Showing posts with label இம்ரான்கான். Show all posts

Monday, May 22, 2023

ஆடுகளம் முதல் அரசியல்களம் வரை இம்ரானின் பயணம்

 கிறிக்கெற்ற்கி துடுப்பாட்ட வீரர்களுக்கு சின்ன சொபனமாக்  இருந்த இம்ரான்கான் பாகிஸ்தான் அரசியலிலும் எதிரிகளை அச்சுறுத்தி வருகிறார். கிறிக்கெற் எதிரிகள்  இம்ரான் கான் மீது மீது கண்டனக் கணைகள் தொடுத்தனர். அரசியல் எதிரிகள் அவரைச் சிறைக்கு அனுப்பினர்.

பாகிஸ்தானின் சர்ச்சைக்குரிய  கிறிக்கெற் ஜாம்பவானும் முன்னாள் பிரதமருமான இம்ரான் கான் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டு ஓராண்டுக்குப் பிறகு  ஊழல் குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

 பிரிட்டிஷ் வாரிசு ஜெமிமா கோல்ட்ஸ்மித்தை  திருமணம் செய்த இம்ரான்கான் விளையாட்டு வாழ்க்கையில் விளையாடும் வாழ்க்கை முறையை அனுபவித்தவர்.இம்ரான் அஹ்மத் கான் நியாசி 1952 இல் பாகிஸ்தானின் லாகூரில் ஒரு வசதியான குடும்பத்தில் பிறந்தார்.

ஒரு இளைஞனாக, அவர் ஒக்ஸ்போட் பல்கலைக்கழகத்தில் படித்தார், அங்கு அவர் 1975 இல் கேபிள் கல்லூரியில் பட்டம் பெற்றார்.அவரது சர்வதேச கிறிக்கெறில் பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டனில் இங்கிலாந்துக்கு எதிராக பாகிஸ்தானுக்காக அறிமுகமானார்.1970களில் கிரிக்கெட் வீரராக சர்வதேச அளவில் பிரபலமடைந்தாலும், இன்று பாகிஸ்தானின் முன்னாள் பிரதமராக மக்கள் பார்வையில் இருக்கிறார்.ஊழலுக்கு எதிராக போராடுவேன் என்று உறுதியளித்து தேசியவாதியாக போட்டியிட்டு 2018ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். இருப்பினும், ஏப்ரல் 2022 இல் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் தோல்வியடைந்ததால் அவர் ஆட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார் .

பொருளாதார மற்றும் அரசியல் தவறான நிர்வாகத்தின் கூற்றுகள் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது, பொருளாதாரத்தை புதுப்பிக்கவும் ஊழலைச் சமாளிக்கவும் அவர் தவறிவிட்டார் என்று எதிரிகள் குற்றம் சாட்டினர்.  தன்னை நீக்குவதற்கு அமெரிக்காவுடன் தனது எதிர்ப்பாளர்கள் கூட்டுச் சேர்ந்ததாக இம்ரான்கான்குற்றம் சாட்டினார். 

பதவியில் இருந்து நீக்கப்பட்ட ஒரு வருடத்திற்குப் பிறகு,    ர் ஊழல் குற்றச்சாட்டில் நீதிமன்றத்தில் ஆஜராகச் சென்றபோது இம்ரான் கான் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் கைது செய்யப்பட்டார்.70 வயதான எதிர்க்கட்சித் தலைவரை 14 நாட்கள் வரை காவலில் வைக்க நீதிபதி ஒப்புதல் அளிக்குமாறு கோரப்பட்டது. 8 நாட்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் என்று நீதிபதி புதன்கிழமை தீர்ப்பளித்தார். அவர் முறையற்ற விதத்தில் கைது செய்யப்பட்டதாக நீதிமறம் தெரிவித்தது. அவர் தடுத்து வைக்கப்படுவதற்கு சற்று முன்பு, அவர் பிரச்சாரத்தில் ஈடுபடுவதைத் தடுக்க அதிகாரிகள் அவரைக் கைது செய்ய உள்ளனர் என்ற தலைப்புடன் தெரியாத இடத்திலிருந்து வீடியோவைப் பதிவு செய்தார்.

1996 இல் பாகிஸ்தானின் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சியை நிறுவியபோது ஊழலை ஒழிப்பதாக கான் சபதம் செய்தார்.  இம்ரான்கான் கைது செய்யப்பட்டதால்    வன்முறை,  ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. இதுவரை நடந்த வன்முறையில் குறைந்தது நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர் - தென்மேற்கு நகரமான குவெட்டாவில் ஒருவர் மற்றும் வடமேற்கு பாகிஸ்தானில் மேலும் மூன்று பேர், நாட்டின் பல்வேறு பகுதிகளில்பலர் கணக்கானவர்கள் காயமடைந்தனர்.

இம்ரான்கான்  தனது அரசியல் கட்சியை நிறுவுவதற்கு ஒரு வருடத்திற்கு முன்பு 1995 இல் பிரிட்டிஷ் வாரிசு ஜெமிமா கோல்ட்ஸ்மித்தை மணந்தார். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிரந்தன.  ஆனால் ஒன்பது ஆண்டுகள் ஒன்றாக இருந்த பிறகு 2004 இல் விவாகரத்து செய்தனர்.   பத்திரிக்கையாளரும் வானிலை தொகுப்பாளருமான ரெஹாம் கானுடனான அவரது இரண்டாவது திருமணம் 10 மாதங்கள் நீடித்தது. அவர் தனது தற்போதைய மனைவி புஷ்ரா பீபி கானை (முன்னாள் மேனகா) 2018 இல் திருமணம் செய்து கொண்டார்.  2017 இல்  இம்ரான் கான் மீது  #MeToo  குற்றம் சுமத்தப்ப்டாது. 

அவரது சொந்தக் கட்சியைச் சேர்ந்த எம்.பி.யாக இருந்த அவர் மீது குற்றம் சாட்டிய ஆயிஷா குலாலாய் வசீர், 2013ல் தனக்கு "தகாத" குறுஞ்செய்திகளை அனுப்பியதாகக் கூறி, பாராளுமன்ற விசாரணைக்கு அழைப்பு விடுத்தார். குற்றச் சாட்டை இம்ரான்கான் மறுத்தர்.  

Saturday, April 16, 2022

அரசியல் சதுராட்டத்தால் பதவி இழந்த இம்ரான்கான்

பாகிஸ்தானில் கடந்த ஒரு வருடமாகப் பொருளாதார சிக்கல் நீடித்து வருகிறது. அதனால், பிரதமராக இருந்த இம்ரான் கான் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. எதற்கும் அசைந்து கொடுக்காத இம்ரான்கான் நம்பிக்கை இலாத தீர்மானத்தின் மூலம் பிரதமர் பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்டார்.

கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு இம்ரான் கானின் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி பாகிஸ்தானில் ஆட்சியமைத்து வந்தது. அதன் கூட்டணி கட்சி எம்பிக்கள் சிலர் ஆதரவை திரும்ப பெற்றனர். இதையடுத்து இம்ரான் கான் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் கொண்டு வந்தன. இதன் மீதான வாக்கெடுப்பு நடைபெறவிருந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பாக இம்ரான் கானின் பரிந்துரையின்பேரில் பாராளுமன்றத்தை சபாநாயகர் கலைத்தார்.

இது தொடர்பான வழக்கில், பாராளுமன்றம் கலைக்கப்பட்டது செல்லாது என்று அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை தொடர்ந்து நடத்தப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தில் இம்ரான் கான் தோல்வியடைந்ததை அடுத்து தனது பதவியை அவர் இராஜினாமா செய்தார்.  இதையடுத்து புதிய பிரதமராக எதிர்க்கட்சித் தலைவர் ஷெபாஸ் ஷெரீப் தேர்ந்தெடுகப்பட்டார்.

கடந்த சனிக்கிழமை நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.  இந்த வாக்கெடுப்புக்கு முன்னதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ``திருடர்களுடன் சட்டமன்றத்தில் உட்கார மாட்டேன்" எனக்கூறி தேசிய சட்டமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தார். 

அவரை தொடர்ந்து, பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் உறுப்பினர்களும் வாக்கெடுப்பைப் புறக்கணித்து பாராளுமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர். இந்த நிலையில், முன்னாள் தகவல் தொடர்பு அமைச்சர் ஃபவாத் சவுத்ரி, ``அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் தேசிய சட்ட மன்றத்திலிருந்து இராஜினாமா செய்வார்கள்" என்று கூறினார். அதைத் தொடர்ந்து, அனைத்து அமைச்சர்களும் இராஜினாமா செய்தனர். 

அதன் பின்னர் இம்ரான் கான், ``ஒருவர் மீது 16 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் வழக்கும், மற்றொருவர் மீது 8,000 கோடி ரூபாய் ஊழல் வழக்கும் உள்ளவர்கள் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்கள். இதை விடப் பெரிய அவமானம் நாட்டுக்கு இருக்க முடியாது. எனவே, தேசிய சட்ட மன்றத்திலிருந்து இராஜினாமா செய்கிறேன்" என்று கூறிவிட்டு இராஜினாமா செய்ததாகக் கூறப்படுகிறது. அதனால் பாராளுமன்றத்தில் எதிர்கட்சிகள் இன்றி  ஷெபாஸ் ஷெரீப் பிரதமராகி அவரது கட்சி ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. 

     பாகிஸ்தானில் எந்த பிரதமரும் முழுமையாக ஆட்சி செய்ததில்லை என்ற வரலாறு மீண்டும் திரும்பியதோடு, நம்பிக்கை வாக்கெடுப்பின் மூலம் ஆட்சியை இழந்த முதல் பிரதமர் என்ற மோசமான சாதனையை இம்ரான் கான் படைத்துள்ளார். நாட்டில் சவால்கள் அடுத்த பிரதமராக யார் வரப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்த போதிலும், இம்ரான் முன் நின்ற அதே சோதனைகளைத் தான் அவர்களும் எதிர்கொள்ளப் போகிறார்கள் என்பதே உண்மை. மோசமான செயல்திறன் கொண்ட பொருளாதாரம், நாட்டில் அதிகரித்து வரும் தீவிரவாதம் மற்றும் முன்னாள் நட்பு நாடுகளுடன் தற்போது இருக்கும் மோசமான உறவுகள் ஆகியவை அடுத்த நிர்வாகத்திற்கு நெருக்கடி அளிப்பதில் முன்னிலையில் உள்ளன. அவை வரவிருக்கும் அரசாங்கத்திற்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உறவு நிலைகளில் பல சவால்களை ஏற்படுத்தும்.

220 மில்லியன் மக்கள் வசிக்கும் பாகிஸ்தான் நாட்டின் புதிய பிரதமருக்கு வரவிருக்கும் முக்கிய சிக்கல்களாக பொருளாதாரம், கடன், பணவீக்கம் மற்றும் பலவீனமான நாணய மதிப்பு உள்ளது. இந்த பிரச்சினைகள் இணைந்துதான் கடந்த மூன்று ஆண்டுகளாக நாட்டின் வளர்ச்சியை தேக்க நிலையில் வைத்திருக்கின்றன. பாகிஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆப் டெவலப்மென்ட் எகனாமிக்ஸ்-ன் துணைவேந்தர் நதீம் உல் ஹக் கூறுகையில், "பொருளாதாரத்தை மாற்றுவதற்கு தீவிரமான கொள்கை சீர்திருத்தங்கள் தேவை." என்கிறார். நாட்டில் பணவீக்கம் 12 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது, வெளிநாட்டுக் கடன் $130 பில்லியனாகவும், டொலருக்கு நிகரான ரூபாய் 190 ஆகக் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதிகரிக்கும் தீவிரவாதம் அடுத்ததாக கடந்த ஆண்டு ஆப்கானிஸ்தானில் ஆட்சியைப் பிடித்த தாலிபான்கள் பாகிஸ்தானின் உள்ளூர் தீவிரவாதிகளுடன் இணைந்து கடந்த சில மாதங்களில் தாக்குதல்களை முடுக்கிவிட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய ரமலானின் போதும் கூட அரசாங்கப் படைகளுக்கு எதிரான தாக்குதலை அவர்கள் தொடங்கினார். ஆப்கானிஸ்தானின் தலிபான்கள் பாகிஸ்தான் நாட்டை வெளிநாட்டு தீவிரவாதிகளின் தளமாக பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று ஆட்சியாளர்கள் கூறுகின்றனர். ஆனால் அது தான் பெரிய சிக்கல் என்பது தான் கவனிக்கத்தக்கது.

 ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்த நாளில் மாஸ்கோவிற்கு இம்ரான் பயணம் செய்ததன் மூலம் இம்ரான் கான் மேற்குலக நாடுகளை கோபப்படுத்தினார், மேலும் சீனாவின் மனித உரிமைகள் பதிவை எதிர்த்து மற்றவர்கள் புறக்கணித்தபோது பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக்கின் தொடக்கத்தில் கலந்து கொண்ட சில உலகத் தலைவர்களில் ஒருவராகவும் இம்ரான் இருந்தார். எந்த நாட்டுடன் நட்பு பாராட்டினாலும் மற்றொரு நாடு பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பும் என்பது குறிப்பிடத்தக்கது 

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீபின் இளைய சகோதரர்தான் இன்றைய பிரதமர்  ஷெபாஸ் ஷெரீப். எதிர்க்கட்சியான பாகிஸ்தான் முஸ்லீம் லீக் - நவாஸ் கட்சியின் தற்போதைய தலைவராக இருந்து வருகிறார். பாகிஸ்தானின் இரண்டாவது பெரிய எதிர்க்கட்சியும் பாகிஸ்தான் முஸ்லீம் லீக்கின் நீண்டநாள் அரசியல் எதிரியுமான பாகிஸ்தான் மக்கள் கட்சியும் இம்ரான் கானுக்கு மாற்றாக தற்போது ஷெபாஸ் ஷெரீப் ஆட்சி பரவாயில்லை என்ற நிலைக்கு வந்து ஆதரவளித்துள்ளனர்.

 ஷெபாஸ் ஷெரீப் தனது சகோதரர் நவாஸ் ஷரீபை போல் மக்கள் கூட்டத்தை தன்பக்கம் இழுக்கும் கவர்ச்சியான பேச்சாளர் இல்லை. அவரது பலம் நிர்வாகத் திறனில் இருப்பதாக பாகிஸ்தான் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் கருதுகின்றனர். ஷெபாஸ் ஷெரீப் ஒரு பணக்கார தொழில்பதிபரின் மகன். ஆரம்ப காலம் செல்வ செழிப்பான குடும்பத்தில் பிறந்த ஷெபாஸ் ஷெரீப் தனது குடும்ப வியாபாரத்தில் கவனம் செலுத்தாமல் தனது சகோதரர் நவாஸ் ஷரீஃபை போலவே அரசியலை தேர்ந்தெடுத்தார். பணக்கார குடும்பத்தில் பிறந்தாலும் லாஹூரில் உள்ள அரசு கல்லூரியில் படித்தார். அதன் பின்னர் தனது குடும்ப நிறுவனமான இத்திஃபாக் குழுமத்தில் பணிபுரிந்தார். பஞ்சாப் மாநில முதலமைச்சர் 1990 ஆம் ஆண்டு பாகிஸ்தான் பிரதமராக நவாஸ் ஷெரீப் தேர்வு செய்யப்பட்டபோது, முதல்முறையாக பாகிஸ்தான் பாராளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார் ஷெபாஸ் ஷெரீப். அதன் பின்னர் 1997 ஆம் ஆண்டு நவாஸ் ஷெரீப்பிரதமரான பின்னர் பாகிஸ்தானின் சக்திவாய்ந்த முக்கியத்துவமான மாநிலமாக கருதப்பட்ட பஞ்சாபின் முதலமைச்சராக ஷெபாஸ் ஷெரீப்தேர்வானார். 

 ஆட்சிக்கு வந்த இரண்டு ஆண்டுகளில் பாகிஸ்தான் இராணுவத்தின் தலைமையை மாற்ற நவாஸ் ஷெரீப் முயன்றபோது அவரையும் ஷெபாஸையும் ராணுவம் விரட்டிவிட்டு ஆட்சியை கையில் எடுத்தது. ஷெபாஸ் குடும்பத்தோடு சவூதி அரேபியாவுக்கு தப்பிச் சென்றார். 2007 ஆம் ஆண்டு வரை சவூதி அரேபியாவில் இருந்த நவாஸ் ஷெரீப்பும்,   ஷெபாஸ் ஷெரீப்நாடு திரும்பியவுடன் தத்தமது பதவிகளில் அமர்ந்தனர். ஷெபாஸின் தலைமையில் பஞ்சாப் மாநிலத்தின் உள்கட்டமைப்பு பெரும் அளவில் மேம்படுத்தப்பட்டது.  2017 ஆம் ஆண்டு ஊழல் புகார் காரணமாக நவாஸ் ஷெரீப்  ஆட்சி கலைக்கப்பட்டவுடன் அவருக்கு மாற்றாக பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்பட்டார் ஷெபாஸ் ஷெரீப். ஆனால் 2018 தேர்தலில் தோல்வியடைந்து எதிர்க்கட்சித் தலைவராக ஷெபாஸ் இருந்து வந்தார். இவர் சீனாவின் நிதியுதவியுடன் பாகிஸ்தானில் தொடங்கப்பட்ட திட்டங்களில் நெருக்கமாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சீனாவின் நண்பன். அமெரிக்காவின் எதிரி சீனாவுக்கு ஆதரவானவராகவும் அமெரிக்காவுக்கு எதிரான நிலைபாடு கொண்டவராகவும் ஷெபாஸ் பார்க்கப்படுகிறார். கடந்த வாரம் அவர் அளித்த பேட்டியில்கூட, அமெரிக்காவுடன் நெருக்கமான உறவை வைத்திருப்பது பாகிஸ்தானுக்கு நல்லதல்ல என்று கருத்து தெரிவித்தார். ஆட்சியில் இருந்தாலும் எதிர்க்கட்சியாக இருந்தாலும் சீனாவுடன் நெருக்கமாக இருப்போம் என்றும் அவர் கூறி இருக்கிறார். சீனாவும் ஷெபாஸ் ஷரீஃப் பஞ்சாபில் மேற்கொண்ட திட்டங்களுக்காக பாராட்டு தெரிவித்து இருக்கிறது.  தனது சகோதரர் நவாஸ் ஷெரீப்பைப் போலவே ஷெபாஸ் ஷெரீப் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. கடந்த 2020 ஆம் ஆண்டு ஷெபாசும் அவரது மகனும் சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் குற்றம்சாட்டப்பட்டனர். அவர்களின் குடும்ப வங்கிக் கணக்குகளை பிரிட்டன் முடக்கியது. ஆனால், பல்வேறு கட்ட விசாரணைக்கு பிறகு ஷெபாஸ் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை என பிரிட்டன் தேசிய குற்ற விசாரணை நிறுவனம் தெரிவித்து. பிரிட்டனில் அந்த வழக்கு கைவிடப்பட்டாலும் பாகிஸ்தானில் அந்த வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளன. 

  நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மூலம் இம்ரான் கான் அரசை கவிழ்த்துவிட்டு ஷெபாஸ் ஷெரீப்ஆட்சிக்கு வந்திருப்பதால் அவரை கண்கொத்திப் பாம்பாக தெஹ்ரிக் கட்சியினரும், பொதுமக்களும் பார்த்துக் கொண்டிருப்பார்கள். பாகிஸ்தானின் பணவீக்கம் 13 சதவீதமாக உள்ளதுடன் அதன் பண மதிப்பும் குறைந்து வருகிறது. இதனை தடுக்க வேண்டிய சவால் தற்போது  அரசியல் சதுராட்டத்தால் பதவி இழந்த இம்ரான்கான்

  நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மூலம் இம்ரான் கான் அரசை கவிழ்த்துவிட்டு ஷெபாஸ் ஷெரீப்ஆட்சிக்கு வந்திருப்பதால் அவரை கண்கொத்திப் பாம்பாக தெஹ்ரிக் கட்சியினரும், பொதுமக்களும் பார்த்துக் கொண்டிருப்பார்கள். பாகிஸ்தானின் பணவீக்கம் 13 சதவீதமாக உள்ளதுடன் அதன் பண மதிப்பும் குறைந்து வருகிறது. இதனை தடுக்க வேண்டிய சவால் தற்போது ஷெபாஸ் ஷெரீப் வசம் உள்ளது.

Friday, April 8, 2022

இம்ரான்கானின் பதவிக்கு காத்திருக்கும் ஆபத்து

பாகிஸ்தானின் அரசியலையும், இரானுவத்தையும் பிரித்துப் பார்க்க முடியாது. இராணுவத்தின் ஆதரவு இல்லாமல் பாகிஸ்தானில் அரசியல் செய்ய முடியாது. பாகிஸ்தானின் பிரதமராக  இம்ரான்கான் பதவி ஏற்றபோது இராணுவத்தின் செல்லப்பிளை என்ற  கூற்று  முன்னின்றது. பாகிஸ்தானின் முக்கைய பதவியில் ஒருவரை நியமிப்பதற்கு பிரதமர் இம்ரான்கான்  முயற்சி செய்தபோது ஏற்பட்ட எதிர்ப்பலையால் பிரதமர் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தான் நாட்டின் உளவு படைத் தளபதியாக நதீம் அஞ்சும் கடந்த வருடம் நியமிக்கப்பட இருந்தார். ஆனால் இவரின் நியமனத்திற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் எதிர்ப்பு தெரிவித்தார். தற்போதைய உளவுப்படை தளபதி பைஸ் ஹமீத்தான் தொடர்ந்து இதில் தளபதியாக நீடிக்க வேண்டும் என்று இம்ரான் கான் கருதினார். ஆனால் ராணுவ ஜெனரல் கமார் ஜாவேத் பாஜ்வா இதற்கு நேரடியாக எதிர்ப்புத் தெரிவித்தார். நதீம் அஞ்சும்தான் புதிய ஐஎஸ்ஐ தலைவராக வேண்டும் என்று அவர் அழுத்தம் கொடுத்தார். மோதல் வெடித்தது நதீம் அஞ்சுமிற்கு ஆதரவாக ராணுவ ஜெனரல் கமார் ஜாவேத் பாஜ்வா பல இடங்களில் தொடர்ந்து பேசி வந்தார் வருகிறார். ஆனால் இதை மதிக்காமல் இம்ரான் கான் ஹமீதை தொடர்ந்து ஐஎஸ்ஐ தலைவராக செயல்பட அனுமதித்தார். இந்த நியமனம்தான் இம்ரான் கானுக்கும் ராணுவ ஜெனரல் கமார் ஜாவேத் பாஜ்வாவிற்கும் இடையிலான மோதலாக உருவெடுத்துள்ளது. 

பாகிஸ்தானில் தற்போது நவாஸ் ஹெரிப்பின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி, பாகிஸ்தான் மக்கள் கட்சி, மவுலானா பசேல் ஊர் ரஹ்மானின் ஜாமியா உலமா இ இஸ்லாம் கட்சி ஆகிய கட்சிகள் இணைந்து பாகிஸ்தான் ஜனநாயக கூட்டணியை உருவாக்கி உள்ளது. இம்ரான் பதவி இம்ரான் கான் ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்பதற்காகவே இந்த கட்சிகள் இணைந்து தற்காலிக கூட்டணியாக உள்ளன. ராணுவத்தின் அழுத்தம் காரணமாக இந்த கூட்டணி தற்காலிகமாக உருவாக்கப்பட்டுள்ளது. அதோடு ஆளும் கட்சியின் கூட்டணிக் கட்சிகளில் ஒன்றான முத்தாஹிதா குவாமி மூவ்மென்ட் இம்ரானுக்கு வழங்கிய ஆதரவை  வாபஸ் பெற்றது.

 இதன் காரணமாக பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாஃப் கட்சி பெரும்பான்மையை இழந்துள்ளது. நம்பிக்கையில்லா தீர்மானத்தில் வாக்கெடுப்பு   நடக்க உள்ள நிலையில் அவரின் கட்சி பெரும்பான்மையை இழந்துள்ளது. காரணம் எதிர்க்கட்சிகள் அங்கு ஒன்றாகச்சேர்ந்துள்ளன. இந்த ஒற்றுமை தற்காலிகமானது. இம்ரான் கானுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரிசையாக அங்கு எம்பிக்கள் ராஜினாமா செய்தனர். மொத்தம் 22 எம்பிக்கள் பதவியில் இருந்து ராஜினாமா செய்தனர்.

ஏற்கனவே பாகிஸ்தான் நாட்டு பொருளாதாரம் மிக மோசமான நிலையில் இருக்கிறது. கடந்த 2 வருடத்தில் அந்நாட்டு பொருளாதாரம் அதலபாதாளத்திற்கு சென்றுவிட்டது. விலைவாசி உயர்ந்துவிட்டது. கூடி வந்தது நாட்டில் பல இடங்களில் மக்கள் போராட்டங்களில் ஈடுப்பட்டு வருகிறார்கள்.

பாகிஸ்தானில் இன்று நடக்கும் நம்பிக்கை இல்லாத தீர்மான வாக்கெடுப்பில் இம்ரான் கான் தோல்வி அடையவே அதிக வாய்ப்புள்ளது. அங்கு மொத்தம் 342 உறுபினர்கள் கள் உள்ளனர். இங்கு பெரும்பான்மை பெற 172 எம்பிக்கள் தேவை. ஆனால் இம்ரான் கானின் ஆளும் தெஹ்ரிக் கட்சிக்கு 155 உறுப்பினர்கள் உள்ளனர். இதனால் இம்ரான் கான் கண்டிப்பாக வெற்றிபெற வாய்ப்பே இல்லை என்பதால் அங்கு இம்ரான் தலைமையிலான அரசு கவிழ உள்ளது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அரசுக்கு ஆதரவு அளித்துவந்த முத்தாஹிதா குவாமி மூவ்மென்ட், பலுசிஸ்தான் அவாமி உள்ளிட்ட கட்சிகள் தங்களது ஆதரவை விலக்கிக் கொண்டுள்ளதாக அறிவித்துள்ளன.

இதனையடுத்து, 342 உறுப்பினர்களைக் கொண்ட பாகிஸ்தான் பாராளுமன்ற மக்களவையில் தற்போது ஆளும் கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை 162 ஆக குறைந்துள்ளது.முன்னதாக, இம்ரான் கான் தலைமையிலான அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் கொண்டு வந்தன. இதன்மீதான விவாதம் நடைபெறுவதற்கு முன்பாகவே, ஆட்சிக் கவிழும் சூழல் ஏற்பட்டுள்ளது.

 உலகின் முதல் இஸ்லாமியக் குடியரசு என்ற பெருமைமிக்க வரலாறு பாகிஸ்தானுக்கு உண்டு. இஸ்லாமிய மார்க்கத்தையும், குடியரசையும் ஒருங்கே  இணைத்த பெருமையும்  அதற்கு உண்டு. பஞ்சாபியர்கள், சிந்து, பத்தான், பலூச், முகாஜிர் ஆகிய பல இனங்கள் இங்கு வாழ்ந்து வருகின்றன. குறிப்பிடத்தக்க அளவிலான இந்துக்களும், கிறித்தவர்களும் வாழ்கின்றன.

இருந்தாலும், அதன் மண்ணில் அரசியல் ஜனநாயக ரீதியிலான  ஆட்சி என்பது தற்போது வரை கேள்விக்குறியாகவே உள்ளது. இதற்கு, முக்கிய காரணம் அந்நாட்டின் ராணுவம். பாகிஸ்தான் அரசியலில் இராணுவத்தின் செல்வாக்கு என்பது தவிர்கக முடியாத ஒன்று.  அந்நாட்டின், பாராளுமன்றத்தை நிர்ணயிக்கும் சக்தியாக அது உருவெடுத்துள்ளது.

கிட்டத்தட்ட 76 ஆண்டுகால சுதந்திர பாகிஸ்தான் அரசியல் வரலாற்றில், ஒரே முறை தான் ஆளும் அரசாங்கம்  (2008- 13) தனது முழு பதவிக்காலத்தையும் வெற்றிகரமாக முடித்திருக்கிறது. ஏனைய அரசுகள் யாவும் இராணுவ சதிப் புரட்சி, உள்நாட்டு கலகங்கள் போன்ற பல்வேறு காரணங்களால் தூக்கி எறியப்பட்டுள்ளன. பாகிஸ்தான் மண்ணில் மீண்டும் ஜனநாயக நிர்வாக முறை சீர்படுத்தப்படும் என்ற உறுதிமொழியுடன் கடந்த  2018ம் ஆண்டு பதவியேற்ற இம்ரான் கான் தலைமையிலான அரசும்  தற்போது திரிசங்கு சொர்க்கத்தில் உள்ளது.

காலம் ஆட்சிமுறை அரசியல் சூழல்

1957 - 62 நேரடி ராணுவ ஆட்சி ஐயூப் கான் ராணுவ சதிப் புரட்சி

1962 ௬9 மறைமுக ராணுவ ஆட்சி (ராணுவ அதிபர் ) ஜனாதிபதி நிர்வாக முறை அமல்படுத்தப்பட்டது- பிரதமர் பதவி ரத்து செய்யப்பட்டது

1969௭1 நேரடி ராணுவ ஆட்சி ராணுவ தளபதி யாஹ்யா கான் ராணுவப் புரட்சி

1971௭7 உண்மையான ஜனநாயக ரீதியிலான ஆட்சி சுல்பிகார் அலி பூட்டோ ராணுவச் சட்டத்தை நீக்கினார்  (1971 இந்தியா- பாகிஸ்தான் போர் நடந்த காலம் )

1977- 85 நேரடி இராணுவ ஆட்சி முகமது ஜியா-உல்- அக்  இராணுவ சதிப் புரட்சி

1985௮8 மறைமுக இராணுவ ஆட்சி (இராணுவ ஜனாதிபதி) மீண்டும் இராணுவ அதிகாரிகள் ஜனாதிபதிகளாக நியமிக்கப்பட்டனர்.

1988௯9 இராணுவம் முதன்மையுடன் கூடிய  மக்களாட்சி ஜனாதிபதியின் தன்னிச்சையான அதிகாரம் பறிக்கப்பட்டது.  இராணுவத்தின் மறைமுக தலையீடு தொடர்ந்தது.

1999௨002 நேரடி இராணுவ ஆட்சி பர்வேஷ் முஷாரப் இராணுவ சதிப் புரட்சி

2002-07 மறைமுக இராணுவ ஆட்சி (இராணுவ ஜனாதிபதி ) மீண்டும் இராணுவத் தளபதிகள் ஜனாதிபதிகளாக நியமிக்கப்பட்டனர்.

2008 முதல் தற்போது வரை இராணுவம் முதன்மையுடன் கூடிய  மக்களாட்சி இராணுவத்தின் மறைமுக தலையீடு தொடர்கிறது