Monday, April 26, 2010

உலகக்கிண்ணம்2010


சுவிட்சர்லாந்து1954
சுவிட்ஸர்லாந்தில் 1954ஆம் ஆண்டு நடைபெற்ற ஐந்தாவது உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் ஹங்கேரியை வீழ்த்திய மேற்கு ஜேர்மன் வெற்றி பெற்று சம்பியனானது. 45 நாடுகள் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெறுவதற்காகப் போட்டியிட்டன.
அதிக புள்ளிகளைப் பெற்ற 16 நாடுகள் உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெற்றன. கொரியக் குடியரசு (தென் கொரியா) முதன் முதலாக உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெற்றது. கடந்த போட்டியில் விளையாடிய ஸ்பெயின் உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடத் தகுதி பெறவில்லை.
ஆசியாவில் இருந்து தென்கொரியா, ஐரோப்பாவில் இருந்து ஒஸ்ரியா,பெல்ஜியம், செக்கஸ்லோவாக்கியா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜேர்மன், ஹங்கேரி, இத்தாலி, ஸ்கொட்லாந்து, சுவிட்சர்லாந்து, துருக்கி, யுகோஸ்லாவியா, வட மத்திய அமெரிக்காவில் இருந்து மெக்ஸிக்கோ, தென் அமெரிக்காவில் இருந்து பிரேஸில், உருகுவே ஆகிய நாடுகள் உலகக் கிண்ண உதைபந்தாட்டப்போட்டியில் விளையாடும் தகுதியைப் பெற்றன.
16 நாடுகளும் நான்கு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு முதல் சுற்றில் விளையாடின. ஒவ்வொரு குழுவில் இருந்தும் கூடுதல் புள்ளிகளைப் பெற்ற தலா இரண்டு நாடுகள் கால் இறுதியில் விளையாடின. தென்கொரியாவுக்கு எதிரான போட்டியில் 90 என்ற கோல் கணக்கிலும் மேற்கு ஜேர்மனுக்கு எதிரான போட்டியில் 83 என்ற கோல் கணக்கிலும் வெற்றி பெற்ற ஹங்கேரி அதிக கோல் அடித்த நாடு என்ற பெருமையைப் பெற்றது. தென்கொரியாவுக்கு எதிரான போட்டியில் 70 என்றகோல்கணக்கில் துருக்கி வெற்றி பெற்றது. துருக்கிக்கு எதிரான போட்டியில் 72 என்ற கோல் கணக்கில் மேற்கு ஜேர்மன் வெற்றி பெற்றது. ஸ்கொட்லாந்துக்கு எதிரான போட்டியில் 70 என்ற கோல் கணக்கில் உருகுவே வெற்றி பெற்றது.
யூகோஸ்லாவியா, பிரேஸில், ஜேர்மன், ஹங்கேரி, ஒஸ்ரியா, உருகுவே, சுவிட்ஸர்லாந்து, இங்கிலாந்து ஆகிய நாடுகள் கால் இறுதியில் விளையாடின. கால் இறுதியில் வெற்றி பெற்ற ஹங்கேரி, ஜேர்மன், உருகுவே, ஒரிஸ்ரியா, ஆகியன அரை இறுதியில் விளையாடத் தகுதி பெற்றன. ஹங்கேரி, உருகுவே ஆகியவற்றுக்கு இடையே நடைபெற்ற அரை இறுதிப் போட்டியில் 42 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற ஹங்கேரி இறுதிப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றது. ஜேர்மன், ஒஸ்ரியா ஆகிய நாடுகளுக்கிடையே நடைபெற்ற அரை இறுதிப் போட்டியில் 61 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற ஜேர்மன் இறுதிப்போட்டியில் விளையாடத் தகுதி பெற்றது.
அரை இறுதியில் தோல்வியடைந்த ஒஸ்ரியா, உருகுவே ஆகியவற்றுக்கிடையே நடைபெற்ற போட்டியில் 31 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற ஒஸ்ரியா மூன்றாவது இடத்தையும் தோல்வி அடைந்த உருகுவே நான்காவது இடத்தையும் பிடித்தன. உலகக்கிண்ண சம்பியன் பட்டத்தைத் தக்கவைப்பதற்காக அரை இறுதி வரை முன்னேறிய உருகுவே நான்காவது இடத்துக்குத் தள்ளப்பட்டது.
ஜேர்மனியும் ஹங்கேரியும் இறுதிப்போட்டியில் மோதின. முதல் சுற்றில் 32 என்ற கோல் கணக்கில் ஹங்கேரியிடம் ஜேர்மன் தோல்வி அடைந்தது. 29 போட்டிகளில் தோல்வி அடையாத ஹங்கேரி சம்பியனாகும் என்று உதைபந்தாட்ட ரசிகர்கள் எதிர்பார்த்தனர். முதல் பாதியில் 22 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தது. இரண்டாவது பாதியில் ஜேர்மன் ஒரு கோல் அடித்தது. 32 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று ஜேர்மன் சம்பியனானது.
ஹங்கேரி 27 கோல்களும், ஜேர்மன் 25 கோல்களும், ஒஸ்ரியா 17 கோல்களும், உருகுவே 16 கோல்களும்,சுவிட்ஸர்லாந்து 11 கோல்களும் அடித்தன. கோல்டன் ஷýவுக்காக 11 கோல்கள் அடித்த சன்டோர் கொக்கிஸ் (ஹங்கேரி), தலா ஆறு கோல்கள் அடித்த செப்ஹுதி (சுவிட்சர்லாந்து), மக்ஸ் மொர்யோக் (ஜேர்மன்), எதிட்புரொபொஸ்ட் (ஹங்கேரி) ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன.
ஹங்கேரியைச் சேர்ந்த கொக்கியஸுக்கு கோல்டன் ஷý வழங்கப்பட்டது. ஹம்பரட் ரொஸி(பிரேஸில்), நில்ரொன்சன்டொய் (பிரேஸில்), ஜொசெப் பொஸ் இக் (ஹங்கேரி) ஆகியோருக்கு சிவப்பு அட்டை காட்டப்பட்டது. 26 போட்டிகளில் 140 கோல்கள் அடிக்கப்பட்டன. 88,950 ரசிகர்கள் மைதானத்தில் போட்டிகளை பார்த்து ரசித்தனர். உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டிகள் முதன் முதலாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டன. வெற்றி தோல்வி இன்றி முடிவடையும் போட்டிகளுக்கு மேலதிக நேரம் வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. ஜேர்மன் வீரர்கள் ஊக்கமருந்து உட்கொண்டது கண்டு பிடிக்கப்பட்டது. தென் கொரிய கோல்கீப்பர் இரண்டு போட்டிகளில் 16 கோல்களை பிடிக்காது விட்டார். மேற்கு ஜேர்மன் உதைபந்தாட்ட அணிக்காக அரை இறுதிப் போட்டியில் பிரிட்ஷ், ஓட்மன் வோல்ட் ஆகிய சகோதரர்கள் விளையாடினார்கள். உலகக் கிண்ண உதைபந்தாட்ட அரை இறுதிப் போட்டியில் முதன் முதலாக விளையாடிய சகோரரர்கள் இவர்கள்.
ரமணி

மெட்ரோநியூஸ்

Sunday, April 25, 2010

தமிழக இளைஞர் காங்கிரஸ்கட்சியை ஒற்றுமையாக்குமா?



தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்கு பலமான இளைஞர் காங்கிரஸ் வேண்டும் என்ற ராகுல் காந்தியின் எண்ணத்தை ஈடேற்றுவதற்காக நடைபெற்ற இளைஞர் காங்கிரஸ் தேர்தலில் எம்.யுவராஜ் என்பவர் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். இன்றைய இளைஞர்களே நாளைய தலைவர்கள். இளைஞர்களின் முழு மூச்சான செயற்பாடே கட்சியை வளர்க்க உதவும் என்ற நம்பிக்கையில் நடைபெற்று முடிந்த இளைஞர் காங்கிரஸ் தேர்தலில் தமிழக காங்கிரஸ் தலைவர்களின் கை பலமாகச் செயற்பட்டது.
தமிழக காங்கிரஸில் கோஷ்டிப் பூசல்கள் அதிகம் என்ற குற்றச்சாட்டு உள்ளது. கோஷ்டிகளின் தலையீடு இல்லாத காங்கிரஸ் கட்சியை தமிழகத்தில் தோற்றுவிக்க ராகுல் காந்தி மேற்கொண்ட முயற்சி ஆரம்பத்திலேயே தோல்வியைத் தழுவி உள்ளது. இந்திய பொதுத் தேர்தலுக்கு இணையாக பரபரப்பாக நடந்த இளைஞர் காங்கிரஸ் தேர்தலில் ஜி.கே. வாசனின் ஆதரவு பெற்றவர் வெற்றி பெற்றார்.
அமைச்சர் சிதம்பரத்தின் மகனின் ஆதரவு பெற்றவருக்கும் ஜி.கே. வாசனின் ஆதரவு பெற்ற யுவராஜுக்கும் இடையே கடும் போட்டி நடைபெற்றது. தமிழக காங்கிரஸ் கட்சியின் ஏனைய தலைவர்களும் தமது ஆதரவு பெற்ற ஒருவர் இளைஞர் காங்கிரஸின் தலைவராக தெரிவு செய்யப்படுவதையே விரும்பினார்கள். தமிழக காங்கிரஸ் கட்சியின் ஜி.கே. வாசனின் செல்வாக்கை முறியடிக்க ஏனைய தலைவர்களினால் முடியவில்லை.
இளைஞர்களின் பலமான கட்டமைப்பே வட இந்தியாவில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தியது. வட இத்திய மாநிலங்களுக்கு விஜயம் செய்யும் ராகுல் காந்தி அங்கு பலமான இளைஞர் அமைப்பை உருவாக்கி உள்ளார். தமிழகத்துக்கு இளைஞர்படை என்றும் புதிதல்ல. திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞர் அணித் தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்று பலமான இளைஞர் அணியை உருவாக்கியுள்ளார்.
ஒரு கட்சியின் பலமான கட்டமைப்புக்கு இளைஞர் அணி, மகளிர் அணி போன்றவை மிக அத்தியாவசியமாகும். அந்த அணிகளில் இணைந்து கட்சியை வளர்ப்பதுடன் தலைமைத்துவப் பண்புகளையும் வளர்த்துக் கொள்ளலாம்.
தமிழக காங்கிரஸ் இளைஞர் அணித் தலைவரை ஜி.கே. வாசனின் ஆதரவாளர் என்ற குறுகிய நோக்குடன் ஏனைய தலைவர்கள் செயற்பட்டால் தமிழக காங்கிரஸில் உள்ள கோஷ்டிப் பூசலைப் போன்று இளைஞர் காங்கிரஸின் உள்ளேயும் கோஷ்டிப் பூசல்கள் அதிகரித்துவிடும் சாத்தியம் உள்ளது.
தமிழக காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்படுபவர் அப்பதவியில் நீண்ட காலம் நிலைத்து நிற்பதில்லை. ஏதோ ஒரு காரணம் காட்டி தமிழக காங்கிரஸ் தலைவரின் பதவி பறிக்கப்படுவதும் வேறு ஒருவர் நியமிக்கப்படுவதும் வாடிக்கையான சங்கதி. தமிழக காங்கிரஸ் தலைவரின் பதவி காங்கிரஸ் தலைமைப் பீடத்தின் மூலம் நியமனம் செய்யப்படுவது. காங் கிரஸ் தலைமைப்பீடம் அதை எப்போது மாற்றும் என்பது யாருக்கும் தெரியாது.
ஆனால், தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைமைப் பதவி அப்படியானதல்ல. இளைஞர் காங்கிரஸ் அங்கத்தவர்களின் வாக்கு மூலமே இளைஞர் காங்கிரஸ் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரை மாற்றும் சக்தி தமிழக காங்கிரஸ் இளைஞர்களின் கைகளிலேயே உள்ளது. தமிழக காங்கிரஸ் இளைஞர்களின் தலைவன் என்ற உண்மையை அறிந்து செயற்பட்டால் எதிர்காலத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியை வழி நடத்தும் பொறுப்பை இன்றைய இளைஞர் காங்கிரஸ் தலைவர் பெறுவார். அப்படி இல்லாமல் தான் விசுவாசம் வைக்கும் ஒரு வரை திருப்திப்படுத்த முயன்றால் இளைஞர் காங்கிரஸ் தலைவர் என்ற பெயர் மட்டும் அவருடன் நிலைத்து நிற்கும்.
இளைஞர் காங்கிரஸ் தலைவராகத் தெரிவு செய்யப்பட்ட மகிழ்ச்சியான நேரத்தில் தமிழக அரசுக்கு மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளார். அணியை பலமாகதாக்கி அதன் மூலம் பல சேவைகளைச் செய்த பின்னர் எதிர்க்கட்சிக ளுக்கு அவர் எச்சரிக்கை விடுப்பது பிரயோசனமாக அமையும்.
பென்னாகரம் இடைத் தேர்தல் முடிவு எதிர்க்கட்சித் தலைவி ஜெயலலிதாவின் கண்களைத் திறந்து விட்டுள்ளது போலுள்ளது. கட்சித் தலைவர்களுடன் நெருக்கமாக உறவாடாத ஜெயலலிதாவின் போக்கில் அண்மைக் காலத்தில் பாரிய மாறுதல்கள் ஏற்பட்டுள்ளன. தனது நம்பிக்கைக்குப் பாத்திரமான ஒரு சிலருடன் மட்டுமே ஆலோசனை நடத்தும் ஜெயலலிதா பென்னாகரம் இடைத் தேர்தலின் பின்னர் பலரையும் அழைத்து ஆலோசனைகளை நடத்தி உள்ளார்.
பென்னாகரம் இடைத் தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்டுப்பணம் இழந்ததைப் பொறுக்க முடியாது தீக்குளித்த கட்சித் தொண்டனை வைத்தியசாலைக்கு சென்று சந்தித்துள்ளார். கட்சித் தொண்டர்கள் மத்தியில் இந்தச் செயல் வரவேற்பைப் பெற்றுள்ளது.
ஜெயலலிதாவுக்கும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்களுக்கும் இடையில் இருந்த இடைவெளியும் இடைத் தேர்தல்களில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தோல்வி அடைவதற்குரிய காரணங்களில் ஒன்று.
கட்சித் தலைவர்களுடனும் தொண்டர்களுடனும் ஜெயலலிதா தற்பொழுது காட்டி வரும் நெருக்கம் கட்சியின் வளர்ச்சிக்கு பெரிதும் உறுதுணை புரியும். தமிழக அரசுக்கு எதிராக கடந்த வாரம் ஜெயலலிதா நடத்திய போராட்டம் தொண்டர்களிடையே பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது. தமிழக அரசுக்கு எதிரான போராட்டங்களை தலைமை ஏற்று ஜெயலலிதா நடத்துவதற்கு முடிவு செய்த அதேவேளை பார்வதி அம்மாவின் பிரச்சினை ஜெயலலிதாவுக்கு எதிராகத் திரும்பியுள்ளது.
வைத்திய சிகிச்சைக்காக மலேசியாவில் இருந்து தமிழகம் சென்ற பார்வதி அம்மாவை நட்ட நடு நிசியில் விமான நிலைய அதிகாரிகள் மலேசியாவுக்குத் திருப்பி அனுப்பிய விவகாரம் தமிழக அரசுக்கு எதிராக பரபரப்பாகப் பேசப்பட்டது. தமிழகத்தையும் தாண்டி இந்திய நாடாளுமன்றத்திலும் இப்பிரச்சினை எதிரொலித்தது.
விமான நிலையத்தில் இருந்து பார்வதி அம்மா திருப்பி அனுப்பப்பட்டதற்கு ஜெயலலிதாதான் காரணம் என்பதை தமிழக அரசு பகிரங்கப்படுத்தியதால் ஜெயலலிதாவின் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
வர்மா
வீரகேசரிவாரவெளியீடு 25/04/10

Thursday, April 22, 2010

திரைக்குவராதசங்கதி 19


விஜயகுமாரி இரத்தம் சிந்தி நடித்தபடம் பூம்புகார்."கண்ணகி சாதாரண பெண் அல்ல; பத்தினித் தெய்வம். அதனால் நான் விரதம்இருந்து நடித்தேன்' எனக் கூறிய கண்ணாம்பா விஜயகுமாரிக்கு ஆசி வழங்கினார்.கண்ணாம்பா நடித்த கண்ணகி படத்தைப் பார்க்காது, பூம்புகாரில் விஜயகுமாரி கண்ணகியாகநடித்தார். அப்படத்தைப் பார்த்தால் அதன் பாதிப்புதன்னைப் பாதிக்கும் என எண்ணினார்.விஜயகுமாரியின் நடிப்பில் பூம்புகார்பெரு வெற்றி பெற்றது.பூம்புகார் படமாக்கப்பட்டகாலத்தில்,நடிக்கும்போதே பேசும் வசனம் ஒலிப்பதிவாகும். படப்பிடிப்பை நடத்திமுடித்து விட்டு வசனத்தை ஒலிப்பதிவுசெய்யும் வழக்கம் அப்போது இருக்கவில்லை.விஜயகுமாரியின் தலைக்கு மேலேஒலிவாங்கிவெகு உயரத்தில்தொங்கிக்கொண்டிருக்கும். உரத்த தொனியில் விஜயகுமாரி வசனங்களைப் பேசுவார்.சிலவேளைதொண்டைகட்டி விடும். வாயில் இரத்தம்வந்த சந்தர்ப்பங்களும் உண்டு.விஜயகுமாரி இரத்தம் சிந்தி நடித்ததற்குபூம்புகார் நல்ல பலனைக் கொடுத்தது.
பாண்டியன் அரச சபையில் ஒற்றைக்கையில் சிலம்புடன் "என் கணவன்கள்வனா' என கண்ணகி நீதி கேட்டுநடித்த காட்சியே சென்னை கடற்கரையில் வைக்கப்பட்டிருந்த கண்ணகிசிலைக்கு மாதிரி வடிவமாக இருந்ததுகண்ணகி சிலையைக் கடக்கும்போதுஅச்சிலையை கையெடுத்துக் கும்பிடுவார் விஜயகுமாரி.அரசியல் காரணங்களுக்காக ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது கண்ணகிசிலை அப்புறப்படுத்தப்பட்டது. கலை
ஞர் கருணாநிதி முதல்வரானதும் அச்சிலை மீண்டும் கடற்கரையில் நிறுவப்பட்டது
.கே.எஸ். கோபாலகிருஷ்ணன்தான்இயக்கப் போகும் படத்தில் நடிப்பதற்குவிஜயகுமாரியிடம் கால்ஷீட் கேட்டார்.அந்தத் திகதிகளை வேறு படங்களுக்குக்கொடுத்ததனால் நடிக்க மறுத்தார் விஜயகுமாரி. அதனால் கோபம் கொண்டகே.எஸ். கோபாலகிருஷ்ணன் உனக்குப்போட்டியாக புதிய விஜயாவை அறிமுகப்படுத்துகிறேன் என சபதம் செய்தார்.கற்பகம் படத்தில் கே.எஸ். கோபாலகிருஷ்ணனால் அறிமுகம் செய்யப்பட்டகே.ஆர்.விஜயா, விஜயகுமாரியை முந்திவிட்டார். கற்பகம் படத்தைப் பார்த்தவிஜயகுமாரி நல்ல சந்தர்ப்பத்தைஇழந்து விட்டேன் என வருத்தப்பட்டார்.புட்டண்ணாவின் இயக்கத்தில் டீச்சரம்மா என்ற படத்தில் விஜயகுமாரி நடித்துள்ளார். சினேகிதிக்காக காதலைத்தியாகம் செய்யும் கதை. விஜயகுமாரியும் வாணி ஸ்ரீயும் முக்கிய பாத்திரங்களில் நடித்தார்கள். டீச்சரம்மாவில் நடித்துக்கொண்டிருந்தபோது விஜயகுமாரியை அழைத்த இயக்குநர் ஸ்ரீதர் தனதுபடத்தில் நடிக்கும்படி கேட்டார்.
சகோதரிக்காக காதலைத் தியாகம் செய்யும் கதை. ஜெமினி வாணிஸ்ரீயுடன்விஜயகுமாரிக்கு முக்கிய பாத்திரம் எனஸ்ரீதர் கூறினார். டீச்சரம்மாவும் காதலைத் தியாகம் செய்யும் கதை. இதுவும்கிட்டதட்ட அதேபோன்ற கதை.இரண்டு படத்திலும் வாணி ஸ்ரீயும்தானும் இருப்பதால் நடிக்க மறுத்துவிட்டார் விஜயகுமாரி.விஜயகுமாரி நடிக்கவேண்டிய பாத்திரத்தில் சரோஜா தேவிநடித்தார். கல்யாணப் பரிசு என்ற அப்படம் தமிழ்த்திரைஉலகில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. தேவதாஸ்படத்துக்குப் பின்னர் காதலுக்காககண்ணீரை வரவழைத்தபடம் கல்யாணப் பரிசு.கல்யாணப் பரிசுபடத்தைப் பார்த்தவிஜயகுமாரி மிகவும் கவலைப்பட்டார். அடிபோடிபைத்தியக்காரிஎன்ற பாடல் தனக்காகவே எழுதப்பட்டதுஎன பேட்டி ஒன்றில் கூறினார்.ராஜேஷ், சரத் பாபு, ராதிகா, விஜயகுமாரி ஆகியோரின் நடிப்பில் மெட்டிஎன்ற படம் உருவானது. அப்படத்தைமகேந்திரன் இயக்கினார். விஜயகுமாரிநடித்த முதல் காட்சியின்போது இயக்குனர் மகேந்திரன் கிளப் அடித்து படப்பிடிப்பை ஆரம்பித்தார். விஜயகுமாரிக்குஆச்சரியமாக இருந்தது. வழமையாகஉதவி இயக்குநர்கள் தான் கிளப் அடிப்பார்கள். இயக்குநர் கிளப் அடித்ததைக்கண்ட விஜயகுமாரியால் அந்த ஆச்சரியத்தில்இருந்து விடுபட முடியவில்லை.
"அம்மா காஞ்சித் தலைவன் படத்தில்நீங்கள் நடித்த போது நான் தான் முதலில் கிளப் அடித்தேன். எனது இயக்கத்தில்நீங்கள் நடிக்கும்போதும் நான் தான்கிளப் அடிக்க வேண்டும் என விரும்பினேன்'என்று கூறிவிஜயகுமாரியின் ஆச்சரியத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
ராஜராஜ சோழனில் நடிகர் திலகத்துக்குமனைவியாக, பார் மகளே பார் படத்தில்மகளாக, அன்பைத் தேடி படத்தில் அக்காவாக, குங்குமம் படத்தில் முறைப்பெண்ணாக, சவாலே சமாளி படத்தில்தங்கையாக விஜயகுமாரி நடித்துள்ளார்.இப்படி வேறு எந்த நடிகையும் நடிகர்திலகத்துடன் இப்படி நடிக்கவில்லை.அவை அனைத்தும் வெற்றிப் படங்கள்


ரமணி

மித்திரன்வாரமலர்

16/09/07


Wednesday, April 21, 2010

உலகக்கிண்ணம்2010


பிரேஸில் 1950
பிரேஸிலில் நடைபெற்ற‌ நான்காவது உலகக் கிண்ண உதைபந்தாட்டம் போட்டியில் உருகுவே சம்பியனானது. இரண்டாவது உலக மகா யுத்தத்தின் காரணமாக 12 வருடங்களின் பின்னர் நான்காவது உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டி நடைபெற்றது.
நான்காவது உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடுவதற்கு 34 நாடுகள் போட்டியிட்டு கூடுதல் புள்ளிகளைப் பெற்ற 13 நாடுகள் தகுதி பெற்றன.
மூன்றாவது உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடிய பிரான்ஸ், ஜேர்மன், ஹங்கேரி ஆகியன நான்காவது உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெறவில்லை. உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாட பொலிவியா தகுதி பெற்றது.
ஐரோப்பாக் கண்டத்தில் இருந்து இங்கிலாந்து, இத்தாலி, ஸ்பெயின், சுவீடன், சுவிட்ஸர்லாந்து, யூகோஸ்லாவியா ஆகிய நாடுகளில் வட அமெரிக்கா, மத்திய அமெரிக்காவில் இருந்து மெக்ஸிக்கோ, அமெரிக்கா ஆகிய நாடுகளும், தென் அமெரிக்காவில் இருந்து பொலிவியா, பிரேஸில், சிலி, பரகுவே, உருகுவே ஆகிய நாடுகளும் நான்காவது உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெற்றன.
உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்ற 13 நாடுகளும் நான்கு குழுக்களாகப் பிரிக்கப்பட்டன. அவற்றில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற உருகுவே, பிரேஸில், சுவீடன், ஸ்பெயின் ஆகிய நாடுகள் அரை இறுதிக்குத் தெரிவாகின.
இறுதிப் போட்டியில் பிரேஸிலை எதிர்த்து விளையாடிய உருகுவே வெற்றி பெற்று சாம்பியனானது. 1934 ஆம் ஆண்டு சம்பியனான உருகுவே இரண்டாவது முறை சம்பியனானது. ஸ்பெயினுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற சுவீடன் மூன்றாவது இடத்தையும் தோல்வி அடைந்த சுவீடன் நான்காவது இடத்தையும் பிடித்தன.
32 போட்டிகளில் 88 கோல்கள் அடிக்கப்பட்டன. 1, 043, 500 பேர் மைதானத்தில் போட்டிகளைப் பார்த்தனர். பிரேஸில் 22 கோல்களையும் உருகுவே 15 கோல்களையும், சுவீடன் 116 கோல்களையும், ஸ்பெயின் 10 கோல்களையும் அடித்தன.
அட்மிர் (பிரேஸில்) ஒன்பது கோல்களும், பசோரா (ஸ்பெயின்), மிகுஸ் (உருகுவே) ஆகியோர் தலா ஐந்து கோல்களையும் அடித்தனர். சிறந்த விளையாட்டு வீரருக்கான கோல்டன் சூவுக்காக இவர்கள் மூவரின் பெயரும் பிரேரிக்கப்பட்டன. ஒன்பது கோல்கள் அடித்த பிரேஸில் வீரரான அட்மிர் கோல்டன் சூவைப் பெற்றார்.
பிரிட்டன் சாம்பியன் சிப் போட்டிகளில் வெல்லும் அணி இறுதிப்போட்டிகளில் கலந்து கொள்ளலாம் என 1950 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. ஸ்கொட்லாந்து 1950 பிரிட்டன் சாம்பியன் சிப் போட்டியில் வெள்ளாரம் இறுதிப்போட்டிக்கு அனுமதிக்கப்படவில்லை.
இரண்டாவது உலக மகா யுத்தத்தில் தோற்கடிக்கப்பட்ட ஜெர்மனியும் ஜப்பானும் போட்டிகளில் சேர்த்துக்கொள்ளப்படவில்லை.
உலகப்போட்டிகளில் விளையாட இந்தியா தகுதி பெற்றும் சப்பாத்து இல்லாமல் வெறும் கால்களுடன் விளையாட பீபா அனுமதிக்கவில்லை. 3000 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள பிரேசிலில் விளையாட மறுத்து முதல் சுற்று போட்டியில் பிரான்ஸ் பின்வாங்கியது.
போட்டிகளிற்காக அதிக தூரம் பயணிக்கவேண்டும் என்பதால் அமைப்பாளர்கள் கண்ட ரீதியாக நாடுகளை தெரிவு செய்ய மறுத்துவிட்டனர். சுவீடனை சேர்ந்த எரிக் நில்சன் மற்றும் சுவீட்சர்லாந்தைச் சேர்ந்த அல்பிரட் பிக்கெல் ஆகிய இரண்டு வீரர்களும் உலக மகா யுத்தத்தின் முன்னரும் பின்னரும் விளையாடினார்கள்.
1950 ஆண்டு உலக கிண்ணம் பீபாவில் 25 வருடங்கள் தலைவராக பணியாற்றி ஜீலஸ் றிமெட்டின் பெயரிடப்பட்டது.
மே மாதம் 1949 ஆம் ஆண்டு இடம்பெற்ற விமான விபத்தில் எட்டு இத்தாலிய தேசிய உதைப்பந்தாட்ட வீரர்கள் இறந்தனர்.
ஆடை மாற்றும் ஆலையில் இரும்புத் தூண் ஒன்றுடன் யுகோசிலேவிய வீரர் ராஜ்கோ மிட்டிக் மோதியதால் உரிய நேரத்தில் போட்டியில் கலந்து கொள்ள முடியவில்லை. நடுவர் போட்டியை தாமதப்படுத்த வில்லை. யூகோஸ்லாவிய அணி 10 வீரர்களுடன் விளையாடியது.
இறுதிப்போட்டியைப் பார்வையிட 199850 பார்வையாளர்கள் வருகை தந்தமை குறிப்பிடத்தக்கது.
நான்காவது உலகக் கிண்ண உதை பந்தாட்டப் போட்டியில் உருகுவே சம்பியனானது. இரண்டாவது உலக மகா யுத்தம் காரணமாக 12 வருடங்களின் பின்னர் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டி பிரேஸிலில் நடைபெற்றது.
ரமணி
மெட்ரோநியூஸ்

Tuesday, April 20, 2010

உலகக்கிண்ணம்2010


பிரான்ஸ் 1938
பிரான்ஸில் 1938 ஆம் ஆண்டு நடைபெற்ற மூன்றாவது உலகக் கிண்ணப் போட்டியில் இத்தாலி சாம்பியனானது. இரண்டாவது உலகக் கிண்ணப் போட்டியில் சாம்பியனான இத்தாலி மூன்றாவது உலகக் கிண்ணப் போட்டியிலும் சாம்பியனாகி தனது சம்பியன் பட்டத்தைத் தக்க வைத்தது.
மூன்றாவது உலகக் கிண்ணப் போட்டியில் 15 நாடுகள் பங்குபற்றின. ஆசியாவில் இருந்து முதன் முதலாக டச் கிழக்கு இந்தியத் தீவுகள் (இந்தோனேஷியா) உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெற்றது. வட அமெரிக்காவில் இருந்து முதன் முதலில் கியூபா பங்குபற்றியது.
ஐரோப்பா கண்டத்தில் இருந்து பெல்ஜியம், செக்கஸ்லோவேதியா, பிரான்ஸ், ஜேர்மன், ஹங்கேரி, இத்தாலி, நெதர்லாந்து, நோர்வே, போலந்து, ரொமேனியா, சுவீடன், சுவிட்ஸர்லாந்து ஆகிய நாடுகள் விளையாடும் தகுதியைப் பெற்றன. தென் அமெரிக்காவில் இருந்து பிரேஸில் பங்குபற்றியது.
இரண்டாவது உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடிய ஆர்ஜென்ரீனா இங்கிலாந்து, ஸ்பெயின், உருகுவே ஆகிய நாடுகள் மூன்றாவது உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெறவில்லை.
முதல் சுற்றில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற எட்டு நாடுகள் அரை இறுதிக்குத் தெரிவாகின. டச் கிழக்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டியில் ஹங்கேரி 6 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியது.
பிரேஸில், ஹங்கேரி, சுவீடன், இத்தாலி, செக்கன்லோவேகியா, சுவிட்ஸர்லாந்து, கியூபா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் கால் இறுதியில் விளையாடின. கியூபாவுக்கு எதிரான போட்டியில் 8 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற சுவீடன் ஒரு போட்டியில் அதிக கோல் அடித்த நாடாக பதிவு செய்தது.
ஹங்கேரி, சுவீடன், இத்தாலி, பிரேஸில் ஆகிய நாடுகள் கால் இறுதியில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு தெரிவாகின.
5 1 என்ற கோல் கணக்கில் சுவீடனை வென்ற ஹங்கேரியும் 2 1 என்ற கோல் கணக்கில் பிரேஸிலை வென்ற இத்தாலியும் இறுதிப் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெற்றன.
அரை இறுதியில் தோல்வி அடைந்த பிரேஸிலுக்கும் சுவீடனுக்கும் இடையிலான போட்டியில் 4 2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற பிரேஸில் மூன்றாவது இடத்தையும் சுவீடன் நான்காவது இடத்தையும் பிடித்தன. இத்தாலிக்கும் ஹங்கேரிக்கும் இடையிலான போட்டியில் 4 2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற இத்தாலி உலகக் கிண்ண சாப்பியனானது.
மூன்றாவது உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடுவதற்காக 37 நாடுகள் போட்டியிட்டு 15 நாடுகள் தகுதி பெற்றன. மூன்றாவது உலகக் கிண்ணப் போட்டியில் 18 போட்டிகள் நடைபெற்றன. 8 6 என்ற கோல்கள் அடிக்கப்பட்டன. 37, 600 ரசிகர்கள் மைதானங்களில் போட்டிகளை பார்வையிட்டனர்.
சிறந்த விளையாட்டு வீரருக்கான கோல்டன் சூ பெறுவதற்காக லொனி டாஸ், பிரேஸில், கியூபா, சென்கிலர் (ஹங்கேரி), சில்வியோ கபிஓலா (இத்தாலி), கயோரி சதோஷி (ஹங்கேரி) ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன. லெனிடாஸ் கோல்கள் அடித்த லொனிடாஸ் சிறந்த வீரராகத் தெரிவு செய்யப்பட்டு கோல்டன் சூ வழங்கப்பட்டது.
ஹங்கேரி 15 கோல்களும், பிரேஸில் 14 கோல்களும், இத்தாலி, சுவீடன் ஆகியன தலா 11 கோல்களும் அடித்தன. லொனிடாஸ் (பிரேஸில்) ஏழு கோல்களும், கியூலா சென்திலர் (ஹங்கேரி) ஆறு கோல்களும், கயோரி சரோஷி (ஹங்கேரி) ஆறு கோல்களும், சில் பியோபி ஒலா (இத்தாலி) ஆகியோர் தலா ஐந்து கோல்களும் அடித்தனர். ஹன்ஸ் பென்ஸர் (ஜேர்மனி), ஜான்ரியா (செக்கஸ்லோவேதியா), ஸீஸீ புலாகோபியா (பிரேஸில்), மசாடோ (பிரேஸில்) ஆகிய வீரர்களுக்கு சிவப்பு அட்டை காட்டப்பட்டது.
போட்டியை நடத்தும் நாடு தானாகவே போட்டியில் தகுதி பெறும் விதி முதல் தடவையாக உருவாக்கப்பட்டது.
சட்டைகளில் இலக்கம் இடுவது முதல் தடவையாக அறிமுகப்படுத்தப்பட்டது.
ஒஸ்ரியா உதைப்பந்தாட்ட உலக கிண்ண போட்டிக்கு தகுதி பெற்றும் ஜெர்மனியால் ஒஸ்ரியா கைப்பற்றப்பட்டதும் ஒஸ்ரியா போட்டியில் இருந்து விலக நேரிட்டது.
சுவிட்ஸர்லாந்தைச் சேர்ந்த வீரரான ஏனஸ் லெக் ரெக்ஸர் ஜேர்மனிக்கு எதிரான போட்டியில் முதன் முதலாக 1 கோல் அடித்தார்.
இத்தாலிய அணித் தலைவர் மெஸாஸ், பெனால்டி அடிக்கும் போது அவரது கால் சட்டை நழுவியது.
ஒரு கையில் கால்சட்டையைப் பிடித்துக் கொண்டு பெனால்டி அடித்தார். இறுதிப்போட்டி இத்தாலிக்கும் ஹங்கேரிக்கும் இடையே இடம்பெற்றது. இப்போட்டியின்போது இத்தாலிய விளையாட்டு வீரர்களிற்கு பெனிடோ முசேõலினியிடம் இருந்து வெல்லுங்கள் அல்லது சாவைத் தழுவுங்கள் win or die என்ற தந்தியை அனுப்பி வைத்தார்.
எனும் தந்தி வந்தது. இப்போட்டியில் இத்தாலி வெற்றி பெற்றது.
நான் 4 கோல்களை விட்டு இருக்கலாம் ஆனால் இத்தாலிய வீரர்களின் உயிரை காப்பாற்றியுள்ளேன் என ஹங்கேரியின் கோல் கீப்பர் தெரிவித்தார்.

Monday, April 19, 2010

திரைக்குவராதசங்கதி 18




நானும் ஒரு பெண் என்ற படத்தில்கறுப்புப் பெண்ணாக விஜயகுமாரி நடித்தார். அழகில்லாதவர்கள் கூட மேக்கப்பினால் தம்மை அழகுபடுத்திக் காட்டும்
நேரத்தில் விஜயகுமாரியோ கறுப்புப்பெண்ணாக நடிக்க ஒப்புக் கொண்டார்.விஜயகுமாரியின் பாத்திரத்தைப் பற்றிகேள்விப்பட்டவர் அவருடைய ஆட்டம்முடிந்து விட்டது என்று நேரடியாகக் கூறினார்கள். நிச்சயம் உன்னுடைய மாக்கட்அவுட் என்றார்கள்.நானும் ஒரு பெண் படத்தில் நடித்துக்கொண்டிருந்த அதே நேரத்தில் வசந்திஎனும் படத்தில் நடிப்பதற்கு விஜயகுமாரி ஒப்புதல் வழங்கினார்.வசந்தி படப் பூஜைக்கு கறுப்புப்பெண் மேக்கப்பில் போனார். அதனைத்கண்ட பலர் அங்கும் தமது கைவரிசையைக் காட்டினார். பொது இடங்களில்மேக்கப்புடன் வந்தால் உன் இமேஜ்படுத்து விடும் என்றனர்.கறுப்புப் பெண் வேடத்தைப் பற்றிபலரும் மிரட்டியதால் விஜயகுமாரிக்குபயம் வந்து விட்டது. நானும் ஒரு பெண்படத்துடன் தனது சினிமா வாய்ப்புமுடிந்துவிடுமோ என்று விஜயகுமாரிநினைத்தார்.
வசந்தி படப் பூஜைக்கு வந்த நடிகர்திலகம் அங்கு விஜயகுமாரியைக் கண்டுஅதிசயப்பட்டு விபரம் கேட்டார்.விஜயகுமாரி கூறுவதைக் கவனமாகக்கேட்ட நடிகர் திலகம் நான் பெண்ணாகஇருந்தால் ஏ.வி.எம்.மிடம் கேட்டு இந்த பாத்திரத்தில் நான்நடிப்பேன். இப்படம் நிச்சயம் வெற்றிபெறும் என்றார் நடிகர் திலகம்.நானும் ஒரு பெண் பெருவெற்றி பெற்றது. விஜயகுமாரிக்கு ஜனாதிபதி விருதுகிடைப்பதற்கு நானும் ஒரு பெண்திரைப்படம் வழி வகுத்தது.
ஸ்ரீதரின் இயக்கத்தில் கொடி மலர்என்ற படத்தில் விஜயகுமாரி நடித்துக்கொண்டிருந்தார். படப்பிடிப்பின் போதுஒருநாள் விஜயகுமாரியிடம் இரண்டுபுகைப்படங்களை ஸ்ரீதர் காட்டினார்.முதலாவது படத்தில் உள்ள பெண் மிகவும் ஒல்லியாக இருந்தார். இரண்டாவதுபடத்தில் உள்ள பெண் அளவான தேகக்கட்டுடன் இருந்தார்.புதிய நடிகர்களை வைத்து படமொன்று இயக்கப் போகிறேன். இந்தஇரண்டில் யாரைத் தெரிவு செய்வாய்என்று ஸ்ரீதர் கேட்டார். இரண்டு படங்களையும் மிகவும் அவதானமாகப் பார்த்தவிஜயகுமாரி இரண்டாவது படத்தில்உள்ள பெண்ணையே தான் தெரிவு செய்வதாகக் கூறினார்.விஜயகுமாரியின் பதிலைக் கேட்டஸ்ரீதர் சிரித்து விட்டு அந்தப் பெண்ணைத்தான் நாங்களும் தெரிவு செய்துள்ளோம் என்றார்.அந்தப் பெண்தான் வெண்ணிறஆடை படத்தின் மூலம் அறிமுகமாகிஇன்று இந்திய அரசியலைக் கலக்கிக்கொண்டிருக்கும் ஜெயலலிதா ஸ்ரீதரால்நிராகரிக்கப்பட்டவர் ஹிந்தித் திரை உலகில் கனவுக் கன்னியாக விளங்கியஹேமமாலினி.
ஜெயலலிதாவின் 100ஆவது படமான சூரியகாந்திபடத்தின் 100 ஆவது நாள்விழாவில் கலைஞர் தலைமையில் நடைபெற்றது. அந்தவெற்றி விழாவில் பேசியவிஜயகுமாரி, ஜெயலலிதாமிகவும் திறமையானவர்.அவர் அரசியலில் நுழைந்தால் இந்திரா காந்திபோல் பிரபல்யமாவார்'' என்றுபேசினார்.எஸ்.எஸ்.ஆர். விஜயகுமாரி நடித்த முத்து மண்டபம்என்ற நாடகம் தமிழகத்தில்மிகவும் புகழ்பெற்றது. அந்தநாடக விழாவின்போது கலை
ஞர், சிலம்புச் செல்வர் ம.பொ.சி. டி.கே.சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டனர். அந்த விழாவில் பேசிய ம.பொ.சி.கண்ணகி வரலாறு படமானால் அதில்நடிப்பதற்கு மிகவும் பொருத்தமான நடிகைவிஜயகுமாரி என்று கூறினார்.அந்தக் கூட்டத்தின் இறுதியில் கலைஞர் பேசினார். கண்ணகி வரலாறு பூம்புகார் என்ற பெயரில் வெளியாகும் அதில்கோவலனாக எஸ்.எஸ். ஆரும் கண்ணகியாக விஜயகுமாரியும் நடிப்பார்கள்என்று பதிலளித்தார். பூம்புகார் படத்தைமுரசொலி மாறன் தயாரித்தார். கதைவசனத்தை கலைஞர் எழுதினார். விஜயகுமாரிக்கு பெரும் புகழைத் தேடிக் கொடுத்தது அப்படம்.பூம்புகார் படம்வெளிவருவதற்கு முன்னர் கண்ணாம்பாநடித்த கண்ணகி என்ற படம் வெளியாகியது. அதில் கண்ணகியாக கண்ணாம்பாநடித்தார். தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்ட கண்ணாம்பா தமிழைத்தடையின்றி சுத்தமாகப் பேசுவார்.பூம்புகார் படத்தில் நடிக்க முன்பு கண்ணாம்பாவிடம் சென்று ஆசி பெற்றார்விஜயகுமாரி.
ரமணி
மித்திரன்வாரமலர்

09/09/2007

Sunday, April 18, 2010

தி.மு.க. பக்கம் சாய்வதற்குமுயற்சி செய்யும் பா.ம.க.










தமிழக சட்ட சபையில் மேல் சபை அமைக்க வேண்டும் என்ற முதல்வர் கருணாநிதியின் நீண்ட நாள் ஆசையை பூர்த்தி செய்வதற்கான தீர்மானத்தை தமிழக சட்ட சபை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றி உள்ளது.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், இடதுசாரிக் கட்சிகள் ஆகியனவற்றின் பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் ஆகியன இந்தத் தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தன. யாருமே எதிர்பாராத வகையில் திடீரென பாட்டாளி மக்கள் கட்சி திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு ஆதரவளித்தது. "மைனாரிட்டி அரசு' என்று எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதாவினால் வர்ணிக்கப்படும் தமிழக அரசு மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.
இதேவேளை, பென்னாகரம் இடைத் தேர்தலின் பின்னர் பாட்டாளி மக்கள் கட்சியின் போக்கில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. பலத்த போட்டியின் மத்தியில் பென்னாகரத்தில் இரண்டாவது இடத்தைப் பிடித்த பாட்டாளி மக்கள் கட்சி பலம் வாய்ந்த கட்சி ஒன்றுடன் கூட்டணி சேர்ந்தால்தான் அடுத்து வரும் சட்ட சபைத் தேர்தலில் அதிக ஆசனங்களைப் பெறக் கூடிய வாய்ப்பு ஏற்படும்.
திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி சேர்வதற்கு பாட்டாளி மக்கள் கட்சி விரும்புகிறது. ஆனால் பாட்டாளி மக்கள் கட்சியுடன் கூட்டணி சேரக் கூடாது என்ற கருத்து திராவிட முன்னேற்றக் கழகத்தினுள் உள்ளது. பென்னாகரம் இடைத் தேர்தலின் போது பாட்டாளி மக்கள் கட்சியின் பேச்சாளர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தை மிக மோசமாகத் தாக்கிப் பேசினார்கள். அந்தத் தாக்கத்தில் இருந்து விடுபடாத திராவிட முன்னேற்றக் கழகத்தினர் பாட்டாளி மக்கள் கட்சியுடன் கூட்டணி சேர்வதை விரும்பவில்லை.
ஜூன் மாதத்துடன் அன்புமணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி காலியாகிறது. திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி சேர்ந்தால்தான் அன்புமணியின் பதவியைத் தொடர முடியும். இல்லையேல் அன்புமணியின் நாடாளுமன்றப் பதவி பறிபோய் விடும். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தயவினாலேதான் அன்புமணி நாடாளுமன்ற உறுப்பினரானார். அதன் பின் மத்திய அரசில் சுகாதார அமைச்சராகி பல புரட்சிகரமான திட்டங்களை அமுல்படுத்தினார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணி தோல்வி அடையும் என்று கருதிய டாக்டர் ராமதாஸ் கூட்டணியில் இருந்து வெளியேறி ஜெயலலிதாவுடன் கூட்டணி அமைத்தார். தன் மகன் அன்புமணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு பங்கமில்லாத வகையில் ஜெயலலிதாவுடன் ஒப்பந்தம் செய்தார் டாக்டர் ராமதாஸ். ஜெயலலிதாவுடனான கூட்டணியினால் முதலுக்கே மோசமானதால் கூட்டணியிலிருந்து வெளியேறி தனி ஆவர்த்தனம் வாசிக்கத் தொடங்கினார் டாக்டர் ராமதாஸ்.
ஜெயலலிதாவுடன் இணைந்த பின்னர் வீழ்ந்து விட்ட தனது கட்சியின் செல்வாக்கை தூக்கி நிறுத்த பல முயற்சிகளை மேற்கொண்டார். டாக்டர் ராமதாஸின் முயற்சிகள் அனைத்தும் பயனற்றுப் போன நிலையில் பொன்னாகரம் இடைத்தேர்தல் முடிவு ராமதாஸுக்கு கை கொடுத்தது. திராவிட முன்னேற்றக் கழகமும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் கூட்டணிக் கட்சிகளுடன் பென்னாகரம் இடைத் தேர்தலைச் சந்தித்தன. விஜயகாந்தும் டாக்டர் ராமதாஸும் கூட்டணிகளின் தயவின்றி தனியாக இடைத் தேர்தலைச் சந்தித்தனர். விஜயகாந்த் வழமை போல் படுதோல்வி அடைந்தார். டாக்டர் ராமதாஸின் தனிக் கட்சி 40 ஆயிரம் வாக்குகள் பெற்று திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் அதிர்ச்சியளித்தது.
தமிழக சட்ட சபையின் மேல் சபை 1986 ஆம் ஆண்டு எம். ஜி. ஆர். முதல்வராக இருந்த போது ஒரு அறிவிப்பின் மூலம் கலைக்கப்பட்டது. சட்ட சபையில் காரசாரமாக விவாதிக்கப்படும் சில தீர்மானங்களை மேலவையில் உள்ள உறுப்பினர்கள் நிதானமாக சிந்தித்து விவாதித்தார்கள். கட்சி நலனுக்கு அப்பாற்பட்டு பொது நலனைச் சிந்தித்து மேலவை நிகழ்ச்சிகள் ஒழுங்குபடுத்தப்பட்டன. ஆளும் கட்சியும் எதிர்க் கட்சிகளும் சட்ட சபையில் உள்ள அங்கத்தவர்களின் எண்ணிக்கைக்கேற்ப மேல் சபை உறுப்பினர்களை நியமிக்கலாம்.
தமிழக சட்ட சபையில் இயங்கி வந்த மேல் சபைக்கு வழக்கறிஞர் ராகவாச்சாரி, நடிகை நிர்மலா உட்பட நான்கு பேரை அன்றைய முதல்வர் எம். ஜி. ஆர். நியமித்தார். நடிகை நிர்மலாவின் நியமனம் சர்ச்சையைக் கிளப்பியது. எதிர்க்கட்சிகள் நிர்மலாவின் நியமனத்தை கடுமையாகக் கண்டித்தன. நிர்மலாவுக்குப் பதிலாக வேறு ஒருவரை நியமிக்கும்படி வற்புறுத்தின. எதிர்க் கட்சிகளின் கோரிக்கைகள் எதனையும் செவிமடுக்காத முதல்வர் எம்.ஜி. ஆர். நடிகை நிர்மலாவை மேல் சபைக்கு நியமனம் செய்வதில் உறுதியாக இருந்தார்.
நிர்மலாவின் நியமனத்துக்கு எதிராக நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் நிர்மலாவின் நியமனம் தகுதியற்றது என்று தீர்ப்பு வழங்கியது. இதனால் கோபமுற்ற எம்.ஜி.ஆர். மேலவையை முடக்கினார். ஆந்திரா சட்ட சபையில் இயங்கி வந்த மேலவையை 1987 ஆம் ஆண்டு முதல்வர் என். டி. ராமராவ் முடக்கினார்.
1989 ஆம் ஆண்டு தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி செய்த போது மீண்டும் மேலவைக்கு புத்துயிரளிக்க முயற்சி செய்யப்பட்டது. அப்போது அது கைகூடவில்லை. வாஜ்பாய் பிரதமராக இருந்த போது மேலவை அமைப்பது பற்றி தமிழகத்தில் உள்ள திராவிட முன்னேற்றக் கழக அரசு முயற்சி செய்தது. அப்போது ஆந்திராவில் காங்கிரஸ் ஆட்சி செய்தது. ஆந்திராவில் மேலவை அமைக்க வேண்டும் என்று காங்கிரஸ் குரல் கொடுத்தது. தமிழகத்தில் மேலவை அமைத்தால் ஆந்திராவிலும் மேலவை அமைக்க வேண்டும் என்பதனால் அந்த கோரிக்கையை வாஜ்பாய் அரசு நிராகரித்தது.
இப்போது தமிழக காங்கிரஸ் கட்சியினைத் திருப்திப்படுத்தவே முதல்வர் கருணாநிதி மேலவை அமைக்க கடும் முயற்சி செய்வதாகக் கூறப்படுகிறது. காங்கிரஸின் தயவிலேதான் தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி செய்கிறது. காங்கிரஸ் கட்சியின் தயவு இன்றி அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி செய்வதன் முதற்கட்டமே மேலவை அமைப்பதற்கான அவசியம் என்று கருதப்படுகிறது. அதிக தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்று அறுதிப் பெரும்பான்மை பெறுவதற்கு முயற்சி செய்கிறார் தமிழக முதல்வர் கருணாநிதி. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி என்ற ராகுலின் திட்டத்தை தவிடு பொடியாக்குவதற்கு மேலவையை முக்கிய காரணியாக்க முயற்சிக்கிறார் முதல்வர்.
பென்னாகரத்தில் கிடைத்த வாக்குகளை வைத்துக் கொண்டு திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி சேரத் துடிக்கிறார் டாக்டர் ராமதாஸ். கட்சிக் கொள்கையை ஒருபுறம் தள்ளி வைத்து விட்டு தன் மகன் அன்புமணியின் நாடாளுமன்றப் பதவியை தக்க வைக்க வேண்டிய முக்கிய கடமை டாக்டர் ராமதாஸுக்கு உள்ளது.
தன் மகன் அவையில் முந்தி இருப்பதற்காகக் கீழே இறங்கி வரத் தயாராக உள்ளார் டாக்டர் ராமதாஸ். ராமதாஸுக்கு இரக்கப்படும் நிலையில் முதல்வர் கருணாநிதி இல்லை.
அதேவேளை, தனது மகன் அழகிரியின் ஆவேசப் பேச்சினால் மனம் நொந்து போயுள்ளார் முதல்வர் கருணாநிதி. சக்கர நாற்காலியில் இருந்து கொண்டு தமிழ் நாட்டையும் கட்சியையும் முதல்வர் கருணாநிதி நிர்வகித்து வரும் நிலையில் முதல்வர் கருணாநிதி விரும்பாத வார்த்தைகளை வெளியிட்டுள்ளார் அழகிரி.
அழகிரியின் பேச்சு தமிழ் நாட்டில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் கட்சியில் உள்ளவர்கள் மௌனத்தைக் கடைபிடிக்கிறார்கள். அழகிரியைக் கண்டித்து அல்லது எதிர்த்து தமிழகத்தை ஆளும் கட்சி பிரமுகர்கள் யாரும் இதுவரை வாயைத் திறக்கவில்லை. முதல்வர் மட்டும் அவ்வப்போது அறிக்கை விடுகிறார். குடும்பப் பின்னணியை முதல்வரே தீர்க்கட்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தவர்கள் அதனை முதல்வரின் பொறுப்பில் விட்டு விட்டார்கள். குடும்பமா? கட்சியா? என்ற முக்கியமான முடிவை எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் முதல்வர் கருணாநிதி.
வர்மா
வீரகேசரிவாரவெளியீடு 18/04/10

Thursday, April 15, 2010

உலகக்கிண்ணம்2010


இத்தாலி 1934

இத்தாலியில் 1934ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டாவது உலகக் கிண்ணப் போட்டியில் இத்தாலி சாம்பியனானது. இரண்டாவது உலகக் கிண்ணப் போட்டியில் 16 நாடுகள் பங்கு பற்றின. முதலாவது உலகக் கிண்ணப் போட்டியில் ஐரோப்பிய, அமெரிக்கக் கண்டங்களில் உள்ள நாடுகள் மட்டும் பங்குபற்றின. இரண்டாவது உலகக் கிண்ணப் போட்டியில் ஆபிரிக்க கண்டத்தில் இருந்து எகிப்து பங்குபற்றியது.
ஐரோப்பாக் கண்டத்தில் இருந்து ஒஸ்ரியா, பெல்ஜியம், செக்கோஸ்லாவியா, பிரான்ஸ், ஜேர்மன், ஹங்கேரி, நெதர்லாந்து, ரொமானியா, ஸ்பெய்ன், சுவீடன், சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் பங்கு
பற்றின. வட மத்திய அமெரிக்காவில் இருந்து அமெரிக்காவும் தென் அமெரிக்காவில் இருந்து பிரேஸில், ஆர்ஜென்ரீனா ஆகிய நாடுகளும் பங்குபற்றின. இரண்டாவது உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெறுவதற்காக 32 நாடுகள் போட்டியிட்டன.
முதல் சுற்றில் விளையாடிய 16 நாடுகளில் இருந்து புள்ளிகளின் அடிப்படையில் எட்டு நாடுகள் காலிறுதிக்குத் தெரிவாகின. காலிறுதியில் வெற்றி பெற்ற புள்ளிகளின் அடிப்படையில் இத்தாலி, ஒஸ்ரியா,செக்கோஸ்லேவியா, ஜேர்மன் ஆகிய நாடுகள் அரையிறுதிக்குத் தெரிவு செய்யப்பட்டன. முதல் சுற்றில் அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் 71 என்ற கணக்கில் வெற்றி பெற்ற இத்தாலி ஒரு போட்டியில் அதிக கோல் அடித்த நாடு என்ற பெருமையைப் பெற்றது.
ஒஸ்ரியாவுடன் நடந்த போட்டியில் 10 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற இத்தாலியும் ஜேர்மனியுடனான போட்டியில் 31 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற செக்கோஸ்லேவியாவும் இறுதிப் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெற்றன. மூன்றாம் இடத்தைப் பெறுவதற்காக ஜேர்மனியும் ஒஸ்ரியாவும் மோதின. இதில் 32 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற ஜேர்மன் மூன்றாம் இடத்தையும் ஒஸ்ரியா நான்காம் இடத்தையும் பிடித்தன.
இத்தாலிக்கும் செக்÷காஸ்லேவியாவுக்கும் இடையில் நடந்த இறுதிப் போட்டியில் 21 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இத்தாலி சாம்பியனானது.
17 போட்டிகளில் 70 கோல்கள் அடிக்கப்பட்டன. 3,58,000 பேர் மைதானங்களில் போட்டியைப் பார்த்தனர். சிறந்த வீரருக்கான கோல்டன் சூவைப் பெறுவதற்காக ஒஸ்ட்ரிச் நெஜெட்லி (செக்
÷காஸ்லேவியா), எட்மன்ட் கொனென் (ஜேர்மனி), அங்கலோ ஸ்செஸ்வியோ (இத்தாலி) ஆகிய வீரர்களின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது. ஐந்து கோல்கள் அடித்த செக்÷காஸ்லேவிய வீரரான ஒஸ்ட்ரிட் நெஜெட்லிக்கு கோல்டன் சூ வழங்கப்பட்டது. ஐந்து போட்டிகளில் விளையாடிய இத்தாலி 12 கோல்களையும் நான்கு போட்டிகளில் விளையாடிய ஜேர்மன் 11 கோல்களையும் அடித்தன. ஹங்கேரிய வீரரான இம்ரி மார்கோஸுக்கு சிவப்பு அட்டை காட்டப்பட்டது.
ரமணி

மெட்ரோநியூஸ்

உலகக்கிண்ணம்2010


உருகுவே 1930

முதலாவது உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டி 1930ஆம் ஆண்டு உருகுவேயில் நடைபெற்றது. உருகுவே, ஆர்ஜென்ரீனா ஆகிய நாடுகளுக்கிடையே நடைபெற்ற இறுதிப் போட்டியில் உருகுவே வெற்றி பெற்று முதலாவது உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றியது.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 1904 ஆம் ஆண்டு பிஃபா (The Federation International de Football Association- FIFA ஆரம்பிக்கப்பட்டது. அதன் தலைவரான ஜுலிஸ் ரிமெட் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியை நடத்த வேண்டும் என்று 1929ஆம் ஆண்டு ஆலோசனை கூறினார். அவரின் ஆலோசனையின் பிரகாரம் 1930ஆம் ஆண்டு உருகுவேயில் மிகவும் சிறப்பான முறையில் முதலாவது உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டி நடைபெற்றது.
முதலாவது உலகக் கிண்ண உதைப்பந்தாட்டப் போட்டியில் 13 நாடுகள் பங்கு பற்றின. பெல்ஜியம், பிரான்ஸ், ரொமேனியா, யூகோஸ்லாவியா ஆகிய நாடுகள் ஐரோப்பாவிலிருந்தும் மெக்
ஸிக்கோ, அமெரிக்கா ஆகிய நாடுகள் வட மத்திய அமெரிக்காவில் இருந்தும் ஆர்ஜென்ரீனா, பொலிவியா, பிரேசில், சிலி, பரகுவே, பெரு, உருகுவே ஆகிய நாடுகள் தென் அமெரிக்காவில் இருந்தும் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெற்றன.
13 நாடுகளும் நான்கு குழுக்களாகப் பிரிக்கப்பட்டன. குழு 1இல் ஆர்ஜென்ரீனா, சிலி, பிரான்ஸ், மெக்ஸிக்கோ ஆகிய நாடுகளும் குழு 2இல் யூகோஸ்லேவியா, பிரான்ஸ், பொலிவியா ஆகிய நாடுகளும் குழு 3இல் உருகுவே, ரொமேனியா, பெரு ஆகிய நாடுகளும் குழு 4இல் அமெரிக்கா, பரகுவே, பெல்ஜியம் ஆகிய நாடுகளும் போட்டியிட்டன.
நான்கு குழுக்களிலும் முதலிடம் பிடித்த நான்கு நாடுகள் அரையிறுதியில் விளையாடின. ஆர்ஜென்ரீனா, அமெரிக்கா, உருகுவே, யூகோஸ்லேவியா ஆகிய நாடுகள் அரையிறுதிக்குத் தெரிவாகின.
ஆர்ஜென்ரீனா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கிடையே நடைபெற்ற முதலாவது அரையிறுதிப் போட்டியில் 61 என்ற கோல் கணக்கில் ஆர்ஜென்ரீனா வெற்றி பெற்றது. உருகுவே, யூகோஸ்லேவியா ஆகிய நாடுகளுக்கிடையே நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் 61 என்ற கோல் கணக்கில் உருகுவே வெற்றி பெற்றது.
உருகுவே, ஆர்ஜென்ரீனா ஆகிய நாடுகள் முதலாவது உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் மோதின. முதல் பாதியில் ஆர்ஜென்ரீனா 21 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது. இடைவேளையின் பின் உருகுவே மூன்று கோல்கள் அடித்து 42 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று முதலாவது உலகக் கிண்ண சம்பியனானது.
அமெரிக்காவுக்கும் யூகோஸ்லேவியாவுக்கும் இடையே நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற அமெரிக்கா மூன்றாவது இடத்தைப் பிடித்தது. தோல்வி அடைந்த யூகோஸ்÷லவியா நான்காவது இடத்தைப் பிடித்தது.
குல்லரிமோ ஸ்ரெபில் (ஆர்ஜென்ரீனா), பெட்ரோசியா (உருகுவே), பேர்ட் பெட்ரனாயடி (அமெரிக்கா), குல்லரிமோ சுபியப்ரி (சிலி) ஆகியோர் கோல்டன் சூ பெறுவதற்காக பரிந்துரை செய்யப்பட்டனர். எட்டு கோல்கள் அடித்த ஆர்ஜென்ரீனா வீரர் குல்லரிமோ ஸ்ரெபிலுக்கு கோல்டன் சூ வழங்கப்பட்டது.முதலாவது உலகக் கிண்ணப் போட்டியில் 18 போட்டிகள் நடைபெற்றன. 70 கோல்கள் அடிக்கப்பட்டன. ஆர்ஜென்ரீனா அதிகபட்சமாக 18 கோல்கள் அடித்தது. உருகுவே 15 கோல்கள் அடித்தது. பெரு நாட்டின் வீரர் பிலா கிடோ திலின்டோவுக்கு சிவப்பு அட்டை காட்டப்பட்டது

ரமணி

மெட்ரோநியூஸ்

Sunday, April 11, 2010

அழகிரியின் அதிரடியால்குழப்பத்தில் தி.மு.க.


திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடுத்த தலைவர் ஸ்டாலின்தான் என்று அனைவரும் உறுதியாக நம்பிக் கொண்டிருக்கையில், ஸ்டாலினுக்குப் போட்டியாக மு.க. அழகிரி புறப்பட்டிருப்பதால் கட்சிக்குள் சலசலப்பு எழுந்துள்ளது. முதல்வர் கருணாநிதியின் நிழலில் வளர்ந்து அரசியலில் புகுந்தவரல்ல ஸ்டாலின். 40 வருட காலம் போராட்டங்கள் செய்து சிறைக்குச் சென்று தனக்கென அரசியல் வாழ்வை ஸ்திரப்படுத்தியவர் ஸ்டாலின்.
ஸ்டாலினுக்கு எதிராக வெளிப்படையாக விமர்சனம் செய்பவர்கள் யாரும் கட்சிக்குள் இல்லை. ஸ்டாலினுக்கு முடிசூட்ட முதல்வர் கருணாநிதி முயன்ற போதெல்லாம் நாசூக்காக எதிர்ப்புத் தெரிவித்தவர்கள் அனைவரையும் தன் வழிக்குக் கொண்டு வந்துள்ளார் முதல்வர் கருணாநிதி. முதல்வரின் இன்னொரு வாரிசான மு. க. அழகிரியிடமிருந்து இப்படி எதிர்ப்புக் கிளம்பும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. பேரறிஞர் அண்ணா மரணமானதும் திராவிட முன்னேற்றக் கழகத்தை வழிநடத்தும் தகுதி யாருக்கு என்ற பட்டிமன்றம் நடைபெற்றது.
கலைஞர் கருணாநிதி தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகம் தனிப்பெரும் கட்சியாகத் திகழ்ந்தது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் வளர்ச்சிக்குப் பெரிதும் காரணமானவர் கருணாநிதிதான் என்பது வெளிப்படை. அன்று கட்சியை வளர்த்தவர் இன்று வாரிசுகளையும் வானளாவ வளர்த்துள்ளார்.
ஸ்டாலினின் அரசியல் திட்டமிட்டு உருவானதல்ல. கருணாநிதியின் போராட்டங்களிடையே கவரப்பட்ட ஸ்டாலின் அரசியல் பாதையில் அடி எடுத்து வைத்தார். போராட்டம், சிறை வாசம் என்பன ஸ்டாலினை மெருகேற்றின. மதுரையில் அழகிரி கட்சியை வளர்த்ததோடு தனது செல்வாக்கையும் அபரிமிதமாக வளர்த்துள்ளார்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடுத்த தலைவர் ஸ்டாலின்தான் என்பது உறுதியான நிலையில் மூத்த தலைவர்கள் சிலர் ஸ்டாலினுக்கு வழிவிட்டனர். ஸ்டாலின் தலைவராக வருவதை விரும்பாத சிலர் ஒதுக்கப்பட்டனர். ஸ்டாலினின் தலைமையின்கீழ் செயற்படுவதற்கு திராவிட முன்னேற்றக் கழகம் தயாரான நிலையில் குடும்பத்துக்குள்ளேயே பூகம்பம் வெடித்துள்ளது.
ஸ்டாலினா அழகிரியா என்ற கேள்வி எழுந்த போது ஸ்டாலின்தான் அடுத்த தலைவர் என்பதை மறைமுகமாகவும் நாசூக்காகவும் வெளிப்படுத்தி உள்ளார் முதல்வர் கருணாநிதி. அனைவரையும் அரவணைத்து காரியமாற்றுபவர் ஸ்டாலின். அதிரடியான நடவடிக்கையினால் அரசியல் களத்தில் தனக்கென இடத்தைப் பெற்றுள்ளார் அழகிரி. அழகிரிக்கும் ஸ்டாலினுக்குமான பனிப் போரை தனது இராஜ தந்திரம் மூலம் முடிவுக்குக் கொண்டு வந்தார் முதல்வர் கருணாநிதி.
தமிழ் நாட்டுக்கு ஸ்டாலின், டில்லிக்கு அழகிரி என்ற முதல்வர் கருணாநிதியின் தீர்மானத்தால் அழகிரி அடங்கி விடுவார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. அடங்குவது போல் அமைதியாக இருந்த அழகிரி அவ்வப்போது அதிரடியாக ஏதாவது செய்து கொண்டே இருக்கிறார். மத்திய அமைச்சராக டில்லி சென்ற பின்னர் அங்குள்ள நிலைமை அழகிரிக்கு சாதகமாக இருக்கவில்லை. கேள்வி நேரங்களின் போது அமைச்சர்கள் ஆங்கிலத்தில் பதிலளிக்க வேண்டும். ஆங்கிலத்தில் அவ்வளவு புலமை இல்லாமையினால் கேள்விக்குப் பதிலளிப்பதை அழகிரி தவிர்த்து வந்தார். தமிழில் பதிலளிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப் பெற்றது. சபாநாயகரும் இப்பிரச்சினையில் அதிக கவனம் எடுத்தார்.
டில்லியில் அரசியல் செய்வதற்கு அழகிரி தகுதியற்றவர் என்ற பிரசாரம் ஒருபுறத்தில் முடுக்கி விடப்பட்டது. அழகிரி டில்லியில் சாதிப்பார் என்று முதல்வர் கருணாநிதி முழு நம்பிக்கையுடன் இருந்தார். ஸ்டாலினுக்கு கட்சித் தலைமைப் பதவி வழங்கும் சந்தர்ப்பம் நெருங்குகையில் முதல்வர் கலைஞரைத் தவிர வேறு யாரையும் தலைவராக ஏற்க மாட்டேன் என்று அதிரடியாகப் பேட்டியளித்தார் அழகிரி. இந்தப் பரபரப்பு அடங்குவதற்கு முன் தலைவர் பதவிக்குப் போட்டியிடப்போவதாக அதிரடியாக அறிவித்துள்ளார்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் தெரிவு செய்வது எப்படி என்று கட்சியின் யாப்பில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. கட்சியின் யாப்பின் பிரகாரம் தேர்வு செய்யப்படுபவரை தலைவராக ஏற்றுக் கொள்ள வேண்டியது கட்சியின் உறுப்பினர்களின் தலையாய கடமை. கருணாநிதியைத் தவிர வேறு ஒருவர் கட்சித் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டால் கட்சியின் உறுப்பினர்கள் அனைவரும் அவரை ஏற்றுக் கொள்ள வேண்டும். கருணாநிதியைத் தவிர வேறு யாரையும் தலைவராக ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்று அழகிரி கூறியது கட்சியின் கட்டுப்பாட்டை மீறிய செயலாகும்.
திராவிட முன்னேற்றக் கழகத்தினுள் ஸ்டாலினுக்குத்தான் செல்வாக்கு அதிகம். ஸ்டாலினுக்குப் பின்னர் அரசியலில் களமிறங்கிய அழகிரி, ஸ்டாலினை முந்தும் வகையில் அதிரடியாக தனது கடமைகளை முன்னெடுத்தார். அழகிரியின் அரசியல் அவதாரம் ஸ்டாலினுக்குப் பல வழிகளிலும் நெருக்கடியைக் கொடுத்தது. தலைமைப் பதவிக்குப் போட்டியிடுவேன் என்று கூறியமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அழகிரியின் அறிவிப்பினால் எதிர்க் கட்சிகள் மகிழ்ச்சியடைந்துள்ளன. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், பாட்டாளி மக்கள் கட்சி ஆகியவற்றின் முக்கியஸ்தர்களை வலை வீசிப் பிடித்தது திராவிட முன்னேற்றக் கழகம். திராவிட முன்னேற்றக் கழகத்தின் இந்த நடவடிக்கையினால் எதிர்க் கட்சிகள் பலமிழந்துள்ளன.
பலமாக இருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தை வீழ்த்துவதற்கு வழி தெரியாது எதிர்க் கட்சிகள் தவித்துக் கொண்டிருக்கையில் அழகிரியின் அதிரடி அறிவிப்பு மகிழ்ச்சியை ஊட்டியுள்ளது.
அழகிரியா? ஸ்டாலினா? என்ற கேள்வி எழும் போது முதல்வர் கருணாநிதியின் பார்வை ஸ்டாலினின் பக்கமே செல்லும் சாத்தியம் உள்ளது. மறைமுகமாகவும் நாசூக்காகவும் தனது நிலைப்பாட்டை பலமுறை முதல்வர் வெளிப்படுத்தி விட்டார். அழகிரிக்கு அது புரியாமல் இல்லை. அழகிரி வெளியேறினால் தென் மாவட்டங்களில் திராவிட முன்னேற்றக் கழகம் பலமிழந்து விடும். கட்சியின் செல்வாக்குடன் அழகிரியின் செல்வாக்கும் இணைத்திருப்பதனால்தான் தென்மாநிலங்களில் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெறுகிறது.
ஸ்டாலின் அழகிரி இருவரும் இணைந்திருந்தால்தான் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெறும். இருவரில் ஒருவர் கட்சியை விட்டு வெளியேறினாலும் திராவிட முன்னேற்றக் கழகம் பலமிழந்து விடும். திராவிட முன்னேற்றக் கழகத்தின் பாரிய வளர்ச்சியை தடுக்க முடியாமல் எதிர்க் கட்சிகள் தடுமாறும் வேளையில் எதிர்க் கட்சிகளுக்குச் சாதகமான நடவடிக்கைகளை அழகிரி முன்னெடுத்துள்ளார்.
2011 ஆம் ஆண்டு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இருக்காது என்று சூளுரைத்த அழகிரி, தற்போது திராவிட முன்னேற்றக் கழகத்தை பலவீனப்படுத்தி உள்ளார். தலைமைப் பதவி கிடைக்கவில்லை என்றால் கட்சியில் இருந்து வெளியேறி திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எதிராகச் செயற்படுவார் அழகிரி.
திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து எம். ஜி. ஆர்., வைகோ ஆகியோர் வெளியேறிய போது கழகம் பலவீனமடைந்தது. எம். ஜி. ஆரின் வெளியேற்றம் பெரும் பாதிப்பினை ஏற்படுத்தியது. எம். ஜி. ஆர். உயிரோடு இருக்கும் வரை திராவிட முன்னேற்றக் கழகம் தலை தூக்கவில்லை. வைகோவின் வெளியேற்றம் திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பெரிதாகப் பாதிக்கவில்லை.
அழகிரியின் அதிரடியான அறிவிப்பு திராவிட முன்னேற்றக் கழகத்துக்குப் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகம் பலவீனமடைந்தால் அதனுடனான கூட்டணி பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டிய நிலைமை காங்கிரஸ் கட்சிக்கு ஏற்படலாம். காங்கிரஸுடன் கூட்டணி சேர்வதற்கு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும், தேசிய முன்னணி திராவிடக் கழகமும் ஆர்வம் காட்டுகின்றன. திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து இருக்கும் வரை தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியை ஏற்படுத்த முடியாது என்பது வெளிப்படையானது.
மாறன் சகோதரர்களுடனான பிரச்சினையின் போது திராவிட முன்னேற்றக் கழகம் சிறிது தடுமாறியது. அப்பிரச்சினையும் சமரசம் ஏற்படுவதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தவர் அழகிரி. இப்போது அழகிரியினால் கழகத்துக்குள் பிரச்சினை தோன்ற ஆரம்பித்துள்ளது.
அழகிரியின் தலைமையை ஸ்டாலின் ஏற்க மாட்டார். ஸ்டாலினின் தலைமையை அழகிரி விரும்ப மாட்டார். வாரிசா? கழகமா? என்ற இரு தலைக் கொள்ளி எறும்பான நிலையில் உள்ளார் முதல்வர் கருணாநிதி.
வர்மா
வீரகேசரிவாரவெளியீடு 11/04/10

Saturday, April 10, 2010

உலகக்கிண்ணம்2010


குழு H
ஸ்பெய்ன், சிலி, சுவிட்ஸர்லாந்து, ஹொண்டூராஸ் ஆகிய நாடுகள் குழு எச் இல் உள்ளன. 1980ஆம் ஆண்டு அரை இறுதி வரை முன்னேறிய ஸ்பெய்ன் சுவீடனிடம் தோல்வி அடைந்து நான்காவது இடத்தைப் பிடித்தது. உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் சாதனை படைக்கக் காத்திருக்கும் ஸ்பெய்ன் 1642 புள்ளிகளுடன் தர வரிசையில் முதலாவது இடத்தில் உள்ளது. 12 தடவை உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடிய ஸ்பெய்ன் 49 போட்டிகளில் விளையாடி 22 போட்டிகளில் வெற்றி பெற்று 12 போட்டிகளைச் சமப்படுத்தி 15 போட்டிகளில் தோல்வி அடைந்தது. இந்தக் குழுவில் இருந்து ஸ்பெய்ன் முதலிடத்தைப் பெற்று இரண்டாவது சுற்றுக்குத் தெரிவாகிவிடும். இரண்டாவது இடத்தைப் பிடிக்க சிலியும் சுவிட்ஸர்லாந்தும் கடுமையாகப் போராடும்.
971 புள்ளிகளுடன் தர வரிசையில் 14ஆவது இடத்தில் உள்ளது சிலி. ஏழு உலகக் கிண்ணப் போட்டிகளில் பங்குபற்றியது. 25 போட்டிகளில் விளையாடிய சிலி ஏழு போட்டிகளில் வெற்றி பெற்று ஆறு போட்டிகளைச் சமப்படுத்தி 12 போட்டிகளில் தோல்வி அடைந்தது.
968 புள்ளிகளுடன் தர வரிசையில் 15ஆவது இடத்தில் உள்ள சுவிட்ஸர்லாந்து எட்டு உலகக் கிண்ணப் போட்டிகளில் பங்குபற்றியது. 26 போட்டிகளில் விளையாடிய சிலி எட்டு வெற்றியைப் பெற்று ஐந்து போட்டிகளைச் சமப்படுத்தி 13 போட்டிகளில் தோல்வி அடைந்தது.
776 புள்ளிகளுடன் தர வரிசையில் 35ஆவது இடத்தில் உள்ள ஹொண்டூராஸ் ஒரே ஒரு தடவை மட்டும் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் பங்குபற்றியது. மூன்று போட்டிகளில் விளையாடிய ஹொண்டூராஸ் இரண்டு போட்டிகளை சமப்படுத்தி ஒரு போட்டியில் தோல்வி அடைந்தது.
ஜூன் 16ஆம் திகதி நெல்ஸ்பிரிட்டில் ஹொண்டூராஸ், சிலி ஆகியவற்றுக்கிடையேயான போட்டி நடைபெறும். அதே நாள் டேர்பனில் ஸ்பெய்னும் சுவிட்ஸர்லாந்தும் மோதுகின்றன. ஜுலை 21ஆம் திகதி நெல்சன் மண்டேலா மைதானத்தில் சிலிக்கும் சுவிட்ஸர்லாந்துக்கும் இடையிலான போட்டியும் அதே நாள் ஜோஹனஸ்பேர்க்கில் ஸ்பெயினுக்கும் ஹொண்டூராஸுக்கும் இடையேயான போட்டியும் நடைபெறும். ஜூன் 25ஆம் திகதி பெட்ரோரியாவில் சிலியும் ஸ்பெய்னும் மோதுகின்றன. அதே நாள் புளூம்பொன்றில் சுவிட்ஸர்லாந்தும் ஹொண்டூராஸும் மோதுகின்றன.
ரமணி
மெட்ரோநியூஸ்

Friday, April 9, 2010

உலகக்கிண்ணம்2010


குழு "G
பிரேஸில், போர்த்துக்கல், ஐவொரிகா, வடகொரியா ஆகிய நாடுகள் குழு ஜி யில் உள்ளன. இந்தக் குழுவில் உள்ள மிகப் பலம் வாய்ந்த நாடான பிரேஸில் முதலிடம் பிடிக்கும். போர்த்துக்கல் இரண்டாவது இடத்தைப் பெறும். இரண்டாவது சுற்றில் விளையாட பிரேஸிலும் போர்த்துக்கலும் தகுதி பெறும்.
ஐந்து முறை உலகக் கிண்ண உதைபந்தாட்ட சம்பியனான பிரேஸில் ஆறாவது முறை உலகக் கிண்ணத்தைப் பெறும் நம்பிக்கையுடன் உள்ளது. 2002ஆம் ஆண்டு ஜேர்மனியையும் 1994ஆம் ஆண்டும் 1970ஆம் ஆண்டும் இத்தாலியையும் 1962ஆம் ஆண்டு செக்கஸ்லோவியாவையும் 1958ஆம் ஆண்டு சுவீடனையும் இறுதிப் போட்டியில் வென்று உலகக் கிண்ண சம்பியனானது பிரேஸில்.
1998ஆம் ஆண்டு பிரான்ஸுடனும் 1950ஆம் ஆண்டு உருகுவேயுடனும் இறுதிப் போட்டியில் விளையாடி தோல்வி அடைந்தது. 1978ஆம் ஆண்டு இத்தாலியையும் 1938ஆம் ஆண்டு சுவீடனையும் தோற்கடித்து மூன்றாம் இடத்தைப் பிடித்தது. 1974ஆம் ஆண்டு போலந்துடன் தோல்வி அடைந்து நான்காம் இடத்தைப் பிடித்தது.
1594 புள்ளிகளுடன் தர வரிசையில் இரண்டாம் இடத்தில் உள்ள பிரேஸில் இதுவரை நடைபெற்ற 18 உலகக் கிண்ணப் போட்டிகளில் விளையாடி சாதனை படைத்துள்ளது. 92 போட்டிகளில் விளையாடிய பிரேஸில் 64 போட்டிகளில் வெற்றி பெற்று 14 போட்டிகளை சமப்படுத்தி 14 போட்டிகளில் தோல்வி அடைந்தது.
2006ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டியில் அரையிறுதி வரை முன்னேறிய போர்த்துக்கல் ஜேர்மனியிடம் தோல்வி அடைந்து நான்காவது இடத்தைப் பிடித்தது. 1201 புள்ளிகளுடன் ஆறாவது இடத்தில் உள்ள போர்த்துக்கல் நான்கு முறை உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடியது. 19 போட்டிகளில் விளையாடிய போர்த்துக்கல் 11 போட்டிகளில் வெற்றி பெற்று ஒரு போட்டியை சமப்படுத்தி ஏழு போட்டிகளில் தோல்வி அடைந்தது.
874 புள்ளிகளுடன் தர வரிசையில் 22ஆவது இடத்தில் உள்ள ஐவொரிகா ஒரே ஒரு முறை மட்டும் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடியது. மூன்று போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியில் வெற்றி பெற்று இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்தது.
325 புள்ளிகளுடன் தர வரிசையில் 102ஆவது இடத்தில் உள்ள வடகொரியா ஒரு முறை உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடியது. நான்கு போட்டிகளில் விளையாடிய வடகொரியா ஒரு போட்டியில் வெற்றி பெற்று ஒரு போட்டியை சமப்படுத்தி இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்தது.
ஜூன் மாதம் 15ஆம் திகதி போட் எலிஸபெத்தில் உள்ள நெல்சன் மண்டேலா மைதானத்தில் ஐவொரிக்காவும் போர்த்துக்கலும் விளையாடுகின்றன. அதே நாள் ஜோஹன்னஸ்பேர்க்கில் பிரேஸிலும் வடகொரியாவும் மோதுகின்றன. ஜூன் 20ஆம் திகதி ஜோஹன்னஸ் பேர்க்கில் பிரேஸிலும் ஐவொரிக்காவும் சந்திக்கின்றன.
ஜூன் 21ஆம் திகதி கேப்டவுனில் போர்த்துக்கலும் வடகொரியாவும் விளையாடுகின்றன. ஜூன் 25ஆம் திகதி டேர்பனில் பிரேஸிலும் போர்த்துக்கலும் மோதும் போட்டியைக் காண உதைபந்தாட்ட இரசிகர்கள் ஆவலாக உள்ளனர். அதே நாள் நெல்ஸ் பிரிட்டில் கொரியாவும் ஐவொரிக்காவும் மோதுகின்றன.

ரமணி
மெட்ரோநியூஸ்

Sunday, April 4, 2010

எழுந்தது பா.ம.க வீழ்ந்தது அ.தி.மு.க‌


பென்னாகரம் இடைத் தேர்தலில் எதிர்பார்த்தது போன்று திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். பென்னாகரம் இடைத் தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை மூன்றாவது இடத்துக்குத் தள்ளிய பாட்டாளி மக்கள் கட்சி, இரண்டாவது இடத்தைப் பிடித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பென்னாகரம் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர்களும் தொண்டர்களும் பம்பரமாகச் சுழன்று தேர்தல் பிரசாரம் செய்ததற்கு கைமேல் பலன் கிடைத்துள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து போட்டியிட்டு படுதோல்வி அடைந்த பாட்டாளி மக்கள் கட்சிக்கு பென்னாகரம் இடைத் தேர்தல் முடிவு தெம்பை அளித்துள்ளது. பென்னாகரத்தில் இரண்டாம் இடத்தைப் பிடிப்பது பாட்டாளி மக்கள் கட்சியா அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமா என்ற போட்டியே மேலோங்கி இருந்தது. பென்னாகரத்தில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை மூன்றாவது இடத்துக்குத் தள்ளியதன் மூலம் வன்னியர் சமூகத்தின் தலைவர் என்பதை டாக்டர் ராமதாஸ் நிரூபித்துள்ளார்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய இரண்டு கட்சியினாலும் ஒதுக்கப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் எதிர்காலம் இனி அவ்வளவுதான் என்று நினைத்தவர்களை பென்னாகரம் இடைத்தேர்தல் முடிவு சிந்திக்கத் தூண்டியுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் இணைந்து தேர்தலில் போட்டியிட்டிருந்தால் சில வேளை வெற்றி பெற்றிருக்கலாம். பேரம் பேசும் பலத்தை இழந்திருந்த பாட்டாளி மக்கள் கட்சி பேரம் பேசும் வலுவைப் பெற்றுள்ளது.
திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் 88,699 வாக்குகளையும் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் 41,285 வாக்குகளையும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் 26,787 வாக்குகளையும் தேசிய முற்போக்கு திராவிட கழக வேட்பாளர் 11406 வாக்குகளையும் பெற்றனர். திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் 36,384 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
காங்கிரஸ் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் ஆகியவற்றின் துணையுடன் திராவிட முன்னேற்றக் கழகம் போட்டியிட்டது. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், மார்க்சியஸ்ட்கட்சி, கம்யூனிஸ்ட்கட்சி ஆகியவற்றின் துணையுடன் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் போட்டியிட்டது. எந்தவொரு கட்சியின் துணையும் இன்றி தனித்து இடைத் தேர்தலில் போட்டியிட்ட பாட்டாளி மக்கள் கட்சி இரண்டாவது இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளது. பென்னாகரத்தில் வன்னியர் அதிகமாக இருப்பதாலும் பாட்டாளி மக்கள் கட்சியின் கோட்டை என்பதாலும் பாட்டாளி மக்கள் கட்சி சாதனை செய்துள்ளது.
பென்னாகரத்தில் தோல்வி அடைந்த வேட்பாளர்களில் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளரைத் தவிர ஏனைய அனைவரும் கட்டுப்பணத்தை இழந்துள்ளனர். எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட கட்சி, தமிழகத்தை ஆட்சி செய்த கட்சி, தமிழகத்தில் எதிர்க்கட்சி என்ற பெருமைகளைக் கொண்ட அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் கட்டுப் பணத்தை இழந்தது தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு சிம்ம சொப்பனமாக இருந்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 2001 ஆம் ஆண்டுக்குப் பின்னர் சந்தித்த சகல தேர்தல்களிலும் தோல்வியடைந்து மிக மோசமான நிலையை எட்டியுள்ளது.
எம்.ஜி.ஆர். இருக்கும் வரை தோல்வியையே சந்திக்காத அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஜெயலலிதாவின் தலைமையில் படுபாதாளத்தில் வீழ்ந்துள்ளது. தோல்விக்கான காரணத்தைக் கண்டறிந்து கட்சியை வளர்ப்பதில் ஜெயலலிதா கவனம் செலுத்துதல் வேண்டும். கட்சியை வளர்ப்பதற்குரிய ஏற்பாட்டை ஜெயலலிதா செய்யத் தவறினால் கட்சியில் இருக்கும் பலர் திராவிட முன்னேற்றக் கழகம் விரித்திருக்கும் வலையில் தாமாகவே வீழ்ந்து விடுவார்கள்.
பென்னாகரம் இடைத் தேர்தலில் வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் இருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு அழகிரியின் பேட்டி சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. முதல்வர் கருணாநிதிக்குப் பின்னர் கட்சியின் தலைவர் ஸ்டாலின் தான் என்பதை இரண்டாம் கட்டத் தலைவர்கள் அனைவரும் ஏற்றுக் கொண்டுள்ளனர். இந்த நிலையில் தமிழக சஞ்சிகை ஒன்றுக்குப் பேட்டி வழங்கிய அழகிரி கருணாநிதியைத் தவிர வேறு யாரையும் தலைவராக ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்று கூறியுள்ளார். அழகிரியின் இந்தப் பேட்டியின் மூலம், அடங்கிப்போயிருக்கும் வாரிசுப் பிரச்சினை மீண்டும் தலை தூக்கி விட்டதோ என்ற சந்தேகம் அரசியல் அரங்கில் எழுந்துள்ளது.
ஸ்டாலினின் தலைமையை அழகிரி ஏற்றுக் கொள்ள மாட்டார் என்ற கருத்து நிலவுகிறது. அழகிரி பக்கமா ஸ்டாலின் பக்கமா தமிழக முதல்வர் நிற்பார் என்ற கேள்வி அவ்வப்போது எழுவதுண்டு. இந்தக் கேள்வி எழும்போதெல்லாம் பட்டும் படாமலும் பதிலளித்து தப்பி விடுவார் முதல்வர் கருணாநிதி.
அழகிரியின் பேட்டி பற்றி பத்திரிகையாளர்கள் வினவியபோது, அது அழகிரியின் கருத்து என்று முதலில் கூறிய முதல்வர் கருணாநிதி, கட்சியின் தலைவரை நியமிப்பது தனி ஒருவரின் முடிவு அல்ல, கட்சியின் தலைவரை கட்சிதான் தீர்மானிக்கும் என்று கூறியுள்ளார். ""நானோ அழகிரியோ கட்சித் தலைவரை நியமிக்க முடியாது'' என்று நாசூக்காக பதிலளித்துள்ளார்.
கட்சிக்குள் ஸ்டாலினுக்குத்தான் செல்வாக்கு அதிகம். ஆகையினால் ஸ்டாலின் தலைவராவது உறுதியென்பதை மறைமுகமாக உணர்த்தி உள்ளõர் முதல்வர் கருணாநிதி.
பென்னாகரம் இடைத் தேர்தல் வெற்றியின் மூலம் காங்கிரஸ் கட்சிக்குள் இருக்கும் திராவிட முன்னேற்றக் கழக எதிர்ப்பாளர்கள் கொஞ்சம் அடங்கிப் போயுள்ளனர். தமிழகத்தில் தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும் என்ற கனவில் இருக்கும் காங்கிரஸ்காரர்கள் சிலர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றியினால் கதி கலங்கிப் போயுள்ளனர்.
பென்னாகரத்தில் பணமும் அன்பளிப்பும் தாராளமாக கைமாறப்பட்டதாக சகல கட்சிகளும் குற்றம்சாட்டியுள்ளன.
நாடாளுமன்றத் தேர்தலிலும் தமிழக சட்ட சபைத் தேர்தல்களிலும் வாக்களித்தவர்களை விட அதிகமானவர்கள் இந்த இடைத்தேர்தலில் வாக்களித்துள்ளனர். இடைத் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் வாக்களித்தார்களா அல்லது கட்சிகளின் தூண்டுதல்களினால் வாக்களித்தார்களா என்ற சந்தேகமும் உள்ளது. தேர்தல் விதிமுறைகளை சகல கட்சிகளும் மீறியுள்ளதாக பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன.
மீண்டும் எழுந்துள்ள பாட்டாளி மக்கள் கட்சி, பலமானதொரு கட்சியுடன் இணைந்து போட்டியிட்டால் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறும் வாய்ப்பு பிரகாசமாகும். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிலை மிகவும் பரிதாபகரமாக உள்ளது. தோல்விக்கு மத்தியிலும் கட்சியை கட்டுக்கோப்பாக வைத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஜெயலலிதாவுக்கு ஏற்பட்டுள்ளது.
படுபாதாளத்தில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வீழ்ந்ததினால் திராவிட முன்னேற்றக் கழகம் விரிக்கும் வலையில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்கள் விழாமல் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ஜெயலலிதாவுக்கு உள்ளது.

வர்மா
வீரகேசரிவாரவெளியீடு 04/04/10