Showing posts with label பெங்களூர். Show all posts
Showing posts with label பெங்களூர். Show all posts

Sunday, March 29, 2026

ஐபிஎல் போட்டியில் இஷான் கிஷன் சாதனை சன்​ரைசஸ் ஹைத​ரா​பாத் வெற்றி


   பெங்​களூரு சின்​ன​சாமி கிரிக்​கெட் மைதானத்​தில்  நடை​பெற்ற முதல் ஆட்​டத்​தில் நடப்பு சம்​பியன் ராயல் சாலஞ்​சர்ஸ் பெங்​களூரு (ஆர்​சிபி) அணி​யும், 2016-ம் ஆண்டு சம்​பிய​னான சன்​ரைசஸ் ஹைத​ரா​பாத் அணி​யும் மோதின.

முதலில் துடுப்பெடுத்தாடிய  ஹைத​ரா​பாத் அணி 20 ஓவர்​களில் 9 விக்​கெட் இழப்​புக்கு 201 ஓட்டங்கள்  எடுத்தது.  பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பெங்களூரு 15.4 ஓவர்களில் 4 விக்கெற்களை இழந்து 203 ஓட்டங்கள் எடுத்து  6 விக்கெற்களால் வெற்றி பெற்றது.

 ஹைத​ரா​பாத் அணி​யின் டிரா​விஸ் ஹெட் 11, அபிஷேக் சர்மா 7, நித்திஷ்கு​மார் ரெட்டி 1, ஹெயின்​ரிச் கிளாசன் 31, சலில் அரோரா 9, ஹர்ஷ் துபே 3, அனிக்​கெட் வர்மா 43  ஓட்டங்​கள் எடுத்​தனர். டேவிட் பெய்ன் 6 ஓட்டங்​களும், ஜெய்​தேவ் உனத்​கட் 4 ஓட்டங்​களும் எடுத்து ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தனர்.பெங்களூரு அணிக்கு ஆரம்பத்திலேயே ஜேக்கப் டஃபி மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி அதிர்ச்சியளித்தார். இருப்பினும், ஹைதராபாத் அணியின் தற்காலிக கப்டன் இஷான் கிஷன் 38 பந்துகளில் 80 ரன்கள் விளாசி அணியை மீட்டார்.

 202 ஓட்டங்​கள் எடுத்​தால் வெற்றி என்ற இலக்​குடன் பெங்​களூரு அணி விளை​யாடத்​ தொடங்​கியது.விராட் கோலி மற்றும் தேவ்தத் படிக்கல் ஆகியோரின் அதிரடி ஆட்டம் பெங்களூரு அணியின் வெற்றிக்கு வித்திட்டது.

 பில் சால்ட் (8) ஏமாற்றம் அளித்தாலும், தேவ்தத் படிக்கல் , விராட் கோலி இணை ஹைதராபாத் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தது. குறிப்பாக இம்பாக்ட் பிளேயராக களம் கண்ட படிக்கல்,  26 பந்துகளில் 61 ஓட்டங்கள் எடுத்து ஆட்டத்தின் போக்கை மாற்றினார். மறுபுறம் தனது கிளாசிக் ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி, 38 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 69  ஓட்டங்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்து அணியை வெற்றி பெறச் செய்தார்.

பெங்களூரு அணி 15.4 ஓவர்களிலேயே 4 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.  அறிமுக வீரர் ஜேக்கப் டஃபி மற்றும் ரோமாரியோ ஷெப்பர்ட் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

 இந்​தப் போட்​டி​யில் கப்​டன் இஷான் கிஷன் அதிரடி​யாக விளை​யாடி 38 பந்​துகளில் 8 பவுண்​டரி​கள், 5 சிக்​ஸர்​களு​டன் 80  ஒட்டங்கள் அடித்தார். அவர் ஐபிஎல் போட்​டிகளில் 3 ஆயிரம் ஓட்டங்களைக் கடந்​தார். இதன்​மூலம் குறைந்த பந்​துகளில் 3 ஆயிரம்  ஓட்டங்​களைக் கடந்த இந்​திய வீரர்​கள் பட்​டியலில் 6-வது இடத்​தைப் பிடித்​தார் கிஷன். அவர் 2,180 பந்​துகளில் 3 ஆயிரம் ஓட்டங்களை எடுத்​துள்​ளார்.

இந்​தப் பட்​டியலில் முதல் இடத்​தில் ரிஷப் பந்த்​தும் ​(2,028 பந்​துகள்), 2-வது இடத்​தில் யூசுப் பதானும் ​(2,082 பந்​துகள்), 3-வது இடத்​தில் சூர்​யகு​மார் யாத​வும்​ (2,130 பந்​துகள்), 4-வது இடத்​தில் சுரேஷ் ரெய்​னா​வும் ​(2,135 பந்​துகள்), 5-வது இடத்​தில் எம்​.எஸ்​.டோனி​யும் ​(2,152 பந்​துகள்) உள்​ளனர். 

Friday, November 7, 2025

விற்பனைக்கு வந்தது RCB அணி மார்ச் 2026-க்குள் முடிவெடுக்க திட்டம்

 IPL தொடரின் நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியை விற்பனை செய்வது குறித்து அதன் உரிமையாளர்கள் ஆராய்ந்து வருவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.

அணியின் தாய் நிறுவனமான Diageo, இது குறித்து "மூலோபாய மறுஆய்வை" தொடங்கியுள்ளதாக இந்தியப் பங்கு சந்தைக்கு தெரிவித்துள்ளது.

Diageo Plc, தங்கள் இந்திய துணை நிறுவனமான யுனைடெட் ஸ்பிரிட்ஸ் லிமிடெட் (USL) மூலம் இந்த அணியை நடத்தி வருகிறது.

RCB அணியை வைத்திருக்கும் யுனைடெட் ஸ்பிரிட்ஸ் லிமிடெட் (United Spirits Ltd - USL), ராயல் சேலஞ்சர்ஸ் ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் (RCSPL) மீதான முதலீட்டை மறுஆய்வு செய்வதாக அறிவித்துள்ளது.

ஆர்.சி.எஸ்.பி.எல். ஒரு மதிப்புமிக்க மற்றும் மூலோபாய சொத்தாக இருந்தாலும், இது எங்கள் ஆல்கஹோல் வணிகத்தின் மையப் பகுதி அல்ல," என்று USL நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் தலைமைச் செயல் அதிகாரியுமான பிரவீன் சோமேஸ்வர் பங்குச் சந்தை அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அணி உரிமையாளர்கள் RCB-க்கு சுமார் 2 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 16,600 கோடி) மதிப்பீடு கோருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த மறுஆய்வு செயல்முறை மார்ச் 31, 2026-க்குள் முடிவடையும் என்று USL தெரிவித்துள்ளது.

சமீபத்தில் ஐபிஎல் (ஆடவர்) கிண்ணத்தை  வென்றதன் மூலம், ஆர்.சி.பி. அணியின் வர்த்தக மதிப்பு பல மடங்கு உயர்ந்துள்ள நிலையில், இந்த விற்பனை குறித்த செய்திகள் வெளியாகி உள்ளன.

 வரலாற்றில் இது மிக பெரிய விற்பனையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

RCB-யை வாங்குவதற்கு பல முக்கிய நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அதில் சில:

ஆதர் பூனாவாலா- சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவின் தலைமைச் செயல் அதிகாரி.

JSW Group- டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் பங்கு வைத்திருக்கும் பார்த் ஜிண்டால் தலைமையிலான குழு.

அதானி குழுமம்.

ஐ.பி.எல். அணியின் உரிமையாளரை மாற்றும் இந்த முடிவு, ஐபிஎல் 2026 மெகா ஏலத்துக்கு முன்னதாக வீரர்களை தக்கவைப்பது (Retention) மற்றும் அணியின் மேலாண்மை குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது.

இருப்பினும், ஆர்.சி.பி. அணியின் ஐகான் வீரரான விராட் கோலி தொடர்ந்து அணியில் நீடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  

Friday, June 6, 2025

உயிரைப் பறித்த வெற்றிக் கொண்டாட்டம்

 ஐபிஎல் வரலாற்றில்  முதன்முறை சாம்பியன் பட்டம் வென்ற ஆர்சிபி அணிக்காக நடந்த பாராட்டு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் ஆடும் அணிகளில் அதிகளவு ரசிகர்களை கொண்டது பெங்களூர் அணி. சமூக வலைதளங்களிலே சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகளின் ரசிகர்களை காட்டிலும் ஆர்சிபி அணியின் ரசிகர்களின் ஆதிக்கம் அதிகளவு காணப்படும்.

  18 ஆண்டுகால ஐபிஎல் வரலாற்றில் பெங்களூர்  முதன்முறையாக சம்பியனாகியது,  பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் வெற்றிக் கொண்டாட்டம் நடைபெற்ற்து. வெற்றிவீரர்களைக் காண்பதற்காக‌ கட்டுக்கடங்காமல்  ரசிகர்கள்  குவிந்தனர். நெரிசல் தள்ளு முள்ளு காரணமாகநேற்று மாலை வரை  11 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  சுமார் 100 க்கு மேற்பட்டவர்கள்    மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  இவர்களில் பலர் மயக்கமடைந்திருப்பதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

நேற்று மாலை 7 மணி நிலவரப்படி பவுரிங் மருத்துவமனையில் 7 பேர், வைதேகி மருத்துவமனையில் 4 பேர் என மொத்தம் 11 பேர் உயிரிழந்தனர். இவர்களில் ஒரு குழந்தை, ஒரு பெண் அடங்குவர். மற்றவர்கள் 30-க்கும் வயதுக்கும் குறைவான ஆண்கள். இந்த இரு மருத்துவமனைகளிலும் 37 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.


 18 ஆண்டுகளின் பின்னர் முதன்முறையாக  பெங்களூர் சம்பியனாகியதை ரசிகர்கள் வெறித்தனமாகக் கொண்டாடினார்கள்.    ரசிகர்கள் கர்நாடகா முழுவதும் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். பெங்களூருவில் பட்டாசுகளை வெடித்தும், மேள தாளங்களை முழங்கியும் ஊர்வலமாகச் சென்றனர். எம்.ஜி.சாலை, சிவாஜி நகர், கம்மனஹள்ளி, கோரமங்களா உள்ளிட்ட இடங்களில் வாகனங்களை மறித்து சாலையில் ஆட்டம் போட்ட ரசிகர்கள் மீது பொலிஸார் தடியடி நடத்தினர்.பெலகாவியில் நடனமாடிய 28 வயதான  மஞ்சுநாத் கும்பார்   என்ற ரசிகர் மாரடைப்பால் உயிரிழந்தார். ஷிமோகாவில் இருசக்கர வாகனத்தில் ஊர்வலமாகச் சென்ற 21 வயதான பினந்தன் என்ற ரசிகர் கீழே தவறி விழுந்து உயிரிழந்தார்.

சம்பியன் கிண்ணத்துடன் பெங்களூருக்குத் திரும்பிய வீரர்களை வரவேற்க  கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார்  விமான நீலயத்துக்குச் சென்றார்.  பின்னர்,   வீரர்கள் கர்நாடகாவின் தலைமைச் செயலகமான விதான சவுதாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

 அங்கு திறந்த வெளியில் நடைபெற்ற விழாவில் ஆளுநர் தாவர்சந்த் கெலாட், முதல்வர் சித்தராமையா, உள்துறை அமைச்சர் பரமேஷ்வரா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.சமூக அவலைத்தளங்களில் இவை பகிரப்பட்டதால் ஆர்வமடைந்த ரசிகர்களும், மக்களும்  திரண்டனர்.

கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் சார்பில் சின்னசாமி மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாராட்டு விழாவைக் காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடினர். இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பெண்களும், குழந்தைபொலிஸார் லேசான தடியடி நடத்தியதால், கூட்டத்தில் இருந்தவர்கள் சிதறி ஓடினர்.

 கிரிக்கெட் மைதானத்தின் 6, 7-வது கேட் பகுதியில் இலவச பாஸ் பெற்ற ரசிகர்கள் மைதானத்துக்கு உள்ளே அனுமதிக்கப்பட்டனர். ஏராளமானோர் ஒரே நேரத்தில் முண்டியடித்ததால் கடும் நெரிசல் ஏற்பட்டது.   ந்த சம்பவத்தை நேரில் கண்ட ஆர்சிபி அணி ரசிகர் நவீன் கூறும்போது, ``கிரிக்கெட் வீரர்களை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆவலில் எல்லா பக்கங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்தனர். கொண்டாட்ட மன நிலையில், சப்தம் போட்டுக்கொண்டு எல்லோரும் கும்பலாக ஓடினர். அதனால் கூட்ட நெரிசலில் மூச்சுத் திணறியும், கீழே விழுந்தவர்களை யாரும் தூக்காமல், மிதித்துக் கொண்டே ஓடியதாலும் நிறைய பேர் காயமடைந்த‌னர். சிலர் இறந்து விட்டனர். இதைக் கண்ட அதிர்ச்சியில் இருந்து என்னால் இன்னும் மீள முடியவில்லை''என்றார்.

: பாஜக மாநிலத் தலைவர் விஜயேந்திரா செய்தியாளர்களிடம் கூறும்போது, "இந்த துயர சம்பவத்துக்கு கர்நாடக அரசே பொறுப்பேற்க வேண்டும். மக்களைப் பற்றிக் கவலைப்படாமல், தனது விளம்பரத்துக்காக அவசரகதியில் இந்த‌ விழாவை அரசு ஏற்பாடு செய்தது. எவ்வித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செய்யாமல் இருந்ததாலேயே 11-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த உயிரிழப்புகளுக்கு யார் பொறுப்பு என்பதை முதல்வர் சித்தராமையா விளக்க வேண்டும். கூட்ட நெரிசலில் சிக்கியவர்களைக் காப்பாற்ற ஆம்புலன்ஸ் வசதியோ, போதிய பாதுகாப்பு வசதியோ செய்யப்படவில்லை. இதுகுறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும்" என்றார்.

கூட்ட நெரிசல் காரணமாக ஏற்பட்ட பதற்றத்தால் ஆயிரக்கணக்கான ரசிக‌ர்கள் அம்பேத்கர் மெட்ரோ நிலையம், கப்பன் பூங்கா, எம்.ஜி.சாலை ஆகிய மெட்ரோ நிலையங்களில் குவிந்தனர். அங்கு டிக்கெட் கொடுக்க முடியாமல் ஊழியர்கள் திணறிய நிலையில், தடுப்புகளை தாண்டிக் குதித்து ரசிகர்கள் மெட்ரோ ரயிலில் ஏறினர். அளவுக்கு அதிகமான கூட்டத்தால் மெட்ரோ ரயில் சேவை முடங்கியது. இதனால் கப்பன் பூங்கா, எம்.ஜி.சாலை உள்ளிட்ட 8 மெட்ரோ நிலையங்களையும் உடனடியாக மூட மெட்ரோ நிர்வாகம் உத்தரவிட்டது.

 35 ஆயிரம் பார்வையாளர்கள் அமரக் குடிய மைதானத்தில் சுமார் 3 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் கூடியதால் இந்த விபரீதம் ஏற்பட்டுள்ளது.திட்டமிடாது அவசர கதியில் விழா ஏற்பாடு செய்யப்பட்டதால் இந்த அநர்த்தம்  ஏற்பட்டது. இந்தச் சம்பவம் கிறிக்கெற்  ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் சோகத்தை உண்டாக்கியுள்ளது. காலத்திற்கும் நீடிக்கும் வகையில் படிந்துள்ள இந்த கறையை கர்நாடக அரசு எப்படி  சரி செய்யப்போகிறது என்பது மிகப்பெரிய கேள்வியாக அமைந்துள்ளது.

 சென்னையும், மும்பையும்தலா 5  முறை சம்பியனாகின அந்த அணிகளுக்கும் அப்போது வரவேற்கப்பட்டன. திட்டமிடலும், ரசிகர்களின் கட்டுக்கோப்பும்  இருந்ததால் அசம்பாவிதம் அப்போது தவிர்க்கப்பட்டது.

 

Wednesday, June 4, 2025

ஈ சாலா கப் நம்தே 18 வருட கனவு


 

 

 'ஈ சாலா கப் நம்தே' இந்த ஆண்டு  கிண்ணம்  நமதே  என்ற பெங்களூர் ரசிகர்களின் கனவு 18  வருடங்களின்  பின்னர் நிஜமானது.

பிரிமியர் அரங்கில் பெங்களூரு அணிக்காக தொடர்ந்து 18 ஆண்டுகளாக விளையாடுகிறார் கோலி. இவரது சீருடை இலக்கம்  18. தற்போதைய 18வது தொடரின் ராசி கைகொடுக்க,  சம்பியன் கிண்ணத்திக்  கைப்பற்றினார். 'ஈ சாலா கப் நம்தே'   என்ற பெங்களூரு ரசிகர்களின் நீண்ட கால கனவு நனவானது. வெற்றி பெற்றதும்  ஆனந்த கண்ணீரில் மிதந்தார் கோலி. பைனலை காண நேற்று அஹ‌தாபாத் வந்த பெங்களூரு அணியின் முன்னாள் வீரர்கள் டிவிலியர்ஸ், கெய்ல் உடன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.

நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்த பரபரப்பான இறுதிப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி ஆர்சிபி அணி தனது முதல் ஐபிஎல் பட்டத்தை வென்றது.

 ஐபிஎல் , மகளிர் பிரீமியர் லீக் இரண்டிலும் பட்டங்களை வென்ற இரண்டாவது அணியாக ஆர்சிபி மாறியுள்ளது.

இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய  பெங்களூர் 20 ஓவர்களில் 9 விக்கெற்களை இழந்து 190 ஓட்டங்கள் எடுத்தது. 191 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களம் இறங்கிய பஞ்சாப் 20 ஓவர்களில் 7 விக்கெற்களை இழந்து 187  ஓட்டங்கள் எடுத்தது. 6 ஓட்டங்களால் தோல்வியடைந்த பஞ்சாப் அணி கடசி ஓவர் வரை பெங்களூருக்கு சவால் விட்டது.

 4 விக்கெற்களை இழந்து  131  ஓட்டங்கள் எடுத்த பெங்களூருக்கு 10 பந்துகளில் 24 ஓட்டங்கள் எடுத்த ஜிதேஷ் சர்மா கைகொடுத்தார்.

கடைசி ஓவரில் அர்ஷ்தீப் சிங் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி ஆர்சிபி அணியை கட்டுப்படுத்தினார், கைல் ஜேமிசனும் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பஞ்சாப் அணியின் ஆரம்பம் அசத்தலாக இருந்தது.

பிரப்சிம்ரன் சிங் ம, பிரியான்ஷ் ஆர்யா  ஜோடி 43 ஓட்டங்கள் சேர்த்து அ சத்தியது.  பவர்பிளேயில் ஜோஷ் ஹேசில்வுட்   ஆர்யாவை அவுட்டாக்கி, பார்ட்னர்ஷிப்பை முறியடித்தார்.

பிரப்சிம்ரன், ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோரும்  ஆட்டமிழந்ததால் பஞ்சாப் தடுமாறியது.

ஜோஷ் இங்கிலிஸ் எதிர் தாக்குதல் நடத்திய போதிலும், குருணால் பாண்டியாவின் பந்து வீச்சு ஆர்சிபி அணிக்கு உத்வேகத்தை அளித்தது.

அவர் நான்கு ஓவர்களில் 17  ஓட்டங்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

கோலி தனது சிறந்த ஆட்டத்தில் இல்லாவிட்டாலும், அந்தப் போட்டியில் அவர் ஆர்சிபியின் அதிக ஓட்டங்கள் எடுத்த வீரராவார் அவர் 35 பந்துகலில் 43 ஓட்டங்கள் எடுத்தார்.

இதன் மூலம்,  ஐபிஎல்லில்  பஞ்சாப் அணிக்கு எதிராக 1.159  எடுத்த அவர் அதிக  பஞ்சபுக்கு எதிராக அதிக  ஓட்டம் எடுத்த வீரரானார்.

 முன்னதாக  டேவிட் வானர்   1,134  ஓட்டங்கள் எடுத்திருந்தார்.

 

Tuesday, June 3, 2025

ஐபிஎல் சம்பியன் பெங்களூரா? பஞ்சாப்பா?


 கிறிக்கெற் ரசிகர்களால் பெரும் எதிர்பார்ப்புடன் ரசிக்கப்படும் ஐபிஎல்  தொடரின்  இறுதிப் போட்டி இன்று நடைபெறுகிறது.

கடந்த மார்ச் 22-ஆம் திகதி தொட‌ங்கிய 2025 ஐபிஎல் கிறிக்கெற் தொடரின்  இறுதிப் போட்டியில் பெங்களூரும் ,பஞ்சாப்பும்  மோதுகின்றனர்.

ரசிகர்களால் அதிகம் விரும்பப்படும் சென்னை ,மும்பை ஆகிய  இரண்டு அணிகளும்   இறுதிப் போட்டியில் இல்லை என்ப‌து ஒருபுறம் இருக்க  கிண்ணத்தை கோலி தூக்குவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அகமதாபாத் மைதானத்தில் நடைபெற உள்ளது. 18 ஆண்டுகால ஐபிஎல் வரலாற்றில்   ஒரு முறை கூட சம்பியனாகாத பெங்களூர்,பஞ்சாப்  அணிகள் நேருக்கு நேர் மோதுகின்றன. இதனால்,   ஐபிஎல் மகுடத்தை புதிய சம்பியன் கைப்பற்றப்போவது உறுதியாகியுள்ளது.

அகமதாபாத் மைதானத்தில் நடக்கும் இறுதிப்போட்டியில் களமிறங்க உள்ள ஆர்சிபி - பஞ்சாப் ஆகிய இரு அணிகளும் சரிசம பலத்துடன் களமிறங்குகிறன.ரி20 போட்டிகளைப் பொறுத்தமட்டில் குறிப்பாக ஐபிஎல் போன்ற தொடரில் வெற்றி, தோல்வியைத் தீர்மானிப்பதில்   பந்துவீச்சாளர்களின் பங்கே அதிகளவு ஆகும்.

ரி20 போட்டிகளைப் பொறுத்தவரை சிக்ஸர், பவுண்டரி விளாசும் நோக்கத்துடனே   களமிறங்குவார்கள். இவர்களை கட்டுப்படுத்தும் பெரும் பங்கு பந்துவீச்சாளர்களுக்கு உண்டு. திறம்பட இந்த அதிரடி வீரர்களிக்  கையாளும் பந்துவீச்சாளர்களின் கையில்தான் வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தியும் உண்டு.

நீண்ட பேட்டிங் பட்டாளத்தை இரு அணிகளும் கொண்டுள்ள நிலையில், இந்த பேட்டிங் பட்டாளத்தை சமாளிக்கும் வல்லமை பந்துவீச்சு பட்டாளம் இரு அணிகளிலும் உண்டு

இதுவரை நடந்த 17 சீசன்களில் ஆர்சிபி அணி சம்பியனாகாததற்கு  கு முக்கிய காரணம்   பந்துவீச்சு பலவீனமே ஆகும். இதன்காரணமாகவே கெயில், டிவிலியர்ஸ் ஆகிய ஜாம்பவன்களுடன் இணைந்து கோலி பல வருடங்களாக முயற்சித்தும் கிண்ணம்  வசப்படவில்லை. ஆனால், நடப்பு சீசனில் ஆர்சிபி அணியின் பந்துவீச்சு சிறப்பாக அமைந்துள்ளது.

ஹேசில்வுட், புவனேஷ்வர், யஷ் தயாள் வேகத்தில் முக்கிய அம்சமாக உள்ளனர். குறிப்பாக,  நட்சத்திர பந்துவீச்சாளராக ஹேசில்வுட் உள்ளார். எதிரணியின் முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்துவதுடன் நெருக்கடியான சூழலில் ஆட்டத்தை மாற்றி ஆர்சிபி வசம் கொண்டு வரும் பணியை சிறப்பாக செய்து வருகிறார்.

ஸ்விங் கிங் எனப்படும் புவனேஷ்வர் குமார் முக்கிய வீரராக திகழ்கிறார். அவரது அனுபவமும், வேகமும் குவாலிஃபயரில் நன்றாக ஜொலித்தது. இந்த சீசனின் தொடக்கத்தில் அவர் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாவிட்டாலும் குவாலிஃபயர் 1ல் சிறப்பாக வீசினார். அவர் மீண்டும் தனது அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தினாலே எதிரணிக்கு பெரும் சவால்தான். 

யஷ் தயாள் ஆர்சிபி அணியி்ன் தவிர்க்க முடியாத டெத் பவுலராக உருவெடுத்துள்ளார். மிகவும் நெருக்கடியான நேரத்தில் கட்டுக்கோப்பாக வீசுவதில் வல்லவராக உள்ளார். அவர் சிறப்பாக வீசினால் எதிரணிக்கு சவால். இவர்கள் 3 பேர் வேகத்தில் முக்கிய வீரர்களாக உள்ள நிலையில் சுழல் அஸ்திரமாக சுயாஷ் சர்மாவும், குருணல் பாண்ட்யாவும் உள்ளனர்.

ட்டுக்கோப்பாகவும் விக்கெட்டுகளை வீழ்த்தும் பந்துவீசும் ஆற்றல் கொண்டவராகவும் சுயாஷ் சர்மா உருவெடுத்துள்ளார். பஞ்சாப் அணிக்கு எதிரான குவாலிஃபயர் 1ல் 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். மற்றொரு சுழல் சாம்ராட்டாக குருணல் பாண்ட்யா உள்ளார். சுழற் பந்துவீச்சாளர்களுக்கான விதிவிலக்காக பாண்ட்யா உள்ளார். கூக்ளி, லெக் ஸ்பின், ஆஃப் ஸ்பின் ஆகியவற்றிற்கு பதிலாக யார்க்கர், பவுன்சர் என சுழலில் யாருமே வீச முடியாத பந்துவீச்சை வீசி வருகிறார். இவர்கள் மட்டுமின்றி ஷெப்பர்ட் மித வேகப்பந்துவீச்சாளர் ஆவார். லிவிங்ஸ்டனுக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைத்தால் அவர் பந்துவீசும் வாய்ப்பும் கிடைக்கும். அவரும் சிறந்த சுழற்பந்துவீச்சாளர்.

பஞ்சாப் அணியும் பந்துவீச்சில் அசத்தலாகவே உள்ளது. அந்த அணியில் அர்ஷ்தீப்சிங், ஜேமிசன், விஜயகுமார் வைஷாக், சாஹல், ஹர்ப்ரீத் ப்ரார், ஓமர்சாய், சாஹல், ஸ்டோய்னிஸ் உள்ளனர். பஞ்சாப் பந்துவீச்சை வழிநடத்தும் பொறுப்பை அர்ஷ்தீப்சிங் ஏற்றுக்கொண்டுள்ளார். இடது கை வேகப்பந்துவீச்சாளரான அவர்  திறம்பட பந்துவீசினால் பஞ்சாப்பிற்கு பலமாக அமையும். அவரும் சிறந்த டெத் பவுலர் ஆவார்.

 , பஞ்சாப்பின் புதிய நம்பிக்கை நட்சத்திரமாக ஜேமிசன் உள்ளார். ஹேசல்வுட்டைப் போல 6 அடி உயரமுள்ள இவர் மும்பைக்கு எதிராக அசத்தலாக பந்துவீசினார். அவரது அசத்தல் பந்துவீச்சு தொடர்ந்தால் பஞ்சாப்பிற்கு நம்பிக்கை அதிகரிக்கும். முன்னாள் ஆர்சிபி வீரரான விஜயகுமார் வைஷாக் நல்ல வேகப்பந்துவீச்சாளர் ஆவார். அவர் நன்றாக வீசினால் சவால் அளிக்க முடியும். ஓமர்சாய் பஞ்சாப்பிற்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக குவாலிஃபயர் போட்டியில் வீசினால், அவர் இறுதிப்போட்டியில் அப்படி பந்துவீச வேண்டியது அவசியம் ஆகும்.

பிரதான வேகப்பந்து வீச்சாளர்களான இவர்களுடன் பஞ்சாப்பின் சுழலை முன்னாள் பெங்களூர் வீரரான சாஹல் வழிநடத்த உள்ளார். அனுபவம் நிறைந்த சாஹல் சுழலில் மிரட்டினால்  சவாலாக மாறிவிடும். அவருக்கு பக்கபலமாக ப்ரார் உள்ளார். அவருக்கும் ஐபிஎல் தொடரில் ஏராளமாக பந்துவீசிய அனுபவம் உண்டு. இந்த சுழல் கூட்டணி தாக்கத்தை ஏற்படுத்த வேண்டியது அவசியம் ஆகும். இந்த பிரதான பந்துவீச்சாளர்கள் மட்டுமின்றி ஸ்டோய்னிஸ் மிதவேகப்பந்து வீச்சாளராக திகழ்கிறார். முஷீர்கானும் சுழலில் அசத்தும் திறன் கொண்டவர்.

இரு அணிகளும் சரிசம பந்துவீச்சு பலத்துடன் காணப்படுவதால்   எந்த அணியின் பந்துவீச்சு மைதானத்தில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறதோ அந்த அணி முதல் முறையாக கிண்ணத்தை  முத்தமிடும்.

பெங்களூரு அணியின் ஆட்டம் வேற 'லெவலில்' உள்ளது. தகுதிச்சுற்று-1ல் பஞ்சாப்பை வீழ்த்தி, பைனலுக்குள் நேரடியாக நுழைந்தது. அனுபவ கோலி   இன்றும்  சாதித்தால் , 'ஈ சாலா கப் நம்தே'   என்ற பெங்களூரு ரசிகர்களின் நீண்ட கால கனவு நனவாகலாம். கப்டன் ரஜத் படிதர் 286  ஓட்டங்கள், , பில் சால்ட் 387 ஓட்டங்கள், , 'பினிஷர்' ஜிதேஷ் சர்மா 237 ஓட்டங்கள்,  'அதிரடி' ரொமாரியா ஷெப்பர்டு, மயங்க் அகர்வால் ஆகியோரும் கைகொடுப்பார்கள்.  உடற்தகுதியில் தேறினால் டிம் டேவிட் இடம் பெறுவார்.

   பஞ்சாப் அணி, தகுதிச் சுற்று-1ல் தோற்ற போதும், மும்பைக்கு எதிரான தகுதிச் சுற்று-2ல் அசத்தியது. இதில், கப்டன் ஷ்ரேயஸ் தனி ஒருவனாக 87  ஓட்டங்கள்  விளாசி, அணியை 11 ஆண்டுகளுக்கு பின் பைனலுக்கு அழைத்து சென்றார். இவர் 16  போடிகளில் 603 ஓட்டங்கள், குவித்துள்ளார்.

இவர், இன்றும் நிலைத்து நின்று ஆடினால், கோப்பை வெல்வது உறுதி. ஜோஷ் இங்லிஸ், பிரப்சிம்ரன், பிரியான்ஷ் ஆர்யா, சஷாங்க் சிங், ஸ்டாய்னிஸ் என பேட்டிங் படை வலுவாக உள்ளது.

பிரிமியர் அரங்கில் இரு அணிகளும் 36 முறை மோதின. இதில் தலா 18 வெற்றிகளுடன் சமபலத்தில் உள்ளன.

* இம்முறை 3 முறை மோதின. இதில் பெங்களூரு 2, பஞ்சாப் 1ல் வென்றன.

* ஆமதாபாத் மோடி மைதானத்தில் இரண்டாவது முறையாக மோத உள்ளன. இங்கு ஏற்கனவே நடந்த போட்டியில்  பஞ்சாப் அணி, பெங்களூருவை வீழ்த்தியது.* பைனலில் இரு அணிகளும் முதல் முறையாக மோத உள்ளன.

 

ஐபிஎல்25,ரி20,பஞ்சாப்,பெங்களூர்,விளையாட்டு

Sunday, March 23, 2025

முதல் போட்டியில் வென்றது பெங்களூர்


 கொல்கதாவில் நடைபெற்ற முதலாவது ஐபிஎல் போட்டியில் 7 விக்கெற்றால் பெங்களூர் வென்றது.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற பெங்களூர் பந்து வீசத்தீர்மானித்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா 20 ஓவர்களில் 8 விக்கெற்களை இழந்து 174 ஓட்டங்கள் எடுத்தது.16.2 ஓவர்களில் 3 விக்கெற்களை இழந்த பெங்களூர் 177 ஓட்டங்கள் எடுத்தது.

ஆரம்பத் துடுப்பாட்ட்ட வீரரான டீ கொக் 4 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். சுனில் நரேனுடன், கே.எல்.ராகுல் ஜோடி சிறப்பாக விளையாடியது. இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 103 ஓட்டங்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கத்தை கொடுத்தது.

10 ஓவர்களில் 1 விக்கெற்றைஇழந்த கொல்கத்தாவின் எனைய வீரர்கள் தடுமாறினார்கள். நரேன் 44 , ரகானே 56 , வெங்கடேஷ் ஐயரை 6 , ரிங்கு சிங் 4 , அண்ட்ரே ரசல் 4 , ரகுவன்சி 30 ஓட்டங்கள் எடுத்தனர். 20 ஓவர்களில் 8 விக்கெற்களை இழந்த கொல்கத்தா 174 ஓட்டங்கள் எடுத்தது.

ஜோஸ் ஹேசல்வுட் 2, கருனால் பாண்டியா 3 விக்கெட்டுகளை எடுத்தனர். அந்தப் போட்டியில் ரசிக் சலாம் வீசிய 8வது ஓவரின் 4வது பந்தை சுனில் நரேன் எதிர்கொண்டார். அந்தப் பந்து ஒயிடாக வீசப்பட்டதால் அதை அவர் அடிக்கவில்லை. அதைப் பார்த்ததும் களத்தில் இருந்த நடுவர் ஒயிட் கொடுத்தார். அடுத்த நொடியே பந்தை எதிர்கொண்ட வேகத்தில் சுனில் நரேன் பேட் அவரை அறியாமலேயே பின்னே சென்று ஸ்டம்ப்பில் பட்டு பெய்ல்ஸ் கீழே விழுந்தது. அதன் காரணமாக ஹிட் விக்கெட் முறையில் அவர் வெளியேறுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அந்த பந்து ஒயிட் என்று சில நொடிகள் முன்பாக நடுவர் அறிவித்து விட்டார். அதனால் அந்த பந்து காலாவதியானதன் காரணமாக சுனில் நரேன் ஹிட் விக்கெட் முறையில் தப்பி தொடர்ந்து விளையாடினார்.

பெங்களூர் அணியின் பில் சாட் 56, படிக்கல்10,ராஜ் படிதார் 34, ஓட்டங்கள் எடுத்தனர். 16.2 ஓவர்களில் 3 விக்கெற்களை இழந்த பெங்களூர் 177 ஓட்டங்கள் எடுத்தது. விராட் கோலி ஆட்டமிழக்காது 56 ஓட்டங்கள் எடுத்தார். கருணால் பாண்டியா ஆட்டநாயகன் விருது பெற்றார்

Thursday, December 5, 2024

ஐபிஎல் ஏலத்தில் விலைப்படாத ஜாம்பவான்கள்


 ஐபிஎல் 2025 ஏலம் சவூதியில் மிகவும் பரபரப்பாக நடைபெற்றது.   இந்த முறை எல்லா அணிகளும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பெரும்பாலும் இளம் வீரர்களையே ஏலத்தில் எடுத்தது.  ஐபிஎல்  இலும்,  கிறிக்கெற் உலகிலும் சாதனை  படைத்த பல ஜாம்பவான்களை எந்த அணியும் கண்டு கொள்ளவில்லை.

ஐபிஎல் 205 ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில்  இரண்டு நாட்களாக நடந்தது. இந்த ஏலத்திற்காக மொத்தம் 1574 வீரர்கள்  விண்ணப்பித்திருந்த நிலையில் மொத்தம் 577 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு அதில் 283 வீரர்களின் பெயர்கள் ஏலத்தில் பங்கேற்க எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில் முதல் நாள் ஏலத்தில் ஐபிஎல் அணிகள் கோடிகளை கொட்டித்தீர்த்தது இதில் அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 27 கோடிக்கு லக்னோ அணியால் வாங்கப்பட்டார். அவருக்கு அடுத்தப்படியாக ஸ்ரேயஸ் ஐயரை பஞ்சாப் அணி 26.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. இரண்டாம் நாள் ஏலத்தில் பல அணிகளிடம் குறைவான தொகை மட்டுமே இருந்ததால் பல வீரர்களின் அடிப்படை விலை அதிகமாக இருந்தால் பல அணிகள் வீரர்களை எடுக்க தயக்கம் காட்டினர்.

ஏலம் போகாத வீரர்கள்:

டேவிட் வார்னர்:

 இந்த ஏலத்தில் அவுஸ்திரேலிய அதிரடி வீரரான டேவிட் வார்னர் தனது அடிப்படை விலையாக 2 கோடியை நிர்ணயித்திருந்தார். ஆனால் அவரை ஏலத்தில் இறுதிவரை எந்த அணியும் வாங்க முன்வரவில்லை. வார்னர் டெல்லி அணிக்காக அறிமுகமாகி பின்னர் சன்ரைசர்ஸ் அணியின் கப்டனாக செயல்பட்டு 2016 ஆண்டில் ஐபிஎல் கோப்பையும் வாங்கிக்கொடுத்தார். அதன் பிறகு அணியில் ஏற்ப்பட்ட சின்ன மனகசப்பு காரணமாக அணியில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர் 2023, 2024 சீசன்களில் டெல்லி அணிக்காக விளையாடினாலும் அவரால் பெரிய அளவில் சோபிக்க முடியவில்லை.

                                கேன் வில்லியம்சன்: 

நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரரான கேன் வில்லியம்சன் 2015-2022 சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாடினார். இதில் 2018 ஆம் ஆண்டில் ஹைதராபாத் அணியை இறுதிப்போட்டிக்கு வரை அழைத்துச் சென்றார். அதன் பின்னர் 2023 ஐபிஎல் ஏலத்தில் குஜராத் அணியால் வாங்கப்பட்டார். ஆனால் காயம் காரணமாக 2023 சீசனில் இருந்து விலகிய நிலையில் 2024ஆம் சீசனில் ஒரு போட்டிகளில் மட்டுமே விளையாடி இருந்தார். இந்த மெகா ஏலத்தில் அடிப்படை விலையாக வில்லியம்சன் 2 கோடி நிர்ணயத்திருந்த நிலையில் அவரை ஏலத்தில் எடுக்கவில்லை.

ஷர்துல் தாக்கூர்:

  சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்காக பல ஆண்டுகளாக விளையாடி வந்த ஷர்துல் தாக்கூரும் எந்த அணியும் ஏலம் எடுக்கவில்லை. 2 கோடியை அவர் அடிப்படை விலையாக நிர்ணயித்திருந்த நிலையில் எந்த அணியும் அவரை ஏலத்தில் எடுக்கவில்லை. 2021 ஆம் ஆண்டு சீசனில் சென்னை அணி கோப்பையை வெல்ல இறுதிப்போட்டியில் ஷர்துல் தாக்கூர் முக்கிய காரணமாக இருந்தார்.

ஜானி பேர்ஸ்டோ:

 இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ஜானி பேர்ஸ்டோ தனது அடிப்படை விலையாக் 2 கோடி நிர்ணயத்திருந்தார். கடந்த சீசன்களில் சரியாக விளையாடத நிலையில் ஏலத்தில் அவரை எந்த அணியும் எடுக்க முன்வரவில்லை

ப்ரித்வி ஷா:

 சச்சின் மற்றும் சேவாக்கின் கலவை என்று பெரிதும் பேசப்பட்ட இந்திய வீரர் ப்ரித்வி ஷாவை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை. இந்த முறை ஏலத்தில் தனது அடிப்படை விலையையும் 75 லட்சத்துக்கு  அவர் குறைத்த போதிலும் அவரை எந்த அணியும் ஏலத்தில் எடுக்க முன்வரவில்லை. கடந்த முறை டெல்லி அணிக்காக அவர் விளையாடி இருந்தார் .

  அன்மோல்பிரீத் சிங் ,யாஷ் துல் -,மயங்க் அகர்வால் , பதும் நிசங்க, , பியூஷ் சாவ்லா,   கிறிஸ் ஜோர்டான் ,  சிக்கந்தர் ராசா,  சர்ஃபராஸ் கான் ,டுவைன் பிரிட்டோரியஸ் , , கே எஸ் பரத்  ஆகியோரும் விலைப்படவில்லை.

ரமணி

1/12/24

Saturday, March 23, 2024

சென்னைக்கு சவால் விட்ட கார்த்திக் அனுஜ் ராவத் ஜோடி



 சேப்பாக்கம் சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெற்ற   2024 ஆம் ஆண்டின் முதலாவதி ஐபிஎல் போட்டியில் ம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் , ரோயல் சலஞ்ச் பெங்களூருவை 5 விக்கெற்களால்  தோற்கடித்து வெற்றியுடன் துவக்கியுள்ளது.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற  பெங்களூரு   நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று  முதலில் துடுப்பெடுத்தாடி  20 ஓவர்களில் 174 ஓட்டங்கள் எடுத்தது. 176  ஓட்டங்கள்  என்ற வெற்றி இலகுடன் களம் இறங்கிய சென்னை 18.4 ஆவது ஓவரில் நான்கு விக்கெட்களை இழந்து 176 ஓட்டங்கள் சேர்த்து இலக்கை எட்டியது.

11.4  ஓவர்களில்  5 விக்கெற்களை இழந்து தடுமறிய  பெங்களூரு 78  ஓட்டங்கள் எடுத்தபோது  ஆற்றாவது விக்கெற்றில் ஜோடி சேர்ந்தசேர்ந்த  தினேஷ்  கார்த்திக், அனுஜ் ராவத் ஆகியோர் நிதானமாக  ஓட்டங்களைச் சேர்த்தும், இறுதி ஓவர்களில் அதிரடியாக விளையாடியும் அணியை 173  ஓட்டங்கள் என்ற கௌரவமான ஸ்கோருக்கு கொண்டு சென்றனர்.

கோலி 21, டுபிளசிஸ் 35, கமரூன் கிறீன் 18, அனுஜ் ராவத்  ஆட்டமிழக்காமல் 48, தினேஷ் கார்த்திக்  ஆட்டமிழக்காமல் 38 ஓட்டங்கள் எடுத்தனர்.  4  ஓவர்கள் பந்துவீசிய  முஸ்தபிசுர் ரஹ்மான் 29 ஓட்டங்களைக் கொடுத்து 4 விக்கெற்களைக் கைப்பற்றினார். கடைசியாக 2008 ஆம் ஆண்டு பெங்களூர் அணி சி எஸ் கே வை சேப்பாக்கம் மைதானத்தில் வென்றது.

   சென்னைக்கு ரச்சின் ரவீந்தரா 37, ரகானே 27, சிவம் துபே 34*, ஜடேஜா 25* ஓட்டங்கள்  எடுத்தனர்.  12.3 ஆவது  ஓவரில்  4  விக்கெற்களை இழந்த சென்னை 110 ஓட்டங்கள் எடுத்தபோது   ஜோடி சேர்ந்த சிவம் துபே , ரவீந்திர ஜடேஜா ஆகியோர் வெற்றி இலக்கை எட்டியது.

  நான்கு புதுமுக வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கி கப்டன் ருதுராஜ் கெய்க்வாட் அதிரடி காட்டியுள்ளார்வெளிநாட்டு வீரர்களான ரச்சின் ரவீந்திரா, டேரல் மிட்சல், முஷ்டபிஸுர் ரஹ்மான் ஆகியோருக்கும்  இந்திய வீரரான சமீர் ரிஸ்வியும் அறிமுகமாகியுள்ளார்.

அண்மையில் இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் காயத்தை சந்தித்த அவர் எழுந்து நடக்க முடியாமல் ஸ்ட்ரெச்சரில் சென்றார். ‍  அதனால் மருத்துவமனைக்கு சென்ற அவர் விளையாட மாட்டார் என்று எதிர்பார்க்கப்பட்டாலும் பெரியளவில் காயத்தை சந்திக்காததால் ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக அறிமுகமானார். ஐபிஎல் தொடரில் ஒரு போட்டியில் 4 விக்கெட்டுகள் எடுத்த முதல்பங்களாதேஷ் வீரர் என்ற சாதனையும் அவர் படைத்தார்.

சென்னை அணியின் 16 வருட சாதனை

பெங்களூரு அணிக்கு எதிராக சேப்பாக்கத்தில் 16 வருடங்களாக தோற்காமல் இருந்து வரும் கௌரவ சாதனையையும் சென்னை தக்க வைத்துக் கொண்டது. வரலாற்றில் முதலும் கடைசியுமாக 2008இல் ராகுல் ட்ராவிட் தலைமையிலான பெங்களூருவிடம் சேப்பாக்கத்தில் டோனி தலைமையிலான சென்னை தோற்றது. ஆனால் அதன் பின் விளையாடிய 8* போட்டிகளிலும் பெங்களூருவை தோற்கடித்துள்ள சென்னை சேப்பாக்கத்தை தங்களுடைய கோட்டையாக வைத்துள்ளது.

                          குமார் சங்ககாரவை முந்திய டோனி

  சென்னை அணியின் கப்டன்ஷிப் பதவியை ருதுராஜிடம் ஒப்படைத்த ஜாம்பவான் எம்எஸ் டோனி  விக்கெட் கீப்பராக விளையாடி 2 கேட்ச், 1 ரன் அவுட் செய்து அசத்தினார்.

 இந்த போட்டியில் களமிறங்கியதன் வாயிலாக ரி20 கிரிக்கெட்டில் மிகவும் அதிக வயதில் விக்கெட் கீப்பராக விளையாடிய வீரர் என்ற இலங்கை ஜாம்பவான் குமார் சங்கக்காரவின் சாதனையை உடைத்து புதிய சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல்: 1. எம்எஸ் டோனி : 42 வருடம் 259 நாட்கள், சிஎஸ்கே அணிக்காக, 2024*

2. குமார் சங்ககார : 42 வருடம் 115 நாட்கள், எம்சிசி அணிக்காக, 2020 3. ஜலட் கான் : 41 வருடம் 287 நாட்கள், ஹிந்துகுஷ் அணிக்காக, 2022

4. இர்விங் ரோஜார்ஸ் : 41 வருடம் 255 நாட்கள், அங்குயிலா அணிக்காக, 2006

5. ஆடம் கில்கிறிஸ்ட் : 41 வருடம் 183 நாட்கள், பஞ்சாப் அணிக்காக, 2013

சென்னையில் கார்த்திக்கின் கடைசிப் போட்டி?

38 வயதை கடந்துள்ள தினேஷ்கார்த்திக் இந்த வருடத்துடன் ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக செய்திகள் வெளியானது. எனவே சொந்த ஊரான சேப்பாக்கத்தில் இதுவே உங்களுடைய கடைசி போட்டியா? என்று செய்தியாளர்கள் கேட்டனர்.

 “இது சிறப்பான கேள்வி. இருப்பினும் இது கடைசிப் போட்டியாக இருக்கக் கூடாது என்று நினைக்கிறேன். ஏனெனில் பிளே ஆஃப் சுற்றின் சில போட்டிகள் இங்கே நடைபெற உள்ளது. ஒருவேளை அதில் நான் மீண்டும் விளையாட வந்தால் அதுவே என்னுடைய கடைசி போட்டியாக இருக்கலாம். இல்லையென்றால் இதுவே கடைசிப் போட்டியாக இருக்கும் என்று நினைக்கிறேன்”  என்றார்.

சின்னத்தல ரெய்னாவின் சாதனை முறியடிப்பு

  நியூசிலாந்தை சேர்ந்த 24 வயது இளம் வீரர் ரச்சின் ரவீந்தரா சென்னை அணிக்காக அறிமுகமாக களமிறங்கினார்.  3 பவுண்டரி 3 சிக்சரை தெறிக்க விட்டு 37 (15) ஓட்டங்களை 246.66 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் அடித்த அவர் ஐபிஎல் வரலாற்றில் தனது அறிமுகப் போட்டியிலேயே (குறைந்தபட்சம் 30 ஓட்டங்கள்) அதிக ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடிய வீரர் என்ற சுரேஷ் ரெய்னாவின் 16 வருட சாதனையை உடைத்து புதிய சாதனை படைத்துள்ளார்.

இதற்கு முன் கடந்த 2008ஆம் ஆண்டு மொஹாலியில் பஞ்சாப்புக்கு எதிராக சென்னை வரலாற்றின் தன்னுடைய முதல் போட்டியில்  களமிறங்கிய சுரேஷ் ரெய்னா 2 பவுண்டரி 3 சிக்சருடன் 32 (13) ஓட்டங்களை 246.15 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் அடித்ததே முந்தைய சாதனையாகும். இது போக ஃபீல்டிங் துறையிலும் 2 அபாரமான   பிடிகளை எடுத்தரச்சின் அறிமுகப் போட்டியில் அசத்தினார் என்றே சொல்லலாம்.


                 விராட் கோலியின் பிரமாண்டமான சாதனை 

 சர்வதேச, உள்ளூர் ரி20 போட்டிகளில் ஒட்டுமொத்தமாக 12000 ஓட்டங்கள் என்ற மைல்கல்லை எட்டினார் விராட் கோலிவிராட் கோலி 6 ஓட்டங்களை கடந்த போது இந்த பிரம்மாண்ட சாதனையை படைத்தார். மேலும், இந்தப் போட்டியில் 21 ஓட்டங்கள் எடுத்த கோலி சிஎஸ்கே அணிக்கு எதிராக 1000 ஓட்டங்கள் குவித்த இரண்டாவது வீரர் என்ற சாதனையையும் செய்தார். இந்திய கிரிக்கெட் வரலாற்றிலேயே 12000 ரி20 யில்  12000 ஓட்டங்கள் குவித்த முதல் வீரர் என்ற சாதனையை செய்து இருக்கிறார்.

மேலும் உலக அளவில் இந்த மைல்கல்லை எட்டிய ஆறாவது வீரர் என்ற பெருமையை பெற்றார். இதற்கு முன் கிறிஸ் கெயில், சோயப் மாலிக், கீரான் பொல்லார்ட், அலெக்ஸ் ஹேல்ஸ், டேவிட் வார்னர் ஆகியோர் இந்த மைல்கல் சாதனையை செய்துள்ளனர். அதே சமயம், குறைந்த இன்னிங்ஸ்களில் 12000 ஓட்டங்களை எட்டிய வீரர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்து இருக்கிறார் விராட் கோலி. ரி 20களில் குறைந்த இன்னிங்ஸ்களில் 12000 ஓட்டங்கள் எடுத்த வீரர்கள் - 345 இன்னிங்ஸ் - கிறிஸ் கெய்ல்

360 இன்னிங்ஸ் - விராட் கோலி

368 இன்னிங்ஸ் - டேவிட் வார்னர்

432 இன்னிங்ஸ் - அலெக்ஸ் ஹேல்ஸ்

 451 இன்னிங்ஸ் - சோயப் மாலிக்

 550 இன்னிங்ஸ் - கீரன் பொல்லார்ட்

 

ரிடி20 கிரிக்கெட்டில் 12,000-க்கும் அதிகமான ஓட்டங்கள் குவித்த வீரர்கள் : 14562 - கிறிஸ் கெய்ல்

13360 - ஷோயப் மாலிக்

12900 - கீரன் பொல்லார்ட்

12319 - அலெக்ஸ் ஹேல்ஸ்

12065 - டேவிட் வார்னர்

 12000* - விராட் கோலி

 ஐபிஎல் இல்  சிஎஸ்கே அணிக்கு எதிராக 1,000-க்கும் மேற்பட்ட ஓட்டங்கள் அடித்த வீரர்கள் :

 1057 - ஷிகர் தவான்

1030 - விராட் கோலி

அதிகமுறை டக் அவுட்டான அதிரடி வீரர் மேக்ஸ்வெல் 

  தீபச்சாகர் பந்து வீசியபோது அதிரடி வீரர் மேக்ஸ்வெல் கோல்டன் டக் அவுட்டாக்கி வெளியேறினார் ளை இழந்து தடுமாறியது.

  ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை டக் அவுட் ஆன வீரர்கள் பட்டியலில் தற்போது மேக்ஸ்வெல், ராயுடு, ரசித் கான், பியூஸ் சாவ்லா ஆகியோரை பின்னுக்கு தள்ளியுள்ளார். ஐபிஎல் வரலாற்றில் தினேஷ் கார்த்திக் 17 முறை டக் அவுட்டாக்கி முதலிடத்தில் இருக்கிறார். ரோகித் சர்மா 16 முறை டக் அவுட் ஆகி இரண்டாவது இடத்தில் உள்ளனர்.

தற்போது ஆர்சிபி வீரர் கிளன் மேக்ஸ்வெல் 15 முறை டக் அவுட் ஆகி மூன்றாவது இடத்தில் இருக்கிறார்.சுனில் நரைன், மந்திப் சிங் ஆகியோரும் தலா 15 முறை டக் அவுட் ஆகி இருக்கிறார்கள்.   பீயூஸ் சாவ்லா, அம்பத்தி ராயுடு,மணிஷ் பாண்டே ஆகியோர் 14 முறையும் ஹர்பஜன் சிங், பார்த்திவ் பட்டேல், ரஹானே ஆகியோர் 13 முறையும் டக் அவுட் ஆகியுள்ளனர்.