Showing posts with label கொழும்பு. Show all posts
Showing posts with label கொழும்பு. Show all posts

Friday, September 15, 2023

மீண்டும் ஓங்கி ஒலிக்கும் சர்வதேச விசாரணை


 இலங்கையில் நடைபெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தின்போது நடைபெற்றதாகக் கூறப்படும் சம்பவங்களை வெளிக்கொண்டுவர சர்வதேச  விசாரணை தேவை என  விடுக்கப்பட்ட கோரிக்கைகளை  இலங்கை அரசாங்கம் கடுமையாக  மறுத்தது. உள்ளகப் பொறிமுறையில் விசாரணை செய்யப்போவதாக அறிவித்த இலங்கை இன்றுவரை  ஒரு அடி கூட முன்னுக்கு நகரவில்லை.

ஈஸ்டர் தின தொடர் தாக்குதல்கள் தொடர்பாக சனல்4 வெளிஒயிட்ட காணொளி இலங்கை அரசியலில் அதிர்ச்சியைத் தோற்றுவித்துள்ளது. சனல் 4 வெளியிட்ட ஆவணப் படம்  பொய் என அன்றைய ஆட்சியாளர்கள்  கூறியுள்ளனர். அதேவேளை சர்வதேச  விசாரணைதேவை என்ற  குலலும்  ஓங்கி ஒலிக்கிறது.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான சதித்திட்டம் குறித்து சுதந்திரமான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், தங்கள் கடமையை புறக்கணித்த உயர் போலீஸ் அதிகாரிகளை பணி இடைநீக்கம் செய்ய வேண்டும் என்றும் இலங்கை கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் கர்தினால் மல்கம் ரஞ்சித், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஏப்ரல் 21, 2019 அன்று ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல், தற்போதைய உளவுத்துறை தலைவர் சுரேஷ் சல்லே சம்பந்தப்பட்ட சதி என்று பிரித்தானியாவை தளமாகக் கொண்ட சேனல் 4 ஆவணப்படம் விசில் புளோயர்களின் குற்றச்சாட்டுகளுடன் வெளிப்படுத்தியதை அடுத்து கார்டினலின் புதிய கோரிக்கைகள் வந்துள்ளன.

2019 தேர்தலில் ராஜபக்சேவை ஆதரித்த கார்டினல் மால்கம் ரஞ்சித், தாக்குதலின் பின்னணியில் உள்ள உண்மையையும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியையும் கோரி வருகிறார். ஈஸ்டர் ஞாயிறு ஆராதனைகளின் போது மூன்று சொகுசு ஹோட்டல்கள் மற்றும் மூன்று தேவாலயங்களை குறிவைத்து இஸ்லாமிய தீவிரவாதிகள் நடத்திய தொடர் தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் உட்பட குறைந்தது 269 பேர் கொல்லப்பட்டனர்.

ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பில் பலியானவர்களுக்கு 310 மில்லியன் ரூபா நட்டஈடு வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அப்போதைய உளவுத்துறை தலைவர் நிலந்த ஜயவர்தன உள்ளிட்ட 4 அதிகாரிகளுக்கு இலங்கை உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்றத்தினால் அபராதம் விதிக்கப்பட்ட ஜயவர்தன மற்றும் ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையில் தொழில்முறை அலட்சியம் காரணமாக பெயரிடப்பட்ட மற்றொரு சிரேஷ்ட அதிகாரி தேசபந்து தென்னகோன் ஆகியோரை புதிய விசாரணை முடியும் வரை சேவையில் இருந்து இடைநிறுத்துமாறு கர்தினால் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

தாக்குதல்கள் தொடர்பான பல விசாரணைகளின்படி, ஒருங்கிணைந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களுக்கு 17 நாட்களுக்கு முன்னர், அண்டை நாடான இந்தியாவில் உள்ள புலனாய்வு அமைப்பு விடுத்த எச்சரிக்கைகளுக்கு இலங்கை அதிகாரிகள் செயல்படத் தவறிவிட்டனர் எனவும் அவர் தெரிவித்துள்லார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள்  ஆணையாளர்  செயித் அல் ஹுசைன்  இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் குறித்து வ்ர்ளியிட்ட அரிக்கையில்,  உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக சர்வதேச ஆதரவுடன் சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைக்கு அரசாங்கம் தயாராக இருப்பதாக நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார். அதேவேளை  ஈஸ்டர் குண்டுவெடிப்பு தொடர்பாக சனல் 4 அம்பலப்படுத்தியமை தொடர்பில் அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளராக அப்போதைய காதினால் உட்பட பெரும்பான்மையானவர்கள் நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவார் என்ற நம்பிக்கையில் கோட்டாபய ராஜபக்சவை ஆட்சிக்கு கொண்டு வந்தனர் என்றும், தற்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியிலுள்ள சூத்திரதாரிகளை வெளிநாட்டு விசாரணை மூலம் தற்போது வெளிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் உண்மையைக் கண்டறிய இந்நாட்டு ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்காமைக்கு வருந்துவதாகவும், இதற்குக் காரணமான சூத்திரதாரிகளை கண்டறிவதை இந்நாட்டில் செய்ய முடியாது என்றும், இது குறித்து சர்வதேச விசாரணை தேவை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று(05) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

காதினால் அவர்கள் அந்நேரத்தில் தனக்கு எதிராக வாக்களிக்கச் சொன்னதற்கு தாம் வருத்தப்படவில்லை என்றும், உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் ஏற்பட்ட வலிதான் அதற்கு காரணம் என்றும், அதே வலி இன்றும் கத்தோலிக்க சமூகத்தில் இருப்பதாக தெரிவித்த எதிர்கட்சித் தலைவர், காதினால் மற்றும் கத்தோலிக்க சமூகத்தை அவமதிக்காமல், இது தொடர்பாக முறையான சர்வதேச விசாரணை உடனடியாக நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஆட்சிக்கு வருவதற்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பயன்படுத்தப்பட்டது என்றும் சபாநாயகர் உட்பட மொட்டின் அனைவரும் அப்போது தேர்தல் மேடைகளில் இதையே பேசினார்கள் என்றும், இன்றும் நீதி கிடைக்காததால், காதினால் மற்றும் கத்தோலிக்க சமூகத்தை மேலும் அவமதிக்காமல், முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர்   மேலும் தெரிவித்தார்.

சர்வதேச விசாரனைக்கு தமிழ் மக்கள் அழைப்பு விடுத்தபோது அதனைத் தட்டிக்  கழித்தச்வர்கள்,  இன்ரு சர்வதேச விசாரனை தேவை  என  முழக்கமிடுகின்றனர்.சர்வதேசத்தின் தலையீடு இல்லாம  எதனியும் செய்ய முடியாது என்பதை  சில அரசியல்வாதிகளும், ஏனையவர்களும்  இப்போதுத்சான்  புரிந்துகொண்டார்கள்.

Tuesday, September 12, 2023

அதிர்ச்சி தந்த சனல் 4


 உலக சாம்ராஜ்யங்களைப் புரட்டிப் போட்டதில் ஊடகங்களின் பங்கு   மிக  முக்கியமானது. ஊழல் சதி, புரட்சி  போன்ரவற்றைமுன் கூட்டியே கணித்து எச்சரிக்கைவிடும்  ஊடங்கள்  ஒரு புறம்  உள்ளன. வெளி  உலகுக்குத் தெரியாது  மறைக்கப்பட்ட உண்மைகளைத் தோண்டி எட்சுத்து வெளியிடும் ஊடகங்கள் இன்னொருவகை.

பிரித்தானியாவில்  இயங்கும் "சனல் 4" வெளியிடும் காட்சிகள் சில நாடுகளைச் சங்கடப்படுத்தியுள்ளன. பிரித்தானியாவின் சேனல் 4 கடந்த செவ்வாய்க்கிழமை     இரவு இலங்கை தொடர்பான  காணொளி ஒன்றை வெளியிட்டதால்  அதிர்வலைகள் ஏற்பட்டுள்ளன. 2019-ம் ஆண்டு  ஈஸ்டர் தினத்தன்று நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்புகளில் வெளிநாட்டவர்கள்  உட்பட  269 பேர் பலியாகினர். உலகையே அதிரவைத்தது இந்த தற்கொலைப்படைத் தாக்குதல் சம்பவங்களால் இலங்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டது. சனல் 4 வெளியிட்ட 50 நிமிட காணொளி பேசு பொருளாக  மாறியுள்ளது.

பிள்ளையான் குழுவின் ஊடகப் பேச்சாளராக இருந்த அசாத் மௌலானா  பல தகவல்களை சமர்ப்பித்துள்ளார். இலங்கையில் நிதிக் குற்றச்சாட்டுக்கள் காரணமாக தற்போது சுவிட்சர்லாந்தில் அரசியல் தஞ்சம் பெற்றுள்ளனர் அசாத் மௌலானா.இந்த நிகழ்ச்சியில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக நீண்ட விமர்சனத்தை முன்வைத்து பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தப்பட்டுள்ளன.

காணொளியில் பெரும்பாலான பகுதிகள்  லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பில் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில்,  அசாத் மௌலானாவும் குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தும் அறிக்கைகளை வெளியிட்டிருந்தார்.பிள்ளையான் குழுவுடன் இணைந்து ட்ரிபொலி பிளட்டூன் என்ற ஆயுதக் கும்பலை அன்றைய அரசாங்கம் உருவாக்கி, ஊடகங்களை அடக்குவதற்கும் எதிரணியினரை மௌனமாக்குவதற்கும் பயன்படுத்தியதாக அசாத் மௌலானா இதன்போது தெரிவித்திருந்தார்.

 ஈஸ்டர் தாக்குதல் பற்றிய தகவல்களுக்காக , வௌ்ளை வான்குற்றச்சாட்டின் போது நாட்டை விட்டு தப்பிச் சென்ற குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் சிரேஷ்ட அதிகாரி நிஷாந்த சில்வா, வௌ்ளை கொடி வழக்கின் சாட்சியாளராக இருந்த ஊடகவியலாளர் பிரட்ரிக்கா ஜேன்ஸ், படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்  லசந்த விக்ரமதுங்கவின் சகோதரர் லால் விக்கிரமதுங்க மற்றும் பெயர் குறிப்பிடப்படாத பிற நபர்கள் சிலரின் வாக்குமூலங்கள் பயன்படுத்தப்பட்டிருந்தன.

இந்த காணொளியில் கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின்  அம்பிகா சத்குணநாதன் மற்றும் முன்னாள் இராஜதந்திர அதிகாரி சரத் கொங்கஹகே ஆகியோரின் வாக்குமூலங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

பிள்ளையானின் அறிவுறுத்தலின் பேரில் 2018 ஜனவரி மாதம் புத்தளம் கரடிப்புல் பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் தௌஹீத் ஜமாஅத் உறுப்பினர்களுக்கும் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தலைவராக இருந்த சுரேஷ் சலேவுக்கும்   இடையில் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுத்ததாகவும் இதில்  சஹ்ரான் உள்ளிட்ட ஜமாஅத் உறுப்பினர்கள் 6 பேர்  கலந்து கொண்டதாக அசாத் மௌலானா தெரிவித்தார். அந்த சந்திப்பின் முடிவில் தன்னிடம் வந்த சுரேஷ் சலே, ராஜபக்ச ஆட்சிக்கு வர நாட்டில் பாதுகாப்பற்ற சூழலை உருவாக்க வேண்டும் என்று கூறியதாக அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், சேனல் 4  ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் குறித்த ஆவணப்படத்தை தயாரித்த பேஸ்மென்ட் பிலிமிஸ் நிறுவனத்தின் ‘பென் டி பெயார்’, அரச புலனாய்வு சேவையின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது நான்கு குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்.

மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, கேள்விகளுக்கு பதில் கடிதம் அனுப்பி குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ள நிலையில்,  சேனல் 4 காணொளியில் அது குறிப்பிடப்பட்டுள்ளது.

மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, இது தொடர்பான குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய்யானவை எனவும் கூறப்படும் சந்திப்பின் போது தாம் மலேசியாவில் தங்கியிருந்ததாகவும் ஈஸ்டர் தாக்குதலின் போது இந்தியாவில் பயிற்சி நிகழ்ச்சியில் பங்கேற்றதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் குற்றச்சாட்டுகளை உள்ளடக்கிய நம்பகமான ஆதாரங்கள் இல்லாமல் தொடர்புடைய அறிக்கை நிகழ்ச்சியை ஒளிபரப்பினால் சட்ட நடவடிக்கை எடுப்பேன் என்று நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் பென் டி பியரிடம் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நிலையில் இலங்கையில் ஈஸ்டர் குண்டுவெடிப்புகள் தொடர்பில் சர்ச்சைக்குரிய வீடியோவை ஒளிபரப்பிய இங்கிலாந்தின் சேனல் 4,  வீடியோக்களை அகற்றியுள்ளது.

அதன் இணையதளம் உட்பட அனைத்து சமூக வலைத்தளங்களிலிருந்தும் சர்ச்சைக்குரிய வீடியோவை நீக்கியுள்ளது.

பிரித்தானியாவின்  ‘சனல் 4 ‘ செய்திச் சேவை வெளியிட்டுள்ள ஆவண தொகுப்பில் வெளியாகியுள்ள, உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதலின் பின்னணியில் இருந்ததாகக் கூறப்படுகின்ற பாரிய சூழ்ச்சி மற்றும் அதனூடனான சகல விடயங்களும், அதில் குறிப்பிடப்படுகின்ற நபர்கள் தொடர்பிலான விசாரணையொன்று சுயாதீன சர்வதேச விசாரணை குழு ஒன்றின் மூலமாக நடத்தப்பட வேண்டும் என கொழும்பு மறை மாவட்ட பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை வலியுறுத்தினார்.

இந்த விசாரணை  சுயாதீனமான முறையில் நடத்தப்பட வேண்டுமானால், இந்த விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்ற மற்றும் தற்போதும் புலனாய்வு பிரிவுகளைப் போலவே பொலிஸ் திணைக்களங்களில் உயர் பதவிகளில் இருக்கின்ற சகல அதிகாரிகளினது சேவைக்காலம், இந்த விசாரணை முடிவடையும் வரையில் இடைநிறுத்தப்பட‍ வேண்டும் என மேலும் குறிப்பிட்டார்.

தற்போது வெளியாகியுள்ள ‘சனல் 4 ‘ செய்திச் சேவை ஆவணத் தொகுப்பில் வெளியாகியுள்ள விடயங்கள் தொடர்பில் இந்நாட்டு மக்கள் அனைவரும் தங்களது கவனத்தை செலுத்துமாறும் பேராயர் பொது மக்களிடம் கோரிக்கை  விடுத்திருந்தார்.

பிரித்தானியாவின்  ‘செனல் 4 ‘ செய்திச் சேவை வெளியிட்டுள்ள ஆவண தொகுப்பு குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் ஊடக சந்திப்பொன்று கொழும்பு பேராயர் இல்லத்தில் நடைபெற்றது. இதன்போதே  கர்தினால் ஆண்டகை  மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேற்குலகு ஊடகங்கள் இலங்கையின் கொலைககளம் குறித்த அவணப்படத்தை அடிப்படையாக கொண்டு கட்டுரைகளையும், ஆயு;வுகளையும் தொடர்ந்து மேற்கொள்ளும் நிலையில், இலங்கை அரசாங்கமோ சனல் 4 தொலைககாட்சி ஒளிபரப்பிய ஆவணப்படம் போலியானது என்றே தொடர்ந்தும் குறிப்பிட்டு வருகிறது.

ஆவணப்படம் வெளியானவுடன் இதுதொடர்பில் அறிக்கை வெளியிட்ட பிரிட்டனிலுள்ள இலங்கைத் தூதரகம், குறித்த காட்சி போலியானதென வர்ணித்திருந்ததுடன், காட்சிகளில் திட்டமிட்டு படுகொலை செய்யப்படுவதை அவதானிக்க முடிவதாகவும், சில சர்வதேச ஊடகங்கள் சிலரை திருப்திபடுத்தும் நோக்குடன் செயற்படுவதாகவும் கவலை வெளியிட்டிருந்தது. 

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸ சனல் 4 ஆவணப்படம் வெளியானவுடன் குறித்த படம் புலிகளின் பணத்தில் மேற்கொள்ளப்பட்ட போலி ஒளிப்பதிவு எனவும், புலிகள் தமது பணத்தின் மூலம்  சனல் 4 தொலைககாட்சியை மீண்டுமொருமுறை பயன்படுத்திக் கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

இறுதி யுத்தத்தில் பொதுமக்களை காப்பற்ற இராணுவம் தன்னை அர்ப்பணித்திருந்ததாகவும், சரணடைந்த புலிகள் மனிதாபிமானத்துடன் நடத்தப்பட்டதாகவும், இதற்கு தமிழ் செல்வனின் மனைவி, சூசையின் மனைவி, பிரபாகரனின் பெற்றோர் உதாரணமெனவும் கோத்தாபய ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அரசாங்கம் முற்றாக சனல் 4 தொலைககாட்சி ஒளிபரப்பிய இலங்கையின் கொலைககளம் என்ற ஆவணப்படத்தை நிரகரித்துள்ள நிலையில சில அரசியற் கட்சிகளிடமிருந்து இலங்கை மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஆராயப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளன. குறிப்பாக ஜே.வி.பி. இந்த விசாரணையின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளது.

அத்துடன் மனோ கனேசனும் சனல் 4 ஆவணப்படம் குறித்து இலங்கை விசாரணை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தியுள்ளார், தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இந்நிலைப்பாட்டை கொண்டிருப்பதையே அவதானிக்க முடிகிறது.

Friday, August 25, 2023

குருந்தூர் மலையில் குவிந்த பக்தர்கள்

குருந்தூர்மலை ஆதிசிவனின் ஆதி சிவனின்  பொங்கல்  கடும்  பாதுகாப்புக்கு மத்தியிலும்  நெருக்கடி நிலையிலும் நடந்துள்ளது. நூற்றுக்கணக்கான மக்கள் ஒன்றிணைந்து வழிபாடு செய்து பொங்கினார்கள்.  குருந்தூர்  மலையில்  பொங்கல் என்றதும்  இனவாதிகள்  பொங்கி எழுந்தார்கள். சிவனுக்கு பொங்கல் நடந்த அதே நேரம் பௌத்த விகாரையில் பௌத்த மக்களும்,  பௌத்த துறவிகளும்  இணைந்து வழிபாடு செய்தார்கள்.

முல்லைத்தீவு- குவிவு குமுளமுனை வீதியில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு  குருந்தூர் மலை நோக்கி செல்லும் தமிழ் மக்கள் பொலிஸாரினால் சோதனைக்கு உட்படுத்தப்படடனர். ஆனால்,  இரவோடு இரவாக பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த மக்கள் பேருந்துகள், உழவு இயந்திரங்கள் சகிதம் அங்கு  சென்றுள்ளதாக்காத தெரிய வருகிறது. குருந்தூர் மலையில் அதிகளவான பொலிஸார் மற்றும் சிறப்பு அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

பொங்கல் நடைபெறுவதற்கான அறிவித்தல் விடுக்கப்பட்ட   பின்னர் தெற்கில்  இருந்து அழுத்தங்களும் எச்சரிக்கைகளும் விடப்பட்டன.   சிங்கள அரசியல்வாதிகளின்  பேச்சுகள்  எல்லை தாண்டின. குருந்தூர்    பிரசாரங்கள்  கட்டவிழ்த்து  விடப்பட்டன. பதவியாவில்  சுவரொட்டிகள்  ஓட்டப்பட்டு  அழைப்பு விடுக்கப்பட்டது. தமிழ்  மக்களின்  பொங்கலை  நிறுத்துவதற்கு  பொலிஸாரும் முயற்சி செய்தனர்.  தொல்பொருள் திணைக்களமும்    களத்தில் இறங்கியது. தமிழ் மக்களின்  பொங்கலால்  புராதன சின்னங்களைக்கப்பட்டு விடும் என  தொல்பொருள் திணைக்களம்  அஞ்சியது . இலங்கையில்  உள்ள தொல்பொருள் திணைக்களம்     சிங்கள   பெளத்தத் துக்கானது  என்ற   ரீதியிலேயே  செயற்படுகிறது.

குருந்தூர் மலையில்   இடம்பெறும் பொங்கல் நிகழ்வையும் பௌத்த வழிபாடுகளையும் தடுக்குமாறு கோரி முல்லைத்தீவு பொலிஸார் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில்    அறிக்கை தாக்கல் செய்தனர்.

இதில் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர் பீட்டர் இளஞ்செழியன் மற்றும் குருந்தூர் மலை பௌத்த பிக்கு கல்கமூவ சாந்தபோதி , அருண் சித்தார்த் ஆகியோருக்கு எதிராக இந்த தடை உத்தரவை பிறப்பிக்குமாறு பொலிஸார் மன்றில் AR அறிக்கை ஒன்றை சமர்ப்பித்து குற்றவியல் நடைமுறைச் சட்டக்கோவையின் பிரிவு 106(1) கீழ் தடை உத்தரவை வழங்குமாறு கோரியிருந்தனர்.

வன்னி பிராந்திய தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் T .ஜெயதிலக என்பவரால் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் பொங்கல் நிகழ்வுக்கு எதிராக   (16.08.2023) முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதற்கு அமைவாக பொலிஸார் இந்த தடையுத்தரவை கோரியுள்ளனர்.

 இந்த பொங்கல் நிகழ்வுகள் வழிபாடுகள் இடம்பெற்றால் இனங்களுக்கு இடையிலே முறுகல் நிலை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் சமாதான குலைவு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தெரிவித்து பொலிஸார் இந்த தடை உத்தரவை மேற்படி நபர்களுக்கு எதிராக கோரியிருந்தனர்

அத்தோடு வவுனியா தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் ஜயதிலக பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் படி இந்த பொங்கல் நிகழ்வு நடைபெற்றால் தொல்லியல் சின்னங்களுக்கு பாதிப்பு ஏற்படும் இதற்கு முதல் கடந்த மாதம் 14 ஆம் திகதி அந்த இடத்தில் இந்து மக்களால் பூஜை வழிபாடுகளை மேற்கொள்ள வந்தபோது, தொல்லியல் பிரதேசத்திற்குள் வெவ்வேறு பூஜை பொருட்கள், பாதுகாப்பற்ற உபகரணங்களைக் கொண்டுவந்து அவற்றுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் நடந்துகொண்ட தைப்போல் இந்த தினத்திலும் அவ்வாறு நடைபெற வாய்ப்புள்ளது


அத்தோடு இந்த இடத்திற்கு பல்வேறு கட்சிக்காரர்கள் வந்து மத ரீதியான கலவரம் ஏற்படக்கூடியதாக உள்ளது எனவும் அந்த நேரத்தில் ஏதேனும் உயிராபத்து ஏற்படக்கூடிய நிலை உள்ளதால் அதை தடுப்பதற்காக நீதிமன்றத்தின் முன் நிவாரணமான நீதிமன்றத்தின் தடை உத்தரவை கோரி நிற்கின்றோம் என  பொலிஸார்  தெரிவித்தனர்.

ந்த இடத்தின் அமைவிடத்தின் அடிப்படையில் அவ்வாறான ஒரு கலவரத்தை தடுப்பதற்கு மிகவும் கடினமாகும். இச்சந்தர்ப்பத்தில் பாரதூரமான காயங்கள் ஏற்பட்டால் மிகவும் கடினமான பாதையூடாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதும் கடினம். 

ஆகவே கெளரவ மன்று !  18 ஆம் திகதி நடைபெறவுள்ள பொங்கல் உற்சவம் மற்றும் அது தொடர்பாக அங்கு வருகின்ற அந்த கட்சிக்காரர்கள் அத்தோடு அதற்காக அங்கு வருவதாக கூறுகின்ற ஏனைய கட்சிக்காரர்களின் வருகையை தடுத்து அன்றைய தினத்திற்கு மாத்திரம் நடைபெறகூடிய மதங்களுக்கு இடையிலான மதக் கலவரத்தை தடுத்துக் கொள்வதற்காக, பாதுகாத்துக் கொள்வதற்காக இந்த மத வழிபாட்டு நிகழ்வுகளை தடை செய்யுமாறு கோருகின்றோம் என பொலிஸார் தமது அறிக்கையின் ஊடாக மன்றில் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பொலிஸாரின் அறிக்கையை ஆராய்ந்த மன்று பொலிஸாரின் விண்ணப்பத்தை நிராகரித்து கட்டளை ஒன்றை ஆக்கியுள்ளது.

நீதிமன்றம் வழங்கிய இந்த கட்டளையில் புராதன சின்னங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அப்பிரதேச மக்கள் தங்களது மத ரீதியான பூஜை வழிபாடுகளை மேற்கொள்ளலாம் என்ற கட்டளையை மீறுவதற்கு இந்த நீதிமன்றுக்கு இயலுமை இல்லை.

மேலும் ஒரு நபர்  தமக்கு விரும்பிய மதத்தை பின்பற்றலாம் என்பது இந்த நாட்டின் அரசியலமைப்பின் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட அடிப்படை உரிமையாகும். எனவே அது தொடர்பிலான மதவழிப்பாடுகளை மேற்கொள்வதும் ஒருவருக்கு உள்ள அடிப்படை உரிமையாகும்.

ஒருவரது மத வழிபாடுகளுக்கு மற்றைய தரப்பினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றார்கள் என்பதற்காக ஒருவரது மதவழிபாடுகளை தடுக்க தடை கட்டளை வழங்க முடியாது .

மதவழிபாடுகளை  தடை செய்வதானது பாரதூரமான குற்றம்

குருந்தூர்மலை பிரதேசத்திலுள்ள தொல்பொருள் சின்னங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பூஜை வழிபாடுகளை மேற்கொள்வதற்கு, அப்பிரதேச மக்களுக்கு உள்ள உரிமையைத் தடுப்பதற்கு இந்த வழக்கின் கட்சிக்காரர்களாக குறிப்பிடப்படப்படும் விகாராதிபதி சாந்தபோதி தேரருக்கோ அல்லது அவருடன் வரும் குழுவினருக்கோ அருண் சித்தார்த் என்பவருக்கோ அல்லது அவருடன் வரும் குழுவினருக்கோ எந்தவிதமான அதிகாரமும் இல்லை என தெரிவித்துள்ளது.

அத்தோடு ஒரு மதத்தினரின் மத வழிபாடுகளை இன்னும் ஒரு மதத்தினர் தடை செய்வதானது ஒரு பாரதூரமான குற்றம் ஆகும். அவ்வாறு ஒரு மதத்தினரின் மதவழிபாடுகளை தடை செய்பவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்கு பொலிஸாருக்கு அதிகாரம் உள்ளது. அதே போல இந்த வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள துரைராசா ரவிகரன், பீற்றர் இளஞ்செழியன் மற்றும் அவர்களுடன் சேர்ந்தவர்களால் மேற்கொள்ளப்படவுள்ள பொங்கல் வழிப்பாட்டின்போது தொல்லியல் சின்னங்களுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் பொலிஸாருக்கு உண்டு என்பதனையும் மன்று தனது கட்டளையில் குறிப்பிட்டுள்ளது.

ஒரு குற்றச்செயல் புரியப்பட்டால் அந்த குற்றத்தை புரிந்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு ஏற்பாடுகள் இருக்கின்ற பொழுது குற்றவியல் நடவடிக்கை முறைச் சட்டக்கோவையின் பிரிவு 106இன் ஏற்பாடுகளை பயன்படுத்தி அதனைத் தடை செய்யும் நடைமுறை தேவையற்றது என மன்று கருதுகின்றது.

 அவ்வாறானால் ஒவ்வொரு குற்றச்செயல் நடைபெறும் இடங்களுக்குச் சென்று ஒவ்வொரு குற்றச்செயல் புரிபவர்களுக்கு எதிராகவும் தடை உத்தரவு பெற்றுக்கொள்ள வேண்டிய நிலைமை உருவாகும். எனவே மேற்படி காரணங்களின் அடிப்படையில் பொலிஸாரினால் கோரப்பட்ட குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவையின் பிரிவு 106(1)இன் கீழான தடைக் கட்டளை மீதான விண்ணப்பத்தை மன்று நிராகரித்து கட்டளை ஆக்கியுள்ளது.

அரசியல்,பொலிஸ், தொல்பொருள் திணைக்களம் ஆகியன  இணைந்து மேற்கொண்ட முயற்சியை  நீதிமன்றம்    முறியடித்தது .

 

Wednesday, August 16, 2023

அரசியல்வாதிகளை உசுப்பிவிட்ட 13 ஆவது திருத்தல் சட்டம்


 


இலங்கை அரசியலில் அண்மைக்
  காலமாக  13  ஆவது திருத்தச்  சட்டம்  பேசுபொருளாகி உள்ளது. ஜனாதிபதி ரணில் 13 ஐ கையில் எடுத்துள்ளார்.அதன் சாதக பாதகங்களை அலசி ஆராய்ந்து  நிறைவேற்ற  வேண்டும்  என்பதில் உறுதியாக  இருக்கிறார். 1987 ஆம் ஆண்டே தாமிழளர்களாலும்  ,  சிங்களவர்களாழும்  நிராகரிக்கப்படட 13  க்கு ஒடிஸிசன்  கொடுக்க  ரணில்  முயற்சிக்கிறார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் நே  சர்வகட்சி மாநாட்டை க் கூட்டி  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  தனது  நிலைப்பாட் டைத் தெரிவித்தார்

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் தொடர்பில் தமிழ்க் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுடன் மாத்திரம் கலந்துரையாடுவது போதுமானதல்ல எனவும் அது முழு நாட்டிலும் தாக்கம் செலுத்தும் விடயம் என்பதால் அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடி தீர்மானம் எடுக்க வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

தேசிய நல்லிணக்க வேலைத்திட்டம் மற்றும் வடக்கு-கிழக்கு அபிவிருத்தித் திட்டம் குறித்து பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்களின் கருத்துக்களைப் பெறுவதற்காக இந்த சர்வகட்சி மாநாடு கூட்டப்பட்டது.

பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பதற்கு, புதிய சட்டங்களை நிறைவேற்றும் அதிகாரம், தனக்கு மாத்திரமன்றி இதற்கு முன்னர் பதவியில் இருந்த நிறைவேற்று அதிகாரமுடைய ஏழு ஜனாதிபதிகளுக்கும் இருக்கவில்லை என்றும் புதிய சட்டங்களை நிறைவேற்றும் அதிகாரம் பாராளுமன்றத்திற்கே இருப்பதாகவும் தெரிவித்தார்.

நாட்டிற்காக இந்த யோசனைகளை முன்வைப்பது மாத்திரமே தனது கடமை என்றும், இதனை பாராளுமன்றமே நிறைவேற்ற வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அத்துடன், பாராளுமன்றத்தில் ஒரேயொரு வாக்கு மட்டும் வைத்துக்கொண்டு இதனை செய்ய முடியாது என்றும் இந்தப் பணிகளை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைவரும் கூட்டாக அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். 

பொலிஸ்  அ திகாரம் வேண்டும் என்பதே  தமிழ் அரசியல்வாதிகள்  நிலைப்பாடு . பொலிஸ்  அதிகாரம்  இல்லை என்கிறார்ரானில். இன்று பாராளுமன்றத்தில்  இருப்பவர்களில்  பலர் 13 ஐ தமது விருப்பத்துக்கு ஏற்றவாறு திரிபு படுத்துகின்றனர்.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் 1987 இல் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இன்றும் அது தொடர்பான பல பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை.

13 ஆவது திருத்தச்  சட்டம்  பிரிவினை வாதத்தை உருவாக்கும் என்பது சரத் வீரசேகரவின் கண்டுபிடிப்பு. அவருடைய கருத்துடன் பல சிங்களத் தலைவர்கள்   ஒத்துப்போகின்றனர். 13 க்கு ரணில்  உயிர் கொடுக்க  முயற்சிக்கிறார். சிங்களக் கடும் போக்குவாதிள்    13 ஐ மிக  கடுமையாக எதிர்க்கிறார்கள்.

இந்தியா மறந்து  போன 13 ஐ ஞபகப்படுத்தி   தமிழ் த் தலைவர்கள்  இந்திய மத்திய அரசுக்கு அடிக்கடி கடிதம் எழுதுகிறார்கள்.  தமிழக முதல மை ச் சராக  ஸ்டாலிளின்  பதவி  ஏற்ற பின்னர்  ஒரு  நினைவுக்  கடிதத்தை   அனுப்பினார்கள். அங்கிருந்து  ஒரு சத்தமும்  இங்கு வரவில்லை.

இலங்கையில்  நடவ்த்து இனப்படுகொலையை  இல்லையா என்பதை தமிழ் அரசியல் தலைவர்கள்  பட்டிமன்றம்  நடத்துகிறார்கள்.  இவ்த்தை விலையில்   இந்திய உள்துறை  அமைச்சர் அமித் ஷா , இலங்கையில்  நடந்தது இனப்படுகொலை என  பகிரங்கமாக அறிவித்துள்ளார்.  இதனால் தமிழ் மக்கள் சந்தோஷப்   படமுடியாது.  இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்காக  அமித் ஷா   இலங்கை விவகாரத்தில் மூக்கை  நுழைக்கிறார். தமிழக  வாக்குக்காக சொன்ன அமுத ஷா  தேர்தல் முடிந்ததும்  மற ந்துவிடுவார்.

ஜனாதிபதித் தேர்தல்வரை   13 வண்டி ஓடும்.

 


Tuesday, August 1, 2023

பிளாஸ்டிக் மாசுக்கு எதிரான போராட்டம்


  உலகளாவிய ரீதியில் மக்கள்  பாவிக்கும் அத்தியாவசியப்  பொருட்கள்ல்  ஒன்றாக பிளாஸ்டிக் உள்ளது.காய்கறி, பால், துணிக்கடைகள், மருந்துக்கடைகள், மின்னணு சாதனங்கள், மளிகைப் பொருட்கள், தேனீர்க் கடைகள், வாகனப் பொருட்கள், உணவுப் பொருட்கள் போன்ற எண்ணற்ற முறையில் பிளாஸ்டிக்கின் பயன்பாடு அதிகமாக உள்ளது. ஆனால் இவை உபயோகப்படுத்தப்படும் பிளாஸ்டிக்கின் நன்மைகள் அல்லது தீமைகள் பற்றி யாரும் சிந்திப்பது இல்லை. குறைந்த விலையில் பிளாஸ்டிக் பைகள்  கிடைப்பதாலும் வசதியாக இருப்பதாலும் மக்கள் அவற்றை அதிகமாக பயன்படுத்துகின்றன.

இலகுவாகக் கிடைக்கும்  பிளாஸ்ரிக்கினால்  உலகம் மாசடைந்துள்ளது. பிளாஸ்டிக் குப்பைகள்  உலக்ர்ங்கும்  பெரும்  பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.மழைகாலங்களில்  வெள்ளம் தங்குவதர்கும், நீரோட்டம் தடைப்படுவதற்கும்  பிளாஸ்ரிக்  முக்கியமானதாக  உள்ளது. குறைந்த விலையில் கிடைக்கும்  பிளாஸ்ரிக்கை அழிப்பது  இலகுவானதல்ல.

பிளாஸ்ரிக் பொருட்கள்   எளிதில் மக்கும் தன்மை அற்றவை. ஒரு சில நொடிகளில்  உருவாக்கப்படும் பிளாஸ்டிக் பையானது மக்குவதற்கு பல ஆண்டுகளாகும். மண்ணின் திறன் அமைப்பிற்கும், மற்றும் மண் சத்துக்களுக்கும் பிளாஸ்டிக்கானது கெடுதல் புரிகின்றது. பிளாஸ்டிக் நாட்டின் சூழ்நிலைகளையும் மாசுப்படுத்துகின்றன.பிளாஸ்டிக் என்பது நம்முடைய புவி சூழலை அழிக்கும் பொருட்களில் ஒன்றானது. பிளாஸ்டிக் பைகளே நமது அன்றாட வாழ்வில் உருவாகும் பிளாஸ்டிக் கழிவுகளாய் இன்று மிகப்பெரும் பிரச்சனையாக மாறியுள்ளது.பிளாஸ்டிக் என்பவை செயற்கை மூலக்கூறுகளால் உருவாக்கப்பட்டவை. இவை கிரேக்க மொழியில் “பிளாஸ்டிக் கோஸ்” என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு பெட்ரோலியம் வகையை சார்ந்தது.

பிளாஸ்ரிக்  மாசுபாட்டை கட்டுப்படுத்துவதற்காக ஹேமாஸ் குழுமம் Eco Spindles உடன் இணைந்து  அம்பாறையிலும் , கொழும்பிலும் இரண்டு அதிநவீன Baling தளங்களை நிறுவுகிறது. இந்த மூலோபாய ஒத்துழைப்பு மாதத்திற்கு 25,000 கிலோகிராம் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிப்பதன் மூலம் பிளாஸ்டிக் மாசுபாட்டின் அவசர சிக்கலைச் சமாளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. குழுமத்தின் சுற்றுச்சூழல் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப பொறுப்பான பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை நடைமுறைகளை மேம்படுத்துவதே முதன்மை இலக்காகும் என்று ஹேமாஸ் கூறியதுடன், அதன் இறுதி நுகர்வோர் பிளாஸ்டிக் கழிவுகளை ஈடுகட்ட வலுவான அர்ப்பணிப்புடன், ஹேமாஸ் குழுமம் Eco Spindles உடனான இந்த கூட்டாண்மையை தங்களது முயற்சிகளில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக கருதுகிறது. பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து பொறுப்புடன் அகற்ற வேண்டும்.

இந்த இரண்டு பேலிங் தளங்களில் முதலீடு செய்வதன் மூலம், நிறுவனம் அதன் பிளாஸ்டிக் கழிவு சேகரிப்பு முயற்சிகளை மேம்படுத்துவதையும், தேசிய தன்னார்வ விரிவாக்கப்பட்ட உற்பத்தியாளர் பொறுப்பு (EPR) முயற்சிக்கு தீவிரமாக ஆதரவளிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த வசதிகள் ஒரு வட்ட பொருளாதார மாதிரியை வளர்ப்பதிலும், கழிவுகள் மற்றும் மாசுபாட்டைக் குறைப்பதிலும், பொருட்கள் மற்றும் பொருட்களின் பயனுள்ள ஆயுளை நீட்டிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கும். கூடுதலாக, இரண்டு தளங்களை நிறுவுவது சுற்றியுள்ள சமூகங்களுக்கு, குறிப்பாக கழிவு சேகரிப்பவர்களுக்கு வாழ்வாதார வாய்ப்புகளை உருவாக்கும்.

Monday, July 24, 2023

மாற்றம் காணாத ஏமாற்ற அரசியல்


 டட்லி- செல்வா, பண்டா - செல்வா காலத்தில் ஆரம்பமான ஏமாற்ற அரசியல் ரணின் காலத்திலும் தொடர்கிறது. மாற்றம் ஒன்றே மாறாதது என்பார்கள்.  ஆனால்,  இலங்கை அரசியலில் ஏமாற்றமும் மாறாதது. 13 ஆவது திருத்தச் சட்டத்தைக் கையில் எடுத்து 36 வருடங்கள் கடந்து விட்டன. ஜனாதிபதியாகப் பதவி ஏற்ற ரணிலும் 13 ஐக் கையில் வைத்துக்கிண்டு அரசியல் செய்கிறார்.

இந்திய இலங்கை ஒப்பந்தம், 1987  ஆம் ஆண்டு அப்போதைய இந்திய பிரதமர் ராஜீவ் காந்திக்கும் , இலங்கை ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்தனவுக்கும் இடையே யூலை 29, 1987 ஆம் ஆண்டு ஈழத்தமிழர்களின் பிரச்சினைகளை தீர்க்கும் நோக்குடன் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தம் ஆகும். அந்த  ஒப்பந்தம் கோப்புகளில் மட்டும் தான்  இருக்கும் என்பதை  அன்றைய அரசியல் நிலை  வெளிப்படுத்தியது.

போர் என்றால் போர் சமாதானம் என்றால் சமாதானம் என்ற  தொனியுடன்  அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன வெளிப்படையாக தமிழர் எதிர்ப்பு அரசியலைக் கையில் எடுத்ததார். அதன் பின்னர் பிறேமதாச வெளிப்படையாக இந்திய எதிர்ப்புணர்வை விதைத்தார். இடசிய்ல் வந்த ஒருவர் மரம், செடி,கொடி என்ரார்.  சமாதானப் புறாவாக தோன்றைய சந்திரிகா  கடைசியில் எல்லாவற்றையும் கைவிட்டார். 13+ என்று  சொன்ன  மகிந்த ராஜபக்ஷ வும்  கைவிட்டார்.

இப்போது ரணிலின்  முறை. வாருங்கள் கதைக்கலாம் என வடக்கு, கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் அழைப்பு விடுத்க்தார்..வழக்கம்  போல சில தமிழ்த் தலைவர்கள்  முரண்டு பிடித்தனர். அவருடன் பேசி, ஆகப்போவது  ஒன்றும்   இல்லை என அவர்கள் சொன்னார்கள். அவர்கள் சொன்ன சாத்திரம் பலித்து விட்டது.

இந்தியாவுக்குச் செல்லும்  முன்பு தமிழ்த்தலைவர்களுடன்  பேசி முடித்து விட வேண்டும் என விரும்பிய ரணிலி ஆசை நிறை வேற்றப்பட்டது. பொலிஸ் அதிகாரம் இல்லை. வடக்கு கிழக்கு இணைப்பு இல்லை என்ற ஜனாதிபதியின் யோசனையைத் தமிழ்த் தலைவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது தொடர்பான சிறந்த யோசனையை தாம் தற்போது முன்வைத்துள்ளதாகவும், அதனை முன்னெடுத்துச் செல்வதா, இல்லையா என்பதைத் தமிழ்க் கட்சித் தலைவர்கள் தீர்மானிக்க வேண்டுமெனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.  பிரச்சனைக்குத் தீர்வைத் தமிழ்த்தைவர்கள்தான் தெரிவிக்க வேண்டும் என்று அழுத்தம்  கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக   ஜனாதிபதி ரணில் மேலும் கருத்துத் தெரிவிக்கையி,

“வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கவே தாம் விரும்புகின்றேன், அவர்களால் அரசியல் ஆதாயங்களைப் பெறுவது எனது நோக்கமல்ல.

 பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சித் தலைவர்களும் முழுமையான அதிகாரப் பகிர்வுக்கு இணங்கினால் மாத்திரமே அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியும்.

வடக்கு, கிழக்கு மக்களுக்கு   ஒருபோதும் அநீதி இழைக்கப் போவதில்லை. அவர்களுக்காக மேலும் ஏதாவது செய்ய வேண்டுமாயின் கலந்துரையாடல் மற்றும் இணக்கப்பாட்டின் மூலம் பாராளுமன்றத்தின் முழுமையான ஆதரவைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.அரசமைப்பின் 13ஆவது திருத்தம் தொடர்பிலான பரிந்துரைகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டு, பொலிஸ் அதிகாரங்கள் தவிர பிரேரணையில் முன்வைக்கப்பட்டுள்ள ஏனைய அனைத்து அதிகாரங்களையும் வழங்க முடியும்.பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சி தலைவர்களும் ஏற்றுக்கொண்டால் மாத்திரமே பொலிஸ் அதிகாரங்களை வழங்க முடியும். இதற்கு பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை தேவை.” என தெரிவித்துள்ளார்.


  சந்திரிகா  ஜனாதிபதியாக  இருந்தபோது சமர்ப்பித்த யோசனையை பாராளுமன்றத்தில் கிழித்து எறிந்தது யார் என்பதித் தமிழ் மக்கள் மறக்கவில்லை. சரத் வீர சேகர போன்ற சண்டியர்கள்  இருக்கும்  பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை  கிடக்கப்போவதில்லை.

இந்திய  - இலங்கை ஒப்பந்தப்படி  13 ஐ அமுல் படுத்த வேண்டும் கே.எஸ்.அழகிரி,அண்ணாமலி போன்ர தமிழகத் தலைவர்களும் வலியுறுத்துகின்றனர். வடக்கு ,குழக்கு தமிழ்த் தலைவர்கள்  இந்திய ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்திலும்  13 ஐ அமுல் படுத்துமாறு  கோரிக்கை விடுத்துள்ளனர். 

தமிழகத் தலைவர்களின் வலியுறுத்தல், வடக்கு, கிழக்கு தமிழ்த் தலைவர்களின் கோரிக்கை தொடர்பாக  இந்தியப் பிரதமர் மோடி ஏதாவது  கேட்டல் அதற்குப் பதிலளிப்பதற்கு  ஆயத்தமாக   ரணில் சென்றுள்ளார். எப்பவோ செத்துப்போன 13  ஐ ஐ.சி.யுவில் வைத்து உயிர் கொடுக்க  சிலர் முயற்சிக்கிரார்கள்.

 

Monday, July 17, 2023

மருத்துவமனை மரணங்கள் சொல்லும் சேதி என்ன?


 உயிர்காக்கும் தெய்வமாக மருத்துவர்கள்  போற்றப்படுகிறார்கள். வைத்தியசாலைகள் மீது மக்கள்  முழு நம்பிக்கை வைத்துள்ளனர். நோயாளிகளின் உயிரைக் காப்பாற்ருவதர்கு  அவித்தியர்கள்  போராடும்  போதுவிதிவசமாக  சில  உயிரிழப்புகள் ஏற்படுவதுண்டு. ஆனால், மயக்க மருந்துகளாலும், பூஞ்ஞைகளாலும் நோயாளிகள் மரணமாவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

கண்டி வைத்தியசாலையில் பூஞ்சை தொற்று காரணமாக ஏற்பட்டதாகக் கருதப்படும் ஏழு மரணங்கள் தொடர்பில் சுகாதார அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

நோயாளிகள் பெரிட்டோனியல் டயாலிசிஸ் தீர்வு, அங்கீகரிக்கப்பட்ட மருந்து மூலம் சிகிச்சை பெற்றனர். மருத்துவமனையில் ஜனவரியில் ஒரு மரணமும், ஜூன் மாதத்தில் ஐந்து மரணங்களும் பதிவாகியுள்ளன. மரணங்கள் உண்மையில் பூஞ்சை தொற்றினால் ஏற்பட்டதா என்பதை கண்டறிவதே விசாரணையின் நோக்கமாகும்.

பெரிட்டோனியல் டயாலிசிஸ் என்பது சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டால் இரத்தத்தில் உள்ள கழிவுகளை அகற்றும் ஒரு செயல்முறையாகும். டயாலிசிஸ் கரைசலின் வெவ்வேறு தீர்வுகளில் டெக்ஸ்ட்ரோஸ் அல்லது ஐகோடெக்ஸ்ட்ரின் வெவ்வேறு அளவுகள் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கொழும்பு - தேசிய கண் வைத்தியசாலையில் பெண் ஒருவர் கண் சத்திரசிகிச்சைக்குப் பின்னர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் உடனடி விசாரணை நடத்தப்பட வேண்டும் என சுகாதார நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.சத்திரசிகிச்சைக்கு முன்னர், மயக்க மருந்து கொடுக்கப்பட்டதால் ஏற்பட்ட சில சிக்கல்களால் பெண்ணின் மரணம் ஏற்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளதாக சுகாதார நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் சுட்டிக்காட்டியுள்ளார்.

பேராதனை சிறிமாவோ பண்டாரநாயக்க விசேட சிறுவர் வைத்தியசாலையில் (SBSCH) சத்திர சிகிச்சையின் பின்னர் குழந்தையொன்று திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  குழந்தையின் மரணத்திற்கு மயக்க மருந்தே காரணம் என்ற சந்தேகம் நிலவுவதாகவும் சுகாதார நிபுணர்கள் சங்கங்கள்,பெற்றோர் பகிரங்கமாக குற்றம்சாட்டியிருந்தனர்.

பேராதனை போதனா வைத்தியசாலையில் மயக்க மருந்தை செலுத்தியதில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக இரண்டு பெண்கள் உயிரிழந்ததாக இதற்கு முன்னர் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் செயலிழந்த மயக்கமருந்து தடுப்பூசி குழந்தைகளுக்கு வழங்கப்பட மாட்டாது எனவும், தடுப்பூசி போடப்பட்டதன் பின்னர் ஏற்பட்ட சிக்கல்களினால் இரண்டு வயது குழந்தை உயிரிழந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் பொய்யானது என்பதை உறுதிப்படுத்துவதாகவும் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மறுப்பு தெரிவித்துள்ளார்.

இக்குழந்தையின் மரணத்திற்கு வேறு காரணங்கள் இருக்கலாம் எனவும், ஆனால் மயக்க ஊசி செலுத்தியதன் விளைவால் ஏற்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை எனவும் எனினும் மரணம் ஏற்பட்டமை தொடர்பில் விசாரணை நடத்துமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

    சந்தேகத்துக்கிடமான  மருந்துகள் பாவனையில் இருந்து அகற்றப்பட்டதாக  அறிவிக்கப்பட்டுள்ளது.  நேர்மையான விசாரணையை மக்கள் எதிர்பார்க்கிறார்கள். மரணத்துக்கான காரணம் என்ன என்பதை  பொது  வெளியில் தெரியப்படுத்த வேண்டும். இவை எல்லாம்  வெளியிலே தெரிந்த  ஒரு சில அசம்பாவிதங்கள். வெளி  உலகுக்குத் தெரியாமல் அங்கும் இங்கும்பல தவறுகள் நடைபெறுகின்றன.அவற்றையும் ஆராய வேண்டியது அவசியம்.

தீராத ஆக்கிரமிப்பு ஓயாத போராட்டம்

விக்கிரமாதித்தன் கதைபோல வடக்கு, கிழக்கில்  ஏதோ  ஒரு வகையில் அரசாங்கம் ஆக்கிரமிப்பதும்  மக்கள் அதற்கு எதிராகக்  கிளர்ந்தெழுந்து  போராடுவதும்  தொடர் கதையாக  உள்ளன.  வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் வாழ்க்கையில் போராட்டமும்  ஒரு அங்கமாக  உருவெடுத்துள்ளது.

தையிட்டி  விகாரைக்கு எதிரான  போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கையில் மண்டை தீவில்  பொது மக்களின் காணியைக் கடற்படையின   கையகப்படுத்த மேற்கொண்ட முயற்சிக்குபதிலடியாக  போராட்டம் நடைபெற்றது.

வேலணைப் பிரதேச செயலாளர் பிரிவின், மண்டைதீவு கிழக்கில் ஜே/07 கிராம சேவகர் பிரிவில் உள்ள, 29 பேருக்குச் சொந்தமான 18 ஏக்கருக்கும் அதிகமான   காணிகளை, வெலிசுமன முகாம் அமைப்பதற்காக கையகப்படுத்தும்  நோக்கில்,கடந்த புதன்கிழமை (12) அளவீட்டுப் பணிகளை ஆரம்பிக்கப் போவதாக நில அளவைத் திணைக்களத்தினரால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. இவ் அளவீட்டுப் பணிகளை தடுத்து நிறுத்துவதற்காக, காணி உரிமையாளர்கள், பாராளுமன்ற  உறுப்பினர்கள் ,  , சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள்  ஆகியோர் மண்டைதீவு கிழக்கு முத்துமாரியம்மன் ஆலயத்திற்கு அருகில்  ஒன்று கூடிய   வெலிசுமன கடற்படை முகாம் முன்பாக  எதிர்ப்பை வெளியிட்டனர்.

காணி சுவீகரிப்புக்கு எதிராக  போராட்டம் நடைபெறும் என்பதைத் தெரிந்துகொண்ட  பாதுகாப்பு படையினர் பாதுகாப்பைப் பலப்படுத்தினர். கடற்படை முகாம் முன்பாக பொலிஸார், கடற்படையினர் ,புலனாய்வாளர்கள் குவிக்கப்பட்டனர். கலகமடக்கும் படையினர் தயார் நிலையில் இருந்ததனர். 

அரசாங்கத்துக்கு எதிராகவும், பாதுகாப்புப்   படையினருக்கு எதிராகவும் ஆர்ப்பாட்டக்க்காரர்கள் கோஷம் எழுப்பியபோது பதுகாப்புப் படையின அமைதியாக்கப் பார்த்துக்கொண்டு நின்றனர். எந்த நாளிலும் இல்லாத மாதிரி கடற்படையினரின் செயற்பாடு அமைந்தது.  போராட்டக் காரர்கள் களைப்படைந்துள்ளதாக எண்ணிய கடற்படையினர்,  குளிர் பானமும்,  பிச்கட்டும் வழங்கினர்.   போராட்டக்காரர்கள் எவரும் அவற்றாஇத் தொட்டுப் பார்க்கவில்லை.“எங்கட காணியை விட்டு எழும்பி போங்கோ பிஸ்கட் சாப்பிடுவோம்” என   காணி உரிமையாளர் ஒருவர் கூறினார். நில அளவை திணைக்களத்தினர் சமூகமளிக்காமையினால்  காணி அளவீடு இடை நிறுத்தப்பட்டது. இன்னொருநாள்  மீண்டும் அளக்க முயற்சிப்பார்கள்.  அப்போது  போராட்டம் நடைபெறும்.

  வடக்கு,கிழக்கில் உள்ள படையினருக்காக பொதுமக்களின் காVஇயைக் கைப்பற்ற முயற்சிப்பது இது  முதல் முறை அல்ல.

   இதேவேளை ,  பாராளுமன்ற உறுப்பினர் சரத்   வீரசேகரவுக்கு எதிராக வடக்கு, கிழக்கு சட்டத்தரணிகள்  போராட்டம் நடத்தியுள்ளனர்.

 முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலையில் மேலதிகமாக மேம்படுத்தல் வேலைகள் மேற்கொள்ளப்படுகின்றதா என்பது தொடர்பில் ஆராய்வதற்காக, முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா கடந்த செவ்வாய்க்கிழமை (04) களவிஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.

இதன்போது குருந்தூர்மலைப் பகுதிக்கு பாராளுமன்ற உறுப்பினர் சரத்வீரசேகரவும் சென்றிருந்தார். நீதிபதி ரி.சரவணராஜா   வழக்குத் தொடர்பிலான விசாரணைகளை, இரு தரப்பு சட்டத்தரணிகளுடனும் இணைந்து மேற்கொண்டிருந்தபோது இடையே குறுக்கிட்ட சரத்வீரசேகர, தன்னை அறிமுகப்படுத்தி தானும் அங்கு கருத்துத் தெரிவிக்க முற்பட்டார்.

அப்போது அவரது கருத்தினை ஏற்க மறுத்த நீதிபதி, பாராளுமன்ற உறுப்பினர்களோ, அரசியல்வாதிகளோ இங்கு கருத்துத் தெரிவிக்க முடியாது எனவும், இங்கு நீதிமன்ற விசாரணையே இடம்பெறுவதாகவும், அங்கிருந்து சரத் வீரசேகரவினை விலகிச் செல்லுமாறும் எச்சரித்திருந்தார்.அதனைத் தொடர்ந்து சரத் வீரசேகர அங்கிருந்து விலகிச் சென்றார்.

  குருந்தூர்மலையில் சரத் வீரசேகரவை வெளியேற்ரியவர் நீதிபதி. தான் அவமானப்படுத்தப்பட்டதாக நினைத்த சரத் வீரசேகர,  பாராளுமன்றத்தில் உரையாற்றும்போது " குருந்தீர் மலையில் இருந்து என்னை வெளியேற்ற தமிழ் நீதிபதிக்கு உரிமை இல்லை" எனத் தெரிவித்தார். பாராளுமன்ற சிறப்புரிமைமூலம் நீதித்துறையை சரத் வீரசேகர அவமதித்துள்ளதாக சட்டத்தரணிகள்  எதிர்ப்புத் தெரிவித்தனர்.  சட்டத்தரணிகள் சங்கம் சரத் வீரசேகரவுக்கு கடிதம் ஆட்சேபனை தெரிவித்து கடிதம் எழுதியுள்ளது. அதற்கும் அவர் காட்டமாகப்  பதிலளித்துள்ளார். 

சரத் வீரசேகரவின் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து முல்லைத்தீவு ,மட்டக்களப்பு  ஆகிய  நீதிமன்றங்களுக்கு முன்பாக த்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்று நடைபெற்றது. 

  பருத்தித்துறை  நீதவான் நீதிமன்றத்தின் செயற்பாடுகளிலிருந்து சட்டத்தரணிகள் விலகியிருந்தனர்.  . சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தின் சட்டத்தரணிகள்  வழக்குகளுக்காக ஆஜராவதை தவிர்த்துக்கொண்டனர்.

சட்டத்தரணிகளின் பணிப்பகிஷ்கரிப்பினால் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தின் செயற்பாடுகளும்  ஸ்தம்பிதமடைந்திருந்தன.  

பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவின் பாராளுமன்ற உரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மன்னாரிலும் சட்டத்தரணிகள் நீதிமன்ற செயற்பாடுகளை இன்று பகிஷ்கரித்தனர்.

கல்முனையிலும் சட்டத்தரணிகள் இன்று போராட்டத்தை முன்னெடுத்தனர்.

வடக்கு, கிழக்குகில் தமிழ் மக்களுக்கிடையாயான   போரட்டக் களத்தை  உருவாக்குவதில்  இலங்கை அரசாங்கமும், பாதுகாப்புப் படையினரும் ஏட்டிக்குப் போட்டியாகச் செயற்படுகின்றனர்.