Friday, August 28, 2015

ஈழத்து தமிழ் குறுந்திரைப்படத் துறை

அமரர் ராஜஸ்ரீகாந்தன் ஞாபகார்த்தமாக  அட்சரம் நடத்திய குறுந்திரைப்பட போட்டியை முன் வைத்து…..

1
தமிழ்ச் சூழலைப் பொறுத்தவரை, சினிமாக் கலை இன்னும் சரியாகப்  புரிந்து கொள்ளப்படாத நிலையில், உலக மொழிகளிலும் இந்தியாவின் பிற மாநிலங்களில் இன்னும் விரிவாகச் செல்வது என்றால்நமது சகோதர மொழியான சிங்கள மொழிச் சூழலில், சிணிமாக் கலை புரிந்துக் கொள்ளப்பட்ட, ஏற்றுக் கொள்ளப்பட்ட அளவுக்கு, தமிழகச் சூழலில் சினிமா புரிந்துக்  கொள்ளப்;படாமல் அதுவொரு வணிகத் துறையாக வளர்த்தெ டுக்கப் படுகிறது.
இப்படிச் சொல்வது தமிழகச் சூழலில்  மாற்றுச் சினிமா அல்லது மீடில் சினிமா முயற்சிகள் நடைபெறவில்லை என்ற அர்த்தமாகாது. அங்கும் அத்தகைய முயற்சிகளில் ஒரு சிலர் ஈடுபட்டாலும், அவர்கள் வெற்றி அடையவில்லை என்றே சொல்லப்பட்டது. இங்கு வெற்றி என்பது வணிக ரீதியான வெற்றியே மனங்கொள்ளப்படுகிறது. அத்தகைய முயற்சிகளில் சில நல்ல சினிமா வெளிப்பாடுகளாக இருந்தமையும் இங்கு குறிப்பிடதக்கது.
 மாற்று வழியாகத் தமிழ்ச் சூழலில்  குறுந்திரைப்பட முயற்சிகள் பரவலாகவும் சிறப்பாகவும் நடைபெற்று வருகின்றன.  அவற்றில் முழுநீள தமிழ்த் திரைப்படத்துறை வளர்ச்சி அடையாத நமது நாட்டிலும் தமிழ் பேசும்; இளைஞர்களாலும்புலம்பெயர்ந்த ஈழத்தவர்களாலும்; மேற்கொள்ளப்படும் குறுந்திரைப் பட முயற்சிகளும் அடங்கும்.

இவ்வாறாக தமிழ்ச் சூழலில் குறுந்திரைப்பட முயற்சிகள் பெருகுவதற்கு பல காரணங்கள் உண்டு, அதிக அளவான இளைஞர்கள் திரைப்படத்துறையில் ஆர்வம் கொண்டமை, அதன் காரணமாக தமிழகம் மற்றும் ஈழத்துச் சூழலில்  திரைப்படப் பயிற்சி கல்லூரிகள் மற்றும் நிறுவனங்கள்; தோற்றம் பெற்றமை, தயாரிப்புச் செலவுக் குறைவாக இருந்தமை, தொழில் நுட்ப வளர்ச்சியின் காரணமாக வாய்ப்பு வசதிகள் அதிகரித்தமை என்பதாக காரணங்களாகச் சொல்லாம்.
 அத்தோடு தமிழக தமிழ் தொலைக்காட்சி நிலையங்கள் ஒளிப்பரப்பும் இயக்குனர்களை உருவாக்கும் நிகழ்ச்சிகளில்; குறிப்பாக கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்ட நாளைய  இயக்குனர் எனும் நிகழ்ச்சியில் பல குறுந்திரைப்படங்களைத் தொடர்ந்துப் பார்க்கக் கிடைத்துக் கொண்டிருக்கிறது. ஆனாலும் அந்த நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களின் நோக்கமாக இருப்பது  நாளைய தமிழக வணிக சினிமா இயக்குனர்களை உருவாகுவதாகவே இருக்கிறது தவிர, நல்ல தரமான இயக்குனர்களை முன்னிலைப்படுத்துவதாக இல்லை என்பது தெரிகிறது. அந்த நிகழ்ச்சியில் தரமான குறுந்திரைப்படங்களை வழங்குபவர்ளைத்; தேர்ந்தெடுக்காமல் விடுவதில் அந்த நோக்கம் வெளிப்படுகிறது. ஆனால் ஈழத்தில் அத்தகைய நிகழ்ச்சிகள் இல்லாவிடினும் சுயத்தேடலில் பல குறுந்திரைப்ட ஆர்வலர்கள் நல்ல குறுந்திரைப்ட படைப்பாளிகளாக உருவாகிக் கொண்டிருக்கிறார்கள்.

2
குறுந்திரைப்படம் என்பது ஒரு சிறுகதை அல்லது ஹைக்கூ தரும் அனுபவத்தை பெற்று தரும் தன்மை கொண்டது. அதனால்தான் என்னவோ தமிழ்ச் சூழலில குறுந்திரைப்பட முயற்சிகள் அதனை நன்கு உள்வாங்கிக் கொண்டவர்களின் வழியாக தமிழில் சிறந்த சிறுகதைகள் சிறந்த குறுந்திரைப்படங்களாக நமக்கு கிடைத்து இருக்கிறன.. உதாரணமாக பாலு மகேந்திராவின்  கதை நேரம்  எனும் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொடரில் நமக்கு காணக் கிடைத்த குறுந்திரைபப்டங்களைச் சொல்லாம்.
 குறுந்திரைப்படத்திற்கான முதல் நிபந்தனை குறைந்த அளவான காலநீட்சியாகும். குறுகிய நேர கால எல்லைக்குள் எடுத்துக் கொண்ட விடயத்தை தாக்கமான முறையில் முன் வைப்பதே ஒரு குறுந்திரைப்படத்தின்; வெற்றியாகும்;
 ஒரு கவிதையில் ஏதேனும் ஒரு சொல்லை நீங்கி விட்டால் அக்கவிதை மரணித்து விடும் என நவீன கவிதையைப் பற்றி பேச வருபவர்கள் சொல்வது உண்டு. அதாவது தேவையற்ற ஒரு சொல்லேனும் ஒரு கவிதையில் இருக்கக் கூடாது என்பதுதான் அதன் அர்த்தம். அது போல் ஒரு குறுந்திரைப்படத்தில் தேவையற்ற ஒரு காட்சியேனும் இடம் பெறலாகாது.
யதார்த்தமும், அந்த யதார்த்தத்தில் புதைந்துக் கிடக்கும் அபத்தத்தையோ, முரணையோ, உணர்ச்சியினையோ முகத்தில் அறைவது போல், மனதில் அழுத்தமாக இறங்குவது போல் குறுந்திரைப்படம் அமைதல் வேண்டும்.


அந்தவகையில் சமீபத்தில் யாழ்ப்பாணத்தில் அமரர் ராஜஸ்ரீகாந்தன் அவர்களின் ஞாபகார்த்தமாக  அட்சரம் அமைப்பு நடந்திய குறுந்திரைப்படப் போட்டிக்கு சமர்ப்பிக்கப்பட்ட பெரும் தொகையான குறுந்திரைப்படங்கள் பார்க்கக் கிடைத்தது. அப்படங்களைப் பார்த்தப் பொழுது ஈழத்தில் குறுந்திரைப்படத் துறையில் ஆர்வமிக்க இளைஞர்கள பெரும் தொகையினர் நம் மத்தியில் இருக்கிறார்கள் என்பதை அறிந்துக் கொள்ளக் கூடியதாக இருந்தது.
 அத்தோடு இப்போட்டி மூலம் குறுந்திரைப்படக் கலையைச் சரியாக புரிந்துக் கொண்டவர்களின் பல படைப்புக்களை ஒரே சேரப் பார்க்கக் கூடியதாக இருந்தது.
இப்போட்டியின் பொழுது எழு படங்கள் வெவ்;வேறு துறைக்கான விருதுகளைப் பெற்றுக் கொண்டன. அந்தவகையில் சிறந்த குறுந்திரைப்படத்திற்கான முதலாவது விருதைப் பெற்றுக் கொண்ட  விமல்ராஜின் இயக்கத்தில் உருவான வெள்ளம் சிறந்த குறுந்திரைப்படமாக அமைந்ததோடு, நம் நாட்டிலும், அதிலும்; ஈழத்துத் தமிழ்ச் சூழலில்  சிறந்த ஒளிப்பதியாளர்களும்; இருக்கிறார்கள் என்பதை நமக்கு எடுத்துக் காட்டியது.
அடுத்து இரண்டாவது சிறந்த குறுந்திரைப்பட விருதினைப் பெற்றுக் கொண்ட சாஜித் அஹமட்டின் இயக்கித்தில் உருவான கடிநகர்  ஒரு தத்;துவ விசாரத்தை மிக எளிமையான முறையிலான காட்சிப்படுத்தலின் மூலம் ஆர்ப்பட்டமின்றி வெளிப்படுத்தி இருக்கிறது. அத்தோடு இப்படம் முழுதும் பயன்படுத்தி இருக்கும் செம்மை நிறம் மூலம்; கிராமத்தின் மண்வாசைனயின் சித்திரிப்பதாக இருக்கிறது.
மூன்றாவது சிறந்த குறுந்திரைப்படமாக தெரிவுச் செய்யப்பட்ட மதிசுதாவின் இயக்கத்தில் உருவான தொடரி ஒரு குறுந்திரைப்பட தரவேண்டிய அனுபவத்தை  சிறந்த முறையில் வெளிப்படுத்தி இருக்கிறது. சமீப காலமாக மதிசுதாவின் குறுந்திரைப்பட  முயற்சிகள் கவனத்திற்குரியவையாக அமைவதை  காணக் கூடியதாக இருக்கிறது.
 தொடரி எனும் இக்குறுந்திரைப்படத்தின் காட்சி அமைப்பை பொறுத்தவரை, பேச எடுத்துக் கொண்ட விடயத்திற்கு தேவையானவற்றை மட்டுமே காட்சிப்படுத்தி இருப்பது சிறப்பாக இருக்கிறது. ஒளிப்பதிவுக்காக கையடக்க தொலைபேசி கேமராவைப்  பயன்படுத்தி இருப்பது பரிசோதனை முயற்சி என்றே சொல்ல வேண்டும். சமீப காலமாக கையடக்க தொலைபேசி கேமராவை பயன்படுத்தும் முறைமை குறுந்திரைப்பட முயற்சிகளில்; பரவலாகிக் கொண்டிருப்பது குறிப்பிடதக்கது.


சிறந்த இசைக்கான விருதினைப் பெற்ற ஏன் இந்த இடைவெளி  குறுந்திரைப்படத்தில் இசை பேச எடுத்துக் கொண்ட விடயத்துடன் இயைந்து செல்வது சிறப்பாக இருக்கிறது.
சிறந்த குழந்தை நட்சத்திற்கானப் பரிசைப் பெற்ற தேவதை குறுந்திரைப்படம் மூலம் நம் நாட்டிலும் சிறந்த குழந்தை நட்சத்திரங்கள் இருக்கிறார்கள் என்பது எடுத்துச் சொல்லியது.
அத்துடன் வெள்ளம், கடிநகர், ஏன் இந்த இடைவெளி போன்ற குறுந்;திரைப்படங்களில் நடித்த குழந்தை நட்சத்திரங்கள் கூட அக்கூற்றை மேலும் வலுப்படுத்துகிறார்கள்.
ஈழத்தில் நடிப்புத்துறையைப் பொறுத்தவரை தொலைக்காட்சி நாடகங்கள், மேடை நாடகங்கள் போன்றவற்றில்  நடித்த நடிகர்களிடம் கடந்த காலம் வரை தமிழக வணிக சினிமா நடிகர்களின் தாக்கமே விரவிக் கிடந்தது.. ஆனால் சமீப கால ஈழத்து நாடகங்கள் மற்றும் குறுந்திரைப்பட முயற்சிகளில் சம்மதப்படும் நடிகர்களிடம் மிகவும் தனித்துவமான நடிப்பு வெளிப்பட்டு வருவதை காணக் கூடிதாக இருக்கிறது.
அந்த வகையில்  மேற்படி போட்டியில் சிறந்த நடிப்புக்கான விருதினைப் பெற்றுக் கொண்ட போலி திரைப்படத்தில் முக்கியப் பாத்திரத்தில் நடித்த மதிசுதாவின் நடிப்பு யதார்த்தமாகவும் சிறப்பாகவும் அமைந்திருந்தது. மதிசுதாவை சிறந்த ஒரு குறும்பட இயக்குனராக மடடு;மே அறிந்து வைத்திருந்த என்னைப் போன்றவர்களுக்கு அவர் ஒரு சிறந்த நடிகரும் கூட என்பது போலி எனும் இக்குறுந்திரைப்படம் மூலம் தெரிய வந்துள்ளது.
அத்தோடு போலி குறுந்திரைப்படத்தின் காட்சிப்படுத்தலில் யதார்த்தம் சிறப்பான முறையில் வெளிப்பட்டுள்ளதை கவனிக்கக் கூடியதாக இருந்தது.
மொத்தத்தில் அகரம் நடத்திய குறுந்திரைப்பட போட்டிக்கு வந்த படங்களை ஒரு சேரப் பார்க்கக் கிடைத்தப் பொழுது, ஈழத்து திரைப்படத் துறையானது (அது குறுந்திரைப்படமாக இருப்பினுப் கூட); முற்றும் முழுதுமாக தென்னிந்திய வணிக சினிமாவின் தாக்கத்திருந்து   விடுபட்டு விட்டது(குறிப்பாக நடிப்பு, ஒளிப்பதிவு) என்பது தெரிந்துக் கொள்ள முடிந்ததோடு, நம் மத்தியிpலும் சிறந்த இயக்குனர்கள், ஒளிப்திவாளர்கள். நடிகர்கள், குழந்;தை நட்சத்திரங்கள் இருக்கிறர்கள் என்பதை அறிந்துக் கொள்ளக் கூடியதாகவும் இருந்தது.  மேலும் ஈழத்து தமிழ்ச் சூழலில் குறுந்திரைப்படக் கலை புரிந்துக் கொள்ளப்பட்டு வளர்ச்சி அடையத் தொடங்கி இருக்கிறது என்பதையும் அறிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது.

எதிர்காலத்திலும் இத்தகைய போட்டிகள் மற்றும் குறுந்திரைப்பட செயற்பாட்டாளர்களை ஒன்றிணைக்கும் முயற்சி  மேற்கொள்ளப்பட வேண்டும். அத்தோடு தலைநகரை மையமாகத்; தமிழ்ச் சூழலில் உருவான குறுந்திரைப்படத்திற்கான குறுந்திரைப்படவிழாகள்  நடத்தப்பட வேண்டும்அத்தோடு நடைபெறும் சர்வதேச குறுந்திரைப்பட விழாகளில் ஈழத்து தமிழ்ச் சூழலில் உருவாக்கப்படும் குறுந்திரைப்படங்களை திரையிட வேண்டும்.
அந்தவகையில் இப்போட்டியில் விருதுகள் பெற்ற குறுந்திரைப்படங்களை தமிழத்து பார்வையாளர்களுக்கு திரையிட விழாவிற்கு சிறப்பு அதிதிகளாக கலந்துக் கொண்ட தமிழ ஒவியர் மருது அவர்களும்; கவிதா பாரதி அவர்களும் தம்முடன் எடுத்து சென்றுள்ளார்கள் என்பதை அறிகிறோம். அவ்வாறு தமிழகத்தில் அக்குறுந்திரைப்படங்கள்; காட்சிப்படுத்தப்படும் பொழுதுஈழத்து தமிழ்ச் சூழலில்; குறுந்திரைப்படத்துறைச் சிறப்பாக வளர்ந்துக் கொண்டிருக்கிறது என்பதை பரவலாக அறியக் கூடிதாக இருக்கும்.


மேமன்கவி 

Monday, August 24, 2015

சென்னையில் இலங்கைக் குறும்படங்கள்

அட்சரம்  அறக்கட்டளையின் ஏற்பாட்டில்  ராஜ‌ஸ்ரீகாந்தன் ஞாபகார்த்தமாக   இலங்கை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற குறும்படப்போட்டியில்    நடுவர்களால் பாராட்டப்பட்ட குறும்படங்கள் திருவான்மியூர் பனுவல் புத்தக நிலையத்தில் திரையிடப்பட உள்ளது. விருது விழாவில் சிறப்பு அதிதிகளாக கலந்து கொண்ட ஓவியர்,கலைஇயக்குநர் மருது, இயக்குநர் கவிதாபாரதி ஆகியோர் இதனை ஏற்பாடு செய்துள்ளனர்.

Friday, August 14, 2015

சர்ச்சையை கிளப்பிய சந்திப்பு

   
இந்தியப்பிரதமர் மோடியும் தமிழக முதலமைச்சர்  ஜெயலலிதாவும் சந்தித்தது இந்திய அரசியல் அரங்கில் சர்ச்சையை கிளப்பி உள்ளது. சர்ச்சைகளை உருவாக்குவதில் இருவரும் வல்லவர்கள். சர்ச்சைகளை தமக்கு சாதகமாக்கி வெற்றி பெறுவதில் இருவரும் அசகாய சூரர்கள். ஆகையினால் இந்தச்சர்ச்சைகளை எப்படிச்சமாளிப்பது என்பதை இரண்டு தலைவர்களும் நன்கு அறிவார்கள்.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தினால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு சிறை வைக்கப்பட்ட ஜெயலலிதா மேன்முறையீட்டின் மூலம் விடுதலையனார்.நீதிபதி குமாரசாமியால் ஜெயலலிதா விடுதலை செய்யபட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டுள்ளது. ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதற்கு நீதிபதி குமாரசாமி கூறிய கணக்கு வழக்கை சாதாரண மக்களே ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த நிலையில் இரண்டு தலைவர்களின் சந்திப்பும் அரசியல் அரங்கில் புதிய சந்தேகத்தைத் தோற்றுவித்துள்ளது.

 இந்தியப்பிரதமர் தமிழகத்துக்கு விஜயம் செய்யும்போது முதலமைச்சர் விமானநிலையத்துக்குச்சென்று வரவேற்பது மரபு.ஜெயலலிதாவும் அதையே பின்பற்றினார். ஆனால் அவர் விமானநிலையத்துக்ச் சென்ற நேரம்தான் சரியில்லை. எதற்கும் நேரகாலம் பார்த்து செயற்படும் ஜெயலலிதாவின் நேரத்தை அவரது அரசியல் எதிரிகள் சுட்டிக்காட்டியுளனர்.

வருமானத்துக்கு அதிகமாக சொத்துச் சேர்த்த வழக்கில் இருந்து விடுபட்ட ஜெயலலிதா பொது இடங்கள் எங்கேயும்  வெளிப்படவில்லை. முதல்வரானது பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார் என அவரது விசுவாசிகள் எதிர்பார்த்தனர். அவற்றை எல்லம் பொய்யாக்கிவிட்டு அமுக்கமாக தனது கடமைகளை செய்துவருகிறார் ஜெயலலிதா. இந்தநூற்றான்டின் இணையற்ற அரசியல்வாதியான அப்துகலாமுக்கு அஞ்சலி செலுத்த இந்தியாவே ராமேஸ்வரத்தில் திரண்டிருக்க  ஜெயலலிதா ராமேஸ்வரப்பக்கம் எட்டியே பார்க்காது பிர‌த‌ம‌ரை வ‌ர‌வேற்க‌ விமான‌நிலைய‌ம் சென்ற‌தை அவ‌ர‌து அர‌சியல் எதிரிக‌ள் கெட்டியாக‌ப்பிடித்துள்ள‌ன‌ர்.
பிரதமர் மோடி ஒருப‌டிமேலே போய் ச‌ம்பிர‌தாய‌ங்களை உடைத்தெறிந்து ஜெய‌ல‌லிதாவின் வீட்டுக்குச்சென்று  அவ‌ரைச் ச‌ந்தித்தார். பிர‌த‌ம‌ரைத் தேடிச்சென்று  முத‌ல‌மைச்ச‌ர்  ச‌ந்திக்கும் வ‌ழ‌மையான‌ ந‌டைமுறை உடைத்தெறிய‌ப்ப‌ட்டு முத‌ல்வ‌ரை வீடுதேடிச்சென்று பிர‌த‌ம‌ர் ச‌ந்திக்கும் ச‌ட‌ங்கு அர‌ங்கேறி உள்ள‌து.

ஜெய‌ல‌லிதாவின் உத‌வி மோடிக்கு மிக‌ அத்தியாவ‌சிய‌மாக‌த்தேவைப்ப‌டுகிற‌து.அத‌னால்தான் அர‌சிய‌ல் விதிமுறைக‌ளை எல்லாம் மீறி ஜெய‌ல‌லிதாவின் வீடுதேடிச்சென்றார். பார‌தீய‌ ஜ‌ன‌தாக் க‌ட்சியின் வெற்றிக‌ளின் பின்னால் இருக்கும் அமித்ஷா த‌மிழ‌க‌த்தில் க‌ட்சித்தொண்ட‌ர்க‌ளைச்ச‌ந்தித்து ஊழ‌ல் அர‌சிய‌லை அடியோடு அக‌ற்ற‌ வேண் டும் என‌ ச‌ப‌த‌ம் எதுத்த‌ வேல‌யில் ஜெய‌ல‌லிதாவை மோடி தேடிச்சென்ற‌து அர‌சிய‌லில் ச‌ர்ச்சையை உருவாக்கி உள்ள‌து.

இந்திய‌ நாடாளும‌ன்ற‌த்தில் மோடிப‌ல‌மான‌வ‌ராக‌ இருந்தாலும் மேல்ச‌பையில் ப‌ல‌மில்லாத‌வ‌ராக‌வே இருக்கிறார். ஜெய‌ல‌லிதாவின் ஆத‌ர‌வு கிடைத்தால் மேல்ச‌பையிலும் மோடி த‌ன‌து த‌ன‌து ஆதிக்க‌த்தை நிலை நாட்ட‌லாம். பார‌தீய‌ ஜ‌ன‌தாக்க‌ட்சி அண்ணா திராவிட‌ முன்ன்னேற்ற‌க்க‌ழ‌க‌ம் ஆகிய‌வ‌ற்ருக்கிடையே ஒப்ப‌ந்த‌ம் எதுவும் இல்லை. ஆயினும் இர‌ன்டும் ஒன்றை ஒன்று அர‌வ‌ணைத்தே செல்கின்ற‌ன‌.

ஜெய‌ல‌லிதாவும் மோடியும் ச‌ந்தித்த‌து புதிய‌ அர‌சிய‌ல் கூட்ட‌ணிக்கு அச்சார‌மாக‌ இருக்க‌லாம் என்ற‌ ச‌ந்தேக‌மும் அர‌சிய‌ல் அர‌ங்கில் எழுந்துள்ள‌து.த‌மிழ‌க‌த்தில்கால் ப‌தித்து க‌ட்சியை வ‌ள‌ர்க்க‌ வேன்டிய‌ அவ‌சிய‌ம் மோடிக்கு உள்ள‌து. த‌ன்னுட‌ன் இண‌ந்திருந்த‌ செல்வாக்கு மிக்க‌ க‌ட்சிக‌ள் எல்லாவ‌ற்றையும் ஜெய‌ல‌லிதா புற‌ம் த‌ள்ளி விட்டார்.த‌மிழ‌க‌ ச‌ட்ட‌ ம‌ன்ற‌த்தேர்த‌லிலும் த‌னித்து  போட்டியிடும் எண்ன‌த்திலேயே இருக்கிறார் ஜெய‌ல‌லிதா.
  

Monday, August 10, 2015

கோலியின் ஆரம்பமும் சங்காவின் முடிவும்


இந்திய இலங்கை கிரிக்கெற் அணிகளுக்கிடையே நடைபெறும் டெஸ்ட் தொடர் கோலியின் டெஸ்ட் வாழ்க்கையின்  ஆரம்பமாகவும் சங்ககாரவின் கிரிக்கெற் வாழ்க்கையின்  முற்றுப்புள்ளியாகவும் அமைய உள்ளதுஇந்திய கிரிக்கெற் அணிக்கு  தலைமை ஏற்ற கோலியின் முழுமையான முதல் டேஸ்ட்  தொடர் இது.  . அவுஸ்திராலியாவில் இந்திய அணி தடுமாறியபோது அப்போதைய அணித்தலைவர் டோனியின் மீது கடும் விமர்சனங்கள் விழுந்தன.டெஸ்ட் தொடர் முடியுமுன்னரே தலைவர் பதவியில் இருந்து டோனி விலகினார். கோலி தலைவராக உயர்த்தப்பட்டார்.பங்களாதேஷுடனான ஒரே ஒருதொடர் மழைகாரனமாக கைவிடப்பட்டது அப்போட்டியில் இந்தியா எழுச்சி பெற்றது.

கோலி தலைமையிலான  இந்திய அணி இலங்கைக்கு வந்துள்ளது. கோலியின் த‌லைமையில் இந்திய‌ அணி எப்ப‌டி விளையாட‌ப்போகிற‌து என்ற‌ எதிர்பார்ப்பு எழுந்துள்ள‌து.பாகிஸ்தானுக்கு எதிரான‌ ஒருநாள்போட்டி,ரி20,டெஸ்ட் ஆகிய‌மூன்றிலும் தோல்விடைந்த‌ நிலையில் இந்தியாவை எதிர்கொள்கிற‌து இல‌ங்கை.பாகிஸ்தானின் ஸ்பின‌ர் யாஷின்ஷா இல‌ங்கையின் விக்கெற்க‌ளை த‌ன‌து பொக்கெற்ரில் நிர‌ப்பினார். இந்திய‌ ஸ்பின்ன‌ர்க‌ளான‌ அஸ்வின்,ஹ‌ர்ப‌ஜ‌ன்சிங், அமித்மிஸ்ரா ஆகியோர் சுழ‌லில் மிர‌ட்ட‌ காத்திருக்கிறார்க‌ள். அஸ்வின்மீது கோலி மிகுந்த‌ ந‌ம்பிக்கை வைத்துள்ளார். அனுப‌வ‌ வீர‌ர் ஹ‌ர்ப‌ஜ‌ன் க‌ல‌க்குவார். நான்கு வ‌ருட‌ங்க‌ளுக்குப்பின் அணியில் சேர்த்துக்கொள்ள‌ப்ப‌ட்ட‌ மிஸ்ரா இட‌த்தை த‌க்க‌வைக்க‌ போராடுவார்.ஷிகர் தவன், முரளி விஜய்,   புஜாரா ,விராட் கோலி, அஜின்க்யா ரஹானே, ரோஹித் ஷர்மா, கே.எல்.ராஹுல். வேகப்பந்துவீச்சாளர்கள்: வருண் ஆரோன், புவனேஷ்வர் குமார், இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ் ஆகியோர் இந்திய‌ அணி வீர‌ர்க‌ளாவ‌ர்.
    ஓய்வுபெற‌ப்போகும் ச‌ங்க‌கார‌வுக்கு டெஸ்ட் வெற்றியை ப‌ரிச‌ளிக்க‌ப்போவ‌தாக‌ இலங்கைஅணித்த‌லைவ‌ர்ம‌த்தியூஸ்அறிவித்துள்ளார்.ம‌‌த்தியூஸ்,திரிமானே,ச‌மீரா ச‌ண்டிமால்,ச‌ங்க‌கார‌,ர‌ங்க‌ண‌ஹேர‌த‌ கெள‌சால் உபுல்தரங்க என வலுவான வீரர்கள் இலங்கை அணியில் உள்ள‌ன‌ர்.

பிர‌ட்ம‌னின் இர‌ட்டைச‌த‌த்தை ச‌ங்க‌கார‌  ச‌ம‌ப்ப‌டுத்த‌ இன்ன‌மும் ஒரு இர‌ட்டை ச‌த‌ம் ம‌ட்டும் தேவை. அந்த‌ சாத‌னை மைல்க‌ல்லுட‌ன் ச‌ங்க‌கார‌ விடைபெற‌ வேண்டும் என‌ அவ‌ர‌து ர‌சிக‌ர்க‌ள‌ எதிர்பார்க்கின்ற‌ன‌ர்.இந்திய‌ அணி இல‌ங்கையில் டெஸ்ட் தொட‌ரை வென்றி  22 வ‌ருட‌ங்க‌ளாகின்ற‌ன‌. அந்த‌ சாத‌னையை நிலை நாட்ட‌ துடிக்கிறார் கோலி

Thursday, August 6, 2015

உயிரை பணயம்வைத்து


தமிழகத்தில் மதுக்கடைகளை மூடி பூரணமது விலக்கு அமுல் படுத்த வேண்டும் எனப்போராடிய காந்தியவாதி  சசி பெருமாளின் உயிர் போராட்ட களாத்திலேயே பிரிந்தது. மதுவிலக்குக்கு எதிரான போராட்டம் அவ்வப்போது எழுவதும் பின்னர் அடங்குவதும் வழமையானது. அரசியல் கட்சிகள்  மதுவிலக்குக்காக போராடிவிட்டு அமையடைந்து விடுகின்றன. சசி பெருமாள் போன்ற காந்தியவாதிகள் தனிமனிதர்களாக ஆங்காங்கே போராட்டத்தை ந டத்துகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகே உள்ள உண்ணாமலைக்கடை என்ற கிராமத்தில் மதுக்கடை  ஒன்று உள்ளது.   கோயில், பாடசாலை  ஆகியன  இருக்கும் பகுதியில் அமைந்துள்ளதால் அதனை அகற்றக்கோரி காந்தியவாதி சசிபெருமாள் அந்த ஊர் மக்களுடன் கடந்த ஆண்டு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். உண்ணாமலைக்கடை பஞ்சாயத்து தலைவர் ஜெயசீலன் தலைமையில் அந்த ஊர் மக்களும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அரசு இயந்திரம் செவிசாய்க்காத நிலையில், கடையை அகற்றக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்து, கடையை அகற்ற உத்தரவு பெற்றார். ஆனால், சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து ஓராண்டுக்கு மேல் ஆகியும் மதுக்கடையை  கடையை தமிழக அரசு அகற்றவில்லை. இதனால் மீண்டும் ஊர்மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் சசிபெருமாளும் போராட்டத்தில் குதித்தார். அப்போது, ஜூலை 31ஆம் திகதிக்குமுன்  டாஸ்மாக் கடையை அகற்றுவதாக அதிகாரிகள் மீண்டும் உறுதி அளித்தனர். ஆனால், 31ஆம் திகதி வரை  கடையை அகற்றுவதற்கான எந்த நடவடிக்கையும் தமிழக அரசு எடுக்கவில்லை.

இந்நிலையில், காந்தியவாதி சசிபெருமாள் மற்றும் உண்ணாமலைக்கடை பஞ்சாயத்து தலைவர் ஜெயசீலன் தலைமையில் ஊர்மக்கள் 31ஆம் திகதி  போராட்டத்தில் குதித்தனர். அப்போது, மண்ணெண்ணெய் மற்றும் தீப்பெட்டியுடன் காலை 9.30 மணிக்கு சசிபெருமாள் 500 அடி உயரமுள்ள செல்போன் டவரில் ஏறினார். அவரைத் தொடர்ந்து பஞ்சாயத்து தலைவர் ஜெயசீலனும் டவரில் ஏறினார்.

தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். அதற்குள் ஜெயசீலன் டவரில் இருந்து கீழே இறங்கிவிட்டார். ஆனால், சசிபெருமாள் மட்டும் டவரில் இருந்துள்ளார். சுமார் ஐந்தரை மணி நேரம் டவரில் இந்த அவரை மீட்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். பின்னர் ஒரு வழியாக சசிபெருமாளை காவல்துறையினர் மீட்டனர். அப்போது, சசிபெருமாள் ரத்த வாந்தி எடுத்ததாக தெரிகிறது. அவர் சட்டையில் ரத்தக்கறை படிந்திருந்தது. உடனடியாக சசிபெருமாள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோரித்த மருத்துவர்கள் மாரடைப்பால் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். 

சேலம் மாவட்​டம் இளம்பிள்ளை கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர் சசிபெருமாள். அவருடைய தந்தை மூலம் சிறு வயதிலேயே காந்திய சிந்தனைகளால் ஈர்க்கப்​பட்டார். விவசாயமும் சித்த மருத்துவமும் செய்து வந்தார். ''அப்பாவிடம் சிகிச்சைக்கு வரும் பல நோயாளிகள் குடிகாரர்களாகவே இருந்தனர். அவர்களைத் திருத்த அப்பா ரொம்பவும் கஷ்டப்பட்டார். சம்பாதித்த பணத்தை எல்லாம், மது குடிப்ப​வர்களைத் திருத்தவே செலவு செய்தார். ஆனாலும், அவருடைய முயற்சியில் வெற்றிபெற முடியவில்லை. நாளுக்கு நாள் மதுக்கடைகள் பெருகிக்கொண்டே​ போக, பலரும் சம்பாதித்த பணத்தை எல்லாம் குடும்பத்துக்குத் தராமல் குடிக்கவே செலவு செய்தனர். மதுவால் ஏராளமானோர் பாதிக்​கப்படுவதை, அப்பாவால் தாங்கிக்கொள்ள முடிய​வில்லை. இவர்கள் எல்லாம் குடிப்பதை நிறுத்த வேண்டும் என்றால், பூரண மதுவிலக்குத் தேவை என்று அடிக்கடி சொல்லிக்கொண்டு இருப்பார்'' என்கிறார் சசிபெருமாளின் மகள் விவேக். 

மதுக்கடைகளை உடனே மூடச்சொல்லி சசிபெருமாள் தொடர்ந்து போராடிக்கொண்டிருந்தாலும், முதலில், தீவிர மதுக்கட்டுப்பாட்டையாவது கொண்டுவாருங்கள் என்று கோரிக்கை விடுத்து வந்தார். ''மதுக்கடைகளின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும். விற்கும் நேரம் குறைக்கப்​பட வேண்டும். புதிய இடங்களில் கடைகள் திறக்கப்படக் கூடாது. பார்களை மூட வேண்டும். பள்ளி, கல்லூரிகள், பேருந்து நிலையங்களில்  மதுக்கடைகள் இருக்கக்கூடாது  என்பதில் அவர் உறுதியாக இருந்தார்சசிபெருமாளின் தகப்பன் கந்தீயவாதி. அவர் வழியில் வந்த சசிபெருமாளும் காந்தீயத்தில் அசையாத நம்பிக்கை வைத்திருந்தார்.அவருடைய வாழ்வு மதுக்கடைக்கு எதிரான போராட்டத்தில் பிரிந்துவிட்டது.உயிரைக்கொடுத்து மதுக்கடைக்கு எதிராக சசிபெருமாள் போராடினாலும் அவற்றை அகற்ற தமிழக அரசு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. மதுக்கடைகளுக்கும் மதுப்பிரியர்களுக்கும் பாதுகாப்பு வழங்கி உள்ளது.

மதுவிலக்கை அமுல்படுத்துமாறு ஆங்காங்கே நடைபெற்ற போராட்டங்கள் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளன. அரசியல் கட்சிகள் சசிபெருமாளை முன்னிலைப்படுத்தி போராட்டங்களை  நடத்துகின்றன. கல்லூரிமாணவர்களின் போராட்டம் வன்முறையாக‌ உருவெடுத்துள்ளது. மதுகடைகளுக்கு எதிரான போராட்டங்கள் வன்முறையாக மாறியதால் சட்டம் ஒழுங்கை காப்பாற்றுவதற்காக அரச இயந்திரம்  முடுக்கி விடப்பட்டுள்ளது. அரசியல்தலைவர்கள்,தொண்டர்கள்,மாணவர்கள்,மாணவிகள் என அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.



உண‌ர்வுபூர்வ‌மான‌ தொட‌ர்ச்சியான போராட்ட‌ங்க‌ளினால் அடுத்து என்ன‌ செய்வ‌தென‌த்தெரியாதுத‌டுமாறுகிற‌து த‌மிழ‌க‌ அர‌சு.அர‌ச‌ ஊழிய‌ர்க‌ளின் போராட்ட‌த்தை பொலிஸாரின் அராஜ‌க‌த்தின் மூல‌ம் அட‌க்கிய‌தால் அண்ணா திர‌விட‌முன்னேற்ற‌க்க‌ழ‌க‌ம் முன்ன‌ர் ஆட்சியை இழ‌ந்த‌து. அதேபோன்ற‌ ஒருநில‌மை இப்போதும் ஏற்ப‌ட்டுள்ள‌து. அர‌சுக்கு எதிரான‌ க‌ட்சிக‌ள் இதனை திட்டமிட்டு த‌ம‌க்கு சாத‌க‌மாக‌ மாற்றுகின்ற‌ன‌.இட‌துசாரிக‌க‌ட்சிக‌ள்,ம‌றும‌ல‌ர்ச்சி திராவிட‌ முன்னேற்ற‌க்க‌ழ‌க‌ம், விடுத‌லைச்சிறுத்தைக‌ள் ஆகிய‌ன்  இணைந்து போராட்ட‌த்துக்கு அழைப்பு விடுத்த‌ன‌. விஜ‌ய‌காந்தும் காங்கிர‌ஸ்க‌ட்சியும் தாமாக‌வே முன்வ‌ந்து போராட்ட‌த்துக்கு ஆத‌ர‌வு தெரிவித்த‌ன‌. திராவிட‌ முன்னேற்ற‌க்க‌ழ‌க‌ம் ஆக‌ஸ்ட் 10 ஆம் திக‌தி போராட்ட‌த்துக்கு அழைப்பு விடுத்துள்ள‌து.  இந்த‌க்களேப‌ர‌ங்க‌ளுக்கிடையில்  ஜெய‌ல‌லிதாவைச் ச‌ந்திக்க‌ மோடி த‌மிழ‌க‌த்துக்கு வ‌ருகிறார்.

ம‌துவுக்கு எதிரான‌ போராட்ட‌ம் ஜெய‌ல‌லிதாவை ம‌ட்டும‌ல்லாது டாக்ட‌ர் ராம‌தாஸையும் கிலிகொள்ள‌ வைத்துள்ள‌து.ம்து, புகைத்த‌ல் என்ப‌ன‌வ‌ற்ருக்கு எதிராக‌ தான் ம‌ட்டும் தான் போராட‌ வேண்டும் என‌ எண்ணி உள்ள‌ ராம‌தாஸ் இத‌னை ர‌சிக்க‌ வில்லை. த‌மிழ‌க‌ முத‌ல‌மைச்ச‌ராக‌ அன்பும‌ணி ப‌த‌வி ஏற்ற‌தும்  ம‌துவில‌க்கை அமுல்ப‌டுத்தும் கோப்பில் கையெழுத்திடுவார் என‌ அறிவித்த‌ ராம‌தாஸ் க‌ல‌ங்கிப்போயுள்ளார்.

ம‌துபான‌க்க‌ம்ப‌னிக‌ளின் உரிமையாள‌ர்க‌ள் சாதார‌ண‌மான‌வ‌ர்க‌ள் அல்ல‌. அர‌சிய‌ல்வாதிக‌ளின் பாதுகாப்பு அவ‌ர்க‌ளுக்கு உள்ள‌து அர‌சிய‌ல் வாரிசுக‌ளும் உரிமையாள‌ர்க‌ளாக‌ உள்ள‌ன‌ர். திமுக‌வின் வாரிசுக‌ளும் உரிமையாள‌ர்க‌ளாக‌ உள்ள‌ன‌ராம் வைகோவின் ம‌க‌ன் புலையிலை கொம்ப‌னியின் ப‌ங்குதார‌ராம். ம‌துபான‌க்க‌டைக்கு எதிரான‌ போராட்ட‌த்தால் உயிரிழ‌ந்த‌ ஊழிய‌ரின் குடும்ப‌த்துக்கு த‌மிழ‌க‌ அர‌சு ஏழு இல‌ட்ச‌ம் ரூப‌ ந‌ஷ்ட‌ ஈடாக‌ வ‌ழ‌ங்கி உள்ள‌து. அவ‌ரின் ம‌னைவிக்கு அர‌சு வேலை கொடுப்ப‌தாக‌ உறுதிய‌ளித்துள்ள‌து. ம‌துக்க‌ட்ஃபைக‌ளுக்கு எதிரான‌ போராட்ட‌ம் த‌‌மிழ‌க‌ அர‌சுக்கு எதிரான‌ போராட்ட‌மாக‌ மாறிவிட்ட‌து.

Tuesday, August 4, 2015

குறும்படப் போட்டியின் விருதுவிழா



 சிறந்த ஒளிப்பதிவாளர் விருது : வெள்ளம்
அட்சரம் ஏற்பாட்டில் ராஜ ஸ்ரீகாந்தன் ஞாபகார்த்த குறும்படப் போட்டியின் விருதுவிழா
அட்சரம் ஏற்பாட்டில் ராஜ ஸ்ரீகாந்தன் ஞாபகார்த்த குறும்படப் போட்டியின் விருதுவிழா 18.07.2015 சனிக்கிழமை மாலை 5.00 மணியளவில் யாழ் பீச் ஹோட்டலில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு சிறப்பு அதிதிகளாக கலை இயக்குநர், மற்றும் ஓவியராகிய ட்றொஸ்கி மருது அவர்களும் இயக்குநர் கவிதாபாரதி அவர்களும் கலந்து சிறப்பித்தனர். நிகழ்வில் ஞானதாஸ், கோ. கேதாரநாதன் ஆகியோரும் அதிதிகளுடன் இணைந்து உரையாற்றினர்.
முதலாம் இடம் பெற்ற குறும்படம் : வெள்ளம் (விமல்ராஜ்)
இரண்டாம் இடம்பெற்ற குறும்படம் : கடிநகர் ( சஜீத்)
மூன்றாம் இடம்பெற்ற குறும்படம் : தொடரி (மதிசுதா)
தனியாள் விருது பெற்ற குறும்படங்கள்

சிறந்த கதைக்கான விருது : சூசைட்
சிறந்த இயக்குநர் விருது : கடிநகர்
சிறந்த நடிகருக்கான விருது : போலி
சிறந்த ஒளிப்பதிவாளர் விருது : வெள்ளம்
சிறந்த இசைக்கான விருது : ஏன் இந்த இடைவெளி
சிறந்த படத்தொகுப்புக்கான விருது : சூசைட்
சிறந்த குழந்தை நட்சத்திற்கான விருது : வெள்ளம், தேவதை
சிறப்பு விருது : ஏன் இந்த இடைவெளி
 சிறந்த படத்தொகுப்புக்கான விருது : சூசைட்

 சிறந்த கதைக்கான விருது : சூசைட்

 சிறந்த ஒளிப்பதிவாளர் விருது : வெள்ளம்





 சிறந்த நடிகருக்கான விருது : போலி


 ஞானதாஸ் கவிதாபாரதி ட்றொஸ்கி மருது