Thursday, August 31, 2023

தெரிந்த சினிமா தெரியாத சங்கதி - 79

தமிழ்த் திரை உலகில் தெளிவான  உச்சரிக்கும் நடிகைகளில் பண்டரிபாயும் ஒருவர். ஆரம்பத்தில் கதாநாயகியாக  ரசிகர்களின் மனதில்  நின்ற பண்டரிபாய்,  பிற்காலத்தில் பராசக்தியில் சிவாஜியின் ஜோடியாக நடித்தவர் . பின்னர்  தெய்வமகனில்  சிவாஜியின் மனைவியாகவும்,  இரட்டை வேடசிவாஜிக்கு அம்மாவாகவும் நடித்தார்.

தேன்மொழியாள்’ பண்டரிபாய் 14 வயதில் நடிக்கத் தொடங்கினார்.ஏழு  மொழிகளில் 1500 க்கு  மேற்பட்ட  படங்களில் நடித்து சாதனை படைத்தார். சிவாஜிகணேசனின் முதல் படமான பராசக்தியில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் என்ற பெருமைக்கு உரியவர் பண்டரிபாய். பிறகு அவருக்கு தங்கையாக, அக்காவாக, அண்ணியாக, அம்மாவாகவும் நடித்தார். பண்டரிபாயின் சொந்த ஊர் கர்நாடக மாநிலத்தில் உள்ள பத்கல் என்ற கிராமம். 1930ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் பிறந்தார். தந்தை ரங்காராவ். தாயார் காவேரிபாய். பண்டரிபாயுடன் உடன் பிறந்தவர்கள் 9 பேர். பண்டரிபாயின் தந்தை ஓவிய ஆசிரியர். என்றாலும் நாடகத்தன் மீது அபார மோகம். எனவே, வேலையை விட்டு விலகி, நாடகக் கம்பனி ஆரம்பித்தார். எனினும் தன் மகள்கள் யாரும் நாடகத்தில் நடிக்கக் கூடாது என்பதில் உறுதி கொண்டிருந்தார்.

நாடகத்துக்கு பதிலாக, மகள்களுக்குக் கதாகாலட்சேபம் கற்றுக் கொடுத்தார். பண்டரிபாய் தன் 10 வயதிலேயே கன்னடத்திலும், மராத்தியிலும் கதாகாலட்சேபம் செய்யக் கூடிய ஆற்றலைப் பெற்றார். இவ்வளவு சிறப்பாக காலட்சேபம் செய்கிற பண்டரிபாய் சினிமாவில் நடித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?” என்று அவரது அண்ணன் நினைத்தார்.

அவருடைய ர் முயற்சியால் “வாணி” என்ற கன்னட படத்தில் ஒரு சிறு வேடத்தில் நடிக்கும் வாய்ப்பு பண்டரிபாய்க்கு கிடைத்தது. ஹரிதாஸ் எம். கே. தியாகராஜ பாகவதர் நடித்த ஹரிதாஸ் மெகாஹிட் படத்தில் பண்டரிபாய்க்கு ஒரு சிறு வேடம் கிடைத்தது. தமிழில் அது தான் அவருக்கு முதல் படம். படத்தின் முதல் காட்சியில் “வாழ்விலோர் திருநாள்” என்று பாடிக் கொண்டே குதிரையில் வருவார் பாகவதர். பெண்களை துரத்துவார். ஒரு ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருக்கும் பண்டரிபாயை விரட்டிக் கொண்டு போவார். அவரை துயில் உரிய முயற்சிப்பார். பிறகு ஒரு மோதிரத்தை பரிசளிப்பார்.

இந்தக் காட்சியில் பண்டரிபாய் நடித்தார். அப்போது அவருக்கு வயது 14 தான்.

பிறகு ஏ. வி. எம். தயாரித்த “வேதாள உலகம்” என்ற படத்தில் காளியாகத் தோன்றினார் பிறகு, வைஜயந்தி மாலா கதாநாயகியாக அறிமுகமான “வாழ்க்கை” படத்தில் இரண்டாவது கதாநாயகியாக பண்டரிபாய் நடிப்பதாக இருந்தது. ஆனால் தமிழில் சரிவர பேச வராததால் அந்த வேடத்தில் டி. கே. எஸ். நாடகக் குழுவைச் சேர்ந்த எம். எஸ். திரவுபதி நடித்தார். “வாழ்க்கை” படம் “ஜீவிதம்” என்ற பெயரில் தெலுங்கில் தயாரிக்கப்பட்ட போது இரண்டாவது கதாநாயகியாக நடித்தார்.பண்டரிபாய்க்கு தமிழ் கற்றுக் கொடுக்க பி. டி. சம்பந்தம் என்ற நடிகரை ஏ. வி. எம். நிறுவனம் ஏற்பாடு செய்தது.  என்றாலும் பண்டரிபாயிடம் இருந்து தமிழ் வார்த்தை தெலுங்கில் தான் வந்தது .பி டி சம்பந்தம் பண்டரிபாயிடமிருந்து தெலுங்கை கற்றுக்கொண்டது தான் மிச்சம் .பின்னர் சகஸ்ரநாமத்திடம் தமிழ் கற்றார் 

விரைவிலேயே தமிழில் அழகாக வசனம் பேச பண்டரிபாய் கற்றுக் கொண்டார்.   சின்ன வேடங்களில் நடித்த படங்களை ஒதுக்கி விட்டுப் பார்த்தால் பண்டரிபாய் முக்கிய வேடத்தில் நடித்த முதல் தமிழ்ப் படம் பராசக்தி தான். அதில் சிறப்பாக நடித்ததுடன் கலைஞரின் வசனங்களை தெளிவாகவும், இனிமையாகவும் பேசி தேன்மொழியாள் என்று போற்றப்பட்டார்.

தொடர்ந்து சிவாஜிகணேசனுடன் பல படங்களில் பண்டரிபாய் நடித்தார். “கண்கள்” படத்தில் தங்கை, “திரும்பிப்பார்” படத்தில் அக்காள், “அந்தநாள்” படத்தில் மனைவி..... இப்படி மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்தார். கன்னட உலகில் ராஜ்குமார் அறிமுகமான முதல் படத்தில் ராஜ்குமாருக்கும் ஜோடியாக நடித்தவர் பண்டரிபாய்.

  தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகர், நடிகைகள் தோன்றி மறைந்தாலும் அவர்களின் புகழ் என்றைக்கும் மாறாமல் காலங்காலமாக நின்னு பேசும். அவர்கள் செய்த சாதனைகள் என்றும் அழியாமல் வரலாற்றில் எழுதி வைக்கப்பட்டிருக்கும். அந்த வகையில் மிகவும் பெருமைக்குரிய நடிகையாக கருதப்படுபவர் நடிகை பண்டரிபாய்.

சிவாஜிகணேசன் அறிமுகமான ‘பராசக்தி’ காலத்திலேயே பண்டரிபாய், தமிழிலும் நடிக்க வந்துவிட்டார். படத்தில் குணசேகரனுக்கும் தங்கை கல்யாணிக்கும்தான் முக்கியத்துவம் என்றாலும் பண்டரிபாய் தன் பாந்தமான நடிப்பால் வெகுவாகவே கவர்ந்திருப்பார். ‘புதுப்பெண்ணின் மனதைத் தொட்டுப் போறவரே...’ என்று பாடி நம் மனங்களையெல்லாம் ஈர்த்திருப்பார்.

பிறகு பல படங்களில் நாயகியாகத்தான் நடித்தார். தமிழில் பாடல்களே இல்லாமல் வந்த முதல் படமான ‘அந்தநாள்’ படத்தில் சிவாஜியின் மனைவியாக நடித்துக் கலக்கியிருப்பார். ‘சிவாஜியைக் கொலை செய்தது யார்?’ என்ற விசாரணையுடன் தொடங்கும் படத்தின் முடிவில், பண்டரிபாய் சொல்லும் வார்த்தைகளும் அட்சரம் பிசகாமல் பேசுகிற தமிழ் உச்சரிப்பும் வசனங்களும் அப்போதே பிரமிக்கவைத்தன.

குணசித்திரக் கதாபாத்திரங்கள் கிடைத்தன. அம்மா கதாபாத்திரத்துக்கு நடிக்க, கண்ணாம்பாவும் எம்.வி.ராஜம்மாவும் ஓய்வு பெற்ற நிலையில், அந்த இடத்தை நிரப்புவதற்கு பண்டரிபாய் பொருத்தமானவர் என தமிழ் சினிமா முடிவு செய்தது. எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி, முத்துராமன், ஜெய்சங்கர் என அறுபதுகளின் மத்தியில் இருந்து தொண்ணூறுகள் வரைக்கும் ‘அம்மா... அம்மா... அம்மா...’ என்றே வாழ்ந்துகாட்டினார் பண்டரிபாய். ‘தெய்வமகன்’ படத்தில் வேறொரு அம்மா. ‘அடிமைப்பெண்’ படத்தில் இன்னொரு முகம் காட்டும் அம்மா. ‘கெளரவம்’ படத்தில் சாந்தமும் பணிவும் கொண்டு புருஷனின் எல்லையை மீறாத, மகன் மீது நேசம் கொண்ட பாவப்பட்ட அம்மா. திருடனாக வந்தவன் காயத்துடன் வந்திருக்க அவனுக்கு அடைக்கலம் கொடுத்து, அவனைக் காப்பாற்றி, பிறகு அவனும் தன் பிள்ளைதான் எனத் தெரியவரும் போது, கலங்கித் தவித்து, ‘காணாமல் போன மகன் கிடைத்துவிட்டான்’ என்கிற பூரிப்பைக் காட்டுகிற அம்மா... என்று பண்டரிபாய் எடுத்துக்கொண்ட அம்மா கதாபாத்திரங்களின் தன்மைக்கேற்ப, தன் உடல்மொழியை மாற்றினார். குரலின் ஏற்ற இறக்கங்களுக்கு உயிர் கொடுத்தார். நிறைய பட விமர்சனங்களில், பண்டரிபாயின் நடிப்பும் தமிழ் உச்சரிப்பும் ரொம்பவே பாராட்டப்பட்டன.

‘நம்நாடு’ படத்தில் பண்டரிபாய் பேசப்பட்டார். ’எங்க வீட்டு பிள்ளை’யில் எம்ஜிஆரின் அக்காவாக, கொடுமைக்கார நம்பியாரின் மனைவியாக பரிதாபப்பட வைத்திருப்பார். ‘வசந்தமாளிகை’ படத்தில் பண்டரிபாயின் நடிப்பும் சிவாஜிக்கும் அவருக்குமான காட்சிகளும் நெகிழவைத்துவிடும். மாலைக்கண் நோயுடன் போராடுகிற சிவாஜிக்கு அம்மாவாக பண்டரிபாய் நடிப்பில் வெளுத்துவாங்கியிருப்பார். ‘நான் வாழவைப்பேன்’ படத்திலும் சிவாஜிக்கு அம்மாவாக, வாழ்ந்திருப்பார். 

எம்ஜிஆருடன் ‘அன்னமிட்ட கை’, ‘இதயக்கனி’, ‘நேற்று இன்று நாளை’ முதலான படங்களில் தன் நடிப்பால் தனி முத்திரை பதித்தார். திருச்சியில் உள்ள ஐயப்பன் கோயிலில் கவிஞர் வாலி எழுதிய பாடல் கல்வெட்டுகளாக பொறிக்கப்பட்டுள்ளது. ஒரு கோயிலில், சினிமாப் பாடல் ஒன்று பொறிக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறை. ரஜினி நடிப்பில், பி.வாசு இயக்கத்தில் உருவான ’மன்னன்’ படத்தையும் பாடல்களையும் எப்படி மறக்கமுடியும்?

இசைஞானி இளையராஜா இசையில், கே.ஜே.ஜேசுதாஸின் குரலில், கால்கள் நடக்க முடியாமல் இருக்க, கைகள் செயலிழந்துவிட... ரஜினிகாந்த் தூக்கிக்கொண்டு கோயிலுக்குச் செல்ல, குளிப்பாட்டிவிட, தலைவாரிவிட... ‘அம்மா என்றழைக்காத உயிரில்லையே...’ என்ற அந்தப் பாடலும் பண்டரிபாயின் நடிப்பும் நம்மை கண்கலங்கச் செய்துவிடும். பார்க்கின்ற ரசிகர்களின் அம்மாக்கள் அங்கே பிம்பமாக, அவரவருக்குத் தெரிந்தார்கள். இன்றைக்கு, அந்தக் காட்சியை கவனித்துப் பார்த்தால், பண்டரிபாயின் முகமும் கண்களும் புன்னகையும் கைகளும் கைவிரல்களும் தனித்தனியே நடித்து, தாய்மையை நமக்குள் தளும்பத்தளும்பக் கொடுத்திருக்கும்!

 

அட்லாண்டாவில் சரணடைந்த ட்ரம்ப் பிணையில் விடுதலை


 ஜோர்ஜியாவில் 2020 தேர்தலை சட்டவிரோதமாக மாற்றியமைக்க திட்டமிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வியாழக்கிழமை அட்லாண்டா சிறையில் சரணடைந்தார்.20 நிமிடங்கள் சிறையில் இருந்த அவர் அவர் $200,000 பிணையில் விடுவிக்கப்பட்டார். அவரது கைதி எண். P01135809.

வ‌ழக்கு விசாரணை மாகாண நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணையின் போது ட்ரம்புக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் இருந்ததால் அவர் கைது செய்யப்படலாம் என்று கருதப்பட்டது.  வழக்கு விசாரணை முடிவுற்ற நிலையில், அவருக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.  இதனையடுத்து ட்ரம்ப் அட்லாண்டா சிறையில் சரணடைந்தார். ட்ரம்ப் உட்பட 18 பேருக்கு எதிராக தேர்தல் முறைகேடு வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

77 வயதான அவர் இந்த ஆண்டு நான்காவது முறையாக கைது செய்யப்பட்டார்.ஃபுல்டன் கவுண்டி சிறையில் அதிகாரிகளால் கைரேகை எடுக்கப்பட்து. அவரது முந்தைய மூன்று கைதுகளைப் போலல்லாமல்  அட்லாண்டாவில் புகைப்படம் எடுக்கப்பட்டு வெளியிடப்பட்டது. புகைப்படத்தில்  முகத்தைக் கடுப்பாக்கி கடும்  கோபத்தில் இருக்கிறார்.ட்ரம்பின் உயரம் 6 அடி 3 அங்கில. நிறை 215 பவுண்ட்.

  2021ம் ஆண்டு நடைபெற்ற  ஜனாதிபதித் தேர்தலில் தேர்தலில் அவர் மீண்டும்  போட்டியிட்டார். ஆனால் வெற்றிபெறவில்லை. இதனையடுத்து அவர் பதவி விலக கூடாது என அவரது ஆதரவாளர்கள் பெரும் போராட்டம் செய்தனர்.  புதிய ஜனாதிபதியாக  ஜோ பைடன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்கவும், புதிய ஜனாதிபதியின்   பதவியேற்பு விழா நடப்பதை தடுக்கவும் ட்ரம்ப் ஆதரவாளர்கள் போராட்டம் செய்தனர். போராட்டங்கள் கலவரமாக மாற்றமடைந்தது.  5 பேர் வரை உயிரிழந்தனர். இது தொடர்பாக பல்வேறு மாகாணங்களில் டிரம்ப்க்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. இப்படியாக ஜார்ஜியா மாகாணத்திலும் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது.

ட்ரம்ப்  சிறைக்குச் செல்வது இது முதல்முறை அல்ல. இதற்கு முன்னர் கடந்த ஜூன் மாதம் தனது பிறந்தநாள் அன்று கூட சிறைக்கு சென்றிருந்தார். வெள்ளை மாளிகையிலிருந்த முக்கிய ஆவணங்களை தனது வீட்டிற்கு கொண்டு வந்ததாக தொடுக்கப்பட்ட குற்றச்சாட்டின் காரணமாக அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.   2024ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் போட்டியிட உள்ள டிரம்ப், தீவிரமான பிரசாரங்களை மேற்கொண்டு வரும் நிலையில் இந்த நீதிமன்ற வழக்கு மற்றும் சிறை தண்டனை இவரது அரசியல் வாழ்க்கைக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

முன்னாள் ஜனாதிபதி  ட்ரம்ப் நியூ ஜெர்சியில் இருந்து வியாழன் பிற்பகல் ஜோர்ஜியாவில் இருந்து  தனது போயிங் 757 விமானத்தில் அட்லாண்டாவிற்குச் சென்றார். அவரது விமானம்  இரவு 7 மணிக்குப் பிறகு அட்லாண்டாவைத் தொட்டாது. காத்திருந்த  ஊடகங்களுக்கு  அசைத்து, கட்டைவிரலை உயர்த்திக் காட்டினா. அவர் விமானத்திலிருந்து கீழே இறங்கி 14 மைல் தூரத்தில் இருந்த  சிறைக்குச்  சென்றார்.

டவுன்டவுன் அட்லாண்டாவில் உள்ள ரைஸ் ஸ்ட்ரீட்டில் உள்ள ஃபுல்டன் கவுண்டி சிறைக்கருகில் கு ட்ரம்ப் வருகையை அவரது ஆதரவாளர்கள் உரத்த ஆரவாரத்துடன் வரவேற்றனர். சிலர் எதிர்த்துக் கூச்சலிட்டனர். வியாழன் இரவு 7:55 மணியளவில் அவர் தனது வாகன அணிவகுப்பில் திரும்பி அட்லாண்டா விமான நிலையத்திற்குச் சென்றார்

அமெரிக்க வரலாற்றில் குற்றஞ்சாட்டப்பட்ட முதல் முன்னாள் ஜனாதிபதி என்ற அவப்பெயரைப் பெற்ற  ட்ரம்ப்மீது மார்ச் மாதத்திற்குப் பிறகு ஃபுல்டன் கவுண்டி வழக்குத் தொடரும் நான்காவது கிரிமினல் வழக்காகும்  . அப்போதிருந்து, அவர்  புளோரிடா  மற்றும்  வாஷிங்டனில் கூட்டாட்சி குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டார். 

தான் ஒரு தவறும் செய்யவில்லை என்று ட்ரம்ப் பலமுறை  கூறியுள்ளார்.மறுத்து வருகிறார். அவர் இந்த வாரம் ஒரு சமூக ஊடக இடுகையில், பெரிய எழுத்துக்களில் "சரியான தொலைபேசி அழைப்பு" என்று விவரித்ததற்காக அவர் மீது வழக்குத் தொடரப்படுவதாகக் கூறினார், அதில் குடியரசுக் கட்சியின் வெளியுறவுத்துறை செயலாளர் பிராட் ராஃபென்ஸ்பெர்கரிடம் "11,780 வாக்குகளைக் கண்டுபிடிக்க" உதவுமாறு கேட்டுக்  கொண்டார்  . அவர் மாநிலத்தில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பிடனிடம் தனது இழப்பை முறியடித்தார்.

ட்ரம்ப் சரணடைந்த ஃபுல்டன் கவுண்டி சிறை நீண்ட காலமாக ஒரு சிக்கலான வசதியாக உள்ளது. நீதித்துறை கடந்த மாதம்  நிலைமைகள் மீதான சிவில் உரிமைகள் விசாரணையைத் தொடங்கியது  , அசுத்தமான செல்கள், வன்முறை மற்றும் ஒரு மனிதனின் மரணம் ஆகியவற்றை மேற்கோள் காட்டி, பிரதான சிறைச்சாலையின் மனநல பிரிவில் பூச்சிகளால் மூடப்பட்ட ஒரு மனிதனின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த மாதத்தில் ஃபுல்டன் கவுண்டி காவலில் மூன்று பேர் இறந்துள்ளனர்.

டர்ம்பின் எதிர் கால அரசியலுக்கு  இந்த வழக்கு   பின்னடைவை ஏற்படுத்தும்  என்பதை  மறுக்க  முடியாது.

விமான விபத்தில் வாக்னர் குழு தலைவர் பிரிகோஜின் பலி

ரஷ்ய ஜனாதிபதி புட்டினின்  நம்பிக்கைக்குரியவரான    யெவ்ஜெனி பிரிகோஜின் விமான விபத்தில் பலியானதாக  அறிவிக்கப்பட்டுள்ளது. புட்டினுக்கு ஆதரவாக  உலகெங்கும்  பல  இரகசியத் தாக்குதலகளை நடத்திய  வாக்ன  கூலிப்படைத் தலைவர் பிரிகோஜினின்  மரணம் விபத்து என்று  சொல்லப்பட்டாலும்  அதனை ஏற்றுக்கொள்வதற்கு உலக நாடுகள் தயாராக  இல்லை.

இரண்டு மாதங்களுக்கு முன்னர்  புட்டினை எதிர்த்து மொச்கோவை நோக்கி வாக்னர் கூலிப்படை நகர்ந்தது. பெலாரஸ் ஜனாதிபதி தலையிட்டு சமாதானம் செய்து வைத்தார். மொஸ்கோ மீதான தாக்குதலைக் கைவிட்டு   பெலாரஸுக்குச்   சென்றார் 

மாஸ்கோவிற்கு வடக்கே விபத்துக்குள்ளான விமானத்தில் வாக்னர் குழுமத் தலைவர் யெவ்ஜெனி பிரிகோஜின், அவரது தளபதி டிமிட்ரி உட்கின் ஆகியோர் இருந்தனர் என்று ரஷ்யாவின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது.விபத்து நடந்த இடத்தில் இதுவரை எட்டு உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று  றீஆமாநில செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

நேற்று [23] மாலை நடந்த விமான விபத்தில் கொல்லப்பட்ட பயணிகளில் பிரிகோஜின், [62], வாக்னர் கமாண்டர் உட்கின்,[ 53], ஆகியோர் அடங்குவர் என்று வாக்னர் குழுமத்துடன் இணைந்த டெலிகிராம் சேனல் தெரிவித்துள்ளது. ஆனால், வாக்னர் குழுமத் தலைவரின் மரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. ரஷ்ய ஜனாதிபதி புட்டினுக்கு எதிராக வாக்னர் குழு புரட்சி செய்த இரண்டு மாதங்களின் பின்னர் இச் சம்பவம் நடைபெற்றுள்ளது.

வாக்னர் குழுவை  ரஷ்யாவுடன்  இணைப்பதற்கு ரஷ்ய பாதுகாப்புத்துறை முயற்சி செய்தது. பிரகோஜின் அதற்கு  உடன்படவில்லை.  வாக்னர் குழுக்கும் ரஷ்ய  இராணுவத்துக்கும்  முறுகல் நிலை தோன்றியது.  பிரகோஜினுக்கு எதிராக ரஷ்ய ஜனாதிபதி  பகிரங்கமாகக் கருத்துச் சொன்னார். "துரோகி,முதுகில் குத்திவிட்டார்" என  புட்டின்  புலம்பினார்.

ரஷ்யாவுக்கு எத்கிரான வெளிநாட்டு, உள்நாட்டு தலைவர்களை கொலை செய்வது, வெளிநாட்டு போர்களில் ரஷ்ய ராணுவத்திற்கு உதவி செய்வது போன்ற பணிகளை வாக்னர் அமைப்பு செய்து வந்தது.  இந்த அமைப்பை உருவாக்கிய உட்கின் 1999 ௨009 வரை ரஷ்யாவின் பல்வேறு ராணுவ பிரிவுகளில், உளவு பிரிவுகளில் வேலை பார்த்து இருக்கிறார்.பின்னர்  பிரிகோஜின் தலைவரானார். இவர் புட்டினுக்கு ஒரு காலத்தில் மிக நெருக்கமாக இருந்தார். புட்டினின்  உணவு தயாரிப்பாளராகவும் இவர் இருந்தது குறிப்பிடத்தக்கது.

பிரகோஜினின்  மரணத்திற்கு பின் ரஷ்ய அரசின் சூழ்ச்சி இருக்கலாம் என்று வாக்னர் குழு குற்றச்சாட்டு வைக்கிறது. இந்த அமைப்பை உருவாக்கிய உட்கின் என்பவரும் இந்த சம்பவத்தில் பலியாகிவிட்டார்.  பிரிகோஜின் விமான விபத்தில் பலியான சம்பவம் உலகையே உலுக்கி உள்ளது.  பிரகோஜினின்  புரட்சியை புட்டின் விரும்பவில்லை  என  இந்த விபத்து தொடர்பாக அமெரிக்க ராணுவ அதிகாரிகள் முக்கியமான புகார்களை வைத்து வருகின்றனர். புட்டினை எதிர்த்தால்    புட்டின் கொன்றுவிட்டார் என்று அமெரிக்க ராணுவ, பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பலர் சர்வதேச ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து வருகின்றனர்.

தமது நாட்டுக்கு எதிராகக்  கிளர்ச்சி செய்த  பிரிகோஜின் மீது  ரஷ்ய  இராணுவம்  கடும்  கோபத்தில் உள்ளது. இது விமான விபத்து அல்ல திட்டமிட்ட சதி என  சிலர்  க ருதுகிரார்கள். புட்டின் அனுமதி இல்லாமல்  எதுவும் நட்ந்திருக்காது . பிரகோஜினுக்கு ஆதரவான யோடு ரஷ்ய ராணுவம்தான் பிரிகோஜினை தீர்த்து கட்டி உள்ளது. ரஷ்ய ராணுவம் பிரிகோஜின் உயிரோடு இருப்பதை விரும்பவில்லை. ரஷ்யாவின் விமானப்படை தளபதி செர்கோய் கடந்த புதன்கிழமை காலையில்    அவர் நீக்கப்பட்ட இரவே பிரிகோஜின் மரணம் அடைந்தது சந்தேகத்தை தருகிறது. ரஷ்யாவின் ராணுவம் மூலம் மிஸைல் ஏவி பிரிகோஜின் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்றும் அமெரிக்கா சந்தேகிக்கிறது.   இவரின் உடல் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. புட்டின் இதில் அதிகாரப்பூர்வமாக பேசவில்லை. எனவே பிரிகோஜின் சாகவில்லை. வேறு எதோ செய்வதற்காக சதித்திட்டம் தீட்டுகிறார்கள். பிரிகோஜின் செத்து இருக்க வாய்ப்பே இல்லை என்றும் ஒரு வாதம் வைக்கப்படுகிறது.

 உக்ரைன் மீது ரஷ்யா ஆக்கிரமிப்புச் செய்த வேளை வாக்னர் கூலிப்படை முன்னணியில் இருந்தது.   உக்ரைனின்  பிரதான நகரங்களை  வாக்னர் கூலிப்படை கைப்பற்றியது  உகரைன்  போரில் ஆயிரத்துக்கும் அதிகமான வாக்னர் படையில் வீரர்கள்  கொல்லப்பட்டனர்.

வாக்னர் கூலிப் படை போலர் உலகம் முழுக்க இப்படி பல   தனியார்  கூலிப்படைகள்  உள்ளன.    இராணுவ வீரர்களுக்கு  அதிக சம்பளம்  கொடுத்து பணிக்கு அமர்த்துவார்கள். கொலை செய்வது, ஆட்சியை கவிழ்ப்பது என்பன  இவர்களின் முக்கிய   பணி. திட்டம்  போட்டு வெளி உலகிற்கே தெரியாமல் கொல்லும் திறன் கொண்டவர்கள் இவர்கள். அப்படி ஒரு கும்பல்தான் இந்த  வாக்னர் குழு  இந்த கும்பல் ரஷ்ய அரசுக்கு மிகவும் நெருக்கமானது . க ரஷ்ய  இராணுவத்தால் செய்ய முடியாததை இவர்கள்    மறைமுகமாக செய்வார்கள்.  2017 கணக்குப்படி இந்த குழுவில்   மொத்தம் 6000  பேஎர்  இருப்பதா அதெரிவிக்கப்பட்டது.

ஐரோப்பாவும், உலகின் பல நாடுகளும்   வாக்னர் குழு போன்ற கூலிப்படைகளைத் தடை செய்துள்ளன.  லிபியா, சிரியா, மாலி, மொசாம்பி, சூடான், ஆப்ரிக்கா போன்ற போர்கள் நடக்க கூடிய நாடுகளில் எல்லாம் இந்த குழு ரஷ்யா மூலம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தங்களுக்கு எதிராக இருக்கும் குழுக்களை  , அரசியல் தலைவர்களை  அழிக்க வாக்னர் குழு பயன்படுத்தப்பட்டு வருகிறது. 2015 ௨018 வரை சிரியாவில் ரஷ்யா மற்றும் அந்நாட்டு ஜனாஅதிபதி பாஷர் அல் ஆசாத் குழுவிற்கு உறுதுணையாக வாக்னர் குழு செயற்பட்டது.   2014ல் கிரிமியாவை உக்ரைனில் இருந்து பிரிப்பதர்கு வாகனர் குழு  கருவியாக  இருந்தது.

ரஷ்யாவில் பொம்மை ஆட்சியைக் கொண்டு வருவதற்காக சி.ஐ.ஏ,  பிரிகோஜினை  உசுப்பிவிட்டதாக ரஷ்யா  கருதுகிறது. மொஸ்கோவை முற்றுகையிட பிரிகோஜின்  முயன்றபோது அவர் நீண்ட நாட்கள்  உயிருடன்  இருக்க மாட்டார் எனக் கருதப்பட்டது.  அதனை நிஜமாக்குவது போல் விமான விபத்தில்  பிரிகோஜின்  மரணமானார்.

  அவரின் மரணத்திற்கு பின் ரஷ்ய அரசின் சூழ்ச்சி இருக்கலாம் எண்மற்று வாக்னர் குழு குற்றச்சாட்டு வைக்கிறது.  வாக்னர் கூலிப்படை குழுவுடன் இணைக்கப்பட்ட சமூக ஊடகங்கள் இது பற்றி கூறுகையில் பிரிகோஜின் தனிப்பட்ட விமானம் ரஷ்ய வான் படை மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக கூறுகிறது. அதாவது ரஷ்ய ராணுவம்தான் இதை திட்டமிட்டு செய்ததாக கூறி உள்ளது. ஒரு காலத்தில் புட்டினுக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர், புட்டினுக்கு உணவு சமைத்து கொடுத்த அவரின் சமையல்காரராக இருந்தவர்தான் பிரிகோஜின்.  தற்போது அதே பிரிகோஜின் மரணத்திற்கு காரணமும் புட்டின்தான் என்று விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. பிரிக்ஸ் மாநாட்டில் புட்டின் பிசியாக இருக்கும் போதுதான் இந்த சம்பவங்கள் நடந்துள்ளன. ரஷ்யாவில் புட்டினுக்கு எதிராக பேசும் பலர் இப்படி கொல்லப்படுவது வழக்கம். ரஷ்யாவின்  உளவாளியான அலெக்ஸ் நாவல்ணிக்கு மெல்லக்கொல்லும் நஞ்சு கொடுக்கப்பட்டது. மிகுந்த சிரமத்தின்  மத்தியில் அவர்  காப்பாற்றப்பட்டார்.. 

     ரஷ்யாவின் மிக முக்கியமான எதிர்க்கட்சித் தலைவராக இருந்த அலெக்ஸி நவல்னி , புட்டினை  மிகக் கடுமையாக எதிர்த்து வந்தார். அப்போது தான் திடீரென சைபீரியாவில் அவர் மீது கொலை முயற்சி நடந்தது. அவரது உள்ளாடையில் விஷம் வைக்கப்பட்டது. அவருக்கு நரம்புகளை முடக்கும் நோவிச்சோக் என்ற கெமிக்கலை அளித்துள்ளனர். மருத்துவச் சிகிச்சைக்காகக் கடந்த 2020 ஓகஸ்ட் மாதம் ஜேர்மனியில்  தீவிர சிகிச்சைக்குப் பின்னரே குணமடைந்தார். பல மாத சிகிச்சைக்குப் பிறகு அவராகவே முன்வந்து ரஷ்யாவுக்குத் திரும்பிய நிலையில், நவல்னி கைது செய்யப்பட்டார். பல்வேறு குற்றச்சாடுகளில் அவருக்கு 11+ ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவரது அரசியல் இயக்கம் தீவிரவாத இயக்கம் என்று சொல்லி தடை விதிக்கப்பட்டுள்ளது.

  ரஷ்ய உளவுத் துறை அதிகாரியான  செர்ஜி ஸ்கிரிபால், அந்நாட்டின் உளவுத் துறையை ஏமாற்றி பிரிட்டிஷ் உளவுத்துறைக்கு ரகசியங்களை அனுப்பி வந்தார். இதனிடையே கடந்த 2018இல் செர்ஜி ஸ்கிரிபாலும் அவரது மகள் யூலியாவும் பிரிட்டனிலுள்ள கதீட்ரல் நகரமான சாலிஸ்பரியில் உள்ள ஒரு ஷாப்பிங் சென்டருக்கு வெளியே மயக்கமடைந்த நிலையில், கண்டுபிடிக்கப்பட்டனர். அவர்கள் தீவிர சிகிச்சைக்குப் பின்னரே குணமடைந்தனர். நாவல்னிக்கு தரப்பட்ட நோவிச்சோக் விஷம் தான் இவர்களுக்கும் தரப்பட்டு இருந்தது. இது சோவியத் ஒன்றியத்தால் 1970, 1980களில் டெவலப் செய்யப்பட்ட பாய்சன் ஆகும். இருப்பினும், தனக்கும் இதற்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என்று ரஷ்யா மறுத்துள்ளது.

  ரஷ்யாவில் இருந்த முக்கிய எதிர்க்கட்சி தலைவர்களில் ஒருவரான விளாடிமிர் காரா-முர்சா,  ரஷ்யாவின் முன்னாள் உளவுத் துறை அலெக்சாண்டர் லிட்வினென்கோ  ஆகியோர் கொலை முயற்சியில் இருந்து  தீவிர சிகிச்சையின்  பின் தப்பினார்கள்.  ரஷ்யாவின் பணமோசடி திட்டம் குறித்த சுவிஸ் விசாரணைக்கு உதவிய அலெக்சாண்டர் பெரெபிலிச்னி   2009 இல் பிரிட்டனில் தஞ்சம் புகுந்தார். அதன் பிறகு சில ஆண்டுகளில் அவர் உயிரிழந்தார். அவரது மரணம் இன்னுமே மர்மமாகவே இருக்கிறது.

  உக்ரைன் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த விக்டர் யுஷ்செங்கோ மேற்கத்திய நாடுகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து பிரசாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது கீவ் நகருக்கு வெளியே டின்னர் சாப்பிட்ட போது, அவருக்கு நஞ்சு கொடுக்கப்பட்டது . ரஷ்யாவில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து செய்தியை வெளியிட்ட அன்னா பொலிட்கோவ்ஸ்கயா, கடந்த 2006இல் சூப்பர் மார்க்கெட்டில் இருந்து வீடு திரும்பிய போது அவரது அடுக்குமாடிக் குடியிருப்புக்கு வெளியே சுட்டுக் கொல்லப்பட்டார். 

  ரஷ்யாவில் இருந்த முக்கிய எதிர்க்கட்சி தலைவர்களில் ஒருவரான விளாடிமிர் காரா-முர்சா,  ரஷ்யாவின் முன்னாள் உளவுத் துறை அலெக்சாண்டர் லிட்வினென்கோ  ஆகியோர் கொலை முயற்சியில் இருந்து  தீவிர சிகிச்சையின்  பின் தப்பினார்கள்.

  ரஷ்யாவின் பணமோசடி திட்டம் குறித்த சுவிஸ் விசாரணைக்கு உதவிய அலெக்சாண்டர் பெரெபிலிச்னி   2009 இல் பிரிட்டனில் தஞ்சம் புகுந்தார். அதன் பிறகு சில ஆண்டுகளில் அவர் உயிரிழந்தார். அவரது மரணம் இன்னுமே மர்மமாகவே இருக்கிறது.

  உக்ரைன் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த விக்டர் யுஷ்செங்கோ மேற்கத்திய நாடுகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து பிரசாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது கீவ் நகருக்கு வெளியே டின்னர் சாப்பிட்ட போது, அவருக்கு நஞ்சு கொடுக்கப்பட்டது . ரஷ்யாவில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து செய்தியை வெளியிட்ட அன்னா பொலிட்கோவ்ஸ்கயா, கடந்த 2006இல் சூப்பர் மார்க்கெட்டில் இருந்து வீடு திரும்பிய போது அவரது அடுக்குமாடிக் குடியிருப்புக்கு வெளியே சுட்டுக் கொல்லப்பட்டார்.  ரஷ்யாவுக்கு எதிரானவர்களின்  கொலை,கொலை முயற்சிகளின்  பின்னணியில் தான்  இல்லை ர்ன ரஷ்யா சத்தியம் செய்தது. அந்தப் பட்ட்டியலில்  பிரகோஜினும்  இணைக்கப்பட்டு விட்டார்.

 

வர்மா

Wednesday, August 30, 2023

வாக்னர் கூலிப்படைத் தலைவர் விமான விபத்தில் பலி


 ரஷ்ய ஜனாதிபதி புட்டினின் நம்பிக்கைக்குரிய  யெவ்ஜெனி பிரிகோஜின் மாஸ்கோவிற்கு வெளியே விமான விபத்தில் இறந்துவிட்டதாக  அறிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின்  இரகசிய வேலைகளை வெற்றிகரமாக   நிறைவேற்றிய பிரிகோஜினின் மரணம் பல சந்தேகங்களை எழுப்பி உள்ளது.

ரஷ்ய ஜனாதிபதி புட்டினுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்து இரண்டு மாதங்கள்  கடந்த பின்னர்  பிரகோஜின் விமான விபத்தில் பலியானதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

மாஸ்கோவிலிருந்து செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நோக்கிச் சென்று கொண்டிருந்த விமானதில்  மூன்று பணியாளர்களும்,  ஏழு பயணிகளும்  இருந்தனர்.  தலைநகருக்கு வடக்கே கிட்டத்தட்ட 300 கிலோமீற்ற ர் (185 மைல்) தொலைவில்  விமானம் கீழே விழுந்ததாக ரஷ்யாவின் அரசு செய்தி நிறுவனமான டாஸ் மேற்கோள் காட்டியுள்ளது. மாஸ்கோவிற்கு வடக்கே விபத்துக்குள்ளான விமானத்தில் வாக்னர் குழுமத் தலைவர் யெவ்ஜெனி பிரிகோஜின், அவரது தளபதி டிமிட்ரி உட்கின் ஆகியோர் இருந்தனர் என்று ரஷ்யாவின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது. விபத்து நடந்த இடத்தில் இதுவரை எட்டு உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று ஆர் அனும் மாநில செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.  புதன்கிழமை  [23] மாலை நடந்த விமான விபத்தில் கொல்லப்பட்ட பயணிகளில் பிரிகோஜின், [62], வாக்னர் கமாண்டர் உட்கின்,[ 53], ஆகியோர் அடங்குவர் என்று வாக்னர் குழுமத்துடன் இணைந்த டெலிகிராம் சேனல் தெரிவித்துள்ளது.

விமானம் உயரத்தில் சென்று வேகத்தில் பயணித்தபோது திடீரென சிக்னல் நின்றது. எரியும் சிதைவுகளைக் காட்டும் வாக்னர் சார்பு சமூக ஊடகக் கணக்கினால் வெளியிடப்பட்ட ஒரு படத்தில், பிரிகோஜின் முன்பு பயன்படுத்திய ஜெட் விமானத்துடன் பொருந்திய பகுதி வால் எண்ணைக் காணலாம்.

வாக்னர் சார்பு டெலிகிராம் சேனலான கிரே சோன் பகிர்ந்த வீடியோக்கள், ஒரு பெரிய புகை மேகத்திலிருந்து ஒரு கல்லைப் போல கீழே விழுவதைக் காட்டியது. ஒரு விமானம் கடுமையான சேதத்தை சந்திக்கும் போது இதுபோன்ற ஃப்ரீஃபால்கள் ஏற்படலாம், மேலும் இரண்டு வீடியோக்களின் பிரேம்-பை-ஃபிரேம்  பகுப்பாய்வு விமானத்தின் நடுவில் ஒருவித வெடிப்புக்கு இசைவாக இருந்தது. விமானம் இறக்கையைக் காணவில்லை என்பதைக் காட்டும் படங்கள் தோன்றின.

ரஷ்யாவின் புலனாய்வுக் குழு விமானப் பாதுகாப்பு விதிகளை மீறிய குற்றச்சாட்டின் பேரில் விபத்து குறித்து விசாரணையைத் தொடங்கியது. அவசரகால அதிகாரிகளை மேற்கோள்காட்டிஇன்ரர் பக்ஸ்  வியாழன் அதிகாலையில் விபத்து நடந்த இடத்தில் 10 உடல்களும் மீட்கப்பட்டதாகவும், தேடுதல் நடவடிக்கை முடிவடைந்ததாகவும் அறிவித்தது.

உறுதிப்படுத்தப்பட்டாலும் கூட, பிரிகோஜினின் மரணம் உக்ரைனில் ரஷ்யாவின் போரில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பில்லை, அங்கு அவரது படைகள் கடந்த 18 மாதங்களில் மிகக் கடுமையான போர்களில் ஈடுபட்டன.

உகரைன்  போரில் வாக்னர் படை முன்னேறிச் சென்று பல நகரங்களைக் கைப்பற்றியது  அந்த நகரங்களை  ரஷ்யப் படைகள்  பொறுப்பேற்றன. மே மாதத்தின் பிற்பகுதியில் கிழக்கு டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள ஒரு நகரமான பாக்முட்டைக் கைப்பற்றிய பின்னர் அவரது துருப்புக்கள் முன் வரிசை நடவடிக்கையிலிருந்து பின்வாங்கின. பக்முத் முழுப் போரிலும் இரத்தக்களரிப் போர்களுக்கு உட்பட்டது, ரஷ்யப் படைகள் பல மாதங்களாக அதைக் கைப்பற்ற போராடின.

கிளர்ச்சிக்குப் பிறகு, அவரது போராளிகள் வழக்கமான இராணுவத்தின் ஒரு பகுதியாக மட்டுமே உக்ரைனுக்குத் திரும்ப முடியும் என்று ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த வாரம், ப்ரிகோஜின் கலகத்திற்குப் பிறகு தனது முதல் ஆட்சேர்ப்பு வீடியோவை வெளியிட்டார்  , வாக்னர் உளவு மற்றும் தேடல் நடவடிக்கைகளை மேற்கொள்கிறார், மேலும் "ரஷ்யாவை அனைத்து கண்டங்களிலும் இன்னும் பெரியதாகவும்,  ஆப்பிரிக்காவை இன்னும் சுதந்திரமாகவும் ஆக்குகிறார். 

இந்த வாரம், ரஷ்ய ஊடகங்கள், அநாமதேய ஆதாரங்களை மேற்கோள் காட்டி, ஜெனரல் செர்ஜி சுரோவிகின் ரஷ்யாவின் விமானப்படையின் தளபதி பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவித்தது. ஒரு கட்டத்தில் உக்ரைனில் ரஷ்யாவின் நடவடிக்கைக்கு தலைமை தாங்கிய சுரோவிகின், கலகத்திற்குப் பிறகு, ப்ரிகோஜினின் படைகளை பின்வாங்குமாறு வலியுறுத்தி வீடியோ முகவரியைப் பதிவு செய்தபோது, ​​பொது வெளியில் காணப்படவில்லை.ரஷ்யாவுக்கு  ஆதரவாக நேரடியாகவும், மறைமுகமாகவும் பல பயங்கரவாதச் செயல்களை வாகன்ர் கூலிப்படை வெற்றிகரமாக நிறைவேற்றியது.

ரஷ்யாவுக்கு   ஆதரவாகச் செயற்பட்ட  பிரிகோஜின், புட்டினுக்கு எதிகாகக் கிளர்ந்து எழுந்தார்.வாக்னரின்  படை மாச்கோவைக் கைப்பற்ற  முயற்சி செய்தது. பெலாரஸ் ஜனாதிப்தியின் வேண்டுகோளுக்கு இணங்க ரஷ்யா மீதான  ஆக்கிரமைப்பை பிரகோஜின் அகைவிட்டார்.

உகரைன்  போரில் வாக்னர் படை முன்னேறிச் சென்று பல நகரங்களைக் கைப்பற்றியது  அந்த நகரங்களை  ரஷ்யப் படைகள்  பொறுப்பேற்றன. மே மாதத்தின் பிற்பகுதியில் கிழக்கு டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள ஒரு நகரமான பாக்முட்டைக் கைப்பற்றிய பின்னர் அவரது துருப்புக்கள் முன் வரிசை நடவடிக்கையிலிருந்து பின்வாங்கின. பக்முத் முழுப் போரிலும் இரத்தக்களரிப் போர்களுக்கு உட்பட்டது, ரஷ்யப் படைகள் பல மாதங்களாக அதைக் கைப்பற்ற போராடின.

கிளர்ச்சிக்குப் பிறகு, அவரது போராளிகள் வழக்கமான இராணுவத்தின் ஒரு பகுதியாக மட்டுமே உக்ரைனுக்குத் திரும்ப முடியும் என்று ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த வாரம், ப்ரிகோஜின் கலகத்திற்குப் பிறகு தனது முதல் ஆட்சேர்ப்பு வீடியோவை வெளியிட்டார்  , வாக்னர் உளவு மற்றும் தேடல் நடவடிக்கைகளை மேற்கொள்கிறார், மேலும் "ரஷ்யாவை அனைத்து கண்டங்களிலும் இன்னும் பெரியதாகவும்,  ஆப்பிரிக்காவை இன்னும் சுதந்திரமாகவும் ஆக்குகிறார். 

இந்த வாரம், ரஷ்ய ஊடகங்கள், அநாமதேய ஆதாரங்களை மேற்கோள் காட்டி, ஜெனரல் செர்ஜி சுரோவிகின் ரஷ்யாவின் விமானப்படையின் தளபதி பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவித்தது. ஒரு கட்டத்தில் உக்ரைனில் ரஷ்யாவின் நடவடிக்கைக்கு தலைமை தாங்கிய சுரோவிகின், கலகத்திற்குப் பிறகு, ப்ரிகோஜினின் படைகளை பின்வாங்குமாறு வலியுறுத்தி வீடியோ முகவரியைப் பதிவு செய்தபோது, ​​பொது வெளியில் காணப்படவில்லை.ரஷ்யாவுக்கு  ஆதரவாக நேரடியாகவும், மறைமுகமாகவும் பல பயங்கரவாதச் செயல்களை வாகன்ர் கூலிப்படை வெற்றிகரமாக நிறைவேற்றியது.

ரஷ்யாவுக்கு   ஆதரவாகச் செயற்பட்ட  பிரிகோஜின், புட்டினுக்கு எதிகாகக் கிளர்ந்து எழுந்தார்.வாக்னரின்  படை மாச்கோவைக் கைப்பற்ற  முயற்சி செய்தது. பெலாரஸ் ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கு இணங்க ரஷ்யா மீதான  ஆக்கிரமைப்பை பிரகோஜின் அகைவிட்டார். பிரிகோஜினின்  பரணத்தை ரஷ்யா சர்வச் ஆதாரணமாக அறிவித்தது. ஆனால்,  உலக நாடுகளின் சந்தேகப் பார்வை  ரஷ்யாவின் மீது  உள்ளது.

பெலாரஷ்ய அதிபர் லுகாஷென்கோ தலையிட்டு சரிசெய்தபிறகு, வாக்னரின் படைகள் ரஷ்ய அரசாங்கத்தின் மீது தாக்குதல் நடத்தவில்லை.  பிரிகோஜின் தனது படைகளைத் திரும்பப் பெற்றார். இந்த நிலையில் அவர் விமான விபத்தில் உயிரிழந்திருப்பதன் பின்னால் ரஷ்யாவின் சதி இருக்கக் கூடும் என்று அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் ரஷ்யாவில் மீண்டும் உள்நாட்டு யுத்தம் தொடங்கலாம் என்று அஞ்சப்படுகிறது.