Showing posts with label ஹெய்ட்டி. Show all posts
Showing posts with label ஹெய்ட்டி. Show all posts

Thursday, June 25, 2026

அதிர்ச்சியளித்த ஹெய்ட்டி மீண்டு வந்த மொராக்கோ


   உலகக் கிண்ணத் தொடரின் குரூப் சி பிரிவில் நடைபெற்ற விறுவிறுப்பான லீக் போட்டியில், ஹெய்ட்து அணியை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய மொராக்கோ அணி, குரூப் பிரிவில் இரண்டாவது இடம் பிடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது. ஏற்கனவே தொடரிலிருந்து வெளியேறிய போதிலும், ஹெய்ட்டி அணி இப்போட்டியில் மொராக்கோவுக்கு கடுமையான சவாலை அளித்தது.

இந்த ஆட்டத்தின் 10வது நிமிடத்திலேயே ஹெய்ட்டி வீசிய பந்து, துரதிர்ஷ்டவசமாக மொராக்கோ கோல்கீப்பர் யாசின் போனோ மீது பட்டு ஓன் கோலாக (Own Goal) மாறியது.   39வது நிமிடத்தில் அதன் கப்டன் அஷ்ரப் ஹகிமி கோல் அடித்து 1-1 என சமன் செய்தார். ஆனால், அடுத்த சில நிமிடங்களிலேயே ஹெய்தியின் வில்சன் இசிடோர் தூரத்திலிருந்து ஒரு அபாரமான கோல் அடித்து தனது அணியை 2-1 என மீண்டும் முன்னிலை பெறச் செய்தார்.

 43வது நிமிடத்தில் ஹகிமி கொடுத்த பாஸை இஸ்மாயில் சைபாரி கோலாக மாற்ற, முதல் பாதி ஆட்டம் 2-2 என சமநிலையை எட்டியது. சைபாரிக்கு இது நடப்பு உலகக் கோப்பையில் தொடர்ந்து 3வது கோலாகும்.   78வது நிமிடத்தில் மொராக்கோவின் மாற்று வீரர் சுஃபியான் ரஹிமி ஒரு கோல் அடித்து அணியை முதன்முறையாக 3-2 என முன்னிலை பெறச் செய்தார்.

ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில் 20 வயதான கெசிம் யாசின் மற்றொரு கோல் அடிக்க, மொராக்கோ அணி 4-2 என்ற கணக்கில் திரில் வெற்றியை உறுதி செய்தது. இந்த கோல் போஸ்ட்டின் எல்லையைக் கடந்ததா என்ற சர்ச்சை எழுந்த போதிலும், 'வார்' தொழில்நுட்ப சோதனையின் மூலம் கோல் என்பது உறுதி செய்யப்பட்டது.

இந்த வெற்றியின் மூலம் மொராக்கோ அணி 7 புள்ளிகளுடன் குரூப் சி பிரிவில் 2வது இடத்தைப் பிடித்து அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது. பிறேஸில் அணி அதே 7 புள்ளிகளுடன் சிறந்த கோல் அடிப்படையில் முதலிடம் பிடித்தது. 50 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக்  கிண்ணத்தில்  விளையாடிய ஹெய்தி அணி புள்ளிகள் ஏதுமின்றி வெளியேறினாலும், தனது சிறப்பான ஆட்டத்தால் ரசிகர்களின் மனதை வென்றது.

 


Saturday, June 20, 2026

41வது முறையாக சாதனை படைத்த பிறேஸில் முதல் அணியாக வெளியேறியது ஹெய்ட்டி


 

  உலகக்  கிண்ண  குரூப் 'சி பிரிவு ஆ போட்டியில், பிறேஸில் அணி 3-0 என்ற கோல் கணக்கில் ஹெட்டி அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்தத் தோல்வியின் மூலம் உலகக் கிண்ணத் தொடரிலிருந்து வெளியேறிய முதல் அணி என்ற பின்னடைவை ஹைட்டி சந்தித்துள்ளது.

முதல் ஆட்டத்தில் மொராக்கோ அணியுடன் டிரா செய்திருந்த பிறேஸில் அணிக்கு, இப்போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் இருந்தது. ஆட்டத்தின் தொடக்கம் முதலே பிறேஸில் வீரர்கள் சிறப்பான ஆதிக்கத்தை செலுத்தினர். பிறேஸில் அணியின் மேத்யூஸ் குன்ஹா ஆட்டத்தின் 23 ,36-வது நிமிடங்களில் அடுத்தடுத்து இரண்டு கோல்களை அடித்து அசத்தினார். 

  முதல் பாதியின் கூடுதல் நேரத்தில் (47-வது நிமிடம்) வினிசியஸ் ஜூனியர் தனது பங்கிற்கு ஒரு கோல் அடிக்க, முதல் பாதியிலேயே பிரேசில் 3-0 என வலுவான முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியில் இரு அணிகளும் மேற்கொண்டு கோல் அடிக்காததால், ஆட்டம் அதே ஸ்கோருடன் நிறைவடைந்தது.

 இந்த வெற்றியின் மூலம் பிறேஸில் அணி குரூப் 'சி பிரிவில் கோல் வித்தியாச அடிப்படையில் 4 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

உலகக் கிண்ணப் போட்டிகளில் பிறேஸில் அணி 3 அல்லது அதற்கு மேற்பட்ட கோல்களைப் பதிவு செய்வது இது 41-வது முறையாகும். இதன் மூலம் உலகக் கிண்ண வரலாற்றில் அதிக போட்டிகளில் 3-க்கும் மேற்பட்ட கோல்களை அடித்த அணிகளின் வரிசையில் பிறேஸில்  தனது சாதனையை மேலும் வலுப்படுத்தியுள்ளது. இப்போட்டியில்  பிறேஸில்அணி 60 சதவீத பந்து கட்டுப்பாட்டுடன், 90 சதவீத துல்லியமான பாஸ்களை வழங்கி முழு ஆதிக்கத்தை வெளிப்படுத்தியது.

 

  

Tuesday, August 17, 2021

ஹெய்ட்டிக்கு ஒசாகா உதவி

 
நிலநடுக்கத்தால் பேரழிவைச் சந்தித்த ஹெய்ட்டிக்கு உதவப்போவதாக நட்சத்திர  டென்னிஸ் வீராங்கனையான ஜப்பனைச் சேர்ந்த  ஒசாகா அறிவித்துள்ளாள்.கரீபியன் நாட்டுடன்   ஒசாகாவுக்கு தனிப்பட்ட தொடர்பு உள்ளது அவருடைய‌ தந்தை அங்கிருந்து வந்தவர்.

உலகில் அதிக வருமானத்தை ஈட்டும் வீராங்கனியான ஒசாகா அடுத்த  வாரம் நடைபெற உள்ள சின்சினாட்டி தொடரில் கிடைக்கும் பரிசுத்தொகையை  ஹெய்ட்டி நிவாரனத்துக்காவ வழங்கப்போவதாக தெரிவித்துள்ளார்.

23 வயதான ஒசாகா ஜப்பானில் பிறந்தவர். அவரது தாயார்  மூன்று வயதில் அமெரிக்காவுக்கு பெற்ரோரால் கொண்டு செல்லப்பட்டவர். ஒசாகாவின் தந்தை, லியோனார்ட் பிராங்கோயிஸ், தென்மேற்கு தீபகற்பத்தில் உள்ள ஜாக்மெல் பகுதியைச் சேர்ந்தவர். ஹெய்ட்டியில் வசிக்கும்  ஒசாகாவின்   தாத்தாவுக்கும், பாட்டிக்கும் ஆங்கிலம் பேசத்தெரியாது.அவர்கள் தாய் மொழியான  கிரியோலை மட்டுமே பேசுவார்கள்.

"எங்கள் மூதாதையரின் இரத்தம் வலுவானது என்பதை நாங்கள் அறிவோம். ஹெய்டியில் நடக்கும் அனைத்து அழிவுகளையும் பார்க்க மிகவும் வேதனையாக இருக்கிறது, எங்களுக்கு மத்தியில் இடைவெளி ஏற்படுவதை நான் விரும்பவில்லை"  என்று ஒசாகா ட்விட்டரில் பதிந்துள்ளார்.