Showing posts with label ஐபிஎல்19. Show all posts
Showing posts with label ஐபிஎல்19. Show all posts

Monday, May 13, 2019

ஒரு ஓட்டத்தால் தோல்வியடைந்து மும்பையிடம் கிண்ணத்தைக் கொடுத்த சென்னை


ஒன்றரை மாதமாக நடைபெற்ற ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸும், சென்னை சூப்பர் கின்ஃப்ஸும் மோதின. நாணயச்சுழற்சியில் வெற்ற பெற்ற மும்பை முதலில் துடுப்பெடுத்தாடி 20 ஒவர்களில் எட்டு விக்கெற்களை இழந்து 149 ஓட்டங்கள் எடுத்தது.  150 ஓட்டங்கள் என்ற இலகுவான இலக்கை விரட்டிய சென்னை, 20 ஓவர்களில் ஏழு விக்கெற்களை இழந்து 148 ஓட்டங்கள் எடுத்து ஒரு ஓட்டத்தால் தோல்வியடைந்தது.

சென்னையும், மும்பையும் தலா மூன்று முறை சம்பியனாகின. நான்காவது முறையாக சம்பியனாகி  சாதனை செய்ய களம் இறங்கின. சென்னையும் மும்பையும்  மூன்று முறை இறுதிப்போட்டியில் விளையாடின. மும்பை  இரண்டுமுறையும், சென்னை ஒரு முறையும் வெற்றி பெற்று சம்பியனாகின. இந்த ஐபிஎல் சீசனில் சென்னையை இரண்டு முறை எதிர்கொண்ட மும்பை இரண்டு முறையும் வெற்றி பெற்றது. இறுதிப் போட்டிக்கான முதலாவது தகுதிச்சுற்றில் சென்னையை மும்பை  வெற்றி கொண்டது.

ஐபிஎல் தொடரில் ஏழு இறுதிப்போட்டிகளில் விளையாடிய சென்னை மூன்று முறை சம்பியனாகியது. நான்கு முறை தோல்வியடைந்தது. சூதாட்டத் சர்ச்சையில் சிக்கி இரண்டு  வருட தடைக்குப் பின்னர் கடந்த ஆண்டு மீண்டும் விளையாடியபோது முதியோர் அணி எனக் கூறப்பட்டது. அந்த கேலியையும் கிண்டகளையும் உடைத்தெறிந்து தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக இறுதிப்போட்டியில் விளையாடத் தகுதி பெற்றது. 2010 ஆம் ஆண்டு மும்பையுடனான போட்டியில் வெற்றை பெற்ற சென்னை, அதற்குப் பின்னரான அனைத்துப் போட்டிகளிலும் தோல்வியடைந்தது. 150  என்பது இலகுவான இலக்கு என்பதால் சென்னை ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

மும்பையில் ஜெயந்த் யாதவ் நீக்கப்பட்டு மிட்ச் மெக்லேகன் சேர்க்கப்பட்டார். சென்னை அணியில் மாற்றம் எதுவும் இல்லை. கடந்த போட்டியில் ஒரு ஓவரில் 13 ஓடங்களைக்  கொடுத்த ஷர்துர் தாகூர் , நீக்கப்பட்டு முரளி விஜய் சேர்க்கப்படலாம் என எதிர் பார்க்கப்பட்டது. ஷர்துர் தாகூரை டோனி நீக்கவில்லை. டோனியின் நம்பிக்கையை தாகூர் காப்பாற்றிவிட்டார். மும்பையிலும் சென்னையிலும் சிரந்த துடுப்பாட்ட வீரர்கள் இருந்தாலும் இறுதிப்போட்டியை பந்துவீச்சாளர்கள் தம் வசம் எடுத்துக்கொண்டனர். இலகுவான கச்களைத் தவறவிட்டவை, முஸ்பீல்டால் ரன் அவுட்களைக் கோட்டைவிட்டு நான்கு ஓடங்களை வழங்கியமை என ஏகப்பட்ட தவறுகளை இரண்டு அணிகளும் செய்தன.
குயிண்டன் டீக்காக்கும், ரோகித் சர்மாவும் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களாகக் களம் இறங்கினர்.  இந்த ஜோடி ஓட்ட சராசரியை ஐந்து ஓவர்வரை 10 ஆக வைத்திருந்தது தீபக் சாகரின் முதல் ஓவரில் டிகாக் இரண்டு ஓட்டங்கள் மட்டும் எடுத்தார். ஷர்துர் தாகூர் வீசிய இரண்டாவது ஓவரில் ரோகித் சர்மா சிக்ஸர் அடிக்க மும்பை ரசிகர்கள் ஆரவாரப்பட்டனர். தீபக் சாஹரின் மூன்றாவது ஓவரில் டி காக், மூன்ன்றி சிக்ஸர்கள் அடிக்க அரங்கம் அதிர்ந்தது. ஹர்பஜனின் ஓவரில் ரோகித் சர்மா பவுண்டரியும், ஷர்துர் தாகூரின் ஒவரில் குயிண்டன் டிகாக் சிக்ஸரும் அடிக்க மும்பையின் ஓட்ட விகிதம் உயர்ந்தது. மும்பை ரசிகர்களின் இந்த சந்தோசம் அதிக நேரம் நீடிக்கவில்லை. தாகூரின் அடுத்த பந்தை டோனியிடம் பிடிகொடுத்த டிகாக் 29 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

ரோகித்துடன் சூரியகும்மர் யாதவ் இணைந்தார்.  தீபக் சாஹரின் அடுத்த ஓவரில் டோனியிடம் பிடிகொடுத்த ரோகித் சர்மா15 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.  சூரியகுமார், இஷான் கிஷான் ஜோடியின் மீது நம்பிக்கை ஏற்பட்டது. முதல் ஆறு ஓவர்கள் பவர் பிளேயில் மும்பை இரண்டு விக்கெற்களை இழந்து 45 ஓட்டங்கள் எடுத்தது.  சூரியகுமார் யாதவ், இஷாந்த் கிஷான் ஆகிய இருவரும் நிதானமாகத் துடுப்பெடுத்தாடினர். 11.2 ஒவர்களில் மும்பையின்  ஓட்ட எண்ணிக்கை 82 ஓட்டங்களாக இருந்தபோது இம்ரான் தாஹிரின் பந்து வீச்சில் 15 ஓட்டங்கள் எடுத்த சூரியகுமார் யாதவ் விக்கெற்றைப் பறிகொடுதார். அடுத்து வந்த க்ருனால் பாண்டியா ஷர்துரின் பந்தி அடித்து அவரிடமே பிடிகொடுத்து ஏழு ஓட்டங்களுடன் வெளியேறினார்.

புதிய வீரராகக் களம் இறங்கிய பொலாட்,தனது அதிரடியை வெளிக்காட்டினார். 14.1 ஓவர்களில் மும்பை 100 ஓட்டங்களை எட்டியது.   இம்ரான் தாகூரின் பந்தை தூக்கி அடித்த இஷான் கிஷான், ரெய்னாவிடம் பிடிகொடுத்து 23  ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். பொலட், ஹார்த்திக் பண்டையா ஜோடி சிக்சர் அடித்து மும்பை ரசிகர்களை உற்சாகப் படுத்தியது. மும்பை ரசிகர்களின் மகிழ்ச்சி அதிக நேரம் நீடிக்கவில்லை. தீபக் சாஹரின் பந்து வீச்சில் பண்டையா எல்பிடள்ள்யூ முறையில் ஆட்டமிழந்தார். அதனி எதிர்த்து பண்டையா அப்பீல் செய்தார். மூன்ராவது நடுவரின் தீர்ப்பினால்  16 ஓட்டங்களுடன் வெளியேறினார். 

அடுத்துவந்த ராகுல் சாஹர், டுபிளிசிஸம் பிடிகொடுத்து ஓட்டமெடுக்காது ஆட்டமிழந்தார். கடசி ஓவரை பிராவோ வீசிய போது வைட் கொடுக்கவில்லை என்பதால் அதற்கெதிராக பற்றை தூக்கி எறிந்த பொலாட்,  விக்கெற்றை விட்டு விலகி நின்று போக்குக் காட்டினார். நடுவர்கள் எச்சரித்ததால் அமைதியானார்.
 அடுத்து களம் இறங்கிய மிட்ச் மெக்லேகனன் ஒட்டமெதுவும் எடுக்காது ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.  20 ஒவர்கள் விளையாடிய மும்பை எட்டு விக்கெற்களை இழந்து 149 ஓட்டங்கள் எடுத்தது. பொலாட் ஆட்டமிழக்காது 41 ஓட்டங்கள் எடுத்தார். பொலாட் அதிக பட்சமாக 41 ஓட்டங்கள் எடுத்தார். தீபக் சாஹர் மூன்று விக்கெற்களையும்  ஷர்துர் தாகூர், இம்ரான் தாஹீர் ஆகியோர் தலா இரண்டு விக்கெற்களையும் கைப்பற்றினர்.

150  என்ற இலகுவான இலக்குடன் வெற்றி களம்  இறங்க்ய சென்னை, ரசிகர்களை ஏமாற்றியது. டிபிளிசிஸ், வட்சன் ஜோடி நிதானமாக வெற்றியை  நோக்கி துடுப்பெடுத்தாடியது. அதிரடியாக விளையாடிய டுலிளசிஸ் 13 பந்துகளில் 26 ஓட்டங்கள் எடுத்தபோது க்ருணாலின் பந்தை டிகாக்கிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து களம் இறங்கிய ரெய்னா எட்டு ஓட்டங்களுடனும் ராயுடு ஒரு ஓட்டத்துடனும் ஆட்டமிழந்தனர். வட்சனுடன் டோனி ஜோடி சேர்ந்தபோது சென்னை ரசிகர்கள்  உற்சாகமானார்கள்.  மும்பை ரசிகர்களின்  ஆரவாரம் அடங்கியது. இரண்டாவது ஓட்டத்தை எடுக்க முற்பட்ட டோனி ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.  மிக நீண்ட  நேரம் பலகோணங்களில் பார்த்த நடுவர் டோனி ஆட்டமிழந்ததாக அறிவித்தார். சென்னை ரசிகர்கள் அந்த முடிவை ஏற்றுக்கொள்ளவில்லை. 15.4 ஒவரில் சென்னை 100 ஓட்டங்களைத் தொட்டது. வட்சனுடன் பிராவோ இணைந்தார்.

மலிங்க வீசிய 16 ஆவது ஓவரை வட்சன் துவம்சம் செய்தார், அந்த ஓவரில் 20 ஓட்டங்கள் எடுக்கப்பட்டது. 17 ஆவது ஓவரை வீசிய பும்ரா நான்கு ஓட்டங்களை மட்டெமே  விட்டுக் கொடுத்தார். க்ருணாலின் 18 ஆவது ஓவரிலும் 20 ஓட்டங்கள் எடுக்கப்பட்டது.  க்ருனாலில் ஓவரில் 15 ஓட்டங்கள் எடுத்த பிராவோ ஆட்டமிழந்தார். சென்னை வீரர்கள் ஒற்றை இலக்கத்துடன் ஆட்டமிழக்க வட்சன் நம்பிக்கையுடன் விளையாடினார். ஜடேஜா வட்சனுடன் ஜோடி சேர்ந்தார்.

பும்ரா வீசிய 19 ஆவது ஓவரில் 9 ஓட்டங்கள் எடுக்கப்பட்டது. கடசி ஓவரில் ஆறு ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது. நான்காவபந்தில் இரண்டாவது ஓட்டம் எடுக்க முற்பட்டு வட்சன் ஆட்டமிழந்தார்.  59 பந்துகளில் 80 ஓட்டங்கள் அடித்த வட்சன் ஆட்டமிழந்ததும் மும்பையின் வெற்றி உறுதியானது. மலிங்கவின் பந்தை ஷத்துர் தாகூர் எதிர் கொண்டார் இரண்டு பந்துகளில் நான்கு ஓட்டங்கள் தேவை. ஐந்தாவது பந்தில் இரண்டு ஓட்டங்கள். கடைசிப்பந்தில் வெற்றி பெற இரண்டு ஓட்டங்கள் தேவை. அனுபவ வீரர் மலிங்க்வின் பந்தில் ஷர்துர் தாகூர் ஆட்டமிழந்தார். ஒரு ஓட்டத்தால் மும்பை வெற்றி பெற்றது.

Saturday, May 11, 2019

டெல்லியை தோற்கடித்து இறுதிப் போட்டிக்குத் தெரிவானது சென்னை





சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் ஆகியவற்றுக்கிடையே விசாகபட்டணத்தில் நடந்த இரண்டாவது தகுதிச்சுற்றில் ஆறு விக்கெற்றால் வெற்றி பெற்ற சென்னை இறுதிப்போட்டியில் மும்பையை எதிர்த்து விளையாடுகிறது.  சென்னை அணியில் முரளி விஜய் நீக்கப்பட்டு ஷ்ர்துல்  தாகூர் சேர்க்கப்பட்டார். டெல்லி அணியில் மாற்ற்றம் எதுவும் இல்லை. நாணயச்சுழற்சியில் வெற்ரி பெற்ற டோனி பந்து வீச்சைத் தேர்வு செய்தார்.  முதலில் துடுப்பெடுத்தாடியடெல்லி ஒன்பது விக்கெற்களை இழந்து 147 ஓட்டங்கள் எடுத்தது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய சென்னை நான்கு விக்கெற்களை இழந்து 151 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிரித்வி ஷா, ஷிகர் தவான் ஆகியோர் இறங்கினார்கள். மூன்றாவது ஓவரில் ஐந்து ஓட்டங்கள் எடுத்த பிரித்வி  ஷா  ஆட்டமிழந்தார். நடுவர் ஆட்டமிழப்பை மறுத்தார். டி.ஆர்.எஸ் முறையில் அப்பீல் கேட்ட போது ஆட்டமிழப்பு உறுதியானது. பிரித்விஷா, தொடர்ச்சியாக நான்காவது முறை தீபக் சாகரின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

அடுத்து காலின் முன்ரோ களம் கண்டார். 4  ஆவது ஓவரில் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங்கை பந்து வீச டோனி அழைத்தார். அதற்கு அவரது அடுத்த ஓவரிலேயே நல்ல பலன் கிடைத்தது. 6-வது ஓவரின் 2 ஆவது பந்தில் ஷிகர் தவான் (18 ஒட்டங்கள், 14 பந்து, 3 பவுண்டரி) விக்கெட்டை ஹர்பஜன்சிங் கைப்பற்றினார். அவர் விக்கெட் கீப்பர் டோனியிடம் பிடி கொடுத்து வெளியேறினார்.
 
இதனை அடுத்து கப்டன் ஸ்ரேயாஸ் அய்யர், காலின் முன்ரோவுடன் ஜோடி சேர்ந்தார். பவர்பிளேயில் (முதல் 6 ஓவரில்) டெல்லி அணி 2 விக்கெட் இழப்புக்கு 41 ஓட்டங்கள் எடுத்தது. 8.5 ஓவர்களில் அணியின் எண்ணிக்கை 57 ஓட்டங்களாக  இருந்த போது ரவீந்திர ஜடேஜா வீசிய பந்தை அடித்து ஆடிய காலின் முன்ரோ (27 ஓட்டங், 24 பந்து, 4 பவுண்டரி) பவுண்டரி எல்லை அருகில் நின்ற வெய்ன் பிராவோவிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்
இதைத்தொடர்ந்து இளம் அதிரடி ஆட்டக்காரர் ரிஷாப் பண்ட் களம் கண்டார். சென்னை அணி பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசி எதிரணிக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுத்தனர். கப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் 18 பந்துகளில் ஒரு பவுண்டரியுடன் 13 ஓட்டங்கள் எடுத்த நிலையில் இம்ரான் தாஹிரின் பந்தை தூக்கி அடிக்க ரெய்னா பிடித்தார். . அடுத்து வந்த அக்ஷர் பட்டேல் (3ஓட்டங்கள்) வெய்ன் பிராவோ பந்து வீச்சில் இம்ரான் தாஹிரிடம் பிடி கொடுத்து வெளியேறினார்.
 அடுத்து ரூதர்போர்டு, ரிஷாப் பான்டுடன் இணைந்தார். 15.2 ஓவரில் டெல்லி அணி 100 ஓட்டங்களை எட்டியது. ஹர்பஜன்சிங் வீசிய ஓவரில் சிக்சர் தூக்கிய ரூதர்போர்டு (10 ஓட்டங்கள்) அந்த ஓவரிலேயே ஷேன் வாட்சனிடம் பந்தைக்கொடுத்து ஆட்டமிழந்தார்.. அடுத்து கீமோ பால் வந்தார். ரிஷாப் பான்ட் 24  ஓட்டங்கள் இருக்கையில் இம்ரான் தாஹிர் வீசிய பந்தை சிக்சருக்கு தூக்கினார். அதனை பவுண்டரி எல்லை அருகில் வைத்து பிடித்த தீபக் சாஹர் நிலை தடுமாறி பந்துடன் பவுண்டரி எல்லையை கடந்தார். இதனால் ரிஷாப் பான்ட் கேட்ச் வாய்ப்பில் இருந்து தப்பியதுடன் சிக்சரும் போனது. கீமோ பால் (3 ஓட்டங்கள்) வெய்ன் பிராவோ பந்து வீச்சில் போல்டு ஆனார்
18.4 ஓவர்களில் அணியின் எண்ணிக்கை125  ஓட்டங்களாக இருந்த போது தீபக் சாஹர் பந்தை ரிஷாப் பான்ட் (38 ஓட்டங்கள், 25 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்) தூக்கி அடிக்க   வெய்ன் பிராவோ பிடித்ததால் ஆட்டமிழந்தார். டிரென்ட் பவுல்ட் (6 ஓட்டங்கள், 3 பந்துகளில் ஒரு சிக்சருடன்) ரவீந்திர ஜடேஜா பந்து வீச்சில் விக்கெற்றைப் பறிகொடுத்தார்..
 
20 ஓவர்களில் டெல்லி அணி 9 விக்கெட் இழப்புக்கு 147 ஓட்டங்ககள் எடுத்தது. அமித் மிஸ்ரா 3 பந்துகளில் ஒரு பவுண்டரியுடன் 6 ஓட்டங்களுடனும், இஷாந்த் ஷர்மா 3 பந்துகளில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சருடன் 10  ஓட்டங்களுடனும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். சென்னை அணி தரப்பில் தீபக் சாஹர், ஹர்பஜன்சிங், ரவீந்திர ஜடேஜா, வெய்ன் பிராவோ ஆகியோர் தலா 2 விக்கெற்களையும்.கெட்டும், இம்ரான் தாஹிர் ஒரு விக்கெற்றையும் கைப்பற்றினார்கள். கடைசி எட்டுப்பந்துகளில் டெல்லி வீரர்கள் 22 ஓட்டங்கள் எடுத்தனர்
  148 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பாப் டுபிளிஸ்சிஸ், ஷேன் வாட்சன் ஆகியோர் களம் கண்டனர். முதல் ஓவரில் ரன் அவுட்டில் இருந்து இருவரும் தப்பினர். வட்சன் அடித்த பந்தை எடுத்த அக்சர் படேல், முன்ரோவிடம் எறிந்தார். பந்தைப்பிடித்த முன்ரோ அதனை ரிஷாப் பண்டிடம் எறிந்தார். ரிஷாப் பண்ட் பந்தைத்தவறவிட அதற்கிடையில் வட்சனும் டுபிளசிஸும் எங்கே ஓடுவதெனத்தெரியாது இருவரும் ஒரே திசையில் மாறி மாறி ஓடினார்கள். கடைசியில் ஒரு ஓட்டம் எடுத்தனர்.
 
முதல் 2 ஓவர்களில் 4  ஓட்டங்கள் மட்டுமே வந்தது. 3-வது ஓவரில் பாப் டுபிளிஸ்சிஸ் முதல் பவுண்டரியை விரட்டினார். அதன் பிறகு அவர் அதிரடியாக விளையாடினார். அக்ஷர் பட்டேல் பந்து வீச்சில் சிக்சர் அடித்த  டுபிளிஸ்சிஸ், இஷாந்த் ஷர்மா பந்து வீச்சில் தொடர்ந்து 3 பவுண்டரி அடித்து கலக்கினார். பவர்பிளேயில் சென்னை அணி விக்கெற் இழக்காமல்  42 ஓட்டங்கள் சேர்த்தது. பவர் பிளேயில் சென்னை 25 விக்கெற்களை இழந்து, அதிக விக்கெற்றை இழந்த  அணியாக உள்ளது.
 
பாப் டுபிளிஸ்சிஸ் 37 பந்துகளில் 7 பவுண்டரி, ஒரு சிக்சருடன் அரைசதத்தை எட்டினார். .பி.எல். போட்டியில் அவர் அடித்த 12-வது அரைசதம் இதுவாகும். அடுத்த ஓவரிலேயே பாப் டுபிளிஸ்சிஸ் (50 ஓட்டங்கள், 39 பந்து, 7 பவுண்டரி, ஒரு சிக்சர்) டிரென்ட் பவுல்ட் பந்து வீச்சில் கீமோ பாலிடம் பிடிகொடுத்து கொடுத்து வெளியேறினார். அப்போது அணியின்  எண்ணிக்கை  10.2 ஓவர்களில் 81  ஓட்டங்கள்
அடுத்து சுரேஷ் ரெய்னா, ஷேன் வாட்சனுடன் ஜோடி சேர்ந்தார். 11.5 ஓவர்களில் சென்னை அணி 100  ஓட்டங்களைக் கடந்தது. அணியின் எண்ணிக்கை 109  ஓட்டங்களாக இருந்தபோது  போது ஷேன் வாட்சன் (50  ஓட்டங்கள், 32 பந்து, 3 பவுண்டரி, 4 சிக்சர்) அமித் மிஸ்ரா பந்து வீச்சில் டிரென்ட் பவுல்டிடம் பிடி கொடுத்து ஆட்டம் இழந்தார்
இதைத்தொடர்ந்து அம்பத்தி ராயுடு களம் இறங்கினார். சுரேஷ் ரெய்னா (11 ஓட்டங்கள்) அக்ஷர் பட்டேல் பந்து வீச்சில் போல்டு ஆனார். இதனை அடுத்து கப்டன் டோனி, அம்பத்தி ராயுடுவுடன் ஜோடி சேர்ந்தார். டோனி (9 ஒட்டங்கள்) இஷாந்த் ஷர்மாவின் பந்தை தூக்கி அடித்தபோது கீமோ  போல் பிடிக்க ஆட்டமிழந்தார். வெற்றி ஓட்டத்தை டோனி அடிப்பார் என எதிர்பார்த்த சென்னை ரசிகர்கள் அதிர்ச்சியானார்கள்
19 ஓவர்களில் சென்னை அணி 4 விக்கெட் இழப்புக்கு 151 ஓட்டங்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. 3 முறை கோப்பையை வென்றுள்ள சென்னை அணி 8-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அம்பத்தி ராயுடு 20 பந்துகளில் 3 பவுண்டரியுடன் 20 ஓட்டங்களுடனும் வெய்ன் பிராவோ ஓட்டம்  எதுவும் எடுக்காமலும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்
இறுதிப்போட்டி ஐதராபாத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.  

Thursday, May 9, 2019

ஹைதராபாத்தை வெளியேற்றிய டெல்லி


ஐபிஎல் சீசனில் மூன்றாவது  இடத்தைப் பிடித்தடெல்லி கேப்பிட்டல்ஸ், நான்காவது இடத்தைப் பிடித்த  சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகியவற்ருக்கிடையே விசாகபட்டினத்தில் நடந்த எலிமினேற்றர் போட்டியில் இரண்டு விக்கெற்களால்  டெல்லி  வெற்றி பெற்றது டெல்லி அணியில் காலின் இங்ராம் நீக்கப்பட்டு காலின் முன்ரோ சேர்க்கப்பட்டார். ஹைதராபாத் அணியில் யூசுப் பதானுக்கு பதிலாக தீபக் ஹூடா இடம் பிடித்தார்.

 நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற டெல்லி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ஹைதராபாத்தின் தொடக்க ஆட்டக்காரர்களாக விருத்திமான் சஹா, மார்ட்டின் கப்தில் ஆகியோர் களம் இறங்கினார்கள். முதல் ஓவரில் டிரென்ட் பவுல்ட் வீசிய முதல் பந்திலேயே விருத்திமான் சஹாவுக்கு நடுவர் ‘அவுட்’ வழங்கினார். ஆனால் நடுவரின் முடிவை எதிர்த்து விருத்திமான் சஹா அப்பீல் செய்து எல்.பி.டபிள்யூ. கண்டத்தில் இருந்து தப்பினார்.
 
3.1 ஓவர்களில் அணியின் ஸ்கோர் 31 ஓட்டங்கள் இருந்த போது விருத்திமான் சஹா (8 ஓட்டங்கள்) இஷாந்த் ஷர்மா பந்து வீச்சில் கப்டன் ஸ்ரேயாஸ் அய்யரிடம் பிடிகொடுத்து வெளியேறினார். இதைத்தொடர்ந்து மனிஷ் பாண்டே களம் இறங்கினார். பவர்பிளேயில் (முதல் 6 ஓவரில்) ஐதராபாத் அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 54 ஓட்டங்கள் எடுத்தது.

அதிரடியாக அடித்து விளையாடிய கப்தில் 36 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். 6.3 ஓவர்களில் 56 ஓட்டங்கள் இருந்தபோது அமித் மிஸ்ராவின் பந்தை கீமோ போலிடம் பிடிகொடுத்த கப்தில் 36 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். கப்தில் வெளியேறியபின் ஓட்ட எண்ணிக்கை வீழ்ச்சியடைந்தது. நிதானமாக ஆடிய மனிஷ் பாண்டே 30 ஓட்டங்கள் எடுத்தபோது கீமோ பாலின் பந்தை வீச்சில் ரூதர்போர்டிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.
 
  விஜய் சங்கர், கப்டன் கேன் வில்லியம்சனுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் அடித்து ஆடினார்கள். விஜய் சங்கர் ஆட்டத்தில் அதிரடி தென்பட்டது. 14.3 ஓவர்களில் ஐதராபாத் அணி 100 ஓட்டங்களைக் கடந்தது. நிலைத்து நின்று ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட கேன் வில்லியம்சன்  28 ஓட்டங்கள் எடுத்த நிலையில் இஷாந்த் ஷர்மா பந்து வீச்சில் போல்டு ஆனார். சற்று நேரத்தில் விஜய் சங்கரும் 25 ஓட்டங்களிடன் வெளியேறினார்.

கடைசி ஓவரில் முகமது நபி (20), தீபக் ஹூடா (4), ரஷித் கான் (0) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஐதராபாத் அணி 8 விக்கெட் இழப்புக்கு 162 ஓட்டங்கள் எடுத்தது. புவனேஷ்வர்குமார் ஒட்டம் எதுவும் எடுக்காமலும், பாசில் தம்பி  ஒரு ஓட்டத்துடனும் களத்தில் நின்றனர். டெல்லி அணி தரப்பில் கீமோ பால் 3 விக்கெட்டும், இஷாந்த் ஷர்மா 2 விக்கெட்டும், டிரென்ட் பவுல்ட், அமித் மிஸ்ரா தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

163 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் பிரித்வி ஷா, ஷிகர் தவான் ஆகியோர் நல்ல தொடக்கம் ஏற்படுத்தினார்கள். 7.3 ஓவர்களில்  66 ஓட்டங்கள் இருந்த போது ஷிகர் தவான் (17 ) தீபக் ஹூடா பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹாவால் ஸ்டம்பிங் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் 8 ஓட்டங்களுடன் வெளியேறினார்.


  ரிஷாப் பண்ட், பிரித்வி ஷாவுடன் ஜோடி சேர்ந்தார். அடித்து ஆடிய பிரித்வி ஷா 38 பந்துகளில் 6 பவுண்டரி, 2 சிக்சருடன் 56 ஓட்டங்கள் எடுத்த நிலையில் கலீல் அகமது பந்து வீச்சில் விஜய் சங்கரிடம் பிடிச் கொடுத்து வெளியேறினார். அடுத்து வந்த காலின் முன்ரோ (14), அக்ஷர் பட்டேல் (0), ரூதர்போர்டு (9 ) ஆகியோர் வந்த வேகத்திலேயே ஆட்டம் இழந்து நடையை கட்டினார்கள். ஆனால் மறுமுனையில் ரிஷாப் பண்ட் அதிரடியாக ஆடி அணியை வெற்றியை நோக்கி அழைத்து சென்றார். அணியின்எண்ணிக்கை 18.5 ஓவர்களில் 158 ஓட்டங்களாக இருந்த போது ரிஷாப் பண்ட் (49 ஓட்டங்கள், 21 பந்து, 2 பவுண்டரி, 5 சிக்சர்) புவனேஷ்வர்குமார் பந்து வீச்சில் முகமது நபியிடம் பிடி கொடுத்து ஆட்டம் இழந்தார்.

கடைசி ஓவரில் டெல்லி அணி வெற்றிக்கு 5 ஓட்டங்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரில் 4-வது பந்தில் அமித் மிஸ்ரா ஒரு ஓட்டத்துடன் சர்ச்சைக்குரிய முறையில் ரன்-அவுட் ஆனதால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அடுத்த பந்தை கீமோ பால் பவுண்டரிக்கு விரட்டி அணியை வெற்றி பெற வைத்தார். 19.5 ஓவரில் டெல்லி அணி 8 விக்கெட் இழப்புக்கு 165 ஓட்டங்கள் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டி வாய்ப்பில் நீடிக்கிறது. தோல்வி கண்ட ஐதராபாத் அணி வெளியேறியது.

 ஐ.பி.எல். போட்டி தொடரில் இன்று ஓய்வு நாளாகும். விசாகப்பட்டினத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 2-வது தகுதி சுற்று ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-டெல்லி கப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன. சென்னை அணி முதலாவது தகுதி சுற்றில் மும்பையிடம் தோல்வி அடைந்தாலும் 2-வது வாய்ப்பின் மூலம் இந்த தகுதி சுற்றில் விளையாடுகிறது. வெளியேற்றுதல் சுற்றில் ஐதராபாத் அணியை வீழ்த்தியதன் மூலம் டெல்லி அணி 2-வது தகுதி சுற்றில் விளையாட தகுதி பெற்றது. இந்த 2-வது தகுதி சுற்றில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும். அத்துடன் 12 ஆம்  திகதி இரவு 7.30 மணிக்கு ஐதராபாத்தில் நடைபெறும் இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதும். 

Wednesday, May 8, 2019

சென்னையை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது மும்பை


.பி.எல். கிரிக்கெட்டின் முதலாவது பிளே ஃஓவ் சுற்றில் மும்பை   6 விக்கெற் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்சை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது மும்பை இந்தியன்ஸ். எட்டு  அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடித்த மும்பை இந்தியன்ஸ் (18 புள்ளிகள்), சென்னை சூப்பர் கிங்ஸ் (18 புள்ளிகள்), டெல்லி கேப்பிட்டல்ஸ் (18 புள்ளிகள்), ஐதராபாத் சன் ரைசர்ஸ் (12 புள்ளிகள்)   ஆகியன பிளே-ஆப்சுற்றுக்கு முன்னேறின.

  சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்..சிதம்பரம் ஸ்டேடியத்தில்   நடந்த இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் புள்ளி பட்டியலில் முதல் 2 இடங்களை பிடித்த 3 முறை சாம்பியன்களான மும்பை இந்தியன்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதியோர்களின் அணி என கடந்த வருடம் கேலி செய்யப்பட்ட  சென்னை  சம்பியனாகி  சாதித்தது. இந்த வருடத்தொடரொலும் முதல் அணியாக பிளேஃஓவ் சுற்றுக்கு  முன்னேறியது.  


நாணயச் சுழற்சியில் ஜெயித்த சென்னை அணியின் கப்டன் டோனி துடுப்பாட்டத்தித்  தேர்வு செய்தார்.   முதலில்  துடுப்பெடுத்தாடிய சென்னை நான்கு விக்கெற்களை இழந்து 131  ஓட்டங்கள் எடுத்தது.  மும்பை 18.3 ஓவர்கலில் நான்கு விக்கெற்களை இழந்து 132 ஓட்டங்கள் அடித்து  வெற்றி பெற்றது.

  சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பாப் டுபிளிஸ்சிஸ், ஷேன் வாட்சன் ஆகியோர் களம் இறங்கினார்கள். சென்னை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்து இருந்தது. முதல் ஓவரை வீசிய மலிங்கா அந்த ஓவரில் ஒரு ரன் மட்டுமே விட்டுக்கொடுத்தார். 2 ஆவது ஓவரில் பவுண்டரி விளாசிய பாப் டுபிளிஸ்சிஸ்,  அடுத்த ஓவரில் ராகுல் சாஹர் பந்து வீச்சில் மாற்று ஆட்டக்காரர் அன்மோல் பிரீத் சிங்கிடம்  பிடி கொடுத்து  ஆறு ஓட்டங்களுடன் வெளியேறினார்.


அடுத்து வந்த சுரேஷ் ரெய்னா ஜெயந்த் யாதவ் பந்து வீச்சில் அவரிடமே பொஇடி கொடுத்து  ஐந்து ஓட்டங்களில் வெள்யேறினார். . ஜஸ்பிரித் பும்ரா வீசிய ஒரு ஓவரில் 2 பவுண்டரிகள் அடித்த தொடக்க ஆட்டக்காரர் ஷேன் வாட்சன்,  குருணல் பாண்ட்யா பந்து வீச்சில் ஜெயந்த் யாதவிடம்  பிடி  10 ஓட்டங்களிடன் பெவிலியன் திரும்பினார்.  ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு அனுகூலமாக இருந்ததால் சுழற்பந்து வீச்சாளர்கள்   கடும் நெருக்கடி கொடுத்தனர். பவர்பிளேயில் (முதல் 6 ஓவரில்) சென்னை அணி 32  ஓட்டங்களில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இதைத்தொடர்ந்து அம்பத்தி ராயுடு, எம்.விஜய்யுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாகவும், அதேநேரத்தில் தவறான பந்துகளை அடித்தும் ஆடினர்.     12.1 ஓவர்களில் 65 ஓட்டங்களை எட்டிய போது எம்.விஜய் (26 ஓட்டங்கள், 26 பந்து, 3 பவுண்டரி) ராகுல் சாஹர் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் குயின்டான் டி காக்கால் ஸ்டம்பிங் செய்யப்பட்டு ஆட்டம் இழந்தார்.



இதனை அடுத்து கப்டன் டோனி, அம்பத்தி ராயுடுவுடன் இணைந்தார். ஜெயந்த் யாதவ் வீசிய ஒரு ஓவரில் டோனி, அம்பத்தி ராயுடு தலா ஒரு சிக்சர் தூக்கினர். 17.1 ஓவர்களில் சென்னை அணி 100 ஓட்டங்களை எட்டியது. மலிங்கா வீசிய ஒரு ஓவரில் டோனி அடுத்தடுத்து 2 சிக்சர்கள் விரட்டியடித்து ரசிகர்களை குஷிப்படுத்தினார். கடைசி ஓவரில் ஜஸ்பிரித் பும்ரா பந்து வீச்சில் டோனி, இஷான் கிஷனிடம் கேட்ச் ஆனதும் நடுவர் அவுட் என்று அறிவித்தார். ஆனால் டெலிவிஷன் ரீப்ளேயில் அது நோ-பால் என்று தெரியவந்ததால் டோனி தொடர்ந்து விளையாட அனுமதிக்கப்பட்டார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் நடப்பு சாம்பியன் சென்னை அணி 4 விக்கெட் இழப்புக்கு 131 ஓட்டங்கள் எடுத்தது. அம்பத்தி ராயுடு 37 பந்துகளில் 3 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 42 ஓட்டங்களும் , கப்டன் டோனி 29 பந்துகளில் 3 சிக்சருடன் 37 ஓட்டங்களும்எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். மும்பை அணி தரப்பில் ராகுல் சாஹர் 2 விக்கெட்டும், குருணல் பாண்ட்யா, ஜெயந்த் யாதவ் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.


 132  ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா (4ஓட்டங்கள் ) தீபக் சாஹர் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. முறையிலும், குயின்டான் டி காக் (8 ஓட்டங்கள்) ஹர்பஜன்சிங் பந்து வீச்சில் பாப் டுபிளிஸ்சிடம் பிடி கொடுத்தும்  ஆட்டமிழந்தனர்.

அடுத்து இஷான் கிஷன், சூர்யகுமாருடன் ஜோடி சேர்ந்தார். இந்த இணை சிறப்பாக ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டது. 13.2 ஓவர்களில் அந்த அணி 100 ஓட்டங்களை எட்டியது. இஷான் கிஷன் 31 பந்துகளில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சருடன் 28 ஓட்டங்கள் எடுத்த நிலையில் இம்ரான் தாஹிர் பந்து வீச்சில் போல்டு ஆனார். அடுத்து களம் கண்ட குருணல் பாண்ட்யா (0) இம்ரான் தாஹிர் பந்து வீச்சில் அவரிடமே பிடிகொடுத்து வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்பினார்.

ஹர்திக் பாண்ட்யா, சூர்யகுமாருடன் இணைந்தார். இருவரும் அணியை வெற்றிக்கு அழைத்து சென்றனர். 18.3 ஓவர்களில் மும்பை அணி 4 விக்கெட் இழப்புக்கு 132 ஓட்டங்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு 5-வது முறையாக முன்னேறியது. சூர்யகுமார் யாதவ் 54 பந்துகளில் 10 பவுண்டரியுடன் 71 ஓட்டங்களும் ஹர்திக் பாண்ட்யா 11 பந்துகளில் ஒரு பவுண்டரியுடன் 13 ஓட்டங் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

சென்னை அணியை, மும்பை அணி தொடர்ச்சியாக 4-வது முறையாக (கடந்த ஆண்டு உள்பட) வீழ்த்தி இருக்கிறது. தோல்வி கண்ட சென்னை அணிக்கு இறுதிப்போட்டிக்கு தகுதி பெற இன்னொரு வாய்ப்பு உள்ளது. இன்று நடைபெறும் வெளியேற்றுதல் சுற்றில் வெற்றி பெறும் அணியுடன், வருகிற 10 ஆம் திகதி  சென்னை அணி மோதும். அதில் வெற்றி பெற்றால் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற முடியும்.