Showing posts with label ரணில். Show all posts
Showing posts with label ரணில். Show all posts

Tuesday, September 12, 2023

அதிர்ச்சி தந்த சனல் 4


 உலக சாம்ராஜ்யங்களைப் புரட்டிப் போட்டதில் ஊடகங்களின் பங்கு   மிக  முக்கியமானது. ஊழல் சதி, புரட்சி  போன்ரவற்றைமுன் கூட்டியே கணித்து எச்சரிக்கைவிடும்  ஊடங்கள்  ஒரு புறம்  உள்ளன. வெளி  உலகுக்குத் தெரியாது  மறைக்கப்பட்ட உண்மைகளைத் தோண்டி எட்சுத்து வெளியிடும் ஊடகங்கள் இன்னொருவகை.

பிரித்தானியாவில்  இயங்கும் "சனல் 4" வெளியிடும் காட்சிகள் சில நாடுகளைச் சங்கடப்படுத்தியுள்ளன. பிரித்தானியாவின் சேனல் 4 கடந்த செவ்வாய்க்கிழமை     இரவு இலங்கை தொடர்பான  காணொளி ஒன்றை வெளியிட்டதால்  அதிர்வலைகள் ஏற்பட்டுள்ளன. 2019-ம் ஆண்டு  ஈஸ்டர் தினத்தன்று நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்புகளில் வெளிநாட்டவர்கள்  உட்பட  269 பேர் பலியாகினர். உலகையே அதிரவைத்தது இந்த தற்கொலைப்படைத் தாக்குதல் சம்பவங்களால் இலங்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டது. சனல் 4 வெளியிட்ட 50 நிமிட காணொளி பேசு பொருளாக  மாறியுள்ளது.

பிள்ளையான் குழுவின் ஊடகப் பேச்சாளராக இருந்த அசாத் மௌலானா  பல தகவல்களை சமர்ப்பித்துள்ளார். இலங்கையில் நிதிக் குற்றச்சாட்டுக்கள் காரணமாக தற்போது சுவிட்சர்லாந்தில் அரசியல் தஞ்சம் பெற்றுள்ளனர் அசாத் மௌலானா.இந்த நிகழ்ச்சியில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக நீண்ட விமர்சனத்தை முன்வைத்து பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தப்பட்டுள்ளன.

காணொளியில் பெரும்பாலான பகுதிகள்  லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பில் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில்,  அசாத் மௌலானாவும் குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தும் அறிக்கைகளை வெளியிட்டிருந்தார்.பிள்ளையான் குழுவுடன் இணைந்து ட்ரிபொலி பிளட்டூன் என்ற ஆயுதக் கும்பலை அன்றைய அரசாங்கம் உருவாக்கி, ஊடகங்களை அடக்குவதற்கும் எதிரணியினரை மௌனமாக்குவதற்கும் பயன்படுத்தியதாக அசாத் மௌலானா இதன்போது தெரிவித்திருந்தார்.

 ஈஸ்டர் தாக்குதல் பற்றிய தகவல்களுக்காக , வௌ்ளை வான்குற்றச்சாட்டின் போது நாட்டை விட்டு தப்பிச் சென்ற குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் சிரேஷ்ட அதிகாரி நிஷாந்த சில்வா, வௌ்ளை கொடி வழக்கின் சாட்சியாளராக இருந்த ஊடகவியலாளர் பிரட்ரிக்கா ஜேன்ஸ், படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்  லசந்த விக்ரமதுங்கவின் சகோதரர் லால் விக்கிரமதுங்க மற்றும் பெயர் குறிப்பிடப்படாத பிற நபர்கள் சிலரின் வாக்குமூலங்கள் பயன்படுத்தப்பட்டிருந்தன.

இந்த காணொளியில் கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின்  அம்பிகா சத்குணநாதன் மற்றும் முன்னாள் இராஜதந்திர அதிகாரி சரத் கொங்கஹகே ஆகியோரின் வாக்குமூலங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

பிள்ளையானின் அறிவுறுத்தலின் பேரில் 2018 ஜனவரி மாதம் புத்தளம் கரடிப்புல் பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் தௌஹீத் ஜமாஅத் உறுப்பினர்களுக்கும் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தலைவராக இருந்த சுரேஷ் சலேவுக்கும்   இடையில் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுத்ததாகவும் இதில்  சஹ்ரான் உள்ளிட்ட ஜமாஅத் உறுப்பினர்கள் 6 பேர்  கலந்து கொண்டதாக அசாத் மௌலானா தெரிவித்தார். அந்த சந்திப்பின் முடிவில் தன்னிடம் வந்த சுரேஷ் சலே, ராஜபக்ச ஆட்சிக்கு வர நாட்டில் பாதுகாப்பற்ற சூழலை உருவாக்க வேண்டும் என்று கூறியதாக அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், சேனல் 4  ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் குறித்த ஆவணப்படத்தை தயாரித்த பேஸ்மென்ட் பிலிமிஸ் நிறுவனத்தின் ‘பென் டி பெயார்’, அரச புலனாய்வு சேவையின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது நான்கு குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்.

மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, கேள்விகளுக்கு பதில் கடிதம் அனுப்பி குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ள நிலையில்,  சேனல் 4 காணொளியில் அது குறிப்பிடப்பட்டுள்ளது.

மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, இது தொடர்பான குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய்யானவை எனவும் கூறப்படும் சந்திப்பின் போது தாம் மலேசியாவில் தங்கியிருந்ததாகவும் ஈஸ்டர் தாக்குதலின் போது இந்தியாவில் பயிற்சி நிகழ்ச்சியில் பங்கேற்றதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் குற்றச்சாட்டுகளை உள்ளடக்கிய நம்பகமான ஆதாரங்கள் இல்லாமல் தொடர்புடைய அறிக்கை நிகழ்ச்சியை ஒளிபரப்பினால் சட்ட நடவடிக்கை எடுப்பேன் என்று நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் பென் டி பியரிடம் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நிலையில் இலங்கையில் ஈஸ்டர் குண்டுவெடிப்புகள் தொடர்பில் சர்ச்சைக்குரிய வீடியோவை ஒளிபரப்பிய இங்கிலாந்தின் சேனல் 4,  வீடியோக்களை அகற்றியுள்ளது.

அதன் இணையதளம் உட்பட அனைத்து சமூக வலைத்தளங்களிலிருந்தும் சர்ச்சைக்குரிய வீடியோவை நீக்கியுள்ளது.

பிரித்தானியாவின்  ‘சனல் 4 ‘ செய்திச் சேவை வெளியிட்டுள்ள ஆவண தொகுப்பில் வெளியாகியுள்ள, உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதலின் பின்னணியில் இருந்ததாகக் கூறப்படுகின்ற பாரிய சூழ்ச்சி மற்றும் அதனூடனான சகல விடயங்களும், அதில் குறிப்பிடப்படுகின்ற நபர்கள் தொடர்பிலான விசாரணையொன்று சுயாதீன சர்வதேச விசாரணை குழு ஒன்றின் மூலமாக நடத்தப்பட வேண்டும் என கொழும்பு மறை மாவட்ட பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை வலியுறுத்தினார்.

இந்த விசாரணை  சுயாதீனமான முறையில் நடத்தப்பட வேண்டுமானால், இந்த விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்ற மற்றும் தற்போதும் புலனாய்வு பிரிவுகளைப் போலவே பொலிஸ் திணைக்களங்களில் உயர் பதவிகளில் இருக்கின்ற சகல அதிகாரிகளினது சேவைக்காலம், இந்த விசாரணை முடிவடையும் வரையில் இடைநிறுத்தப்பட‍ வேண்டும் என மேலும் குறிப்பிட்டார்.

தற்போது வெளியாகியுள்ள ‘சனல் 4 ‘ செய்திச் சேவை ஆவணத் தொகுப்பில் வெளியாகியுள்ள விடயங்கள் தொடர்பில் இந்நாட்டு மக்கள் அனைவரும் தங்களது கவனத்தை செலுத்துமாறும் பேராயர் பொது மக்களிடம் கோரிக்கை  விடுத்திருந்தார்.

பிரித்தானியாவின்  ‘செனல் 4 ‘ செய்திச் சேவை வெளியிட்டுள்ள ஆவண தொகுப்பு குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் ஊடக சந்திப்பொன்று கொழும்பு பேராயர் இல்லத்தில் நடைபெற்றது. இதன்போதே  கர்தினால் ஆண்டகை  மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேற்குலகு ஊடகங்கள் இலங்கையின் கொலைககளம் குறித்த அவணப்படத்தை அடிப்படையாக கொண்டு கட்டுரைகளையும், ஆயு;வுகளையும் தொடர்ந்து மேற்கொள்ளும் நிலையில், இலங்கை அரசாங்கமோ சனல் 4 தொலைககாட்சி ஒளிபரப்பிய ஆவணப்படம் போலியானது என்றே தொடர்ந்தும் குறிப்பிட்டு வருகிறது.

ஆவணப்படம் வெளியானவுடன் இதுதொடர்பில் அறிக்கை வெளியிட்ட பிரிட்டனிலுள்ள இலங்கைத் தூதரகம், குறித்த காட்சி போலியானதென வர்ணித்திருந்ததுடன், காட்சிகளில் திட்டமிட்டு படுகொலை செய்யப்படுவதை அவதானிக்க முடிவதாகவும், சில சர்வதேச ஊடகங்கள் சிலரை திருப்திபடுத்தும் நோக்குடன் செயற்படுவதாகவும் கவலை வெளியிட்டிருந்தது. 

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸ சனல் 4 ஆவணப்படம் வெளியானவுடன் குறித்த படம் புலிகளின் பணத்தில் மேற்கொள்ளப்பட்ட போலி ஒளிப்பதிவு எனவும், புலிகள் தமது பணத்தின் மூலம்  சனல் 4 தொலைககாட்சியை மீண்டுமொருமுறை பயன்படுத்திக் கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

இறுதி யுத்தத்தில் பொதுமக்களை காப்பற்ற இராணுவம் தன்னை அர்ப்பணித்திருந்ததாகவும், சரணடைந்த புலிகள் மனிதாபிமானத்துடன் நடத்தப்பட்டதாகவும், இதற்கு தமிழ் செல்வனின் மனைவி, சூசையின் மனைவி, பிரபாகரனின் பெற்றோர் உதாரணமெனவும் கோத்தாபய ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அரசாங்கம் முற்றாக சனல் 4 தொலைககாட்சி ஒளிபரப்பிய இலங்கையின் கொலைககளம் என்ற ஆவணப்படத்தை நிரகரித்துள்ள நிலையில சில அரசியற் கட்சிகளிடமிருந்து இலங்கை மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஆராயப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளன. குறிப்பாக ஜே.வி.பி. இந்த விசாரணையின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளது.

அத்துடன் மனோ கனேசனும் சனல் 4 ஆவணப்படம் குறித்து இலங்கை விசாரணை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தியுள்ளார், தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இந்நிலைப்பாட்டை கொண்டிருப்பதையே அவதானிக்க முடிகிறது.

Monday, July 24, 2023

மாற்றம் காணாத ஏமாற்ற அரசியல்


 டட்லி- செல்வா, பண்டா - செல்வா காலத்தில் ஆரம்பமான ஏமாற்ற அரசியல் ரணின் காலத்திலும் தொடர்கிறது. மாற்றம் ஒன்றே மாறாதது என்பார்கள்.  ஆனால்,  இலங்கை அரசியலில் ஏமாற்றமும் மாறாதது. 13 ஆவது திருத்தச் சட்டத்தைக் கையில் எடுத்து 36 வருடங்கள் கடந்து விட்டன. ஜனாதிபதியாகப் பதவி ஏற்ற ரணிலும் 13 ஐக் கையில் வைத்துக்கிண்டு அரசியல் செய்கிறார்.

இந்திய இலங்கை ஒப்பந்தம், 1987  ஆம் ஆண்டு அப்போதைய இந்திய பிரதமர் ராஜீவ் காந்திக்கும் , இலங்கை ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்தனவுக்கும் இடையே யூலை 29, 1987 ஆம் ஆண்டு ஈழத்தமிழர்களின் பிரச்சினைகளை தீர்க்கும் நோக்குடன் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தம் ஆகும். அந்த  ஒப்பந்தம் கோப்புகளில் மட்டும் தான்  இருக்கும் என்பதை  அன்றைய அரசியல் நிலை  வெளிப்படுத்தியது.

போர் என்றால் போர் சமாதானம் என்றால் சமாதானம் என்ற  தொனியுடன்  அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன வெளிப்படையாக தமிழர் எதிர்ப்பு அரசியலைக் கையில் எடுத்ததார். அதன் பின்னர் பிறேமதாச வெளிப்படையாக இந்திய எதிர்ப்புணர்வை விதைத்தார். இடசிய்ல் வந்த ஒருவர் மரம், செடி,கொடி என்ரார்.  சமாதானப் புறாவாக தோன்றைய சந்திரிகா  கடைசியில் எல்லாவற்றையும் கைவிட்டார். 13+ என்று  சொன்ன  மகிந்த ராஜபக்ஷ வும்  கைவிட்டார்.

இப்போது ரணிலின்  முறை. வாருங்கள் கதைக்கலாம் என வடக்கு, கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் அழைப்பு விடுத்க்தார்..வழக்கம்  போல சில தமிழ்த் தலைவர்கள்  முரண்டு பிடித்தனர். அவருடன் பேசி, ஆகப்போவது  ஒன்றும்   இல்லை என அவர்கள் சொன்னார்கள். அவர்கள் சொன்ன சாத்திரம் பலித்து விட்டது.

இந்தியாவுக்குச் செல்லும்  முன்பு தமிழ்த்தலைவர்களுடன்  பேசி முடித்து விட வேண்டும் என விரும்பிய ரணிலி ஆசை நிறை வேற்றப்பட்டது. பொலிஸ் அதிகாரம் இல்லை. வடக்கு கிழக்கு இணைப்பு இல்லை என்ற ஜனாதிபதியின் யோசனையைத் தமிழ்த் தலைவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது தொடர்பான சிறந்த யோசனையை தாம் தற்போது முன்வைத்துள்ளதாகவும், அதனை முன்னெடுத்துச் செல்வதா, இல்லையா என்பதைத் தமிழ்க் கட்சித் தலைவர்கள் தீர்மானிக்க வேண்டுமெனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.  பிரச்சனைக்குத் தீர்வைத் தமிழ்த்தைவர்கள்தான் தெரிவிக்க வேண்டும் என்று அழுத்தம்  கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக   ஜனாதிபதி ரணில் மேலும் கருத்துத் தெரிவிக்கையி,

“வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கவே தாம் விரும்புகின்றேன், அவர்களால் அரசியல் ஆதாயங்களைப் பெறுவது எனது நோக்கமல்ல.

 பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சித் தலைவர்களும் முழுமையான அதிகாரப் பகிர்வுக்கு இணங்கினால் மாத்திரமே அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியும்.

வடக்கு, கிழக்கு மக்களுக்கு   ஒருபோதும் அநீதி இழைக்கப் போவதில்லை. அவர்களுக்காக மேலும் ஏதாவது செய்ய வேண்டுமாயின் கலந்துரையாடல் மற்றும் இணக்கப்பாட்டின் மூலம் பாராளுமன்றத்தின் முழுமையான ஆதரவைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.அரசமைப்பின் 13ஆவது திருத்தம் தொடர்பிலான பரிந்துரைகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டு, பொலிஸ் அதிகாரங்கள் தவிர பிரேரணையில் முன்வைக்கப்பட்டுள்ள ஏனைய அனைத்து அதிகாரங்களையும் வழங்க முடியும்.பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சி தலைவர்களும் ஏற்றுக்கொண்டால் மாத்திரமே பொலிஸ் அதிகாரங்களை வழங்க முடியும். இதற்கு பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை தேவை.” என தெரிவித்துள்ளார்.


  சந்திரிகா  ஜனாதிபதியாக  இருந்தபோது சமர்ப்பித்த யோசனையை பாராளுமன்றத்தில் கிழித்து எறிந்தது யார் என்பதித் தமிழ் மக்கள் மறக்கவில்லை. சரத் வீர சேகர போன்ற சண்டியர்கள்  இருக்கும்  பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை  கிடக்கப்போவதில்லை.

இந்திய  - இலங்கை ஒப்பந்தப்படி  13 ஐ அமுல் படுத்த வேண்டும் கே.எஸ்.அழகிரி,அண்ணாமலி போன்ர தமிழகத் தலைவர்களும் வலியுறுத்துகின்றனர். வடக்கு ,குழக்கு தமிழ்த் தலைவர்கள்  இந்திய ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்திலும்  13 ஐ அமுல் படுத்துமாறு  கோரிக்கை விடுத்துள்ளனர். 

தமிழகத் தலைவர்களின் வலியுறுத்தல், வடக்கு, கிழக்கு தமிழ்த் தலைவர்களின் கோரிக்கை தொடர்பாக  இந்தியப் பிரதமர் மோடி ஏதாவது  கேட்டல் அதற்குப் பதிலளிப்பதற்கு  ஆயத்தமாக   ரணில் சென்றுள்ளார். எப்பவோ செத்துப்போன 13  ஐ ஐ.சி.யுவில் வைத்து உயிர் கொடுக்க  சிலர் முயற்சிக்கிரார்கள்.

 

Monday, June 19, 2023

மிரட்டும் அரசியல் மிரளும் அரசியல்வாதிகள்

ரணில் விக்கிரமசிங்க  ஜனாதிபதியானதில் இருந்து பெரும் நெருக்கடிகளை எதிர் நோக்கி வருகிறார். அமைச்சுப் பதவிக்கு ஆசைப்படும் அரசியல்வாதிகளால்  ஜனாதிபதிப் பதவிக்கு ஆபத்து வந்துவிடுமோ என்ற அச்சம்  உள்ளது. அரசியல் தந்திரங்கலில் ஊறிப்போன ரணிலுக்கு  இது எல்லாம்  ஒரு பொருட்டே அல்ல.

பெரிதும் எதிர் பார்க்கப்பட்ட  உள்ளூராட்சித் தேர்தல் பற்ரி இப்போது யாரும் கதைப்பதில்லை.  உள்ளூராட்சித் தேர்தலில் தமது  பலத்தை  நிரூபிக்கக் காத்திருந்தவர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

ஜனாதிபதிக்கு நெருக்கடி கொடுக்கபப்ட்டால்  அவர் பாராளுமன்றத்தைக்கலைஒத்து விடுவார் என்ற செய்ர்தி கடந்த வாரம்  முக்கியத்துவம் பெற்றது. ஆட்சியை கொண்டு செல்வதில் நெருக்கடி நிலைமை ஏற்படுமாக இருந்தால் பாராளுமன்றத்தை உடனடியாக கலைத்து நாடாளுமன்ற தேர்தலுக்கு செல்வதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கலாம் என கூறப்படுகிறது.

அரசாங்கத்தின் பிரதான கட்சியான பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் குழுவொன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளதாகவும், இதனால் ஜனாதிபதிக்கு தீர்மானங்களை எடுப்பதற்கு இடையூறுகள் ஏற்படுமாக இருந்தால் பாராளுமன்றத்தை கலைப்பது தொடர்பில் ஜனாதிபதி ஆராய்ந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.இதுவேளை பாராளுமன்றத்தைக் கலைத்து தேர்தலின் மூலம் அமைக்கப்படும் தமது அரசாங்கம் தற்போதைய ஜனாதிபதியுடன் இணைந்து செயற்படத் தயார் என ஐக்கிய மக்கள் சக்தி ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பாராளுமன்றத் தேர்தல் மூலம் மொட்டுக் கட்சியினரை விரட்டியடிக்க மக்கள் தயாராகவுள்ளனர். எனவே, பாராளுமன்றத்தை உடனடியாகக் கலைத்துத் தேர்தலை நடத்த வேண்டும் என்று ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கின்றோம் என ஜே.வி.பியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவுக்கு ஜனாதிபதி பதவி மீது ஆசை, மொட்டுக் கட்சியினருக்கு அமைச்சுப் பதவி மீது ஆசை. இப்படிப் பதவி ஆசை பிடித்தவர்களின் ஆட்சி தற்போது பிளவடைந்துள்ளது. மக்கள் ஆணையை இழந்த ரணில் - மொட்டு அரசு, பதவி ஆசையில்தான் ஆட்சியில் அமர்ந்தது. இது வெளிப்படையாக அனைவருக்கும் தெரிந்த விடயம் எனவும் அவர்  கூறியுள்ளார். 

ஜனாதிபதி  ரணிலை மிரட்டுவதும்  பின்னர் அடங்கிப் போவதும் வழமையான சங்கதிதான்.இன்ரைய நிலையில் தேர்தலுக்கு முகம்  கொடுக்க  மொட்டுக் கட்சிதயாராக  இல்லை. இதனை நன்கு தெரிந்துகொண்ட ரணிலும் தன்பங்குக்கு மொட்டுக்கட்சிக்கு நெருக்கடி கொடுக்கிறார். அமைச்சுப் பதவி வேண்டும் என மிரட்டிய  மொட்டுக் கட்சியினர் அடங்கி

 ஒடுங்கிப் போயுள்ளனர். ஜனாதிபதி ரணிலின் கரத்தைப் பலப்படுத்தப்போவதாக அறிக்கை விட்டுள்ளனர்.

மிரட்டல் அரசியல் சரிவராது என்பதனால்  இணக்க அரசியலுக்கு மாறிவிட்டது மொட்டுக் கட்சி.

சில தொழிற்சங்கங்களும், தமது கட்சியைச் சேர்ந்த உள்ளூர் அரசியல்வாதிகள் சிலரும் அரசாங்கத்தின்  கொள்கையில்  முரண்படுவதாக பஷில் தெரிவித்துள்ளார். ரணிலுன்ட  இனங்கிப் போவதன் சாதக சமிக்ஞையாக இதனைக் கருதலாம். ஆனால்,இது உறுதிமொழியல்ல சந்தர்ப்பவாத அரசியல். சந்தர்ப்பவாத அரசியலைக் கற்றுத் தேர்ந்த ரணிலுக்கு  முன்னால் இது எடுபடாது.

பாராளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் நடந்தால் மொட்டுக் கட்சிக்கு பலத்த அசியாக  இருக்கும்,ராஜபக்ஷ குடும்பத்தினர் வெற்றி பெறுவதென்பது சந்தேகமே. இப்போதைக்கு ரணிலுடன்  இணைந்து போவதைத் தவிர  வேறு மார்க்கம்  மொட்டிக் கட்சிக்கு  இல்லை.

Tuesday, May 9, 2023

பொருளாதர மீட்சிக்கான பாதையில் செல்ல இலங்கையால் முடியும்

பொருளாதாரத்தால்  பாதிக்கப்பட்ட இலங்கையை மீட்டெடுப்பதற்கு ரணில் விக்கிரமசிங்க களத்தில் குதித்தார். அவருக்கு  ஜனாதிபதி பதவி கிடைத்ததும் இலங்கை  உடனடியாக மீண்டு விடும் என எவரும் நம்பவில்லை. இலங்கையின்  பொருளாதாரத்தை  நேர்படுத்துஅதர்கு அவர் பரயத்தனப் பட்டார். பல தடங்கல்கள்   போடப்பட்டன. அனைத்தையும் தாண்டி நிமதிப் பெருமூச்சு விட்டுள்ளார்.

கடன்  கிடைக்குமா  கிடைக்காதா எனப் பட்டி மன்றம் நடந்த போது கடனைப் பெற்ரு  அரசியல் எதிரிகளைப் பார்த்து   மெதுவாகச் சிரித்தார். அந்தக் கடன் முழுமையாகக் கிடைப்பதற்கு பல படிகளைத் தாண்ட வேண்டி உள்ளது.இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டளவில்  மீட்சிக்கான பாதியில் இலங்கை செல்லும் என சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் கிருஷ்ணா சீனிவாசன்.

 அனைத்து சீர்திருத்தங்களையும், முறையான அமுலாக்கத்தையும், கடனை மறுசீரமைப்பதையும் செப்டெம்பர் மாதத்திற்குள் துரிதப்படுத்தினால், 2024 ஆம் ஆண்டிலிருந்து பொருளாதாரம் மீட்சிக்கான பாதையில் இலங்கை  செல்லும் என  அவர் தெரிவித்துள்ளார்.

 "நிதி, பணவியல், நிர்வாகம் மற்றும் சமூக பாதுகாப்பு நிகர சீர்திருத்தங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த திட்டம் மிகவும் லட்சியமானது. இலங்கைக்கான செயல்பாட்டின் அடுத்த கட்டம், அனைத்து கடன் வழங்குநர்களுடனும் நல்ல நம்பிக்கையில் ஈடுபடுவது மற்றும் முதல் மதிப்பாய்வுக்கு முன் செய்யப்பட வேண்டும். அரசாங்கம் சீர்திருத்தங்களை நிறைவேற்றி அவற்றை வெற்றிகரமாக செயல்படுத்தினால், நாடு முன்னேற்றப் பாதையில் முன்னேறிச் செல்லும்,” என்று அவர் கூறினார். கொரியா குடியரசின் இஞ்சியோனில் வருடாந்திர கூட்டம்.

இந்த மாத இறுதியில் கொழும்பில் நடைபெறவுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பணி மறுஆய்வுக் கூட்டத்திற்கு முன்னதாக அவரது கருத்துக்கள் வந்துள்ளன.

“அமுலாக்கம் எவ்வாறு வருகிறது என்பதைப் பார்க்க நாங்கள் இரண்டு வாரங்களில் இலங்கைக்கு வருவோம். கடன் மறுசீரமைப்பு தொடர்பான முழு பிரச்சினையையும் நாங்கள் கவனிப்போம், ”என்று அவர் மேலும் கூறினார்.

இந்தத் திட்டத்தில் நிறைய சீர்திருத்தங்கள் உட்பொதிக்கப்பட்டுள்ளன என்பதைக் குறிப்பிட்ட சீனிவாசன், செயல்படுத்துவது முக்கியமானது என்று வலியுறுத்தினார். "இந்த ஆண்டு 3% பொருளாதார சுருக்கத்தை நாங்கள் கணித்தாலும், 2024 க்கு 1.5% நேர்மறையான வளர்ச்சியை நாங்கள் ஒதுக்கியுள்ளோம்," என்று அவர் மேலும் கூறினார்.

கடந்த வாரம், நாட்டின் பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கும் அதன் கடன் சுமையைக் குறைப்பதற்கும் நான்காண்டு IMF திட்டத்தை பெரும்பான்மை வாக்குகளால் நாடாளுமன்றம் நிறைவேற்றியது.

IMF பொருளாதாரக் கண்ணோட்டத்தைப் பொறுத்தவரை, இருண்ட வெளிப்புறக் கண்ணோட்டம் இருந்தபோதிலும், ஆசியா மற்றும் பசிபிக் ஆற்றல்மிக்கதாக இருக்கும், இது உலகளாவிய பொருளாதார வளர்ச்சிக்கு 70% பங்களிக்கும் - சமீபத்திய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது குறிப்பிடத்தக்க முன்னேற்றம்.

IMF அதன் அக்டோபர் 2022 கணிப்பையும் 2023 இல் 0.3% முதல் 4.5% வரை உயர்த்தியுள்ளது. தொற்றுநோய்க்குப் பிந்தைய பொருளாதாரத்தை மீண்டும் திறந்த பிறகு இந்த ஆண்டு 5.2% வளர்ச்சி விகிதத்துடன் பிராந்தியத்தின் வளர்ச்சி சீனாவால் வழிநடத்தப்படும். சீனப் பொருளாதாரத்தின் வளர்ச்சியானது அதன் வழக்கமான முதலீட்டுப் பொருட்களிலிருந்து அல்ல, நுகர்வுப் பொருட்களிலிருந்து உருவாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த ஆண்டில் சீனாவின் பொருளாதார வளர்ச்சியால் சீனப் பயணிகளைச் சார்ந்திருக்கும் நாடுகள் பயனடையும் என்றும் அவர் கூறினார்.

கோவிட் பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக மெதுவாகத் தொடங்கிய போதிலும், ஏப்ரல் மாதத்தில் 5,118 சீனப் பயணிகளுடன் ஆறாவது இடத்தைப் பெற்று, இலங்கையின் முதல் 10 மூலச் சந்தைகளில் இடம்பிடிக்க சீனா முடிந்தது. மார்ச் மாதத்தில் இது முதல் 10 மூலச் சந்தைகளில் நுழைந்து, ஒன்பதாவது இடத்தைப் பிடித்தது.

Sunday, April 30, 2023

மாணவர்களுடன் விளையாட வேண்டாம்

இலங்கையின் வரப்பிரசாதங்களில்  இலவசக் கல்வி  முதன்மையானது. இலவசமாகக் கல்வி கிடைத்தாலும் வயிற்றுப் பசி மாணவர்களை வாட்டியது. சாப்பாடு இல்லாமல் சில மாணவர்கள் பாடசாலைக்குச் செல்கின்றனர். சாப்பாடு இல்லாததால் சில மாணவர்கள்  பாடசாலைக்குச் செல்வதில்லை. மதிய  உணவுத் திட்டம் மணவர்களுக்கு  பெரும் கொடையாக அமைந்தது.

மதிய  உணவு சத்துணவாகக் கொடுக்கப்படுகிறது.  இந்த திட்டத்தின் மூலம் 1.1 மில்லியன் மாணவர்கள்  பயனடைகிறார்கள்.

பணிஸ்,  பிஸ்கற் போன்றவை முன்னர் பாடசாலைகளில்  கொடுக்கபட்டன. பின்னர் அந்த நடைமுறை கைவிடப்பட்டது. இப்போது மதிய  உணவு மாணவர்களுக்கு ஊக்கம்  கொடுக்கிறது.அந்த  உணவுத் திடத்திலும்  இடி விழுந்துள்ளது.உணவு விநியோகம் செய்பவர்களுக்குக் கொடுக்கப் பணம்  இல்லாமையால்  இந்தத் திட்டம் முடங்கும் அபாயம்  உள்ளது.  கடந்த  இரண்டு மாதங்களாக உணவு விநியோகம் செய்பவர்களுக்கு கடந்த இரண்டு மதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை.

ஒரு காலத்தில் மாஅவர்களின் வருகை  கணிசமாகக் குறைந்திருந்தது, காலை உணவில் குழந்தைகளுக்கு சரியான உணவு கிடைக்காததே இதற்குக் காரணம் என்று ஒரு கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. மாணவர்களின் உணவில் முதல் வேளை உணவு இல்லாததால், பாடசாலைகளில்  காலை கூட்டங்களில் குழந்தைகள் மயக்கம் அடைவதாக செய்தி வந்தது.அப்போதுதான் 'சமூக உணவு பகிர்வு' இணைந்து ஒரு முன்னோடி நிகழ்ச்சியை நடத்தியது. 'உணவு பகிர்வு', கல்வி அமைச்சு மற்றும் சம்பந்தப்பட்ட வலய மற்றும் பிரதேச கல்விப் பணிப்பாளர்களுடன் இணைந்து இதனை முன்னெடுத்தனர்.

பள்ளி மாணவர்களின் உதவிக்கு வரும் பரோபகாரர்கள் மற்ற பாத்திரங்களை நாங்கள் செய்தித்தாள்களில் படிக்கிறோம். ஒன்று, மதிய உணவு திட்டத்திற்கு சில உதவிகளை வழங்க பிரெஞ்சு அரசாங்கம் முன்வந்தது. மற்றொரு சந்தர்ப்பம், சீன அரசாங்கம் 70% பள்ளி சீருடைகளை இலவசமாக வழங்க முன்வந்தது.

பாடசாலைகளுக்கு உணவு விநியோகம் செய்பவர்களுக்கு    நிலுவையில் உள்ள கடன்களைத் தீர்க்க உலக வங்கி நிதி பயன்படுத்தப்படும். பள்ளி உணவுத் திட்டத்திற்கான ஆதரவைப் பெறுவதற்கு இலங்கை அரசாங்கம் பள்ளிகளுக்கு உணவு வழங்குபவர்களுக்கு நிலுவையில் உள்ள கடன்களைத் தீர்க்க உலக வங்கி நிதி பயன்படுத்தப்படும் என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம். பள்ளி உணவுத் திட்டத்திற்கான ஆதரவைப் பெறுவதற்கு இலங்கை அரசாங்கம் (GoSL) 'வெளியில் இருந்து' உதவி வருகிறது என்பதை அறிந்து கொள்வது எப்போதும் நல்லது. இந்த திட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்பதாக அமைச்சர் உறுதியளித்துள்ளார் 'வெளியில் இருந்து' உதவி வருகிறது என்பதை அறிந்து கொள்வது எப்போதும் நல்லது. இந்த திட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்பதாக அமைச்சர் உறுதியளித்துள்ளார்

. இந்த வருடம் பெப்ரவரி , மார்ச் மாதங்களில் உணவு விநியோகம் செய்பவர்களுக்கு பணம் வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் வேலைத்திட்டம் இடைநிறுத்தப்பட்டதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த புதன்கிழமை (26) தெரிவித்தார்.

  மேல் மாகாணம் தவிர்ந்த நாடளாவிய ரீதியில் இந்த வேலைத்திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. விநியோகம் செய்பவர்கலுக்கு செலுத்த வேண்டிய இந்த இரண்டு மாதங்களுக்கு 875 மில்லியன் ரூபாய் நிலுவையில் உள்ளது. 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் இந்த திட்டத்திற்காக 16.6 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்ட போதிலும், பொருளாதார நெருக்கடி காரணமாக கொடுப்பனவுகள் தாமதமாகியுள்ளன. பிரேமஜயந்த, உலக வங்கியின் நிதியைப் பயன்படுத்தி அடுத்த இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குள் நிலுவைத் தொகையை செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் பிரேமஜயந்த .

மாணவர்களின் பசியுடன் விளையாடாமல் அவர்களின்பசியைப் போக்க அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Monday, April 24, 2023

தேசிய அரசுக்கு தயாராகும் ரணில்

உள்ளூராட்சி சபைத் தேர்தல், ஜனாதிபதித் தேர்தல்  ஆகிய பரபரப்புகளுக்கு மத்தியில் தேசிய அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க  பேச்சு வார்த்தை நடத்துவதாக தகவல் கசிந்துள்ளது.

தேசிய அரசு தொடர்பாக மக்களால் விரட்டப்பட்ட மகிந்தவுடன்  ஜனாதிபதி ரணில்  பேச்சு வார்த்தை நடத்தியுள்ளதாக நம்பகரமான் செய்திகள் வெளீவந்துள்ளன. அந்தப் பேச்சு வார்த்தையில்  ஜனாதிபதி ரணிலும் ,மகிந்தவும் மட்டுமே கலந்துகொண்டார்களாம். பாதுகாப்பு, நிதி பொன்ற  முக்கிய  முக்கிய  பொறுப்புகளை ரணில் தன் வசம் வைத்திருப்பார். முக்கியமான சில அமைச்சுகள் மொட்டு  கட்சிக்கு வழங்கபப்டும் எனத் தெரிகிறது.

சஜித்தின் கட்சியில் இருந்து பல  முக்கியச்தர்கள் தேசிய அரசில் இணையக் காத்திருக்கிறார்கள்.  அவர்களுக்கு தேவையானது அமைச்சுப் பதவிகள்தான். ஏப்ரல் 25 ஆம் திகதி  தேசிய அரசாங்கம் அமைக்கும் யோசனையை ஜனாதிபதி  பாராளுமன்றத்தில் அறிவிப்பார் என  ஊடகங்களில் செய்திகள் வெளிஆகை உள்ளன.

சுதந்திர மக்கள் காங்கிரஸின் உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் ஊடகவிலளாரர் சந்திப்பின்  போது தெரிவித்தார்.

மக்களின் பார்வையில் சட்டபூர்வமான முத்திரையைப் பெறுவதற்காக தேசிய அரசாங்கமொன்றை அமைக்க அரசாங்கம் மற்றுமொரு முயற்சியை ஆரம்பித்துள்ளதாக   அவர் தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியம் ஒப்பந்தம், புதிய மத்திய வங்கிச் சட்டம் மற்றும் பயங்கரவாதத் தடைச் சட்டம் போன்ற பல முக்கிய விடயங்கள் ஏப்ரல் 25ஆம் திகதிக்கு பின்னர் பாராளுமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட உள்ளதாகக் குறிப்பிட்ட ஹேரத், இவை நாட்டின் அரசியலை வேறு பாதையில் இட்டுச் செல்லும் என்றும் கூறினார்.

“இந்த அரசாங்கத்திற்கு எந்த ஆணையும் இல்லை மற்றும் நியாயப்படுத்த முடியாத வகையில் உருவாக்கப்பட்டது. அரசாங்கம் தன்னிச்சையான முறையில் செயல்படுகிறது, ஏப்ரல் 25, நாட்டு மக்களுக்கு எதிரான அதன் சர்வாதிகார நடவடிக்கைகளின் தொடக்கத்தைக் குறிக்கும், ”என்று அவர் கூறினார். அவரைப் பொறுத்தவரை, அரசாங்கம் இப்போது தனது தன்னிச்சையான செயல்களை நியாயப்படுத்தவும் சட்டபூர்வமான முத்திரையைப் பெறவும் ஒரு தேசிய அரசாங்கத்தை அமைக்க முயற்சிக்கிறது.  

ரணில் விக்கிரமசிங்கவுக்கு தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கு ஆதரவளிப்பதன் மூலம் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தை சட்டப்பூர்வமாக்குவதற்கு எவரேனும் நம்பினால், அவர்கள் நாட்டு மக்களுக்கு எதிரான அரசாங்கத்தின் தன்னிச்சையான செயற்பாடுகளுக்கு அங்கீகாரம் அளித்து அவற்றை நியாயப்படுத்துவதாக  அவர் தெரிவித்துள்ளார்.

 மகிந்தவைப் பிரதமராக்க வேண்டும் என மொட்டுக் கட்சியினர் விரும்புகின்றனர். அதேவேளை, பஷில் பிரதமராக வேண்டும் என்ற  கோரிக்கையும் விடப்பட்டுள்ளது.  மகிந்த  குடும்பத்தில் இருந்து எவரும்  முக்கிய   பொறுப்பை ஏற்றால்  அரசியல் கள நிலை  சூடாகும்.

விரிவாக்கப்பட்ட நிதி வசதி ஏற்பாட்டின் கீழ் இலங்கைக்கு 3 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்துடனான அரசாங்கத்தின் ஒப்பந்தம் தொடர்பில் பாராளுமன்றத்தில் விவாதம் நடைபெறவுள்ளது. இந்த விவாதம் ஏப்ரல் 26 முதல் 28 வரை நடைபெற உள்ளது. அதர்கு முன்னதாக தேசிய அரசாங்கத்தை அமைக்கும் நோக்கம்  இருப்பதற்கான சாத்தியப்பாடு எவையும்  இல்லை,

தேசிய அரசாங்கம் என்பது எப்படி இருக்கப் போகிறது என்பது வெளிப்படையாகத் தெரியவில்லை. ஆனால், தேசிய அரசில் சேரும் அரசியல்வாதிகள்  முக்கியமான அமைச்சுப் பொறுப்புகளைக்  கோருவார்கள். தேசிய அரசு என்பது நாட்டை    முன்னேற்றுவதாக அமையாது. விரும்பிய அமைச்சுப் பதவியை ஒருவர்  பெற வகை செய்யும்  வழிமுறையாகும்.

நல்லிணக்க அரசாங்கம் என்ன செய்தது என்பதை  குடிமக்கள் எவரும்  மறக்கவில்லை. ஜனாதிபதி தன் பதவியைப் பாதுகாபதற்காக அமைக்கப்படும் தேசிய அரசு சில வேளை எதிர் மறையாகவும்  மாறிவிடலாம்.


Wednesday, April 19, 2023

ரணில் ,சஜித்.பஷில் மும்முனைப் போட்டி


   ரணில் ,சஜித்.பஷில் மும்முனைப் போட்டி சித்திரை   புது வருடத்தின்  பின்னர் இலங்கையின் அரசியல் கள நிலைவரம் மாற்றமடையவுள்ளது. பொருளாதார நெருக்கடியில்  இலங்கை சிக்கிச் சுழன்ற  போது துணிச்சல் மிக்க அரசியல் தலைமை  யைத் தேட வேண்டிய நிலை ஏற்பட்டது. சித்திரை வருடத்தின் பின்னர்  ஜனாதிபதித் தேர்தல் நடத்தப் படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ரணிலின் அரசியல் வியூகங்கள்  ஜனாதிபதித் தேர்தலை நோக்கிச் செல்வதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு  வெற்றி பெற வேண்டும் என்பதே ரணிலின்  கனவு.   ஜனாதிபதித்  தேர்தலில் போட்டியிடாமலே அவரின் கனவு  நிஜமாகியது. ரணில்  ஜனாதிபதியாகியதன்  பின்னால் பல விமர்சனங்கள்  உள்ளன அந்த விமர்சனங்களுக்குப் பதிலளிக்க  அவர் ஆசைப்படுகிறார்.

அரசியலில் அதி உயர் பதவியான ஜனதிபதியாக வேண்டும் என்பது  சஜித் பிரேமதாசவின் விருப்பம். பஷில் ராஜபக்ஷவும்  ஜனாதிபதித் தேர்தலில்  போட்டியிடப்போவதாக் செய்திகள் கசிந்துள்ளன. ஜனாதிபதித் தேர்தலில் மும்முனைப் போட்டி என எழுதபட்டு விட்டது. ஜனதாவிமுக்திப் பெரமுனையும் தனது கட்சியின் சார்பில் ஒருவரை களம்  இறக்க  உள்ளது.இவர்களைத் தவிர சுயேட்சைகள் சிலர் புற்றீசல்போல் திடீரென வருவார்கள். சிவாஜிலிங்கம்  போன்ற தமிழர்களும் தமது  பலத்தைக் காட்ட  ஜனாதிபதித் தேர்தலில்சில வேளை போட்டியிடுவார்கள்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் மீது கடுமையான விமர்சனங்கள் சுமத்தப்பட்ட போது அவற்றுக்குக் காது கொடுக்காது தனது  இலக்கை நோக்கிப் பயணித்தார். பொருளாதாரத்தை மீட்பதற்கானஅவர் மேற்கொண்ட முயற்சி  சாதாரண மக்களிடம் மரியாதையை ஏற்படுத்தியுள்ளது.  ரணில் ஜனாதிபதியான  போது நாடு மட்டுமல்ல அவரது வீடும் தீக்கிரையானது.  அப்போதிருந்த அத்தியாவசியப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு,  பொருட்கள் விலையேற்றம், நீண்ட வரிசை ,  போராட்டம், நாடு முடக்கம்  எதுவும்  இப்போ இல்லை.  பொருட்களின் விலை அதிகம்தான் காலப்பொக்கில் விலை குறையும் என மக்கள் நம்புகிறார்கள்.

 ஜனாதிபதி ரணிலின்  ராஜதந்திரத்தால் சர்வதேச நாணய நிதியம் கடன் வழங்க  உடன்  ப்டாது.  ஆனாலும் அவர் மீது கடுமையான விமர்சனங்கள்  முன் வைக்கப்படுகின்ரன.   எதிர்க்கட்சிகள், தொழிற்சங்கங்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள், சிவில் சமூக அமைப்புகள்   போராட்டங்கள் நடத்துகின்றன.  இதனால் ஜனாதிபதி ரணில் மனம் தளரவில்லை. சர்வதேச நாணய நிதியத்தின் பிணையெடுப்பு ரணிலுக்கு  உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.  இதே சுட்டுடன் ஜனாதிபதித் தேர்தலை நடத்த ரணீல் ஜனாதிபதி விக்கிரமசிங்க முன்கூட்டியே ஜனாதிபதித் தேர்தலை நோக்கி  ரணிலின் பார்வை விழுந்துள்ளது.

  2020  ஆண்டு நடந்த தேர்தலி ரணிலின் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி படு தோல்வியடைந்தது.  ஆளும் கட்சியும் எக்திர்க் கட்சிகளும் சேர்ந்தெ ரணிலை ஜனாதிபதியாக்கின.            நிலின் ப் அரம எதிரியான  ம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா  உறுப்பினர்கள் அவரை  ஆதரித்த்னர்.

   தேர்தலின் மூலம்   தன்னை அரசியல் ரீதியாகப் பலப்படுத்தும் மற்றும் தனது பொருளாதார சீர்திருத்தப் பணியை வலுப்படுத்தும் என்பதை ரணில் உணர்ந்துள்ளார். கடன் வழங்கும் நிறுவனங்கள் மற்றும் நன்கொடை நாடுகளும் உறுதியான   அரசாங்கத்துடன் இணைந்து போக விரும்புகின்றன. ஆகவே  தேர்தலின்  மூலம் தனது பலத்தை வெளிப்படுத்த ஜனாதிபதி ரணில்  விரும்புகிரார்.

இன்றைய நிலையில் ரணிலுக்குச் சவால் விடும்  போட்டியாளர்  கண்ணுக்கு எட்டியதூரத்தில் இல்லை. ஒரு சில கட்சிகளின்  ஆதரவுடன் ஜனாதிபதித் தேர்தலை நடத்தினால்  வெற்றி பெறலாம் என ஜனாதிபதி ரணில்  நினைக்கிறார்.   சஜித்தின்  கட்சியில் உள்ளவர்கள் ஜனதிபதியின் பக்கம் தாவத் தயாராக  இருக்கிறார்கள்  புது வருடத்தின்  பின்னர் அணிமாறும் படலம் நடைபெறும் என நம்பப்படுகிறது.  தனது கட்சியைச்   சேர்ந்தவர்களுக்குப் பணம் கொடுத்து  இழுப்பதாக சஜித்   குற்றம் சாட்டியுள்ளார். 

ரணிலின் தலைமையில் சஜித்தும்  ஒருகாலத்தில் இருந்தவர்தான். சஜித்தின் பின்னால் நிர்பவர்கள் அனைவரும் அசல் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்தவர்கள். ரணிலின் தலைமையில் கட்சி தோல்வியடைகிறது என்பதால் சஜித்தின் பின்னால் சென்றவர்கள்  மீடும் தாய்க்கழகத்துக்குச் செல்ல விரும் புகிரார்கள் அரசிலைல் இது சகஜம் ஆனால், காசு கொடுக்கும்  குற்றச்சாட்டு புதியது.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதர்கு சஜித் தயாராக  இருக்கிறார். இந்த நிலையில் அவரை ஆதரிக்க வேண்டிய கட்சியின் முக்கியஸ்தர்கள் ரணிலின் பகம் சாயத்துடிக்கிறர்கள். ரணிலையும், சஜித்தையும்  ஒற்றுமையாகுவதர்கு மேற் கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்துள்ளன.     புதிய கூட்டணிஅய் உருவாக்க்  ரணில்  முயற்சி செய்கிறர்.சஜித்தின்பக்கம் இருப்பவர்களில் பாதிப்பேர் ரணிலுடன்  இணையத்ட் கயாராக  இருக்கிறார்கள். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்த சிலர் சஜித்தின்பக்கம் சென்றுள்ளனர்.

நாட்டின் முன்னேற்றத்திற்காக ஜனாதிபதி விக்கிரமசிங்கவுடன் இணைந்து கட்சி தனது பங்களிப்பை வழங்க வேண்டும்  டாக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

“சில சமகி ஜன பலவேகய (ஸ்JB) பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாகவும், கட்சி தீர்மானம் எடுக்கத் தவறினால் குழுவாகச் செயற்படுவதாகவும்  பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன  தெரிவித்தார்.“ஹர்ஷ டி சில்வா போன்ற பாராளுமன்ற உறுப்பினர்கள்   ஜனாதிபதி விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்க தயாராக உள்ளனர்.

 சஜித் பிரேமதாசவின்  தலைமைத்துவ பாணி மீதான உகட்சியின அதிருப்தியடைந்துள்லனர்.  மூத்த கட்சிக்காரர்களை புறக்கணிப்பதாகவும், ஒரு கும்பலை நம்பி எதேச்சதிகாரமாக விஷயங்களை நடத்துவதாகவும் கூறப்படுகிறது. சஜித் பிரேமதாசவின் தலைமைத்துவத்தின் மீதான அதிருப்தியே பல பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளியேறும் எண்ணத்துடன் வி இருப்பதற்கு ரு முக்கிய காரணமாகும். 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

"ஆனால் சந்திம வீரக்கொடி மற்றும் ஜயரத்ன ஹேரத் மற்றும்   (ஸ்ள்PP) அதிக எண்ணிக்கையிலான பாராளுமன்ற உறுப்பினர்களும் எங்கள் கட்சியில் இணைந்துள்ளனர், மேலும் பலர் வருவதற்கு வரிசையில் காத்திருக்கின்றனர்," என்று அவர் கூறினார்.

ராஜபக்ஷ குடும்பத்தில் இருந்து  பஷிலைக் களம்  முயற்சி நடக்கிறது.  ராஜபஷ குடும்பத்தின் மீதான  கொபம்  மக்களிடன்  இன்னமும் தணியவில்லை 

புது வருடத்தின் பின்னர் புதிய அரசியல் மாற்றம் ஏற்படும் என்பதில் சந்தேகம்  இல்லை. 

 

 

 

Tuesday, April 18, 2023

புது வருட பூரிப்பு நம்பிக்கை ஒளி தெரிகிறது


 சோபகிருது வருடம்  மலர்ந்துள்ளது.  தமிழ் மக்களும், சிங்கள மக்களும்  இணைந்து கொண்டாடும்  நாள்  இது ஒன்றுதான்.  வழக்கம்  போல பலரும் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்கள்.  நாள் நேரம்  ,பலன் எல்லாம் பார்த்தாகிவிட்டது. நல்ல பலன்   என சிலர் பூரிப்படைந்துள்ளனர்.   கொஞ்டம் கெடுதல் என்பதால் சிலர் சோகத்தில் உள்ளனர். பலாபலன்கள் மனிதன்  பிறக்கும் போதே  எழுதப்பட்டு விடுவதாக  ஒரு  நம்பிக்கை உள்ளது.புது வருடத்துக்கு புது ஆடை  உடுப்பது வழமையாந்து.

கடந்த சில வருடங்கள் பெரும்பாலான இலங்கையர்களுக்கு கடினமாக இருந்தது. முதலில் கோவிட்௧9 தொற்றுநோய் பின்னர் பொருளாதார நெருக்கடியை பாதித்தது, இது பெருமளவிலான மக்கள்  கஷ்டப்பட்டு சம்பாதித்த

பணத்தை எந்த விதமான கொண்டாட்டங்களுக்கும் ஒதுக்கி வைப்பதை சாத்தியமற்றதாக்கியது.

எரிபொருள் உட்பட பல நுகர்வோர் பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் பொருட்களின் வானியல் விலைகள், புத்தாண்டுக்கான புதிய ஆடைகளை வாங்குவதைத் தவிர்த்து, வழக்கமான ஆடம்பரத்துக்குப்  பதிலாக எளிமையான அன்றாட உணவைத் தேர்வுசெய்ய பலரைத் தூண்டியது .

இருப்பினும், இந்த ஆண்டு, சொல்லொணா இன்னல்களுக்கு ஆளாகியிருந்தாலும், புத்தாண்டைக் கொண்டாட பொதுமக்கள் மத்தியில் மீண்டும் ஆர்வம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. ஷாப்பிங் மையங்கள் பாரம்பரிய உணவு வகைகளை தயாரிக்கும் ஆடைகள் மற்றும் பொருட்களை வாங்கும் மக்களால் நிரம்பி வழிந்தன.

    புத்தாண்டுக் கொண்டாட்டங்கலில் பலரும் திளைத்திருந்த வேளையில் சிலர் மதுப் போத்தலுடன்  உலகத்தை மரந்தர்கள்> வாகன விபத்து,  வெடி கொளுத்தி காயம் என்பனவும்  புது வருடத்தை சிலரால் மரக்க  முடையாததாக்கியது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக, கோவிட்௧9,  அச்சுறுத்தலா நாடு முடக்கம் அதிக செலவுகள் மற்றும் உயிர்வாழ்வதற்கான அத்தியாவசியப் பற்றாக்குறை ஆகியவற்றால் மக்கள்  பல கஷ்டங்களை எதிர்கொண்டனர்.  தற்போதைய நிலைமை சற்று வித்தியாசமானது; நாடு கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறது   எரிவாயு விலையும்  குறைந்துள்ளது. அதேபோல், பல பொருட்களின் விலையும் குறைக்கப்பட்டுள்ளது. நம் நாடு 'நாளுக்கு நாள் குணமடைவதை' பார்ப்பது நல்லது. இது இந்த புத்தாண்டு காலத்தில் மக்களுக்கு ஒரு நம்பிக்கையை அளிக்கிறது.

கடந்த ஆண்டை விட  இந்த ஆண்டு சற்று உயர்வடைந்துள்ளது.   அரசுக்கு எதிரான தொடர் போராட்டம். காலிமுகத்திடல் களேபரம், அரசியல் மாற்றம் என்பன கடந்த புது வருடத்தின் மறக்க முடியாத பக்கங்கள்.  இமுறை அவை எவையும்  இல்லை.  

சர்வதேச நானய நிதியம்  கடன்  கொடுத்துள்ளது.  கடன்  பிரச்சனை தீர்ந்து விடும் என்ற நம்பிக்கை  உள்ளது. பொருட்களை இறக்குமதி செய்வதர்கான டொலர்  கையில் உள்ளது.  சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.

நம்பிக்கை  ஒளி தென்படுகிறது.    இந்த ஆண்டு சிறப்பாக அமையும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்லது.

பொருளாதார மீட்சியைப் பற்றி அதிக நம்பிக்கையுடன் சிலர் உள்ளனர்.  கடந்த ஆண்டைப் போல் அல்லாமல் இந்த முறை புத்தாண்டு  கொண்டாட்டங்கள்  சிறப்பாக அமிந்துள்ளன.  தொழில்கள் முன்னேறும்.   இந்த ஆண்டு செழிப்புக்கான சில அறிகுறிகள் இருப்பதாக பலர்   நினைக்கின்றனர். தேவைகளும் விருப்பங்களும் நபருக்கு நபர் மாறுபடும். 

  பொருளாதாரம் விரைவில் நல்ல நிலைக்கு மாறும் என்ற நம்பிக்கை பொதுமக்களிடையே இருப்பதாகவும் தெரிகிறது.