Showing posts with label கொரோனா. Show all posts
Showing posts with label கொரோனா. Show all posts

Sunday, May 22, 2022

ஆசிய பரா விளையாட்டுப் போட்டி ஒத்துவைக்கப்பட்டது

ஹாங்சோவில்  இந்த ஆண்டு  நடைபெறவிருந்த ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டதாக   அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.கடந்த வெள்ளிக்கிழமை (மே 6) கோவிட்-19 குறித்த அச்சம் காரணமாக சீன நகரத்தில் ஆசிய விளையாட்டுப் போட்டிகளை தாமதப்படுத்தும் நடவடிக்கையைத் தொடர்ந்து இந்த முடிவு தவிர்க்க முடியாததாக இருந்தது.

ஆசிய பாரா விளையாட்டு போட்டி ஒக்டோபர் 9 மற்றும் 15 க்கு இடையில் நடைபெறவிருந்தது.  ஆனால் இப்போது அடுத்த ஆண்டு நிகழ்வை மீண்டும் ஏற்பாடு செய்ய பேச்சுவார்த்தை நடத்தப்படும்.

ஆசிய பாராலிம்பிக் கமிட்டி (APC), சீன பாராலிம்பிக் குழு ,  ஹாங்சோவில்  2022 ஆகியவற்றை உள்ளடக்கிய பணிக்குழு விளையாட்டுகளை நடத்துவதற்கு பொருத்தமான இடத்தைக் கண்டறியும்.

விளையாட்டுகளின் சின்னம், முழக்கம் மற்றும் ஆண்டு மாறாமல் இருக்கும் என்று APC அறிவித்துள்ளது.

22 விளையாட்டுகளில் 616 பதக்க நிகழ்வுகளில் 4,000 க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் போட்டியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது, இது நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஜகார்த்தாவில் நடந்ததை விட பெரியது. 

இந்த ஆண்டு டிசம்பர் 20 முதல் 28 வரை சீனாவின் சாந்தோ நகரில் நடைபெறவிருந்த ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 சீனா தற்போது COVID-19  அதிகரிப்புக்கு எதிராக போராடி வருகிறது, தற்போதைய சூழ்நிலையே ஹாங்சோ 2022 ஒத்திவைக்கும் முடிவிற்கு முக்கிய காரணம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Friday, September 4, 2020

பிறேஸில் வீரர் நெய்மருக்கு கொரோனா

 


பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணியின் நட்சத்திர வீரரும், பிறேஸில் உதைபந்தாட்ட அணியின் முன்னணி வீரருமான நெய்மர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுளளார்.

பிறேஸில்  உதைபந்தாட்ட அணியின் நட்சத்திர வீரர்கள் நெய்மர். இவர் பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் லீக்-1 கால்பந்து தொடரின் முன்னணி அணியான பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிக்காக விளையாடி வருகிறார்.

இந்நிலையில் மூன்று வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று பிஎஸ்ஜி அணி தெரிவித்துள்ளது. பெயர்களை வெளியிடவில்லை என்றாலும் நெய்மர், டி மரியா, லயாண்ட்ரோ பரேடஸ் ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

யூரோ சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் தோல்வியடைந்த பிஎஸ்ஜி அணி பிரெஞ்ச் லீக்கில் அவர்களுடைய 2-வது போட்டியை தள்ளி வைக்க கேட்டுக்கொண்டது. அதன்படி ஆகஸ்ட் 29‍ஆம் திகதி நடபெற இருந்தது அக்டோபர் 10‍ஆம் திகதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

நெய்மர் விடுமுறையை கொண்டாட இபிஸா தீவுக்கு சென்றதாக தெரிகிறது. அங்கு அவருக்கு கொரோனா தொற்றிக்கொண்டுள்ளது.

Friday, July 17, 2020

சீனாவில் மீண்டும் திறக்கப்படும் திரையரங்குகள்

 

சீனாவில் திரையரங்குகள் அடுத்த வாரம் திறக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து சீனாவின் திரையரங்க நிர்வாகத்தினர் தரப்பில், “சீனாவில் கொரோனா பரவல் தொற்று மீண்டும் பூஜ்ஜியமாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து அடுத்த வாரம் சீனாவில் திரையரங்குகள் மீண்டும் திறக்கப்பட உள்ளன. 30% சதவீத அனுமதிச் சீட்டுகள் மட்டுமே விநியோகிக்க அனுமதி அளிக்கப்படுகிறது. மேலும் திரையரங்குகளுக்கு வருபவர்கள் சமூக இடைவெளி மற்றும் முகக்கவசம் அணிதல் போன்றவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும்என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் ஜனவரி மாதம் திரையரங்குகள் மூடப்பட்னகொரோனா பரவல் குறைந்த நிலையில் மார்ச் மாதம் மீண்டும் திறக்கப்பட்டன. இந்த நிலையில் மீண்டும் கொரோனா பரவல் தோன்றியதால் திரையரங்குகள் மூடப்பட்டன.

பீஜிங்கில் கடந்த 10 நாட்களாக யாருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை. அறிகுறிகள் ஏதும் இல்லாமலும் யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை.

கடுமையான ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டதன் விளைவாக, சீனாவில் இந்த நோய்த் தொற்று கடந்த ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் முழுவதுமாக கட்டுக்குள் வந்தது. அங்கு கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இதுவரை 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், சீனத் தலைநகர் பெய்ஜிங் அருகே உள்ள அக்சின் என்ற பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனா  வைரஸ் மீண்டும் பரவத் தொடங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. அங்குள்ள ஒரு இறைச்சி சந்தையில் பணிபுரிவோரிடம் இருந்து இந்த வைரஸ் பரவியிருக்கக் கூடும் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பீஜிங் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் விளைவாக பீஜிங்கில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.