Friday, March 29, 2024

523 ஓட்டங்கள் 38 சிக்ஸர்கள் ஹைதராபாத் உலகசாதனை

ஹைதராபாத்தில்  நடைபெற்ற  மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான  போட்டியில் சன் றைசஸ் ஹைதராபாத் 31 ஓட்டங்களால்   ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

  முதலில் துடுப்பெடுத்தாடிய   ஹைதராபாத்  20 ஓவர்களில்  3 விக்கெட்களை இழந்து  277  ஓட்டங்கள் எடுத்தது.   278ஓட்டங்களைத் துரத்திய மும்பை   20 ஓவர்களில்  5 விக்கெட்களை  இழந்து 246  ஓட்டங்கள் எடுத்தது.   சன் ரைசர்ஸ் ஹைதராபாத் : 277/3, மும்பை இந்தியன்ஸ்க்கு எதிராக, 2024* (ஐபிஎல்),மெல்போர்ன் ஸ்டார்ஸ் : 273/2, ஹோபார்ட் ஹரிகேன்ஸ்க்கு எதிராக, 2022 (பிக்பேஷ்) , டைட்டன்ஸ் : 271/3, நைட்ஸ் அணிக்கு எதிராக, 2022 (சிஎஸ்ஏ டி20)

ஹைதராபாத் 277, மும்பை 246  ஓட்டங்கள்  என  இரண்டு  அணிகளும் சேர்ந்து மொத்தம் 523  ஓட்டங்கள் குவித்தன. இதன் வாயிலாக 17 வருட ஐபிஎல் வரலாற்றில் 500க்கும் மேற்பட்ட ஓட்டங்கள் குவிக்கப்பட்ட முதல் போட்டி என்ற சாதனையை இப்போட்டி படைத்தது.  2010 ஐபிஎல் தொடரில் சேப்பாக்கத்தில் நடைபெற்ற சென்னை – ராஜஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் 469 ஓட்டங் கள் அடிக்கப்பட்டதே முந்தைய அதிகபட்சமாகும். அதை விட ஒட்டுமொத்த ரி20 கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்கள் (523) அடிக்கப்பட்ட போட்டி என்ற உலக சாதனையும்   ஹைதராபாத் – மும்பை ஆட்டம் படைத்துள்ளது. இதற்கு முன் கடந்த 2023இல் செஞ்சூரியன் மைதானத்தில் தென்னாப்பிரிக்கா , மேற்கி இந்திய   அணிகள் மோதிய போட்டியில் 517 ஓட்டங்கள் அடிக்கப்பட்டதே முந்தைய சாதனையாகும்.

ஹைதராபாத் 18, மும்பை 20 என 2 அணிகளும் சேர்ந்து மொத்தம் 38 சிக்ஸர்கள் அடித்தன. ரி20 கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் அடிக்கப்பட்ட போட்டி என்ற உலக சாதனையும் ஹைதராபாத் – மும்பை ஆட்டம் படைத்துள்ளது. இதற்கு முன் கடந்த 2018 ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடரில் பால்க் – காபூல் அணிகள் மற்றும் 2019 கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் ஜமேக்கா – செயின்ட் கிட்ஸ் அணிகள் மோதிய போட்டியில்   37 சிக்சர்கள் அடிக்கப்பட்டதே முந்தைய சாதனையாகும்.

ஐபிஎல் வரலாற்றிலும் அதிக சிக்சர்களை அடிக்கப்பட்ட போட்டியாக இப்போட்டி சாதனை படைத்தது. இதற்கு முன் 2018இல் சென்னை – பெங்களூரு, 2020இல் சென்னை – ராஜஸ்தான், 2023இல் சென்னை – பெங்களூரு அணிகள் மோதிய 3 போட்டிகளில் தலா 32 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டதே முந்தைய சாதனையாகும்.

ரியான் பராக் அதிரடி வென்றது ராஜஸ்தான்


 டெல்லி கப்பிட்டலுக்கு எதிராக ஜெய்பூரில் நடைபெற்ற  ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ்  12  ஓட்டங்களால்  வெற்றி பெற்றது.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற  டெல்லி களத்தடுப்பைத் தேர்வு செய்தது.  முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் 5  விக்கெற்களை  இழந்து 185  ஓட்டங்கள் எடுத்தது.  186 எனும் வெற்றி இலக்குடன் களம்  இறங்கிய  டெல்லி 18 .6  ஓவர்களில்  5 விக்கெற்களை இழந்து 173  ஓட்டங்கள் எடுத்தது.

ஜெய்ஸ்வால் 5, ஜோஸ் பட்லர் 11 ,கப்டன் சஞ்சு சாம்சன் 15 ஓட்டங்கலில் ஆட்டமிழந்தனர்.  அப்போது களமிறங்கிய இளம் வீரர் ரியான் பராக் நிதானமாக விளையாடினார். அவருடன் ஆச்சரியப்படும் வகையில் ஐந்தாவதாக களமிறங்கி 3 சிக்ஸர்களை பறக்கவிட்ட ரவிச்சந்திரன் அஸ்வின் 54 ஓட்டங்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 29 (19) ஓட்டங்கள் அடித்து ஆட்டமிழந்தார்.

நேரம் செல்ல செல்ல அதிரடியாக விளையாடி ரியான் பராக் அரை சதமடித்து அசத்தினார்.   துருவ் ஜுரேல் 20 (12) ஓட்டங்கள் விளாசி ஆட்டமிழந்தார்.    கடைசி வரை அவுட்டாகாமல் மிரட்டலாக விளையாடிய  ரியன் பராக் 20வது ஓவரில் அன்றிச் நோர்ட்ஜேவுக்கு எதிராக 25 ஓட்டங்கள் அடித்து மொத்தம் 7 பவுண்டரி 6 சிக்சருடன் 84* (45) ஓட்டங்கள் குவித்து சூப்பர் ஃபினிஷிங் கொடுத்தார். அவருடன் சிம்ரோன் ஹெட்மயர் 14* (7) ஓட்டங்கள் எடுத்ததால் 20 ஓவர்கலில்  ராஜஸ்தான் 185 ஓட்டங்கள் எடுத்தது. டெல்லி சார்பில் கலீல் அஹ்மத், குல்தீப், அக்சர், நோர்ட்ஜே, முகேஷ் குமார்  ஆகியோர்  தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

186 ஓட்டங்களைத்  துரத்திய டெல்லிக்கு மிட்சேல் மார்ஷை 23  ஓட்டங்கள்   ரிக்கி புய்யை டக் அவுட் எனத் தடுமாறியபோது,

டெல்லியின் துவக்க வீரர் டேவிட் வார்னர் அதிரடியாக விளையாடினார். ஆனால் எதிர்ப்புறம் வந்த கேப்டன் ரிசப் பண்ட் தடுமாற்றமாக விளையாடினார்.3வது விக்கெட்டுக்கு 67 ஓட்டங்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த இந்த ஜோடியில் வார்னர் 49 (34) ஓட்டங்களில் அவுட்டாக அடுத்த சில ஓவரில் ரிஷப் பண்ட் தடுமாறி 28 (26) ஓட்டங்களுடன் வெளியேறினார்.    கடைசி நேரத்தில் ட்ரிஷன் ஸ்டப்ஸ் அதிரடியாக விளையாடி போராடியதால் வெற்றியை நெருங்கிய டெல்லிக்கு ஆவேஷ் கான் வீசிய கடைசி ஓவரில் 17 ஓட்டங்கள் தேவைப்பட்டது. ஆனால் அதில் 4 ஓட்டங்கள் மட்டுமே எடுத்த டெல்லி 20 ஓவர்களில் 5 விக்கெற்களை இழந்து 173  ஓட்டங்கள்  எடுத்து போராடி தோல்வியடைந்தது.

 இந்த வருட ஐபிஎல் தொடரில் இதுவரை நடைபெற்ற 9 லீக் போட்டிகளிலும் சொந்த மைதானத்தில் விளையாடிய அணிகளே 9 வெற்றிகளை பெற்ற அரிதான நிகழ்வு அரங்கேறியுள்ளது. இதற்கு முன் கடைசியாக 2019 சீசனில் சொந்த மைதானத்தில் விளையாடிய அணிகள் தொடர்ச்சியாக 8 போட்டிகளில் வென்றதே முந்தைய சாதனையாகும்.

                        இளம் புயல்  ரியான்பராக்

 அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ரியான் பராக் கடந்த 2019 முதல் ராஜஸ்தான் அணிக்காக ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார். ஆனால் கடந்த 5 வருடங்களில் 2 அரை சதங்கள் மட்டுமே அடித்து மோசமாக செயல்பட்ட அவர் பல்வேறு தருணங்களில் விராட் கோலியை போல் பேசுவது, நடுவர்களை கலாய்ப்பது, முன்னாள் வீரர்களை மறைமுகமாக கிண்டலடிப்பது போன்ற வேலைகளில் ஈடுபட்டார். அதனால் வாயில் பேசாமல் அடக்கமாக இருந்து செயலில் காட்டுங்கள் என்று ரசிகர்கள் அவரை விமர்சித்து வந்தனர்.

கடந்த வருடங்களில் 6, 7 போன்ற கீழ் வரிசையில் விளையாடி வந்த அவருக்கு இம்முறை ராஜஸ்தான் நிர்வாகம் 4வது இடத்தில் பேட்டிங் செய்யும் வாய்ப்பை கொடுத்தது. அதில் லக்னோவுக்கு எதிரான முதல் போட்டியிலேயே 43 (29) ஓட்டங்கள் அடித்து அசத்திய அவர் இப்போட்டியில் அபாரமாக விளையாடி 84* ஓட்டங்கள் குவித்து தன்னுடைய அதிகபட்ச ஐபிஎல் ஸ்கோரை பதிவு செய்து சொந்த சாதனை படைத்தார்.

  22 வருடம் 139 வயதாகும் ரியான் பராக்  இதுவரை ஐபிஎல் தொடரில் 56, உள்ளூர் தொடரில் 44 என மொத்தமாக 100 ரி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இதன் வாயிலாக ரி20 கிரிக்கெட்டில் மிகவும் இளம் வயதில் 100 போட்டிகளில் விளையாடிய இந்திய வீரர் என்ற சாதனையும் அவர் படைத்துள்ளார். இதையும் படிங்க: இன்னும் 2 வருஷத்துல ரியன் பராக் அதையும்

ஐந்து வருடங்களாக திணறிய அவர் தற்போது இளம்  புயலாக முன்னேறி வருகிறார் என்றே சொல்லலாம். அவர் படைத்துள்ள அந்த சாதனையின் பட்டியல்:

 1. ரியன் பராக் : 22 வருடம் 139 நாட்கள்*

 2. சஞ்சு சாம்சன் : 22 வருடம் 157 நாட்கள்

 3. வாஷிங்டன் சுந்தர் : 22 வருடம் 181 நாட்கள்

4. இசான் கிசான் : 22 வருடம் 273 நாட்கள்

 5. ரிசப் பண்ட் : 22 வருடம் 361 நாட்கள்

Monday, March 25, 2024

ஏழு வீரர்கள் நாடு மாறுவதற்கு ஒப்புதல்

   ஒலிம்பிக் கோடைகால விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க தகுதிபெற ஏழு விளையாட்டு வீரர்கள் தமது தாய் நாட்டில் இருந்து வேறு  நாட்டுக்கு மாறுவதற்கான  கோரிக்கைக்கு சர்வதேச  ஒலிம்பிக் கூட்டமைப்பு   ஒப்புதலளித்துள்ளது.

  கடந்த செவ்வாய்கிழமை லொசானில் நடந்த ஐஓசி நிர்வாக குழு கூட்டத்தில்  ஒலிம்பிக் சாசனத்தின் 41 வது பிரிவின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

 நாடு மாறும் ஒலிம்பிக்  வீரர்களின் விபரம்.

Chahrazed Ayachi - மல்யுத்தம் - பிரான்சிலிருந்து துனிசியா வுக்கு

அனஸ்தேசியா கிர்பிச்னிகோவா - நீச்சல் - ரஷ்யாவிலிருந்து பிரன்ஸுக்கு

அலெக்சாண்டர் கோமரோவ் - மல்யுத்தம் - ரஷ்யாவிலிருந்து சேர்பியா வுக்கு 

ரேச்சல் நெய்லன் - சைக்கிள் ஓட்டுதல்அவுஸ்திரேலியாவிலிருந்து அயர்லாந்துக்கு

Lisa Pou - நீச்சல் - பிரான்சிலிருந்து மொனாக்கோவுக்கு

லெவேனியா சிம் - நீச்சல் - அமெரிக்காவிலிருந்து சிங்கப்பூருக்கு

Ingrid Simão Souto Maior - ஜிம்னாஸ்டிக்ஸ்பிறேஸிலில்  இருந்து   போத்துகலுக்கு

 கடந்த காலங்களில்  நாடு மாறும்  அளவுகோல்கள் மிகவும் மென்மையாக இருந்தன,   சில விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்புகளை அதிகரிக்க அல்லது மற்றொரு நாட்டில் அதிக வெற்றியை அடைய இரட்டை தேசியத்தைப் பெறுவதற்கான செயல்முறையைத் தொடங்கினர்.  இன்று இந்த மற்றம் மிகவும் கடினமாக்கப்பட்டுள்ளது.

Saturday, March 23, 2024

ஐபிஎல் இல் இருந்து வெளியேறிய வீரர்கள்

ஐபிஎல்   திருவிழா மார்ச் 22 ஆம் திகதி சென்னையில் உள்ள எம்ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் ஆரம்பமானது.    சில முக்கியமான வீரகள் காயம் காரணமாக ஐபிஎல் இல் இருந்து  வெளியேறிவிட்டனர். சிலர் முதல் கட்ட  போட்டிகளில்  விளையாட முடியாத நிலையில் உள்ளனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ்

டெவோன் கான்வே: நியூசிலாந்து மற்றும் சிஎஸ்கே தொடக்க ஆட்டக்காரர் டெவோன் கான்வே, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சமீபத்திய தொடரின் போது கட்டைவிரல் காயம் காரணமாக ஐபிஎல் 2024 சீசனின் முதல் பாதியில் இருந்து விலகினார்

மதீஷா பத்திரனா: பங்களாதேஷுக்கு எதிரான ரி20 தொடரின் போது தொடை தசையில் ஏற்பட்ட காயம் காரணமாக, இலங்கை   வீரர் பத்திரனா   நான்கு வாரங்களுக்கு ஓய்வெடுக்க பரிந்துரைக்கப்பட்டது.

ஹரி புரூக்:  இங்கிலாந்தின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் ரி ப்ரூக் டிசம்பர் 2023 முதல் கிறிக்கெற்ரில் இருந்து விலகிவிட்டார்.   மறைவுக்குப் பிறகு தனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட கிரிக்கெட்டில் இருந்து வெளியேறியதாக பின்னர் தெரியவந்தது.     புரூக்கை ரூ 4 கோடிக்கு வாங்கியது. 

லுங்கி என்கிடி:  தென்னாப்பிரிக்காவின் சீமர் லுங்கி என்கிடி தொடக்க ஆட்டத்திற்கு இன்னும் ஒரு வாரம் உள்ள நிலையில் போட்டியில் இருந்து வெளியேறினார். இந்தியாவுக்கு எதிரான ரி20 தொடரின் போது இடது பக்க கணுக்கால் சுளுக்கு ஏற்பட்டதால் ஜனவரி முதல் என்கிடி விளையாடவில்லை.    என்கிடிக்கு பதிலாக அவுஸ்திரேலியாவின் இளம் பேட்டிங் சென்சேஷன் ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க் சேர்க்கப்பட்டார். அவர் தனது அடிப்படை விலையான ரூ.50 லட்சத்தில் கேபிடல்ஸில் சேருவார்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

ஜேசன் ராய்:  இங்கிலாந்து வீரர் ஜேசன் ராய் சமீபத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸுடனான ஐபிஎல் 2024 சீசனில் இருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக விலகினார் .  ராய்க்கு பதிலாக சகநாட்டவரான பில் சால்ட் சேர்க்கப்பட்டார்.  ஐபிஎல் 2024 ஏலத்தில் எடுக்கப்பட்டவர்கள் இல்லை. அவர் தனது அடிப்படை விலையான ரூ.1.5 கோடியில் நைட் ரைடர்ஸ் அணியில் இணைவார்.

கஸ் அட்கின்சன்:  இங்கிலாந்து, வேல்ஸ் கிரிக்கெட் சபை  பணிச்சுமை நிர்வாகக் காரணங்களுக்காக அவரை திரும்பப் பெற முடிவு செய்ததை அடுத்து, இங்கிலாந்தின் வரவிருக்கும் கஸ் அட்கின்சன் தனது முதல் ஐபிஎல் சீசனில் இருந்து விலக முடிவு செய்தார்.  அட்கின்சனுக்கு பதிலாக துஷ்மந்த சமீரா சேர்க்கப்பட்டார். ஏலத்தில் விற்கப்படாமல், இலங்கை சீமர் தனது இருப்பு விலையான ரூ 50 லட்சத்தில்  கொல்கத்தாவுடன் உடன் இணைவார்.

மும்பை இந்தியன்ஸ்

சூர்யகுமார் யாதவ்:    குடலிறக்கத்தால் பாதிக்கப்பட்ட மும்பைக்காரர் ஜனவரி மாதம் ஜேர்மனியில் அறுவை சிகிச்சை செய்தார். இந்த சீசனில் அவர் திரும்பி வர வாய்ப்புள்ள நிலையில், சூர்யகுமார் போட்டியின் ஆரம்பப் போட்டிகளில் விளையாட முடியாமல் போகலாம்.

ராஜஸ்தான் ராயல்ஸ்

பிரசித் கிருஷ்ணா: இரண்டாவது ஆண்டாக, கர்நாடக வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா மற்றொரு காயத்தால் ஐபிஎல்லில் இருந்து வெளியேறினார். பிரசித்தின் மாற்று வீரரை ராஜஸ்தான் இன்னும் குறிப்பிடவில்லை

குஜராத் டைட்டன்ஸ்

முகமது ஷமி :  இந்தியாவின் நட்சத்திர-ஸ்ட்ரைக்கர், நவம்பர் 2023 இல் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் இந்தியா தோல்வியடைந்ததில் இருந்து முகமது ஷமி எந்த ஆட்டத்திலும் இடம்பெறவில்லை. ஷமி, குதிகால் காயத்துடன் விளையாடினார். ஷமி கடந்த மாதம் லண்டனில் வலது காலில் அறுவை சிகிச்சை செய்தார். 

32 வயதான அவர் இந்த ஆண்டின் பிற்பகுதியில் திரும்புவார், மேலும் ஜூன் மாதம் ரி20 உலகக் கோப்பையிலிருந்தும் வெளியேற்றப்படுவார்.  .

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்

மார்க் வுட்:  இங்கிலாந்து விரைவான மார்க் வுட் ஐபிஎல் 2024 சீசனில் இருந்து வெளியேற்றப்பட்டார், பின்னர் ECB பணிச்சுமை மேலாண்மைக்காக அவரை வெளியேற்ற முடிவு செய்தது.   வூட் 2022 இல் சூப்பர் ஜெயண்ட்ஸால் ரூ. 7.5 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார், ஆனால் முழங்கையில் ஏற்பட்ட காயம் அவரை  ஐபிஎல் சீசனில் இருந்து விலக்கியது.  லக்னோ, மேற்கிந்தியத் தீவுகளின் வேகப்பந்து வீச்சாளர் ஷமர் ஜோசப்பை வுட்டின் மாற்றாக   ரூ. 3 கோடிக்கி ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

 

ரமணி

சென்னைக்கு சவால் விட்ட கார்த்திக் அனுஜ் ராவத் ஜோடி



 சேப்பாக்கம் சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெற்ற   2024 ஆம் ஆண்டின் முதலாவதி ஐபிஎல் போட்டியில் ம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் , ரோயல் சலஞ்ச் பெங்களூருவை 5 விக்கெற்களால்  தோற்கடித்து வெற்றியுடன் துவக்கியுள்ளது.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற  பெங்களூரு   நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று  முதலில் துடுப்பெடுத்தாடி  20 ஓவர்களில் 174 ஓட்டங்கள் எடுத்தது. 176  ஓட்டங்கள்  என்ற வெற்றி இலகுடன் களம் இறங்கிய சென்னை 18.4 ஆவது ஓவரில் நான்கு விக்கெட்களை இழந்து 176 ஓட்டங்கள் சேர்த்து இலக்கை எட்டியது.

11.4  ஓவர்களில்  5 விக்கெற்களை இழந்து தடுமறிய  பெங்களூரு 78  ஓட்டங்கள் எடுத்தபோது  ஆற்றாவது விக்கெற்றில் ஜோடி சேர்ந்தசேர்ந்த  தினேஷ்  கார்த்திக், அனுஜ் ராவத் ஆகியோர் நிதானமாக  ஓட்டங்களைச் சேர்த்தும், இறுதி ஓவர்களில் அதிரடியாக விளையாடியும் அணியை 173  ஓட்டங்கள் என்ற கௌரவமான ஸ்கோருக்கு கொண்டு சென்றனர்.

கோலி 21, டுபிளசிஸ் 35, கமரூன் கிறீன் 18, அனுஜ் ராவத்  ஆட்டமிழக்காமல் 48, தினேஷ் கார்த்திக்  ஆட்டமிழக்காமல் 38 ஓட்டங்கள் எடுத்தனர்.  4  ஓவர்கள் பந்துவீசிய  முஸ்தபிசுர் ரஹ்மான் 29 ஓட்டங்களைக் கொடுத்து 4 விக்கெற்களைக் கைப்பற்றினார். கடைசியாக 2008 ஆம் ஆண்டு பெங்களூர் அணி சி எஸ் கே வை சேப்பாக்கம் மைதானத்தில் வென்றது.

   சென்னைக்கு ரச்சின் ரவீந்தரா 37, ரகானே 27, சிவம் துபே 34*, ஜடேஜா 25* ஓட்டங்கள்  எடுத்தனர்.  12.3 ஆவது  ஓவரில்  4  விக்கெற்களை இழந்த சென்னை 110 ஓட்டங்கள் எடுத்தபோது   ஜோடி சேர்ந்த சிவம் துபே , ரவீந்திர ஜடேஜா ஆகியோர் வெற்றி இலக்கை எட்டியது.

  நான்கு புதுமுக வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கி கப்டன் ருதுராஜ் கெய்க்வாட் அதிரடி காட்டியுள்ளார்வெளிநாட்டு வீரர்களான ரச்சின் ரவீந்திரா, டேரல் மிட்சல், முஷ்டபிஸுர் ரஹ்மான் ஆகியோருக்கும்  இந்திய வீரரான சமீர் ரிஸ்வியும் அறிமுகமாகியுள்ளார்.

அண்மையில் இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் காயத்தை சந்தித்த அவர் எழுந்து நடக்க முடியாமல் ஸ்ட்ரெச்சரில் சென்றார். ‍  அதனால் மருத்துவமனைக்கு சென்ற அவர் விளையாட மாட்டார் என்று எதிர்பார்க்கப்பட்டாலும் பெரியளவில் காயத்தை சந்திக்காததால் ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக அறிமுகமானார். ஐபிஎல் தொடரில் ஒரு போட்டியில் 4 விக்கெட்டுகள் எடுத்த முதல்பங்களாதேஷ் வீரர் என்ற சாதனையும் அவர் படைத்தார்.

சென்னை அணியின் 16 வருட சாதனை

பெங்களூரு அணிக்கு எதிராக சேப்பாக்கத்தில் 16 வருடங்களாக தோற்காமல் இருந்து வரும் கௌரவ சாதனையையும் சென்னை தக்க வைத்துக் கொண்டது. வரலாற்றில் முதலும் கடைசியுமாக 2008இல் ராகுல் ட்ராவிட் தலைமையிலான பெங்களூருவிடம் சேப்பாக்கத்தில் டோனி தலைமையிலான சென்னை தோற்றது. ஆனால் அதன் பின் விளையாடிய 8* போட்டிகளிலும் பெங்களூருவை தோற்கடித்துள்ள சென்னை சேப்பாக்கத்தை தங்களுடைய கோட்டையாக வைத்துள்ளது.

                          குமார் சங்ககாரவை முந்திய டோனி

  சென்னை அணியின் கப்டன்ஷிப் பதவியை ருதுராஜிடம் ஒப்படைத்த ஜாம்பவான் எம்எஸ் டோனி  விக்கெட் கீப்பராக விளையாடி 2 கேட்ச், 1 ரன் அவுட் செய்து அசத்தினார்.

 இந்த போட்டியில் களமிறங்கியதன் வாயிலாக ரி20 கிரிக்கெட்டில் மிகவும் அதிக வயதில் விக்கெட் கீப்பராக விளையாடிய வீரர் என்ற இலங்கை ஜாம்பவான் குமார் சங்கக்காரவின் சாதனையை உடைத்து புதிய சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல்: 1. எம்எஸ் டோனி : 42 வருடம் 259 நாட்கள், சிஎஸ்கே அணிக்காக, 2024*

2. குமார் சங்ககார : 42 வருடம் 115 நாட்கள், எம்சிசி அணிக்காக, 2020 3. ஜலட் கான் : 41 வருடம் 287 நாட்கள், ஹிந்துகுஷ் அணிக்காக, 2022

4. இர்விங் ரோஜார்ஸ் : 41 வருடம் 255 நாட்கள், அங்குயிலா அணிக்காக, 2006

5. ஆடம் கில்கிறிஸ்ட் : 41 வருடம் 183 நாட்கள், பஞ்சாப் அணிக்காக, 2013

சென்னையில் கார்த்திக்கின் கடைசிப் போட்டி?

38 வயதை கடந்துள்ள தினேஷ்கார்த்திக் இந்த வருடத்துடன் ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக செய்திகள் வெளியானது. எனவே சொந்த ஊரான சேப்பாக்கத்தில் இதுவே உங்களுடைய கடைசி போட்டியா? என்று செய்தியாளர்கள் கேட்டனர்.

 “இது சிறப்பான கேள்வி. இருப்பினும் இது கடைசிப் போட்டியாக இருக்கக் கூடாது என்று நினைக்கிறேன். ஏனெனில் பிளே ஆஃப் சுற்றின் சில போட்டிகள் இங்கே நடைபெற உள்ளது. ஒருவேளை அதில் நான் மீண்டும் விளையாட வந்தால் அதுவே என்னுடைய கடைசி போட்டியாக இருக்கலாம். இல்லையென்றால் இதுவே கடைசிப் போட்டியாக இருக்கும் என்று நினைக்கிறேன்”  என்றார்.

சின்னத்தல ரெய்னாவின் சாதனை முறியடிப்பு

  நியூசிலாந்தை சேர்ந்த 24 வயது இளம் வீரர் ரச்சின் ரவீந்தரா சென்னை அணிக்காக அறிமுகமாக களமிறங்கினார்.  3 பவுண்டரி 3 சிக்சரை தெறிக்க விட்டு 37 (15) ஓட்டங்களை 246.66 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் அடித்த அவர் ஐபிஎல் வரலாற்றில் தனது அறிமுகப் போட்டியிலேயே (குறைந்தபட்சம் 30 ஓட்டங்கள்) அதிக ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடிய வீரர் என்ற சுரேஷ் ரெய்னாவின் 16 வருட சாதனையை உடைத்து புதிய சாதனை படைத்துள்ளார்.

இதற்கு முன் கடந்த 2008ஆம் ஆண்டு மொஹாலியில் பஞ்சாப்புக்கு எதிராக சென்னை வரலாற்றின் தன்னுடைய முதல் போட்டியில்  களமிறங்கிய சுரேஷ் ரெய்னா 2 பவுண்டரி 3 சிக்சருடன் 32 (13) ஓட்டங்களை 246.15 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் அடித்ததே முந்தைய சாதனையாகும். இது போக ஃபீல்டிங் துறையிலும் 2 அபாரமான   பிடிகளை எடுத்தரச்சின் அறிமுகப் போட்டியில் அசத்தினார் என்றே சொல்லலாம்.


                 விராட் கோலியின் பிரமாண்டமான சாதனை 

 சர்வதேச, உள்ளூர் ரி20 போட்டிகளில் ஒட்டுமொத்தமாக 12000 ஓட்டங்கள் என்ற மைல்கல்லை எட்டினார் விராட் கோலிவிராட் கோலி 6 ஓட்டங்களை கடந்த போது இந்த பிரம்மாண்ட சாதனையை படைத்தார். மேலும், இந்தப் போட்டியில் 21 ஓட்டங்கள் எடுத்த கோலி சிஎஸ்கே அணிக்கு எதிராக 1000 ஓட்டங்கள் குவித்த இரண்டாவது வீரர் என்ற சாதனையையும் செய்தார். இந்திய கிரிக்கெட் வரலாற்றிலேயே 12000 ரி20 யில்  12000 ஓட்டங்கள் குவித்த முதல் வீரர் என்ற சாதனையை செய்து இருக்கிறார்.

மேலும் உலக அளவில் இந்த மைல்கல்லை எட்டிய ஆறாவது வீரர் என்ற பெருமையை பெற்றார். இதற்கு முன் கிறிஸ் கெயில், சோயப் மாலிக், கீரான் பொல்லார்ட், அலெக்ஸ் ஹேல்ஸ், டேவிட் வார்னர் ஆகியோர் இந்த மைல்கல் சாதனையை செய்துள்ளனர். அதே சமயம், குறைந்த இன்னிங்ஸ்களில் 12000 ஓட்டங்களை எட்டிய வீரர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்து இருக்கிறார் விராட் கோலி. ரி 20களில் குறைந்த இன்னிங்ஸ்களில் 12000 ஓட்டங்கள் எடுத்த வீரர்கள் - 345 இன்னிங்ஸ் - கிறிஸ் கெய்ல்

360 இன்னிங்ஸ் - விராட் கோலி

368 இன்னிங்ஸ் - டேவிட் வார்னர்

432 இன்னிங்ஸ் - அலெக்ஸ் ஹேல்ஸ்

 451 இன்னிங்ஸ் - சோயப் மாலிக்

 550 இன்னிங்ஸ் - கீரன் பொல்லார்ட்

 

ரிடி20 கிரிக்கெட்டில் 12,000-க்கும் அதிகமான ஓட்டங்கள் குவித்த வீரர்கள் : 14562 - கிறிஸ் கெய்ல்

13360 - ஷோயப் மாலிக்

12900 - கீரன் பொல்லார்ட்

12319 - அலெக்ஸ் ஹேல்ஸ்

12065 - டேவிட் வார்னர்

 12000* - விராட் கோலி

 ஐபிஎல் இல்  சிஎஸ்கே அணிக்கு எதிராக 1,000-க்கும் மேற்பட்ட ஓட்டங்கள் அடித்த வீரர்கள் :

 1057 - ஷிகர் தவான்

1030 - விராட் கோலி

அதிகமுறை டக் அவுட்டான அதிரடி வீரர் மேக்ஸ்வெல் 

  தீபச்சாகர் பந்து வீசியபோது அதிரடி வீரர் மேக்ஸ்வெல் கோல்டன் டக் அவுட்டாக்கி வெளியேறினார் ளை இழந்து தடுமாறியது.

  ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை டக் அவுட் ஆன வீரர்கள் பட்டியலில் தற்போது மேக்ஸ்வெல், ராயுடு, ரசித் கான், பியூஸ் சாவ்லா ஆகியோரை பின்னுக்கு தள்ளியுள்ளார். ஐபிஎல் வரலாற்றில் தினேஷ் கார்த்திக் 17 முறை டக் அவுட்டாக்கி முதலிடத்தில் இருக்கிறார். ரோகித் சர்மா 16 முறை டக் அவுட் ஆகி இரண்டாவது இடத்தில் உள்ளனர்.

தற்போது ஆர்சிபி வீரர் கிளன் மேக்ஸ்வெல் 15 முறை டக் அவுட் ஆகி மூன்றாவது இடத்தில் இருக்கிறார்.சுனில் நரைன், மந்திப் சிங் ஆகியோரும் தலா 15 முறை டக் அவுட் ஆகி இருக்கிறார்கள்.   பீயூஸ் சாவ்லா, அம்பத்தி ராயுடு,மணிஷ் பாண்டே ஆகியோர் 14 முறையும் ஹர்பஜன் சிங், பார்த்திவ் பட்டேல், ரஹானே ஆகியோர் 13 முறையும் டக் அவுட் ஆகியுள்ளனர்.