Showing posts with label மொராக்கோ. Show all posts
Showing posts with label மொராக்கோ. Show all posts

Tuesday, July 14, 2026

3,000 புலம்பெயர் வீரர்களைக் கண்காணிக்கிறது மொராக்கோ

இரட்டைக் குடியுரிமை பெற்றவர்களைத் தேர்வு செய்யும் நீண்டகால உத்தியின் ஒரு பகுதியாக,   ஐரோப்பா முழுவதும் உள்ள சுமார் 3,000 மொராக்கோ வீரர்களின் தரவுத்தளத்தை மொராக்கோவின் உதைபந்தாட்டக்  கூட்டமைப்பு பராமரித்து வருகிறது என்று 'தி அத்லெடிக்' வெளியிட்ட ஒரு விரிவான அறிக்கை தெரிவிக்கிறது.

ராயல் மொராக்கோ உதைபந்தாட்டக்  கூட்டமைப்பின் புலம்பெயர் வீரர்களைக் கண்டறியும் துறையால் நிர்வகிக்கப்படும் இந்தத் தரவுத்தளம், எட்டு அல்லது ஒன்பது வயது சிறுவயதிலிருந்தே மொராக்கோ வீரர்களைக் கண்காணிக்கிறது. ராபி டகாசாவால் ஒருங்கிணைக்கப்பட்டு, ஸ்பெயின், பிரான்ஸ், பெல்ஜியம், நெதர்லாந்து, ஜேர்மனி, இத்தாலி , ஸ்காண்டிநேவியாவில் உள்ள வீரர்களைக் கண்டறியும் முகவர்களால் ஆதரிக்கப்படும் இந்த வலையமைப்பு, வீரர்களின் வளர்ச்சி முழுவதும் அவர்களைக் கண்காணிப்பதோடு, அவர்களது குடும்பத்தினருடனும் உறவுகளை வளர்த்துக் கொள்கிறது.

மொராக்கோவின் சமீபத்திய வெற்றியில் இந்த உத்தி ஒரு முக்கிய பங்காற்றியுள்ளது என்றும், 2026 உலகக்கிண்ணப் போட்டிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட 26 வீரர்களில் 19 பேர் மொராக்கோவிற்கு வெளியே பிறந்தவர்கள் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது. அதன் மிகப்பெரிய வெற்றிகளில், 2024-ல் ஸ்பெயினிலிருந்து மாறிய பிராஹிம் தியாஸ் , FRMF தலைவர் ஃபௌஸி லெக்ஜா ,தலைமைப் பயிற்சியாளர் முகமது உவாபி ஆகியோருடனான சந்திப்புகளுக்குப் பிறகு, போட்டிக்குச் சற்று முன்பு பிரான்ஸைக் கைவிட்டு  மொராக்கோவைத் தேர்ந்தெடுத்த அய்யூப் புவாடி ஆகியோரும் அடங்குவர்.

அட்லஸ் லயன்ஸ் அணிக்காக விளையாட பார்சிலோனா நட்சத்திர வீரர் லமின் யமலை சம்மதிக்க வைக்க மொராக்கோ விரிவான முயற்சி மேற்கொண்டதாகவும், அவர் இறுதியில் ஸ்பெயினைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்பு வாலித் ரெக்ராகுய், லெக்ஜா இருவரும் அந்த வீரரையும் அவரது குடும்பத்தினரையும் சந்தித்ததாகவும் 'தி அத்லெடிக்' மேலும் வெளிப்படுத்துகிறது.

  

Friday, July 10, 2026

மொராக்கோவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது பிரான்ஸ்

பாஸ்டன் ஸ்டேடியத்தில் நடைபெற்ற  உலகக்கிண்ண  காலிறுதிப் போட்டியில், மொராக்கோவை எதிர்த்து விளையாடிய பிரான்ஸ்  2-0 என்ற கோல் கணக்கில்வெற்றி பெற்றி அரையிறுதிக்கு முன்னேறியது.

ஆட்டத்தின் இரண்டாம் பாதியில் கைலியன் எம்பாப்பே60 ஆவது நிமிடத்திலும், உஸ்மான் டெம்பலே 66 நிமிடத்திலும் அடித்த கோல்கள், மொராக்கோவை  பிரான்ஸ் வெல்ல வழிவகுத்தன. இந்தத் தொடரில் எம்பாப்வே அடிக்கும்  எட்டாவது கோலாகும். இதன் மூலம், இரண்டு உலகக்கிண்ணத் தொடர்களிலும் குறைந்தது 8 கோல்களை அடித்த முதல் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.டெம்பலே நடப்பு பலோன் டி'ஓர் விருதை வென்றவர் மற்றும் இந்த உலகக் கோப்பையில் ஐந்து கோல்களை அடித்துள்ளார்.

  தொடர்ந்து மூன்று உலகக் கிண்ண இறுதிப் போட்டிகளுக்குத் தகுதிபெறும் இரண்டாவது ஐரோப்பிய நாடு என்ற பெருமையைப் பெறும் தனது முயற்சியை பிரான்ஸ் தொடர்ந்தது.

   2022 உலகக்கிண்ண  அரையிறுதியில்பிரான்ஸும் , மொராக்கோவும் மோதின. அதில் பிரான்ஸ் 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றிருந்தது.

முதல் பாதி ஆட்டம் கிட்டத்தட்ட ஒருதலைப்பட்சமாக இருந்தது, ஏனெனில் பிரான்ஸ் 13 முறை கோல் அடிக்க முயற்சித்த நிலையில், மொராக்கோவால் ஒரே ஒரு முறை மட்டுமே கோல் அடிக்க முயற்சித்தது.

ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்தே பிரான்ஸ் அணி அச்சுறுத்தியது; எம்பாப்பேவின் நீண்ட தூர ஷாட்டை யாசின் பூனூ தடுத்தார், அதற்குச் சில வினாடிகளுக்கு முன்பு டயோட் உபாமெக்கானோவின் தலையால் முட்டிய பந்தை அல் ஹிலால் கோல்கீப்பர் தடுத்துவிட்டார்.

25-வது நிமிடத்தில், எம்பாப்பே பெனால்டி பகுதிக்குள் நுழைந்தபோது நௌசைர் மஸ்ராவியால் கீழே தள்ளப்பட்டார், அப்போது பிரான்ஸுக்கு ஒரு பெனால்டி கிடைத்தது. ஆனால், எம்பாப்பேவின் பலவீனமான முயற்சியை பூனூ வீரதீரமாகச் செயல்பட்டுத் தடுத்தார். 

ஆட்டத்தின் பிற்பகுதியில்  வலது கணுக்காலிலேற்பட்ட காயம் காரணமாக எம்பாப்வே வெளியேறினார்.அவர் இப்போது 20 உலகக்  கிண்ணப் போட்டிகளில்  20 கோல்களை அடித்துள்ளார், இது மெஸ்ஸியின் ஒட்டுமொத்த தொடர் சாதனையான 21 கோல்களை விட ஒரு கோல் மட்டுமே குறைவாகும்.

பிரான்சின் வரலாற்றில் அதிக கோல் அடித்த வீரராக எம்பாப்வே திகழ்கிறார். தற்போது 104 சர்வதேசப் போட்டிகளில் 64 கோல்களை அடித்துள்ளார்.

 

தரவரிசையில் முன்னேறிய மொராக்கோ வீரர்கள்

பிரான்சுக்கு எதிரான மொராக்கோவின் காலிறுதிப் போட்டிக்கு முன்பு, இஸ்மாயில் சைபாரி, அஷ்ரஃப் ஹகிமி மற்றும் யாசின் பூனூ ஆகியோர் போட்டியின் முன்னணி வீரர்களின் பட்டியலில் இடம்பெற்றிருந்ததால், மொராக்கோ வீரர்கள் மூன்று இடங்களுக்கான FIFA-வின் தனிநபர் உலகக் கோப்பை பவர் ரேங்கிங்க்கில் நுழைந்துள்ளனர்.

தாக்குதல், ஆக்கத்திறன் மற்றும் தற்காப்பு ஆகிய குறிகாட்டிகளின் அடிப்படையில் கள வீரர்களை அளவிடும் FIFA-வின் தரவு அடிப்படையிலான தரவரிசை அமைப்பின்படி, சைபாரி 6.51 மதிப்பெண்ணுடன் நடுக்கள வீரர்களில் 14-வது இடத்தைப் பிடித்தார்.

போட்டித் தொடரின் போது மொராக்கோவின் தற்காப்புக் கட்டமைப்பு ,தாக்குதல் உருவாக்கத்தில் ஹகிமியின் பங்கைப் பிரதிபலிக்கும் வகையில், அவர் 6.97 மதிப்பெண்ணுடன் தற்காப்பு வீரர்களில் ஒன்பதாவது இடத்தைப் பிடித்தார்.

கோல்கீப்பர் அளவீடுகளின்படி, ஷாட்களைத் தடுப்பது , பந்தைக் கொண்டு விளையாடுவது ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, பூனோ 7.01 மதிப்பெண்ணுடன் கோல்கீப்பர்களில்  சாய்பாரி, 10வது இடத்தைப் பிடித்தார்.

 

Friday, July 3, 2026

உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர்விட்ட கோட்டி காக்போ

  உலகக் கிண்ண  32 அணிகள் சுற்றுப் போட்டியில் மொராக்கோவுக்கு எதிராக நெதர்லாந்து விளையாடியபோது   92-வது நிமிடத்தில் மொராக்கோ கோல் அடித்து சமன் செய்தது. கோல் அடித்த கோடி காக்போ, பின்னர் கண்ணீர் விட்டு அழுதார்.

கோல் அடிக்கும் வீரர்கள் உணர்ச்சிவசப்பட்டு  அழுவது வழமையானதே. ஆனால்,  கோட்டி காக்போ தன் சிசுவை இழந்த துயரத்தில் அழுதார். சக வீர்ரர்கள் அவரை ஆசுவாசப்படுத்தினர். 

தன் சிசுவை  இழந்த துயரத்தில் இருந்தபோதே ஆடுகளத்திற்குத் திரும்பிய காக்போவின் உணர்ச்சிப்பூர்வமான கோல், அவரது குறிப்பிடத்தக்க வலிமையைக் காட்டியதாக ரசிகர்கள் பாராட்டியுள்ளனர்.

தன் சிசுவை  இழந்த துயரத்திற்கு சில நாட்களுக்குப் பிறகு, தன் நாட்டிற்காக கோல் அடித்ததன் மூலம், நெதர்லாந்து முன்கள வீரர் கோடி காக்போ  உலகக் கிண்ணப் போட்டியில்  மிகவும் உணர்ச்சிப்பூர்வமான தருணங்களில் ஒன்றை நிகழ்த்தினார்.

காக்போவும் அவரது காதலி நோவா வான் டெர் பிஜும், கர்ப்ப காலத்தில் தங்கள் மகன் எலிஜா ரபேல் காக்போ காலமானதை அறிவித்தனர்.

  பெனால்டி ஷூட் அவுட்டில் 3-2 என்ற கோல் கணக்கில் மொராக்கோ வெற்றி பெற்றது. நெதர்லாந்து அணி 16 அணிகள் சுற்றுக்குத் தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது. 

 

 

Tuesday, June 30, 2026

பெனால்டி ஷூட் அவுட்டில் வெற்றி பெற்று மொராக்கோ


  மான்டேரி மைதானத்தில் திங்கட்கிழமை  நடைபெற்ற   உலகக் கிண்ண  32 அணிகள் மோதும் போட்டியில், மொராக்கோ அணி பெனால்டி ஷூட் அவுட்டில் 3-2 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தியது .

 , ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் தலா 1-1 என சமநிலை வகித்ததால், வெற்றியாளரைத் தீர்மானிக்க பெனால்டி ஷூட்-அவுட் முறை பயன்படுத்தப்பட்டது. இதில் 3-2 என்ற கணக்கில் மொராக்கோ அணி வெற்றி பெற்று ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும் தற்காப்பு ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் கோல் ஏதும் அடிக்கப்படவில்லை. தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் பாதியில் ஆட்டத்தின் வேகத்தை இரு அணிகளும் அதிகரித்தன. போட்டியின் 72 ஆவது நிமிடத்தில் நெதர்லாந்து அணியின் சம்மர்வில் கொடுத்த அசிஸ்ட்டை பயன்படுத்தி, கோடி காக்போ மிகச்சிறப்பான முதலாவது கோலை அடித்து நெதர்லாந்து அணியை 1-0 என முன்னிலை பெறச் செய்தார்.

மொராக்கோ அணி ஆட்டத்தை சமன் செய்ய தீவிரமாகப் போராடியது. ஆட்டத்தின் இறுதி நிமிடத்தில் (90-வது நிமிடம்) மொராக்கோ வீரர் தால்பி வீசிய பந்தை, இசா தியோப் ஹெடர் மூலம் கோலாக மாற்றி நெதர்லாந்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். இதன் மூலம் ஆட்டம் 1-1 என்ற கணக்கில் சமநிலையை எட்டியது.

 போட்டி சமநிலையானதைத் தொடர்ந்து கூடுதலாக வழங்கப்பட்ட 30 நிமிடங்களிலும் இரு அணிகளும் கோல் அடிக்க எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. கு  நெதர்லாந்து கோல்கீப்பர் வெர்ப்ரூஜென் மொராக்கோவின் சில மிகச்சிறந்த கோல் முயற்சிகளைத் தடுத்து நிறுத்தினார். 

இந்த பரபரப்பான வெற்றியைத் தொடர்ந்து மொராக்கோ அணி உலகக் கோப்பையின் ரவுண்ட் ஒஃப் 16 சுற்றுக்கு அதிகாரப்பூர்வமாக முன்னேறியுள்ளது. அடுத்ததாக நடைபெறவுள்ள ரவுண்ட் ஒஃப் 16 போட்டியில் கனடா அணியை மொராக்கோ எதிர்கொள்ளவுள்ளது.