Thursday, September 10, 2015

தேவரையாளி இந்துக்கல்லூரி ஸ்தாபகர் சைவப்பெரியார் சூரன்

                                பல்லவி
சூரன் புகழ் மண்ணில் நிலைத்திருக்கும் 
சூரிய சந்திரர் போல் மிளிர்ந்திருக்கும்
சைவமும் தமிழும் சுவைத்திருக்கும்
சரித்திரம் அதிலே பதிந்திருக்கும் {சூரன்}
                            அனுபல்லவி
தில்லைச் சிதம்பரத்தில் கோயில் கண்டோம்
திருநடம் புரிகின்ற கோல‌ம் கண்டோம்
ப‌ள்ளித்த‌ல‌ம் அருகே சோதி க‌ண்டோம்
வெள்ளி தோறும் உரைக்கும் நீதி கேட்டோம் {சூர‌ன்}
                                     ச‌ர‌ண‌ம்
க‌ல்விக் க‌ட‌ன் தீர்த்த‌ செல்ல‌க் க‌ணேச‌ன்
ந‌ன்றிக் க‌ட‌ன் என்றும் நிமிர்ந்திருக்கும்
சான்றோர்க‌ள் வாழ்வினுக்காய் ச‌ரித்திர‌ம் உருவாக்கி
நீண்ட‌ ப‌ய‌ண‌த்தால் வ‌ழி வ‌குத்தாய் {சூர‌ன்}
எண்ணும் எழுத்தும் த‌ந்து க‌ண் திற‌ந்தாய்
ஏற்ற‌மிடும் க‌ல்வி ஆற்ற‌ல் த்ந்தாய்
தூற்றும் ச‌மூக‌நிலை மாற்றி வைத்தாய்
போற்றும் அர‌ச‌நிலை ஆக்கி நின்றாய் {சூர‌ன்}
சாதிக் கொடுமை க‌ண்டு த‌ள‌ர‌வில்லை
சம‌த்துவ‌ம் வேண்டி எங்கும் அலைய‌வில்லை
நீதிக்காய் துணை நாடித் திரிய‌வில்லை
நிமிர்ந்த‌ ந‌டைப்பார்வை குறைய‌வில்லை {சூர‌ன்}
அண்ண‌மார் ஆல‌ய‌த்தின் ப‌லி த‌டுக்க‌
உந்த‌ன் த‌லை நீட்டியே கொலை த‌டுத்தாய்
அந்த‌ண‌ர் செய்கிரியை இல்ல‌ங்க‌ளில்
அனைத்தும் நிக‌ழ்த்திடுவாய் த‌மிழிசையில் {சூர‌ன்}
சி.செக‌ராச‌சிங்க‌ம்
யாதும் 2014

Saturday, September 5, 2015

ரகசிய கமரா



தலைநகரில் நூற்றாண்டு கடந்தும் கம்பீரமாக மிளிரும் அந்த நிறுவனத்தில் சீசீரிவி  பொருத்தும் வேலை மிகமும்முரமாக நடைபெற்றபோது பொதுமுகாமையாளர் சுப்பிரமணியம் வேலையை மேற்பார்வை செய்தார். 

எங்கடை ஒப்பீசிலை ரகசிய கமரா பொருத்த வேணும். அப்பதான் சில உண்மைகளை கண்டு பிடிக்கலாம் ஒன்ப‌தும‌ணிக்கு வ‌ந்து எட்டைரை எண்டு சைன் வைக்கின‌ம். நாலேமுக்காலுக்கே அஞ்சும‌ணி எண்டு சைன் வ‌ச்சிட்டு போகின‌ம்  என எம்டிக்கு ஆலோசனை வழங்கிய பெருமையுடன் வேலையைப்பார்வையிடுகிறார். எழுபத்திரண்டு வயது முடிந்தும் வேலையைவிட மனமில்லாது ஒட்டிக்கொண்டிருக்கிறார் சுப்பிரமணியம்.

நவீன தொழில்நுட்பம் எல்லாம் தனக்குத்தெரியும் என காட்டிக்கொள்வதில் அலாதி பிரியம் உள்ளவர். உயர் அதிகாரிகளுக்கு கொம்பியூற்றர் கொடுத்தபோது தனக்கும் வேண்டும் என அடம் பிடித்து வாங்கியவர்.சேவீஸ் செய்வ‌த‌ற்காக‌ அவ‌ர‌து பிசியை ஐசி டிப்பாட்ம‌ன்ற் ஊழிய‌ர் கொண்டுபோன அன்று இன்ர‌நெற்றில் செய்தி பார்த்த‌தாக‌ க‌தை விட்ட‌வ‌ர். கொம்பியூட்ட‌ர் வைர‌ஸ் ப‌ற்றி  ஆலோச‌னை செய்த‌போது கிள‌வுஸ் போட்டா வைர‌ஸ் பிடிக்காது என‌ ஆலோச‌னை கூறிய‌வ‌ர்.சீசீரிவி என‌ சொல்ல‌த்தெரியாது ர‌க‌சிய‌ க‌ம‌ரா என‌ அவ‌ர் சொன்ன‌தால்  அந்த‌ அலுவ‌ல‌க‌த்தில் உள்ள‌ அனைவ‌ரும் ர‌க‌சிய‌ க‌ம‌ரா என்றுதான் சொல்கிறார்க‌ள்.

 அலுவ‌ல‌க‌த்தைச்சுற்றி ப‌ன்னிர‌ன்டு இட‌ங்க‌ளில் சீசீரிவி பொருத்த‌ப்ப‌ட்ட‌து.உய‌ர் அதிகாரிக‌ள் அத‌னைப்பார்க்க‌ வ‌ச‌தி செய்து கொடுக்க‌ப்ப‌ட்ட‌து. சுப்பிர‌ம‌ணிய‌த்தின் கொம்பியூட்ட‌ரில் ப‌ன்னிர‌ண்டு ர‌க‌சிய‌ க‌ம‌ராக்க‌ளையும் எப்ப‌டி பார்ப்ப‌து என‌ அத‌னைப் பொருத்திய‌வ‌ர் சொல்லிக்கொடுத்தார். சுமார் ப‌தினைந்து நிமிட‌ங்க‌ளாக‌ ர‌க‌சிய‌ க‌ம‌ராக்களை வைத்த‌க‌ண் வாங்காது பார்த்தார் சுப்பிர‌ம‌ணிய‌ம்.
தனது யோசனையை எம்டி நிறைவேற்றியதில் கொஞ்சம் தலைக்கனம் கூடியது. அலுவலகத்தில் வேலை செய்பவர்களையும் வெட்டியாக பொழுதைப்போக்குபவர்களையும் இனம்காணலம் என மனதில் நினைத்துக்கொண்டு உன்னிப்பாக அவதானித்தார்.

அந்த நிறுவனத்தை நம்பி வாழும் நான்கு நாய்களும் ஓடிப்பிடித்து விளையாடின. இரண்டு மூன்று காகங்கள் குறுக்கு மறுக்காக பறந்தன.ஒருசில இருக்கைகள் காலியாக இருந்தன. சிலர் தேவை இல்லாத இடத்தில் இருந்து அரட்டை அடித்தனர். நிறுவனத்துக்கு வெளியே பூட்டப்பட்ட கமரா மட்டும் சுறுசுறுப்பாக இயங்கியது.  ஆட்டோக்களும் மோட்டார் சைக்கிள்களும் சீறிப்பாய்ந்தன. சிற்றூழியர் குமார் வெளியே போனார். உடனே காட் ரூமுக்கு தொலைபேசி அழைப்பு எடுத்து குமார் ஏன் வெளியே போனார் எனக்கேட்டார். பதில் தெரியாத செக்கிரட்டி தடுமாறினார். குமார் உள்ளே வந்ததும் தன்னை வந்து பார்க்கும்படி கூறிவிட்டு தொலைபேசியை வைத்தார்.

ஐந்து நிமிட‌ங்க‌ளின் பின்ன‌ர் குமார் உள்ளே வ‌ந்த‌தும் செக்கிர‌ட்டி ஏதோ சொல்ல‌ குமார் த‌லையை ஆட்டினார். ஜீஎம் சுப்பிர‌ம‌ணிய‌ம் த‌ன‌து கொம்ப்பியூட்ட‌ரில் எல்லாவ‌ற்றையும் பார்த்தார்.குமார் த‌ன்னை நோக்கி வ‌ருவ‌தை க‌ண்ணாடிக்க‌த‌வினூடாக‌ப்பார்த்த‌து உஷாரானார். க‌த‌வைத்திற‌ந்து குமார் உள்ளே வ‌ந்த‌தும்.

" குமார்  ஆரைக்கேடு வெளியே போன‌னி.கண்டபடி வெளியே போகக்கூடாது எண்டு உங்க‌ளுக்கு எத்தினைத‌ர‌ம் சொன்ன‌து. கேற்பாஸ் இல்லாம‌ல் எப்பிடி வெளியே போனாய்? ஆர் போக‌ச்சொன்ன‌து?" என‌ச் சீறிப்பாய்ந்தார்.

“எச் ஆர் தான் வெத்திலை வாங்கிய‌ர‌ச்சொன்ன‌வ‌ர்" என்றார் குமார்.

"ச‌ரி ச‌ரி இனி கேற்பாஸ் இல்லாம‌ல் வெளியே போக‌க்கூடாது" என‌க்கூறி அனுப்பினார்.   எச் ஆரிட‌ம் ஜீஎம் எதுவும் கேட்க‌ மாட்டார் என்ப‌தை உண‌ர்ந்த‌ குமார் ம‌ன‌துக்குள் சிரித்துக்கொண்டு வெளியே போனார். க‌ரும‌மே க‌ண்ணாக‌ மீண்டும்  ப‌ன்னிர‌ண்டு சீசீரிவிக்க‌ளையும் மாறிமாறிப்பார்க்க‌ ஆர‌ம்பித்தார். அப்போது தொலைபேசி ஒலித்த‌து அநாய‌ச‌மாக‌ ரிசீவ‌ரை காதில் வைத்த‌ப‌டி ஹ‌லோ என்றார். எதிர்முனையில் எம்டியின் குர‌ல் ஒலித்த‌து.ப‌த‌றிய‌ப‌டி யெஸ் சேர், யெஸ் சேர். ஓகே சேர் என்க்கூறிய‌ப‌டி ரிசீவ‌ரை வைத்துவிட்டு எம்டியின் க‌பினை நோக்கி ஓட்ட‌மும் ந‌டையுமாக‌ சென்றார்.

 எம்டியின் முன்னால் இருந்த வெள்ளைக்கார பெண்மணி சுப்பிரமணியத்தைப்பார்த்து சினேகமாகச் சிரித்தார். சுப்புரமணியமும் சிரித்தபடி எம்டியை நோக்கினார்.

"ஜிஎம் ஹோட்டல் பரடைஸில் இவவை கொண்டு போய் விடமுடியுமா?" என எம்டி கேட்க‌

பெருமாள் கோயில் மாடு போலதலையாட்டியபடி "எத்தினை மணிக்கு?" எனக்கேட்டார் சுப்பிரமணியம்.ஐந்து ம‌ணிக்கு என‌ எம்டி கூறிய‌தும் ஐந்து ம‌ணிக்கா என‌க்கேட்க‌ வாயெடுத்துவிட்டுஅமைதியானார். என்ரை ஃபிர‌ண்டின்ரை பேத்டேக்கு போக‌வேணும் ஐஞ்சும‌ணிக்கு வீட்டுக்கு வ‌ந்திட‌ வேணும் என‌ ம‌னைவி இட்ட‌ க‌ட்டளை ம‌னதில் வ‌ந்து போன‌து. எம்டியின் க‌பினை விட்டு வெளியேறிய‌ சுப்பிர‌ம‌ணிய‌ம் அவ‌ச‌ர‌மாக‌ ம‌னைவிக்கு அழைப்பெடுத்து ஐஞ்சு ம‌ணிக்கு அவ‌ச‌ர‌ மீற்றிங் இருக்கு ஆறும‌ணிக்கு க‌ட்டாய‌ம் வ‌ருகிறேன் என‌ கெஞ்சிக்கேட்டார்.

ம‌ணிக்கூட்டில் உள்ள‌ விநாடி முள்ளு மிக‌ மிக‌ மெதுவாக‌ அசைவ‌துபோல‌ சுப்பிர‌ம‌ணிய‌த்துக்கு தோன்றிய‌து. எம்டி  போட்ட‌ போடுகையால் ர‌க‌சிய‌க‌ம‌ராவை பார்ப்ப‌தையும் ம‌ற‌ந்து விட்டார்.விரைவாக ஐந்தும‌ணி வ‌ராதா என‌ அவ‌ர் ம‌ன‌ம் ஏங்கிய‌து.ஐந்தும‌ணியாகிய‌தும் பாக்கையும் தூக்கிக்கொண்டு எம்டியின் க‌பினை நோக்கிச்சென்றார் சுப்பிர‌ம‌ணிய‌ம்.எம்டியும் வெள்ளைக்கார‌ பெண்ம‌ணியும் கதைத்த‌ப‌டி வ‌ந்த‌ன‌ர்.

 கார்பாக்கில் எம்டியுட‌ன் கைலாகு கொடுத்து விடைபெற்றார் வெள்ளைக்கார‌ பெண்ம‌ணி. சுப்பிர‌ம‌ணிய‌த்தின் காரின் முன்க‌த‌வைத் திற‌ந்து வெள்ளைக்கார‌ பெண்ம‌ணியை ஏற்றிவிட்டு க‌த‌வைச்சாத்தி கைகாட்டினார் எம்டி. சுப்பிர‌ம‌ணிய‌ம் காரை செலுத்தத் தொடங்கினார்.
ஜிம் வாரார் என‌க்கூறிய‌ப‌டி பிர‌தான‌ வாயிலை ஒரு செக்கிர‌ட்டி திற‌ந்தார். ஓஐசியும் ம‌ற்ற‌வ‌ர்க‌ளும் எழுந்து நின்று ச‌லூட் அடித்த‌ன‌ர்.

சுப்பிர‌ம‌ணிய‌த்தின் கார் பிர‌தான‌ வாயிலைத்தாண்டி வெளியேறிய‌தும் வீதியால் வேக‌மாக‌ வ‌ந்த‌ ஆட்டோ ஒன்று கிரீச்சிட்டு நின்ற‌து. ப‌த‌ற்ற‌மடைந்த‌ சுப்பிர‌ம‌ணிய‌ம் பிரேக்கில் கால்வைத்தார்.ஒருமுறை குலுங்கிய‌பின் கார் நின்ற‌து.ஆட்டோவில் இருந்து குதித்த‌ பெண் சுப்பிர‌ம‌ணிய‌த்தின் காரை நோக்கி ஓடினாள். செக்கிர‌ட்டியை த‌ள்ளி விழுத்திய‌ பெண் கார்க‌ண்ணாடியில் அடித்தாள்.
"அஞ்சும‌ணிக்கு என்னை ஏத்த‌ வ‌ர‌மாட்டாய்.வெள்ளைக்காரியுட‌ன் சுத்த‌ப்போறியோ" என‌க்கேட்ட‌ப‌டி  செருப்பைக்க‌ழற்றி கார்க‌ண்ணாடியில் அடித்தாள் சுப்பிர‌ம‌ணிய‌த்தின் ம‌னைவி. பிர‌தான‌ வாயிலில் அச‌ம்பாவித‌ம் ந‌ட‌ப்ப‌தால் பின்னால் சென்ற  எம்டி காரை நிறுத்தினார். பிரதான‌‌ வாயில் இழுத்து மூட‌ப்ப‌ட்ட‌து. கார் கண்ணாடியை‌ இற‌க்கிய‌ எம்டி என்ன‌ ந‌ட‌க்கிற‌தென‌க்கேட்டார். ஜிஎம்மின் ம‌னைவி ஜிஎம்மை ச‌ந்தேக‌ப்ப‌டுகிறார் என‌ப்ப‌தில் வ‌ந்த‌து.

ஆச்ச‌ரிய‌த்துட‌ன் புருவ‌த்தை உய‌ர்த்தி என்ன‌ என‌க்கேட்டார் எம்டி.

" ஐந்தும‌ணிக்கு வெளியே போக‌வேண்டும் என ஜிஎம்மின் ம‌னைவி சொல்லியுள்ளார். ஐந்து ம‌ணிக்கு மீற்றிங் இருக்கு ஆறும‌ணிக்கு வ‌ருகிறேன் என‌ ஜிஎம் கூறினார். ஏதோ ச‌ந்தேக‌ப்ப‌ட்டு இங்கு வ‌ந்த‌ அவ‌ரின் ம‌னைவி வெள்ளைக்கார‌ பொம்பிளையுட‌ன் சுத்துற‌‌துதான் மீற்றிங்கா என‌க் கேட்டார்"  என‌ விள‌க்க‌மான‌ ப‌தில் வ‌ந்த‌து.

ஐரி  டிப்பாட்மென்ருக்கு அழைப்பெடுத்த‌ எம்டி வெளியிலே என்ன‌ ந‌ட‌க்குது என‌க்கேட்டார்.

" ஜிஎம்மின் ம‌னைவி வ‌ந்து ஏதோ ச‌ன்டிபிடித்தார் அங்கு நின்ற‌வ‌ர்க‌ள் ஜிஎம்மின் ம‌னைவிய‌ ஆட்டோவில் ஏற்றினுப்பி விட்டார்க‌ள். ஜிஎம்மின் காரும் போய்விட்ட‌து " என‌ அங்கிருந்து ப‌தில் வ‌ந்த‌து.

"வெளியிலை ந‌ட‌ந்த‌தெல்லாம் சீசீரிவியை இருக்குமா?"
"ஓம் சேர் எல்லாம் கிளிய‌ரா இருக்கு?"

"வெளியிலை ந‌ட‌ந்த‌ ச‌ண்டையை டிலீட் ப‌ண்ணிவிடுங்கோ" எம்டி உத்த‌ர‌விட்டார்.


சூர‌ன்.ஏ.ர‌விவ‌ர்மா


 காற்றுவெளி 2015