Showing posts with label துருக்கி. Show all posts
Showing posts with label துருக்கி. Show all posts

Saturday, June 20, 2026

65-வது விநாடியில் வரலாற்று கோல் பர‌குவே அதிரடி


 உலகக்  க்கிக்ண்ண குரூப் 'டி பிரிவில் துருக்கிக்கு எதிரான ஆட்டத்தில் பராகுவே 1-0 என்ற கோல் கணக்கில் வரலாற்று வெற்றியைப் பதிவு செய்துள்ளது. கலிபோர்னியாவின் சாண்டா கிளாராவில் நடைபெற்ற போட்டியில், ஆட்டம் தொடங்கிய 65-வது விநாடியிலேயே பரகுவேயின் மத்தியாஸ் கலர்சா (Matias Galarza) கோல் அடித்து அசத்தினார். இது இந்த உலகக்  கிண்ண்ணத்  தொடரின் அதிவேக கோல் ஆகும். ஆட்டத்தின் பெரும்பகுதி நேரம் ஒரு வீரர் குறைவாக விளையாடிய போதிலும், பர‌குவே   தனது முன்னிலையைத் தக்கவைத்து வெற்றி பெற்றது.

முதல் பாதியின் இறுதிக் கட்டத்தில், பரகுவேயின் நட்சத்திர வீரர் மிகுவல் அல்மிரோன் (Miguel Almiron) சிவப்பு அட்டை காட்டப்பட்டு மைதானத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். எதிரணி வீரருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது வாயை மூடிக்கொண்டு பேசக் கூடாது என்ற புதிய விதியை மீறியதற்காக அவருக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டது. இதனால் பரகுவே அணிக்கு பின்னடைவு ஏற்பட்ட போதிலும், அந்த அணியின் கோல்கீப்பர் ஆர்லாண்டோ கில் (Orlando Gill) பல ஆபத்தான கோல் முயற்சிகளைத் தடுத்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

இந்த வெற்றியின் மூலம் அமெரிக்க அணி குரூப் 'டி பிரிவில் முதலிடத்தைப் பிடிப்பதை உறுதி செய்துள்ளது. அதே நேரத்தில், தொடர்ந்து இரண்டாவது தோல்வியைத் தழுவிய துருக்கி அணி அடுத்த சுற்றுக்குத் தகுதி பெறும் வாய்ப்பை இழந்து வெளியேறியது. பரகுவே அணி தனது அடுத்த லீக் ஆட்டத்தில் அவுஸ்திரேலியாவை எதிர்கொள்ளவிருக்கிறது. இந்த ஆட்டத்தின் முடிவு குரூப்பில் இரண்டாவது இடத்தை யார் பிடிப்பார்கள் என்பதைத் தீர்மானிக்கும். 

அல்பாரோவின் வியூக மாற்றமும் கலர்சாவின் அதிவேக கோலும்

அமெரிக்க அணிக்கு எதிரான முதல் போட்டியில் 4-1 எனத் தோற்ற பராகுவே, பயிற்சியாளர் குஸ்டாவோ அல்பாரோவின் (Gustavo Alfaro) வியூக மாற்றத்தால் இப்போட்டியில் மீண்டு வந்துள்ளது. முதல் போட்டியில் களமிறக்கப்படாத அட்லாண்டா யுனைடெட் வீரர் கலர்சா, இப்போட்டியில் தொடக்க வீரராக வாய்ப்பு பெற்றார். அதனைச் சரியாகப் பயன்படுத்திய அவர், ஆட்டம் தொடங்கிய 1 நிமிடம் 5 விநாடிகளில் 25 யார் தொலைவில் இருந்து இடது காலால் அபாரமாக கோல் அடித்து பயிற்சியாளரின் நம்பிக்கையைக் காப்பாற்றினார்.

துருக்கி அணி முதல் பாதியிலேயே ஆட்டத்தை சமன் செய்ய தீவிரமாக முயன்றது. ஆனால், மெர்ட் முல்டுர் (Mert Muldur) தலையால் முட்டிய பந்து கோல் கம்பத்தில் பட்டுத் திரும்பியதால் அந்த வாய்ப்பு நழுவியது. முதல் பாதியின் கூடுதல் நேரத்தில் முல்டுர் மற்றும் அல்மிரோன் இடையே மைதானத்தின் நடுவே ஏற்பட்ட ஃபவுலைத் தொடர்ந்து வாக்குவாதம் வெடித்தது.

அப்போது அல்மிரோன் தனது வாயை மூடிக்கொண்டு ஏதோ கூற, முல்டுர் உடனடியாக நடுவர் இவான் பார்டனிடம் (Ivan Barton) முறையிட்டார். விஏஆர் (VAR) சோதனையை மேற்கொண்ட நடுவர், இந்த உலகக்  கிண்ணத்தில்  அறிமுகப்படுத்தப்பட்ட புதிய விதியின் கீழ் அல்மிரோனுக்கு சிவப்பு அட்டை வழங்கி வெளியேற்றினார்.

24 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்ற துருக்கி அணி, குரூப் சுற்றை எளிதில் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இப்போட்டியிலும் அவர்கள் பந்தை அதிக நேரம் தங்கள் வசம் வைத்திருந்த போதிலும், அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 2-0 தோல்வியைத் தொடர்ந்து இந்த ஆட்டத்திலும் தோல்வியையே தழுவினர்.

நடப்பு உலகக் கிண்ணப் போட்டியில் முதல் இரண்டு போட்டிகளில் மொத்தம் 62 முறை கோல் அடிக்க துருக்கி வீரர்கள் முயன்றுள்ளனர். இருப்பினும், அவர்களால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. 1966-ஆம் ஆண்டுக்குப் பிறகு உலகக்  கிண்ண வரலாற்றில் இரண்டு போட்டிகளில் அதிக கோல் முயற்சிகள் மேற்கொண்டும் ஒரு கோல் கூட அடிக்காத அணி என்ற மிக மோசமான சாதனையை துருக்கி பதிவு செய்துள்ளது.

இரண்டாம் பாதியின் தொடக்கத்தில் துருக்கியின் மெரிஹ் டெமிரல் (Merih Demiral) அடித்த கடினமான பந்தை பராகுவே கோல்கீப்பர் ஆர்லாண்டோ கில் திறம்பட தடுத்தார். தொடர்ந்து அப்துல்கரிம் பர்டக்சி (Abdulkerim Bardakசி) , கான் உசுன் (Can Uzun) ஆகியோரின் கோல் முயற்சிகளையும் அவர் முறியடித்தார். ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில் டெமிரல் தலையால் முட்டிய பந்து இலக்கைத் தவறவிட, துருக்கியின் கடைசி நம்பிக்கையும் தகர்ந்தது.


Sunday, June 14, 2026

துருக்கிக்கு எதிரான போட்டியில் 2 கோல்கள் அடித்து வென்றது அவுஸ்திரேலியா

கனடாவின் வான்கூவர் மைதானத்தில்  சனிக்கிழமை நடந்த போட்டியில் துருக்கியை எதிர்த்து விளையாடிய அவுஸ்திரேலியா 2-0 என்ற கோல் கணக்கில்வெற்றி பெற்றது.

  24 ஆண்டுகளுக்குப் பின் உலகக்  கிண்ணப் போட்டியில் விளையாடிய துருக்கி முதல் போட்டியில் தோல்வியடைந்தது.  2002 ஆம் ஆண்டு உலகக்  கிண்ணப் போட்டியில் விளையாடியது துருக்கி.

 போட்டியில்  தொடக்கத்தில் துருக்கி ஆதிக்கம் செலுத்தியது. ஆனால், அவுஸ்திரேலியாவுக்குக் கிடைத்த முதல் வாய்ப்பிலேயே நெஸ்டோரி இரான்குண்டா பந்தைப் பெற்று அபாரமாக ஒரு கோல் அடித்து அணியை 1-0 என முன்னிலை பெறச் செய்தார். பால் ஒகான்-எங்ஸ்ட்லர் கொடுத்த பாஸை அவர் கோலாக மாற்றினார்.

துருக்கி அணி கோல் அடிக்கப் போராடிய போதிலும், அவுஸ்திரேலிய கோல்கீப்பர் பேட்ரிக் பீச் சின் தடுப்பு,  பலமான  பின் வரிசை ஆகியன  அதற்கு முட்டுக்கட்டை போட்டன. அப்துல்கெரிம் பர்டாக்கி அடித்த பந்தை பீச் தடுத்து கம்பத்தில் படச் செய்து அற்புதமாகக் காப்பாற்றினார்.

ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் துருக்கி அணி பந்தைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த போதும், அவுஸ்திரேலியாவின் தற்காப்பு அரணை அவர்களால் உடைக்க முடியவில்லை. ஆட்டத்தின் 75வது நிமிடத்தில் அவுஸ்திரேலியாவின் கானர் மெட்காஃப் லாங் ரேஞ்ச் ஷாட் மூலம் 2வது கோலை அடித்து துருக்கிக்கு அதிர்ச்சியளித்தார். இதனால் அவுஸ்திரேலியா 2-0 என முன்னிலை பெற்று இறுதியில் எளிதாக வெற்றியும் பெற்றது. 

  

Wednesday, August 2, 2023

கார்ல்சனின் சாதனையை முறியடித்த தமிழக வீரர் குகேஷ்


 சதுரங்கத்தில் 2750 புள்ளிகளைக் கடந்த இளம் வீரர் என்ற பட்டத்தை கிராண்ட் மாஸ்டர் மேக்னஸ் கார்ல்சனிடம் இருந்து தட்டிப் பறித்திருக்கிறார் தமிழக வீரர் டி.குகேஷ். அதோடு உலகத் தரவரிசையில் 11-வது இடத்தையும் பெற்றுள்ளார். சமீபத்தில் துருக்கியில் ஜூலை 9 முதல் 20 வரை நடைபெற்ற சதுரங்க சூப்பர் லீக் 2023 போட்டியில் Türk Hava Yollari Spor Kulübü என்ற அணியில் விளையாடினார் குகேஷ்.

10 சுற்றுகளில் விளையாடி ஒரு சுற்றில் கூட தோற்காமல் 7.5 புள்ளிகள் பெற்றார். அவர் இறுதிச் சுற்றில் கிராண்ட் மாஸ்டர் கிளெமெண்டி சிச்சேவை வென்று 2750 புள்ளிகள் என்ற இலக்கைத் தாண்டினார். மேலும் இந்திய வீரர்களில் 2750 புள்ளிகளைக் கடந்த மூன்றாவது வீரராகியிருக்கிறார் குகேஷ். விஸ்வநாதன் ஆனந்த் ,ஹரிகிரிஷ்ணா பெண்டேலா இவர்களுக்கு அடுத்து குகேஷ்தான் 2750 புள்ளிகளைத் தாண்டியிருக்கிறார்.

2750 என்ற புள்ளிகளை மேக்னஸ் கார்ல்சன் தனது 17 வருடம் 4 மாதம் என்ற வயதில் கடந்தார். குகேஷ் தனது 17 வருடம் 1 மாதம் 3 வாரம் என்ற வயதில் 2750 புள்ளிகளைக் கடந்து இளம் வயதில் 2750 புள்ளிகளைக் கடந்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

இதன் மூலம் உலகத் தரவரிசையில் 11-வது இடத்திற்கு வந்துள்ளார். தற்போது முன்னாள் உலக சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த் இந்திய வீரர்கள் தரவரிசையில் முதல் இடத்தில் உள்ளார். அவரைத் தொடர்ந்து தற்போது குகேஷ் இரண்டாவது இடத்தில் உள்ளார். இன்னும் சில புள்ளிகள் எடுத்தால் இந்தியாவின் நம்பர் 1 வீரர் என்ற இடத்தையும் அவர் பிடிக்கலாம்.

Tuesday, February 21, 2023

கானா வீரர் துருக்கியில் மரணம்

உலகக்கிண்ண  உதைபந்தாட்டப் போட்டியில் கானா அணியின்  தேசிய வீரரும்,, முன்னாள் பிரீமியர் லீக் வீரருமான கிறிஸ்டியன் அட்சு, துருக்கி  நிலநடுக்கத்திற்குப் பிறகு கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்குப் பிறகு அவரது வீட்டின் இடிபாடுகளில் இறந்து கிடந்தார்.31 வயதான அவர் ப‌ப்ரவரி 6 பேரழிவு காரணமாக காணாமல் போனார்.

"  கிறிஸ்டியன் அட்சுவின் உடல்   மீட்கப்பட்டது என்பதை அனைத்து நலம் விரும்பிகளுக்கும் நான் மிகவும் கனத்த இதயத்துடன் அறிவிக்க வேண்டும்" என்று அட்சுவின் முகவர் நானா செச்செரே ட்விட்டரில் உறுதிப்படுத்தினார் .

அட்சு கானாவுக்காக 65 போட்டிகளில் விளையாடி ஒன்பது கோல்களை அடித்தார்  2014 ஆம் ஆண்டு  உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடினார்.அவர் 2015 ஆப்பிரிக்கா கோப்பை நேஷன்ஸில் போட்டியின் வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டார், அங்கு பிளாக் ஸ்டார்ஸ் இரண்டாம் இடத்தைப் பிடித்தது. அவர் ஐந்து வருட காலப்பகுதியில் பிரீமியர் லீக் அணிக்காக 121 போட்டிகளில் விளையாடினார்.

அட்சு தனது மனைவி மேரி-கிளேர் ரூபியோ அட்சு மற்றும் அவர்களது மூன்று குழந்தைகளை விட்டுச் செல்கிறார்.

Tuesday, February 14, 2023

துவண்டது துருக்கி சிதைந்தது சிரியா


 கொடூரமான நில நடுக்கத்தால் துருக்கியும், சிரியாவும்  மிக  மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நூற்றாண்டின்  மிகப்   பெரிய  பேரவலமாக இந்த பூகம்பம் கருதப்படுகிறது. மூன்று மிகப் பெரிய அதிர்வுகளும் நூற்றுக் கணக்கான சிறிய அதிர்வுகளும்  துருக்கியையும், சிரியாவையும் சின்னாபின்னமாக்கி உள்ளன.

துருக்கியில் சிரியாவின் எல்லையை ஒட்டிய பகுதியில்திங்கட்கிழமை  முதலில் 7.8 ரிக்டர் அளவிலும், இரண்டாவதாக 7.5 ரிக்டர் அளவிலும், மூன்றாவது முறையாக 6.0 ரிக்டர் அளவிலும் நிலநடுக்கம் பதிவானது. இதில் காசியான்டேப் சிரியா நாட்டின் எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. அந்த நகரம் மிகப்பெரிய சேதத்தை சந்தித்துள்ளது. ஓங்கி உயர்ந்து கட்டப்பட்டிருந்த கட்டிடங்கள் மணல் மேடுகளாக மாறியுள்ளன.  தொடர் நிலநடுக்கங்கங்களால் நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் சிதைந்து போயின. நகரமே உருக்குலைந்து போயியுள்ளது. இடிபாடுகளில் சிக்கி பலர் மண்ணோடு மண்ணாக புதைந்து உயிரிழந்துள்ளனர். உயரமான கட்டடங்கள் சிதிலம் சிதிலமாக


சிதறுவதைப் பார்க்கையில் மனது கனக்கிறது. துருக்கியிலும், சிரியாவிலும்  ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 7,826 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தத்தொகை சுமார் 20 ஆயிரத்தை எட்டலாம் எனக் கருதப்படுகிறது.உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, 23 மில்லியன் மக்கள் பூகம்பத்தால் பாதிக்கப்பட்டிருக்கலாம், பல சர்வதேச மனிதாபிமான அமைப்புகள் நன்கொடைகள் மற்றும் நிதிகளை நாடுகின்றன.

பூமிக்கு அடியில் 17 கிலோ மீற்றர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் வடக்கு சிரியாவிலும் கடும் பாதிப்புகள் ஏற்பட்டன. அண்டை நாடுகளான ஜோர்டான், லெபனானிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டன. 1 நிமிடம் நீடித்த இந்த சக்திவாய்ந்த இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து பொதுமக்கள் இடிபாடுகளில் சிக்கிய நிலையில், அடுத்து 7.5 என்ற ரிக்டர் அளவில் 2 வது முறையாக சக்திவாய்ந்த நிலநடுக்க பதிவானது. நிலநடுக்கத்தின் போது பதிவான சிசிடிவி காட்சிகள் வெளியாகி காண்போரை அதிர்ச்சியடைய செய்து இருக்கிறது. 3 வது நிலநடுக்கம் திரும்பும் திசையெல்லாம் சிதைந்த கட்டிடங்கள், அதில் சிக்கிய மனிதர்கள், இறந்து கிடக்கும் உடல் என இரத்த வாடையும், பிணக்குவியலுமாக காட்சி தருகிறது. இதற்கிடையே மூன்றாவது முறையாக 6 என்ற ரிக்டர் அளவில் மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டு நிலைமையை மேலும் மோசமாக்கியது. இதனால் மீட்புப்பணிகளில் ஈடுபடுவதில் தொடர்ந்து பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டன. 30 முறை நில அதிர்வு சக்திவாய்ந்த நிலநடுக்கங்களை தொடர்ந்து 30 முறை நில அதிர்வுகள் அந்நாட்டில் ஏற்பட்டு உள்ளதாக அமெரிக்காவின் புவியியல் ஆய்வு நிலையம் தெரிவித்து இருக்கிறது.

 அடுத்தடுத்து ஏற்பட்ட அதிர்வுகளின் காரணமாக நிலநடுக்கத்தால் சேதமடைந்த, வெடிப்புகள் ஏற்பட்ட கட்டிடங்கள் இடிந்து விழுந்து வருகின்றன. பூமிக்கு அடியில் வெறும் 10 கிலோ மீறர் ஆழத்தில் ஏற்படக்கூடிய ஆப்டர் ஷாக் எனப்படும் இந்த அதிர்வுகளால் பாதிப்புகள் மேலும் மோசமடையும் என்று அஞ்சப்படுகிறது.   நிலநடுக்கத்தால் உயிரிழந்து இருக்கும் துருக்கி மற்றும் சிரியா மக்களின் குடும்பத்தினருக்கும் பிரதமர் மோடி, அமெரிக்க ஜனாதிபதி  ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் உட்பட பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளதுடன், மனிதாபிமான உதவிகளை வழங்குவதாக உறுதியளித்துள்ளனர்.

சிரியாவில், ஒரு தசாப்தகால அமைதியின்மையின் போது ஷெல் மற்றும் வான்வழித் தாக்குதல்களின் சுமைகளைத் தாங்கிய கட்டிடங்களின் அடித்தளத்தை பூகம்பம் மற்றும் அடுத்தடுத்த நிலநடுக்கங்கள் மேலும் வலுவிழக்கச் செய்தன.துருக்கிய எல்லையில் வசிக்கும் பலர் ஏற்கனவே பலமுறை இடம்பெயர்ந்துள்ளனர்.ஒரு தசாப்தத்திற்கும் மேலாக போர் மற்றும் வறுமையால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள ஒரு பிராந்தியத்தில், இந்த பகுதி தனிப்பட்ட முறையில் பாதிக்கப்படக்கூடியது மற்றும் இந்த அளவிலான பேரழிவை சமாளிக்க முடியவில்லை.

காசியான்டெப்பில் நிலநடுக்கத்தின் மையப்பகுதியிலிருந்து சுமார் 20 மைல்கள் தொலைவில், மக்கள் வணிக மையங்கள், மசூதிகள், அரங்கங்கள் மற்றும் சமூக மையங்களில் தஞ்சம் புகுந்தனர்.

சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில், சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்படுவதற்கு முன்பே நான்கு மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர் - மேலும் பலர் இராணுவ குண்டுவீச்சுகளால் இடிந்த கட்டிடங்களில் வாழ்கின்றனர்.ஒரு காலத்தில் அலெப்போவில் ஒரு பல மாடி கட்டிடம் இருந்த இடத்தில் கான்கிரீட் மற்றும் எஃகு சாலைகளின் ஒரு மேடு கிடந்தது.

ரு நாள் கழித்து, இடிந்து விழுந்த கட்டிடங்களின் இடிபாடுகளில் இருந்து மக்களை தோண்டி எடுக்க கடினமான சூழ்நிலையில் பணிபுரியும் மீட்புக்குழுவினர் போராடினர்.

பேரழிவின் அளவு இன்னும் தெளிவாகத் தெரிந்ததால், இறப்பு எண்ணிக்கை கணிசமாக உயரக்கூடும். ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரி ஒருவர் கூறுகையில், ஆயிரக்கணக்கான குழந்தைகள் கொல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.துருக்கி மற்றும் வடக்கு சிரியாவில் உள்ள நகரங்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் காயமடைந்தனர் அல்லது வீடிழந்துள்ளனர்.

குளிர்கால காலநிலை மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு இடையூறாக உள்ளது மற்றும் வீடற்றவர்களின் அவல நிலையை மேலும் மோசமாக்கியுள்ளது. சில பகுதிகளில் எரிபொருள் மற்றும் மின்சாரம் இல்லாமல் இருந்தது.

சுமார் 12 ஆண்டுகால உள்நாட்டுப் போருக்குப் பிறகு ஏற்கனவே மனிதாபிமான நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள சிரியாவின் நிலைமை குறித்து உதவி அதிகாரிகள் குறிப்பாக கவலை தெரிவித்தனர்.

செவ்வாயன்று எர்டோகன் 10 துருக்கிய மாகாணங்களை பேரழிவு மண்டலமாக அறிவித்து அங்கு மூன்று மாதங்களுக்கு அவசரகால நிலையை விதித்தார். புதிய சட்டங்களை இயற்றுவதில் பாராளுமன்றத்தை புறக்கணிக்கவும் உரிமைகள் மற்றும் சுதந்திரங்களை மட்டுப்படுத்தவும் அல்லது இடைநிறுத்தவும் இது அரசாங்கத்தை அனுமதிக்கும்.

9,000 துருப்புக்களுடன் 12,000 க்கும் மேற்பட்ட துருக்கிய தேடுதல் மற்றும் மீட்புப் பணியாளர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பணியாற்றி வருகின்றனர். சுமார் 70 நாடுகள் மற்றும் பணியாளர்கள், உபகரணங்கள் மற்றும் உதவிகளை அனுப்பியுள்ளது. சீனாவின்  பேரிடர் மீட்புக்குழு அங்கு விரைந்துள்ளது.

துருக்கியின் அடானா விமான நிலையத்தில் டிரக்கில் உபகரணங்களை ஏற்றியபோது, ஜெர்மனியின் தீயணைப்பு மற்றும் மீட்பு சேவையைச் சேர்ந்த ஜோஹன்னஸ் கஸ்ட், "இந்தப் பகுதி மிகப் பெரியது. இது போன்ற எதையும் நான் இதற்கு முன் பார்த்ததில்லை.

நிலநடுக்கத்தில் 5,775 கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாகவும், 20,426 பேர் காயமடைந்துள்ளதாகவும் துருக்கியின் பேரிடர் மற்றும் அவசரகால மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

துருக்கியிலும்,  சிரியாவிலும்இடிந்து விழுந்த கட்டிடங்களின் இடிபாடுகளுக்கு அடியில் புதையுண்ட மக்கள் அதிர்ச்சிகரமான காயங்கள், பசி, தாகம் மற்றும் பூஜ்ஜியத்திற்கு குறைவான வெப்பநிலையை அனுபவிப்பார்கள். அதிர்ச்சிகரமான காயங்கள், பசி, தாகம், பூஜ்ஜியத்திற்கு குறைவான வெப்பநிலை, சுவாசிக்க கடினமாக இருக்கும் தூசி, சேதமடைந்த எரிவாயு குழாய்களில் இருந்து தீ வெடிக்கும் அல்லது தண்ணீரில் மூழ்கும் அபாயத்தை இடிபாடுகலுக்குள் சிக்கி இருக்கும் மக்கள் அனுபவிப்பார்கள்.

துருக்கியின் அடானா விமான நிலையத்தில் டிரக்கில் உபகரணங்களை ஏற்றியபோது, ஜெர்மனியின் தீயணைப்பு மற்றும் மீட்பு சேவையைச் சேர்ந்த ஜோஹன்னஸ் கஸ்ட், "இந்தப் பகுதி மிகப் பெரியது. இது போன்ற எதையும் நான் இதற்கு முன் பார்த்ததில்லை.

நிலநடுக்கத்தில் 5,775 கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாகவும், 20,426 பேர் காயமடைந்துள்ளதாகவும் துருக்கியின் பேரிடர் மற்றும் அவசரகால மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

துருக்கியிலும்,  சிரியாவிலும்இடிந்து விழுந்த கட்டிடங்களின் இடிபாடுகளுக்கு அடியில் புதையுண்ட மக்கள் அதிர்ச்சிகரமான காயங்கள், பசி, தாகம் மற்றும் பூஜ்ஜியத்திற்கு குறைவான வெப்பநிலையை அனுபவிப்பார்கள். அதிர்ச்சிகரமான காயங்கள், பசி, தாகம், பூஜ்ஜியத்திற்கு குறைவான வெப்பநிலை, சுவாசிக்க கடினமாக இருக்கும் தூசி, சேதமடைந்த எரிவாயு குழாய்களில் இருந்து தீ வெடிக்கும் அல்லது தண்ணீரில் மூழ்கும் அபாயத்தை இடிபாடுகலுக்குள் சிக்கி இருக்கும் மக்கள் அனுபவிப்பார்கள்.

உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த  பூகம்பத் தாக்கத்தில் இருந்து துருகியும், சிரியாவும் மீள்வதர்கி மிக நீண்ட காலம் எடுக்கும்.  உலக நாடுகள்  தொடர்ந்து உதவி செய்ய வேண்டிய நிலைஉ உள்ளது.

 

Friday, October 7, 2022

கட்டாருக்கு படைகளை அனுப்புகிறது துருக்கி


 நவம்பர் மாதம் கட்டாரில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண உதைபந்தாட்டப்  போட்டியின்போது பாதுகாப்பைப் பேணுவதற்காக துருக்கி இராணுவ வீரர்களை கட்டாருக்கு அனுப்ப துருக்கி பாராளுமன்றம் புதன்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.

ஆறு மாதங்களுக்கு வளைகுடா நாட்டிற்கு குறிப்பிடப்படாத எண்ணிக்கையிலான துருப்புக்களை அனுப்புவதற்கான பிரேரணைக்கு சட்டமியற்றுபவர்கள் கைகளை உயர்த்தி ஒப்புதல் அளித்தனர். ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் துருக்கிய பாதுகாப்பு அமைச்சருமான ஃபிக்ரி இசிக், 250 துருப்புக்கள், ஒரு கொர்வெட் வகை கடற்படைக் கப்பல் ஈடுபடுத்தப்படும் என்றார்.

சர்வதேச உதைபந்தாட்டப்போட்டியின் போது பாதுகாப்பை பலப்படுத்த கட்டாருக்கு அனுப்புவதாக துருக்கி கூறியுள்ள சுமார் 3,000 கலகத்தடுப்பு பொலிஸாருக்கு கூடுதலாக துருப்புக்கள் இருக்கும்.

துருக்கிய வீரர்கள் அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன், இத்தாலி , பாகிஸ்தான்  ஆகிய பிற படைகளுடன் சேருவார்கள் என்று கடந்த வாரம் சமர்ப்பித்த பிரேரணையில் விளக்கி, துருப்புக்களை நிலைநிறுத்துவதற்கு பாராளுமன்ற அனுமதியை ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் கோரினார்.

கட்டாரில் "பல்வேறு அச்சுறுத்தல்கள் மற்றும் குறிப்பாக பயங்கரவாதத்திற்கு" எதிராக படை அனுப்பப்படும், இது ஒரு மாத போட்டியின் போது 1 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, துருக்கிய தலைவர் கூறினார்.

கட்டாருடன் துருக்கி நெருங்கிய உறவை உருவாக்கி அங்கு ராணுவ தளத்தை நிறுவியுள்ளது.

எர்டோகனின் நீதி மற்றும் வளர்ச்சிக் கட்சி மற்றும் அதன் தேசியவாத கூட்டாளிகளின் சட்டமியற்றுபவர்கள் பிரேரணையை நிறைவேற்ற வாக்குகளை அளித்தனர். "தனியார் பாதுகாப்பு நிறுவனங்களின்" ஊழியர்களைப் போல துருக்கியின் இராணுவத்தையும் காவல்துறையையும் பயன்படுத்த அனுமதிப்பதாக அரசாங்கம் குற்றம் சாட்டி, வரிசைப்படுத்தல் திட்டங்களை எதிர்க்கட்சிகள் விமர்சித்தன.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், துருக்கி 3,250 துருக்கிய காவல்துறை அதிகாரிகளை கட்டாருக்கு அனுப்புவதாக உள்துறை அமைச்சகம் அறிவித்தது. அவர்களில் 100 சிறப்பு நடவடிக்கை பொலிஸாரும், 50 வெடிபொருள் நிபுணர்கள் அடங்குவர்.

Wednesday, May 25, 2022

சுவீடனையும் பின்லாந்தையும் கடுமையாக எதிர்க்கும் துருக்கி


 

ர‌ஷ்ய - உக்ரைன் போர் முடிவில்லாமல் தொடர்ந்துகொண்டிருக்கும் வேளையில் சுவீடனுக்கும், பின்லாந்துக்கும் எதிராக துருக்கி  கடுமையான் நிலைப்பாட்டை எடுத்துள்ளது. நேட்டோவில் சேர்வதற்கு   சுவீடனும் பின்லாந்தும்  விருப்பம் தெரிவித்துள்ளன. இதற்கு துருக்கி ஆட்சேபனை தெரிவித்துள்ளது. துருக்கிக்கு தலையிடியைக் கொடுக்கும் குர்திஷ் போராளிகளுக்கு அவை  ஆதரவளிப்பதாகக் கூறப்படுவதால்,அணிசேராத நோர்டிக் நாடுகளை கூட்டணிக்குள் அனுமதிக்க மாட்டோம் என்று துருக்கி வலியுறுத்தியது.

நேட்டோவில் சேர்வதற்கு உக்ரைன் முயற்சி செய்ததால்தான் ரஷ்யா படையெடுத்ததாக நம்ப்பப்டுகிறது.ஏனைய   நாடுகளுக்கு ரஷ்யாவின் எச்சரிக்கை உக்ரைன்மீதா யுத்தம். அந்த எச்சரிக்கையையும் மீறி சுவீடனும்  பின்லாந்தும் நேட்டொவஒ நோக்கிச் செல்கின்றன.

துருக்கியின் அறிக்கைகள் சமீப நாட்களில் மிக விரைவாகவும் கடினமாகவும் மாறிவிட்டன. ஆனால், நிலைமையை ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை மூலம் தீர்த்து வைப்போம் என்று நான் உறுதியாக நம்புகிறேன்,” என்று ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமுக்கு விஜயம் செய்த பின்னிஷ் ஜனாதிபதி சவுலி நினிஸ்டோ தெரிவித்தார்.

ப்ரல் தொடக்கத்தில் எர்டோகனுடன் பேசியதாக நினிஸ்டோ கூறினார், "அவர் ஆதரவளிப்பவர் என்பது தெளிவாகத் தெரிந்தது, மேலும் ஃபின்னிஷ் உறுப்பினர்களை சாதகமாக மதிப்பிட வேண்டும் என்று அவர் கூறினார். இப்போது வெவ்வேறு கருத்துக்கள் இருப்பதாகத் தெரிகிறது. நாங்கள் தொடர்ந்து விவாதிக்க வேண்டும்."

செவ்வாயன்று ஃபின்னிஷ் பாராளுமன்றம் 188- 8 வாக்கெடுப்பில் உறுப்பினர் பதவியை கோரும் அரசாங்கத்தின் முடிவை ரப்பர் முத்திரை குத்தியது. பிரஸ்ஸல்ஸில் உள்ள கூட்டணியின் தலைமையகத்தில் புதன்கிழமை கூட்டாக ஒப்படைக்கப்படும் முறையான விண்ணப்பக் கடிதங்களில் இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்களும் கையெழுத்திட்டனர்.

ஆனால் எர்டோகனின் ஆட்சேபனைகள் வெள்ளிக்கிழமையும் மீண்டும் திங்களன்றும் விண்ணப்ப செயல்முறை எவ்வளவு விரைவாக முன்னேறும் என்ற கேள்விகளை எழுப்பியது, ஏனெனில் புதிய உறுப்பினர்கள் சேர 30 நேட்டோ நாடுகளிடையே ஒருமித்த கருத்து தேவை. துருக்கிய தலைவர் நோர்டிக் நாடுகள் "பயங்கரவாதிகளுக்கு" பாதுகாப்பான புகலிடத்தை வழங்குவதாகவும், துருக்கி மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பதாகவும் குற்றம் சாட்டினார் - குர்திஷ் போராளிகளைத் தாக்குவதற்காக அங்காரா வடக்கு சிரியாவிற்கு துருப்புக்களை அனுப்பிய பின்னர் 2019 இல் சுவீடிஷ் மற்றும் ஃபின்னிஷ் ஆயுத ஏற்றுமதியை நிறுத்தியதற்கான வெளிப்படையான குறிப்பு உள்ளதாக துருக்கி தெரிவித்தது.

 துருக்கியின் ஆட்சேபனைகள் வாஷிங்டனிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியதாகத் தோன்றியது, சமீபத்திய ஆண்டுகளில் அங்காராவுடனான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவின் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை வாங்கும் துருக்கியின் முடிவை எதிர்த்து அமெரிக்கா அதன்  F - 35 போர் ஜெட் திட்டத்தில் இருந்து துருக்கியை இடைநீக்கம் செய்தது.

துருக்கிய வெளியுறவு மந்திரி   புதன்கிழமை அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் அன்ரனி பில்கெனை  சந்திப்பதர்கக  நியூயார்க்கிற்கு பயணம் செய்தார். இதற்கிடையில், ஜனாதிபதி ஜோ பிடன் வியாழன் அன்று வாஷிங்டனில் நினிஸ்டோ ஆண்டர்சன் ஆகியோரை சந்தித்து அவர்களின் நேட்டோ விண்ணப்பங்கள் மற்றும் உக்ரைனுக்கான ஆதரவைப் பற்றி விவாதிக்க இருப்பதாக வெள்ளை மாளிகை அறிவித்தது.

நேட்டோவில் இணைவது இரண்டு நோர்டிக் நாடுகளுக்கு மிகப்பெரிய மாற்றமாக இருக்கும். இரண்டாம் உலகப் போரில் சோவியத் யூனியனால் தோற்கடிக்கப்பட்ட பின்லாந்து நடுநிலையை ஏற்றுக்கொண்ட அதே வேளையில், சுவீடன் 200 ஆண்டுகளுக்கும் மேலாக இராணுவக் கூட்டணியில் இருந்து விலகியிருந்தது.

ரஷ்யா தனது நார்டிக் அண்டை நாடுகள் கூட்டணியில் சேருவது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று பலமுறை எச்சரித்துள்ளது. குடிமக்கள் ரஷ்யாவின் சாத்தியமான சீர்குலைக்கும் நடவடிக்கைகளுக்கு தங்களைத் தாங்களே தயார்படுத்திக் கொள்ளுமாறு  சுவீடிஷ் பிரதம மந்திரி  எச்சரித்தார். இதில் தவறான தகவல் மற்றும் நாட்டை மிரட்டி பிளவுபடுத்தும் முயற்சிகள் அடங்கும்.

ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் செவ்வாயன்று இரண்டு ஃபின்னிஷ் இராஜதந்திரிகளை வெளியேற்றுவதாகவும், பால்டிக் கடலில் கவனம் செலுத்தும் ஒரு பன்னாட்டு அமைப்பை விட்டு வெளியேறுவதாகவும் கூறியது. ரஷ்யாவிற்கு எதிரான சர்வதேச பொருளாதாரத் தடைகள் மற்றும் உக்ரேனுக்கு ஆயுத விநியோகம் ஆகியவற்றில் அதன் பங்கு உட்பட, "ரஷ்யா தொடர்பான பின்லாந்தின் மோதல் போக்கிற்கு" எதிரான ஒரு எதிர்ப்பை பின்லாந்து தூதர் வாசி த்ததாகவும்  அது கூறியது. அறிக்கையில் நேட்டோ பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.

 நேட்டோவில் இணைவது இரண்டு நோர்டிக் நாடுகளுக்கு மிகப்பெரிய மாற்றமாக இருக்கும். இரண்டாம் உலகப் போரில் சோவியத் யூனியனால் தோற்கடிக்கப்பட்ட பின்லாந்து நடுநிலையை ஏற்றுக்கொண்ட அதே வேளையில், சுவீடன் 200 ஆண்டுகளுக்கும் மேலாக இராணுவக் கூட்டணியில் இருந்து விலகியிருந்தது.

நேட்டோவில் பின்லாந்து, சுவீடன் உறுப்புரிமைக்கு துருக்கியின் ஆட்சேபனைகளை சமாளிக்க முடியும் என்று ஐரோப்பிய அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கைத் தலைவர் ஜோசப் பொரெல், இரு நாடுகளும் "அனைத்து உறுப்பு நாடுகளிடமிருந்தும் வலுவான ஆதரவைப் பெறும், ஏனெனில் அது நமது ஒற்றுமையை அதிகரிக்கிறது, மேலும் அது நம்மை வலிமையாக்குகிறது" என்றார்.

தடைசெய்யப்பட்ட குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி அல்லது பி.கே.கே, இடதுசாரி தீவிரவாதிகள் மற்றும் அங்காரா 2016 இல் தோல்வியுற்ற இராணுவ சதி முயற்சியின் பின்னணியில் இருந்ததாக அங்காரா கூறும் முஸ்லிம் மதகுரு ஃபெத்துல்லா குலேனின் ஆதரவாளர்களுக்கு பல ஐரோப்பிய நாடுகள் ஆதரவளிப்பதாக துருக்கி குற்றம் சாட்டுகிறது.

துருக்கியைத் தவிர  ஏனைய நேட்டோ நாடுகள்  பின்லாந்துக்கும், சுவீடனுக்கும் அதரவாக உள்ளன.  ஆகையால் துருக்கியின் எதிர்ப்பு முளையிலேயே கருவிவிடும் என்பதால் சுவீடனும், பின்லாந்தும் தெம்பாக உள்ளன.

Monday, June 21, 2021

இத்தாலியிடம் தோல்வியடைந்த வேல்ஸ் அடுத்த சுற்றுக்கு தெரிவானது.


  ரோம் நகரில் ஸ்டேடியோ ஒலிம்பிகோவில் இத்தாலியை  எதிர்த்து  வேல்ஸ்  விளையாடியது.  அடுத்த  சுற்றுக்குத்  தெரிவான  இத்தாலி  நம்பிக்கையுடன்  களம்  இறங்கியது. அடுத்த  சுற்றுக்குத்தெரிவாக  வேண்டும்  எனும்  வெறியுடன்  விளையாடிய   வேல்ஸ்  வீரர்கள் இத்தாலியின்  தாக்குதலை  சமாளித்ததால்  அடுத்த  சுற்றுக்குத் தெரிவானது. வேல்ஸுக்கு எதிரான  போட்டியில் 1 - 0  எனும்  கோல்  கணக்கில்  இத்தாலி  வெற்றி  பெற்றது.

இத்தாலி வீரர் மேட்டியோ பெசினா 39வது நிமிடத்தில் அடித்த ஒரே கோல் வெற்றி கோலானது. தொடர்ந்து 30-வது போட்டியில் இத்தாலி அணி தன் தோல்வியற்ற சாதனையை நீட்டித்துள்ளது. 1935- 39-ல் இதே போன்று இத்தாலி 30 போட்டிகளில் தோல்வியடையாமல் இருந்துள்ளது.   இத்தாலி  31  கோல்கள்  அடித்துள்ளது. இத்தாலிக்கு எதிராக எதிரணிகள் எவையும் ஒரு  கோல்கூட அடிக்கவில்லை.

குழு ஏயில்  உள்ள  துருக்கி, சுவிட்ஸர்லாந்து  ஆகியவற்றுக்கிடையேயான  போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி  பெற்ற  சுவிட்ஸர்லாந்து அடுத்த  சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்புகளை தக்கவைத்துள்ளது.

சுவிட்ஸர்லாந்து, வேல்ஸ்  ஆகிய  இரண்டு  அணிகளும்  4 புள்ளிகளைப்  பெற்றன. சுவிட்சர்லாந்து அணியை விட கோல் வித்தியாசத்தில் முன்னிலை பெற்ற வேல்ஸ் அணி நேரடியாக  அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றது. சுவிட்ஸ‌ர்லாந்து அணி சிறந்த 3வது அணியாக இறுதி-16 அணிகள் சுற்றுக்குத் தகுதி பெற வாய்ப்புள்ளது.

 

 

Thursday, June 17, 2021

யூரோகிண்ண அடுத்த சுற்றுக்கு முன்னேறியது இத்தாலி


 யூரோ2020  கிண்ணப்  போட்டியில்  விளையாடிய  இரண்டு  போட்டிகளிலும்   வெற்றி  பெற்றதால் அடுத்த  சுற்றுக்கு  முதல்  அணியாக  தெரிவானது  இத்தாலி.

 குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள சுவிட்ஸ‌ர்லாந்து, இத்தாலி ஆகியவற்ருக்கிடையே  நடைபெற்ற  போட்டியில்  3  0  எனும்  கோல்  கனக்கில்  இத்தாலி  வெற்றி  பெற்றது. ஆட்டத்தின் 26  ஆவது, 52 ஆவது நிமிடங்களில் இத்தாலி வீரர் மானுவேல் லோகடெல்லி இரண்டு கோல்களை அடித்து அசத்தினார். ஆட்டத்தின் இறுதியில் சிரோ இம்மோபைல்  ஒரு கோல் அடித்தார். இதன்மூலம் 3க்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் சுவிட்ஸ‌ர்லாந்தை, இத்தாலி அணி எளிதாக வீழ்த்தியது.

யூரோ2020  தொடரில்   6  கோல்களை  டித்து  அதிக  கோல் அடித்த  அணியாக  இத்தாலி  விளங்குகிறது.  இத்தாலிக்கு  எதிராக ஒரு  கோல்கூட  அடிக்கப்ப‌டவில்லை. இத்தாலி  தொடர்ச்சியாக 29  ஆவது  வெற்றி. 31  கோல்கள் அடித்துள்ள‌து. எதிரனிகள்  இதுவரை  கோல்  அடிக்கவில்லை.

இத்தாலி அணியின் வெற்றியை தொடர்ந்து இத்தாலிய  நடிகை சப்ரினா பெரிலி  நீச்சல் உடையில்  தோன்றி ரசிகர்களை பார்த்து கொடியசைத்தார். யூரோ2020  சம்பியன் கிண்னத்தை  இத்தாலி  வென்றால்   நடிகை  சப்ரினா பெரிலி  நிர்வாணமாக தோன்றுவதாக   உறுதி அளித்து உள்ளதாக  இத்தாலியின்  உதைபந்தாட்ட  ஜாம்பவான் பிரான்செஸ்கோ டோட்டி  கூறியுள்ளார்.

 மற்றொரு ஆட்டத்தில்,   ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள துருக்கி அணியும், வேல்ஸ் அணியும் மோதின. துருக்கி அணி வீரர்கள் கோல் எதுவும் அடிக்காத நிலையில், வேல்ஸ் அணியின் ஆரோன் ராம்சே,  கன்னார் ராபர்ட்ஸ் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். இதனால், இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் வேல்ஸ் அணி வெற்றி பெற்றது.

வேல்ஸ் 4 புள்ளிகளுடனும்,சுவிட்ஸர்லாந்து  1 புள்ளியுடனும்  உள்ளன. பலம்  வாய்ந்த  இத்தாலியுடன்  வேல்ஸ்  மோதுகிறது.

இரண்டு  போட்டிகளிலும்  தோல்வியடைந்த  துருக்கியுடன்   சுவிட்ஸர்லாந்து மோதுகிறது. இரண்டு  போட்டிகளின்  வெற்றி  தோல்விக்குப்  பின்னரே அந்தப்  பிரிவில்  அடுத்த  சுற்றுக்குத் தெரிவாகும்  அணி  எது  என்பது  தெரிய  வரும்.

  பி பிரிவில் இடம்பெற்றுள்ள ரஷ்யா, பின்லாந்து ஆகியவற்றுக்கிடையே  நடைபெற்ற  விறுவிறுப்பான  போட்டியில்    45 ஆவது நிமிடத்தில் ரஷ்ய வீரர் அலெக்ஸி மிரன்சுக் முதலாவது கோல் அடித்தார். அதன்பின்னர் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதனால், ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் பின்லாந்து அணியை வீழ்த்தி ரஷ்யா அணி வெற்றிபெற்றது. பின்லாந்து  தோல்வியடைந்தாலும்  ரஷ்யாவுக்கு  சவால்  விட்டு  விளையாடியது.