Monday, June 28, 2010

இரகசியமாக நடைபெறும்கூட்டணிப் பேச்சுவார்த்தை


தமிழுக்கும் அரசியலுக்கும் அரும் பெரும் தொண்டாற்றிய தமிழக முதல்வர் கருணாநிதியின் நீண்ட நாள் ஆசை இப்போது நிறைவேறியுள்ளது. தமிழ் இலக்கியப் பாடல்களையும் சங்கத் தமிழ்ச் செய்யுள்களையும் வசன நடையில் அனைவரும் படிக்கும் வகையில் எழுதிய தனது ஆட்சிக் காலத்தில் தமிழாராய்ச்சி மாநாடு நடைபெறவில்லை என்ற பெரும் குறை இருந்தது. அறிஞர் அண்ணாத்துரை, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் தமிழக முதலமைச்சர்களாக இருந்தபோது தமிழாராய்ச்சி மாநாடு மிகச் சிறப்பாக நடைபெற்றது.
உலகம் போற்றும் வகையில் தமிழகத்தில் தமிழாராய்ச்சி மாநாட்டை நடத்துவதற்கு முதல்வர் கருணாநிதி முயற்சி செய்தார். தமிழாராய்ச்சி மாநாட்டுத் தலைவர் முன்மொழிந்த சில நிபந்தனைகள் அதற்கு முட்டுக்கட்டை போட்டன. தனது ஆட்சிக் காலத்தில் தமிழ் பற்றிய மாநாடு ஒன்றைச் சிறப்பாகச் செய்வதற்கு விரும்பிய முதல்வர் கருணாநிதிக்கு கை கொடுத்தது செம்மொழி. மிகப் பிரமாண்டமாக நடந்த உலகச் செம்மொழி மாநாடு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சாதனைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
வண.பிதா தனிநாயகம் அடிகளாரின் பெரு முயற்சியினால் உலகெங்கிலும் உள்ள தமிழ் அறிஞர்களின் உதவியுடன் உலகத் தமிழாராய்ச்சி மாநாடுகள் நடைபெற்றன. தமிழக முதல்வர் கருணாநிதியின் முயற்சியினால் உலக செம்மொழி மாநாடு தமிழகத்தில் நடைபெற்றது. இரண்டாவது உலகச் செம்மொழி மாநாடு நடைபெறுமா? அது எத்தனை வருடங்களின் பின்னர் நடைபெறும் போன்ற விபரங்கள் வெளியாகவில்லை. இரண்டாவது உலகச் செம்மொழி மாநாடு தமிழகத்தில் நடைபெற்றாலும் அப்போது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியில் இருந்தால் அதற்கு உரிய ஆதரவு கொடுக்குமா என்பது சந்தேகம். ஜெயலலிதா தமிழகத்தின் முதல்வரானால் ஏதாவது ஒரு பெயரில் தமிழ் மாநாடு நடத்தி தனது பெருமையை வெளிப்படுத்துவார்.
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு தமிழகத்தில் நடைபெறும் இவ்வேளையில் தமிழக நீதிமன்றங்களில் தமிழில் வாதாட அனுமதிக்க வேண்டும் என்ற போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நான் முதல்வரானால் தமிழகத்தில் தமிழில் வாதாட அனுமதி பெற்றுக் கொடுப்பேன் என்று ஜெயலலிதா அறிவித்துள்ளார். வைகோ, விஜயகாந்த் ஆகியோரும் தமிழக நீதிமன்றங்களில் தமிழில் வாதாட வேண்டும் என்று குரல் கொடுத்துள்ளனர். இதேவேளை தமிழக நீதிமன்றங்களில் தமிழில் வாதாட எந்தவிதமான தடையும் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய நாடாளுமன்றத் தேர்தல் காலத்தில் இலங்கைத் பிரச்சினையைத் தூக்கிப் பிடித்த ஜெயலலிதா மீண்டும் இலங்கை விவகாரத்தைக் கையில் எடுத்துள்ளார். 25 ஆயிரம் சீனச் சிறை கைதிகள், தொழிலாளர்கள் என்ற போர்வையில் இலங்கையில் உள்ளதாக ஜெயலலிதா அறிவித்துள்ளார். இந்திய நிறுவனங்களும் சீன நிறுவனங்களும் போட்டி போட்டு இலங்கையில் கடையை விரித்துள்ளன. இந்தியா, சீனா ஆகிய நாடுகளின் தொழில்நுட்பவியலாளர்களும் தொழிலாளர்களும் இலங்கையில் கால் பதித்துள்ளனர்.
சீனத் தொழிலாளர்கள் என்ற பெயரில் சீனாவின் புலனாய்வாளர்களும் இலங்கையில் கால் பதித்துள்ளதால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக ஜெயலலிதா கூறியுள்ளார். ஜெயலலிதாவின் இந்தக் குற்றச்சாட்டு இந்தியாவிலும் தமிழகத்திலும் எதுவிதமான கொந்தளிப் பையும் ஏற்படுத்தவில்லை. ஜெயலலிதா வின் இந்தக் குற்றச்சாட்டை இந்திய மத்திய அரசும் தமிழக அரசும் மறுத்துரைக்க வில்லை. இலங்கையில் உள்ள சீனத் தொழி லாளர்களினால் இந்தியாவுக்கு எந்த ஆபத் தும் இல்லை என்று காங்கிரஸ் கட்சியின் சார்பில் தங்கபாலு தெரிவித்துள்ளார்.
சீனத் தொழிலாளர்கள் இலங்கையில் இருக்கிறார்கள் என்பதை தங்கபாலுவின் அறிக்கை உறுதி செய்திருக்கும் அதே வேளை, சீனக் கைதிகள் பற்றி தங்கபாலு வாய் திறக்கவில்லை. யுத்தத்தினால் சீரழிந்த இலங்கையைக் கட்டி எழுப்பும் முயற்சியில் சீனாவும் இந்தியாவும் இலங்கையில் கால் பதித்துள்ளன. இலங்கையின் நலன்களை விட இந்தியா, சீனா ஆகிய நாடுகளின் நலன்களே முக்கியத்துவம் பெறுகின்றன என்பது உலகத்துக்கு தெரியும்.
விஜயகாந்த் தலைமையிலான தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் தமிழக சட்ட சபைத் தேர்தல், இந்தியப் பொதுத் தேர்தல், 11 இடைத் தேர்தல்கள் ஆகியவற்றில் படுதோல்வி அடைந்துள்ளது.
திராவிடக் கழகங்களுக்கு மாற்றுக் கட்சியாக உருவாகும் என எதிர்பார்க்கப்பட்ட விஜயகாந்தின் கட்சி தேர்தல்களில் தோல்வியடை வது அவரை நம்பி கட்சியில் இணைந்தவர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. அடுத்து வரும் தமிழக சட்டசபைத் தேர்தலில் கூட்டணி அமைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் விஜயகாந்த். இனியும் கூட்டணி அமைக்காது தனித்துப் போட்டியிட்டால் இதை விட கூடுதலான தோல்வியை அனுபவிக்க நேரிடும் என்பதை விஜயகாந்த்தின் கட்சியினர் உணர்ந் துள்ளனர். ஆகையினால் கூட்டணி சேர வேண்டும் என்ற கருத்தை வெளிப்படை யாகத் தெரிவிக்கத் தொடங்கி விட்டனர்.
கூட்டணி சேர்வதற்கு விஜயகாந்தும் தயாராகி விட்டார். ஆனால் யாருடன் கூட்டணி சேர்வது என்று இன்னமும் முடிவு செய்யவில்லை. விஜயகாந்தின் முதல் தெரிவு காங்கிரஸ் கட்சி. திராவிட முன்னேற்றக் கழகத்தைக் கைவிட்டு விட்டு வந்தால் கூட்டணி சேரத் தயார் என்று விஜயகாந்தின் தரப்பில் இருந்து காங்கிரஸிக்குக் கூறப்பட்டது. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் மூலாதாரமே திராவிட முன்னேற்றக் கழகம்தான். அப்படி இருக்கையில் திராவிட முன்னேற்றக் கழகத்தை கை கழுவி விஜயகாந்த் கூட்டணி சேர காங்கிரஸ் தயாராக இல்லை. காங்கிரஸுடனான நிபந்தனை ஏற்கப்படாமையினால் அண்ணா முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி சேரும் சந்தர்ப்பம் அதிகரித்துள்ளது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி சேர்ந்தால் துணை முதல்வர் பதவி வேண்டும் என்ற வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. துணை முதல்வராக இன்னொருவர் இருப்பதை ஜெயலலிதா விரும்பவில்லை. ஆகையினால் அதிகளவான தொகுதிகளைப் பெற வேண்டும் என்று விஜயகாந்த்துக்கு கட்சித் தலைவர்கள் ஆலோசனை கூறியுள்ளனர்.
கூட்டணிக்குத் தலைமை வகிக்கும் கட்சியிடம் அதிக தொகுதிகளைக் கேட்டுப் பெற்று அறுதிப் பெரும்பான்மை இல்லாத நிலையை உருவாக்க தோழமைக் கட்சிகள் முயற்சி செய்கின்றன. காங்கிரஸ் கட்சி, திராவிட முன்னேற்றக் கழகத்திடம் இதேபோன்ற கோரிக்கையை முன்வைக்கப் போவதாக செய்திகள் கசிந்துள்ளன. கூட்டணி இல்லாது ஆட்சியைப் பிடிக்க முடியாது என்பதை முதல்வர் கருணாநிதியும் ஜெயலலிதாவும் உணர்ந்துள்ளனர். பலமான கூட்டணி அமைக்க முதல்வர் கருணாநிதியும் ஜெயலலிதாவும் முயற்சி செய்கின்றனர். கூட்டணிக்குத் தலைமை வகிக்கும் கட்சி அறுதிப் பெரும்பான்மை பெறக்கூடாது என்பதில் தோழமைக் கட்சிகள் உறுதியாக உள்ளன. கூட்டணிப் பேரம் இப்போதே ஆரம்பித்து விட்டது. தேர்தல் நெருங்கும் சமயத்தில்தான் கூட்டணி பற்றிய பகிரங்க அறிவிப்பு வெளியிடப்படும். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் ஆகியவற்றில் இருந்து வெளியேறுபவர்களைத் தடுத்து நிறுத்தும் பாரிய பணி கட்சித் தலைவர்க ளான ஜெயலலிதாவிடமும் விஜயகாந்திட மும் உள்ளது. பலமான கூட்டணி அமைத் தால் கட்சியில் இருந்து வெளியேறுபவர் களைத் தடுத்து நிறுத்தலாம் என்பதை காலம் கடந்து இருவரும் புரிந்துகொண்டுள்ளனர்.
விஜயகாந்த் கூட்டணிக்கு பச்சைக் கொடி காட்டியதால் தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தினர் உற்சாகமடைந்துள்ளனர். சட்ட சபையில் தமது பலத்தை அதிகரிக்க வேண் டும். அதன் பின்னர் படிப்படியாக முன்னேறலாம் என்று விஜயகாந்தின் கட்சித் தலைவர்கள் நினைக்கின்றனர்.
வர்மா
வீரகேசரிவாரவெளியீடு 30/05/10

Tuesday, June 22, 2010

தி.மு.க.வை ஓரங்கட்டராகுல்காந்தி முயற்சி


தமிழக சட்ட சபைத் தேர்தலை மனதில் வைத்துக் கொண்டே முதலமைச்சர் கருணாநிதியும் ஜெயலலிதாவும் அடுத்த கட்ட நகர்வைப் பற்றி யோசிக்கிறார்கள். தமிழக சட்ட சபைத் தேர்தலுக்கு முன்னர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பலவீனமாக்கும் நடவடிக்கையை திராவிட முன்னேற்றக் கழகம் ஆரம்பித்துள்ளது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர்களுடன் ஜெயலலிதா ஒரே மாதிரிப் பழகுவதில்லை. தன் மீது விசுவாசமாக உள்ள ஒரு சிலருடன் தான் ஜெயலலிதா பேசுவார். ஏனையோரை மிகவும் தூரத்திலேயே வைத்துள்ளார்.
ஜெயலலிதாவின் பார்வைக்கு அப்பாற்பட்டவர்களின் பெயர் விபரங்களைக் கையில் எடுத்த திராவிட முன்னேற்றக் கழகம் அவர்களைத் தன்வசம் இழுக்கும் நடவடிக்கையை ஆரம்பித்தது. ஜெயலலிதாவால் ஒதுக்கப்பட்ட பலர் திராவிட முன்னேற்றக் கழகம் விரித்த வலையில் எளிதாக வீழ்ந்தார்கள். இன்னும் சிலர் அணி மாறுவதற்குத் தயாராக உள்ளனர்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் அமைச்சர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்த போது அவர்களின் ஆதரவாளர்களும் அணி மாறினார்கள். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய பிரமுகர்கள் கட்சி மாறும் போது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாக்கு வங்கி பலவீனமடையத் தொடங்கியது.
இந்நிலையில், தலைவர்களும் தொண்டர்களும் கட்சி தாவுவதைத் தடுப்பதற்காக தொண்டர்களிடம் மனு வாங்கும் திட்டத்தை அரங்கேற்றினார் ஜெயலலிதா. ஜெயலலிதாவிடம் மனு கொடுப்பதற்கு தொண்டர்கள் முண்டியடித்தனர். ஆயிரக்கணக்கான தொண்டர்கள் ஜெயலலிதாவிடம் மனுக் கொடுத்தனர். அவற்றை புன்முறுவலுடன் வாங்கினார் ஜெயலலிதா. ஜெயலலிதாவிடம் வழங்கப்பட்ட மனுக்களில் அதிகமானவை தமது குறைபாடுகளைப் பற்றியதே தவிர கட்சியின் வளர்ச்சி எதிர்காலத் திட்டம் பற்றிய ஆலோசனைகள் எதுவும் இல்லாமையால் ஜெயலலிதா அதிருப்தியடைந்துள்ளார்.
அதல பாதாளத்தில் வீழ்ந்துள்ள அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் செல்வாக்கை உயர்த்துவதற்காக இறங்கி வந்துள்ளார் ஜெயலலிதா. தொண்டர்களின் குறையை கேட்டு கட்சியில் உள்ள முரண்பாடுகளைத் தீர்த்து வைப்பதற்கு ஜெயலலிதா முன்வந்தால் வீழ்ந்துவிட்ட செல்வாக்கு மீண்டும் உயர்வதற்கு வழி பிறக்கும். ஆனால், ஜெயலலிதா அதனைக் கடைப்பிடிப்பாரா என்ற சந்தேகம் தொண்டர்கள் மத்தியில் உள்ளது.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து முக்கிய தலைவர்கள் வெளியேறிய போதும் அதனைத் தடுத்து நிறுத்துவதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கை எதனையும் ஜெயலலிதா செய்யவில்லை. கட்சி மாறும் ஒருவரின் பின்னால் அவருடைய ஆயிரக் கணக்கான தொண்டர்களும் அணிமாறுவதால் கட்சியின் வாக்கு வங்கியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் இந்த அசமந்தப் போக்கை திராவிட முன்னேற்றக் கழகம் தனக்கு சாதகமாக்கிக் கொண்டுள்ளது.
தமிழகத்தில் அசைக்க முடியாது அசுர பலம் பெற்றுள்ளது திராவிட முன்னேற்றக் கழகம். அக்கட்சி இறுதியாக ஆட்சிக்கு வந்த பின்னர் நடைபெற்ற அனைத்துத் தேர்தல்களிலும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தோல்வியடைந்துள்ளது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணையுடன் காங்கிரஸ் கட்சியும் தோல்வியடையாத கட்சியாக உருவெடுத்துள்ளது.
தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் எவையும் பலம் வாய்ந்ததாக இல்லை. திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு சவால் விடும் வகையில் இருந்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வீழ்ந்துவிட்ட தனது செல்வாக்கை மீண்டும் நிலைநாட்டுவதற்கு பலமான கூட்டணி அமைப்பதற்கு பேரம் பேசி வருகிறது.
தமிழகத்தின் அடுத்த முதல்வர் என்ற பெரும் ஆரவாரத்துடன் அரசியலில் நுழைந்த விஜயகாந்தால் பெரிதாக சாதிக்க முடியவில்லை. ஜெயலலிதாவையும் கருணாநிதியையும் வீட்டுக்கு அனுப்பி தமிழகத்தின் முதல்வராகும் கனவுடன் அரசியல் கட்சி ஆரம்பித்த விஜயகாந்த் அரசியல் வேறு சினிமா வேறு என்பதை நன்கு உணர்ந்துள்ளார். கூட்டணி இல்லாது ஆட்சி அமைக்க முடியாத என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்துள்ள விஜயகாந்த், கூட்டணி சேர்வதற்குத் தயாராக உள்ளார். ஆனால், கூட்டணி சேர்வதற்கு அவர் விதிக்கும் நிபந்தனைகள் அவருடன் சேர விரும்பும் கட்சிகளை தூரத்தில் வைத்துள்ளன.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் இருந்து வெளியேறுவதற்கு டில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை விரும்பவில்லை. திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணியை விரும்பாத தமிழக காங்கிரஸ் தலைவர்கள் விஜயகாந்துடன் கூட்டணி சேர விரும்பினார்கள். திராவிட முன்னேற்றக் கழகத்தை கைவிட்டால் கூட்டணிக்குத் தயார் என்று விஜயகாந்தின் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டது. திராவிட முன்னனேற்றக் கழகத்தை கைவிட டில்லித் தலைமை விரும்பாததனால் கூட்டணிப் பேச்சுவார்த்தையும் கிடப்பில் போடப்பட்டது.
எதிரும் புதிருமாக உள்ள விஜயகாந்தையும் ஜெயலலிதாவையும் இணைப்பதற்கு ஒரு சிலர் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர். அதிகளவான தொகுதிகளும் துணை முதல்வர் பதவியும் விஜயகாந்தின் தரப்பில் இருந்து நிபந்தனையாக விதிக்கப்பட்டதாக தகவல்கள் கசிந்துள்ளன. துணை முதல்வர் பதவியை வேறு கட்சியுடன் பகிர்ந்து கொள்வதற்கு ஜெயலலிதா விரும்பவில்லை. இதேவேளை கூடுதலான தொகுதிகளை விட்டுக் கொடுக்கவும் ஜெயலலிதா தயாராகவில்லை. இதன் காரணமாக கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தேக்க நிலை ஏற்பட்டுள்ளது.
ஜெயலலிதாவுடன் விஜயகாந்த் இணைந்தால் வைகோவின் மதிப்பு குறைந்து விடும். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு அடுத்த நிலையில் உள்ள வைகோ தூக்கி எறியப்பட்டு அந்த இடத்தில் விஜயகாந்த் வந்து அமர்ந்து விடுவார். வைகோவுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளைவிட அதிக தொகுதிகள் விஜயகாந்துக்கு ஒதுக்கப்பட்டால் இரண்டாவது இடத்தில் உள்ள வைகோ, மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டு விடுவார். இது வைகோவின் சுயமரியாதைக்கு விடும் சவாலாக அமையும்.
கூட்டணியில் இருந்து வெளியேறிய டாக்டர் ராமதாஸை மீண்டும் உள்ளே கொண்டு வர வேண்டும் என்ற எண்ணம் ஜெயலலிதாவுக்கு உள்ளது. திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி சேர்வதற்குச் சென்ற பாட்டாளி மக்கள் கட்சித் தூதுக்குழு அவமானப்படுத்தப்பட்டது. இதனால் டாக்டர் ராமதாஸ் மனமுடைந்து போயுள்ளார். ஆனாலும் "எம்மை அவமானப்படுத்திய திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி வைக்க மாட்டோம்' என்று டாக்டர் ராமதாஸ் முழக்கமிடவில்லை.
பென்னாகரம் இடைத்தேர்தலின் மூலம் பாட்டாளி மக்கள் கட்சியின் செல்வாக்கு நிரூபிக்கப்பட்டதனால் தாம் நீட்டிய கையை முதல்வர் கருணாநிதி பற்றிப் பிடிப்பார் என்று டாக்டர் ராமதாஸ் போட்ட கணக்கு தப்பாகிப் போய்விட்டது. டக்டர் ராமதாஸ் நீட்டிய கையை புறந்தள்ளிய முதல்வர் கருணாநிதி 2011ஆம் ஆண்டுவரை காத்திருக்குமாறு கூறிவிட்டார். இந்த நிலையில் தான் பாட்டாளி மக்கள் கட்சி மீது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கருணைப் பார்வை விழுந்துள்ளது. ஆனால், டாக்டர் ராமதாஸ் இப்போதைக்கு அவசரப்படவில்லை. தமிழக சட்டமன்றத் தேர்தல்வரை கூட்டணி பற்றிய முடிவை அவர் வெளியிடமாட்டார். வழக்கம்போல் இரண்டு பிரதான கட்சிகளுடனும் கூட்டு பேரம் பேசி அதிக தொகுதிகளும் கூடுதலான சலுகைகளும் கொடுக்கும் கட்சியுடன் கூட்டணி அமைப்பதற்காக காத்திருக்கிறார் டாக்டர் ராமதாஸ்.
ஜெயலலிதா, வைகோ, டாக்டர் ராமதாஸ், விஜயகாந்த் ஆகியோர் திராவிட முன்னேற்றக் கழகத்தை வீழ்த்துவதற்கு தருணம் பார்த்திருக்கும் வேளையில் திராவிட முன்னேற்றக் கழகத்தை குப்புற வீழ்த்திவிட திடசங்கற்பம் பூண்டுள்ளனர் காங்கிரஸ் கட்சியில் உள்ள ஒரு சிலர். காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் தலை தூக்காமல் இருப்பதற்கு கோஷ்டிப் பூசலே ஒரு காரணம். கோஷ்டி இல்லாத காங்கிரஸ் கட்சியை தமிழகத்தில் உருவாக்குவதற்கு ராகுல் காந்தி முயற்சி செய்கிறார். ராகுல் காந்தியின் மேற்பார்வையில் தமிழகத்தில அமைக்கப்பட்ட இளைஞர் காங்கிரஸில் பன்னிரண்டு இலட்சம் பேர் சேர்ந்துள்ளனர். இன்னும் பத்து வருடங்களில் தமிழகத்தின் தலைவிதியை இந்த இளைஞர் காங்கிரஸே தீர்மானிக்கும் என்று நம்புகிறார் ராகுல்காந்தி.
தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியைத் தூக்கியெறிய வேண்டும் என்று விரும்புகிறவர்களில் முதன்மையானவர் ராகுல் காந்தி. வட இந்திய மாநிலங்களில் இளைஞர் காங்கிரஸை வலுப்படுத்தி மூத்த எதிர்க்கட்சித் தலைவர்களை வீழ்த்தியது போல் தமிழகத்திலும் திராவிட முன்னேற்றக் கழகத்தை வீழ்த்தத் திட்டம் போட்டுள்ளார் ராகுல்காந்தி.
டெல்லியிலிருந்து தமிழகத்துக்கு விஜயம் செய்யும் காங்கிரஸ் தலைவர்கள் தமிழக காங்கிரஸ் தலைமையகத்துக்குச் செல்லாவிட்டாலும் முதல்வர் கருணாநிதியின் வீட்டுக்குச் சென்று குசலம் விசாரிப்பது வழமை. தமிழகத்துக்கு அடிக்கடி விஜயம் செய்யும் ராகுல் காந்தி, முதல்வர் கருணாநிதியின் வீட்டுக்குச் செல்வதைத் தவிர்த்து வருகிறார். தமிழகத்தில் இருக்கும்போது தொலைபேசியில் கூட அவரை நலம் விசாரித்ததில்லை. திராவிட முன்னேற்றக் கழகத்தை எதிர்க்கும் காங்கிரஸ் தலைவர்கள் ராகுலின் நடவடிக்கைக்கு துணையாக உள்ளார்கள்.

தமிழக சட்ட சபைத் தேர்தலை மனதில் வைத்துக் கொண்டே முதலமைச்சர் கருணாநிதியும் ஜெயலலிதாவும் அடுத்த கட்ட நகர்வைப் பற்றி யோசிக்கிறார்கள். தமிழக சட்ட சபைத் தேர்தலுக்கு முன்னர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பலவீனமாக்கும் நடவடிக்கையை திராவிட முன்னேற்றக் கழகம் ஆரம்பித்துள்ளது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர்களுடன் ஜெயலலிதா ஒரே மாதிரிப் பழகுவதில்லை. தன் மீது விசுவாசமாக உள்ள ஒரு சிலருடன் தான் ஜெயலலிதா பேசுவார். ஏனையோரை மிகவும் தூரத்திலேயே வைத்துள்ளார்.
ஜெயலலிதாவின் பார்வைக்கு அப்பாற்பட்டவர்களின் பெயர் விபரங்களைக் கையில் எடுத்த திராவிட முன்னேற்றக் கழகம் அவர்களைத் தன்வசம் இழுக்கும் நடவடிக்கையை ஆரம்பித்தது. ஜெயலலிதாவால் ஒதுக்கப்பட்ட பலர் திராவிட முன்னேற்றக் கழகம் விரித்த வலையில் எளிதாக வீழ்ந்தார்கள். இன்னும் சிலர் அணி மாறுவதற்குத் தயாராக உள்ளனர்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் அமைச்சர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்த போது அவர்களின் ஆதரவாளர்களும் அணி மாறினார்கள். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய பிரமுகர்கள் கட்சி மாறும் போது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாக்கு வங்கி பலவீனமடையத் தொடங்கியது.
இந்நிலையில், தலைவர்களும் தொண்டர்களும் கட்சி தாவுவதைத் தடுப்பதற்காக தொண்டர்களிடம் மனு வாங்கும் திட்டத்தை அரங்கேற்றினார் ஜெயலலிதா. ஜெயலலிதாவிடம் மனு கொடுப்பதற்கு தொண்டர்கள் முண்டியடித்தனர். ஆயிரக்கணக்கான தொண்டர்கள் ஜெயலலிதாவிடம் மனுக் கொடுத்தனர். அவற்றை புன்முறுவலுடன் வாங்கினார் ஜெயலலிதா. ஜெயலலிதாவிடம் வழங்கப்பட்ட மனுக்களில் அதிகமானவை தமது குறைபாடுகளைப் பற்றியதே தவிர கட்சியின் வளர்ச்சி எதிர்காலத் திட்டம் பற்றிய ஆலோசனைகள் எதுவும் இல்லாமையால் ஜெயலலிதா அதிருப்தியடைந்துள்ளார்.
அதல பாதாளத்தில் வீழ்ந்துள்ள அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் செல்வாக்கை உயர்த்துவதற்காக இறங்கி வந்துள்ளார் ஜெயலலிதா. தொண்டர்களின் குறையை கேட்டு கட்சியில் உள்ள முரண்பாடுகளைத் தீர்த்து வைப்பதற்கு ஜெயலலிதா முன்வந்தால் வீழ்ந்துவிட்ட செல்வாக்கு மீண்டும் உயர்வதற்கு வழி பிறக்கும். ஆனால், ஜெயலலிதா அதனைக் கடைப்பிடிப்பாரா என்ற சந்தேகம் தொண்டர்கள் மத்தியில் உள்ளது.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து முக்கிய தலைவர்கள் வெளியேறிய போதும் அதனைத் தடுத்து நிறுத்துவதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கை எதனையும் ஜெயலலிதா செய்யவில்லை. கட்சி மாறும் ஒருவரின் பின்னால் அவருடைய ஆயிரக் கணக்கான தொண்டர்களும் அணிமாறுவதால் கட்சியின் வாக்கு வங்கியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் இந்த அசமந்தப் போக்கை திராவிட முன்னேற்றக் கழகம் தனக்கு சாதகமாக்கிக் கொண்டுள்ளது.
தமிழகத்தில் அசைக்க முடியாது அசுர பலம் பெற்றுள்ளது திராவிட முன்னேற்றக் கழகம். அக்கட்சி இறுதியாக ஆட்சிக்கு வந்த பின்னர் நடைபெற்ற அனைத்துத் தேர்தல்களிலும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தோல்வியடைந்துள்ளது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணையுடன் காங்கிரஸ் கட்சியும் தோல்வியடையாத கட்சியாக உருவெடுத்துள்ளது.
தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் எவையும் பலம் வாய்ந்ததாக இல்லை. திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு சவால் விடும் வகையில் இருந்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வீழ்ந்துவிட்ட தனது செல்வாக்கை மீண்டும் நிலைநாட்டுவதற்கு பலமான கூட்டணி அமைப்பதற்கு பேரம் பேசி வருகிறது.
தமிழகத்தின் அடுத்த முதல்வர் என்ற பெரும் ஆரவாரத்துடன் அரசியலில் நுழைந்த விஜயகாந்தால் பெரிதாக சாதிக்க முடியவில்லை. ஜெயலலிதாவையும் கருணாநிதியையும் வீட்டுக்கு அனுப்பி தமிழகத்தின் முதல்வராகும் கனவுடன் அரசியல் கட்சி ஆரம்பித்த விஜயகாந்த் அரசியல் வேறு சினிமா வேறு என்பதை நன்கு உணர்ந்துள்ளார். கூட்டணி இல்லாது ஆட்சி அமைக்க முடியாத என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்துள்ள விஜயகாந்த், கூட்டணி சேர்வதற்குத் தயாராக உள்ளார். ஆனால், கூட்டணி சேர்வதற்கு அவர் விதிக்கும் நிபந்தனைகள் அவருடன் சேர விரும்பும் கட்சிகளை தூரத்தில் வைத்துள்ளன.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் இருந்து வெளியேறுவதற்கு டில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை விரும்பவில்லை. திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணியை விரும்பாத தமிழக காங்கிரஸ் தலைவர்கள் விஜயகாந்துடன் கூட்டணி சேர விரும்பினார்கள். திராவிட முன்னேற்றக் கழகத்தை கைவிட்டால் கூட்டணிக்குத் தயார் என்று விஜயகாந்தின் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டது. திராவிட முன்னனேற்றக் கழகத்தை கைவிட டில்லித் தலைமை விரும்பாததனால் கூட்டணிப் பேச்சுவார்த்தையும் கிடப்பில் போடப்பட்டது.
எதிரும் புதிருமாக உள்ள விஜயகாந்தையும் ஜெயலலிதாவையும் இணைப்பதற்கு ஒரு சிலர் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர். அதிகளவான தொகுதிகளும் துணை முதல்வர் பதவியும் விஜயகாந்தின் தரப்பில் இருந்து நிபந்தனையாக விதிக்கப்பட்டதாக தகவல்கள் கசிந்துள்ளன. துணை முதல்வர் பதவியை வேறு கட்சியுடன் பகிர்ந்து கொள்வதற்கு ஜெயலலிதா விரும்பவில்லை. இதேவேளை கூடுதலான தொகுதிகளை விட்டுக் கொடுக்கவும் ஜெயலலிதா தயாராகவில்லை. இதன் காரணமாக கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தேக்க நிலை ஏற்பட்டுள்ளது.
ஜெயலலிதாவுடன் விஜயகாந்த் இணைந்தால் வைகோவின் மதிப்பு குறைந்து விடும். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு அடுத்த நிலையில் உள்ள வைகோ தூக்கி எறியப்பட்டு அந்த இடத்தில் விஜயகாந்த் வந்து அமர்ந்து விடுவார். வைகோவுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளைவிட அதிக தொகுதிகள் விஜயகாந்துக்கு ஒதுக்கப்பட்டால் இரண்டாவது இடத்தில் உள்ள வைகோ, மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டு விடுவார். இது வைகோவின் சுயமரியாதைக்கு விடும் சவாலாக அமையும்.
கூட்டணியில் இருந்து வெளியேறிய டாக்டர் ராமதாஸை மீண்டும் உள்ளே கொண்டு வர வேண்டும் என்ற எண்ணம் ஜெயலலிதாவுக்கு உள்ளது. திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி சேர்வதற்குச் சென்ற பாட்டாளி மக்கள் கட்சித் தூதுக்குழு அவமானப்படுத்தப்பட்டது. இதனால் டாக்டர் ராமதாஸ் மனமுடைந்து போயுள்ளார். ஆனாலும் "எம்மை அவமானப்படுத்திய திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி வைக்க மாட்டோம்' என்று டாக்டர் ராமதாஸ் முழக்கமிடவில்லை.
பென்னாகரம் இடைத்தேர்தலின் மூலம் பாட்டாளி மக்கள் கட்சியின் செல்வாக்கு நிரூபிக்கப்பட்டதனால் தாம் நீட்டிய கையை முதல்வர் கருணாநிதி பற்றிப் பிடிப்பார் என்று டாக்டர் ராமதாஸ் போட்ட கணக்கு தப்பாகிப் போய்விட்டது. டக்டர் ராமதாஸ் நீட்டிய கையை புறந்தள்ளிய முதல்வர் கருணாநிதி 2011ஆம் ஆண்டுவரை காத்திருக்குமாறு கூறிவிட்டார். இந்த நிலையில் தான் பாட்டாளி மக்கள் கட்சி மீது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கருணைப் பார்வை விழுந்துள்ளது. ஆனால், டாக்டர் ராமதாஸ் இப்போதைக்கு அவசரப்படவில்லை. தமிழக சட்டமன்றத் தேர்தல்வரை கூட்டணி பற்றிய முடிவை அவர் வெளியிடமாட்டார். வழக்கம்போல் இரண்டு பிரதான கட்சிகளுடனும் கூட்டு பேரம் பேசி அதிக தொகுதிகளும் கூடுதலான சலுகைகளும் கொடுக்கும் கட்சியுடன் கூட்டணி அமைப்பதற்காக காத்திருக்கிறார் டாக்டர் ராமதாஸ்.
ஜெயலலிதா, வைகோ, டாக்டர் ராமதாஸ், விஜயகாந்த் ஆகியோர் திராவிட முன்னேற்றக் கழகத்தை வீழ்த்துவதற்கு தருணம் பார்த்திருக்கும் வேளையில் திராவிட முன்னேற்றக் கழகத்தை குப்புற வீழ்த்திவிட திடசங்கற்பம் பூண்டுள்ளனர் காங்கிரஸ் கட்சியில் உள்ள ஒரு சிலர். காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் தலை தூக்காமல் இருப்பதற்கு கோஷ்டிப் பூசலே ஒரு காரணம். கோஷ்டி இல்லாத காங்கிரஸ் கட்சியை தமிழகத்தில் உருவாக்குவதற்கு ராகுல் காந்தி முயற்சி செய்கிறார். ராகுல் காந்தியின் மேற்பார்வையில் தமிழகத்தில அமைக்கப்பட்ட இளைஞர் காங்கிரஸில் பன்னிரண்டு இலட்சம் பேர் சேர்ந்துள்ளனர். இன்னும் பத்து வருடங்களில் தமிழகத்தின் தலைவிதியை இந்த இளைஞர் காங்கிரஸே தீர்மானிக்கும் என்று நம்புகிறார் ராகுல்காந்தி.
தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியைத் தூக்கியெறிய வேண்டும் என்று விரும்புகிறவர்களில் முதன்மையானவர் ராகுல் காந்தி. வட இந்திய மாநிலங்களில் இளைஞர் காங்கிரஸை வலுப்படுத்தி மூத்த எதிர்க்கட்சித் தலைவர்களை வீழ்த்தியது போல் தமிழகத்திலும் திராவிட முன்னேற்றக் கழகத்தை வீழ்த்தத் திட்டம் போட்டுள்ளார் ராகுல்காந்தி.
டெல்லியிலிருந்து தமிழகத்துக்கு விஜயம் செய்யும் காங்கிரஸ் தலைவர்கள் தமிழக காங்கிரஸ் தலைமையகத்துக்குச் செல்லாவிட்டாலும் முதல்வர் கருணாநிதியின் வீட்டுக்குச் சென்று குசலம் விசாரிப்பது வழமை. தமிழகத்துக்கு அடிக்கடி விஜயம் செய்யும் ராகுல் காந்தி, முதல்வர் கருணாநிதியின் வீட்டுக்குச் செல்வதைத் தவிர்த்து வருகிறார். தமிழகத்தில் இருக்கும்போது தொலைபேசியில் கூட அவரை நலம் விசாரித்ததில்லை. திராவிட முன்னேற்றக் கழகத்தை எதிர்க்கும் காங்கிரஸ் செய்யும் ராகுல் காந்தி, முதல்வர் கருணாநிதியின் வீட்டுக்குச் செல்வதைத் தவிர்த்து வருகிறார். தமிழகத்தில் இருக்கும்போது தொலைபேசியில் கூட அவரை நலம் விசாரித்ததில்லை. திராவிட முன்னேற்றக் கழகத்தை எதிர்க்கும் காங்கிரஸ் தலைவர்கள் ராகுலின் நடவடிக்கைக்கு துணையாக உள்ளார்கள்.

வர்மா

வீரகேசரிவாரவெளியீடு 20.06.10

Monday, June 14, 2010

தவிக்கிறது பா.ம.க.தள்ளாடுகிறது அ.தி.மு.க.




தமிழக அரசியலைத் தீர்மானிக்கும் சக்தி யாக விளங்கிய டாக்டர் ராமதாஸ் கூட்டணி பற்றிய முடிவு எடுக்க முடியாது தடுமாறு கிறார். அரசியல் கள நிலைவரங்களின்போது அடிக்கடி கூட்டணி மாறி தேர்தல்களில் வெற்றி பெற்ற டாக்டர் ராமதாஸ் கடந்த நாடாளு மன்றத் தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் மீண்டும் திராவிட முன்னேற்றக் கூட்டணியில் சேர்வதற்கு தூதுவிட்டார்.
திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ப்பதாக உறுதி மொழி கூறிய பின்பும் முடிவெடுக்க முடியாது தடுமாறுகிறார் டாக்டர் ராமதாஸ்.
அண்ணாதிராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் இருந்து வெளியேறி பென்னாகரம் இடைத்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி தனியாக போட்டியிட்ட போது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தூதை நிராகரித்தார் டாக்டர் ராமதாஸ். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் செல்வாக்கு சரிவதைத் தெரிந்துகொண்ட டாக்டர் ராமதாஸ், திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணி வெற்றி பெறும் என்று உறுதி யாக நம்பியதால் அண்ணா திராவிட முன் னேற்றக் கழகத்தின் தூதை நிராகரித்தார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வெளியேறிய பாட்டாளி மக்கள் கட்சியை தனது தலைமையிலான கூட்டணி யில் முதல்வர் கருணாநிதி இணைப்பார் என்றே டாக்டர் ராமதாஸ் எதிர்பார்த்தார். பாட்டாளி மக்கள் கட்சி கடந்த காலங்களில் அணி மாறிய சந்தர்ப்பங்களை சுட்டிக் காட்டிய முதல்வர் கருணாநிதி பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ப்பதற்கு காலக்கெடு விதித்தார்.
பாட்டாளி மக்கள் கட்சி அடிக்கடி அணி மாறுவதை காங்கிரஸ் தலைமையும் விரும்ப வில்லை. தமது தேவை நிறைவேறிய பின்னர் ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி அணி மாறுவது பாட்டாளி மக்கள் கட்சியின் கொள் கைகளில் ஒன்று என்பது வெளிப்படையானது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஆறு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு ராஜ்ய சபா பதவியும் தருவதாக உறுதி வழங்கப்பட்டது. ஆனால் மேலும் ஒரு தொகுதி வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி அடம் பிடித்தது. அதுபற்றிய பேச்சுவார்த் தைக்கு வருமாறு அழைத்த போது உதறித் தள்ளிவிட்டு ஜெயலலிதாவுடன் ஒட்டிக் கொண்டார் டாக்டர் ராம தாஸ்.
இலங்கையில் யுத்தம் உச் சக்கட்டத்தை அடைந்திருந்த வேளையில் இந்திய நாடா ளுமன்றத் தேர்தல் நடை பெற்றது. தமிழக அரசுக்கும், இந்திய அரசுக்கும் எதிரான உணர்வலைகள் தமிழகத்தில் மேலோங்கி இருந்தன. திரா விட முன்னேற்றக் கழகத் தின் தலைமையிலான கூட் டணி தோல்வியடையும் என்று டாக்டர் ராமதாஸ் எதிர்பார்த்ததனால் திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் இருந்து வெளியேறினார். டாக்டர் ராமதாஸை இருகரம் நீட்டி மகிழ்வுடன் எதிர்கொண்ட ஜெயலலிதா காலப்போக்கில் டாக்டர் ராமதாஸை ஏறெடுத் தும் பார்க்கவில்லை. தேர்தலில் ஏற்பட்ட தொடர் தோல்விகள் ஜெயலலிதாவை தடு மாறச் செய்தன. டாக்டர் ராமதாஸின் எதிர் பார்ப்பு நிறை வேறாமையினால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியிலி ருந்து வெளி யேறினார் டாக்டர் ராமதாஸ்.
திராவிட முன்னேற்றக் கழக அரசை விமர் சிப்பதை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்த பாட்டாளி மக்கள் கட்சி மீண்டும் திராவிட முன்னேற்றக் கழகத்தை விமர்சிக்க ஆரம்பித் துள்ளது. திராவிட முன்னேற்றக் கழகக் கூட்ட ணிக்கு பாட்டாளி மக்கள் கட்சி வரும். ஆனால் இப்போதைக்கு வராது என்று முதல்வர் கருணாநிதி சூசகமாக வெளியிட்ட கருத்தால் நொந்து போயுள்ளார் டாக்டர் ராமதாஸ். பாட்டாளி மக்கள் கட்சியின் பிரசாரப் பீரங்கி யான காடு வெட்டி குரு திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்கள் மீது மீண்டும் வசை பாடத் தொடங்கி விட்டார். ஆகையால் இப் போதைக்கு கூட்டணி பற்றிய முடிவை டாக்டர் ராமதாஸ் வெளியிட மாட்டார்.
முதல்வர் கருணாநிதியின் இந்த முடிவு அரசியல் சாணக்கியம் மிக்கது என்று பத்திரி கைகள் விமர்சித்திருந்தன. கருணாநிதி தனது அரசியல் அனுபவத்தின் மூலம் டாக்டர் ராமதாஸை பொறியில் விழுத்தியுள்ளார் என்ற விமர்சனம் டாக்டர் ராமதாஸை சீண்டி விட் டது. அதனால் கொதித்தெழுந்த டாக்டர் ராம தாஸ் சாணக்கியன் ஒரு துரோகி என்று மறைமுகமாக கருணாநிதியைச் சாடியுள்ளார். கூட்டணி பற்றிய முடிவை இப்போதைக்கு டாக்டர் ராமதாஸ் வெளியிடமாட்டார் என் பதையே இது எடுத்துக் காட்டுகிறது.
கருணாநிதி விதித்த நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொண்டு கூட்டணியில் சேர்வதாக அறி வித்தால் அது தனது பலவீனமாக வெளிப் படுத்தப்படும் என்று டாக்டர் ராமதாஸ் பயப் படுகிறார். தமிழக சட்ட சபைத் தேர்தல் வரை முடிவைக் கூறாது டாக்டர் ராமதாஸ் காலத் தைக் கடத்த திட்டமிட்டுள்ளார்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் செல்வாக்கு மிக்கவர்களில் ஒருவரான முன் னாள் அமைச்சர் முத்துசாமி அண்ணா திரா விட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வெளி யேறி திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்துள்ளார். எம். ஜி. ஆரின் தீவிர விசுவாசிகளில் ஒருவர் முத்துசாமி. ஜெயலலி தாவின் தலைமையிலும் எம். ஜி. ஆரின் மனைவி ஜானகியின் தலைமையிலும் அண் ணா திராவிட முன்னேற்றக் கழகம் பிளவு பட்டிருந்த போது எம். ஜி. ஆரின் விசுவாசிகள் பலர் ஜனானகியின் தலைமை யையே விரும்பினார்கள். ஜானகியைத் தலைவியாக ஏற்றுக் கொண்டவர்களில் முத்துசாமியும் ஒருவர். பிளவுபட்ட திராவிட முன் னேற்றக் கழகம் ஜெயலலி தாவின் தலைமையில் ஒன்றாகியபோது எம். ஜி. ஆரின் விசுவாசிகள் பலர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வெளி யேறினர். எம். ஜி. ஆர். உருவாக்கிய கட்சி சின்னாபின்னமாகக் கூடாது என்ற உணர்வில் ஜெயலலிதாவின் தலைமையில் சிலர் செயற் பட்டனர்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் துக்கு ஜெயலலிதா தலைவராக உள்ளார். ஆனால் ஜெயலலிதா அணி, ஜானகி அணி என்ற இரண்டு அணிகள் இருப்பது வெளியில் யாருக்கும் தெரியாது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து அண்மையில் வெளியேறுப வர்கள் அனைவரும் எம். ஜி. ஆரின் தீவிர விசுவாசிகள். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து ஒருவர் வெளியேறப் போகிறார் என்று தெரிந்தால் அவரை ஓரம் கட்டுவது ஜெயலலி தாவின் வழமையான நட வடிக்கை களில் ஒன்று. முத்துசாமி வெளி யேறப் போகிறார் என அறிந்ததும் அவரைச் சந்திப்பதற்கு ஜெயலலிதா விரும்பினார். பிரச்சினைகளை நேர டியாகக் கேட்டு முடிவெடுப்போம் என்று ஜெயலலிதா அறிவித்தார். ஜெயலலிதாவைச் சந்திக்க விரும் பாத முத்துசாமி கட்சிக்குள் உள்ள குறைபாடுகளைக் கடித மூலம் அறி வித்தார்.
சேலம், நாமக்கல், ஈரோடு, பொள் ளாச்சி, திருப்பூர், கோவை உள் ளிட்ட இடங்களில் முத்துசாமிக்கு செல்வாக்கு அதிகம். நடைபெற்ற தேர்தல்களில் இப்பகுதிகளில் திரா விட முன்னேற்றக் கழகம் பெரும் பின்னடைவைச் சந்தித்தது. முத்து சாமியின் வரவால் அப்பகுதிகளில் திராவிட முன்னேற்றக் கழகம் எழுச்சி பெறும் என்று கருதப்படு கிறது.
கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு இன்றி அறுதிப் பெரும்பான்மை யுடன் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதே முதல்வர் கருணாநிதியின் விருப்பம். அதற்காகவே செல் வாக்கு மிக்க அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பிரமுகர்களைத் தேடி வலை வீசப் படுகிறது. முத்துசாமியின் வரவால் சேலம், கோவை, பொள்ளாச்சி போன்ற பகுதிகளில் திராவிட முன்னேற்றக் கழகம் பலமடையும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. கொங்கு மண்ட பத்தில் திரா விட முன்னேற்றக் கழகம் இழந்த செல்வாக்கை முத்துசாமி உயர்த்துவார்.
அதேபோல் நாமக்கல், சேலம் போன்ற பகுதிகளில் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெறுவதற்கு அண்ணா திராவிட முன் னேற்றக் கழகத்தின் முன்னாள் அமைச்சர் செல்வ கணபதி உதவி செய்வார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்த செல்வ கணபதி ராஜ்ய சபா உறுப்பினராகிறார். அப்பகுதியில் உள்ள வன்னியரின் வாக்கை அவர் வசூலிப்பார் என்ற நம்பிக்கை திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு உள்ளது.
ஜெயலலிதாவுடன் முரண்பட்டிருக்கும் இன் னும் பலர் கட்சி மாறுவார்கள் என்ற எதிர் பார்ப்பு உள்ளது. அண்ணா திராவிட முன்னேற் றக் கழகத்தில் இருந்து திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைபவர்களுக்கு பலமான தொகுதிகளை ஒதுக்க வேண்டிய நிலை உள் ளது.
அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களுக்குரிய தொகுதிகள் ஒதுக்கப் பட்ட பின்பே பாட்டாளி மக்கள் கட்சிக்கு தொகுதி கள் ஒதுக்குவார் கருணாநிதி. அதற்காகவே 2011 சட்ட சபைத் தேர்தல் வரை பாட்டாளி மக்கள் கட்சிக்கு காலக்கெடு விதித்துள்ளார் கருணாநிதி.


வர்மா
வீரகேசரிவாரவெளியீடு 13.06.10

Thursday, June 10, 2010

உலகக்கிண்ணம்2010


உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் உலகக் கிண்ண உதைபந்தாட்ட திருவிழா இன்று தென்னாபிரிக்காவில் ஆரம்பமாகிறது. 32 நாடுகள் பங்கு பற்றும் 64 போட்டிகள். தென்னாபிரிக்காவில் உள்ள 10 மைதானங்களில் நடைபெறுகிறது. நிற வெறியால் உலக அரங்கில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்ட நாடு தென்னாபிரிக்கா. நிறவெறியை மூட்டை கட்டி புதைத்து விட்டு கடந்த 15 வருடங்களில் முன்னேற்றமடைந்துள்ள தென்னாபிரிக்காவை நோக்கி உலகமே திரும்பியுள்ளது.
தென்னாபிரிக்காவில் உதைபந்தாட்டம் பிரபலமானது. 1879ஆம் ஆண்டு அங்கீகரிக்கப்பட்ட முதலாவது உதைபந்தாட்ட குழு ஆரம்பிக்கப்பட்டது பீட்டர் மாரிட் ஸ்பார்க் கன்ட்ரி என்னும் அந்த அணியில் ஐரோப்பியர்களும் வெள்ளையரும் மட்டுமே அங்கத்துவம் பெற்றனர். இந்த உதைபந்தாட்ட அணி இராணுவ வீரர்களுடன் மட்டுமே விளையாடி வந்தது. நிற வெறி காரணமாக விளையாட்டுத் துறையில் இருந்து தென்னாபிரிக்கா ஒதுக்கப்பட்டது. 1954ஆம் ஆண்டு இஸ்ரேலுக்கு எதிரான போட்டியே உலக உதைபந்தாட்ட அரங்கில் தென்னாபிரிக்கா கடைசியாக விளையாடிய போட்டியாகும்.
நிறவெறி காரணமாக விளையாட்டில் இருந்து ஒதுக்கப்பட்டாலும் சோர்ந்து போகாத தென்னாபிரிக்கா, 1959ஆம் ஆண்டு தொழில் முறை உதைபந்தாட்டப் போட்டிகளை அறிமுகப்படுத்தியது. 1992 ஆம் ஆண்டு உலக உதைபந்தாட்ட சம்மேளனத்தில் அங்கத்துவம் பெற்றது தென்னாபிரிக்கா. உதைபந்தாட்ட வரலாற்றில் முதன் முதலாக ஆபிரிக்கக் கண்டத்தில் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டி நடைபெறுகிறது. தென்அமெரிக்க நாடுகளும் ஐரோப்பிய நாடுகளும் உதைபந்தாட்ட கிண்ணத்தைப் பெற்று முன்னணியில் உள்ளன. பிரேஸில் ஐந்து தடவை சம்பியனாகி முன்னணியில் உள்ளது. இத்தாலி நான்கு தடவை சம்பியனாகி இரண்டாவது இடத்திலும் ஜேர்மனி மூன்று தடவைகள் சம்பியனாகி மூன்றாவது இடத்திலும் உள்ளன. ஆர்ஜென்ரீனா, உருகுவே ஆகியன தலா இரண்டு முறையும் இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகியன தலா ஒரு முறையும் சம்பியனாகின.
உலகின் எல்லாக் கண்டங்களிலும் சம்பியனான நாடு என்ற பெருமையை பெறுவதற்காக காத்திருக்கிறது பிரேஸில். ஐரோப்பா (1958சுவீடன்), தென் அமெரிக்கா (1962சிலி), வட அமெரிக்கா (1970 மெக்ஸிகோ), வட அமெரிக்கா (1994 அமெரிக்கா), ஆசியா (2002 கொரியா / ஜப்பான்) ஆகிய கண்டங்களில் வெற்றி பெற்ற பிரேஸில் ஆபிரிக்கக் கண்டத்திலும் சம்பியனாகும் முனைப்புடன் காத்திருக்கிறது. 2014ஆம் ஆண்டு உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டி பிரேஸிலில் நடைபெற உள்ளது. சம்பியன் கிண்ணத்துடன் சொந்த நாட்டில் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியை நடத்தும் ஆர்வத்துடன் உள்ளது பிரேஸில்.
தரவரிசையில் முதலிடத்தில் உள்ள பிரேஸிலில் பிரபலமான "ஆர்' கூட்டணி இல்லாததால் ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர். ரொபேட்டோ கார்லோஸ் ஓய்வு பெற்று விட்டார். உலகக் கிண்ண வரலாற்றில் அதிக கோல்கள் (15) அடித்த ரொனால்டோ முழங்கால் காயத்தால் அவதிப்படுவதால் அணியில் இடம்பெறவில்லை. பிரேஸில் அணியின் குழப்படிக்காரப் பையனான ரொனால்டினோவுக்கு பயிற்சியாளர் துங்கா வாய்ப்பளிக்கவில்லை. விளையாட்டுக்கு இரண்டாவது இடத்தைக் கொடுத்து பொழுதுபோக்குக்கு முதலிடம் கொடுக்கும் ரொனால்டினோ 23 வீரர்கள் அடங்கிய பட்டியலில் இல்லையென்றாலும் ரிசேவ் வீரர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.
மத்திய பகுதியில் பம்பரமாகச் சுழன்று விளையாடும் காகா இருப்பதால் ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர். காகாவின் உதவியுடன் ரொபின் ஹோ, பபியானோ ஆகியோரும் கோல் அடிப்பதற்குத் தயாராக முன் களத்தில் உள்ளனர். டேனியல் ஆல்வ்ஸ், தியகோ சில்வா, ஜுவான் ஆகியோர் பின் வரிசையில் பலமாக இருப்பதனால் இவர்களைத் தாண்டி கோல் அடிப்பது சிரமமானது.
மிக நீண்ட காலமாக தரவரிசையில் முதலிடத்தில் இருந்த ஸ்பெயின் கடந்த மாதம் பிரேஸிலிடம் முதலிடத்தை பறிகொடுத்து விட்டு இரண்டாவது இடத்துக்குத் தள்ளப்பட்டது. அண்மையில் ஸ்பெயின் பெற்ற வெற்றிகள் அதன் மீது நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. அதேவேளை ஸ்பெயின் வீரர்களின் விளையாட்டினால் ரசிகர்கள் கொதித்தெழும் சம்பவங்களும் உள்ளன. பலவீனமான நாட்டுடன் அல்லது அணியுடன் விளையாடும் போது ஸ்பெயின் இலகுவாக வெற்றி பெற்று விடும். இந்தப் போட்டியில் ஸ்பெயின் தோல்வியடைந்து விடும் என்று எதிர்பார்க்கும் வேளையில் பிரமாண்டமான வெற்றியைப் பெற்று விடும்.
ஸ்பெயின் வீரரான பெர்னாண்டோ டாரஸை எதிரணி வீரர்கள் அச்சத்துடனேயே எதிர்நோக்குவார்கள். இரண்டு, மூன்று வீரர்கள் சேர்ந்து சுற்றி வளைத்தாலும் அவரிடமிருந்து பந்தைப் பறிப்பது மிகவும் சிரமமானது. அவருடைய கால்களுக்கு இடையே உள்ள பந்து எந்தத் திசை நோக்கி செல்லும் என்பதை எவராலும் கணிக்க முடியாது.
உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இரண்டு முறை விளையாடி கிண்ணத்தை பறிகொடுத்த நாடு நெதர்லாந்து. அதிர்ஷ்டமில்லாத நாடு என்ற பெயரை நீக்குவதற்காக அர்ஜான் ரொபின், ரூபின் வான் பஸி ஆகிய நட்சத்திரங்கள் கிளர்ந்தெழுந்துள்ளனர்.
உலகக் கிண்ணத்தைப் பெறும் எனக் கணிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றான இங்கிலாந்து பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளது. பெக்கம், ஜோன் டெரி, வோர்ன் பிரிட்ஜ், ரூனி ஆகியோரின் கூட்டணி எதிரணிக்கு சிம்மசொப்பனம் என எதிர்பார்க்கப்பட்டது. காலில் அடிபட்டு சத்திர சிகிச்சை செய்யப்பட்டதால் பெக்கம் அணியில் சேர்க்கப்படவில்லை. வேயர்ன் பிரிட்ஜின் காதலியுடன் அணித்தலைவர் ஜோன் டெர்ரி பழகியதால் வேயர்ன் பிரிட்ஜின் காதலி வென்னன்கா கர்ப்பமானார். இந்த இரகசியம் அம்பலமானதால் ஜோன் டெர்ரி தலைமைப் பதவியிலிருந்து தூக்கி எறியப்பட்டார். மனமுடைந்த வேயர்ன் பிரிட்ஜ் உலகக் கிண்ண அணியில் தன்னைச் சேர்க்க வேண்டாம் என்று கூறிவிட்டார்.
கோல் அடிக்கும் இயந்திரமான ரூனியும் ஜோன் டெர்ரியும் இங்கிலாந்தை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்வார்கள் என்ற நம்பிக்கை இரசிகர்களிடம் உள்ளது. 30 வயதைக் கடந்து விட்டால் உதைபந்தாட்ட வீரர்கள் ஓய்வு பெற்று விடுவார்கள்.
ஆனால், 35 வயதான பெக்கமின் விளையாட்டு இன்னமும் ஓய்ந்து விட வில்லை. மூன்று உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டிகளில் விளையாடிய பெக்கம் நான்காவது உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடுவார் என்ற எதிர்பார்ப்பு ஏமாற்றமாகியுள்ளது.
பயிற்சியாளர் மரடோனா, 22 வயதான லயோனல் மெஸ்னி ஆகியோரின் மீது ஆர்ஜென்ரீனா நம்பிக்கை வைத்துள்ளது. மிகப் பிரபலமான விளையாட்டு வீரரான மரடோனா சர்ச்சைகளிலும் பிரபலமானவர். ஆர்ஜென்ரீனா உதைபந்தாட்ட அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டது முதலே சர்ச்சைகளிலும் சோதனைகளிலும் சிக்கி வருகிறார் மரடோனா. மகளின் காதலனை அணியில் சேர்த்ததை ஆர்ஜென்ரீனா பத்திரிகைகள் விமர்சித்துள்ளன. பிஃபாவின் சிறந்த வீரருக்கான விருதை இந்த ஆண்டு பெற்ற லயோனல் மெஸ்ஸி மீது பல விமர்சனங்கள் உள்ளன. ஸ்பெயின் நாட்டில் பர்ஸிலோனா அணிக்காக திறமையாக விளையாடி வரும் லயோனல் மெஸ்ஸி தாய் நாட்டுக்காக விளையாடும் போது ஏமாற்றி வருகிறார். தன் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டு பொய் என்பதை நிரூபிக்க வேண்டிய நிலையில் உள்ளார் லயோனல் மெஸ்ஸி.
உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடுவதற்கு கடைசிச் சுற்று வரை காத்திருந்த நாடு ஆர்ஜென்ரீனா. ஆர்ஜென்ரீனாவைப் போன்றே கடைசிச் சுற்றில் வெற்றி பெற்று தகுதியான இன்னொரு நாடு போர்த்துக்கல். அணித் தலைவர் கிறிஸ்டியானோ ரொனால்டோவை மட்டும் நம்பி உள்ளது போர்த்துக்கல். சிறந்த வீரருக்கான பீஃபா விருதை இரண்டு முறை பெற்றவர். ஸ்பெயின் நாட்டின் ரியல் மட்ரிட் அணி 93 மில்லியன் பவுண் கொடுத்து இவரை வாங்கி உள்ளது. உலகக் கிண்ணத்தை வெல்லும் நாடுகளின் பட்டியலில் போர்த்துக்கல் இல்லை. கிறிஸ்டியானோ ரொனால்டோவின் ரசிகர்கள் அனைவரும் போர்த்துக்கல்லுக்கு ஆதரவளிப்பார்கள்.
லயோனல் மெஸ்ஸி, கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோருக்கிடையேயான போட்டி பலமாக உள்ளது. கோல்டன் ஷý, கோல்டன் பந்து ஆகிய விருதைப் பெற இரு வீரர்களும் முனைப்பாக உள்ளனர். பீஃபா விருதைப் பெற்ற லயோனல் மெஸ்ஸி உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியிலும் விருது பெறும் நோக்கில் உள்ளார். பீஃபா விருதை மெஸ்ஸியிடம் பறிகொடுத்த கிறிஸ்டியானோ ரொனால்டோ மெஸ்ஸியை முந்தும் முனைப்பில் உள்ளார்.
உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியைக் காண உலகில் உள்ள உதைபந்தாட்ட ரசிகர்கள் ஆவலாக உள்ள வேளையில் தமது மதிப்புக்குரிய நட்சத்திர வீரர்கள் விளையாடாத கவலை பல ரசிகர்களிடம் உள்ளது.
பெக்கம் (இங்கிலாந்து), வேயன் பிரிட்ஜ் (இங்கிலாந்து), ரொனால்டோ (பிரேஸில்), ரொபின்ஹோ (பிரேஸில்), மைக்கல் பெல்லிக் (ஜேர்மனி), ஆகியோர் விளையாடாததனால் உதைபந்தாட்ட ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர்.

ரமணி

மெட்ரோநியூஸ்

Monday, June 7, 2010

உலகக்கிண்ணம்2010


ஜேர்மனி2006
ஜேர்மனியில் நடைபெற்ற 18ஆவது உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் பிரான்ஸை வீழ்த்தி இத்தாலி சம்பியானது. உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் இத்தாலி நான்காவது முறை சம்பியனானது. உலகக்கிண்ண உதைபந்தாட்ட தகுதிகாண் போட்டியில் 198 நாடுகள் விளையாடின. 32 நாடுகள் உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றன. கமரூன், நைஜீரியா ஆகியன தகுதி பெறவில்லை. அங்கோலா, ஐவரிகோஸ்ட், கானா, ரோகோ, ரினிடிட் அன்ட் டுபாக்கா ஆகியன உலகக் கிண்ண உதைபந்தாட்டப்போட்டியில் விளையாடும் தகுதியைப் பெற்றன. ஆபிரிக்கக் கண்டத்தில் இருந்து அங்கோலா, ஐவரிகோஸ்ட், கானா, ரோகோ, துனிஷியா, ஆசியக் கண்டத்தில் இருந்து அவுஸ்திரேலியா, ஈரான், ஜப்பான், தென்கொரியா, சவூதி அரேபியா, ஐரோப்பாக் கண்டத்தில் இருந்து குரோஷியா, செக்குடியரசு, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, போலந்து, போர்த்துக்கல், சேர்பியா அன்ட் மொன்ரகோவா, ஸ்பெயின், சுவீடன், சுவிட்ஸர்லாந்து, உக்ரைன், வட மத்திய அமெரிக்காவிலிருந்து கொஸ்ரரிக்கா, மெக்ஸிகோ, ரினிடாட், அன்ட்டுபாக்கோ, அமெரிக்கா, தென் அமெரிக்காவில் இருந்து ஆர்ஜென்ரீனா, பிரேஸில், ஈக்குவடோர், பரகுவே ஆகியன உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெற்றன.
32 நாடுகளும் எட்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு குழுவிலும் தலா நான்கு நாடுகள் இடம்பிடித்தன. அதி கூடிய புள்ளிகளுடன் வெற்றி பெற்று தலா இரண்டு நாடுகள் ஒவ்வொரு குழுவில் இருந்தும் இரண்டாவது சுற்றுக்குத் தெரிவாகின.
முதல் சுற்றில் வெற்றி பெற்ற 16 நாடுகள் இரண்டாவது சுற்றில் மோதின. சுவீடனுக்கு எதிரான போட்டியில் 20 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற ஜேர்மனி, மெக்ஸிகோவுக்கு எதிரான போட்டியில் 21 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற ஆர்ஜென்ரீனா, ஈக்குவடோருக்கு எதிரான போட்டியில் 10 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற இங்கிலாந்து, நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் 10 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற போர்த்துக்கல், அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 10 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற இத்தாலி, கானாவுக்கு எதிரான போட்டியில் 30 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற பிரேஸில், ஸ்பெயினுக்கு எதிரான போட்டியில் 31 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற பிரான்ஸ் ஆகியன காலிறுதியில் விளையாடத் தகுதி பெற்றன. உக்ரைன், சுவிட்சர்லாந்து ஆகியவற்றுக்கிடையேயான போட்டி கோல் எதுவும் அடிக்காது சமநிலையில் முடிந்தமையில் பெனால்டி மூலம் 30 என்ற கோல் கணக்கில் உக்ரைன் வெற்றி பெற்று காலிறுதியில் விளையாடத் தகுதி பெற்றது. பெனால்டியில் கோல் அடிக்காது தோல்வியடைந்தது சுவிட்ஸர்லாந்து.
உக்ரைனுக்கு எதிரான போட்டியில் 30 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற இத்தாலி, பிரேஸிலுக்கு எதிரான போட்டியில் 10 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று பிரான்ஸ் ஆகியன அரையிறுதிப்போட்டியில் விளையாடத் தகுதிபெற்றன. ஆர்ஜென்ரீனா, ஜேர்மனி ஆகியவற்றுக்கிடையேயான போட்டியில் இரு நாடுகளும் தலா ஒரு கோல் அடித்தன. போட்டி சமநிலையில் முடிந்தது. மேலதிக நேரத்தில் கோல் அடிக்கப்படாமையால் பெனால்டி மூலம் 42 என்ற கோல் கணக்கில் ஜேர்மனி வெற்றி பெற்றது. இங்கிலாந்து, போர்த்துக்கல் ஆகியவற்றுக்கிடையேயான போட்டி கோல் எதுவும் அடிக்காமையினால் பெனால்டிமூலம் 31 என்ற கோல் கணக்கில் போர்த்துக்கல் வெற்றி பெற்றது.
ஜேர்மனிக்கு எதிரான போட்டியில் 20 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற இத்தாலி, போர்த்துக்கல்லுக்கு எதிரான போட்டியில் 10 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்ற பிரான்ஸ் ஆகியன இறுதிப்போட்டியில் விளையாட தகுதிபெற்றன. அரையிறுதியில் தோல்வியடைந்த ஜெர்மனி, போர்த்துக்கல் ஆகியவற்றுக்கிடையேயான போட்டியில் 31 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற ஜேர்மனி மூன்றõவது இடத்தையும் தோல்வியடைந்த போர்த்துக்கல் நான்காவது இடத்தையும் பிடித்தன.
இத்தாலி, பிரான்ஸ் ஆகியவற்றுக்கிடையே நடைபெற்ற பரபரப்பான இறுதிப்போட்டியில் இருநாடுகளும் தலா ஒரு கோல் அடித்ததால் போட்டி சமநிலையில் முடிந்தது. பெனால்டி மூலம் 53 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற இத்தாலி சம்பியனானது.
64 போட்டிகளில் 147 கோல்கள் அடிக்கப்பட்டன. 3354439 ரசிகர்கள் மைதானங்களில் போட்டிகளைப் பார்வையிட்டனர். ஜேர்மனி 14 கோல்களும் இத்தாலி 12 கோல்களும், ஆர்ஜென்ரீனா 11 கோல்களும் அடித்தன. அதிக தவறு செய்த நாடாக இத்தாலி உள்ளது. இரண்டாவது இடத்தில் ஜேர்மனியும் மூன்றாவது இடத்தில் பிரான்ஸும் உள்ளன.
கோல்டன் ஷýவிருதுக்கு கொலோசி (ஜேர்மனி), கிரெஸ்போ (ஆர்ஜென்ரீனா), ரொனால்டோ (பிரேஸில்) ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டனர். கொலோ சிக்கு கோல்டன் ஷý வழங்கப்பட்டது. கோல்டன் பந்து விருதுக்கு ஸினடிஸினன் (பிரான்ஸ்) கன்னவாரோ (இத்தாலி), பிர்லோ (இத்தாலி) ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டனர். ஸினடிஸிடெனுக்கு கோல்டன் பந்து விருது வழங்கப்பட்டது. சிறந்த கோல் கீப்பருக்கான விருது இத்தாலி வீரனான வவ்பனுக்கு வழங்கப்பட்டது. சிறந்த இளம் வீரரான லூகாஸ் பொடோங்கி (ஜேர்மனி) பெற்றுக்கொண்டார். முறை தவறாது விளையாடிய விருதை ஸ்பெயினும் பிரேஸிலும் பெற்றுக்கொண்டன. ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்திய விருதை போர்த்துக்கல் பெற்றுக்கொண்டது. சுவீடன், ஜேர்மனி ஆகியவற்றுக்கிடையே நடைபெற்ற இரண்டாவது போட்டி ஜேர்மனிய நகரங்களில் பிரமாண்டமான திரைகளில் ஒளிபரப்பப்பட்டது. இதனை 750,000 பேர் கண்டுகளித்தனர்.
குரேõஷியா, அவுஸ்திரேலியா ஆகியவற்றுக்கிடையே நடைபெற்ற போட்டியில் மத்தியஸ்தர் தவறுதலாக மூன்று தடவை மஞ்சள் அட்டையை காட்டினார். உலகெங்கும் உள்ள 715.1 மில்லியன் ரசிகர்கள் உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியை பார்த்தனர்.
326 மஞ்சள் அட்டைகளும் 28 சிவப்பு அட்டைகளும் காண்பிக்கப்பட்டன. உதைபந்தாட்ட வரலாற்றில் இது ஒரு சாதனையாகும். போலந்து, நெதர்லாந்து ஆகிய நாடுகளுக்கிடையே நடைபெற்ற போட்டியின் போது மத்தியஸ்தரான வலன்ரின் இவானோவ் அதிகபட்சமாக 16 முறை மஞ்சள் அட்டையையும் நான்கு முறை சிவப்பு அட்டையையும் காட்டினார்.
முதல் சுற்றில் சுவிட்சர்லாந்துக்கு எதிராக விளையாடிய நாடுகள் கோல் அடிக்கவில்லை. இரண்டாவது சுற்றுப்போட்டி சமநிலையில் முடிந்ததனால் பெனால்டி மூலம் முடிவு காணப்பட்டது. பெனால்டியில் கோல் அடிக்காமையினால் தோல்வியடைந்த சுவிட்சர்லாந்து வெளியேறியது.
உலகக் கிண்ண சம்பியனான நாடு தகுதிகாண் போட்டியில் விளையாடாமல் நேரடியாக உலகக் கிண்ண போட்டியில் விளையாடும் முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதால் உலகக் கிண்ண சம்பியனான பிரேஸில் தகுதிகாண் போட்டிகளில் விளையாடியது.

ரமணி

மெட்ரோநியூஸ்

Sunday, June 6, 2010

ராமதாஸின் கனவைகலைத்தெறிந்த கருணாநிதி



திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் இருந்து வெளியேறினால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் இருந்து வெளியேறினால் திராவிட முன்னேற்றக் கழகம் என்ற சூத்திரத்துடன் அரசியல் நடத்திய டாக்டர் ராமதாஸுக்கு அதிர்ச்சி வைத்தியமளித்துள்ளார் தமிழக முதல்வர் கருணாநிதி.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் இருந்து வெளியேறிய பாட்டாளி மக்கள் கட்சி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் இணையும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் அரங்கில் உண்டானது. ஆனால், பாட்டாளி மக்கள் கட்சியை கூட்டணியில் உடனடியாகச் சேர்ப்பதற்கு முதல்வர் கருணாநிதி விரும்பவில்லை. பாட்டாளி மக்கள் கட்சி மீண்டும் கூட்டணியில் இணைய வேண்டும் என்றே காங்கிரஸ் தலைமை விரும்பியது. தமிழக முதல்வர் கருணாநிதியின் முடிவே தமது முடிவு என்று காங்கிரஸ் தலைமை அமைதியாக இருந்தது.
தமிழக முதல்வர் தம்மை அழைத்து பேச்சுவார்த்தை நடத்துவார் என்று டாக்டர் ராமதாஸ் எதிர்பார்த்தார். அவரின் எதிர்பார்ப்பு நிறைவேறாத காரணத்தினால், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் சேர்வதற்கு தனது கட்சி விரும்புவதாக டாக்டர் ராமதாஸ் கடிதம் எழுதினார்.
நாடாளுமன்றத் தேர்தலின் போது வீழ்ந்திருந்த பாட்டாளி மக்கள் கட்சியின் செல்வாக்கு, பென்னாகரம் தொகுதி இடைத்தேர்தலில் அமோகமாக உயர்ந்திருந்தது. ஆகையினால், திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி உடனடியாக இணைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பை பொடி பொடியாக உடைத்து விட்டார் முதல்வர் கருணாநிதி.
பாட்டாளி மக்கள் கட்சியை கூட்டணியில் சேர்ப்பதற்கு தயார் எனக் கூறிய திராவிட முன்னேற்றக் கழகம், 2011 ஆம் ஆண்டு வரை காத்திருக்குமாறு காலக்கெடு விதித்துள்ளது. அது மட்டுமல்லாது, பாட்டாளி மக்கள் கட்சி எதிர்பார்க்கும் ராஜ்ய சபா நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்காக 2013 ஆம் ஆண்டு வரை காத்திருக்கும்படி கூறியுள்ளது. கனிமொழி உள்ளிட்ட ராஜ்ய சபா உறுப்பினர்களின் பதவிக் காலம் 2013 ஆம் ஆண்டு முடிவடைகிறது. இந்நிலையில், தனது மகன் அன்புமணியை நாடாளுமன்ற உறுப்பினராக்குவதற்கு டாக்டர் ராமதாஸ் எடுத்த பகீரத முயற்சிகள் அனைத்தும் முடிவுக்கு வந்துள்ளன.
பாட்டாளி மக்கள் கட்சி எதிர்பார்க்காத முடிவை திராவிட முன்னேற்றக் கழகம் எடுத் ததனால் பாட்டாளி மக்கள் கட்சியில் இரு வேறு கருத்துகள் எழுந்துள்ளன. திராவிட முன்னேற்றக் கூட்டணியை விரும்பாதவர்கள் தமது கருத்துகளை பகிரங்கமாக வெளியிட்டுள்ளனர். திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் சேரக் கூடாது என்ற கருத்து பரவலாக முன்வைக்கப்பட்டது.
தற்போது பாட்டாளி மக்கள் கட்சியின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் முடிவுக்கு வந்துள்ளது. 2013 ஆம் ஆண்டு வரை நன்னடத்தைக் காலமாக திராவிட முன்னேற்றக் கழகம் மறைமுகமாக அறிவித்துள்ளது. 2013 ஆம் ஆண்டு வரை திராவிட முன்னேற்றக் கழகத்தையும் தலைவர்களையும் காட்டமாக விமர்சிக்க முடியாத நிலையில் சிக்கியுள்ளது பாட்டாளி மக்கள் கட்சி.
பென்னாகரம் இடைத்தேர்தலின் போது, திராவிட முன்னேற்றக் கழகத்தை மிகக் கடுமையாக விமர்சித்தது பாட்டாளி மக்கள் கட்சி. வேண்டத்தகாத சில சம்பவங்கள் நடைபெற்றதாகவும் அதை எல்லாம் மறந்து விடும்படியும் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவுனர் டாக்டர் ராமதாஸ் கடிதம் மூலம் திராவிட முன்னேற்றக் கழகத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். மகன் அன்புமணியின் ராஜ்ய சபா பதவிக்காக டாக்டர் ராமதாஸ் அதனை மறந்து விடலாம். ஆனால், முதல்வர் கருணாநிதியும் திராவிட முன்னேற்றக் கழகத்தினரும் அவற்றை எளிதில் மறக்க மாட்டார்கள்.





அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் இருந்து வெளியேறிய பாட்டாளி மக்கள் கட்சி மீண்டும் அங்கு செல்ல முடியாத ஒரு நிலை ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியுடன் இணைவதற்கு சகல முயற்சிகளையும் மறைமுகமாக செய்து வந்தது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். ஜெயலலிதா சூசகமாக சில உரைகளை ஆற்றியிருந்தார். காங்கிரஸின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லாமையினால் விஜயகாந்தை கூட்டணிக்குள் கொண்டு வர சில அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பிரமுகர்கள் முயற்சி செய்தனர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் விஜயகாந்த் இணைந்தால், பாட்டாளி மக்கள் கட்சி தனிமைப்பட்டு விடும். ஆகையினால், கருணாநிதியா, ஜெயலலிதாவா என்ற முடிவை விரைவில் எடுக்க வேண்டிய இக்கட்டான நிலையில் உள்ளார் டாக்டர் ராமதாஸ்.
கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு இன்றி ராஜ்ய சபா உறுப்பினர் பதவியைப் பெற்றுக் கொள்ளும் திட்டம் பாட்டாளி மக்கள் கட்சியின் பரிசீலனையில் உள்ளது. 35 சட்டமன்ற உறுப்பினர்களின் வாக்கு மூலம் ராஜ்ய சபா நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஆகையினால் சட்ட சபையில் உறுப்பினர்களை அதிகரிக்கும் முயற்சியை பாட்டாளி மக்கள் கட்சி மேற்கொள்ளலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2011 ஆம் ஆண்டு சட்ட சபைத் தேர்தலின் போது கூட்டணியில் கட்சியிடமிருந்து குறைந்தது 40 தொகுதிகளைப் பெறுவதற்காக பேச்சுவார்த்தையை பாட்டாளி மக்கள் கட்சி மேற்கொள்ளலாம். இந்தத் திட்டத்துக்கு கூட்டணிக் கட்சிகளின் ஏனைய தலைவர்கள் ஒத்துழைப்பு வழங்க மாட்டார்கள்.
தமிழக சட்ட சபைத் தேர்தலை முன்கூட்டியே நடத்த வேண்டும் என்ற கருத்து திராவிட முன்னேற்றக் கழகத்தினுள் எழுந்துள்ளது. 1991 ஆம் ஆண்டும் 2001 ஆம் ஆண்டும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சட்டசபைத் தேர்தலில் வெற்றிபெற்றது. அதேபோன்று கடைசியில் ஒரு இலக்கம் வரும் 2011 ஆம் ஆண்டும் அண்ணõ திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்று விடுமோ என்ற அச்சம் திராவிட முன்னேற்றக் கழகத்தில் உள்ள சிலரிடம் உள்ளது.
கூட்டணிக் கட்சியை ஆதரிப்பதில் முதன்மையான அரசியல் தலைவர் கருணாநிதி என்பது பலமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது. 1997ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆதரவுடன் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூவர் ராஜ்ய சபா உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். 2004 ஆம் ஆண்டு தமிழக சட்ட சபையில் 30 திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் இருந்தபோதும் ஒப்பந்தத்தை மீறக் கூடாது என்பதற்காக 19 உறுப்பினர்களைக் கொண்ட பாட்டாளி மக்கள் கட்சிக்கும் 25 உறுப்பினர்களைக் கொண்ட காங்கிரஸ் கட்சிக்கும் வாய்ப்பளித்தது. அப்போது அன்புமணியும் சுதர்சன நாச்சியப்பனும் நாடாளுமன்ற உறுப்பினராகினர்.
2006 ஆம் ஆண்டு சட்ட சபையில் ஆறு உறுப்பினர்களைக் கொண்ட இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் 2008 ஆம் ஆண்டு சட்ட சபையில் ஒன்பது உறுப்பினர்களைக் கொண்ட மார்க்சிஸ்ட் கட்சிக்கும் சந்தர்ப்பம் வழங்கினார் கருணாநிதி. அதேபோன்று இப்போது 18 உறுப்பினர்களைக் கொண்ட பாட்டாளி மக்கள் கட்சிக்கு கருணாநிதி சந்தர்ப்பம் வழங்குவார் என்ற டாக்டர் ராமதாஸின் எதிர்பார்ப்பு ஏமாற்றத்திற்குள்ளானது.
கடந்த இந்திய நாடாளுமன்றத் தேர்தலின் போது பாட்டாளி மக்கள் கட்சியுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை மீறி தனது கட்சியைச் சேர்ந்த இருவருக்கு சந்தர்ப்பம் வழங்கியுள்ளார் ஜெயலலிதா. வைகோ நாடாளுமன்றத்துக்குச் செல்ல வேண்டும் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் எதிர்பார்க்கின்றனர். ஆனால், ஜெயலலிதா கூறும் முடிவுகள் அனைத்துக்கும் தலை அசைக்கிறார் வைகோ. அன்புமணியின் எதிர்காலத்துக்காக கட்சியை அடமானம் வைக்கத் துடிக்கிறார் டாக்டர் ராமதாஸ்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு தாவிய கே.பி. ராமலிங்கம், டி.எம். செல்வ கணபதி ஆகிய இருவரையும் வேட்பாளராக நிறுத்தியுள்ளது திராவிட முன்னேற்றக் கழகம்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு தாவத் தயாராக இருப்பவர்களுக்கு சமிக்ஞையாக இது அமைந்துள்ளது. சங்கரன் கோயில் தங்கவேலுவை மூன்றாவது வேட்பாளராக அறிவித்துள்ளது திராவிட முன்னேற்றக் கழகம். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு விரித்த வலையாக இது கருதப்படுகின்றது.
அடுத்த சட்டமன்றத் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளின் தயவின்றி ஆட்சி அமைப்பதற்கான அடித்தளத்தை இட்டுள்ளார் கருணாநிதி.
வர்மா
வீரகேசரிவாரவெளியீடு 06.06.10

உலகக்கிண்ணம்2010


தென் கொரியா/ஜப்பான்2002
தென் கொரியா/ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து நடத்திய 17ஆவது உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் ஜேர்மனியை வீழ்த்திய பிரேஸில் சம்பியனானது. 1994ஆம் ஆண்டு சம்பியனான பிரேஸில் 1998ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதிப் போட்டியில் பிரான்ஸிடம் தோல்வியடைந்தது. 2002ஆம் ஆண்டு ஐந்தாவது தடவை சம்பியனாகி சாதனை படைத்தது. உலகக் கிண்ண உதைபந்தாட்டம் முதன் முதல் ஆசியக் கண்டத்தில் நடைபெற்றது. முதன் முதலாக இரண்டு நாடுகள் இணைந்து நடத்திய உலகக் கிண்ணப் போட்டி இதுவாகும். ஐரோப்பா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆசியா ஆகிய கண்டங்களில் சம்பியனான ஒரே ஒரு நாடு பிரேஸில்.
உலகக் கிண்ண உதைபந்தாட்ட தகுதி காண் போட்டியில் 199 நாடுகள் பங்குபற்றின. அதிகூடிய புள்ளிகளுடன் வெற்றி பெற்ற 32 நாடுகள் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் பங்குபற்றும் தகுதியைப் பெற்றன. நெதர்லாந்து தகுதி பெறவில்லை. செனகல், தென்கொரியா, துருக்கி ஆகியன தகுதி பெற்றன.
ஆபிரிக்கக் கண்டத்தில் இருந்து கமரூன், நைஜீரியா, செனகல், தென் ஆபிரிக்கா, துனிஷியா, ஆசியக் கண்டத்தில் இருந்து சீனா, ஜப்பான், கொரியக் குடியரசு (தென்கொரியா), சவூதி அரேபியா, ஐரோப்பா கண்டத்தில் இருந்து பெல்ஜியம், குரோஷியா, டென்மார்க், இங்கிலாந்து, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, போலந்து, போர்த்துக்கல், அயர்லாந்து குடியரசு, ரஷ்யா, ஸ்லோவேனியா, ஸ்பெயின், சுவீடன், துருக்கி, வடமத்திய அமெரிக்காவிலிருந்து கொஸ்ரரிக்கா, மெக்ஸிகோ, அமெரிக்கா, தென் அமெரிக்காவிலிருந்து ஆர்ஜன்ரீனா, பிரேஸில், ஈக்குவடோர், பரகுவே, உருகுவே ஆகிய நாடுகள் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெற்றன.
சவூதி அரேபியாவுக்கு எதிரான போட்டியில் ஜேர்மனி 80 என்ற கோல் கணக்கிலும் கொஸ்ரரிக்காவுக்கு எதிரான போட்டியில் பிரேஸில் 52 என்ற கோல் கணக்கிலும் வெற்றி பெற்று தமது ஆதிக்கத்தை வெளிப்படுத்தின. 32 நாடுகளும் எட்டுக் குழுக்களாகப் பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு குழுவிலும் தலா நான்கு நாடுகள் இடம் பிடித்தன. ஒவ்வொரு குழுவிலும் அதிகூடிய புள்ளிகளுடன் வெற்றி பெற்ற தலா இரண்டு நாடுகள் இரண்டாவது சுற்றுக்குத் தெரிவாகின.
இரண்டாவது சுற்றில் பரகுவேக்கு எதிரான போட்டியில் 10 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்ற ஜேர்மனி, டென்மார்க்குக்கு எதிரான போட்டியில் 30 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்ற இங்கிலாந்து, சுவீடனுக்கு எதிரான போட்டியில் 21 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற செனகல், மெக்ஸிகோவுக்கு எதிரான போட்டியில் 20 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற அமெரிக்கா, பெல்ஜியத்துக்கு எதிரான போட்டியில் 20 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற பிரேஸில், ஜப்பானுக்கு எதிரான போட்டியில் 10 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற துருக்கி, இத்தாலிக்கு எதிரான போட்டியில் 21 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற தென் கொரியா ஆகியன காலிறுதியில் விளையாட தெரிவாகின. ஸ்பெயின், அயர்லாந்து ஆகியவற்றுக்கிடையிலான போட்டி சமநிலையில் முடிவடைந்தமையினால் பெனால்டி முறையில் 32 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற ஸ்பெயின் காலிறுதியில் விளையாடத் தகுதி பெற்றது.
காலிறுதிப் போட்டியில் இங்கிலாந்தை எதிர்த்து விளையாடிய பிரேஸில் 21 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் 10 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற ஜேர்மனி, செனகலுக்கு எதிரான போட்டியில் 10 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற துருக்கி ஆகியன அரையிறுதிப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றன. ஸ்பெயின், தென்கொரியா ஆகியவற்றுக்கிடையேயான போட்டி சமநிலையில் முடிவடைந்தமையினால் பெனால்டி மூலம் 53 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற தென் கொரியா அரையிறுதியில் விளையாடத் தகுதி பெற்றது.
அரையிறுதிப் போட்டியில் கொரியாவுக்கு எதிரான போட்டியில் 10 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற ஜேர்மனி, துருக்கிக்கு எதிரான போட்டியில் 10 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற பிரேஸில் ஆகியன இறுதிப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றன. அரையிறுதிப் போட்டியில் தோல்வியடைந்த தென்கொரியா, துருக்கி ஆகியவற்றுக்கிடையிலான போட்டியில் 32 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற துருக்கி மூன்றாம் இடத்தையும் தோல்வியடைந்த தென்கொரியா நான்காம் இடத்தையும் பிடித்தன.
உலகக் கிண்ண உதைபந்தாட்ட இறுதிப் போட்டியில் ஆறுமுறை விளையாடிய பிரேஸில் நான்கு முறை கிண்ணத்தை வென்றது. இரண்டு முறை தோல்வியடைந்தது. ஜேர்மனியும் ஆறு முறை உலகக் கிண்ண உதைபந்தாட்ட இறுதிப் போட்டியில் விளையாடியது. ஜேர்மனி இரண்டு முறை கிண்ணத்தை வென்றது. நான்கு முறை தோல்வியடைந்தது.
பலம் வாய்ந்த பிரேஸில், ஜேர்மனி ஆகிய நாடுகளுக்கிடையே நடைபெற்ற பரபரப்பான இறுதிப் போட்டியில் 20 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற பிரேஸில் ஐந்தாவது முறையும் சம்பியனானது. 64 போட்டிகளில் 161 கோல்கள் அடிக்கப்பட்டன. 2,705,197 ரசிகர்கள் மைதானங்களில் போட்டிகளை கண்டு ரசித்தனர். பிரேஸில் 18 கோல்களும், ஜேர்மனி 14 கோல்களும், ஸ்பெயின், துருக்கி ஆகியன தலா 10 கோல்களும் அடித்தன. அதிக தவறு செய்த நாடாக ஜேர்மனி விளங்குகிறது. இரண்டாவது இடத்தை தென் கொரியாவும் மூன்றாவது இடத்தை துருக்கியும் பிடித்தன. அதிக தவறு செய்த வீரராக பஸ்ரிக் (துருக்கி) முதலிடத்தையும், இரண்டாவது இடத்தை ஜிசுங் (தென்கொரியா), டவ் (அயர்லாந்துக் குடியரசு) ஆகியோர் பிடித்தனர்.
கோல்டன் ஷூ விருதுக்காக எட்டு கோல்கள் அடித்த ரொனால்டோ (பிரேஸில்), ஐந்து கோல்கள் அடித்த கொலோசி (ஜேர்மனி), ஐந்து கோல்கள் அடித்த ஹொங் மயுங்போ (தென் கொரியா) ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன. பிரேஸில் வீரர் ரொனால்டோ கோல்டன் ஷýவைப் பெற்றார். 1998ஆம் ஆண்டு கோல்டன் பந்து பெற்ற ரொனால்டோ இம்முறை கோல்டன் ஷýவைப் பெற்றார். கோல்டன் பந்து, கோல்டன் ஷý ஆகிய இரண்டையும் பெற்ற ஒரே ஒரு வீரர் ரொனால்டோ. கோல்டன் பந்து விருதுக்கு ஒலிவர்கான் (ஜேர்மனி), ரொனால்டோ (பிரேஸில்), ஹொங் மயுங்போ (தென்கொரியா) ஆகியோரின் பெயர்கள் சிபாரிசு செய்யப்பட்டன. ஒலிவர்கானுக்கு கோல்டன் பந்து விருது வழங்கப்பட்டது. இளம் வீரருக்கான விருது டொனோ வன் (அமெரிக்கா) பெற்றார். சிறந்த கோல் காப்பாளராக ஜேர்மனி வீரர் ஒலிவர்கான் தெரிவு செய்யப்பட்டார். தவறு செய்யாது முறையாக விளையாடிய விருதை பெல்ஜியம் பெற்றுக் கொண்டது. ரசிகர்களை மகிழ்ச்சியளித்த நாடாக தென் கொரியா தெரிவானது.
ரொனால்டோவின் மகன் தொலைக்காட்சியில் ரொபேட்டோ கார்லோசைப் பார்த்து "டடி' என முத்தமிட்டதால் அரையிறுதிப்போட்டியின் பின்னர் ரொனால்டோ தனது தலை அலங்காரத்தை மாற்றி விட்டார். 2002ஆம் ஆண்டு ஆபிரிக்கக் கிண்ணப் போட்டியின் போது கைகளை மறைக்கும் பகுதி இல்லாத சீருடை அணிந்ததால் கமரூன் தடை செய்யப்பட்டது. போலந்துக்கு எதிரான போட்டியின்போது 20 செக்கன்களில் தென் கொரிய வீரர் காயமடைந்ததனால் சாடூரி எனும் வீரர் களமிறங்கினார். குறைந்த நேரத்தில் மாற்று வீரராக விளையாடிய பெருமை இவரைச் சாரும்.
பொரா மிலுடினொவிக் என்னும் பயிற்சியாளர் 1986ஆம் ஆண்டு முதல் 2002 ஆம் ஆண்டு வரையான உலகக் கிண்ணப் போட்டிகளின் போது மெக்ஸிக்கோ, கொஸ்ரரிக்கா, அமெரிக்கா, நைஜீரியா, சீனா ஆகிய ஐந்து நாடுகளுக்கும் பயிற்சியாளராக கடமையாற்றினார்.

ரமணி
மெட்ரோநியூஸ்