Wednesday, January 31, 2024

தவானின் சாதனையை சமன் செய்த முஷீர் கான்

தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் ஐசிசி அண்டர்-19 உலகக் கோப்பையில் நடப்பு சம்பியன் இந்திய கிரிக்கெட் அணி தங்களுடைய லீக் சுற்றில் 3 போட்டிகளில் 3 வெற்றிகளை பெற்று சூப்பர் 6 சுற்றுக்கு தகுதி பெற்றது.    ஜனவரி 30ஆம் திகதி ப்ளூம்போய்ண்டீன் நகரில் தங்களுடைய முதல் சூப்பர் 6 போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொண்ட இந்தியா 214 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்த போட்டியில் முதலில்துடுப்பெடுத்தாடியஇந்தியா 50 ஓவர்களில்  5விக்கெற்களை இழந்து 295  ஓட்டங்கள் குவித்தது. இந்தியா சார்பில் அதிகபட்சமாக முசீர் கான் 13 பவுண்டரி 3 சிக்சருடன் சதமடித்து 131 (126) ஆதர்ஷ் சிங் 52 ஓட்டங்கள் எடுத்த நிலையில் நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக மேசன் கிளார்க் 4 விக்கெட்டுகள் எடுத்தார்.

215  ஓட்ட வெற்றி இலக்குடன்  களமிறங்கிய நியூசிலாந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி  81 ஓட்டங்கள் எடுத்து  தோல்வியை சந்தித்தது.

கப்டன் ஆஸ்கர் ஜான்சன் 19 ஓட்டங்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக சௌமி பாண்டே 4 விக்கெட்களை எடுத்தார். அதனால் மெகா வெற்றி பெற்ற இந்தியா செமி ஃபைனல் வாய்ப்பை ஏறத்தாழ உறுதி செய்து அடுத்த சூப்பர் 6 போட்டியில் நேபாளை எதிர்கொள்ள உள்ளது. இந்த தொடரில் இளம் வீரர் சர்பராஸ் கான் தம்பி முஷீர் கான் அபாரமாக விளையாடி இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றி வருகிறார்.

யர்லாந்துக்கு எதிரான போட்டியில் 118 (106) ஓட்டங்கள் விளாசி சதமடித்த அவர் இந்த போட்டியிலும் சதமடித்து இந்தியாவை வெற்றி பெற வைத்துள்ளார். இதன் வாயிலாக அண்டர்-19 உலககோப்பை வரலாற்றில் ஒரு தொடரில் 1க்கும் ஏற்பட்ட சதங்கள் அடித்த இந்திய வீரர் என்ற ஜாம்பவான் ஷிகர் தவான் சாதனையை அவர் சமன் செய்துள்ளார். இதற்கு முன் கடந்த 2004 அண்டர்-19 உலகக் கோப்பையில் ஷிகர் தவான் 3 சதங்கள் அடித்துள்ளார்.

இத்தொடரில் இதுவரை 4 போட்டிகளில் அவர் 325* ரன்களை 81.25 என்ற அபாரமான சராசரியிலும் குவித்துள்ளார். இதன் வாயிலாக பாகிஸ்தானின் ஷாசப் கானை (234) முந்தியுள்ள முசீர் கான் 2024 அண்டர்-19 உலகக் கோப்பையில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையும் படைத்துள்ளார். இது போக 4* விக்கெட்டுகளையும் எடுத்துள்ள அவர் ஆல் ரவுண்டராக இந்த உலகக் கோப்பையில் அசத்தி வருகிறார்.

Saturday, January 27, 2024

ஒலிம்பிக் ஜோதி பாதைக்கு அதி உயர் பாதுகாப்பு


  ஒலிம்பிக் போட்டியின் சின்னமான ஒலிம்பிக் ஜோதிக்கு  100 போலிஸ் அதிகாரிகள்,முகவர்களுடன் சிறப்பு பாதுகாப்பு நடவடிக்கை இருக்கும் என்று பிரெஞ்சு உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டார்மானின் அறிவித்தார்.

இந்த பாதுகாப்புவளையத்துக்க்ள் , 18 பொலிஸ் அதிகாரிகள்  சிவிலியன்கள் போல் உடையணிந்து, மார்சேய்  பாரிஸ் இடையே ரிலேவை இயக்கும் நபரின் பாதுகாப்பை உறுதி செய்வார்கள், நபர் மற்றும் ஜோதி இருவருக்கும் நெருக்கமான பாதுகாப்பை வழங்குவார்கள்.

ரிலேக்களின் பாதுகாப்பைப் பொறுத்த வரையில், 100 முகவர்கள் கொண்ட நடமாடும் படை வாகனத் தொடரணியின் முன்னும் பின்னும் நிறுத்தப்படும் என்றும், "எந்தவிதமான பொதுச் சீர்கேட்டையும்" எதிர்த்துப் போராடுவதற்கும்தயாராக இருக்கும் என்றும் தெரியவந்துள்ளது.

இடையூறு ஏற்படுவதற்கான முக்கிய ஆபத்து "தீவிர இடது" சுற்றுச்சூழல் குழுக்களிடமிருந்து வருகிறது. "தற்போதைக்கு வலதுபுறத்தில் இருந்து எந்த திட்டமும் இல்லை," என்று அவர் மேலும் கூறினார். டார்ச் ரிலே தலைநகருக்கு தெற்கே 800 கிலோமீற்றர் தொலைவில் உள்ள மார்சேயில் மே 8 ஆம் திகதி தொடங்கி 26 ஆம் திகதி பரிஸில் முடிவடையும். 80 நாள் பயணமாகத் திட்டமிடப்பட்டுள்ளது.


வழியில், ஒலிம்பிக் சுடர் 100 சின்னமான தளங்கள், 400 க்கும் மேற்பட்ட இடங்கள் மற்றும் ஐந்து வெளிநாட்டு பிரதேசங்களை பார்வையிடும், வழியில் 65 நிறுத்தங்கள் உள்ளன. மோட்டார் சைக்கிள்   பிரிவுகள், ட்ரோன் எதிர்ப்பு வல்லுநர்கள் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு  பொலிஸார் உட்பட 100 மொபைல் பாதுகாப்புப் படைகளின் "பாதுகாப்பு வலையத்துக்க்குள்" சுடர் கொண்டு செல்லப்படும் என்று உள்துறை அலுவலக செய்திக்குறிப்பில் விவரிக்கப்பட்டுள்ளது.

ஜோதிக்கான பாதுகாப்புச் செலவு ஒரு மில்லியன் யூரோக்கள் என்று அமைச்சரே உறுதிப்படுத்தினார். பிரான்சில் ஜோதியின் வருகைக்காக, குறிப்பாக மத்தியதரைக் கடல் கடற்கரையான மார்சேயில், சுமார் 5,000 காவல்துறை அதிகாரிகள் , 150,000 மக்களைக் கொண்டிருக்கும் வகையில் அணிதிரட்டப்பட்டது.

பிரெஞ்சு பாதுகாப்புப் படைகள் சுமார் 12,000 பேரை ஜோதி ஏந்தியவர்களாகப் பதிவு செய்துள்ளதாகவும், அவர்களின் குற்றப் பின்னணி காரணமாகவும், போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையவர்கள் மற்றும்   என்று சந்தேகிக்கப்படுவதாலும் ஜோதி ஓட்டத்தில் பங்கேற்கத் தேர்ந்தெடுக்கப்பட்ட 13 பேரை நிராகரித்துள்ளதாக அமைச்சர் தர்மானின் உறுதிப்படுத்தினார்.   இஸ்லாமிய குழுவுடன் தொடர்புடைய  ஒருவரும் இடைநிறுத்தப்பட்டுள்ளார்.


ராமரை முன்னிறுத்தும் பா.ஜா.க காங்கிரஸைக் கைவிடும் கட்சிகள்

இந்தியப் பொதுத்தேர்தலுக்கு இன்னமும் சுமார் மூன்று மாதங்கள்  உள்ளனன. சகல அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கு ஆயத்தமாகி விட்டன. தேர்தல் எப்போது நடக்கும் என்ற அறிவிப்பு உத்தியோக  பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆனால், பாரதீய ஜனதாக் கட்சி தேர்தல் பரப்புரையை ஆரம்பித்துவிட்டது.

"அயோத்திக்கு ராமர்  மீண்டும் வந்துவிட்டார்" என்ற பாரதீய ஜனதாவின் கோஷம்  வடமாநில மக்களை எழுச்சியடையச் செய்துள்ளது. ஸ்ரீ ஜெய் ராம்  எனும்  உச்சரிப்பு  மத  உணர்வுகளைத் தூண்டியுள்ளது.  கடந்தகால தேர்தல்களில்  மோடியை  முன்னிலைப் படுத்தியே பாரதீய ஜனதாக் கட்சி தேர்தல் பரப்புரை செய்தது. மாநிலத் தேர்தல்களில்  முதலமைச்சரைத் தெரிவிக்காது  மோடி தேர்தலில் போட்டியிடுகிறார் என்றே பாரதீய ஜனதா அறிவிக்கும். மோடியின் முகத்திரையை எதிர்க் கட்சிகள் கிழித்துவிட்டன.  ராகுலின் பாத யாத்திரை வடமாநிலங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளன.

அதலால் தான் முழுமையடையாத ராமர் கோயிலுக்கு  அவசரமாக  அவசரமாக  மும்பாபிஷேகம் செய்யப்பட்டது.  இந்திய மடாதிபதிகள், சாதுக்கள் ஆகியோரின் எதிர்ப்பையும்  பொருட்படுத்தாது நடைபெற்ற கும்பாபிஷேகத்தில் இலட்சக் கணக்கான மக்கள் கலந்துகொண்டார்கள். மும்பாபிஷேகத்தில்  திரண்ட மக்களின்  வாக்குகளை அள்ளலாம் என பாரதீய ஜனதாக் கட்சி கணக்குப் போடுகிறது. மத  உணர்வுகளுக்கு அடிமையாகும் வடமாநில மக்கள் அதற்கு இரையாவார்கள்  என்பது வெளிப்படையானது.

ராமரின்  சிலையை கர்ப்பக்கிரகத்தில் பிரதிஷ்டை செய்வதற்கு மோடிக்குத்  தகுதில் இல்லை என்ற குற்றச்சாட்டை ராம பக்தர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், மோடிய ஏற்றுக்கொள்ளாத தமிழக மக்கள் ராமரையும் தேர்தலில் புறக்கணிப்பார்கள். தமிழகம் உட்பட தென் மாநிலங்களில்  ராமரின்  கோஷம் எடுபட்டது என்பதை தேர்தலின்  போது பாரதீய ஜனதாக் கட்சி தெரிந்துகொள்ளும்

 பாரதீய ஜனதாவைத் தூக்கித்தலையில் வைத்திருந்த எடப்பாடி ழனிச்சாமி, ராமர் கோயில் கும்பாபிஷேகத்தால் தமிழக வாக்குகளைப் பெற முடியாது என  மிக காட்டமாக தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.

இந்தியாவின் எதிர்க் கட்சிகள் அனைத்தும் இன்றிணைந்தால் பாரதீய ஜனதாவை வீழ்த்தலாம் என்பது சாதாரண வாக்காளருக்குத் தெரிந்த உண்மை. பதவி ஆசை பிடித்த அரசியல்  மாநில அரசியல் தலைவர்களினால்  பாரதீய ஜனதாவை வீழ்த்த  முடியவில்லை. 28 எதிர்க் கட்சிகள்  இணைந்து "இந்தியா" என்ற கூட்டணைய  உருவாக்கியதால்  பாரதீய ஜனதா கலங்கியது. அதேவேளை இந்தியக் கூட்டணி நிலைக்காது எனச் சொல்லியது.  இப்போது அது நிரூபணமாகிற நிலை தோன்றியுள்ளது.

தேசியக் கட்சியான காங்கிரஸின் தலைமையில்  தேர்தலைச் சந்தித்த மாநிலக் கட்சிகள்  இன்று வளர்ச்சியடைந்து   காங்கிரஸுக்கு எதிராக அரசியல் நடத்துகின்றன. காங்கிரஸ் கட்சியின் ஆதரவால் வளர்ந்த மாநிலக் கட்சிகளும், காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறிய தலைவர்களால்  உருவாக்கப்பட்ட கட்சிகளும் காங்கிரஸுக்கு மிகப் பெரிய எதிரியாக  இருக்கின்றன.

தேசிய அளவில் காங்கிரஸ் கட்சியை பல்வேறு மாநில கட்சிகள் கழற்றிவிட தொடங்கி உள்ளன. இந்திய நாடாளுமன்றத்  தேர்தலில் இந்திய கூட்டணியில் போட்டியிட மாட்டோம் என்று திரிணாமூல் காங்கிரஸ் அறிவித்துள்ளது.   தேசிய அரசியலில் என்ன நடந்தாலும், எங்களுக்கு கவலை இல்லை. நாங்கள் லோக்சபா தேர்தலில் தனித்து போட்டியிடுவோம் என்று மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.    இந்தியா கூட்டணியில் இருக்கிறோம் .  ஆனால், தனித்து போட்டியிடுவோம் என்று அவர் கூறியது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சியும்   தேர்தலில் தனித்து போட்டியிடும் என்று அறிவித்துள்ளது. காங்கிரஸ் உடன் இருக்க மனமின்றி பஞ்சாப்பில் ஆம் ஆத்மி இந்த முடிவை எடுத்துள்ளது.  டெல்லியிலும், பஞ்சாப்பிலும் காங்கிரஸுடம் இருந்து ஆட்சியைப்  பறித்த ஆம் ஆத்மி எச்சரிக்கையாக  இருக்கிறது

பீகாரில் பாரதீய ஜனதாவை எதிர்த்த நிதீஷ்குமார் மீண்டும் பாரதீய ஜனதாவுக்குச் செல்ல  முயற்சிக்கிறார்.  இந்தியக் கூட்டணிக்கு அத்திபாரமிட்ட நிதீஷ்குமார்  வெளியேறுவது ஆச்சரியமானதல்ல. நிதீஅஹ் குமாரின் கடந்தகால அரசியல் செயல்பாடுகள் நிலையற்றதகவே உள்ளன. பாரதீய ஜனதாவுடன்  இணைவதும்,  வெளியேறுவதும் அவருக்கு  சர்வ சாதாரணமானது.

தமிழகத்தில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்  போது காங்கிரஸுக்கு  10 தொகுதிகளை திராவிட முன்னேற்றக் கழகம் கொடுத்தது. இந்த முறை ஒற்றை  இலக்கத்தில் தொகுதிகளைக்  கொடுக்கப்  போவதாக செய்திகள் கசிந்துள்ளன. 15 தொகுதிகளுக்குக் குறி வைத்திருகும் காங்கிரஸுக்கு இது  பெரிய அதிர்ச்சியாக  உள்ளது.

பாரதீய ஜனதாவில் இருந்து வெளியேறினால் சிறுபான்மைக் கட்சிகள்  ஒடி வரும் எனக் கணக்குப் போட்ட எடப்பாடி பழனிச்சாமி கலங்கிப் போயுள்ளார். இஸ்லாமிய, கிறிஸ்தவ அமைக்குகளைக் கூட்டி மாபெரும்  கூட்டங்களை எடப்பாடி பழனிச்சாமி ஏற்பாடு செய்தார். எதிர்பார்த்த பலனை அவை கொடுக்கவில்லை. பாரதீய ஜனதாக் கூட்டணியில் இருந்து வெளியேறி விட்டோம் என எடப்பாடி உரத்துச் சொன்னாலும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் திரும்ப வரும் என்ற நம்பிக்கை பாஜகவுக்கு இருக்கிறது.

விஜயகாந்த் மறைந்த  சோகத்தில் தமிழகம்  இருந்த வேளையில் அவருடைய மனைவி பிரேமலதா அரசியல் பேசியதை எவரும் ஏற்கவில்லை. உச்சத்தில் இருந்த கட்சி பதாளத்தில்  வீழ்ந்த  போது விஜயகாந்தாலும் தூக்கி  நிறுத்த முடியவில்லை.  இந்த நிலையில் வாய்ச் சவடால் விடுத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்  பிரேமலதா. விஜயகாந்த் இயக்கம்  இல்லாமல் இருந்த போது  பிரேமலதாவை நம்பி  கூட்டணி வைக்க எந்தக் கட்சியும் முன்வரவில்லை

 கலைத்துறையில் சேவையாற்றியதற்காக விஜயகாந்துக்கு பத்ம பூஷண் விருதை  அறிவித்த  இந்திய மத்திய அரசு  பிரேமலதாவுக்குப் பொறிவைத்துள்ளது.  பாரதீய ஜனதாவுடன் இணைந்து மத்திய அமைச்சராகிவிடலாம் என கனவில்   பிரேமலதா  இருக்கிறார். கட்சியை பாரதீய ஜனதாவுடன்  இணைக்கும்படி  டெல்லி மேலிடம்  உத்தரவிட்டுள்ளதாம். பிரேமலதா அமைச்சராகப் போகிறாரா அல்லது விஜயகாந்தின் கனவை நிறைவேற்றப்  போகிறாரா என்பதை அறிய அவரின் ரசிகர்கள் மட்டுமல்லாது தமிழகமே எதிர்பார்ப்புடன்  இருக்கிறது.  

Sunday, January 21, 2024

Under 19 உலகக் கிண்ணத்தில் ஆதிக்கம் செலுத்தும் இந்தியா

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ண (அண்டர் 19 உலகக் கோப்பை) கிறிக்கெற் போட்டி  ஜனவரி 19ஆம் திகதி  தென் ஆபிரிக்காவில் ஆரம்பமானது.   இலங்கையில் நடைபெறவிருந்த இந்த போட்டி பல்வேறு காரணங்களால்  தென்னாப்பிரிக்காவுக்கு  மாற்றப்பட்டது. 16 நாடுகள்  இந்ந்த்சப் போட்டியில் விளையாடுகின்றன.  5 மைதானங்களில்  41  போட்டிகள் நடைபெற உள்ளன.

குரூப் ஏ - பங்களாதேஷ், இந்தியா, அயர்லாந்து, அமெரிக்கா

குழு பி - இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, தென்னாப்பிரிக்கா, மேற்கிந்திய தீவுகள்

குரூப் சி - அவுஸ்திரேலியா, நமீபியா, இலங்கை, ஸிம்பாப்வே

குழு டி - ஆப்கானிஸ்தான், நேபாளம், நியூசிலாந்து, பாகிஸ்தான்

 50 ஓவர்கள் வடிவத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. விராட் கோலி, கேன் வில்லியம்சன், ஸ்டீவ் ஸ்மித், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், யுவராஜ் சிங், முகமது கைப் மற்றும் பாபர் அசாம் போன்ற பல முக்கிய வீரர்கள் அண்டர் 19 உலகக் கோப்பை போட்டியில் சிறப்பாக விளையாடியே சர்வதேச போட்டிகளில் அறிமுகமாகினர்.

 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ண  கிறிக்கெற் போட்டியில் அதிகமுறை இந்திய அணியே வென்று ஆதிக்கம் செலுத்தியுள்ளது. இந்த முறையும் இந்திய அணி நடப்பு சம்பியனாக களமிறங்கும். இதுவரை 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணப்   போட்டியில்  இந்தியா ஐந்து  முறை சம்பியனானது.   மூன்று முறாஇ ரன்னர்  -அப் ஆந்து.

இந்திய அணி 2000, 2008, 2012, 2018 , 2022 ஆகிய ஆண்டுகளில் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கிண்ணத்தை வென்றது. இந்தியாவுக்கு அடுத்தபடியாக  அவுஸ்திரேலியா இதுவரை மூன்று முறை வென்று இரண்டாவது இடத்தில் உள்ளது.   1998, 2002 , 2010 ஆகிய ஆண்டுகளில் அவுஸ்திரேலிய அணி பட்டத்தை வென்றுள்ளது.

பாகிஸ்தான் இரண்டு முறை வென்றுள்ளது.  கடந்த 2004 ,2006 ஆம் ஆண்டுகளில்  பாகிஸ்தான் சம்பியனானது. 

1998 ம் ஆண்டு  இங்கிலாந்து,2014 ம் ஆண்டு  தென்னாப்பிரிக்கா,2016 ம் ஆண்டு மேற்கு இந்தியா,2020 ம் இறுதிப்போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி பங்களாதேஷ் சம்பிஅனாகின.  இலங்கை ஒரே  ஒரு முறை இருதிப் போட்டியில் விளையாடி தோல்வியடைந்தது.

முகமது நபியின் மகன் ஹசன் ஐசகில் , ரஷித் கானின் மருமகன் உஸ்மான் ஷின்வாரி ஆகியோர் 2024 ஆம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

உலகக்கிண்ணப் போட்டிக்காக சவூதியில் ஹைடெக் ஸ்டேடியம்

  2034 ஆம் ஆண்டு  உலகக் உதைபந்தாட்டப் போட்டியை நடத்தும் சவூதி அரேபியா    ரியாத் அருகே 200 மீற்றர் உயரமான குன்றின் மேல்  45,000 இருக்கைகள் கொண்டஹைடெக் ஸ்டேடியத்திற்கான வடிவமைப்புகளை வெளியிட்டது.

அடுத்த தசாப்தத்தில் உலக விளையாட்டுகளில் முக்கிய நாடாக  மாற விரும்பும் எண்ணெய் வளம் மிக்க இராச்சியத்தின் பட்டத்து இளவரசருக்காக இளவரசர் முகமது பின் சல்மான் ஸ்டேடியம் என்று  அதற்குப் பெயரிடப்படும் . இந்த வடிவமைப்பில் உள்ளிழுக்கும் கூரை  ,நூற்றுக்கணக்கான மீற்றர் திரைகள் கொண்ட எல்இடி சுவரும் ரசிகர்களுக்கு அதிவேக அனுபவத்தை உருவாக்குகிறது என்று கிடியா முதலீட்டு நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சவூதியின் தலைநகரான ரியாத்தில் இருந்து 45 கிமீ (30 மைல்) தொலைவில் பொழுதுபோக்கு, கேமிங் மற்றும் விளையாட்டு மையத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட கிடியா நகரத் திட்டத்தின் மையப் பகுதியாக இந்த மைதானம் உள்ளது. எல்இடி சுவர் கீழே நகரத்தின் காட்சிகளை திறக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

புதிய ஸ்டேடியம் அல்-நாஸ்ர் , அல்-ஹிலால் ஆகிய ரியாத் கிளப்புகளின் சொந்த மைதானமாக  மாறும்.   கடந்த ஆண்டு முறையே கிறிஸ்டியானோ ரொனால்டோ,நெய்மரை அந்த அணிகள்  ஒப்பந்தம் செய்தன.

. 48 அணிகள் பங்கேற்கும் போட்டிக்கு 14 மைதானங்கள் தேவை என்று  பீபா  ஏல ஆவணங்கள் கூறுகின்றன. எதிர்காலத்திற்கான புதிய நகரமான நியோம் உலகக் கோப்பை திட்டத்தில் இருக்க வாய்ப்புள்ளது.