Monday, December 10, 2007

முத்திரை பதித்த முரளி

கிரிக்கெட் உலகில் சாதனைகள் பல படைத்த முரளிதரன் டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி உலக சாதனை படைப்பார் என்றற நம்பிக்கை ரசிகர்களின் மத்தியில் இருந்தது. ரசிகர்களின் அந்தக்கனவை கண்டியில் நிஜமாக்கினர் முரளிதரன்.
முரளிதரன் என்றால் மாயச் சுழல் என்பதுதான் கிரிக்கெட் அரங்கின் விளக்கம். முரளியின் சுழலில் சிக்கி பரிதாபமாக வெளியேறிய கிரிக்கெட் ஜாம்பவான்களின் எண்ணிக்கை கணக்கில் அடங்காதது.



எதிரணியின் ஓட்ட எண்ணிக்கை உயரும் வேளையில் எல்லாம் முரளி வருவார்
பொறுத்திருங்கள் என்று ரசிகர்கள் கூறுவார்கள்.

முரளி பந்தை வீசத் தொடங்கினால் அடுத்தடுத்து விக்கெட்டுகள் சிதறும். எதிரணி வீரர்கள் நிலை தடுமாறுவார்கள். முரளியின் பந்தை எதிர்கொள்ள முடியாதவர்கள் அவரது மன நிலையைக் குழப்பும் வேலைகளை திட்டமிட்டு செயற்படுத்தினார்கள். முரளி மீது குற்றம் சுமத்தியவர்களில் முதலிடத்தில் அவுஸ்திரேலியா அணியினர் உள்ளனர்.
முரளிதரனின் பந்து வீச்சு முறையற்றது என்ற குரல் அவுஸ்திரேலியாவில் இருந்து கிளம்பியது.

அப்போது முரளிக்கு உறுதுணையாக இருந்த முரளியின் பந்து வீச்சு முறை சரிதான் என்று அடித்துக் கூறினார் முன்னாள் அணித் தலைவர் அர்ஜுனா ரணதுங்கா
அர்ஜுனா கொடுத்த உற்சாகமும் ஊக்கமும் முரளியின் சாதனைக் கனவை நனவாக்கியது.
தேசிய அணியில் இடம் பிடிப்பது மிகவும் சிரமமானது. இடம் கிடைத்து விட்டால் அதனைச் காப்பாற்றுவது அதனை விடக் கடினமானது.

முரளியின் சாதனையை நெருங்குவதற்கு தற்போதைக்கு யாரும் இல்லை. 578 விக்கெட்டுகள் எடுத்த இந்திய அணித் தலைவர் கும்ப்ளேதான் இப்போது முரளிக்கு பின்னால் உள்ளார். 708 விக்கெட்டுகள் எடுத்த ஷேன் வோன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார்.

கிரிக்கெட் அணியில் இடம் பிடிப்பது வீரரின் முதலாவது கதை. திறமை உள்ளவர்களின் அடுத்த கனவு அணிக்குத் தலைமை வகிப்பது இலங்கை கிரிக்கெட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார் முரளிதரன். அவருக்கு அணித்தலைமை பதவியை கொடுத்து முரளியை பெருமைப்படுத்துமா இலங்கை கிரிக்கெட் என்பதே முரளி ரசிகர்களின் கேள்வி.
வெற்றி நாயகன் : பல ஆண்டுகளாக அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக முரளிதரன் திகழ்கிறார். இவர் இடம் பிடித்து அணி வென்றுள்ள 46 போட்டிகளில் 376 விக்கெட் (சராசரி: 8.28 விக்.) கைப்பற்றியுள்ளார்.

* டெஸ்ட் அந்தஸ்து பெற்றுள்ள ஒவ்வொரு அணிக்கும் எதிராகவும் 50 விக்கெட் கைப்பற்றியுள்ள ஒரே வீரர் இவர்தான்.

* சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிரான 50 ஆவது விக்கெட்டாக மைக்கல் வான் வீழ்ந்தார். இது வரை சொந்த மண்ணில் பங்களாதேஷ், தென் ஆபிரிக்கா மற்றும் சிம்பாப்வேக்கும் எதிராக 50 விக்கெட் கைப்பற்றியுள்ளார்.

* 20 முறை ஒரே டெஸ்டில் 10 விக்கெட் வீழ்த்தியுள்ளார். வோர்ன் இந்த மைல்கல்லை 10 முறை மட்டுமே எட்டியுள்ளார்.

* ஒரே ஆண்டில் 75 மற்றும் அதற்கு கூடுதலான விக்கெட்டுகளை கைப்பற்றிய ஒரே வீரர் இவர்தான். 200001, 06 ஆம் ஆண்டுகளில் இந்த சாதனையைப் படைத்தார்.

கடந்து வந்த பாதை: \
பிறப்பு : 17/4/1972
இடம் : கண்டி
டெஸ்ட் அறிமுகம்: 1992 (எதிர். ஆஸி)
ஒரு நாள் அறிமுகம்: 1993 (எதிர். இந்தியா)

சர்வதேச கிரிக்கெட்டில் சாதனைகளுக்கு நிகராக சர்ச்சைகளையும் சந்தித்த ஒரே வீரர் இவராகத்தான் இருக்கும். எனினும் தனது தளராத மன உறுதியினால் முத்திரை பதித்தார்.
1995 ஆம் ஆண்டு இலங்கை அணியின் அவுஸ்திரேலிய சுற்றுப் பயணத்தில் இவர் பந்தை எறிவதாக நடுவர் டேரல் ஹேயர் குற்றம் சாட்டினார்.

பின்னர் 1996 ஆம் ஆண்டு நடந்த பரிசோதனையில் இவர் பந்து வீச்சு முறை சரியென நிரூபணம் ஆனது. 1998, 2004 ஆம் ஆண்டுகளில் இது போல் சர்ச்சைகளில் மீண்டும் சிக்கினார்.

இதையடுத்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) இவருக்கு மீண்டும் பரிசோதனைகள் செய்தது. இதில் இவருக்கு கிரீன் சிக்னல் கிடைத்தது. இதனால் இவர் மீதான களங்கம் நீங்கியது. சிறப்பாக செயல்படவே பாராட்டுக்கள் குவிந்தன.

ரமணி
நன்றி: மெட்ரோ நியூஸ் 07.12.2007

Saturday, December 8, 2007

பெண் என்ற நர்த்தகி

பெண் என்ற நர்த்தகி

என் காவியம் பாடிடும் வேளையில்
இளமாமயில் ஆடுது சோலையில்
என் ஜதிகள் தேடிடும் போதினில்
இரு பாதங்கள் நடமிடும் சாலையில்
என் குரலில் பிறப்பது ராகம்
இரு கரங்களில் தெரிவது தாளம்
என் தாளங்கள் அவளிடம் சேரும்
அவள் பாவங்கள் அதற்கிணையாகும்

நவமணி
1.12.1996