற்றுரெஸோ மாநாட்டுக்குச் செல்லும் தலைவர்களுக்கு இந்திய அரசு அனுமதி வழங்குமா? கருணாநிதியை நம்பி ரெஸோ மாநாட்டுக்குச் செல்லும் தலைவர்கள் யார் என்ற விபரங்களை அறிய தமிழ் ஆர்வலர்கள் ஆவலாக உள்ளனர்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைக் கட்டுக்கோப்புக்குள் வைத்திருப்பதற்கான அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளார் ஜெயலலிதா. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்மட்டத் தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையனின் அமைச்சுப் பதவியைப் பிடுங்கிதோப்பூர் வெங்கடாச‌த்திடம் கொடுத்துள்ளார் ஜெயலலிதா. அமைச்சுப் பதவிகளில் சென்று ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் செங்கோட்டையன். அவரிடமிருந்த தமிழக வருவாய்த்துறை அமைச்சு பதவியை  அதே மாவட்டத்தைச் சேர்ந்த ராமலிங்கத்திடம் கையளித்துள்ளார் ஜெயலலிதா. இதேவேளை, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைமை நிலையச் செயலர் பதவியிலிருந்தும் செங்கோட்டையன் நீக்கப்பட்டுள்ளார்.
1977 ஆம் ஆண்டு சத்தியமங்கலம் தொகுதியிலிருந்து முதன் முதலாக தமிழக சட்ட சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட செங்கோட்டையன் ஆறுமுறை சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றார். செங்கோட்டையனின் தனிப்பட்ட வாழ்க்கை அவரது அமைச்சுப்பதவி பறிக்கப்பட்டதற்கான காரணம் என்று கூறப்படுகிறது. செங்கோட்டையனின் மனைவியும் மகனும் முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்து தமது மனக் குமுறலை வெளிப்படுத்தியதாலே அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரியவருகிறது.

கட்சிக்கு களங்கம் ஏற்படுத்துபவர்களை மன்னிக்கமாட்டேன் என்று அறிவித்த ஜெயலலிதா செங்கோட்டையனைத் தூக்கி எறிந்த தனால் ஏனையவர்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும் இரண்டு அமைச்சர்கள் மீது ஜெயலலிதாவின்கோபப் பார்வை விழுந்துள்ளது. சென்னை மாநகராட்சியில் நடைபெறும் அத்துமீறல்களைப் பற்றி ஜெயலலிதா பலமுறை எச்சரித்துள்ளார். தப்பு செய்பவர்கள் யாராக இருந்தாலும் தயவுதாட்சண்யமின்றி ஜெயலலிதா நடவடிக்கை எடுப்பார் என்பதனால் மாநகரசபையில் அத்துமீறல்செய்தவர்கள் ஆடிப் போயுள்ளனர்

வர்மா
சூரன்.ஏ.ரவிவர்மா
வீரகேசரிவாரவெளியீடு 22/07/12

Tuesday, July 17, 2012

ச‌ஞ்சிகையில் அழகு காட்டும் நீச்ச‌ல் வீராங்கனை



லண்டனில்  தொடங்கவுள்ள  ஒலிம்பிக் போட்டியில் மாற்றுத் திறன்   கொண்டோருக்கான படகோட்டப் போட்டியில் பங்குபற்றவுள்ள வீராங்கனை ஒக்சனா மாஸ்டேர்ஸ் உகுகN தொலைக்காட்சி நிறுவனத்தின்  2012  ESPN  எனும் சஞ்சிகைக்கு முழு நிர்வாணக் கோலத்தில் அழகு காட்டியுள்ளார்.
பிரபலமான விளையாட்டு வீர வீராங்கனைகள் தங்கள் உடல் வசீகரங்களைப் பற்றி பேசும் சந்தர்ப்பத்தை வருடாந்தம் வழங்கி வரும் Body  சஞ்சிகையில் உக்ரைன் நாட்டைப் பிறப்பிடமாகக் கொண்ட இந்த 23 வயதான வீராங்கனை தனது சிறுவயதில் தனது கால்கள் இரண்டையும் துண்டிக்கப்பட்ட நிலையில் வளர்ந்தவரென்பது குறிப்பிடத்தக்கது. பளபளப்பான இந்தச் சஞ்சிகையின் பக்கங்களில் அவர் இறங்கு துறை ஒன்றில் தனது பட கோட்டும் துடுப்புகள் அருகே நிர்வாணமாக தோன்றுகின்றார். அத்துடன் உலகத்தரம் வாய்ந்த மெய்வல்லுநர்களான நியூயோர்க் கூடைப்பந்தாட்ட வீரர் டைசன் சாண்ட்லர் மற்றும் ஸ்லோவேக்கியா டெனிஸ் நட்சத்திரம் டானியெலா ஹன்டுசோவா ஆகியோரின் புகைப்படங்களும் இந்தச் சஞ்சிகையில் அலங்கரிக்கின்றன.

அநாதை இல்லமொன்றில் வளர்ந்த ஒக்சனாவுக்கு அங்கு உணவென்பது அருமையாகவே கிடைக்குமொன்றாக இருந்த படியால் தனது சிறுபராயத்தில் அவர் பெரும்பாலான நாட்களை உணவின்றியே கழித்தார். உணவின்றி தனது வாழ்நாளைக் கழிக்க முடியுமென கூறும் அவர் உக்ரைனில் உள்ள மிகவும் ஏழ்மை நிலையிலிருந்த அந்த அநாதை இல்லத்தில் உணவின்றி வளர்ந்த தனது துன்ப அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளும் அவர் உணவைப் பற்றி நான் கிஞ்சித்தும் நினைப்பதேயில்லை என்கிறார். இதனாலேயே தனக்கு கடினமான விடயங்களில் உணவை உட்கொள்வதும் ஒன்றென அவர் தெரிவித்துள்ளார். தனது ஏழாவது வயதில் தத்தெடுக்கப்பட்ட அவர் அதன் பின்னர் கெண்டுசியில் உள்ள லூயில்வில்லேக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் தனது கிராமத்திற்கு அருகேயுள்ள அணுவாயுத உலையொன்றின் கதிர் வீச்சால் தனது இரண்டு கால்களையும் இழக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குத் தான் தள்ளப்பட்டிருந்ததாகவும் ஓஃ தொலைக்காட்சிக்கு அளித்துள்ள நேர்க்காணலின் போது கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், நான் கால்களுடன் பிறந்த போதிலும்  அவை அவலட்சணமான நிலையிலேயே இருந்தன. எமது கிராமத்தில் அடிக்கடி நிகழ்ந்த அணு உலைக் கதிர் வீச்சுக் கசிவினால் எனது கால்கள் இரண்டும் சுட்டுப் பொசுக்கப்பட்ட நிலையில் அவை துண்டிக்கப்பட்டன. தான் எட்டாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த போது படகு வலிக்கும் பயிற்சியில் ஈடுபட அவரது தாயாரால் ஊக்குவிக்கப்பட்ட ஒக்சானா காலப்போக்கில் அதில் தீவிர பற்றுக் கொண்டவராக விளங்கி இன்று ஒலிம்பிக் போட்டியில் பங்குபற்றுமளவுக்கு தன்னை ஆளாக்கிக் கொண்டுள்ளார்.
எதிர்வரும் ஓகஸ்ட் 29 தொடக்கம் செப்டெம்பர் 9 வரையிலான மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டிகளுக்கான பயிற்சிகள் முழு நேர
வேலை போன்றது. வாரத்தின் எழு நாட்களில் செல்வி மாஸ்டர் ஆறு நாட்களைக் தண்ணீரிலேயே கழித்து வருவதாகக் குறிப்பிட்டார். கடந்த 2010 ஆம் ஆண்டில் அவரது சகாவான ரொப் ஜோன்ஸ் ஆப்கானிஸ்தானில் நிகழ்ந்த விபத்தொன்றில் தனது கால்களை இழந்தார். மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டிக்கான சேர்பியாவில் நடைபெற்ற கலப்பு இரட்டையர்களுக்கான உலகக் கிண்ணப் போட்டியில் பிரேசிலை இவர்களிருவரும் தோற்கடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

2012 கோடை கால படகோட்ட நிகழ்வுகள் நடைபெறவுள்ள இங்கிலாந்தின் ஒஹியோ தொடக்கம் டோர்ணி வரையான ஏரியில் தனது படகை எடுத்துக் கொள்ள காத்திருக்கவென தன்னால் முடியவில்லை எனவும் தான் ஆறு வருட காலமாகப் பெற்ற பயிற்சிகளில் மிகப் பெரிய பயிற்சி இந்தக் கோடை காலப் போட்டிகளே  எனவும் குறிப்பிட்ட ஒக்சானா நான் பரபரப்படைந்துள்ள நிலையில் பாலாடைக்கட்டி போன்ற பெரியதொரு குழந்தை போன்று புன்னகை செய்கிறேன் எனவும் கூறினார்.

மெட்ரோநியூஸ்16/07/12

ஜெசி ஒவென்ஸ் முதல்உசைன் போல்ட் வரை!


ஒலிம்பிக் போட்டிகள் ஒவ்வொன்றிலும்  ஆண்களுக்கான 100 மீற்றர் குறுந்தூர இறுதிப் போட்டியெனில் அங்கு ஒரே ஆரவாரமும் பரபரப்பும்தான். பத்து விநாடிகள் அல்லது அதற்குச் சற்றே குறைவான காலத்திற்குள் தூசு தட்டப்பட்டு நிறைவேற்றப்படும் ஒரு நிகழ்வே இது. ஆயினும் இந்த அரிய நிகழ்வானது  மாபெரும் வரலாறொன்றையும் டசின் கணக்கான கதைகளையும் சுமந்து வரும் அற்புத விளையாட்டாகவே கருதப்படுகிறது.
 கடந்த 1968 ஆம் ஆண்டில் இடம்பெற்றிருந்த ஒலிம்பிக் இறுதிப் போட்டியொன்றின் போது பத்து விநாடிகளுக்குக் குறைவான நேரக் கணக்கில் ஓடி முடித்த முதலாவது மெய்வல்லுனரான ஜிம் வைரன்ஸ்  சாதனை படைத்து தசாப்தங்களுக்கு மேற்பட்ட காலங்கள் உருண்டோடி விட்டன. தற்போது உயர் தொழில் நுட்பம் வாய்ந்த ஓடுவதற்கு உதவும் கருவிகளின் வருகையால் ஒலிம்பிக் குறுந்தூர ஓட்ட வீரர்கள்  எவ்வளவுதான் முயற்சித்தாலும் குறைந்தளவான  சாதனைகளையே புரிந்து வருகின்றனர்.
தற்போதைய உலக சம்பியனான  உசேன் போல்டின் 9.58  விநாடிகள் சாதனை எதிர்வரும் 27 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள லண்டன் 2012  ஒலிம்பிக் போட்டிகளின் போது முறியடிக்கப்படுமா என்பதை நாங்கள் பொறுத்திருந்துதான் பார்க்கப்பட வேண்டும். ஆயினும் அதேவேளையில்  கடந்த 1936 இல் ஜேர்மன் தலைநகர் பெர்லினில் தொடங்கி சீனத் தலைநகர் பீஜிங்கில் கடந்த 2008 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகள் வரையில்  இடம்பெற்ற 100 மீற்றர் இறுதிப் போட்டிகள் பற்றிய விபரங் கள்
2008 பீஜிங் உசைன் போல்ட்
(ஜமேக்கா)
எவராலும் பிடிக்க முடியாத சாதனை வீரர் போல்ட், உலக மற்றும் ஒலிம்பிக்  சாதனைகளை தகர்த்தெறிவதுடன்  இரண்டாவதாக வந்த வீரரை விட 30 மீற்றர் தூரம் முந்தி முடியும் கோட்டைக் கடந்து விடுகின்றார்.
2004 எதென்ஸ், ஜஸ்டின்
கட்லின் (அமெரிக்கா) 9.85
அமெரிக்க குறுந்தூர ஓட்ட வீரரான கட்லின் வேகமாக ஓடுகின்றார். ஆயினும் இறுதிக் கோட்டை நெருங்கும் போது அவர் போர்த்துக்கல் வீரர் பிரான்சிஸ் ஒபிக்வெலு மற்றும் தனது நாட்டவரான மோரிஸ் கிறீன் ஆகியோரை மயிரிழையில் முந்தி விடுகின்றார். ஒலிம்பிக் 100 மீற்றர் ஓட்டப் போட்டி  வரலாற்றில் அவரது சாதனையும் குறிப்பிடத்தக்கது



(அமெரிக்கா) 9.87
போட்டி  ஆரம்பத்தில் சறுக்கிய நிலையிலும் ஏனைய வீரர்களுக்கு நடுவே ஓடிய நிலையிலும் பாரிய இடைவெளியில்  ஓடி முடித்து சாதனை படைத்திருக்கின்றார்.
1996 அட்லண்டா டொனவன் பெய்லி கனடா 9.84
இந்தப் போட்டியில் பங்கு பற்றிய  பிரி த்தானிய வீரர் லின்போர்ட் கிறிஸ்டி இரு தடவைகள் பிழையாக ஓட ஆரம்பித்ததால் @பாட்டி நீக்கம் öŒ# யப்பட்டார். பத்து நிமிடங்கள் கழித்தே, போட்டி மீண்டும் ஆரம்பித்ததுடன்  பின் நிலையிலிரு ந்த பெய்லி அசுர வேகத்தில் ஓடி சாதனை படைக்
கின்றார்.
1992 பார்சிலோனா  லின்போர்ட் கிறிஸ்டி
(பிரித்தானியா 9.96)
முப்பத்திரண்டு வயதான கிறிஸ்டி நம்பிய வீரர்  ஃபிராங்கி ஃபிரெடெறிக்கை மயிரிழையில் முந்திய நிலையில்  சாதனை படைத்தார்.
1988 சியோல் பென் ஜோன்சன் (கனடா) 9.79
ஒரு சில மீற்றர்தூர இடைவெளியில் வெல்லும் ஜோன்சன் இரண்டு  தினங்கள் கழித்து போட்டிக்குப் பிந்திய ஊக்க மருந்துப் பரிசோதனையின் பின்னர் இரண்டாவதாக வந்த கார்ல் லெவிஸ் தங்கப் பதக்கம் வென்றார்.
1984  லொஸ் ஏஞ்செல்ஸ் கார்ல் லெவிஸ் (அமெரிக்கா) 9.99
லொஸ் ஏஞ்செல்ஸ் ஒலிம்பிக் போட்டிகளில் நான்கு தங்கப் பதக்கங்களை வென்ற  லெவிஸ் தனது நீண்ட  அவயவங்களின் துணையுடன் வேகமாக  ஓடி ஏனைய  வீரர்களைப் பின் தள்ளி முதலாவது தங்கப் பதக்கத்தை தனதாக்கிக் கொண்டார்.
1980 மொஸ்கோ அலன்வெல்ஸ் (பிரித்தõனியா 10.25
கியூபா வீரரான சில்வியோ லியனார்ட்டை மயிரிழையில் வெல்ஸ் வென்றார்.
1976 மொன்ரியல் ஹோஸ்லி குரோஃபோர்ட்  ட்ரினிடாட் 10.06
ஜமைக்காவின் வீரர் டொன் குவாரியை சவால் விடும் வகையில் குபோஃபோர்ட் வென்றார்.
1972 மியூனிச் வலெறி போர்ஸோவ்
(சோவியத் யூனியன் 10.14)
அமெரிக்க வீரர் ரொபேர்ட் டெய்லரை முந்தியபடி போர்ஸோவ் வென்றார்
1968 மெக்ஸிக்கோ நகரம்
ஜிம் ஹைன்ஸ் (அமெரிக்கா 9.95)
செயற்கைத் தன்மை வாய்ந்த டார்டõன் தட களத்தில் நடைபெற்ற இந்த முதலாவது ஒலிம்பிக் போட்டியில் ஹைன்ஸ் தங்கப் பதக்கம் வென்றார்.
1964 டோக்கியோ பொப் ஹேயெஸ் (அமெரிக்கா 10.0)
பத்து விநாடிகளில் ஓடி ஹேயெல் சாதனை.
1960  ரோம் ஆர்மின் ஹரி (ஜேர்மனி) 10.2
ஆறு வீரர்கள் கலந்து கொண்ட இப்போட்டியில் அமெரிக்க வீரர் டேவ் சிம்மை வென்று  ஹரி சாதனை
1956 மெல்போர்ன் பொபி
மொரோ (அமெரிக்கா)  10.62
மெல்போர்ன் ஒலிம்பிக் போட்டியில் அடுத்தடுத்து மூன்று  தங்கப் பதக்கங்களை வென்ற மொரோ, முதலாவது தங்கப் பதக்கத்தை இப்போட்டியிலேயே வென்றார்.
1952 ஹெல்சிங்கி  லின்டி
ரெமிஜினோ (அமெரிக்கா) 10.79
விறுவிறுப்பாக நடந்த இறுதிப் போட்டியில் தான்வெற்றி பெற்று விட்ட
தாக நினைத்தபடி  இறுதிக் கோட்டைத் தாண்டும்போது ஜ@மக்காவின் வீரர் அவருக்கு பின்னால் மயிரிழையில் ஓடி முடித்தார்.
1948 லண்டன்  ஹரிசன்
டிலார்ட் (அமெரிக்கா) 10.3
தடை தாண்டி ஓட்ட நிபுணரான டிலார்ட்டுக்கும் இன்னுமொரு அமெரிக்க வீரரான பார்ணி ஈவெல்லுக்குமிடையே கடும் போட்டி நிலவியது. மயிரியிழையிலேயே டிரால்ட் தங்கப் பதக்கத்தைத் தனதாக்கிக் கொண்டார்.
1936  பேர்லின்  ஜெசி ஓவென்ஸ் அமெரிக்கா 10.3
ஜேர்மனிய சர்வாதிகாரியான  அடொ ல்ப் ஹிட்லர் பார்த்து  ரசித்துக் கொண்டிருக்கையில் பேர்லின்  ஒலிம்பிக் போட்டிகளில் ஜெசி ஒவென்ஸ் தனது நான்கு தங்கப் பதக்கங்களையும் பெற்றார்.

மெட்ரோநியூஸ்16/07/12


மரபை மீறிய காங்கிரஸ் கட்சிமௌனம் காக்கும் கருணாநிதி



இந்திய ஜனாதிபதித் தேர்தல், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் இடையேயான நேரடிப் போட்டியாகவே தமிழகத்தில்  கணிக்கப்படுகிறது. இந்திய ஜனாதிபதித் தேர்தல் பற்றிய சூடு கிளம்ப முன்னரே பி.ஏ.சங்கமாவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்து பரபரப்பை உண்டாக்கினார் ஜெயலலிதா.  இந்திய மத்திய ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியுமே ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்பது வழமை. இந்த மரபை மீறிய ஜெயலலிதா ஜனாதிபதி வேட்பாளரை அறிவித்துத் தன்னை முன்னிலைப்படுத்தினார்.

காங்கிரஸ்  அரசுக்கு ஆதரவு தெரிவிக்கும்  மம்தா பானர்ஜியின் எதிர்ப்பையும் மீறி பிரணாப் முகர்ஜியை ஜனாதிபதி வேட்பாளராக்கியது காங்கிரஸ் கட்சி. சோனியா காந்தி அறிவிக்கும் ஜனாதிபதி வேட்பாளரை  வெற்றி பெறச் செய்வதில் உறுதியாக இருப்பதாக கருணாநிதி அறிவித்தார். ஜனாதிபதி வேட்பõளராக அறிவிக்கப்பட்ட பிரணõப் முகர்ஜி ஆதரவு கோரி முதன் முதலாகத் தமிழகத்துக்குச் சென்று கருணாநிதியைச் சந்தித்தார். பிரதீபா பட்டீல்  ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டபோது முதன் முதல் ஆதரவு தேடி தமிழகத்துக்கு விஜயம் செய்து கருணாநிதியைச் சந்தித்தார்.
ஜனாதிபதித் தேர்தலில் கருணாநிதி பங்கு மிக முக்கியமானது என்பதை மத்திய அரசு சமிக்ஞை  மூலம் வெளிப்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் இடையே பிரச்சினை  உள்ளது. திராவிட முன்னேற்றக் கழகத்தை விட காங்கிரஸ் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துள்ளது. காங்கிரஸ் கட்சிக் கூட்டணியிலிருந்து வெளியேறுவதற்கான  நேரம் வரும் வரை திராவிட முன்னேற்றக் கழகம் காத்திருக்கிறது என்ற கருத்துக்களுக்கு காங்கிரஸ் கட்சி முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

இந்திய ஜனாதிபதித் தேர்தலில் ஜெயலலிதாவின் முக்கியத்துவத்தைக் குறைத்து கருணாநிதியை முதன்மைப்படுத்தியுள்ளது காங்கிரஸ். பிரணாப் முகர்ஜியின் வேட்பு மனுத்தாக்கலின்போது காங்கிரஸின் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.  சங்மா வேட்பு மனுத் தாக்கல் செய்தபோது ஜெயலலிதா உடனிருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஜெயலலிதா டெல்லி செல்லாது ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். தன்னால் முன்மொழியப்பட்ட ஒருவரின் வெற்றிக்காகப் பிரசாரம் செய்ய வேண்டிய ஜெயலலிதா வேட்பு மனுத் தாக்கலின்போது தலை காட்டாதது ஏன் என்று புரியவில்லை.

இந்தியாவின் அடுத்த ஜனாதிபதியை அடையாளம் காட்ட  வேண்டிய பாரதீய ஜனதாக் கட்சி ஜெயலலிதாவின் பின்னால் ஒழிந்து கொண்டு சங்மாவை  ஆதரிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.  காங்கிரஸ் கட்சியின் வேட்பாளருக்கு எதிராக ஒருவரை நிறுத்த வேண்டும் என்பதற்காகவே ஜெயலலிதாவும் எதிர்க்கட்சித் தலைவர்களும் சங்மாவைப் பலிக்கடாவாக்கியுள்ளனர். சுப்பிரமணிய சுவாமி போன்றவர்கள் சங்மாவை மேலும் உசுப்பிவிட்டு வேடிக்கைப் பார்க்கிறார்கள்.  பொறுப்பு வாய்ந்த பதவிகளில் இருந்து பிரணாப் முகர்ஜி இராஜினாமாச் செய்யவில்லை. பிரணாப் முகர்ஜி இராஜினாமாச் செய்த பத்திரங்களில் உள்ள கையெழுத்துக்கள் போலியானவை என்ற  புகார் தேர்தல் ஆணையத்தால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.


இந்திய ஜனாதிபதியாக வட மாநிலத்தவர்  தேர்வு செய்யப்பட்டால் துணை ஜனாதிபதியாக தென் மாநிலத்தவர் தேர்வு செய்யப்படுவார். இந்திய ஜனாதிபதியாக தென் மாநிலத்தவர் தேர்ந்தெடுக்கப்பட்டால் வட மாநிலத்தவர் துணை ஜனாதிபதியாவார்.  ராஜேந்திரப் பிரசாத் முதன் முதல் ஜனாதிபதியானபோது இந்த நடைமுறை கடைபிடிக்கப்பட்டது. இடையில் இரண்டு தடவை இந்த மரபு மீறப்பட்டது. தென்னகத்தைச் சேர்ந்த  டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் ஜனாதிபதியான போது தென்னகத்தைச் சேர்ந்த ஜாகீர் ஹுசைன் துணை ஜனாதிபதியானார். வட மாநிலத்தைச் சேர்ந்த வி.வி. கிரி ஜனாதிபதியானபோது வடமாநிலத்தவரான கோபால்  சுவரூட் துணை ஜனாதிபதியானார். இப்போதைய ஜனாதிபதி பிரதீபா பட்டீலும் துணை ஜனாதிபதி ஹமீத் ஹன்சாரியும் வட மாநிலத்தவர்களே.  காங்கிரஸ் கட்சி தொடர்ந்தும் இரண்டாவது முறையாகவும் தென் மாநிலத்தைப் புறக்கணிக்க முடிவு செய்துள்ளது. இதனைத் தட்டிக் கேட்கவேண்டிய ஒரே துணிவுள்ள தலைவரான கருணாநிதி பொங்கி எழாது பொறுமையாக இருக்கிறார்.

இந்திய ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் 5.50  இலட்சம் வாக்குகளைப் பெற வேண்டும்.  இன்றைய நிலையில் பிரணாப் முகர்ஜிக்கு சுமார் 6.29 இலட்சம் வாக்குகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவரை எதிர்த்துப் போட்டியிடும் சங்மா சுமார் 3.10 இலட்சம் வாக்குகளையே  பெறலாம். ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளராக முகர்ஜிக்கு கூட்டணியில் இல்லாத கட்சிகளும்  ஆதரவு தெரிவித்துள்ளன. சுமார் 25 கட்சிகள்  முகர்ஜியை ஆதரிக்கின்றன. பாரதீய ஜனதாக் கட்சி, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், பஜூ ஜனதா தளம், சிரோன்மணி அகாலி தளம் ஆகியன சங்மாவை ஆதரிக்கின்றன. 776 நாடாளுமன்ற உறுப்பினர்கள், 4120 சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட 4896 மக்கள் பிரதிநிதிகள் இந்திய ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பார்கள். இவர்களின் வாக்குகளின் மதிப்பீடு 10.98 இலட்சமாகும்.

முலாயம் சிங், மாயாவதி ஆகியோரும், ஐக்கிய ஜனதா தளம், சிவசேனா மத சார்பற்ற ஜனதா தளம் ஆகிய  கட்சிகளும் பிரணாப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. ஆகையினால் காங்கிரஸ் கட்சி பலவீனமாக உள்ள மாநிலங்களின்  வாக்குகளும் முகர்ஜிக்குக் கிடைப்பது உறுதியாக உள்ளது.  தமிழகத்தில் முகர்ஜியை விட சங்மாவுக்கு 1656 வாக்குகள் அதிகமாகக் கிடைக்கும்.

தமிழகத்தில்  57 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். தமிழக  சட்ட சபையில் 234  உறுப்பினர்கள் உள்ளனர், ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் வாக்கு மதிப்பு 708. ஒரு சட்ட சபை உறுப்பினரின் வாக்கு மதிப்பு 176. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் 155 சட்டசபை உறுப்பினர்களும் 14 நாடாளுமன்ற உறுப்பினர்களும் உள்ளனர். இவர்களின் மொத்த வாக்கு மதிப்பு 37,192,  திராவிட  முன்னேற்றக் கழகக் கூட்டணிக்கு 41  சட்ட சபை  உறுப்பினர்களும் 40 நாடாளுமன்ற உறுப்பினர்களும் உள்ளனர். இவர்களின் மொத்த வாக்கு மதிப்பு 35.536.
விஜயகாந்துடன்  கம்யூனிஸ்ட்டும் இந்திய ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. 29 சட்ட சபை உறுப்பினர்களைக் கொண்ட விஜயகாந்தின் கையில் 5,104 வாக்குகள் உள்ளன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் உட்பட  எட்டு சட்ட சபை உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களின் வாக்குகளின் மதிப்பு 2,116  ஆகும். முகர்ஜிக்கு எதிராக இவர்களும் வாக்களித்தால் 42,756 வாக்குகள் சங்மாவுக்கு கிடைக்கும்.

தமிழகத் தேர்தல்களில் ஜெயலலிதாவை வீழ்த்த முடியாத கருணாநிதி இந்திய ஜனாதிபதித் தேர்தலில் ஜெயலலிதாவைத் தோற்கடித்து வெற்றி பெறலாம் என்ற மகிழ்ச்சியில் உள்ளார்    

வர்மா
சூரன்.ஏ.ரவிவர்மா
வீரகேசரிவாரவெளியீடு 15/07/12


Sunday, July 15, 2012

திரைக்குவராதசங்கதி 40



தமிழ்த்திரைஉலகில்ஓகோஎன்றிருந்தபலர்கடைசிக்காலத்தில்மிகவும்கஷ்டப்பட்டார்கள்.புகழின்உச்சியில்இருந்தபலருக்குபுகழ்ச்சிமட்டுமேமிஞ்சியது.வருமானம்இல்லாமையால்அடுத்துஎன்னசெய்வதெனத்தெரியாதுதடுமாறினார்கள்.புகழின்உச்சியில்தம்மைஉயர்த்திவைத்தஅதிர்ஷ்டம்மீண்டும்என்றோஒருநாள்வரும்என்றநம்பிக்கையிலேயேபலர்உயிரைவிட்டனர்.இழந்தவாழ்வைபெறறுவிடுவோம்வோம் என்ற நம்பிக்கையில் ஜோதிடர்களிடம் ஆலோசனைகேட்டு இருந்ததையும் இழந்தவர்கள்திரை உலகில் அதிகம் பேர் உள்ளனர்
.நடிகர்திலகத்தின்கர்ணன்,கப்பலோட்டியதமிழன்,வீரபாண்டியகட்டப் பொம்மன்எம்.ஜி.ஆரின்ஆயிரத்தில்ஒருவன்போன்றவெற்றிப்படங்களைதயாரித்துஇயக்கியவர்பி.ஆர்.பந்துலு.கப்பலோட்டியதமிழன்'மிகசிறந்தபடம்என்றுதமிழ்பேசும்மக்கள்அனைவராலும்புகழப்பட்டபடம்.ஆனால்அந்தப்படத்துடன்பி.ஆர்.பந்துலுவின்பொருளாதாரம்முடங்கியது.கப்பலோட்டியதமிழன்வெற்றிப்படம்என்றுபேசப்பட்டாலும்போட்டமுதல்திரும்பவும் கிடைக்காததனால் பி. ஆர். பந்துலுதலைநிமிர முடியாது திண்டாடினார்.பிளைமவுத் என்ற பென்னாம்பெரியபடகுக் காரில்பயணம்செய்தபி.ஆர். பந்துலு பெற்றோல் வைக்குறைப்பதற்காகமொரிஸ்மைனர்காருக்குமாறினார்.இதுபோன்றஅநாவசியமானசெலவுகள்எல்லாவற்றையும்குறைத்தார்.இந்தஇக்கட்டில்இருந்துவெளிவருவதற்காகமக்கள்திலகத்தின்ஒப்புதலுடன்மதுரையைமீட்ட‌ சுந்தரபாண்டியன்' என்ற படத்தை தயாரிக்கமுடிவு செய்தார். மக்கள் திலகத்துக்குஅட்வான்ஸ் கொடுத்து விட்டு திரைக்கதைஎழுத ஆரம்பித்து விட்டாரே தவிரபடம் தயாரிப்பதற்கான பணத்தை அவரால் திரட்ட முடியவில்லை.

மின்னல் என்று தமிழ்த் திரை உலகினால்அழைக்கப்படும் தயாரிப்பாளரானஎம். உதுமான் முகைதீன்தனக்குத் தெரிந்த ஜோதிடர்ஒருவரை பி.ஆர். பந்துலுவுக்கு அறிமுகப்படுத்தினார். பொலிஸ் வேலையிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட அந்த ஜோதிடர்பி.ஆர். பந்துலுவின் ஓலைச்சுவடியைப் பார்த்து அவரதுஎதிர்காலம் சிறப்பாகஅமையும் என்றும் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் என்ற படத்துடன் அவரது பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்து விடும் என்றும்கூறினார்.

ஜோதிடரின் வாக்கினால்உற்சாகமடைந்த பி.ஆர். பந்துலு அவரைப் பற்றி தனதுநண்பர்களுக்கு கூறி விட்டுபடத்துக்கான உடைகள்தெரிவு ய்வதற்காக பெங்களூர் சென்றார். பெங்களூரில் குளியலறையில் வழுக்கிவிழுந்த பி.ஆர். பந்துலு மரணமானார். பி.ஆர்.பந்துலுவின் மரணத்தைகேள்விப்பட்ட மின்னல் உதுமான் முகைதீன்ஜோதிடரின் வீட்டுக்குச் சென்றுஅவரை அடித்து உதைத்தார்.வித்துவான் வே. இலட்சுமணன் என்பவர் பிரபலமான ஜோதிட நிபுணர். அவரும் மணியனும் இணைந்து பல படங்களைத் தயாரித்தனர். அவர்கள் தயாரித்தவெற்றிப் படங்களில் ஒன்றான "இதயவீணை' என்ற படத்தை ஹிந்தியில் தயாரிக்க முடிவு செய்தார்கள். ஒருகோடி ரூபாவில்தயாரிக்கப்பட்ட அந்தப் படத்தில்ஹிந்தித் திரை உலகின் பிரபல கதாநாயகனானதர்மேந்திரா கதாநாயகனாக நடித்தார். படம் படுதோல்வியடைந்தது.
எல்லோருக்கும் நல்ல நேரம் கெட்டநேரம் கணித்துக் கூறும் ஜோதிட நிபுணர்தயாரித்த படமே படுதோல்வியடைந்துஅவரை கடன்காரனாக்கியது. அதுபற்றிஅவரிடம் கேட்ட போது ""மனிதனுக்குகெட்டநேரம் வரும் போது விதி நம் கண்ணைக்கட்டி இழுத்துப் போய் அங்குவிட்டு விடும். அதிலிருந்து தப்ப எந்தக்கொம்பனாலும் முடியாது'' என்றார்."தை பிறந்தால் வழி' பிறக்கும் என்றபடத்தைத் தயாரித்து பணம் சம்பாதித்தவர் ஏ.கே. வேலன். திராவிட முன்னேற்றக்கழகத்தின் பிரதம பேச்சாளரானஇவர் பல புத்தகங்கள் எழுதியுள்ளார்.சில படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். புலவர் பட்டம் பெற்றவர்.

பணம் கையில் சேர்ந்ததும் அருணாசலம்ஸ்டூடியோவைக் கட்டினார். அங்கு பலபடங்கள் தயாரிக்கப்பட்டன. அவருக்கும் கஷ்ட காலம் ஆரம்பித்தது. தினசரிபிள்ளையாரை வணங்கினால் கஷ்டம்தீரும் என்று ஒரு ஜோதிடர் கூறினார். பிள்ளையாரை வணங்க வேண்டும் என்பதால் யானையை வளர்த்து தினமும்வணங்கினார். காலப் போக்கில் யானைக்குசாப்பாடு போட முடியாத நிலைஏற்பட்டது. ஸ்டூடியோவுக்கு வருபவர்களை யானை துரத்தத் தொடங்கியது.
ரமணி
மித்திரன்124/12/2006


Saturday, July 14, 2012

போலியான ஒலிம்பிக் தீபத்துடன் ஓடிய நிர்வாண இளைஞன் கைது


போலியான ஒலிம்பிக் தீபத்துடன் ஓடிய நிர்வாண இளைஞன் ஒருவன் கைது செய்ய‌ப்பட்டான். லண்டன் 2012 ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குவதற்கு இன்னமும் 14 நாட்களே உள்ள நிலையில் பிரித்தானியாவில் ஒலிம்பிக் தீபத்தை ஏந்திச் செல்லும் 70 நாள் அஞ்சலோட்ட நிகழ்வின் 53 ஆவது நாளைய ஒலிம்பிக் தீபம் ஏந்தல் நிகழ்வு இடம் பெற்றுக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக இளைஞரொருவர் நிர்வாணக் கோலத்தில் போலியான ஒலிம்பிக் தீபமொன்றைத் தனது கையிலேந்திய வண்ணம் ஓடியதால் பார்வையாளர்களிடையே பெரும் பரபரப்பு காணப்பட்டது.
ஆமாம் 53 ஆவது நாளின் ஒலிம்பிக் தீபத்தை சேர் ரொஜர் பனிஸ்டர் ஏந்திச் செல்வதற்கென ஆயத்தமானார். இதன்@பாது ஒக்ஸ்போர்டில் ஒலிம்பிக் தீபத்தை ஏந்திச் செல்லும் தனது மார்க்கத்தை பூர்த்தி செய்திருந்த லண்டன்  2012 ஒலிம்பிக் போட்டிகளின் ஏற்பாட்டுக் குழுவின் தலைவரான செபஸ்டியன் கோ பிரபு மெய் வல்லுநர்கள் அணியுடன் இணைந்தார். இதன் பின்னர் ஒலிம்பிக் போட்டிகளில் ஐந்து தடவைகள் தங்கப் பதக்கத்தை வென்றிருந்த சேர் ஸ்டீவ் ரெட்கி@ராவும் ஒலிம்பிக் தீபத்தை தேம்ஸ் நதிக் கரையோர நகரான ஹென்லியில் ஏந்திச்சென்றார். அந்த நேரத்தில் எவருமே எதிர்பாராத விதத்தில் அந்த நிர்வாணக் கோல இளைஞன் பார்வையாளர்களைக் கடந்து ஓடி ஒலிம்பிக் தீப அஞ்சலோட்ட நிகழ்வைக் குழப்பியடித்த குற்றச்சாட்டின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டான். மாறுபட்ட வர்ணக் கோடுகளை கொண்டிருந்த அவனது நிர்வாண மேனியின் பின்பக்கத்தில் (முதுகுப் புறம்) சுதந்திர திபெத் எனும் வாசகம் பொறிக்கப்பட்டிருந்தது. நிர்வாணக் கோலத்தில் காட்சியளித்து பொது மக்கள் கண்ணியத்திற்கு களங்கம் கற்பித்த 27 வயதான ஹென்லியைச் சேர்ந்த அந்த இளைஞனைப் பொலிஸார் கைது செய்ததுடன் அவனைப் போர்வையொன்றால் போர்த்தியபடி அழைத்துச் சென்றனர்.


ஒக்ஸ்போட் ஷயர் நகரத்தின் ஊடாக சென்று கொண்டிருந்த அந்த ஒலிம்பிக் தீப அஞ்சலோட்ட நிகழ்வைக் கண்டுகளித்துக் கொண்டிருந்த நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள் அந்தப் பரட்டைத் தலை நிர்வாண மனிதன் அங்கு குழப்பம் விளைவித்ததை நேரில் அவதானித்துக் கொண்டிருந்தனர். ஹென்லி நகர் வாசியொருவர் இதுபற்றி கூறுகையில்,
சனக் கூட்டத்திலிருந்து வெளியே வந்த நிர்வாண இளைஞன் போலியான தீபத்தை ஏந்தியபடி ஓடிக்கொண்டிருந்தான் என்றார்.
சுற்றுச் சூழல் விஞ்ஞானியான அன்ட்ரூ ரின்ஸ் லீ தெரிவிக்கையில், அந்த இளைஞன் எங்கிருந்தும் வரவில்லை. தருணத்தை எதிர்ப்பார்த்து காத்திருந்த அவன் தான் நினைத்ததைச் சாதித்து விட்டானென்றே கூற வேண்டும் என்றார்.

மெட்ரோநியூஸ்13/07/12

Friday, July 13, 2012

லண்டன் ஒலிம்பிக் உதைப்பந்தாட்டம் 2

Mata_Reuters

ஸ்பெய்ன்
லண்டன் 2012 ஒலிம்பிக் போட்டிகளின் ஓர் அங்கமாக விளங்கும் உதைபந்தாட்டப் போட்டிகளுக்கென யூரோ 2012 வெற்றிக் கிண்ணப் போட்டிகளில் அபாரமாக ஆடிய மூன்று ஆங்கில பிரிமியர் லீக் வீரர்களை ஸ்பெய்ன் தனது 22 பேரடங்கிய உதைபந்தாட்ட அணிக்கென தெரிவு செய்துள்ளது.

இத்தாலிக்கு எதிரான யூரோ 2012 இறுதிப் போட்டி வெற்றியின் போது நான்காவது கோலைப்போட்டிருந்த செல்ஸி அணி வீரர் ஜுவான் மாட்டா ஸ்பெய்ன் அணியின் வயது கூடிய மூன்று வீரர்களுள் ஒருவராக பெயர் குறிக்கப்பட்டுள்ளார். அவரது கழக ரக வீரரான ஓரியல் ரொமியூ (20) மற்றும் மன்செஸ்டர் யுனைடெட் கோல் காப்பாளர் டேவிட் டீ கீ (21) ஆகியோரும் 18 வீரர்களாகக் குறைக்கப்பட வேண்டிய ஒலிம்பிக் அணியில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

யூரோ 2012 சம்பியனான ஸ்பெய்ன் அணியின் இடது பின்கள வீரராக அபாரமாக விளையாடிய பார்ஸிலோனா அணியின் புதியவரான ஜோர்டி அல்பா ஒலிம்பிக் வீரர்கள் பட்டியலில் அணியின் தனிச்சிறப்புப் பெற்றவராக காணப்படுகின்றார்.  வீரர் மட்டாவும் அவரது கழக சக வீரர்கள் தியாகோ அத்லெடிக் பில்பாவோ வீரர் அன்டர் ஹெராரோ ஆகியோருடன் இணைந்து நடுகள ஆட்டத்திறனை வெளிப்படுத்தியுள்ளனர்.
ஸ்பெய்ன் அணியின் பயிற்சியாளரான லூயிஸ் மில்லா இது பற்றி தெரிவிக் கையில்,  தேசிய அணியென்ற வகையில் இந்த அணி அதே அடைவு மட்டத்தைக் கொண்டிருக்க வேண்டுமெனக் கோருவது நியாயமற்றதென நான் நம்புகிறேன். அணிக்கென குணநலன் இருப்பதுடன் அதையொத்த விளையாட்டு தத்துவமும் இருக்கவே இருக்கின்றது. ஆயினும் வேறுபாடான அழுத்தங்களைக்குள்ளான. வேறுபட்டதொரு அணியே இதுவாகும் எனக் குறிப்பிட்டார்.

சுவிற்ஸர்லாந்தும் பிரிமியர் லீக் போட்டிகளில் அபாரமாக விளையாடிய சில வீரர்களைத் தெரிவு செய்துள்ளது.
அவர்களுள் புல்காம் அணி வீரர் பச்டிம் கசாமி மற்றும் வில்லா கோல் காப்பாளர் பெஞ்சமின் கிரிஸ்ட் ஆகியோரும் அடங்குகின்றனர்.

மெட்ரோநியூஸ்09/07/12

Thursday, July 12, 2012

லண்டன் ஒலிம்பிக் உதைப்பந்தாட்டம்

ரயன் கிக்ஸ்

லண்டன் 2012 ஒலிம்பிக் போட்டிகளில் பிரித்தானிய உதைபந்தாட்ட அணிக்கு ரயன் கிக்ஸ் (Ryan Giggs) தலைமை தாங்கவுள்ளதை பிரித்தானிய உதைபந்தாட்டச் சங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.
பிரித்தானிய அணியில் உள்ள வயது கூடிய வீரர்களான கிரெய்க் பெலாமி மற்றும் மிக்கா ரிச்சார்ட்ஸ் ஆகிய இருவரையும் பின்னுக்குத் தள்ளிய நிலையில் தனது முதலாவது சர்வதேச சுற்றுப் போட்டியில் அணித் தலைவராகப் பங்கேற்கவுள்ள கிக்ஸை அணியின் பயிற்றுவிப்பாளரான ஸ்டுவர்ட் பியர்ஸ் பெயர் குறித்துள்ளார்.

இது குறித்து கிக்ஸ் கருத்து வெளியிடுகையில், தெளிவாக கூற வேண்டுமானால் நிறைய அனுபவம் பெற்றிருக்கும் நான் எமது அணியில் இடம்பெற்றுள்ள ஏராளமான இளைய வீரர்களை வழிப்படுத்துவதுடன் தலைவர் என்ற வகையில் எனது அனுபவத்தை அவர்களுக்கும் கற்றுக் கொடுக்க முடியுமென நம்புகின்றேன்.

இதுவரை பிரிமியர் லீக் பட்டங்கள் பன்னிரண்டையும், சம்பியன் லீக் பட்டங்கள் இரண்டையும் தனதாக்கிக் கொண்டுள்ள கிக்ஸ், எதிர்வரும் 20ஆம் திகதியன்று கடந்த ஐம்பதாண்டுகளில் பிரேஸிலுக்கு எதிரான முதலாவது பயிற்சிப் போட்டியில் விளையாடவுள்ள பிரித்தானிய அணிக்குத் தலைமை தாங்கவுள்ளார். மிடில்ஸ்புரோவில் உள்ள ஆற்றங்கரையோரத்து விளையாட்டரங்கில் ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன்னரான இந்த பயிற்சி இரட்டைப் போட்டிகளில் பிரேஸிலை எதிர்த்து பிரித்தானிய ஆண்கள் அணியும், சுவீடனை எதிர்த்து பிரித்தானிய மகளிர் அணியும் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் ஒகஸ்டில் மிலேனியம் விளையாட்டரங்கில் உருகுவேக்கு எதிரான தங்கள் குழுவின் இறுதிப் போட்டிக்கு முன்னர், பிரித்தானிய அணியினர் எதிர்வரும் 26ஆம் திகதி செனகல் அணிக்கெதிராக ஓல்ட் ட்ராபோர்ட் விளையாட்டரங்கிலும் எதிர்வரும் 29ஆம் திகதி ஐக்கிய அரபு இராச்சியத்தை எதிர்த்து வெம்பிளி மைதானத்திலும் விளையாடவுள்ளனர்.
பயிற்றுவிப்பாளர் பியர்ஸ் இது குறித்து கருத்து தெரிவிக்கையில், ஒலிம்பிக் உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டிகளின் போது பிரித்தானிய அணியை ரயன் கிக்ஸ் தலைமையேற்று வழிப்படுத்துவார். தெரிவு செய்யப்பட்டுள்ள அணியின் அனைத்து வீரர்களும் (பதினெட்டுப் பேரும்) அபாரமான முறையில் தமது திறமைகளை வெளிப்படுத்தியவர்களாவர். அணித் தலைவர் பதவிக்குப் போட்டியிடத் தகுதியானவர்களும் இருக்கின்றனர்.
வேல்ஸ் அணிக்கு ஏரன் ராம்சி தலைமையேற்கும் அதேவேளையில், மன்செஸ்டர் அணிக்கு மிகான் ரிச்சர்ட்ஸ் பல தடவைகள் தலைமை தாங்கியுள்ளார்.

விளையாட்டு அனுபவத்தின் அடிப்படையில் கிரெய்க் பெலாமி அல்லது ஏனைய இருவர் தலைமை தாங்க வல்லவர்களாக உள்ளனர். ஆயினும், இந்தக் குழுவினரிடையே தனிச் சிறப்புப் பெற்றவராக விளங்குகின்றார். நான் தெரிவு செய்துள்ள மூன்று வயது கூடிய வீரர்கள் தேர்வு குறித்தும் நான் மிக்க மகிழ்வடைகின்றேன்.
பிரிமியர் லீக் போட்டிகளில் வீரர்கள் காண்பித்த திறமை அடிப்படையிலேயே அவர்கள் அனைவரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்றார். அமெரிக்காவில் லா கெலக்ஸி அணிக்காக விளையாடி வரும் டேவிட் பெக்கம் ஒலிம்பிக் அணியில் தெரிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மெட்ரோநியூஸ்09/07/12

Wednesday, July 11, 2012

பிரேஸில் உதைப்பந்தாட்ட அணி தெரிவு

நெய்மர்,

லண்டனில்எதிர்வரும் 27 ஆம் திகதி  கோலாகலமாக ஆரம்பமாகவுள்ள  லண்டன் 2012  ஒலிம்பிக் போட்டிகளில் ஒன்றான உதைபந்தாட்ட அணியை அறிவித்துள்ளது. பலமாக  மோதும் நட்சத்திர வீரர்களெனக் கருதப்படும் நெய்மர், ஹல்க், அலெக்சான்ரே படோ ஆகியோர் உள்ளிட்ட பலம் வாய்ந்த தனது கால்பந்தாட்ட அணி வீரர்களை பிரேஸில் பெயர் குறிப்பிட்டுள் ளது.
பிரேஸில் அணியின் பயிற்சியாளரான மனோ மெனிஸெஸ் போர்டோ அணி வீரர் ஹல்க் ஏ.சி. மிலான் அணியின் தியாகோ சில்வா மற்றும் ரியல்மட்ரிட் அணி இடது பின்கள வீரர் மார்செலோ ஆகிய மூன்று வயது கூடிய வீரர்களை மேற்படி  போட்டிகளுக்காக தெரிவு செய்துள்ளார். சான்டோஸ் அணியின் நட்சத்திர வீரர் நெய்மமர் மூத்த பிரேஸில் அணிக்கான 18 போட்டிகளில்  ஒன்பது கோல்களைப் பெற்றுக் கொடுத்துள்ளார். அவரைப் போன்றே  ஹல்க் மற்றும் படோ ஆகியோரும் தங்கள் அபாரத் திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்த  அணியில்  யங் பிரிமியர் லீக் வீரர்களான மன்செஸ்டர் யுனைட்டெட்  அணி வீரர் ரபேல் டொட்டன் ஹாம் அணியின் நடுகள வீரர் சன்ட்ரோ ஆகியோரும் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
எதிர்வரும் 29 இல் பெலராஸ் அணிக்கும் ஓகஸ்ட் முதலாம் திகதி நியூசிலாந்திற்கும் எதிராக விளையாடுவதற்கு முன்னர் பிரேஸில் அணி சீ குழுவில் எதிர்வரும் 26 ஆம் திகதி எகிப்துடன் பயிற்சிப் போட்டியில் எதிர்த்தாடவுள்ளது.

எதிர்வரும் 20 ஆம் திகதி மிடில்ஸ்புரோவின் ஆற்றங்கரை விளையாட்டரங்கில்  பிரித்தானியாவுக்கெதிரான பயிற்சிப் போட்டியில் பிரேஸில் அணி விளையாடவுள்ளமை  குறிப்பிடத்தக்கது.
பிரேஸில் அணியின் வீரர்கள் ரபேல் கப்ரால், நெடோ அலெக் சான்ட்ரோ மார்சலோ, ரபேல் டானியோ, தியாகோ சில்வா, புரூனோ வவுனி, ஜுவான், சான்டரோ, ரொமுயூலோ, போலோ ஹென்றி கான்சோ, ஒஸ்கார், லுகாஸ் மோரோ நெய்மர், லியான்ட்ரோ டாமியாவோ, அலெக்சான்ட்ரே படோ , ஹல்க்.

மெட்ரோநியூஸ்09/07/12

அமெரிக்க கூடைப்பந்தாட்ட அணி அறிவிக்கப்பட்டது


கடந்த 2008 ஆம் ஆண்டில் சீனத் தலைநகர் பீஜிங்கில் நடைபெற்ற சர்வதேச ஒலிம்பிக் போட்டிகளின் போது தங்கப் பதக்கங்களைத்  தட்டிச் சென்ற ஐந்து வீரர்கள் எதிர்வரும் 27 ஆம் திகதியன்று ஆரம்பமாகவுள்ள லண்டன் 2012  ஒலிம்பிக் ஆண்களுக்கான  பன்னிரெண்டு பேரடங்கிய அமெரிக்க கூடைப்பந்தாட்ட அணியில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
@வபு@ரான் ஜேம்ஸ், கோபே பிரியன்ட் கார்மெலோ அந்தனி,  கிறிஸ்போல் மற்றும் டெரோன் வில்லியம்ஸ் ஆகிய ஐந்து வீரர்களுமே  அவர்களாவர்.
அமெரிக்க ஒலிம்பிக் குழுவின் இறுதி அங்கீகாரம்  இன்னமும் பெறப்பட வேண்டிய போதிலும் லாஸ் வெகாஸில் நடத்தப்பட்ட அமெரிக்க அணிக்கான இரண்டு பயிற்சித் தொடர்களையடுத்தே அமெரிக்க கூடைப்பந்தாட்டச் சங்கத் தலைவர் ஜெரி கௌவான் ஜெவோ மேற்கண்டவாறு அறிக்கையொன்றின் மூலம் அறிவித்துள்ளார்.
""பன்னிரெண்டு வீரர்களும்
விளையாட வேண்டிய கிரமத்தைக் குறிக்கும் முறைப் பட்டியலைத் தயாரிக்கும் போது காயப்பட்டோரின்  எண்ணிக்கையைக் கணக்கிலெடுக்காமல் அவர்கள் விளையாட்டில் காட்டிய அபõரத் தன்மையை கருத்திலெடுத்தே இந்தத் தெரிவை நாம் மேற்கொண்டோம்'' எனக் கூறியுள்ள அவர் இதன் இறுதி தேர்வுகள் நிச்சயமாக மெய்வன்மையை வெளிப்படுத்தவல்ல போட்டியொன்றை விரும்பும் எங்களுக்குத் திருப்தியளிக்கும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
அணி வீரர்களுக்கான அண்மைய பயிற்சித் தொடர்களின்  போது சிக்காக்கோ புல்ஸ் அணியைச் சேர்ந்த டெரிக் ரோஸ்,  ஓர்லாண்டோ மாஜிக் அணியைச் சேர்ந்த ட்வைட் ஹோவாட் மற்றும் மியாமி ஹுட் அணி வீரர்களான ட்வையானி  வேட் மற்றும் கிறிஸ்போஷ் ஆகியோர்  உள்ளிட்ட பல்வேறு முன்னணி வீரர்கள் காயமடைந்திருந்தமை அமெரிக்க ஒலிம்பிக் கூடைப்பந்தாட்ட அணிக்கோர் பலத்த அடியாகவே இருந்தது  குறிப்பிடத்தக்கது.

தேசிய கூடைப்பந்தாட்ட  அணிக்கான வீரர்கள் தேர்வில் கலந்து கொண்ட அனைத்து வீரர்களும் உயிரைக் கொடுத்து அர்ப்பணிப்புடன் செயற்பட்டதால் இறுதித் தீர்வை  தீர்மானிப்பதில் நாம் பெரும் சங்கடப்பட வேண்டியிருந்ததென அமெரிக்க பயிற்றுவிப்பா ளர் மைக் கிறிஸ்ஸேப்ஸ்கி தெரிவித்தார்.

மெட்ரோநியூஸ்09/07/12

Tuesday, July 10, 2012

முறியடிக்கப்படாத சாதனைக‌ள்


 உலகில் மிகப் பிரமாண்டமான முறையில் நடைபெறும்  ஒலிம்பிக்  போட்டி  முதன் முதலில் 1886ஆம் ஆண்டு கிரேக்கத்தின்  எதென்ஸ்  நகரில் நடைபெற்றது.  சில நாடுகள் தனியாகவும்  சில நாடுகள் இணைந்தும் முதலாவது ஒலிம்பிக்கில்  போட்டியிட்டன.  அமெரிக்கா, கிறீஸ், ஜேர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து, ஹங்கேரி, அவுஸ்திரேலியா, டென்மார்க், சுவிட்ஸர்லாந்து,  ஆகிய நாடுகளின் வீரர்கள் முதலாவது ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றனர். 11 தங்கம், ஏழு வெள்ளி, ஒரு வெண்கலப் பதக்கங்களுடன்  அமெரிக்கா முதலிடம் பெற்றது. 10 தங்கம், 18 வெள்ளி, 18 வெண்கலப் பதக்கங்களுடன்  கிரீன் இரண்டாமிடம் பெற்றது. ஆறு தங்கம்,  ஐந்து வெள்ளி, மூன்று வெள்ளிப் பதக்கங்களுடன் ஜேர்மனி மூன்றாமிடம் பெற்றது.
ஒலிம்பிக்கில்  அமெரிக்காவின் ஆதிக்கமே அதிகம். சோவியத் ரஷ்யா அமெரிக்காவுடன் போட்டி  போட்டு சில ஒலிம்பிக்கில்  முதலிடம் பெற்றது. சோவியத் ரஷ்யா உடைந்த பின்  அமெரிக்காவின்  கையே மேலோங்கியது. 2008ஆம் ஆண்டு சீனாவில் நடைபெற்ற  ஒலிம்பிக் போட்டி அமெரிக்காவின் ஆதிக்கத்துக்கு முடிவு கட்டியது சீனா.  சீன  வீரர்கள்  அதிக தங்கப் பதக்கத்தைப்  பெற்று முதலிடம் பிடித்தனர்.

அமெரிக்கா இரண்டாவது இடத்தைப் பிடித்தது. 51 தங்கம், 21 வெள்ளி, 28 வெண்கலப் பதக்கங்களுடன் சீனா முதலிடத்தைப் பெற்றது. 36 தங்கம் 37 வெள்ளி, 34 வெண்கலப் பதக்கங்களுடன் அமெரிக்கா இரண்டாமிடம் பெற்றது. ரஷ்யா மூன்றாமிடத்தையும்,  இங்கிலாந்து நான்காம் இடத்தையும் பிடித்தன. அதிக தங்கப் பதக்கங்களுடன்  முதலிடம் பிடிக்க வேண்டும் என்று இங்கிலாந்து முயற்சிக்கிறது. சீனாவுக்கும் பதிலடி கொடுத்து இழந்த முதலிடத்தை மீண்டும் பிடிக்க  வேண்டும் என்ற முனைப்புடன் அமெரிக்கா ஒலிம்பிக்கை எதிர்நோக்குகின்றது.

ஒலிம்பிக்கில் நூற்றுக்கும் அதிகமான  போட்டிகள் இருந்தாலும் 100 மீ, 200 மீ, 400 மீ ஓட்டப் போட்டிகளும் அஞ்சலோட்டமுமே  பரபரப்பும் விறுவிறுப்பும் உடையன. நீச்சல், ஜிம்னாஸ்ட்டிக் என்பனவும்  ரசிகர்களைக் கட்டிப் போடவல்லன. 100 மீ, 200 மீ ஆகிய இரண்டு போட்டிகளிலும் மின்னல் போல் ஓடும் உசைன் போல்ட் மீது  அதிக  எதிர்பார்ப்பு உள்ளது.  100 மீ, 200 மீ ஆகிய இரண்டிலும்  உலக சாதனை ஒலிம்பிக் சாதனை செய்த தங்க மகன்.
உசைன்போல்ட்டுக்கு சவாலாகப் புறப்பட்டுள்ளனர் யொஹான் பிளேக். ஒலிம்பிக்  தகுதி காண் போட்டியில் 100 மீ, 200 மீ ஆகிய இரண்டிலும் முதலிடத்தைப் பிடித்து எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளார்.
400 மீ @ஜான்ஸன் (அமெரிக்கா) 500 மீ, 10000 மீ பெக@ல (எதியோப்பியா) 400 மீ நேடில்ஸ் யொப் (அமெரிக்கா) ஆகியோரின் உலக சாதனையும்,  ஒலிம்பிக் சாதனையும் இன்னமும்  முறியடிக்கப்படவில்லை.
4 x 100 மீ அஞ்சலோட்டத்தில் ஜமெய்க்காவும் 4 x 400 மீ அஞ்சலோட்டத்தில் அமெரிக்காவும் ஒலிம்பிக் சாதனையையும் உலகசாதனையும் தம் வசம் வைத்திருக்கின்றன.


ரமணி
மெட்ரோநியூஸ்09/07/12



Saturday, July 7, 2012

ஒலிம்பிக் தீபத்தை பறிக்க முயன்ற சிறுவர்கள்


ஒலிம்பிக் தீப அஞ்லோட்டத்தினுள் இடையே புகுந்த பாடசாலை சிறுவர்கள் இருவர் தீவிர பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்ட ஒலிம்பிக் தீபத்தை வெடுக்கெனப் பறித்தெடுக்க முனைந்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஒலிம்பிக் தீபத்தை மிகவும் பாதுகாப்புடன் அஞ்சலோட்டம் மூலம் பிரித்தானியா முழுவதும் எடுத்துச் செல்லும் 45ஆம் நாள் நிகழ்வு கௌன்றி ஊடாக நடைபெற்ற போதே இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் நிகழ்ந்துள்ளது. புனிதமான ஒலிம்பிக் தீபத்தைப் பாதுகாக்கவென அதி உச்ச பயிற்சி பெற்ற பாதுகாப்பு அணி அங்கிருந்த போதிலும் அசட்டுச் சிரிப்புடன் காணப்பட்ட இந்த இரண்டு சிறுவர்களும் அந்த இரண்டு அடி நீளமுடைய ஒலிம்பிக் தீபத்தை வெடுக்கெனப் பறிப்பதற்கு முன்னர் அங்கு போடப்பட்டிருந்த பொலிஸ் தடையையும் மீறி உள்ளே நுழைந்துள்ளனர்.  

கறுத்த பீனி தொப்பிகளையும் பாடசாலைச் சீருடைகளையும் அணிந்த நிலையில் காலை 7.20 மணியளவில் ஒலிம்பிக் தீபத்தை ஏந்திச் செல்லவென ஏற்கெனவே தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த அந்த ஐந்து  பணியாளர்களிடையே ஒலிம்பிக் தீபம் கைமாற்றப்பட்ட வேளை, அவர்களையும் முந்தியபடி இரு சிறுவர்களும் பாய்ந்து ஒலிம்பிக் தீபத்தை தாவிப் பிடித்தனர்.
இதனைக் கண்ட பொலிஸாரும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் சனக்கூட்டத்திற்குள் புகுந்து அந்தக் குறும்புக்காரச் சிறுவர்கள் இருவரையும் விரட்டியடித்தனர். இரண்டு மெய் வல்லுநர்களிடையே ஒலிம்பிக் தீபம் கைமாற்றப்பட்டுக் கொண்டிருந்த போதே இந்த எதிர்பாராத சம்பவம் இடம்பெற்றது.
ஒலிம்பிக் தீபத்தை கையிலேந்தியவாறு ஓடி வந்திருந்த ஆண் போட்டியாளர் ஒருவர் இதனைக் கெட்டியாக இறுகப் பிடித்தவாறு இருந்தபோது, பாதுகாப்பு அணியினர் விரைந்து செயற்பட்டு சிறுவர்களை அப்புறப்படுத்தினர். ஒலிம்பிக் தீப அஞ்சல் நிகழ்வின் பாதுகாப்புக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ள 70 பேரடங்கிய மெட்ரோ பொலிட்டன் பொலிஸாரே இவ்வாறு விரைந்து செயற்பட்டு விபரீதம் ஏற்படாதவாறு தடு த்து நிறுத்தியவர்களாவர். சாம்பல் நிற ரீஷேர்ட்டுகளையும், காற்சட்டைகளையும் அணிந்த நிலையில் நாளொன்றுக்கு முப்பது மைல்கள் வரை அடிக்கடி ஓடும் இந்தப் பாதுகாப்பு அணியினர், கடந்த 2010இல் இதற்கென விண்ணப்பித்திருந்த 664 பேரில் இருந்து தெரிவு செய்யப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது

.இந்தக் குறும்புக்கார இளையோர் இருவரினதும் திடீர் தாக்குதலால் ஒலிம்பிக் தீப அஞ்சல் நிகழ்வு எதுவிதத்திலும் பாதிப்படையவில்லை எனத் தெரிவித்துள்ள பொலிஸார்,  ஒலிம்பிக் தீபம் எடுத்துச் செல்லும் வழியிலும் பாதுகாப்பு ஏற்பாடுகளின் போதும் குறுக்கே ஓடுவதால் ஏற்படும் ஆபத்துகள் பற்றியும் எச்சரித்துள்ளனர்இந்த  சம்பவத்தை நேரில் பார்த்த அலுவலகப் பணியாளரான பிரையன் வோர்ட் (34) இது பற்றி தெரிவிக்கையில், அந்தக் காட்சி நம்ப முடியாதளவுக்கு ஆபத்தானதாகவே இருந்தது. ஏனெனில், அந்தச் சிறுவர்கள் இருவரும் உண்மையில் ஒலிம்பிக் தீபத்தை தொட்டே விட்டனர். தீபத்தை ஏந்தி வந்தவர் அதனைக் கீழே போட்டிருந்தால் அந்தச் சிறுவர்கள் தீப்பற்றி எரிந்திருப்பார்கள் அல்லது வேறு எவரேனும் எரிகாயங்களுக்குள்ளாகியிருப்பர் எனவும் கூறினார். 
பிரித்தானியாவில் ”சுற்றிக் கொண்டிருக்கும் இந்த 70 நாள் ஒலிம்பிக் தீப அஞ்சல் ஓட்டம் நிகழ்வு, ஒலிம்பிக் போட்டிகள் எதிர்வரும் 27ஆம் திகதி நடைபெறவுள்ள ஆரம்ப வைபவத்தில் முடிவடையும்.

 மெட்ரோநியூஸ்06/07/12

Friday, July 6, 2012

லண்டனில் தங்கத் திருவிழா 8

சுவீடன் 

லண்டனில் ஒலிம்பிக்கில் மகளிர் உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடுவதற்கு ஐரோப்பா கண்டத்தில் இருந்து பிரான்ஸ், சுவீடன் ஆகியன தேர்வு பெற்றுள்ளன. ஒலிம்பிக்கை நடத்தும் நாடான இங்கிலாந்து மகளிர் நேரடியாகத் தெரிவாகியுள்ளது.
பிரான்ஸ் மகளிர் உதைபந்தாட்ட அணி ஒலிம்பிக் போட்டியில் முதன் முதலில் விளையாட தகுதி பெற்றுள்ளது. இது 2004 இல் நடைபெற்ற தகுதிகாண் போட்டியல் இறுதிச் சுற்றுவரை முன்னேறிய பிரான்ஸ், ஒலிம்பிக் விளையாடும் தகுதியை இழந்தது.
பிரான்ஸ் அணியில் பயிற்சியாளராக 2007 ஆம் ஆண்டு பினி பொறுப்பேற்றதிலிருந்து கடந்த மார்ச் வரை நடைபெற்ற 12 போட்டிகளில் பிரான்ஸ் தோல்வியடையவில்லை. கனடாவுடனான போட்டியில் 20 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்தது. அமெரிக்கா, அவுஸ்திரேலியா, வடகொரியா ஆகியவற்றுடன் குழு ஜீ யில் உள்ளது பிரான்ஸ்.

மகளிர் உதைபந்தாட்ட அணிகளில் பலவாய்ந்தவற்றில் சுவீடனும் ஒன்று என்று ஒலிம்பிக் போட்டியில் தொடர்ச்சியாகப் பங்குபற்றிய அணி. 2000 ஆம் ஆண்டு சிட்னி ஒலிம்பிக்கில் மூன்றாவது இடத்துக்கான போட்டியில்ஜேர்மனியிடம் தோல்வி கண்டு நான்காவது இடத்தைப் பெற்றது.
2008 ஆம் ஆண்டு பீஜிங்கில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் காலிறுதிவரை முன்னேறியது. பிரான்ஸுடனான ஒலிம்பிக் தகுதிகாண் போட்டியில் 2 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற சுவீடன் எதிரணிகளுக்கு சவால் விடும் வகையில் உள் ளது.  ஜப்பான், கனடா, தென் ஆபிரிக்கா ஆகியவற்றுடன் குழு எஃப் இல் உள்ளது சுவீடன்.

இங்கிலாந்து மகளிர் உதைபந்தாட்ட அணி முதன் முதலில் ஒலிம்பிக் போட்டியில் பங்குபற் றுகிறது. 2007, 2011 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற மகளிர் உதைபந்தாட்ட உலகக் கிண்ணப் போட்டிகளில் காலிறுதிவரை முன்னேறி தோல்வியடைந்தது.
யூ.ஈ.எஃப். ஏ 2009 மகளிர் சம்பியன் கிண்ணப் போட்டியில் இறுதிப் போட்டியில் தோல்வியடைந்து இரண்டாமிடம் பெற்றது.நியூஸிலாந்து, கமரூன், பிரேஸில் ஆகியவற்றுடன் குழு ஈ யில் உள் ளது இங்கிலாந்து.
ரமணி
மெட்ரோநியூஸ்06/07/12

Tuesday, July 3, 2012

போராடத் தயாராகிறது தி.மு.க அடக்க வழி தேடுகிறது அ.தி.மு.க.


தமிழக அரசுக்கு எதிராகப் புதிய போராட்டக் களத்தை அறிவித்துள்ளது திராவிட முன்னேற்றக் கழகம். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி பீடம் ஏறியதும், திராவிட முன்னேற்றக்கழகத்தின் முன்னாள் அமைச்சர்கள் மீது கண்வைத்தது. நில அபகரிப்புகளில் முன்னாள் அமைச்சர்கள் கைது செய்யப்பட்டனர். ஒரு சில நாட்கள் சிறைவாசம் அனுபவித்த அவர்கள் பின்னர் பிணையில் வெளிவந்தனர். முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் பிணையில் வெளிவர முடியாத குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுபவர்கள் ஒருவருடம் பிணையில் வெளிவர முடியாது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் அமைச்சர்கள் கைது செய்யப்படும் போது சட்டப்படி சந்திப்போம்என்று கூறிவந்த கருணாநிதி பொறுத்தது போ தும் பொங்கிஎழு என்று அறை கூவல் விடுத்துள்ளார்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கைது நடவடிக்கையைக் கண்டித்து சிறை நிரப்பும் போராட்டத்தை திராவிட முன்னேற்றக் கழகம் அறிவித்துள்ளது. நான்காம் திகதி நடைபெறும் இப்போராட்டத்தில் இலட்சக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டுச் சிறைக்குள் செல்ல வேண்டும் என்று கருணாநிதி எதிர்பார்க்கிறார். தமிழக அரசின் அராஜகத்தை எதிர்த்துப் போராட வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் இப்போராட்டத்தில் அதிகளவில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெயலலிதா முதல்வரானதும் கருணாநிதி, ஸ்டா   லின், அழகிரி ஆகியோர் கைது செய்யப்படலாம் என்ற சந்தேகம் எழுந்தது. ஸ்டாலினுக்கு எதிராகப் பொலிஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டதும், தன் மீது குற்றம் இருந்தால் தன்னை கைது செய்யும்படி சவால் விட்டார். ஸ்டாலினின் சவாலை சமாளிக்க முடியாத காவல்துறை அமைதியாகிவிட்டது. அழகிரியின் மனைவியின் கட்டிடம் மீதும் நில அபகரிப்புப் புகார் சுமத்தப்பட்டது. இதுவரை சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அழகிரியின் சகாக்கள் கைது செய்யப்பட்டனர். கைது நடவடிக்கையால் மதுரையை ஆட்டிப் படைத்த அழகிரி அமைதியாக இருக்கிறார்.

ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தில் கருணாநிதி கைது செய்யப்பட்டபோது தமிழகமே கொந்தளித்தது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தவிர   சகல அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தன. திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் அமைச்சர்கள் கைது செய்யப்படும் போது எதிர்க்கட்சிகள் கடுமையாகக் கண்டனத்தை தெரிவிக்கவில்லை. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் நடத்தும் கைது படலத்தைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்த முயற்சி செய்கிறது திராவிட மு ன்ற்றக் கழகம்.

சட்டத்தில் உள்ள ஓட்டைகளைத் துல்லியமாகத் தெரிந்து வைத்துள்ளார் ஜெயலலிதா. வைகோவைச் சிறையில் தள்ளி அவரது அரசியல் வாழ்க்கைக்கு முட்டுக்கட்டை போட முயற்சித்தார். அன்று தமிழகம் கொந்தளித்தது. நாட்டைப் பாதுகாக்கும் சட்டங்கள் மூலம் அரசியல் எதிரிகளைப் பழிவாங்குவதில் ஜெயலலிதா முதன்மையானவர். 4 ஆம் திகதி நடைபெறவுள்ள சிறைநிரப்பும் போராட்டத்தைத் தடுப்பதற்கு ஜெயலலிதா முயற்சி செய்வார் என்பதை நன்கு அறிந்துள்ள திராவிட முன்னேற்றக் கழகம் தமிழக பொலிஸ் டி.ஜி.பி. யிடம் மனு ஒன்றைக் கொடுத்துள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தலைவர்களையும், சிறை நிரப்பும் போராட்டத்தின் ஏற்பாட்டாளர்களையும் கைது செய்தால் போராட்டம் பிசுபிசுத்துவிடும் என தமிழக அரசு நினைக்கக் கூடும். ஆகையினால் முன்னெச்சரிக்கையாக வீட்டில் எவரையும் கைது செய்யக் கூடாது என்று மனுக்கொடுத்துள்ளது திராவிட முன்னேற்றக் கழகம்.

 திராவிட முன்னேற்றக் கழக சட்டத் துறை செயலர் ஆர்.எஸ். பாரதி, தமிழக பொலிஸ் டி.ஜி.பி.யிடம் கொடுத்த மனுவில் 12.12. 2003 அன்று அன்றைய சென்னை ஹைகோர்ட் தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி, நீதிபதி ஞானப்பிரகாசம் ஆகியோர் அடங்கிய முதல் பெஞ்ச் வழங்கிய தீர்ப்பின் நகல் இணைக்கப்பட்டுள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் 15.12.2003 அன்று அறவழியில் நடைபெற இருந்த போராட்டம் சார்பில் ஆற்காடு வீராசாமி ரிட் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அந்த ரிட் மனுவுக்கு சென்னை ஐகோர்ட் வழங்கிய தீர்ப்பில் பொலிஸார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக யாரையும் வீட்டில் சென்று கைது செய்யக் கூடாது. பொது இடத்தில் குற்றம் புரிய முயற்சி செய்தால் அவர்களைக் குற்றவியல் நடைமுறைச் சட்டம் 151 ஆவது பிரிவின் கீழ் கைது செய்யலாம். அறப்போர் மறியலில் ஈடுபடுபவர்கள் அமைதியான முறையில் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் ஊர்வலமாகச் செல்வதற்கும், கோஷங்கள் எழுப்புவதற்கும் காவல்துறை அனுமதித்திடல் வேண்டும். மேலும் ஊர்வலம் தொடங்கும் இடத்தையும் முடிவடையும் இடத்தையும் காவல் துறை எழுத்து பூர்வமாகத் தெரிவித்திட வேண்டும். இடைப்பட்ட தூரத்தில் எவரையும் கைது செய்யக்கூடாது.

தமிழக ஆட்சியைப் பறிகொடுத்தாலும் தமிழகத்தில் தனது செல்வாக்கைப் பகிரங்கப்படுத்த இந்தக் சிறை நிரப்பும் போராட்டத்தை நடத்த திராவிட முன்னேற்றக் கழகம் அழைப்பு விடுத்துள்ளது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழக சட்ட சபை உறுப்பினர்கள், மாவட்டத் தலைவர்கள், ஒன்றியச் செயலர்கள் தமது சக்தியை வெளிப்படுத்த வேண்டும் என்று திராவிட முன்னேற்றத் தலைøம விரும்புகிறது.
சிறை நிரப்பும் போராட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்ற ஸ்டாலின் களத்தில் இறங்கியுள்ளார். இப்போராட்டத்தில் கலந்து கொள்வதற்கான அனுமதியைப் பெறுவதற்கு நீதிமன்றத்தை நாடியுள்ளார் கனிமொழி. இப்போராட்டத்துக்கும் தனக்கும் எதுவித சம்பந்தமும் இல்லை என்பது போல ஒதுங்கியுள்ளமை அழகிரி திராவிட முன்னேற்றக் கழகக் கோஷ்டிப் பூசலுக்கு முடிவு கட்ட நினைக்கிறார் கருணாநிதி. பிடி கொடாமல் நழுவுகிறார் அழகிரி.

வர்மா
சூரன்.ஏ.ரவிவர்மா
வீரகேசரிவாரவெளியீடு 01/07/12


Sunday, July 1, 2012

தடம் மாறிய தமிழ்ப்படங்கள் 37


தம்பிக்கு கௌரவமான உத்தியோகம் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் கற்பை விலையாகக் கொடுத்த பெண் ஒருத்தி தன் குடும்பம் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக விலை மாதுவாக மாறிய ஒருத்தியின் கதை தான் 1973 ஆம் ஆண்டு வெளியான அரங்கேற்றம். வயது வந்தவர்களுக்கு மட்டும் என்ற ஏ முத்திரையுடன் வெளியான இப்படம் சகலரையும் கவர்ந்து 100 நாட்களுக்கு மேல் ஓடி வெற்றி பெற்றது.
ஆசாரம் மிக்க பிராமணக் குடும்பத்தைச் சேர்ந்தவர் எஸ்.வி.சுப்பையா அவர் மனைவி எம்.என்.ராஜம் அவர்களுடைய மூத்த மகள் பிரமிளா, பிர

மிளாவின் தங்கைகளான ஜெயசித்திராவும், ஜெயசுதாவும் நடித்தனர். தம்பியாக கமலஹாசன் நடித்தõர். எஸ்.வி.சுப்பையா புரோகிதம் செய்ய மறுத்ததனால் அக்குடும்பம் வறுமையில் வாடியது. மூத்தமகள் பிரமிளா குடும்பச்சுமையை öபாறுப்பெடுத்தாள். தம்பி கமலஹாசனுக்கு டாக்டர் சீட்டு@கட்டு சென்னைக்கு செல்கிறாள் பிரமிளா. தம்பியின் படிப்புக்காக அவளது கற்பு விலைப் பேசப்படுகிறது. தம்பிக்கு வேலை கிடைத்தால் தன்குடும்ப வறுமை தீரும் என்பதனால் தன்னை இழக்கிறாள் பிரமிளா.
தம்பிக்காக தன் கற்பை இழந்த பிரமிளா குடும்பத்துக்காக விலை மாதுவாக மாறுகிறாள். கிராமத்தில் அவளது குடும்ப வறுமை படிப் படியாக நீங்குகிறது. பாடகியாக வர வேண்டும் என்ற தங்கையின் ஆசையை நிறைவேற்றுகிறாள் பிரமிளா. வானொலியில் பாடச் சந்தர்ப்பம் கிடைத்த சகோதரிக்கு மூத்தவள் நீ கொடுத்தாய் வாழ்விலே முன்னேற்றம் முன்னேறும் வழியினில் இளையவள் அரங்கேற்றம்... எனப்பாடுகிறாள்.

தங்கையின் திருமணத்துக்காக வீட்டிற்கு வருகிறாள் பிரமிளா. விதியும் அவள் கூடவே வந்தது. பிரமிளாவின் மேலாடை விலகியிருந்ததைக் கண்ட தா# துணியை சரியாப் போடு என்று கூற ஆம்பிளை என்பதே மரத்துப் போச்சு என்கிறாள். இதனைக் கேட்ட தாய் எம்.என்.ராஜம் அதிர்ச்சியடைகிறாள். மறந்து போச்சு எனக் கூறியிருப்பாள். உனக்கு மரத்துப் போச்சு என்று கேட்டிருக்கும் என்று சமாதானம் கூறுகிறார் எஸ்.வி.சுப்பையா.
பிரமிளாவின் தொழில் விபசாரம் தான் என்பதைத் தெரிந்த குடும்பம் அதிர்ச்சியடைகின்றது. வீட்டினுள் எதிர்ப்பு கிளம்புகிறது. பிரமிளா இதனை விரும்பிச் செய்யவில்லை. குடும்பக் கஸ்டத்தால் தான் மாறினாள் என்பதை அனைவரும் உணர்கின்றனர். பிரமிளாவின் கடந்த கால வாழ்க்கையைத் தெரிந்து கொண்ட சிவகுமார் அவளைத் திருமணம் செய்ய முன் வருகிறார். திருமண ஏற்பாடு நடைபெறுகிறது. பிரமிளாவின் வாழ்க்கை சிறப்பாக அமைய வேண்டும் என்று அனைவரும் விரும்புகின்றனர். புத்தி பேதலித்தநிலையில் மண மேடையை விட்டு இறங்கி விடுகிறாள் பிரமிளா.

பிரமிளா அறிமுகமான படம் இது. குடும்பத்துக்காக பிரமிளா செய்த தியாகத்தை பார்த்த ரசிகர்கள் கண்ணீர் சிந்தினர். பெண் ரசிகைகளை அரங்கேற்றம் வெகுவாகப் பாதித்தது. இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தரின் இயக்கத்தில் உருவான இப்படம் தடை செய்யப்படுமா என்ற அச்சம் எழுந்தது. பாலச்ச‌ந்தர் இயக்கிய முதலாவது பாலியல் படம் இது. பின்னர் இது போன்ற பாலியல் பிரச்சினைகளை மையமாக வைத்து பல படங்களை இயங்கினார் பாலச‌ந்தர்.

ஹிந்தியில் ஆய்னா எனும் பெயரிலும் தெலுங்கில் ஜுவிதரங்கமுரியை பெயரிலும் வெளியாகின. ஆண்டவனின் @தாட்டத்தி@ல அழுகு சிரிக்குது, மூத்தவள் நீ கொடுத்தாய், வாழ்வி@ல முன்@னற்றம், ஆரம்பகாலத்தில் அது இருக்கும். மாப்பிள்ளை இரகசியம் சொல்லவா? ஆகிய கண்ணதாச‌னின் பாடல்களுக்கு சிறப்பாக இசை அமைத்தார் வி.குமார்
ரமணி
மித்திரன்01/07/12