Showing posts with label டி20. Show all posts
Showing posts with label டி20. Show all posts

Saturday, June 22, 2024

நேரடியாக தகுதி பெற்று அசத்திய அமெரிக்கா


 ரி20  2024 இல் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள அமெரிக்கா அடுத்த ரி20 உலகக்கோப்பையில் பங்கேற்பதற்கு நேரடி தகுதி பெற்றுள்ளது. இது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது.

அடுத்த ரி20 உலகக்கோப்பையில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்க உள்ளன. தற்போது நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பையில் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ள அணிகள் உள்பட 8 அணிகள் அடுத்த ரி20 உலகக்கோப்பையில் பங்கேற்பதற்கு நேரடியாக தகுதி பெற்றுள்ளது.

  இந்தியா, இலங்கை, அவுஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, அமெரிக்கா,   மேற்கு இந்தியத் தீவுகள், நியூசிலாந்து, அயர்லாந்து  , பாகிஸ்தான் ஆகியன‌ நேரடியாக தகுதி பெற்றுள்ளன.. சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது,ஐ.சி.சி. ரி20 தரவரிசை அடிப்படையில் இந்த அணிகள் நேரடியாக  தகுதி பெற்றுள்ளன.

12 அணிகளுடன் மேலும் 8 அணிகள் பங்கேற்க உள்ளனர். அவை தகுதிச்சுற்றுப் போட்டியில் விளையாடி உலகக்கோப்பைக்கு தகுதி பெறுவார்கள். அடுத்த ரி20 உலகக்  கிண்ணப்  போட்டி  இந்தியாவிலும்,    இலங்கையிலும் நடைபெற உள்ளது.

 டி20 உலகக் கிண்ணப் போட்டியை முதன் முதலாக நடத்தும் வாய்ப்பை பெற்ற அமெரிக்க அணி, இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், அயர்லாந்து என வலுவான அணிகள் இருந்த பிரிவில் இடம்பெற்றிருந்தது.

லீக் சுற்றிலே வெளியேறும் என்று எதிர்பார்க்கப்பட்ட அமெரிக்கா முதல் போட்டியில் கனடாவை அதிரடியாக வீழ்த்தியது. அடுத்த போட்டியில் பாகிஸ்தானை சூப்பர் ஓவரில் வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது. அயர்லாந்துடனான போட்டி மழையால் கைவிடப்பட இந்திய அணியுடன் இணைந்து சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது. 

அடுத்த ரி20 உலகக் கிண்ணப் போட்டிக்கு  நேரடியாகத் தகுதி பெற்ற அணிகளில் இலங்கை, அயர்லாந்து, பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Sunday, December 10, 2023

ஐபிஎல் இல் அசத்தப்போகும் வீரர்கள்

 உலகக் கிண்ணத் தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர்கள் இந்த முறை ஐபிஎல் ஏலத்தில் அதிக விலைக்கு வாங்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.   ஐபிஎல் ஏலத்தில் அதிக விலைக்கு வாங்கப்படுவதாக எதிர்பார்க்கப்படும் ஐந்து  வெளிநாட்டு வீரர்கள்

மிட்செல் ஸ்டார்க்:

அவுஸ்திரேலிய அணியின் பந்து வீச்சாளர் இந்த முறை நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் சிறப்பாக விளையாடினார். முன்னதாக, கடந்த 2014 , 2015 ஆம் ஆண்டுகளில் 27 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி உள்ளார்.  கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் அணி இவரை 5 கோடிக்கு எடுத்தது.  அதனால், இந்த முறையும் பெங்களூரு அணிக்காக அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

                        ரச்சின் ரவீந்திரா:

ரச்சின் ரவீந்திரா இந்த முறை நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் கேன் வில்லியம்சனுக்கு பதிலாக நியூசிலாந்து அணியில் விளையாடினார்.  அல், தேபோ உலகக் கோப்பையில் 3 சதங்களுடன் மொத்தம் 578 ஓட்டங்கள் எடுத்தார். தன்னுடைய அறிமுக உலகக் கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடிய இவர் இந்த முறை ஐபிஎல் ஏலத்தில் கவனிக்கத்தக்க வீரராக இருப்பார்.


                             டிராவிஸ் ஹெட்:

2016 , 2017 ஆம் ஆண்டுகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக இரண்டு ஐபிஎல் சீசனில் விளையாடி உள்ளார். உலகக் கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடினார்.  அவர் தற்போது ஐபிஎல் இல்  அசத்தப்போகும் வீரர்கள் உலகக் கிண்ணத் தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர்கள் இந்த முறை ஐபிஎல் ஏலத்தில் அதிக விலைக்கு வாங்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.   ஐபிஎல் ஏலத்தில் அதிக விலைக்கு வாங்கப்படுவதாக எதிர்பார்க்கப்படும் ஐந்து  வெளிநாட்டு வீரர்கள் மிட்செல் ஸ்டார்க்:

 ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சாளர் இந்த முறை நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் சிறப்பாக விளையாடினார். முன்னதாக, கடந்த 2014 , 2015 ஆம் ஆண்டுகளில் 27 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி உள்ளார்.  கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் அணி இவரை 5 கோடிக்கு எடுத்தது.  அதனால், இந்த முறையும் பெங்களூரு அணிக்காக அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  


                                                    ஜெரால்ட் கோட்ஸி:

தென்னாப்பிரிக்க அணியின் இளம் வீரரின் ஒருவரான ஜெரால்ட் கோட்ஸி நடப்பு உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாடினார். உலகக் கோப்பையில் 8 போட்டிகளில் விளையாடி 20 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

பந்து வீச்சு மட்டுமின்றி துடுப்பாட்டத்திலும்  தனது பங்களிப்பை வெளிப்படுத்தினார். இதனால், இந்த முறை நடைபெறும் ஐபிஎல் ஏலத்தில் இவரை ஏலம் எடுப்பதில் அணிகளுக்கு இடையே போட்டா போட்டி நிலவும்.

                                                 ஜெரால்ட் கோட்ஸி:

நியூசிலாந்து அணியின் ஆல்-ரவுண்டர் டேரில் மிட்செல் இந்த உலகக் கோப்பையில் 9 போட்டிகளில் விளையாடினார். இதில், 2 சதங்கள் 2 அரைசதங்கள் உட்பட மொத்தம் 552 ஓட்டங்களை குவித்தார். அதேபோல், அரையிறுதிப் போட்டியில் 134 ஓட்டங்களை விளாசினார்..

இதனால், இந்த முறை ஐபிஎல் ஏலத்தில் பெரும் தொகைக்கு டேரில் மிட்செல் எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அவுஸ்திரேலிய அணியில் நல்ல ஃபார்மில் இருப்பதால் ஐபிஎல் ஏலத்தில் எந்த அணி வேண்டுமானாலும் அதிக விலை கொடுத்து எடுக்கும்.  

Sunday, September 4, 2022

ரகசிய பரிபாஷை மூலம் வீரர்களுக்கு ஆலோசனை வழக்கிய இலங்கைப் பயிற்சியாளர்

ஆசியக் கிண்ணப் போட்டியில் பங்களாதேஷுக்கு எதிராக இலங்கிப் பயிற்சியாளர் களத்துக்கு வெளியில் இருந்து ஆலோசனை வழங்கியதால் தனது கண்ணடங்களையும் அதிருப்தியையும் பங்களாதேஷ் தெரிவித்துள்ளது. முந்தைய ஆட்டங்களிலெல்லாம் களத்தில் இருக்கும் வீரர்களுக்கு தண்ணீர் கொடுப்பது போலவோ, அல்லது வேறு கிளவ், போன்றவற்றை வீரர்களுக்கு கொடுத்தனுப்புமாறு அணி நிர்வாகம் ஆலோசனைகளை வழங்கி வரும்.

இப்போது   பழைய பாணியெல்லாம் மலையேறிவிட்டது. இலங்கை அணியின் பயிற்சியாளரான இங்கிலாந்தின் கிறிஸ் சில்வர் உட்,  ஒரு காகிதத்தில் ஆங்கில எழுத்தையும் இன்னொரு காகிதத்தில் எண்ணையும் எழுதி வைப்பார், இதைப் பார்க்கும் இலங்கை க‌ப்டனுக்கு இந்த பரிபாஷை புரியும் இதன் மூலம் அவர் களவியூகத்தையோ, பந்து வீச்சு மாற்றத்தையோ கொண்டு வருவார்.

 கிறிஸ் சில்வர்வுட் இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்படுகிறார். இதனால் தன்னுடைய யுத்தியை இலங்கை அணிக்காகவும் அவர் நடைமுறைப்படுத்தினார். பங்களாதேஷ் துடுப்பெடுத்தாடியபோது  போது 2 D என்று தனித் தனி பேப்பரில் காண்பிக்கப்பட்டது. இதன் அர்த்தம் என்ன என்று ரசிகர்களும் யோசித்தனர்.

 இரண்டு வீரர்களை டீப்பில் நிறுத்து என்று அர்த்தமா, அல்லது துடுப்பாட்ட வீரரை  ட்ரைவ் ஆட வைத்து அந்த இடத்தில் வீரரை  நிறுத்து என்று அர்த்தமா என்று பலரும் மண்டையை உடைத்துக் கொண்டிருக்கின்றனர். இனி இந்த யுத்தி பரவலாகும் என்று எதிர்பார்க்கலாம்.